பிக்பாஸ் – 4 : நாள் - 10 (14.10.20)

 9ம் நாள் தொடர்ச்சி....

சகுனி சுரேஷ் சம்பவத்துக்கப்பறம் சாயங்காலம் வீடு கொஞ்சம் கப்பன் பார்க் மோடுக்கு திரும்ப.....மூலைக்கு மூலை மூணு, மூணு பேரா உக்காந்து பொரணி பேச ஆரம்பிச்சானுங்க.....

பெட் ரூமுல சுரேஷ் பள்ளிகொண்ட போஸ்ல பில்டர பக்கத்துல உக்கார வச்சுக்கிட்டு “ஒரு ஊருல ஒரு பிக்பாஸ் வீடு இருந்துச்சாம்”ன்ற ரேஞ்சுல காலையில நடந்த சம்பவங்கள்ல இருந்த சத்திய சாராம்சங்கள சரம் சரமா கட்டி பில்டர் கழுத்துல போட்டுட்டு இருந்தார். பில்டரோ, “சகுனி பெரிய ஆளா இருப்பான் போலயே ! இப்பத்தான் சத்திய சன்மார்க்கத்துக்கு வரான்....அப்பிடியே இவன இழுத்துப்பிடிச்சோம்னா சனம் என் மேல வச்சிருக்குற கோவத்தோட தார்ப்பரியம் என்ன ? பார்பேரியன் தனமா மதியம் ‘இனிதான் ஆட்டம் ஆரம்பம்’னு அது ஆர்ப்பரிச்சதோட  அர்த்தம் என்ன?ன்னு கேட்டு உய்யனும்”ன்ற உறுதியோட உக்காந்து கேட்டுட்டு இருந்தான்.

இந்தப்பக்கம் ஆரி சகுனியப் பாத்து “ஓட்டி விடு ஒம்பாட்டுக்கு. அதான் கேக்க ஒருத்தன் சிக்கிட்டானே....நான் அந்தப்பக்கமா எனக்கு எவனையாச்சும் தேத்தி டைம்பாஸ் பண்ணிக்கிறேன்”ற மாதிரி சிரிச்சிட்டு இருந்தாப்ல.

ஒரே ஒரு ஃப்ரீ பாஸ ஜெயிச்சுட்டு அத மறைச்சு வைக்க படாத பாடு பட்டுட்டு இருந்தான் ஆஜீத். அனிதாவோ அரை நொடிக்கொருதரம் அவன் கண்ணுல பட்டு “ஐ அம் வாட்சிங்க் யூ”னு சொல்லிட்டு இருந்துச்சு. ஜட்டிக்குள்ள போட முயற்சி பண்ணி....முயற்சி தோல்வியில முடிய, உள்ள போயி பெட்டில ஒளிச்சு வச்சுக்கிட்டான். அப்றம் ரியோக்கு அவன் வீட்ல இருந்து ஃபோட்டோ வந்துச்சு....நிஷாலாம் ஹா ஹா ஹாசினியா ஆக்ட் பண்றதப் பாக்கும்போது அடிவயிறு வலிக்கிறத தடுக்க முடிய மாட்டேங்குது.

10வது நாள்

“கமலா கலாசா” அலாரம். 50 வருஷ ஆமை மாதிரி அசஞ்சு அசஞ்சு வந்தானுங்க. இன்னைக்கு கேபி கொஞ்சம் துள்ளலா துள்ளிசை நடனம் ஆடுச்சு. எல்லாரும் காலால ஆட.....சனம் மட்டும் கையால ஆடுறத இன்னைக்கு ஆழ்ந்து பாக்கும் போது தெளிவா தெரிஞ்சுக்க முடிஞ்சது. தக்காளி சட்னிய சட்டை மேல கொட்டிட்டு அத தொடைக்குற ஆக்ஷன தொடர்ந்து அஞ்சு வாட்டி செஞ்சு எந்த பாட்டு போட்டாலும் அதுக்கு மேட்ச் பண்ணிடுறாங்க. கேக்குறவங்ககிட்ட அது “தக் ஹாப் ஸ்டெப்”னு சொல்லிடுறாங்க. கேபி ஆஜீத்த வம்பிழுத்து விளையாடிட்டு இருந்தாங்க. எதிர்பார்த்தபடி அங்க வந்த அன்னப்போஸ்டு “நீ எங்க வச்சாலும் எடுப்பேண்டா”ன்னு சொல்லிட்டு இருந்துச்சு.

ரியோவும் சுரேஷும் பேசிட்டு இருந்தானுங்க. ரியோ சுரேஷ்கிட்ட “இந்த வீட்ல க்ரூப்பிஸம் இருக்குன்னியே அப்ப அது எங்க இருக்கு?ன்னு காட்டு நான் பாக்கணும்”னான் நாத்திக கேள்வி கேக்க....”அத பாக்க முடியாது உணரத்தான் முடியும்”னு ஆத்திகம் பேசிட்டு இருந்தார் சகுனி. கடைசில சகுனி குடுத்த விளக்கத்துல ரியோ எதுக்கு வந்தோம் ? என்ன பேசிட்டு இருந்தோம்?ன்றத மறந்து...”ஆமா நான் இப்ப எங்க இருக்கேன் ?” ன்ற மாதிரி கேக்க “அதுவா கக்கூஸுக்கு போற வழிய மறந்துட்டு இங்குட்டு வந்துட்ட....நீ இப்பிடியே நேராப் போயி லெஃப்ட் எடுத்துக்கோ”ன்னு சொல்லி கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்த அனுப்பி விட்டார். ரியோவும் “என்னா மனுஷன்யா!”ன்னு சிரிச்சுட்டே கிளம்பிட்டான். சகுனி பேசிப் பேசியே இந்த மாக்கானுங்கள மண்டைய கழுவி விட்டுடுராப்ல.

கழிவறை வாசல்ல வச்சு சனம் சுரேஷ் கிட்ட....”என்ன சுரேஷ் சார், போரடிச்சா என்னய அழுக வச்சுப் பாக்குறீங்க, நாமினேஷன்னா என்னய சொல்லி வச்சு தூக்குறீங்க....எதுக்க வந்தா வணக்கம் சொல்லாமப் போறீங்களே ? நியாயமா ? நீங்கல்ளாம் ரூடா பேசுனதுல மனசு ஓடா ஒடஞ்சு போயிருக்கு....நீங்க  என்னன்னா”னு சலம்ப....”ஒரு வீட்ல எத்தனை லூசத்தாண்டா சமாளிக்குறது?”ன்ற மாதிரி பெரு மூச்சு விட்டுட்டு சுரேஷு “ உங்கிட்ட அப்பிடிப் பேசுவேனா? என்னம்மா நீ ? நீ வேணும்னா வெளிய நின்னு பேசு நான் உள்ள உக்கந்துக்கிட்டு உம் கொட்றேனே”ன்னு சொல்லிட்டு கக்கூஸுக்குல்ள போயிட்டார்.

திரும்பிப்பாத்தா நம்ம அன்னப்போஸ்டு......! சனம் சட்டுனு சடன் பிரேக்கப் போட்டு

சனம் : என்ன அனிதா நாலு சனம் கூட சேர்ந்ததும் இந்த சனத்தோட பேச மாட்டேங்கிறியே

அனிதா : அப்டியெல்லாம் இல்லையே....பேசுவேனே...அப்பறம் பேசலாம்

சனம் : எப்பறம் பேசுவ ? என்ன பேசுவ ?

அனிதா : அசிங்க அசிங்கமா பேசுவேன்....சரி அப்பறம் பாக்கலாம்

சனம் : அப்பறம் பேசலாம்ன....இப்ப அப்றம் பாக்கலாம்ன்ற ? பாக்கலாமா இல்ல பேசலாமா ?

அனிதா : ஆத்தீ.....பயித்தியமா இவ....! ஓடிருடி அன்னப்போஸ்டு.....//

இங்க உள்ள ரியோ ரொம்ப சீரியசா.....

ரியோ : ஏண்டா சோமு எதுவும் அன்கம்ஃபர்டபிளா ஃபீல் பண்றியா?

சோமு : தூங்குறப்பையா?

ரியோ : (தலையில அடிச்சுக்கிட்டு) அதான இந்த வீட்ல நீ பாக்குற ஒரே வேல தூங்குறதுதான. உங்கிட்ட போயி கேட்டேன் பாரு.....அடேய் இங்க இருக்குறதுக்கு உனக்கு அன்கம்ஃபர்டபிளா இருக்கா ?

சோமு : ஆமா இங்க ஹால்ல இருந்தப்போ ரொம்ப அன்கம்ஃபர்டபிளாதான் இருந்துச்சு....இப்ப பெட்ல நல்லா இருக்கு. ஏன் எதும் பிரச்சனையா ?

ரியோ : இல்ல...ஒரு பிரச்சனையும் இல்ல....நீ தூங்குறத கண்டினியூ பன்ணு //

அடுத்து லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் – ஆட்டம் கொண்டாட்டம் !

ஒன்ணு இந்த சீசன் பிக்பாஸ் ரிவர்ஸ்ல போகனும். இல்ல பிக்பாஸ் டீம்ல எவனோ ஒருத்தன் ஸ்க்ரிப்ட் பேப்பர கடைசி பக்கத்துல இருந்து படிக்கிறானா இருக்கும். 50 நாளைக்கு அப்பறம் நடத்த வேண்டியதெல்லாம் இப்பவே நடக்குது.

கன்வேயர்ல பொட்டி வரும். உள்ள யாரு பேரு இருக்கோ அவங்க அதுல இருக்குற ட்ரெஸ்ஸப் போட்டுகிட்டு பாட்டு போட்டதும் ஆடனும்.

மொதப் பொட்டி கேபிக்கும், ஆஜீத்துக்கும் ! ட்ரெஸ்ஸப் போட ரெண்டும் அலறி அடிச்சுக்கிட்டு கக்கூஸுக்கு ஓட ...இந்த கலவர நிலவர கவலை எதும் இல்லாம அங்க ஜித்தன் குற்றாலத் துண்ட தோள்ல போட்டுக்கிட்டு “இப்ப நான் குளிக்கவா? வேணாமா?”ன்னு கேட்டத அவங்கப்பா கேட்டுடாம இருக்கனும்.

ரெண்டும் ரவுடி பேபிக்கு நல்லா ஜங்கு புங்குன்னு ஆடுச்சுங்க ! ஆடிக்கிட்டே ஆஜீத் ஜிப்ப ஜிப்புனது மாஸ்டர் ஸ்ட்ரோக்.

அடுத்து நிஷா – ரியோ. ஆடலுடன் பாடலைக் கேட்டுக்கு நல்லா ஆடுனாங்க.

நெக்ஸ்டு வேல்ஸும், சனமும். வேல்ஸ் ஃப்ளவர் வாஷுக்கு கோல்டு ராப்பர் சுத்துனாப்ல ஒரு ட்ரெஸ்ஸப் போட்டுட்டு வந்து “வச்சுக்கவா உன்ன மாட்டும்”னு ஆட...கையால “தக் ஹாப்” ஸ்டெப்பப் போட்டுத் தள்ளுனாங்க சனம்.

சகுனியும் அன்னப்போஸ்டும் – சின்ன மச்சானுக்கு ஆடனும்

ஆளவந்தான் நந்து கமல 55 வயசுல பாத்தா மாதிரி இருந்தாப்ல சகுனி சுரேஷு. கார போண்டா கைய கால அசைக்குற மாதிரி ஹம்ப்டி டம்ப்ட்டி டான்ஸப் போட்டுட்டு இருந்தார். அனிதா அரைக் காலுக்கு வேட்டிய கட்டிக்கிட்டு கும்த்தா ஸ்டெப்பப் போட. பரவாயில்ல சுரேஷும் ஈடுகுடுத்து ஆடுனார். “ஊருக்குள்ள உங்கள ஏசுறாக....ஒன்ண ரெண்டா சொல்லி பேசுறாக”ன்னு, அப்பிடி பேசி, ஏசுன ஆளையே பாட வச்சது பிக்பாஸனோட பிசிறில்லாத ஸ்கெட்ச்.

அரைமணி நேரத்துக்கு மேல ஆனதும் சனத்துக்கு கைநடுங்க ஆரம்பிச்சுடுச்சு அப்பிடியே திரும்பிப் பாத்தா கிச்சன்ல பில்டரு தொடச்சுட்டு இருந்தான். மீனைப் பாத்தா பூனை மாதிரி தவிக்குதிச்சு ஓடி வந்து “என்ன பில்டரு எங்க ஏரியால வந்து என்ன பண்ணிட்டு இருக்க?”ன்னு பந்தாவா கேக்க, “கேப்டன் தான் என்னய தொடச்சு கழுவ சொன்னாரு”ன்னு பாலா சொல்ல, “அதான் அக்கா வந்துட்டேன்ல கரித்துணிய கைல குடுத்துட்டு எடத்த காலி பண்ணு”ன்னு கலவரத்த ஆரம்பிக்க, பில்டரோ “யோவ் தாத்தா இங்க பாருயா இவள”ன்னு சொல்லிட்டு கோவமா கிளம்பிட்டான். சனமோ “என்ன ஜாலியா, ஃபிரன்ட்லியா பேசுனா இப்பிடி மூஞ்சிய காட்டிட்டு போறா?”ன்னு சொன்னதுக்கு சகுனி, “அதான நீ எவ்வளவு ஜாலியா பேசுவ....அதப் புரிஞ்சுக்காமப் போறான் ப்ளடி இடியட்.....விடு அவனுக்குதான் லாஸ் ! நீ அப்டியே அந்த கரித்துணிய எடுத்து என் காலுக்கு கீழ கொட்டியிருக்குற எண்ணெய்ய தொடை”ன்னு சொல்லிட்டு 2 நிமிஷத்துக்கு ஒரு தடவ எண்ணெய்ய கீழ கொட்டிட்டே இருந்தாப்ல.

கேமராகிட்ட வந்து பில்டரு பொலம்பிட்டு இருந்தான் பாவம். பத்தாத சட்டையப் போட்டுகிட்டு, பாடி காட்டும் முனீஸ்வரனா அங்கிட்டும், இங்குட்டும் சுத்திட்டு இருக்குற பில்டர் பையன, பாக்குற இடத்துலையெல்லாம் பப்பாங்கித்தனம் பண்ணிட்டு இருக்கு சனம். என்னைக்காச்சும் கக்கத்துல இறுக்கிக் கழுத்த நெறிக்கப் போறான்....அன்னைக்கு எல்லாரும் கோரசா “வந்தாய் அய்யா” பாடி வாழ்த்தப் போறானுங்க.

இங்குட்டு ஆரி வேல்ஸ்கிட்ட “என்னதான்யா அந்த வேட்டி பிரச்சனை?”ன்னு கேட்டதுக்கு வேல்ஸ் ஒரு 10 நிமிஷம் “டிங் டிங் நெய்டா...டிங் டிங் டிங் டிங் நெய்டா... டிங் டிங் நெய்டா...ஸ்விங்லிங் நெய்டா... டிங் டிங் டிங் டிங்.....”னு பதில் சொல்லி முடிச்சாப்ல.

அடுத்து ஒரு டெய்லி டாஸ்க்....இதுல ஜெயிக்குற ஆளு அடுத்த வார எவிக்ஷன்ல இருந்து எஸ்கேப் ஆகிடலாம்.

“ஒரு வட்டத்தப் போட்டு வச்சிருப்போம் அதுக்கு நடுவுல ஜாடி இருக்கும். ரெண்டு ரெண்டு பேரு செட்டு. ஜாடில பந்து போட்டவங்க மத்த யாரயாச்சும் வெளிய போக சொல்லிக்கலாம். இப்டியே பந்து போட்டவங்க அடுத்தவங்கள அனுப்பி கடைசியில இருக்குறவங்க ஜெயிச்சவங்க, அவங்க பார்ட்னருக்கும் அந்த எஸ்கேப் சலுகை உண்டு”ன்னு விதிமுறைகள விவரிச்சாரு.

கடைசியா வேல்ஸும், சனமும் வின்னு. டான்ஸுலையும் சரி, இந்த டாஸ்க்குலையும் சரி ரெண்டு பேரோட காம்பினேஷனும் சக்கரை பொங்கல் வடகறி மாதிரி வாவ் ஃபேக்டரா இருந்துச்சு.

நள்ளிரவுல சுரேஷு தலைமையில சம்மு, ஷிவானி, ரம்யா உக்காந்திருக்க சகுனி அன்னப்போஸ்டோட ஸ்டார்டஜிய விளக்க....ஆரம்பத்துல ஷிவானி “ஆமா இந்தக் கதையில அயர்ன்மேனும் , ஹல்க்கும் வரலயே”ன்னு கதை கேக்குற மோடுல இருந்துக்கிட்டு “பச்சைமண்ணு எனக்கு இவன் பேசுறது ஒரு மண்ணும் புரியல”ன்னு சொல்ல. சம்மு சரியா விளக்கிட்டு இருந்துச்சு.

உள்ள பில்டரு, கேபியையும், ஆஜீத்தையும் கூட்டி வச்சுக்கிட்டு “ஷிவானி இஸ் எ சின்னப்பிள்ளை”ன்னு சொல்லி சிரிச்சிட்டு இருந்ததோட இன்னைக்கு நாள் முடிஞ்சது.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)