பிக்பாஸ் – 4 : நாள் - 26 (30.10.20)

 கரண்டு போஸ்டு மேல கைய வச்சா மாதிரி சம்மு அன்னப்போஸ்டு மேல கை வச்சதுக்கு “ஒரு அரை நாளைக்கு சம்மு காதுகிட்ட ஒக்காந்து ஒரு நிமிஷம் கூட கேப்பு விடாம இன்னைக்கு ஓதி தள்ளிடனும். விடிஞ்சா வீடு எனக்கு சொந்தம்டா”ன்னு நெனச்ச அன்னப்போஸ்டு அறச்சீற்றத்துல அரை லோடு மண்ணு விழுந்தது விதியா? இல்ல சதியா ? தொடர்ந்து பேசுவோம்

26வது நாள்

“வேர் இஸ் த பார்ட்டி டுநைட்” பாட்டு அலாரம். எது....உங்க பார்ட்டி அழகு எங்களுக்குத் தெரியாது ? மேடையப் போட்டு வேல்ஸ பாட விடுவீங்க அதான ? இதுல அலாரப் பாட்டுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.

ரம்முவும், சம்முவும் செட்டு சேந்து ஆடுறது பாக்குறவங்க கிட்னி, குடல், மாங்காய்க்கு நல்லதா திகழுது. நாள் முழுக்க குடை பிடிச்சிக்கிட்டே திரிஞ்சதால அதே பழக்கத்துல வெள்ளை உடையோடவும், கையில குடையோடவும் குலுங்காம அலுங்காம நிதானமா ஆடிட்டு இருந்துச்சு சாத்தூர் ஷிவானி. மத்தவனுங்களாம் சானிய மிதிச்ச கால அவதி அவதியா உதறுன மாதிரி என்னத்தையோ அசிங்கமா பண்ணிட்டு இருந்தானுங்க. பில்டரு வழக்கம்போல இவனுங்கள பயித்திகாரனுங்கள பாக்குற மாதிரி பாத்துட்டு பாத்ரூமுக்கு போயிட்டான்.

பில்டரு இங்க வரப்ப 28 கை வைக்காத பனியன், 7 டவுசரு, 2 பேண்ட் , 3 ஆதிவாசி செட்டு மட்டுந்தான் எடுத்துட்டு வந்துருக்கான்....சட்டைன்ற வஸ்துவ வாழ்க்கையில அவன் எழுதி கூட பாத்ததில்ல போல.

உள்ள டைனிங்க ஹால்ல ஆரி ப்ரோ அன்பா ஆஜீத்த கூப்ட்டு பொங்கல் வச்சுக்கிட்டே “அவ்வளவுதான் சாப்பிடுவியா ? இன்னும் போடவா? கட்டிடத்துக்கு தேவை செங்கல். உணவில் சிறந்தது பொங்கல். சாம்பார் கொஞ்சம் ஊத்தவா?”ன்னு கேரிங்கா கேட்டுட்டு இருக்க....இத பாத்துட்டே இருந்த அன்னை அர்ச்சனா “என்னடா இது அன்னபூரணி கைல இருக்க வேண்டிய கரண்டி காட்டான் கைல இருக்கு?”ன்னு பாத்துட்டு, ஆரிகிட்ட இருந்த கரண்டிய சட்டுன்னு அவங்க வாங்கிக்கிட்டு வரவன் போறவனுக்கெல்லாம் பொங்கல போட்டுட்டு இருந்தாங்க. இத வெறித்தனமா வெறிச்சு பாத்துட்டு இருந்தாப்ல ஆரி ப்ரோ....பேக்கிரவுண்டுல “எரிமலை எப்படி பொறுக்கு?”ம்னு பாட்டு சத்தம் சன்னமா கேட்டுச்சு......

வெளிய அன்னப்போஸ்டுகிட்ட ஆறுதலுக்கு நாலு சனம் வந்து பேசும்னு எதிர்பார்த்தா நம்ம சைனா செட்டு சனந்தான் பேசிட்டு இருந்துச்சு. கூடவே ஆரி ப்ரோ வேற. சைனா செட்டு அன்னப்போஸ்டுகிட்ட “ஊரே பேசுச்சு. அப்பல்லாம் ஒன்னும் சொல்லல.. ஒன்னு ரெண்டு வார்த்தை எக்ஸ்டிடாராவா போட்டதுக்கு போரிங்க் பேரிங்க்னு சொன்னதெல்லாம் தப்பு...ரொம்ப சங்கடமா இருக்கு நண்பர்களே”ன்னு அன்னப்போஸ்டுக்கு ஆயில் மசாஜ் பண்ண், ஆரி ப்ரோவும் அப்ப அப்ப விசிறி விட்டுட்டு இருந்தாப்ல.

அன்னப்போஸ்டு : ஆமா நான் ரியோ பேசுனத விட கம்மியாத்தான பேசுனேன் ?

ஆரி : (அடிப் பாதகத்தி) ஆமாமா....25 நாளா அவன் இங்க மொத்தமா பேசுனத விட நீ நேத்து அந்த டாஸ்க்குல ஒரு நாள் பேச்சு கம்மியாத்தான் பேசுன....

அன்னப்போஸ்டு : அப்பறம் ஏன் நிறுத்துன்னானுங்க ?

சனம் : அவனுங்களுக்கு பொறாமை....வேறென்ன ? என்னய விட்டா வருஷக்கனக்கா வாயத்தொறந்து கேப்பேன் உன் பேச்ச

அன்னப்போஸ்டு : அவ்வளவுதான.....அப்பிடியே உக்காரு ஆரம்பிக்கிறேன்...

சனம் : இருக்கட்டும் இருக்கட்டும்......ஆனா சம்முகிட்ட நானும் கேட்டேன் ஏன் இப்பிடி பண்ணன்னு....அதுக்கு அவ சொன்ன பதில சொன்னா கத்தியெடுத்து பில்டரயோ இல்ல சகுனியையோ குத்திட்டு ஜெயிலுக்கு போயிருவ

அன்னப்போஸ்டு : அவனுங்கள ஏன் நான் கொல்லனும் ?

சனம் : (MV : ஏன்னா அவனுங்களத்தான எனக்குப் பிடிக்காது) இல்ல கைய அறுத்துக்குவேன்னு சொன்னேன்....

அன்னப்போஸ்டு : அது சரி....இத நேத்தே நீ ஏன் அங்க சொல்லல?

சனம் : என்னயத்தான் ஏமாத்தி நான் யாரு விஷயத்துலையும் மூக்க நுழைக்க மாட்டேன்னு என் வாயலயே 10 தடவ பனிஷ்மெண்டா சொல்ல வச்சுட்டானுங்களே....மறுபடியும் கூட்டத்துல ஏதாச்சும் சொன்னா 50 தடவ சொல்ல வச்சிருவானுங்க....வாயெல்லாம் வலிக்கும். //

இப்பிடி சொல்லிட்டு இருக்கும்போது சரியா சம்மு வெளிய வர சனம் மூஞ்சி வெள்ளரிக்காய் மாதிரி வெளிறிப்போச்சு......”பேபி...நீ உள்ள சொன்னதத்தான் வெளிய சொல்லிட்டு இருக்கேன்....வேணும்னா என் வீட்டுத் தோட்டத்தில் பூவெல்லாம் கேட்டுப்பார்....இல்ல சிரசாசனம் பண்ணும் இந்த சோமுவ கேட்டுப்பார்”னு ஒளற ஆரம்பிச்சிடுச்சு.

சம்மு உள்ள போயி பில்டர் குரூப்புக்கிட்ட “டேய் அன்னப்போஸ்டுகிட்ட சைனா செட்டு வெளிய வெளக்கு வச்சுட்டு இருக்குடா”ன்னு சொல்ல, “சார்ஜ எறக்கிட வேண்டியதுதான்”னு மனசுக்குள்ள நெனச்சிக்கிட்டான் பில்டரு.

வியாழக்கிழமை வில்லங்கத்துக்கு வந்தானுங்க. “கோல்டு டாஸ்க்குல நல்லா பண்ண ரெண்டு பேரு யாரு?”ன்னு கேட்டதுக்கு பாலாவையும், நிஷாவையும் ஆச்சர்யமா ஒரு மனசா ஒத்துக்கிட்டானுங்க.

“சரி வாரம் முழுக்க ஒழுங்கா ஈடுபாடு காட்டுன எருமைமாடு யாரு?”ன்னு கேட்டதுக்கு சோமுவ சொன்னானுங்க. டேய் அவன் பாத்த ஒரே உருப்படியான வேலை எங்க பஞ்சாயத்துன்னாலும், பஞ்சாயத்து பேசுறவனுங்களுக்கு துணையாளா போனதுதான்....அதெல்லாம் ஈடுபாட்டுலயா வரும் ? உங்கபாடு பெரும்பாடுடா. இந்த ரேஸ்ல ஜித்து பாயெல்லாம் இருந்தது ...ரஜினி கட்சி ஆரம்பிச்சா மாதிரியான அதிசயம்.

“சரி டாஸ்க்க சுவாரஸ்யமா பண்ணாத 2 பேரு யாரு”ன்னு கேட்டு வாய மூடுறதுக்குள்ள சோமு “அன்னப்போஸ்டு”ன்னு எந்திரிக்க......அன்னப்போஸ்டுக்கு உலகம் ஒரு நிமிஷம் நின்னு சுத்துச்சு. “டேய் சோமா....இது தகுமா?”ன்னு பாத்துச்சு. அப்பறம் பாரபட்சம் பாக்காம இன்னைக்கு அன்னப்போஸ்டு பேர அதத் தவிர எடிட்டர்கள், கேமரா கண்டிரோலர்கள் & பிக்பாஸ் உட்பட மொத்தம் 22 பேர் சொன்னானுங்க. தேர்தல் அறிக்கையில ஊழலை ஒழிப்போம்ன்ற வாக்குறுதி எப்பிடி உறுதியா இருக்குமோ....அதே மாதிரி நல்லா பண்ணாத லிஸ்டுன்னாலே அதுல ஆரி ப்ரோ பேரு கண்டிப்பா இருக்கும். இப்பவும் அப்பிடித்தான். இப்பவும் “எரிமலை எப்படி பொறுக்கும்?”னு பாட்டு சத்தம் சன்னமா கேட்டுட்டு இருந்துச்சு

முன்னாடி வந்த ஆரி. “அன்னப்போஸ்டு விவகாரத்த இங்க பேசலாம்னு பாக்குறேன்”னு சொன்னதும். எருமைக்கு பின்னாடி நின்னு ஏண்டா பித்தகோரஸ் தியரம் படிக்கிற? இந்த கேசு நம்ம ரேஞ்சுல வராது”ன்னு எல்லாரும் எதிர்ப்பு தெரிவிக்க. அன்னப்போஸ்டும் “இந்த மேட்டர நான் ஆண்டவர வச்சு டீல் பன்ணிக்கிறேன்”னு சொல்லிடுச்சு.

“சரி அப்ப பொது மேட்டருக்கு வருவோம். ஒரு வேலையும் குடுக்கலேன்னு சும்மா இருந்தவன, வேலையே செய்யலேன்னு சொல்லி நாமினேட் பண்றதெல்லாம் நாதாரித்தனம். அதே மாதிரி ஞாயித்துகிழமை சர்ச்சு மாஸ்ல ஆமென் சொல்ற மாதிரி அடுத்தடுத்து என் பேர குத்துறது சரியில்ல. அடுத்த தடவை இதே மாதிரி பண்ணீங்கன்னா....நான் எவன் எவன் என்ன என்ன பண்றான்னு உண்மைய உரக்கச்சொல்ல வேண்டி வரும்”னு சொன்னதும். பூராம் “கயகய”ன்னு கத்த. “டிப்லோமேட்டிக்கா இருந்து என்னய கவுக்குறீங்க”ன்னு சொன்னதும். “ஐ இது என் வார்த்தை”ன்னு பில்டரும் டிப்லோமசியப் பத்தி பேச, அன்னை அர்ச்சனா “டேய் நீயெல்லாம் எவனையாச்சும் திட்டனும்னா கூட ‘போடங்க டிப்லோமேசி பயலே’ன்னுதான் திட்டுவியா?” அது கெட்ட வார்த்தையா மாத்திடாதீங்கடா”ன்னு தடுத்தாங்க. வேல்ஸுதான் “அய்யையோ மறுபடியும் டிப்லோமசியா”ன்ற மாதிரி உக்காந்திருந்தாப்ல.

ஆரி ப்ரோக்கு என்ன பிரச்சனைன்னா....முக்கியமான எல்லா வேலையையும் வடக்கானுங்களுக்கு தாரை வாக்குறாப்ல. “இந்த எடக்கானுங்க அவனுங்களுக்குள்ள முக்கியமான வேலைகள பிரிச்சுக்கிட்டு நம்மள ஓரங்கட்டுறானுங்க”ன்றதுதான். அது நியாயமானதும் கூட.

அர்ச்சனாக்கு என்னன்னா அவங்களுக்கு தெரிஞ்சதே நாலு பேரையும், நாலு வேலையையுந்தான். அத வச்சுக்கிட்டு ஒரு அன்னை அர்ச்சனான்னு சென்டிமென்டலா ஃபார்ம் ஆகிட்டா. அடுத்தடுத்த எவிக்ஷன்ல தப்பிச்சிடலாம். ஆரி ப்ரோ ரொம்பப் பேசுனா “எனக்குள்ள இருக்குற அண்ணனத்தான் நான் உங்கள்ல பாக்குறேன்.....எனக்கு அண்ணன் வேணும்....என் அண்ணன குடுத்துருங்க”ன்னு ஒரு நாள் நைட்டு சோமுவ பக்கத்துல வச்சுக்கிட்டு அழுது சமாளிச்சுடலாம்”னுதான் நெனச்சாங்க. பட் ப்ரோ இன்னைக்கு எரிமலை எப்படி பொறுக்கும் பாட்டு பேக்கிரவுண்டுல இருக்காப்ல.....பொறுக்காத எரிமலை இன்னைக்கு பொறிபறக்க விட்டுடுச்சு.

சப்பாத்தி மேட்டர்ல வேற ஏதோ சைடு குத்து போல. இத பில்டரு வந்து அர்ச்சனாகிட்ட சொன்னதும். “இந்தா போறேன் சொசைட்டிக்கு...வாடா  சோமு”ன்னு கிளம்பிட்டாங்க அர்ச்சனா ஆரிகிட்ட....

ஆரியோ இன்னைக்கு கட்டுக்கடங்காத காட்டாறா மாறிட்டாப்ல. “ஏங்க மொத்தமா வீட்ட குத்தகைக்கு எடுத்துக்கிட்டா நாங்க எங்க போறது?”ன்னு பொருமிட்டாப்ல. இடையில வந்த பில்டருக்கும் வெல்டர் மாதிரி வாய வெல்டு பண்ணி அனுப்புனாப்ல. ஆனா இந்த பஞ்சாயத்துல ரியோ கலந்துக்காம கேபிகிட்ட விளையாண்டுட்டு இருந்தது தற்செயலா இல்லையே.....? “அர்ச்சனா வந்ததுல இருந்து ரியோ கண்ணுக்கே தெரியாம கரப்பான் பூச்சியாகிட்டான்”னு ஆரி ப்ரோ அன்னப்போஸ்டுகிட்ட சொன்னதும் நம்ம நியாபகத்துல இல்லாம இல்ல....

பின்ன உள்ள வந்த அர்ச்சனா சாப்பாடு பறிமாறிட்டு இருந்த நிஷாவப் பாத்து “சோத்துல கைய வச்சா செருப்பு பிஞ்சுடும்...இனி எவனுக்கும் பாவம் பாக்க கூடாது.....முட்டையும் பாலுமா குடுத்ததுக்கு முதுகுல குத்தி துரோகம் பண்ணிட்டானுங்க”ன்னு சொன்னதும் எர்வாமாட்டின் தலையர் சகுனி “உனக்கு துரோகம் பண்ண இந்த வீட்ல கை நனைக்க மாட்டேன்”னு கையக் கழுவப் போனதுதான் இந்த வருடத்தின் கலைமாமாமணி விருத்துக்கான நாமிநேஷன்.

அப்பறம் ரம்யாவ கூப்ட்டு “நீ வீட்டு கவுண்டிங்கல மொத ஆளா வந்ததால. நீ கேப்டன் டாஸ்க்குல இருக்குற யாரச்சும் ஒரு ஆள மாத்திக்கலாம்”னு சொன்னதும் ரம்யா நிஷாவுக்கு பதிலா சம்முவ சொன்னது சாணக்கியத்தனம்.

இப்ப கேப்டன் டாஸ்க். கண்டெஸ்டன்டுகள் எல்லாரும் எரியுற பந்த சேகரிச்சு கூடையில போடனும்.  கடைசியில யாருகிட்ட அதிக பந்து இருக்கோ அவங்கதான் கேப்டன். இதுல வெளிப்படையாவே பில்டரு அவன் பந்துகள சம்மு கூடைக்குள்ள போட்டு சம்முவ கேப்டனாக்குனான்.

இதப்பத்தி அப்பறம் ஜெயில் பறவைகள் ஆரி & அன்னபோஸ்டுகிட்ட பேசும்போது. “இப்ப கேப்டனானா வெந்தத தின்னுட்டு வீணா தூங்கதான் முடியும். நேரம் வரட்டும்...நையப் புடைப்போம்”னு சொன்னத சனம் கேட்டிருந்தா டுடே நைட்டே எகிறியிருக்கும். “சரி, அப்ப ஏன் சோமுவ கேப்டனாக்கல?”ன்னு கேட்டதுக்கு, “அவன கேட்கீப்பரா வேணும்னா ஆக்கலாம் கேப்டனாக்கலாம் முடியாது”ன்னு சொல்ல. அன்னப்போஸ்டு இதான் சாக்குன்னு “அப்ப சம்முக்கு என்ன தகுதி இருக்கு?”ன்னு கேக்க, “அதுக்கு என்ன தகுதி இல்லே?”ன்னு பில்டரு கேக்க, “நேத்து என் பேச்ச நிப்பாட்டுனதே தகுதி குறைச்சல் இல்லையா?”ன்னு சொன்னதுக்கு “முன்னாடி கண்ணாடி இருந்ததால தப்பிச்ச”ன்னு நெனச்சுக்கிட்டு பில்டரு போயிட்டான்

இந்த வீட்ல பில்டர பத்தி சரியா புரிஞ்சுக்கிட்ட ஒரே ஆளு ஆரி ப்ரோதான். “இங்க கேம செம்ம ஷார்ப்பா ஸ்கெட்சு போட்டு விளையாடுறது பில்டரு மட்டுந்தான்”னு சோமுட்ட சொல்லிட்டு இருந்தாப்ல. இதுல பில்டரு “அம்மி அரைக்க வைப்பேன்னு சொன்னதுக்கு சாரி கேக்க சொன்ன ஆளையே அம்மி அரைக்க வச்சுட்டேன்”னு சொன்னத ஆச்சர்யமா வேற பாத்து....”உன் கூரு எனக்கிருந்தா இந்த ஆல் இன்டியா ரேடியோ கூடயா கூட்டு சேர்ந்து ஜெயில் பாத்திருப்பேன்?”னு யோசிச்சாப்ல.

அப்பறம் ப்ரிஸ்மா பேஷன் ஷோ. இந்த இன்டெகரேஷன்ல க்ளையண்டு ஏமாந்தது பில்டரு கிட்டதான்....சட்டையே போடாதவங்கிட்ட சட்டை விளம்பரத்த எப்பிடி பண்றது...? ஆனா இந்த டாஸ்க்குல அவனுக்கும் ஷிவானிக்கும் கெமிஸ்ட்ரி, பையாலஜின்னு 6 சப்ஜெக்டும் ஒர்க் அவுட் ஆனது நல்லா தெரிஞ்சது. இதுல ஜெயிச்சது அர்ச்சனா – சகுனி ஜோடி.

ப்ரிஸ்மா கொஞ்சம் துணி மணி குடுக்க. அடுத்து ட்ரெண்ட்ஸ் கொஞ்சம் துணி மணி குடுக்க...இந்த இல்லாதபட்டவனுங்க தீபாவளிய மகிழ்ச்சியா கொண்டாடத்தன் இதாம். ஏங்க ப்ரிஸ்மால லிங்கிரின்னு ஒரு ப்ராடக்ட் இருக்கே அதெல்லாம் இன்டெகெரேட் பண்றதா இல்லையா ?

பட்டுபுடவை வாங்கிட்டு பக்கத்து வீட்டுக்குப் காமிக்க ஓடுற மாதிரி. எதுலயும் கலந்துக்க முடியாம ஜெயில்ல இருந்த ஆரி ப்ரோகிட்டயும், அன்னப்போஸ்டுகிட்டையும் தனக்கு ஓசியா கெடசச் ட்ரெஸ்ஸ காமிச்சுக்கிட்டு இருந்துச்சு சைனா செட்டு. “இது எப்ப கம்பிக்கு எந்த பக்கம் இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியலயே?”ன்னு பேசிக்கிட்டாங்க ஆரியும் பின்னே அன்னப்போஸ்டும்.

அப்பறம் கேக்கு வந்துச்சு....ஜெயில்ல இருந்து 2 கிராக்குகளும் ரிலீஸ்னு செய்தியும் வந்துச்சு.  வெளிய அனுப்புற நேரமாப் பாத்து ஆழ்நிலை தியானத்துக்கு போயிட்டாப்ல ஆரி ப்ரோ....”இவன நம்புனா ஆயுள் தண்டனைதான்”னு சொல்லிட்டு “வெளிய விடுங்கடா வேலை இருக்கு”னு அன்னப்போஸ்டு அப்பீட்.

அர்ச்சனா குரூப்ப இன்னைக்கு ஆண்டவர் கேப்பாரா ப்ரோ ?

கேப்பாரே ?

என்ன கேப்பார் ?

ம்ம்ம்ம்ம்......நல்லா இருக்கீங்களான்னு கேப்பார் !


 

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)