பிக்பாஸ் – 4 : நாள் - 21 (25.10.20)
அப்பாடா ஒருவழியா
ஆண்டவர் இன்னைக்கு ஃபார்முக்கு வந்துட்டாரு. ரொம்ப நாளைக்கப்பறம் பிக்பாஸ் கமல பாக்க
முடிஞ்சது. பஞ்ச், நக்கல்ன்னு நாட்டியமே ஆடிட்டாரு. ஆனா என்ன அவரு ஃபார்முக்கு வந்துட்டா
நமக்கு வேலையில்ல...... இந்த எபிசோட் முழுக்க முழுக்க ஆண்டவர் அட்ராசிட்டி சோ அத அப்பிடியே
எழுதுறதுதான் சரி.....சோ நம்ம ஃப்ளேவர் கொஞ்சம் கம்மியாத்தான் இருக்கும். ஆனா இந்த
எபிசோட எல்லாரும் பாத்து எஞ்சாய் பண்ணுங்கன்னு கேட்டுக்குறேன்.
20வது நாள்
தொடர்ச்சி.....
ஆண்டவர் போனதுக்கப்பறம்
அன்னப்போஸ்டு
- ஆரி
அன்னப்போஸ்டு
: என்ன என்னயப் போயி ஓவர் திங்கிங்க் பண்றேன்னு சொல்றானுங்க...?
ஆரி : அந்தப்பக்கம்
என்னய....
அன்னப்போஸ்டு
: உங்களக் கூட விடுங்க....! நான் இங்க உண்மையா போராடிட்டு இருக்கேன். என்னயப் போட்டு
படுத்துறானுங்க...
ஆரி : அந்தப்பக்கம்
என்னய....
அன்னப்போஸ்டு
: அத விடுங்க....இப்ப ஓவர் திங்கிங்க் பண்ணா என்ன தப்பு ?
ஆரி : அந்தப்பக்கம்
என்னய....
அன்னப்போஸ்டு
: என்னங்க அந்தப் பக்கம்....?நானே மத்தவனுங்க என்னய வெளிய அனுப்பிட்டு நிம்மதியா இருக்கலாம்னு
பாக்குறானுங்கன்னு கடுப்புல இருக்கேன்....நீங்க வேற உங்கள பத்தி பேசிக்கிட்டு....
ஆரி : அந்தப்பக்கம்
என்னய விட்டேன்னா தட்டு கழுவிட்டே உம் கொட்டுவேன்னு சொல்ல வந்தேன்...எங்க என்னய சொல்ல
விடுற...? //
அன்னப்போஸ்டு
- ரியோ
அன்னப்போஸ்டு
: அர்ச்சனா என்னயப் பாத்து மொறைக்கிறாங்க...நான் என்ன பண்ணேன் ?
ரியோ : நீ என்ன
பண்ண ?
அன்னப்போஸ்டு
: நான் என்ன வேணும்னாலும் பண்ணுவேன்..நான் பன்ணக் கூடாதா? மிடில் கிளாஸ் பொன்ணுங்களுக்கு
அந்த உரிமை இல்லையா ? அர்ச்சனா ஏன் என்னயப் பாத்து மொறச்சாங்க ?
ரியோ : அதாம்மா
நீ என்ன பண்ண ?
நான் என்ன வேணும்னாலும்
பண்ணுவேன்..நான் பன்ணக் கூடாதா? மிடில் கிளாஸ் பொன்ணுங்களுக்கு அந்த உரிமை இல்லையா
? அர்ச்சனா ஏன் என்னயப் பாத்து மொறச்சாங்க ?
ரியோ : ஞே.......//
அனிதா – அர்ச்சனா
அன்னப்போஸ்டு
: ஏன் என்னயப் பாத்ததும் மூஞ்சிய கக்கூஸ் போற மாதிரி வச்சுக்குறீங்க ?
அர்ச்சனா :
அப்ப அங்கதான் போயிட்டு இருந்தேன் எதுக்க நீ வந்ததால பாத்ததும் அப்பிடி தெரிஞ்சிருக்கும்
அன்னப்போஸ்டு
: நான் குழந்தையில்ல எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு எனக்கு எல்லாம் தெரியும்......என்னய
ஏன் தனியா விட்டுட்டு வந்தீங்க ?
அர்ச்சனா :
நீதான தனியா இருக்கனும்னு சொன்ன?
அன்னப்போஸ்டு
: நான் தனியா இருக்கனும்னு சொன்னத இப்டி வெளிய சொன்னா என்னய என்ன நெனப்பாங்க ?
அர்ச்சனா :
என்ன நெனப்பாங்க ?
அன்னப்போஸ்டு
: அதான் கேக்குறேன் என்ன நெனப்பாங்க ?
அர்ச்சனா :
அங்க பாரு அந்தப்பக்கம் சோமு சிரிச்சிட்டே போறான்...
அன்னப்போஸ்டு
: என்னது சிரிக்கிறானா.....டேய் சோமு...இங்க வாடா...//
அப்பறம் அனிதா
கேமரா, கிச்சன் பாத்திரங்கள், டேபிள், சோஃபா, டீவி, ஷிவானி மேக்கப் கிட், குடை, காபி
கப்பு, இப்பிடி எல்லார் கூடவும் கேப் விடாம பேசிட்டு இருந்தாங்க.....
அப்பறம் அர்ச்சனா
கிட்ட “நீங்க என்னய கட்டிப் பிடிச்சாத்தான் கைப்பிடி சாதம் உள்ள இறங்கும்”னு சொல்லி
இறுக்கமா கட்டிப் பிடிச்சுக்க சொல்லி கைய நீட்டுனாங்க.
ஆண்டவர் கும்முன்னு
வந்தார். வந்ததும் வராததுமா “கருவிகளுக்கு பூஜை போட்டு மரியாதை பண்றதால ஆயுத பூஜை எனக்கு
ரொம்ப பிடிக்கும். அன்னைக்கு கருவிய உபயோகப்படுத்தக் கூடாதுன்னு சொல்றத தவிர அது நல்ல
பண்டிகைதான். கருவிகள எப்பவும் நேரா, கூரா, கின்னுன்னு வச்சிருக்கனும்”னு சொன்னாரு
(என்ன ஆண்டவரே வீக்கெண்ட் மோடா ?)
அகம் – அகம்
பில்டர பாத்துட்டு
“டேய் என்னடா இது ட்ரெஸ்ஸு சூரக்கோட்டை சிங்கக்குட்டி பட சிலுக்கு மாதிரி சீ த்ரூ சட்டையெல்லாம்
போட்டிருக்க?”ன்னு கலாய்ச்சிட்டு. சில பேர இடம் மாத்தி உக்கார வச்சிட்டு “அன்னப்போஸ்டுக்கு
ஸ்பேஸ் இல்லன்னு சொல்லுது பாரு”ன்னு பட்டயக் கெளப்புனார்.
உடனே அன்னபோஸ்டு
5 மணி செய்திய ஆரம்பிக்க..... “பாத்தியா ஸ்பேஸ் இல்லாமா ஸ்பீச் குடுக்க ஆரம்பிச்சுட்ட”ன்னு
கவுண்டர் குடுக்க....”என்னய நீங்க காலய்க்குறீங்க போலயே”ன்னு அன்னப்போஸ்டு சொன்னதும் “அட பாருடா உடனே கண்டுபிடிச்சிருச்சு”ன்னு
ஆண்டவர் குடுத்த எக்ஸ்பிரெஷன் எக்ஸெல்லன்ட்....!
“சரி யார யார்
கார்னர் பண்றதா நெனைகிறீங்க?”ன்னு கேட்டதுக்கு சுரேஷ் “என்னய தவிர என்னய எல்லாரும்
கார்னர் பண்றானுங்க”ன்னார். அன்னபோஸ்டும் அதயேதான் சொல்லுச்சு. “ரம்யா மாதிரி இருக்கப்
பழகுங்க பக்கிகளா அது பாருங்க குழந்தைங்க டாக்டர் மாதிரி முட்டாய் குடுத்துக்கிட்டே
மருந்த குத்திருது”ன்னு சொன்னார்.
ஆரியோ “என்னய
பிராண்ட் ஆக்கிட்டானுங்க”னு 1768 வது தடவையா சொன்னாப்ல. “அத நான் ஐடியாவா உனக்கு சொன்னா
அந்த ஐடியாவ அவனுங்க எடுத்துக்கிட்டனுங்க போல....பரவாயில்ல உன் நேர்மை உனக்கு உளுந்தங்கஞ்சி
தரும்”னு சொன்னாரு.
பிரேக்ல ஆரிகிட்ட
பில்டரு...”இவனுங்க இப்பிடித்தான் என்னத்தையாச்சும் சொல்லி அத ரெஜிஸ்டர் பண்ணுவானுங்க.
இப்ப கூட பாருங்க அர்ச்சனாவ அன்னை அர்ச்சனான்னு சொல்லிட்டு திரியுறானுங்க. என்னய அப்பிடித்தான்
குழந்தைன்னு பிராண்ட் பண்ணப் பாத்தானுங்க....இப்பப் பாத்தீங்களா என்னய கண்டாலே பத்தடி
பயந்து ஓடுறானுங்க”ன்னு ஓதுனான்.
அர்ச்சனா திடீர்னு
“எவன் எக்கேடு கெட்டுப் போனா எனக்கென்ன ! இனி வேல்ஸு, ரியோ, நிஷா 3 பேருக்காகத்தான்
நான் முன்ன வந்து நிப்பேன்”னு சபதம் எடுத்தாங்க. எவனோ சொன்னானே இந்த வீட்ல குரூப்பிசம்
இல்லேன்னு.
சனமும் “ஈசி
டார்கெட்டுன்னு எனி டைரக்ஷன்ல இருந்தும் என்னய மட்டும் அடிக்குறானுங்க. தேர்தல்னு வந்தா
என்னய வெளிய அனுப்பி தான் செக் பண்றானுங்க. அன்னைக்கு வேல்ஸெல்லாம் ஒர்ஸ்ட் பெர்பார்மர்
சனந்தான்னு தூக்கத்துல கூட என் பேர சொல்லித்தான் பொலம்புறான். என் பேர மாத்துனாத்தான்
தப்பிக்க முடியும் போல இந்த வீட்ல”ன்னு மூக்க சிந்திட்டு இருந்தாங்க. “வேறென்ன நீ போனா
நல்லா இருக்கும்னு நெனைக்கிறானுங்க போல”ன்னு இவரு பங்குக்கு கட்டைய குடுத்தாரு.
நேர்மை நல்லதுன்னு
ஒரு 5 நிமிஷம் காந்தி கதையெல்லாம் சொல்லி அப்பறம் அதுல டாஸ்க்குல ஆரியோட நேர்மையப்
பத்தி கோர்த்து விட்டு. “உன் நேர்மைக்கு பரிசு நீ சேவ்டு”ன்னு முடிச்சார்.
“அப்பறம் நாடா
காடா டாஸ்க்குல குடுத்த கேரக்டர அப்பிடியே எடுத்துக்க தேவையில்ல....அசுரன் கடவுள் எல்லாம்
நடத்தையில இருக்கு....நீ நெனைக்குறதுல இருக்கு....எதுவாக நினைக்கிறாயோ...அதுவாகவே ஆகிறாய்”னு
சொல்லிட்டு “ஸ்டோர் ரூமுக்கு போயி பொருள எடுத்துட்டு வா”ன்னு சொன்னாப்ல
நல்லவன்னு நெனைக்கிறவனுக்கு
கிரீடம், கெட்டவன்னு நெனக்கிறவனுக்கு கொம்பு குடுக்கனும்.
இதுல அதிக கொம்பு
வாங்குன கொம்பன் பில்டரு. ஆனா இந்த டாஸ்க்கே ஷிவானிக்குன்னு செஞ்சாப்ல இருந்துச்சு.
ஷிவானிக்கு கொம்பு குடுத்த அன்னப்போஸ்டு “ஷிவானி பழிக்குப் பழி வாங்குற ஆளா இருக்கு.
எப்பப் பாத்தாலும் என் பேர முதல் ஆளா குத்துது. அது குழந்தை இல்ல என்னய எத்துது”ன்னு
சொல்லிட்டு உக்காந்ததும், அடுத்து வந்த ஷிவானி கொம்ப எடுத்து அன்னப்போஸ்டுக்கு மாட்டிட்டு
“அது ஒளருர மாதிரியெல்லாம் ஒரு மண்ணும் இல்ல. அது இருந்து செய்யுற எல்லாமே இரிட்டேட்டிங்கா
இருக்கு அதான் காரணம்”னு சொல்லிட்டு அசால்ட்டாப் போயிடுச்சு. இந்த இடத்துல ஆடியன்ஸ்
இருந்திருந்தா அவங்க அப்ளாஸுக்கே அன்னப்போஸ்டு அப்பீட் ஆகியிருக்கும்.
அதே மாதிரி
பாலா ரியோக்கு கிரீடம் குடுத்தப்ப “உன்னய மாதிரி உனக்கு சிங்கி அடிக்க 4 பேர சம்பாதிச்ச
மாதிரி என்னல சம்பாதிக்க முடியாது அதனால அந்த திறமைக்கு இந்த கிரீடம்”னு சொல்லி மாட்டும்
போது ஆண்டவர் “பாத்து பில்டரு குத்திடப் போகுது”ன்னு பஞ்ச் அடிக்க....”குத்திடுச்சு
சார்”னு ரியோ ரிப்ளை குடுத்ததும் நச்.
அதிக கொம்பு
குடுத்ததப் பத்தி பில்டரும் கடுகளவு கூட கரையல...
இதுல கேபி “அன்னப்போஸ்டு
கிட்ட பேசவே பயமாயிருக்கு. “அ” னு ஆரம்பிச்சாலே ஆரண்ய காண்டம் வாசிக்க ஆரம்பிச்சுடுது”ன்னு
சொல்லி கொம்ப மாட்டுனதால, அப்பறமா அன்னப்போஸ்டுகிட்ட மாட்டுச்சு
அனிதா : என்னய
பாத்து ஏன் பயம் ?
கேபி : பாத்தா
இல்ல பேசுனா
அனிதா : இங்க
பாரு நான் ஒரு ஆம்பள பாலா. பேச நெனச்சத பேசுவேன்...இதுவே பாத்தேனா ஒரு முறை காலேஜுக்கு
போகும்போது !@##$%%^^&&**()))_++)*^%$@@!@$%^&*)9),!@##$%%^^&&**()))_++)*^%$@@!@$%^&*)9),!@##$%%^^&&**()))_++)*^%$@@!@$%^&*)9)!@##$%%^^&&**()))_++)*^%$@@!@$%^&*)9)
கேபி : இதுக்குத்தான்
நான் பயந்தேன்....//
அப்பறம் எவிக்ஷன்.
ஆஜித்தான் எவிக்டட் ஆனா பாஸ் வச்சு தப்பிச்சுட்டான். சோ இந்த வாரம் எவிக்ஷன் இல்ல.
அடுத்து “கேப்டன் டாஸ்க்க இண்டெலெக்சுவலா பண்ண என்னால மட்டுந்தான் முடியும்”னு சொல்லிட்டு
3 பேரையும் கூப்ட்டு சாட் பூட் த்ரீ போட சொன்னார், சனத்துக்கு சாட் பூட் த்ரீயும் தெரியாதாம்.
சரி இங்கி பிங்கி பாங்கி, ரென்டுல ஒன்ணு தொடுறதுன்னு “தலைவர்கள் தேர்வ இப்பிடி விளையாட்டா
பன்ணாதீங்கன்னு உனர்த்தவே இந்த திருவிளையாடல்”னு சொல்லிட்டு ஓட்டுப் போடும் முறைக்கு
வந்தாரு.....அன்னை அர்ச்சனா கேப்டன்.
தியேட்டர் தொறந்தாச்சா
சார்னு ரியோ கேட்டதுக்கு அதெல்லாம் சொல்ல முடியாதுன்னு ஆண்டவர் சமாளிக்க லவ் யூ சார்னு
ரியோ சொன்னான். சனமும் ஒரு மனசா வீ லவ் யூ சார்னு சொன்னத ஆண்டவர் மதிக்கல....அதுக்கு
ஷிவானி சிரிச்ச சிரிப்பு இருக்கே......செம்ம.
இன்னைக்கு
4 மணி நேரமாம். 8 மணி நேரம்னாலும் இந்த திருவாத்தானுங்க கண்டெண்ட் குடுக்க மாட்டானுங்கன்ற
நம்பிக்கை இருக்கு.....பாக்கலாம்.
Comments
Post a Comment