பிக்பாஸ் – 4 : நாள் - 3 (07.10.20)


2ம் நாள் தொடர்ச்சி....

ஒரே ஒரு பாட்ட கத்துவச்சுக்கிட்டு வீட்டுக்கு வர விருந்தாளிக எல்லாருக்கும் வலுக்கட்டாயமா ஆடிகிட்டே பாடிக்காட்டி பிஸ்கட்டு வாங்கி திங்குற சின்னப்பையன் மாதிரி.....வாசிப்பாளர்ன்ற ஒரே காரணத்துக்காக டிவி நியூஸ், யூ ட்யூப், ரேடியோ அப்டின்னு எல்லா மீடியம் வாசிப்பாளராவும் மாறி வதைச்சுகிட்டு இருக்கு இந்த அனிதா. இன்னைக்கு கிச்சன்ல எல்லாரையும் கூட்டி வச்சு யூ ட்யுப் வாசிப்பாளரா மாறி சோமு, நிஷா, ரியோவ கலாச்சுட்டு இருந்துச்சு . இத தூரத்துல இருந்து பாத்து ரசிச்சுட்டு இருந்தாரு நம்ம சுரேஷ். வழக்கமா விருப்பமா அவரே போயி வாழ்த்திட்டு...வாங்கிக் கட்டிக்கிட்டு வருவாரு ஆனா நிலைமை சரியில்ல அதனால கைய கட்டிக்கிட்டு கமுக்கமா உக்காந்துக்கிட்டாரு.

கேபிய அழுது பொலம்ப சொன்னானுங்க...

“இப்ப நான் உங்ககிட்ட என்ன சொல்றது.....அதாவது என்ன சொல்றேன்னா....அது வந்து....அதாவது”ன்னு பாவம் கல்லக் கடிச்சுதுப்புன மாதிரி கையப் பெசஞ்சுக்கிட்டு நின்னுச்சு கேபி. ஒரு கட்டத்துல “நான் சின்னப் பிள்ளையா இருந்தப்ப”ன்னு சொல்லுச்சு. நமக்கோ  “நீ இப்பவும் சின்னப் பிள்ளைதான?”ன்னு வாயில வந்துச்சு. ஒல்லியா இருந்ததால சான்ஸ் கிடைக்கலையாம்....இப்ப ஜிம்முக்கு போயி கும்முன்னு இருக்குறதால பிக்பாஸுக்கு வந்துருச்சாம்....இனி இது மூலமா வாழ்க்கையில ஜெயிக்குமாம். கேட்டுக்கோங்க......

சுரேஷுக்கு பிடிக்காதவன் எவனோ அனிதாவுக்கு சண்டா மந்திரத்த மந்திரிச்சு விட்டு உள்ள அனுப்பி விட்டுட்டான் போல....பொழுது சாஞ்சுச்சுன்னா அந்தாளு பக்கத்துல போயி நின்னு பல்லக் கடிக்க ஆரம்பிச்சுடுது. அங்க சோபால எல்லாரும் உக்காந்திருக்க, ஆரியோ எவனோ என்னத்தயோ லெக்சர் அடிச்சுட்டு இருந்தான். சுரேஷு ரேகாகூட ரெட்ரோ பாடிகிட்டே அங்க பேசுறத கேட்டுட்டு இருந்தாப்ல. சட்டுனு சீனுக்குள்ள வந்த அனிதா...”உருளைக்கிழங்க உருட்டி விடவா....இல்ல உப்புல போடவா”ன்னு புகைச்சல உண்டு பண்ணதும், சுரேஷு பொறுமையா “பேசாதம்மா எனக்கு அவன் பேசுறது கேக்கல”ன்னு கேசுவலாத்தான் சொன்னாரு....அவ்வளவுதான் அஞ்சு லிட்டர் குக்கர் அனிதா விசிலடிக்க ஆரம்பிச்சுடுச்சு “பேசல, பேசுவேன், அப்டித்தான் பேசுவேன், பேசாம இருப்பேன், பேசிக்கிட்டே இருப்பேன், பேசிப் பேசி பேசுவேன், ஆனாலும் பேசமாட்டேன், பேசுனா பேசுவேன், பேசலேன்னா பேச மாட்டேன், பேசாத கண்ணும் பேசுமே, கண்மணியே பேசு, பேசுவது கிளியா”ன்னு ஒரே பேச்சா பேசித் தள்ளுச்சு அனிதா. அது பேசுன பேச்சுல பேதிய வந்துரும் போல.

சுரேஷோ “பேசுனது என் தப்புதான்....நல்ல மாட்டுக்கு ஒரு சூடு”ன்னு சொல்லிட்டு இருந்தப்ப பின்னாடி நின்ன பில்டர் பாலாஜி....”நல்ல மாட்டுக்கு ஒரு சூடு...அப்ப எருமை மாட்டுக்கு எத்தனை சூடு....”ன்னு கேட்டுட்டுக்கிட்டே கவுண்டமணி காமெடிய சொன்னாப்ல அவனா கையத்தட்டிகிட்டு சிரிச்சுக்கிட்டே போயிட்டான். “இவன் கூடயா கூட்டு சேந்து சுத்திட்டு இருக்கோம்”ன்ற மாதிரி பாத்தாரு சுரேஷு.

 “சார்...100 நாள் இருக்கனும்னா அமைதியா இருங்க....அந்த மொளகாய இந்தப்பக்கமா எடுங்க”ன்னு மோட்டிவேஷனல் ஸ்பீச் குடுத்த ரேகாகிட்ட....”இருக்குறது முக்கியமில்ல மானம், மரியாதையோட இருக்குறதுதான் தான் முக்கியம்”னு முடிச்சாப்ல சுரேஷு. “அதுக்கு பெரியவங்களப் பாத்தா சண்டை போடுற சைக்கலாஜிக்கல் பிராப்ளம் இருக்கு.....எழவெடுத்தவ என்னய எங்க பாத்தாலும் எகிறி குதிச்சு ஓடிவந்து வம்பிழுக்குறா”ன்னு வருத்தப்பட்டார்.

வீட்டு வெளக்கணையுறதப் பாக்க ரம்யாவும், ஷிவானியும் பால் பாக்கெட் வாங்க வர மாதிரி பப்பரப்பான்னு லானுக்கு ஓடி வந்து பாத்துட்டு “வாவ்...ஆசம்...வாவ்சம்...பூசம், புனர்பூசம்”னு பொலபிட்டு இருந்துச்சுங்க.....எத நம்பி இதுங்கள உள்ள கூட்டிட்டு வந்தானுங்கன்னு தெரியல.....இதோட 2ம் நாள் முடிஞ்சது....

3ம் நாள்

இப்பல்லாம் பிக்பாஸ் அவரு எந்திரிக்க அவரு வச்சுக்குற அலாரந்தான் போல இது. எல்லாரும் எந்திருச்சு உக்காந்ததுக்கப்பறம் யாருக்குடா அலாரம் அடிக்கிறீங்க ? ஒர்ஸ்டுடா !

சில் ப்ரோ பாட்டு ! அனிதாலாம் ஆளுக்கு முன்ன ஓடி வந்து முன்வரிசைல நின்னு அம்மன் கோவில் ஆடித்திருவிழாவுக்கு ஆடுற மாதிரி அன்லிமிட்டெடா ஆடிட்டு இருந்துச்சு. அப்பறம் அந்தி மழை மேகம் ஹோலி கோஷ்டிக மாதிரி கூட்டமா சேர்ந்து கும்பலா கழுதைங்க கால மிதிச்சுகிட்டு ஆடுற மாதிரி ஆடிட்டு இருந்தானுங்க. ஆனா சத்தமே இல்லாம ஒரு 10 அடி டிஸ்டன்ஸ்ல என்னயும் பாரு.....என் ஆட்டத்தையும் பாருன்னு சோலோவா ஆடிட்டு இருந்துச்சு சொப்பன சுந்தரி ஷிவானி.

ரேகாவோட கதைய சொல்ல சொன்னானுங்க....

அந்தம்மாவ எல்லாரும் ஓட்டிட்டு இருந்தாங்க. “வயசுல நான் எல்டரு ஆனா என்னய புடிக்கலன்னு சொல்றான் இந்த பில்டரு”ன்னு சம்பந்தமில்லாம பாலஜிய சொன்னதும்....அவன் “நான் உங்கள பிடிக்கலன்னு சொல்லல...நீங்க சொல்றது பிடிக்கலன்னு சொன்னேன்....ஆனா சொல்றது நீங்கதான அதனால உங்கள பிடிக்கலன்னு சொல்றதும் சரிதான்”னு சொல்லி “உன்ன விட நான் பெரிய லூசு”ன்னு ப்ரூஃப் குடுத்தான்.

மேடைல நின்னுக்கிட்டு எந்த கஷ்டத்த சொல்றதுன்னு தெரியாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருந்த ரேகா தான் கடந்து வந்த பாதையில கமல் சார் குடுத்த கடலை உருண்டைதான் அவங்க கவலை உருண்டைய போக்குனதாகவும் அதனால “அடுத்தவாரம் வரும்போது கடலை உருண்டை வாங்கிட்டு வந்து நிஷாவுக்கு குடுக்காம எனக்கு மட்டும் குடுங்க....மத்தபடி நான் நல்லா படிச்சு டாக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்”னு சொல்லிட்டு இறங்கிட்டாங்க ! ஷ்ஷ்ஷ்ஷ்ஷப்பா.......முடியல ! இதுல இந்த கதைய ஆல்ரெடி ஜிம்முல வச்சு ஷிவானிகிட்ட 4 தடவ சொல்லி ரிகர்சல் வேற பாத்திருக்காங்க. பாவம் அந்த பொண்ணு இப்ப 5வது தடவையா கேட்டுட்டு உக்காந்திருக்கு.

அணு உலையில வசிக்கிற கரப்பான் பூச்சி மாதிரி ஒரு 4 ஜீவன்கள் இங்க இருக்கு. அதுல ரெண்டு கிறுக்கு ! அதுதான் ரம்யாவும், ஷிவானியும்....! அஞ்சு லிட்டர் குக்கர் அனிதா, சுரேஷு கூட அவ்வளவு பெரிய பஞ்சாயத்த கூட்டிட்டு இருக்கும்போதும்......”பெரிய நெல்லிக்காய கடிச்சு தின்னுட்டு தண்ணி குடிச்சா இனிக்கும் தெரியுமா?”ன்னு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மாதிரி பேசிட்டு இருக்குதுங்க. இப்ப கூட பெட் ரூம்ல உக்காந்து ஷிவானி “என்ன இது செம்மயா போர் அடிக்குது?”ன்னு பொலம்ப....”அதெல்லாம் ஒரு வாரத்துக்கு அப்பறந்தான் நல்லா இருக்கும்”னு ரம்யா நாடி ஜோசியம் சொல்லிட்டு இருந்துச்சு. இடுப்பக் காட்டி இன்ஸ்டால போட்டோ போட்டு விளையாண்டுகிட்டு இருந்த இந்த பச்ச மண்ணுகள உள்ள கூட்டி வந்து இம்சை பண்றானுங்க....இதுல ரம்யாதான் இந்த வார கேப்டன் வேற.....சிறப்பு !

சாம் வந்தாங்க....! சாயல்ல சவுந்தர்யா ரஜினிகாந்த் மாதிரி இருக்காங்க. “உணவு, உடை, உறைவிடம் இந்த 3க்கும் எனக்கு கஷ்டமே இல்ல. குழந்தைக்கு ஒன்றை வயசு வரைக்கும் தாய்ப்பால் குடுத்தேன். அப்பா திட்டுவாரு அதான் கஷ்டம். குழந்தைக்கு முடியாமப் போச்சு அது கஷ்டமோ கஷ்டம்...! டஃப்புக்கே டஃப்பு குடுப்பேன் அதான் எனக்கு இஷ்டம்”னு சொல்லி முடிச்சாங்க. இவனுங்க எதுக்கு கை தட்டுனானுங்கன்னு இன்னும் புரியல.

இந்த தாய்ப்பால் மேட்டர்ல இம்ப்ரெஸு ஆன சுரேஷு காத்தோட்டமா கால அகட்டி...மல்லாக்க படுத்து விட்டத்த பாத்துக்கிட்டே சாம் கிட்ட “நீ ஒரு மாடலா இருந்துக்கிட்டு ஒன்றை வயசு வரைக்கும் தாய்ப்பால் குடுத்தியே.... நீ சாதாரண மாடல் இல்ல....மாடல்களுக்கே நீதான் ஒரு ரோல் மாடல்”னு புகழ்ந்தார்.

அடுத்து ஆரியும், ரியோவும் அடுதடுத்து வந்து தாங்கள் கடந்து வந்த பாதைகளப் பத்தி சொல்லி முடிச்சாங்க.

மறுபடி கிச்சன்.....! பொம்பள புள்ளைக கூட்டத்துல நின்னுக்கிட்டு “கேரட்டு என்ன சைஸ்ல வேணும்?”னு கேட்டு கலவரப்படுத்தி, அடுத்த அரை நிமிஷத்துல “தண்ணி பட்டா கேரட்டு சுருங்கும்”னு சொன்னதும்.....சனமும், கேபியும் சிரிச்சுகிட்டத நான் கவனிக்கல. ம்ம்ம்ம்.....பில்டரு ஒரு ப்ளேயரு போல.....! பாத்துடா..... நடத்தியே ஷிவானிய நாகாலாந்துக்கு கூட்டிட்டு போயிரப் போறான்.

யாருமில்லாதத உறுதி படுத்திட்டு ரம்யாவ கூப்ட்ட சுரேஷு.....”வந்த முதல் நாள் ஒரு கேம் நடத்தி கேப்டன் யாருன்னு சொல்லிட்டாரு பிக்பாஸு”ன்னு சொன்னார். “அட...யாரு சார் அது?”ன்னு ரம்யா ஆர்வமா கேக்க.....”கிறுக்கு மாக்கானே அது நீதான்”னு தெளிய வச்சார். அப்றம் “இங்க பாத்தியா காய்கறிய வெட்டுறேன்னு வரானுங்க....ஆனா எனக்கு குனிய முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டு வெட்டுன காய்கள கீழ் செல்புல வச்சுட்டு போயிடுறானுங்க. டிசிப்பிளின்னு வாழ்க்கையில எழுதி கூட பாத்ததில்ல போல இவனுங்க”ன்னு இட்டுக்க்கட்ட...”கேப்டன் நாந்தான்னு சொன்ன நீங்க ஒரு கேப்டனா நான் என்ன செய்யனும்னும் சொல்லலாமே?”ன்னு சோகமா கேக்க....”குக்கிங்க் டீம மட்டும் கூப்புட்டுறாத”ன்னு சொல்லி வாய மூடுறதுக்குள்ள ரம்யா கதவத் தொறந்துகிட்டு ஓடிப்போயி குக்கிங்க் டீம உள்ள கூப்ட்டு வந்துருச்சு.

“காய வெட்டி அவரு கைல குடுங்கடா கன்றாவி பிடிச்சவனுங்களா”ன்னு ரம்யா சொன்னதும் சனம் அத ஏறிட்டு பாக்க...”அப்டின்னு நான் சொல்லல இந்த மிராண்டா மண்டையந்தான்”னு கைய காட்டி விட்டுட்டு கழண்டு ஓடிருச்சு. கொஞ்சம் கொஞ்சமா பொழுது சாய ஆரம்பிக்க அனிதாவுக்கு சண்டா மந்திரம் வேலை செய்ய ஆரம்பிக்குது.....மொத்தத்துல அனிதா சம்பத்து இல்ல....அனிதா வம்பத்து.....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)