பிக்பாஸ் – 4 : நாள் - 22 (26.10.20)
முன்குறிப்பு
: இடது காது அனிதாவின் பேச்சினாலும், வலது காது வேல்முருகனின் பாடலாலும் பாதிக்கப்பட்டு
இன்னும் “ங்கொய்ங்”என்ற ஒலி காதில் கேக்கக் கேக்க எழுதிய பதிவு இது......
வழக்கமா வழக்கமில்லாத
வழக்கத்த ஒழுக்கமில்லாம செய்யுற நம்ம விஜய் டீவி இப்ப பிக்பாஸையும் விட்டு வைக்காம
கடிச்சிட்டாய்ங்க....! விஜயதசமி கொண்டாடுறேன்னு 4 மணி நேரம் வித விதமா கொன்னெடுத்துட்டானுங்க.
இவனுங்க விஜயதசமி கொண்டாடலேன்னு விஜயகாந்த் அழுத மாதிரி வீம்புக்கு கொண்டாடி வச்சிருக்கானுங்க.
வெண்பொங்கல்ல கெடக்குற முந்திரி பருப்பு மாதிரி எடுத்த ஒவ்வொரு பிடிக்கும் ஒரு கண்டெண்டும்
மாட்டல. இருந்தாலும் இருந்த கொஞ்ச நஞ்சத்த
பாப்போம்.
22 வது நாள்
“மதுரை குலுங்க
குலுங்க” பாட்டு அலாரம். அல்லாடி தள்ளாடி வெளிய வந்தானுங்க. எல்லாரும் டான்ஸ் ஆடத்
தெரியாத அளவுக்கு டான்ஸ் கத்திருப்பானுங்க போல. ஷிவானியும் , அதோட அம்மா மாதிரி சம்முவும்
ஒண்ணு மண்ணா ஸ்டெப்புகள போட, மத்தவனுங்களும் நெல்லு குத்திட்டு இருந்தானுங்க. சோமு
ஆடனும்னா மட்டும் ரம்யாகிட்ட ரேங்குறான். நாரோட சேந்த பூ மாதிரி கேபியும் வர வர ஒழுங்கா
ஆட மாட்டேங்குது. பில்டரெல்லாம் 5 நாளு ஆடுனதோட சரி.....இப்பயெல்லாம் அக்காடான்னு உக்காந்து
அக்கா மகளே இந்துன்னு ஷிவானி ஆடுறத பாத்துட்டு இருக்கான்....
நாமினேஷன்.
“லான்ல போட்டோ வச்சுருப்போம் ஆளுக்கு 2 பேர் போட்டோவ எடுத்துட்டு வந்து கேமராவுக்கு
முன்னாடி நின்னு காரணம் சொல்லி நாமினேஷன் பண்ணிட்டு தடயமில்லாம முன்னாடி எரிஞ்சிட்டு
இருக்குற சட்டில போட்டு போட்டோவ எரிச்சிரனும்”னு சொன்னாப்ல. “செத்தாடு காப்பணம் சொமக்கூலி
முக்காப்பணம்” பழமொழிக்கு பக்காவா பொருந்துற ஒரே ஆள் நம்ம பிக்பாஸந்தான்.....யாரு நாமினேஷன்னு
வாயலயே வந்து சொல்லிட்டுபோனா போலீஸ் புடிச்சுக்குமாமா ?
மாத்தி மாத்தி
எவனுக்கும் புடிக்காம இப்ப நமினேஷன்ல 11 பேர் வந்து நிக்குறானுங்க. பில்டரு, ரம்யா,
அன்னப்போஸ்டு, சோமு, வேல்ஸ், ஆஜீத், நிஷா, ரியோ, சகுனி, ஜித்து, சனம் இவங்கதான் நாமினேஷன்.
சம்முவும்
, ஷிவானியும் “இந்த தடவ ஏன் 11 பேரு நாமினேஷன்ல வந்தாங்க?”ன்னு கலந்தாய்வுல இருந்தாங்க.
“1 ஓட்டு வந்தாலே நாமினேஷன்னு இருக்கும் போல அதனாலதான் இவ்வளவு பேரு நாமினேஷன்ல”ன்னு
ஷிவானி சொன்னதும், சம்முவுக்கு “ஆடு மேய்க்குற பயலுக்கு இம்பூட்டு அறிவா?”ன்ற மாதிரி
ஆச்சர்யம். அதுவும் அம்மா மாதிரி வேறையா அப்பிடியே ஆத்தாத்து போனாங்க.
அர்ர்சனாவும்,
சகுனியும் மாறி மாறி “நான் போவேன், நீ போனும்”னு பேசிக்கிட்டாங்க.
சனம், வேல்ஸு,
பாலா 3 பேரும் உக்காந்திருக்க....”அப்பாடி ஒரு 12 மணி நேரமா பில்டரு கொஞ்சம் பதமா பேசுறான்”னு
வேல்ஸு நெனச்சுட்டு இருக்கும்போதே பில்டரு “யோவ் வேல்ஸு, இந்த வாரம் நீ அவுட்டு....
ஆனா சனம் வேணும்னா உன்னக் காப்பாத்த வழி இருக்கு”ன்னு சொல்ல, வேல்ஸு “அப்பிடியா சொல்றீங்க
? ஆகா...அப்பிடியா ? சனத்துக்கு அவ்வளவு சக்தியா ? சனம் என்னய எப்பிடி காப்பாத்தும்”னு
கேக்க, “ஏங்க அவன் நான் வெளிய போயிருவேன்னு சொல்றான் அது புரியாம நீங்க வேற”ன்னு பொலம்பிட்டே
போச்சு. எப்பிடியும் இந்த வாரம் ஆண்டவர்கிட்ட வேல்ஸு “சார் பாலா என்னய எப்பப் பாத்தாலும்
வெளிய போயிருவேன்னு சொல்லி பயமுறுத்துறாரு”ன்னு ஒரு பாட்டு பாடிருவாப்ல.
இங்குட்டு அர்ச்சனா
“சனத்துக்கு நெறையா பேரு மேல முன்முடிவு இருக்கு போல. அதுல ரிகர்சல் வேற பாத்துட்டுதான்
திட்டுது...எதுக்கும் வேல்ஸுக்கு ரெண்டு அப்பளம் அதிகமா குடுத்து அவன் கிட்ட சனம் இன்னும்
யார யாரயெல்லாம் திட்ட ரிகர்சல் பாத்திருக்குன்னு கேட்டுக்கலாம்”னு சொன்னாங்க.
பந்தியில பாயாசம்
குடிச்சிட்டு இருந்தவனுக்கு பட்டுன்னு பயித்தியம் பிடிச்ச மாதிரி....எல்லாம் ஒழுங்கா
போயிட்டு இருக்கும்போது “வாங்க விஜயதசமி கொண்டாடலாம்”னு வந்தானுங்க.
கிராமம், நகரம்னு
2 டீமா பிரிஞ்சு விஜயதசமி கொண்டாடனுமாம்.
கிராமப்புறம்
– சகுனி, அர்ச்சனா, நிஷா, சம்மு, ரியோ, கேபி, ஆரி, வேல்ஸு
நகர்ப்புறம்
– பில்டரு, சோமு, ரம்யா, ஷிவானி, சனம், ஆஜீத், ஜித்து
ஆனா கொடுமைக்கும்
கொடுமை காலக்கொடுமையா அன்னப்போஸ்ட இந்த நாள் முழுக்க ஆங்கர்னு சொன்னதுதான் பெருங்கொடுமை.....!
கம்மியா பேசுன்னு சொன்னாலே கால் மணிநேரம் கேப் விடாம பேசும், அதப்போயி இன்னைக்கு முழுக்க
பேசலாம்னு சொன்னா கேக்கவா வேணும்...கோடி அருவியா கொட்டித் தீத்துருச்சு பொண்ணு.....கேட்டவன்
காது பூராம் புண்ணு....!
இன்னொரு பக்கம்
வேல்ஸு.....! பாகவதர் படம் பாத்த மாதிரி கேட்ட கேள்வி எல்லாத்துக்கும் வேல்ஸு பாட்டுப்
பாடித்தான் பதிலச் சொல்றாப்ல....இன்னைக்கு 4 மணி நேரத்துல மட்டும் 400 பாட்டுப் பாடி
பவளக்கொடி படத்தையே தூக்கி சாப்ட்டாப்ல.....
தொகுப்பாளினின்றதுக்காக
தொங்கிட்டு இருந்த கேமரா ஒண்ணு விடாம கேமராவுக்கு 10 நிமிஷம்னு 2 மணி நேரம் பேசி ரிகர்சல்
பாத்தாங்க அன்னப்போஸ்டு.
பொம்மைக்கு
பெயிண்ட் அடித்தல் :
குடுத்த பொம்மைக்கு
கலர் பெயிண்ட் அடிக்கனும். இதுல உருப்படியான ஃபுட்டேஜ், பில்டரு ஷிவானிக்கு கலர் அடிச்சதுதான்.
இதுல தெரிஞ்ச இன்னொரு முக்கியமான விஷயம் ரெண்டும் மாத்துக் குறையாத மக்குங்க. பில்டரு
சைஸா “ஆல் யுவர் பியூட்டி” பாட ஷிவானிக்கு ஒரே ஷை ஆகிப்போயி அவன் விட்ட ஒரு லுக்கு.......செம்ம
கிக்கு. நல்ல சீன் அது. அப்டித்தாண்டா...... இன்னும் 2 வாரத்துல ஸ்டார்ட் பண்ணிடுங்கடா
ப்ளீஸ்.
சமையல் போட்டி
:
அன்னப்போஸ்டு
ஜட்ஜு. பில்டரு டீம் செஞ்ச பாயாசம் தான் வின்னுன்னு அன்னப்போஸ்டு தீர்ப்பெழுத....அப்பறமா
குடிச்ச சகுனி “கல்லும் மண்ணும்மா கெடக்கு இதுக்குப் போயி முதல் பரிசா?”ன்னு பரப்பிட்டு
திரிஞ்சாப்ல. இந்தக் கலவரத்துலையும் “வடை வேணாம்னா எனக்குக் குடு”ன்னு ஆரி கேபிகிட்ட
வாங்கி சாப்ட்டது சாணக்கியத்தனத்தின் மிச்சம்.
வாழ்த்துகள்
:
போட்டோ ஃபிரேம்ல
நின்னுக்கிட்டு வீட்டாளுகளுக்கு வாழ்த்துகள் சொல்லனும்.
7 ஸ்டோன்ஸ்
:
அடிபுடின்னு
விளையாண்டு நகரம் டீம் வின்னு. இடையில அங்கிட்டும் இங்குட்டும் அல்லாடிட்டு இருந்த
அன்னப்போஸ்ட அப்பவே தட்டி விட்டிருந்தா தமிழ்நாடு தப்பிச்சிருக்கும். தவறிட்டானுங்க.
பெண்கள் இந்த
வீட்டின் கண்கள் :
“இந்த வீட்டு
பெண்களப் பத்தி புகழ்ந்து பேசனும்”னு சொன்னதும். வேல்ஸத் தவிர ஆண்கள் எல்லாரும் பெண்கள
புகழ்ந்து சொல்ல. வேல்ஸு ஒரு 10 பாட்டுப் பாடுனாப்ல. பேசுறதுல கருப்பு அனிதா அவரு.
கண்ணாலயே பூராம் கால்ல விழுந்ததும் தான் போனாப்ல.
அப்பறம் அன்னை
அர்ச்சனா ஆண்களைப் பாராட்டி நன்றி சொன்னாங்க.
இருட்டுனதும்
“எல்லாரும் வந்து பொம்மைய வச்சுட்டு விளக்க ஏத்திட்டு விஷேசத்த ஸ்டார்ட் பண்ணுவோம்”னு
சொல்லுச்சு அன்னப்போஸ்டு. அப்ப எல்லாரும் வந்தப்ப சகுனி முன்ன வந்து “யாராச்சும் ஒரு
சுமங்கலி மொத வாங்க”ன்னு சொன்னதும் அனிதா வர, அது கைல அரிசிய குடுத்து பானையில போட
சொல்லிட்டு. ஒவ்வொரு ஆளா கூப்ட்டு போட சொல்லி குலவை போட்டானுங்க. வேல்ஸ் ஆல்ரெடி பாட
ஆரம்பிச்சு அரை மணி நேரமாச்சு.
கிராமமா ? நகரமா
? முத்தமிழ் போட்டி (இயல், இசை, நாடகம்)
மறுபடியும்
“இசையோட ஆரம்பிப்போம்”னு சொல்லிட்டு வேல்ஸ கூப்ட்டு கிராமியப் பாட்டு பாடுன்னு சொன்னதும்
அகேயின் ஆரம்பிச்சாப்ல.......
பேச்சுப் போட்டி
ஆளுக்கொரு ஆளா
வந்து பேசுனாங்க. ஆரி “இதெல்லாம் என் இடம்”ன்ற மாதிரி தமிழ் பண்பாட்டுல ஆரம்பிச்சு
மாட்டு வண்டியில வந்து முடிச்சார். ரம்யா நகரம் சார்பா பேசுனது சிறப்பு.
“ஏண்டா பேச
வேண்டிய இடத்துல என்னய பேச விடாமயாடா வாயக் கட்டி போடுறீங்க?”ன்னு ஆவல் தாங்காம கயித்த
அத்துக்கிட்டு அன்வாண்டடா வந்த அன்னப்போஸ்டு சும்மா இல்லாம ஸ்டேஜ்ஜுல ஏறி “நான் ஜட்ஜுதான்
ஆனாலும் நகரத்துக்கு சார்பா சில பல பாயிண்டுகள சொல்றேன்”னு சொல்லி......”சென்னைல எவனும்
ஜாதி கேக்குறதில்ல”ன்னு ஒரு குண்டப் போட்டுச்சு. “சரி தொலையுது”ன்னு சொல்றதுக்குள்ள
“சகுனி ஒரு சடங்குன்னா சுமங்கலி ஆரம்பிக்கனும்னு சொல்றான். என் கல்யாணத்துல என் கைம்பெண்
மாமியார்தான் எல்லாத்தையும் செஞ்சாங்க”ன்னு சொல்ல அப்பவே எல்லாரும் எனிமா குடிச்சா
மாதிரி மூஞ்சிய மாத்துனானுங்க.
நடனப் போட்டி
“டிய்யா டிய்யா
டோலு” பாட்டுக்கு கேபி நடனம். நல்லா இருந்துச்சு. அடுத்து ஷிவானி “டார்லிங்கு டம்பக்கு”
பாட்டுக்கு சும்மா இடுப்ப வளைச்சு நெளிச்சு....பாஸ்டர் ஸ்லாங்குல சொல்றதா இருந்தா அட்டகாசமான,
அம்சமான, ஆர்ப்பரிப்பான, அருமையான, அமர்க்களமான ஒரு நடனம். அப்பறம் எப்பயும் போல பொண்ணு
பொல பொலன்னு ஓடிப்போயி பெட் ரூம் கேமராகிட்ட “2வது தடவையா எனக்கு பிடிச்சப் பாட்ட போட்டு
ஆட வுட்டுருக்கீங்க நன்றி என்ற தேங்க்ஸ்”னு சொல்லுச்சு. ஷிவானி சிவகார்த்திகேயன் ரசிகை
போல.
நாடகம் :
சனம் தப்பு
தப்பா பிக்பாஸ் வீட்டுல தமிழ் பேசுற மாதிரி ஒரு டாபிக் எடுத்து நாடகம் போட்டனுங்க.
அத சும்மா பேச விட்டிருந்தாலே சரியா வந்திருக்கும். அப்பறம் இன்னொன்னு, அன்னைக்கு சனம்
“22 படம் நடிச்சும் தன்ன யாருக்குமே தெரியலே”ன்னு வருத்தப்பட்டுச்சுல்ல, அத ஏன்னு இப்ப
நாடகத்துல நடிச்சத பாத்ததும் தெரிஞ்சுடுச்சு.
அப்பறம் இந்த
ஜோடி நம்பர் ஒன் கொரியோகிராபர் எவனயோ உள்ள விட்டானுங்க போல. இந்த திருவிழா வாரம்னு
ஒன்னு கொண்டாடுவானுங்க அந்த தீம்ல காளி கதைய கிராமப்புறம் டீம் பண்ண......இதுக்கும்
பேக்கிரவுண்டுல பாடுனது வேல்ஸு........முடியல.....!
ஒரு வழியா முடிச்சிட்டு
எல்லாரும் உள்ள போனானுங்க. இதுக்கப்பறம் முழுக்க முழுக்க சகுனி – அன்னப்போஸ்டு பஞ்சாயத்துதான்.
அதாவது விளக்கேத்தும்
போது “சுமங்கலி வாங்க”ன்னு சகுனி சொன்னாப்லயா.....அத பாயிண்டா எடுத்து அன்னப்போஸ்டு
பேச்சுப்போட்டில பேசுச்சா.....எல்லாரும் எனிமா குடிச்ச மாதிரி மூஞ்சிய மாத்துனானுங்களே
? அந்த மேட்டர்தான். சோ சகுனி, அன்னப்போஸ்டு தன்னத்தான் வாருதுன்னு கணக்குப் போட்டுக்கிட்டாப்ல.
அர்ச்சனாகிட்ட,
நிஷாகிட்டன்னு பொலம்பிட்டே இருந்தாப்ல. இதுல ஆங்கர் தொழிலோட புனிதம் கெட்டுருச்சுன்னு
ஏன் சொன்னாப்லன்னு புரியல. பிரச்சனைய பொதுவாக்குற வேலைதான் இது. ஆனாலும் அத சொல்லிட்டே
இருந்தது எரிச்சல்தான். அர்ச்சனா “இதப் பத்தி அனிதாகிட்ட நான் பேசுறேன்”னு சொன்னதுக்கு
தலைய தலைய ஆட்டிட்டு .....அங்கிட்டும் இங்குட்டும் நிலை கொள்ளாம சுத்திட்டு இருந்தாப்ல.
ரியோவும் ரெண்டுக்கும் சம்பந்தமில்லன்னு சொல்லியும் சகுனி கேக்கல. இது லேசுவாக்குல
அன்னப்போஸ்டுக்கும் புரிஞ்சிருந்தது.
அர்ச்சனாவும்
“நீ ரொம்ப நடிக்காத அது பேசுறதுக்கான சுதந்திரமும் அதுக்கு இருக்கு நீ மதியம் பொண்ணுங்கள
அம்மா, தாயே, காமாட்சி, மீனாட்சின்னு சொல்லும்போதே தெரியும் பொழுது போறதுக்குள்ள பொறம்போக்குத்தனம்
பன்ணுவேன்னு....கொஞ்சம் பொறு நான் பேசுறேன்”னு மறுபடியும் சகுனிகிட்ட சொன்னாங்க.
வெளிய டம்சரஷ்
வெளையாடும்போது வெளிப்படையாவே கோவத்தக் காட்டுனாப்ல சகுனி.
அப்பறம் ரியோ,
ஆரி, சோமு 3 பேரும் அன்னப்போஸ்ட உக்காத்தி வச்சுக்கிட்டு “அவரு அப்பிடி நெனைக்குறாரு
அதனால நீ அவர்கிட்ட பேசி தீத்துக்க”ன்னு சொல்ல, “நீங்க எல்லாரும் அந்தாள கைதட்டி ஏத்திவிட்ட
பலன் தாண்டா இது”ன்னு அன்னப்போஸ்டு ரியோக்கு ரிவிட் அடிக்க, அவனோ “அதான தூக்கிவிட வந்தவன
தூக்குச் சட்டியில போட்டு எடுத்துட்டு போற மாதிரி....உனக்கு நல்லது சொல்ல வந்தா நீ
என்னய கைகாட்டுற. சந்தோஷம். எக்கேடோ கெட்டு நாசமாப் போ”ன்னு போயிட்டான்.
வெளிய இதப்பத்தி
வ.வா சங்க உறுப்பினர்கள் கலந்து பேசி அன்னப்போஸ்டுக்கு ஆதரவு தெரிவிச்சாங்க. வாட் எ
சப்போர்ட்.
பின்ன வீம்பா
வந்து “நான் மன்னிப்பு கேட்டே ஆவேன்”னு சொன்ன அன்னப்போஸ்ட தடுக்க முடியாம “தொல”ன்னு
ரியோ சொல்ல, “பக்கத்துல வந்தா வண்டை வண்டையா கேட்டுருவேன்”னு சொல்லி சகுனி எஸ்கேப்
ஆகிட்டாப்ல. முடிஞ்சது.......
பின் குறிப்பு
: ங்கொயிங் சத்தம் இன்னும் கேட்டுக் கொண்டேதான் இருக்கிறது. காலை குக்கர் விசிலை எப்படி
எண்ணுவேன் என்ற கலக்கத்துடன் உறங்கச் செல்கிறேன் என் உறவுகள......!
Comments
Post a Comment