பிக்பாஸ் – 4 : நாள் 1 (05.10.20)

 


சல்பேட்டாய நமஹ......!

வணக்கம் ! மறுபடியும் பிக்பாஸ், மறுபடியும் நான் ! இன்னும் 100 நாளைக்கு சீரும் சிறப்புமா உங்க ஆதரவோட இந்த வண்டிய ஓட்டிரனும்னு குலசாமிய வேண்டிக்கிறேன்.

ரைட்டு.....ஆண்டவரோட அறிமுகத்தோட நேத்து உள்ள வந்தவனுங்க யாரு யாருன்னு இப்ப எல்லாருக்குமே தெரியும்...ஆனா இவனுங்க என்ன என்ன மொள்ளமாறித்தனம்  பண்ணுவானுங்கன்னு நமக்கு இனிமேதான் தெரியும். இதுக்கு முன்ன வந்தவங்க மாரி இல்லாம இவனுங்க கொஞ்சம் வேற மாரி இருப்பாங்க, கையளவு இல்லாம கடலளவு கண்டென்ட் குடுப்பாங்கன்னு  நம்புவோம்.

அறிமுக நாள் தொடர்ச்சி....!

இந்த தடவ பிக்பாஸ் வீடு பெரிய சைஸ் பெயிண்டு கடை மாதிரி கலர் கலரா இருக்கு ! யாரச்சும் சுவத்தோரம் சாஞ்சுக்கிட்டு நின்னா சட்டுனு கண்டுபிடிக்க முடியாது போல....! லிவிங் ரூம்ல எல்லாரையும் உக்கார வச்சுட்டு “ உள்ளார பாதி லாக்டவுனு அதுனால வீட்டுல பாதி ஷட் டவுனு”ன்னு வீம்பு பிடிச்சுக்கிட்டு இருந்தாப்ல பிக்பாஸு.  “கமல் சார் சொன்னதால போனா போதுன்னு கக்கூஸ் ரெண்டையும் திறந்து விடுறேன்”னு சொன்னாப்ல. என்ன ஒரு பெருந்தன்மை....! வனிதா இல்லாத வீட்ல பிக்பாஸன் பண்ணையார்த்தனம் பண்றாப்ல. போகட்டும்.

அப்றம் பெண்கள் அணி பெட் ரூம பிடிச்சிக்க.....ஆண் தடிமாடுகள் ஹால்ல கட்டைய சாத்துனானுங்க. கும்மிருட்டுல கும்முன்னு வெளிய வந்த ஷிவானி சில்லுன்னு பாட்டுப் பாட ஆரம்பிச்சாங்க. கக்கூஸ் போயிட்டு வந்த நம்ம சுரேஷ் சக்கரவர்த்தி காலார நடந்துட்டு இருந்த ஷிவானி பக்கமா வண்டிய திருப்புனாப்ல. “காந்தக் கண்ணழகி, கண்மணி அன்போட காதலன் பாடலைப் பாடு”ன்னு கேட்டதும், பொசுக்குன்னு பாட ஆரம்பிச்சாங்க நம்ம ஷிவானி. கமல் மாதிரி பேசுறேன்னு கழுதை மாதிரி பேசி காமெடி பண்ணிட்டு இருந்தாப்ல சுரேஷ்.

ஆரி பொதுநலத்தொண்ட பொறந்ததுல இருந்தே பண்ணிட்டு இருக்காப்ல போல.....மயிலுக்கு போர்வை போத்துன வள்ளல் காரி மாதிரி தூங்கிட்டு இருந்த யாருக்கோ துண்டப் போத்துனாரு ஆரி !

நாள் 1

முதல் நாள் காலையில வாத்தி கமிங்னு அலராம் அடிக்க வகை தொகையில்லாம வளைச்சு ஆடுனானுங்க. பரவாயில்ல எல்லாருமே நல்லா ஆடுற மாதிரிதான் இருக்கு. எப்டியோ ஷிவானி, கேபி, ரம்யா, அனிதான்னு யாரும் ஏமாத்தல. ஆண்கள்ல ரியோ, ரமேஷு, ஆரி நல்லா ஆடுனாங்க. சுரேஷ் அரிசி அதிகமா போட்ட கிரைண்டர் மாதிரி சுத்திட்டு இருந்தாரு. சோமு என்னமோ செஞ்சாப்ல. விடுமுறைக்கு வந்த விஜய் தேவரகொண்டா ஸ்டைல்ல இருக்குற பாலாவும் முயற்சி பண்ணாரு. சனம் ஆண்களோட மட்டும் ஆடுனது கவனிக்கத்தக்கது.

ரேகா மேடம் டேபிள் தொடச்சாங்க நல்ல விஷயந்தான் அதுக்காக சாப்ட்டுட்டு இருக்குற ரெண்டு பேர எழுப்பி விட்டு துடைக்கனுமா ? ஆரியாச்சும் பரவயில்ல, சோமுலாம் ஃபைட்டர் பையன்....பக்குவமா பல்ல பேத்துருவான்.

நிஷாதான் இந்த சீசனோட ஸ்ட்ரெஸ் பஸ்டரா இருக்கப்போறாங்கன்னு நெனைக்கிறேன். செம்ம கவுண்டர், செம்ம கலாய். ரேகாவ ஓட்டுறதும ஜாலியா இருந்துச்சு.  ஷிவானிய பக்கத்துல வச்சுக்கிட்டு பாலாவ கலாய்ச்சது செம்ம. இதுவே ஷிவானிக்கும், பாலாவுக்கும் நட்பு உருவாக காரணமா அமையலாம். என்னைக்கச்சும் ஏதோ ஒரு மூலையில தன் ஆர்ம்ஸ மடக்கிக் காட்டியும், செஸ்ட விரிச்சு காட்டியும், புருவத்த தூக்கிக் காட்டியும் பாலா ஷிவானி கூட கடலை போடுற காட்சி காணக் கிடைக்கலாம்.

இந்த வீட்ல முதல் போட்டி....எல்லாரும் சதுரமா நிக்கனும். நடுவுல கட்டி தொங்கவிட்டுருக்குற பேக்க பிரிச்சு, விழுகுற பந்துகள ஆளுக்கொன்ணு எடுக்கனும். கடைசியா ரம்யா கைல பந்து இல்ல. “உள்ள வாம்மா ரம்யா”ன்னு பிக்பாஸ் கூப்ட்டு அதுக்கு இந்த வார தலைவர் பதவிய தாராளமா குடுத்து அனுப்பி விட்டாப்ல. வெளிய வந்த ரம்யா டீம் பிரிச்சாங்க.

சனம், ரேகா, சுரேஷ், அனிதா – சமைக்குற டீம்

நிஷா, வேல்முருகன், ஆரி, சோமு – பாத்திரம் கழுவுற டீம்

ஆஜீத், கேபி, சம்யுக்தா, ஷிவாணி – வீட்டப் பெருக்குற டீம்

ரமேஷ், பாலா, ரியோ, ரம்யா – கக்கூஸ் கழுவுற டீம்

தன்னை குனிஞ்சு பாக்க சொல்லி கேமராகிட்ட கலவரம் பண்ணிகிட்டு இருந்தாங்க நிஷா....போதாகுறைக்கு பிக்பாஸுக்கு ஐ லவ் யூ வேற !

அப்றம் எல்லாரும் டக் டக் திருடன்....விளையாட்டு விளையாடுனானுங்க. இதுல நிஷா குப்புற விழுந்து குழிய உண்டாக்குனாங்க. அனிதா ஒரு சமகால ஜெனிலியான்னு தெரிய வந்தது ஒரு முக்கியமான விஷயம்.

ஷிவானி வீட்ல மேலு வளையாம வளர்ந்துட்டாங்க போல....அனேகமா அவங்க ஆக்டிவா இருக்குறதே மாலை 4 மணிதான் போல (அந்த நேரந்தான் இது வரை நமக்கு போட்டோ கிடைச்சிருந்திருக்கு). மத்த நேரமெல்லாம் வெறும் வீட்ட வெள்ளயடிக்கிற மாதிரி முகத்துக்கு மேக்கப் போட்டுட்டு இருக்காங்க. விளையாடக் கூட வரல.

இந்த முறை பிக்பாஸ் முதல் நாளே தன் தெள்ளவாரித்தனத்த ஆரம்பிச்சாப்ல அதாவது நாளைக்கு நடக்கபோற நாமினேஷனுக்கு இன்னைக்கு ரிகர்சலாம். என்னடா இது அக்கப்போரா இருக்கு. வந்தன்னைக்கே வம்பிழுக்குறானேன்னு எல்லாரும் பாத்தானுங்க. பிடிச்ச ஆளுக்கு ஹார்ட்டு ஸ்டாம்பு, பிடிக்காதவங்களுக்கு ஹார்ட் பிரேக் ஸ்டாம்பு அடிக்கனுமாம். இதுல அதிக ஹார்ட் பிரேக் வாங்குன ஆளு ஷிவானி. யாரு கூடவும் பேசல, பழகலன்னு சொன்னானுங்க. “ஏண்டா வந்து 24 மணி நேரந்தான ஆகுது என்னமோ இன்னும் 5 நாளுல எல்லாரும் எறும்பா மாறப் போற மாதிரியே பேசுறீங்களேடா”ன்னு பாத்தாங்க ஷிவானி.

“நேத்து மட்டும் இந்த அங்கிள பாத்ததும் பாட்டுப் பாடி மிங்கிள் ஆனியே அது எப்பிடி?”ன்னு சுரேஷு கேப்புல கசிய.....”ஏன்டா உன்னயப் பாத்ததும் பாட்டுப் பாட நீ என்ன மைக்கா....நீதானடா வந்து பாட சொன்ன? எல்லாம் என் நேரம்....4 மணி ஆச்சுன்னா ஒரு போட்டோவ போட்டு ஊரையே என்னயப்பத்தி பேச வச்சுட்டு இருந்தேன்....இன்னைக்கு உங்ககிட்ட எல்லாம் பேச்சு வாங்குறேன்”ற விரக்தி ஷிவானி கண்ணுல மின்னுச்சு.

கேபியும், ரமேஷும் சனம்ம கேம் ஆடுதுன்னு சொன்னது உண்மையா கூட இருக்கலாம். இன்னும் 3 பேரு பாக்கி....நாளைக்கு அவனுங்க என்ன சொல்றாங்கன்னு பாக்கலாம். மொத்தத்துல முதல் நாள்.....முக்கியமான நாளாவே முடிஞ்சிருக்கு....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)