பிக்பாஸ் – 4 : நாள் - 16 (20.10.20)
“நேற்று போல் இன்று இல்லை....இன்று போல் நாளை இல்லை”ன்றது நம்ம பிக்பாஸனுக்குதான் பக்காவா பொருந்தும். நேத்து மாதிரி நோட்டு தீருற அளவுக்கு கண்டென்ட் இருக்கும்னு பாத்தா, மொத்த எபிசோடுமே ஒத்த ஸ்டாம்ப்புக்கு பின்னாடி எழுதுற அளவுக்குத்தான் இருக்கு.....கொடுமடா கோயிந்தசாமி !
16வது நாள்
“மாரி தர லோக்கல்”
பாட்டு அலாரம். குலுக்குன கொக்கோ கோலா மாதிரி குய்யோ முய்யோன்னு குதிச்சுட்டு இருந்துச்சு
அன்னப்போஸ்டு. சனம் மட்டும் தனியா உள்ள தக் ஹாப்ப போட்டு பாட்டுக்கு பேலன்ஸ் பண்ணிட்டு
இருந்தாங்க. இவனுங்க ஆடவும் வரல....இவனுங்களுக்கு ஆடவும் வரல.....கடைசியில ஒண்ணுமே
செய்யாம செஞ்சுருவேன்னு ஸ்டைலா சொல்லிட்டு கெளம்புனானுங்க. போதுண்டா டேய்....!
உள்ள பப்பரப்பான்னு
படுத்திருந்த சகுனி சுரேஷ்கிட்ட ஆரி வந்து
ஆரி : கமல்
சார்கிட்ட நான் எப்பப் பாத்தாலும் அட்வைஸ் பண்றேன்னு ஏன் சொன்னீங்க ?
சகுனி : நீங்க
பண்றது அட்வைஸ் இல்லையா ?
ஆரி : ஆமா...அட்வைஸ்தான்
சகுனி : அதத்தான
சொன்னேன்...
ஆரி : ஆனா நான்
ஆஜீத்துக்கு மட்டுந்தான் பண்ணேன்....எல்லாருக்கும் எங்க பண்ணேன் ?
சகுனி : ஏன்
மத்தவங்களுக்கு அட்வைஸ் பண்ண பிடிக்கலையா ?
ஆரி : யாரு
சொன்னா அதெல்லாம் இல்ல....எல்லாருக்குந்தான் பண்றேன்...எனக்கு எல்லாரும் ஒண்ணுதான்
சகுனி : அப்ப
அதத்தான சொன்னேன்...
ஆரி : கமல்
சார்கிட்ட ஏன் சொன்னீங்க ?
சகுனி : வெளிய
இருக்குற கமல் சாருக்கு உள்ள நடக்குறது தெரியுமா ?
ஆரி : அது எப்பிடி
தெரியும் ?
சகுனி : அதனாலதான்
சொன்னேன்.....
ஆரி : ஹலோ இனிமே
எதுனாலும் எங்கிட்ட வந்து தனியா சொல்லுங்க...
சகுனி : சொல்ல
முடியாது
ஆரி : ஏன் முடியாது
?
சகுனி : (பெல்
அடிக்க...) ஏன்னா பெல் அடிக்குது
ஆரி : யோவ்
நில்லுயா....//
சகுனி சரியான
எஸ்கேப் பார்ட்டி.....அந்தாளுகிட்ட அடுத்தடுத்து சமாளிக்க சரியான பதில் எதுவும் இல்லேனா
நைசா நழுவி ஓடிடுறாப்ல.
லக்ஸுரி பட்ஜெட்
டாஸ்க்குன்னு ஒரு பாடாவதிய தூக்கிட்டு வந்தானுங்க. மகாபாரதம் சீரியலுக்கு காசு போட்டு அந்த காஸ்ட்யூம வாங்கிட்டோமேன்றதுக்காக
எல்லா சீசன்லயும் இப்பிடி ராஜா, அரக்கன் வேஷம் போடுற டாஸ்க்க கண்டிஷனா வச்சுக்குறானுங்க.
இந்த இம்சைக்கு
பேரு “நாடா ? இல்ல காடா ?” ஏண்டா.....இப்பிடி ?
சொர்க்கபுரி
நாடு – ராஜா வேல்ஸு, ராணி நிஷா, இளவரசிகள் 3 ரம்யா, சம்மு, சனம், இளவரசர்கள் பில்டரு,
சோமு, தளபதி ரியோ
மாயாபுரி –
சுரேஷு, அர்ச்சனா, ஷிவானி, ஆஜீத், ஜித்து பாய், அன்னப்போஸ்டு, ஆரி, கேபி
மொத சங்குக்கு
ராஜ குடும்பத்துல இருந்து ஒருத்தரு வரனுமாம், 2வது சங்குக்கு சிலை மாதிரி நிக்கனுமாம்,
3வது சங்கு அடிக்குற வரை சிலை அசையாம இருந்துட்டா மறுபடி அவங்க நாட்டுக்கு போயிடலாம்,
இல்லேன்னா அரக்கர்கள் ஆளா மாறிக்கனும். சிலைய அசைக்க இம்சை பண்ணிக்கலாமாம். எது இந்த
இம்சைய விடவா ?
அதென்னமோ ராஜ
குடும்பத்த விட அரக்கர்கள் குடும்பம் வேஷத்துக்கு ரொம்ப ஃபிட்டா இருந்தானுங்க.
மொத ஆளு சனம்
சிலை மாதிரி
உக்காந்ததும், இவனுங்க கோவம் வர மாதிரி காமெடி பண்ணி, குரங்கு சேட்டையெல்லாம் பண்ணியும்
சனம் ஸ்கோர் பண்ணிடுச்சு. சனம் வின்னு. எனக்கென்னமோ ஜெயிச்சா எங்க சனம் நம்ம கூட்டத்துக்கு
வந்துடுமோன்ற பயத்துலையே அத ஜெயிக்க விட்டுட்ட மாதிரி இருந்துச்சு. செஞ்சாலும் செஞ்சிருப்பானுங்க....
உள்ள வந்த சனம்....அடுத்த
ஆளுக்கு டிப்ஸுகள சிப்ஸு மாதிரி அள்ளி குடுத்துட்டு இருந்தாங்க. “சகுனி பர்சனலா அட்டாக்
பண்ணுவான் அப்ப “போடா போடா புண்ணாக்கு” பாட்ட பாடி சாந்தமாகிக்கனும், அன்னப்போஸ்டு
அராமிக் பாஷையில அரட்டும் அப்ப “எவண்டி உன்னப் பெத்தான்...கைல கெடச்சா செத்தான்னு’
பாடி பீஸ் பன்ணிக்கனும், ஆரி அரச குடும்பம் எப்பிடி இருக்கனும்னு அட்வைஸ் பண்ணுவான்
அப்ப “அடிடா அவன....உதைடா அவன...வெட்றா அவன’ன்னு பாடி அட்ஜஸ்ட் பண்ணிட்டா என்னய மாதிரி
ஜெயிச்சு வீட்டுக்குள்ள வந்துடலாம்”னு வியூகம் போட்டு குடுத்தாங்க.
ஆனா வெளிய சனத்த
பத்தி இவனுங்க பொரனி அனத்த ஆரம்பிச்சுட்டானுங்க. “அதுக்கு வாய் மட்டுந்தான் இருக்கு....காதே
இல்ல, சம்பந்தம் சம்பந்தம் இல்லாம பேசிட்டு சண்டை ஆரம்பிச்சதும் சனாசனம் போட்டு உக்காந்துக்குது.
என்ன படிச்சிருக்கன்னு கேட்டா ‘படிச்சவங்களான்னு பாத்து பழகாதீங்க....புடிச்சவங்களான்னு
பாத்து புழங்குங்க. படிச்சிருக்கியான்னு கேட்ட நீங்க என்னய நடிச்சிருக்கியான்னு கேட்டிருந்தா
அது சரியா இருந்திருக்கும். ஆனாலும் நீங்க கேட்ட கேள்விக்கு என்னால ஒன்னுதான் சொல்ல
முடியும்.....நான் குடிக்கல’ இப்பிடி ஒரு மனுஷி பேசுனா அவள நாம என்ன நெனைக்குறது......ஏழை
சனம் (poor Sanam)ன்’னு அர்ச்சனா பொலம்புனாங்க.
அடுத்து சோமு
அவனுக்கு தெரிஞ்ச
ஒரே வேலை சும்மா இருக்குறது....அதுலையும் இன்னைக்கு அவுட்டு. விட்டத்த பாத்துக்கிட்டு
விதியேன்னு நிக்குறது கூட சோமுக்கு சுமையா இருக்கு. தோத்துப் போயி அரக்கர் கூட்டத்துல
உறுப்பினர் கார்டு வாங்கி சேந்த்துக்கிட்டான்.
நெக்ஸ்டு பில்டரு....
வெளிய வரும்போதே
டம்மு டும்முன்னு ஒரு நாலு பேர பறக்கவிட்டு வந்தான். கூட்டத்தப் பாத்ததும் ரக்பின்னு
நெனச்சுட்டான் போல....ஷிவானி மூஞ்சியும் இன்னைகு ரக்பி பந்து மாதிரிதான் இருந்துச்சு.
அப்பறம் கயகயன்னு
கத்திட்டு இருந்தப்ப பிக்பாஸ் “டேய் மறுபடியும் உள்ள இருந்து வாடா”ன்னு சொல்லிட்டாப்ல.
இவனுங்க பண்ண கொரங்கு சேட்டைல ஆக்சுவலா அவன் தூங்கிட்டான். தூங்கி விழுகும்போது தலை
அசைஞ்சதால அவன் அவுட்டு. இவனும் அரக்கர் குடும்பத்துல கூடிட்டான்.
அடுத்து வந்தது
ரியோ....ஜெயிப்பு
அடுத்து சம்மு...ஜெயிப்பு.
சம்முவ கடுப்பேத்துறேன்னு சகுனி “உன் பெட்டுல பக்கத்துல ஏன் பாம்ப வச்சிருக்க?”ன்னு
சனத்த சைடு கேப்புல இழுக்க, அன்னப்போஸ்டு “என்னாங்க பொம்பளப் புள்ளைய போயி பாம்பு,
பூரான்னுகிட்டு?”னு பொங்க சகுனி அந்த இடத்துல சமாளிச்சு ஓடிட்டாப்ல.
இந்தக் கருமாந்திரம்
இன்னைக்கு முடிஞ்சது....நாளைக்கு நடத்திக்கலாம்னு சொல்லிட்டானுங்க.
இங்குட்டு ஆரிகிட்ட
அன்னப்போஸ்டு
அன்னப்போஸ்டு
: ஆரி....பெட்டுல பாம்புன்னா நீ என்ன நெனைப்ப
?
ஆரி : பாம்புன்றது
தன்னம்ப்பிக்கையின் அடையாளம்....அது பெட்டுல இருக்குன்னா....
அன்னப்போஸ்டு
: அய்யய்ய....சம்மு அது பெட்டுல பாம்பு கூட
படுத்திருக்குன்னு சகுனி சொல்றாங்க
ஆரி : சம்மு
பாம்பு கூடையா ? ஒரு பாம்ப பக்கத்துல வச்சுக்கிற அளவு தைரியமும், வீரியமும் இருக்குற
சம்மு வாழ்க்கையில சாதிக்கனும்னு நெனைக்கிற ஒரு பொண்ணாதான் இருக்கனும்
அன்னப்போஸ்டு
: நாசமாப் போச்சு..... யோவ், சகுனி சனத்த பாம்புன்றான்
ஆரி : எது சனம்
பாம்பா ? பல்லு புடுங்குனதா இல்ல புடுங்காததா ?
அன்னப்போஸ்டு
: அது எனக்கு தெரியாது ஆனா இவ்வளவு நேரம் நான்
புடுங்குனது தேவியில்லாத ஆணி அது மட்டும் நல்லா தெரியுது //
இனிமே அத்தியாவசிய
பொருட்கள் எல்லாம் அளவாத்தான் வருமாம். தீந்துபோச்சுன்னா திருப்பி அனுப்பிவிட மாட்டாங்களாம்.
“பட்டினியா திரிங்க”ன்னுட்டாப்ல பிக்கி.
இந்த திருவாத்தானுங்களுக்கு
எது அத்தியாவசியம்ன்ற அவசியமான சந்தேகம் வந்துருச்சு. அதுக்கு விடை தெரியாமேயே பெட்டுல
விழ போயிட்டானுங்க.
கிச்சன்ல நின்னு
அர்ச்சனா ஒரே அழுகாச்சி. என்னடான்னு பதறிப்போயி என்னன்னு கேட்டா “பசின்னு வரவங்களுக்கு
இல்லேன்னு சொல்லி பழக்கமே இல்ல எனக்கு.....அந்த கஷ்டத்த நெனச்சுதான் அழுகுறேன்”னு அருவியா
கொட்டுனாங்க. ஊரே கூடி அர்ச்சனாவ ஆசுவாசப்படுத்த.....”அடுத்தது ரசமா ? மோரா”ன்னு மொரட்டுத்தனமா
டாஸ் போட்டு பாத்துட்டுருந்தான் ஆஜீத்.
ஆனா டேய்.....வாரக்
கடைசியில நல்லா பண்ண ஆளு யாரு, நல்லா பண்ணாத ஆளு யாருன்னு கண்டுபிடிக்கத்தான் இந்த
மாதிரியெல்லாம் டாஸ்க்குன்னா இத கஷ்டப்பட்டு கண்டெல்லாம் பிடிக்க வேணாம்....யோசிக்காம
நல்லா விளையாண்ட கணக்குல சகுனியையும், அன்னபோஸ்டையும்.....நல்லா விளையாடாத லிஸ்டுல
ஷிவானி, ஆஜீத், ஜித்துவ போட்டுக்கலாம். இவனுங்க உள்ள இருக்குற வரை இதான் லிஸ்டு. இதுக்காக
இப்பிடி இத்துப்போன டாஸ்க்கெல்லாம் குடுத்து எங்களுக்கு இம்சைய கூட்டாதீங்க.....ஆனா
ஒண்ணு....ம்ம்ஹூம் ஒண்ணில்ல ரெண்டு சம்முவும், ரம்யாவும் இன்னைக்கு அவ்வளவு அழகு.....!
Comments
Post a Comment