பிக்பாஸ் – 4 : நாள் - 20 (24.10.20)
நேரடியாவே ஆண்டவர்
என்ட்ரி....! “யாமறிந்த சீசன்களிலிலேயே இவ்வளவு இம்சையான சீசன் எங்கும் காணோம்”னு சொன்னாரு.
எத நெனச்சு சொன்னாருன்னு தெரியல பாவம். “சரி வியாழக்கிழமை வரைக்கும் வெவகாரம் பன்ணவனுங்க,
வெள்ளிக்கிழமை என்ன வெளக்கு வச்சானுங்கன்னு பாத்துருவோம்”னு சொல்லி வெள்ளிக்கிழமை நிகழ்வுகளை
காட்டுனாரு
20 வது நாள்
“சத்தியமா நீ
எனக்கு தேவையே இல்ல” பாட்டு அலாரம். யாரு யாரப் பாத்து பாடுறதுனு தெரியாம தலைய குனிஞ்சு
ஆடிட்டு இருந்தானுங்க. சாத்தூர் ஒத்த செருப்பாட்டம் ஓரமா ஆடிட்டு இருந்துச்சு. சனம்
தாறுமாறா தக் ஹாப்ப போட்டாங்க....ஆக்சுவலா அவங்க தக் ஹாப் கொஞ்சம் இம்ப்ரூவ் ஆகியிருக்கு.
கை இன்னும் நல்லா விரிச்சு, முறிச்சு ஆடுது. ஆனா ஒண்ணு தெனமும் காலையில இப்பிடி கள்ளு
குடிச்ச கருங்கொரங்காட்டம் எதுக்கு ஆடுறோம்னு மட்டும் இந்த இலுமினாட்டிகளுக்கு இன்னும்
புரியவே இல்ல.
பெட் ரூம்ல
ரம்யா, சம்மு, பில்டரு, கேபி எல்லாரும் படுத்து பேசிட்டு இருக்க....உள்ள வந்த சனம்
“கொரொனா அண்டாதாம் மாஸ்க்குல....எனக்கு விருப்பமே இல்ல இந்த தலைவர் டாஸ்க்குலன்”னு
சொல்லிட்டு வெளிய போயிடுச்சு.
அப்பறம் ஆரிட்ட
இருந்து ஆஜீத்தையும், பிக்பாஸையும் ரிலீஸ் பண்ணானுங்க. வெளிய வந்த ஆரிய வரவேற்குறேன்னு
ரியோ “அட்வைஸ் பண்ண ஆளே இல்லாம யாருக்கும் அன்னந்தன்ணி இறங்கல. வந்து உங்க வேலைய ஆரம்பிங்க”ன்னு
சொல்லிட்டான். இந்த ஆஜீத் பய கால் நொண்டுற அளவுக்கு என்ன வேலை பாத்தான்னு தெரியல.....அவனுக்கு
தெரிஞ்ச வேலை பாடுறதும், கேபிக்கு இடுப்பு பிடிக்கிறதுந்தான்...அதுக்கெல்லாமா கால்ல
அடிபடும்....?
வெளிய ஆரி,
ஜித்து, சம்மு, சனம் எல்லாரும் இருக்க ரம்யா “எனக்கு சனத்தோட காமெடி பிடிச்சிருக்கு”ன்னு
அது கோவமா சகுனிகிட்ட சலம்புன பேச்சையெல்லாம் சொல்லுச்சு. என்ன ஒரு வில்லத்தனம் ரம்யாக்கு.
ஆரி இந்த கேப்புல “சகுனிகிட்ட பாயிண்ட் இல்லேன்னா பாசிங்ல போயிடுறான்”னு தன் கண்டுபிடிப்ப
சொல்லிட்டு இருந்தாப்ல.
உள்ள கேபி,
பில்டரு, ஆஜீத் இருக்க, கேபி ஆஜீத் கிட்ட “இங்க ஒரு ஆளுக்கு ஒரு ஆள பிடிச்சிருக்கு”ன்னு
சொல்ல ஆஜீத்துக்கு ஒரே ஆச்சர்யம் “இந்த வீட்லயா இப்பிடி ஒரு சம்பவம் நடக்குது?”ன்ற
மாதிரி “பே”ன்னு முழிக்க. கேபி “நம்ம பில்டருதான் ஷிவானிக்கு ஷிஃபான் சேலை வாங்கிக்குடுக்க
ப்ளான் பண்றான்”னு சொல்ல, பில்டரோ “இந்த வீட்ல என் வயசுக்கு ஒத்த பொண்ணுங்க நீயும்
,சாத்தூருந்தான்.....ஆனா நீயோ எனக்கு தங்கச்சி சோ எனக்கு ஷிவனிகிட்ட கொஞ்சம் பத்திக்கிச்சு”ன்னு
சொல்ல, கேபியோ “தங்கச்சின்னு சொன்னா தாவித் தாவி அடிப்பேன்....பிரண்டுன்னு சொல்லு பேசிக்கலாம்”னு
சொல்லுச்சு. யப்பா டேய் உங்க 3 பேர நம்பித்தான் இருக்கோம் சீக்கிரம் “சில்லுன்னு ஒரு
காதல்” மோடுக்கு வாங்கடா.......
சனம் குளிச்சு
முடிச்சு உள்ள வந்து மறுபடியும் “நான் கேப்டன் டாஸ்க்குல கலந்துக்க மாட்டேன்”னு சொன்னதுக்கு....ஆச்சர்யப்படுறதுக்கு
பதிலா எல்லாரும் “ஆகா காலையிலயே ஒரு நல்ல காமெடி கண்டென்ட் கிடைக்கும் போலயே”ன்னு சுத்தி
உக்காந்துகிட்டு சனத்த “எங்க கொஞ்சம் அனத்து”ன்னு சொல்ல.....”அப்பிடியில்லடா பாலா,
வரிசைப்படி நிக்க வைக்குறதுல 15வது இடம் குடுப்பானுங்களாம்.....ஆனா பெஸ்ட் பெர்பார்மர்
வாங்கி கேப்டன் டாஸ்க்குல வேற இருப்பேனாம்....விளையாட்டே தெரியாம 8 மணி வெள்ளாச்சாமி
மாதிரி பாட்டு மட்டுமே பாடிட்டு இருக்குற வேல்ஸெல்லாம் 13 வது இடமாம்....விளையாட தெரிஞ்ச
சகுனி 16வது இடமாம் என்ன பித்தலாட்டம் இது?”ன்னு அது ஒரு கணக்குல அகநானூறு பாடிட்டு
இருந்துச்சு. இவனுங்க அத நல்லா பேச விட்டு சிரிச்சிட்டு இருந்தானுங்க.
டைனிங் ஹால்ல
எல்லாரும் ஒண்ணா உக்காந்து உணவருந்திட்டு இருந்தப்போ பில்டரு பீரங்கியா எந்திரிச்சு
நின்னு “இனிமே இந்த வீட்ல எங்கிட்ட பேசும்போது அவன் இவன் என்ற ஏக வசனம் வேணாம். தெரிஞ்சவங்க
பரவாயில்ல, ஆனா தெரியாதவங்க வா பில்டரு...போ பில்டருன்னு சொன்னா போதும். வாடா, போடான்னு
சொன்னா வாய் தெறிச்சிரும்”னு சொன்னதும் சனம் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி “ஆமாண்டா பாலா”ன்னு
சொன்னத நெனச்சு வாய தடவி பாத்துக்கிச்சு. ஆனா பில்டரு பிங் பண்ணது ஆங்கர் அர்ச்சனாவத்தான்.
ஆண்டவர் வந்து
அகம் – அகம் போனார்.
“சொவத்துக்கு
பெயிண்ட் அடிச்சாப்ல நல்லா கலர்ஃபுல்லா இருக்கீங்க ஆனா புத்தியெல்லாம் கருப்பாத்தானடா
இருக்கு”ன்னு உக்கார சொல்லிட்டு “என்னங்கடா எப்பிடி போகுது?”ன்னு கேக்க....”காரம்லாம்
கம்மியா போடுறதால நல்லாத்தாங்க போகுது”ன்னு சொல்ல “போக்கத்தவனுங்களா உள்ள நிலவரம் எப்பிடி
போகுது?ன்னு கேட்டேன்....ரியோலாம் ஒரு நாள் கூத்துக்கு மீசை எடுத்தது நல்ல விஷயம்.....நல்ல
வேஷம் குடுத்தாத்தான் எடுப்பேன்னு சொல்றது எகத்தாள விஷயம் ஆனா பதிலுக்கு நல்லா நடிக்கனும்னு
டைரக்டர் சொன்னா என்ன பண்ணுவ?ன்னு உள்குத்து வச்சு ஜித்துவ வாருனாரு. “சரி ஒவ்வொருத்தானா
எந்திரிச்சு ஒளறுங்க”ன்னு சொன்னதும்
ஆளாளுக்கு எந்திரிச்சு
அவங்க அவங்க நிலைமைய சொன்னானுங்க. இதுல அனிதா அரம்பிச்சதும் ஆண்டவர் அல்ஜீமர் நிலைக்குப்
போயி சட்டுன்னு ஸ்டாப் பண்ணிட்டு அடுத்த ஆளுக்கு போயிட்டார். ஆரி ப்ரோ ஆண்டவர்கிட்ட
“அசிங்கமா கூட திட்ட சொல்லுங்க பரவாயில்ல. ஆனா இவனுங்க அட்வைஸ் ஆரின்னு பிராண்ட் பன்றானுங்க”ன்னு
சொன்னதுக்கு “நீயும் வேற என்னமாச்சும் பண்ணா அத வச்சு ஓட்டலாம்...நீதான் பண்ண மாட்டேங்குறியே”ன்னு
சொன்னார். பில்டரோ “இப்பத்தான் இந்த விளையாட்டே புரியுதுன்”னு பொலம்புனான்.
அப்பறம் ஆண்டவர்
அடிதடி மேட்டருக்கு வந்தார். “பெண்களுக்கெதிரான வன்முறை வேண்டாம்”னு சொல்றதுக்காகவே
இந்த ஒண்ணுமில்லாத விஷயத்துக்கு வியாக்யானம் பேசிட்டு இருந்தாரு. அப்பறம் “சனம் போயி
சாரி கேளுங்க”ன்னு சொன்னதும் சனம் போயி....
சனம் : சகுனி
சாரிப்பா .....
சகுனி : இல்லம்மா
நாந்தான் சாரி.....சாரியோ சாரி....சாரிக்கெல்லாம் சாரி....
சனம் : இல்ல
சார் வந்தன்னைக்கு வாத்து வாயான்னு சொன்னதுக்கு சாரி...
சகுனி : நானும்
உன்னைய பைத்தான் பாம்புன்னு சொன்னதுக்கு சாரி...
சனம் : கக்கூஸ்
வாசல்ல நின்னு கடுமையா பேசுனதுக்கு சாரி....
சகுனி : வந்தா
வகுந்துருவேன்னு சொன்னதுக்கு சாரி....
சனம் : இல்ல
சார் ....நாந்தான் சாரி
சகுனி : இல்லம்மா
நாந்தான் சாரி....சாதாரண சாரி இல்ல கிருஷ்ணமாச்சாரி, குருசாமி ஆசாரி, கண்ணம்மா கோயில்
பூசாரி....எல்லா சாரியும் நாந்தான் //
அப்பறம் பாலாவுக்கு
வந்தாரு.....”ஏண்டா அடிவாங்குன சனம் திட்டுனத விட அசிங்க அசிங்கமா அந்த ஆள திட்டுனியே
நியாயமாடா?”ன்னு கேக்க. “ஒரு ஃப்ளோவுல திட்டிட்டேன். பனங்காத் தலையன் அதுக்காக எங்கிட்ட
பேச்சு வார்த்தையவே நிறுத்திட்டான்”னு வருத்தப் பட்டான்.
பின்ன அர்ச்சனாகிட்ட
“அசந்த நேரத்துல உள்ள ஷோவ ஆங்கர் பண்ண ஆரம்பிச்சுட்டியே?....சாரி கேக்கனும்னு நீ சகுனிட்ட
சொன்னதும் சுதி மாறாம பூரா பேரும் ‘ஆமா ஆமா சாரி கேக்கனும், சாரி கேட்டே ஆகனும்’னு
பொங்கிட்டனுங்க...இதுல விஷயம் நடந்தப்ப கக்கூஸ்ல இருந்த ஆளுங்க கூட ‘ஆமா ஆமா கால்ல
விழுந்து சாரி கேக்கனும்’னு சொல்ற அளவுக்கு உன் ஆங்கரிங் இருந்துச்சே”ன்னு சொல்லி,
அவரு விருமாண்டி ஷூட்டிங் கதைய சொல்லிக் காட்டி” உன் விளையாட்ட நீ விளையாடு போதும்”னு
ன்னு சொன்னது ஆண்டவர் டச்.
சனம் அப்பறம்
ஆண்டவர்கிட்ட “ப்ளான் பண்ணியெல்லாம் சகுனியத் திட்டுற அளவுக்கு அவர் இல்ல.....அதெல்லாம்
பாக்கும் போதெல்லாம் திட்டுற மாதிரிதான் நடந்துக்குறாரு”ன்னு சொன்னங்க.
இன்னும் இந்த
வீட்ல இண்டு இடுக்குல ஒளிஞ்சுக்கிட்டு விளையாடாம டிமிக்கி குடுக்குறது 4 பேரு அது நம்ம
ஜித்து – சண்டைன்னாலே
சண்டே மாதிரி கண்ணமூடித் தூங்குறது நல்ல பழக்கமா சொல்லு ? முன்னடி வந்து நில்லு
சம்மு – அப்டியே
அங்கிட்டும் இங்கிட்டும் போக....பில்டருக்கு எண்ணை தேச்சு விட, சோமுவ கட்டிப்பிடிக்க,
ஷிவானி கூட சேர்ந்து ரயில் ஓட்டன்னு இப்பிடியே இருந்தா இனிக்குமா ? கொஞ்சம் விளையாட்டையும்
கவனிம்மா
ஆஜீத் : சொன்னாலும் கோவிக்குற. மந்தமாவே எப்பப்பாத்தாலும்
கேபியோட லாபில சுத்திட்டே இருந்தா எப்பிடி ? எங்க இருக்கன்னு உன்னய கண்டுபிடிக்குறது
கேமராவுக்கே கஷ்டமா இருக்கு. பாத்து செய்ப்பா
சோமு : குங்ஃபூ,
கராத்தே போடும்போது கூட ஆ.....ஊ ந்னு சவுண்டு வரும். எல்லாத்தையும் மிக்ஸ் பண்ணி அடிக்குற
ஆளு நீ நடந்தா கூட சத்தம் வர மாட்டேங்குது. அன்னப்போஸ்டு சகவாசத்த விடு....விளையாட்ட
கொஞ்சம் கைல எடு...
அப்டின்னு அட்வைஸ்
பண்ணிட்டு. எப்பவும் போல ஒரு போர்ட தூக்கிட்டு வந்து வைக்க சொன்னார்.
எவிக்ஷன்ல இருக்குற
ஆளுகள்ல யாரு இருக்கலாம் யாரு போகலாம்னு மார்க் பண்ணுங்கன்னு சொன்னார்.
பில்டரும்,
ஆஜீத்தும் அதிக கிராஸ் மார்க் வாங்குனானுங்க....
இதுல அர்ச்சனா
பில்டரப் பத்தி சொன்னப்ப “அவன இப்பவும் குழந்தையாத்தான் பாக்குறேன். அவன் அறிவு அவ்வளவுதான்
இருக்கு”ன்னு சொல்ல, மறுத்துப் பேசுன பில்டரு “மரியாதை வேணுன்றது என் எண்ணமில்ல ஆனா
குழந்தைன்னு சொல்லி என் முக்கியத்துவத்த குறைக்கப் பாக்குறானுங்க”ன்னு சொன்னான். ஷார்ப்.
“வெளிய போகணும்னு
நீங்க நெனச்ச பில்டர மக்கள் உள்ள இருக்கட்டும்னு சொல்லிட்டாங்க”ன்னு சொல்லி கிண்டலா
சிரிச்சிட்டு “நாளைக்கு எவிக்ஷன் பாப்போம்”னு சொல்லிட்டுப் போயிட்டார். எல்லாரும் வந்து
பில்டர கட்டிப்பிடிச்சுப் பாராட்ட.....சகுனி மிஸ்ஸிங் !
ஆஜீத்துக்கு
போர்டுல கிராஸ் மார்க் போட்ட சனம் கிட்ட.....
ஆஜீத் : இல்ல
எப்பப் பாத்தாலும் என்னய இப்பிடி சொல்லிட்டே இருந்தா என்ன பண்றது ?
சனம் : இல்லே
ஆஜீத் நான் சொல்லே வந்தது...நம்ம இங்கே இருக்கோம்னா
ஆஜீத் : அப்ப
ஒவ்வொரு தடவையும் நான் எடுத்து வைக்குற ஸ்டெப்
சனம் : ஆஜித்
நான் சொல்றது அதெ இல்லே....உங்களோட முயற்சி நம்ம கேம் இதெ....விளையாட வந்துட்டு
ஆஜீத் : அத
எப்பிடி சொல்றது....நான் 3 வாரமா இத பண்றது சரியாதான இருக்கு
சனம் : நேரா
போயி ரைட்டுல திரும்புனா பெட் ரூமு ஆனா கேமுன்னு வந்துட்டா நீங்க செய்றதுதான் தெரியனும்.....//
இத டீகோட் பண்ணி
சொல்றவங்களுக்கு தீபாவளி பரிசு காத்திருக்கிறது.....
Comments
Post a Comment