பிக்பாஸ் – 4 : நாள் 13 & 14 (17 & 18.10.20)

ரொம்ப நாள் கழிச்சு அட்மின் பதிவு. ஒரே நேரத்துல மொபைல்லயும், லாப்டாப்புலையும் பாத்து எழுதுனதால....கொஞ்சம் பின்ன முன்ன இருக்கும்.....! அட்ஜஸ்ட் பன்ணிக்கோங்க....!

 14 வது நாள்

ஆண்டவரோட அடுத்த படம் “எவனென்று நினைத்தாய்?” ஷூட்டிங்கோ அல்லது ஃபோட்டோ ஷூட்டோ ஆரம்பிச்சாச்சு போல....டான் காஸ்ட்யூம்லதான் காட்சியாளிக்கிறார். ஆனா அந்த ரெண்டு வெரலுக்கு மட்டும் உறைன்றது கருமம் கன்றாவியா இருக்கு....எதுக்கும் காஸ்ட்யூமர் குடுத்ததும் மாட்டிட்டு ஒரு தடவ வெரல நீட்டிப் பாத்திருக்கலாம் ஆண்டவரே.....

“சோசியல் டிஸ்டன்சிங்ன்றது சோலோவா பண்ற விஷயமில்ல....டாஸ்மாக்லயெல்லாம் கட்டத்துல செருப்ப விட்டுட்டு கண்டபடி கட்டிப்பிடிச்சுட்டு சுத்துறானுங்க”ன்னு வருத்தப்பட்டார்.

சரின்னு அகம் – அகம்னு உள்ள போனாரு.....

13 வது நாள்

மாஸ்க்க கழட்டிட்டே “இந்த மாதிரி இப்பத்தான் உள்ள முகமூடிகள் கழற ஆரம்பிச்சு இருக்கு....கழண்டப்பரம் மொகறைகள் எப்பிடி இருக்குன்னு பாப்போம்”னு உள்ள வந்தார். அப்பறம் “குரூப்புக்குள்ள இருந்துக்கிட்டே குரூப்பிஸம் உள்ள இல்லேன்றானுங்க இமசைங்க. சரி வாங்க உள்ள போவோம்”னு உள்ள போனார்.....

14வது நாள்....

உள்ள எல்லாரும் மொத பெஞ்சு பசங்க மாதிரி மங்களகரமா உக்காந்திருந்தானுங்க.....!

ஸ்டோர் ரூம்ல இருந்து சில ஐட்டங்கள எடுத்துட்டு வர சொன்னாரு. அதுல அகமே முகம் (அன்பே சிவம் பாதிப்பு போல) பேட்ஜ், அப்றம் மாஸ்க்....! “உண்மையா இருகுக்றவனுக்கு அகமே முகம், நடிக்கிறவனுக்கு மாஸ்க்கப் போடு”ன்னாரு.

ஆரிக்கும், ரியோவுக்கும் அதிகமான முகமூடிகள். அப்பவே ஆரி அரை நாளுக்கான அறிக்கை வாசிப்புக்கு ரெடியாகித்தான் இருந்தாப்ல. தனக்கு மாஸ்க் அளிக்கப்பட்டதுல அறியாமை இருக்குன்னு ஆரம்பிச்சு....ஒரு கட்டத்துல ஆண்டவரப் பாத்து “நீங்க எவிக்ஷன்ல இருந்து காப்பாத்தப் பட்டீங்க”ன்னு ஹோஸ்டா மாறி சொல்லிடுவாப்லயோன்னு ஆண்டவருக்கே அல்லு இல்லை. தேங்க் காட்....அப்டி எதுவும் இல்ல.....!

ரியோவும் தனக்கு முகமூடி குடுத்தது நியாயமில்லன்னு நின்னு பேசுனாப்ல.

13 வது நாள்

குலேபா பாட்டு அலாரம்....பரபரப்பில்லாம பாயிண்டுக்கேன்னு 10 ஸ்டெப்ப போட்டானுங்க. மத்தி மீன் வந்துருக்குன்னு ரேகா மேமுக்கு கொண்டாட்டம்....அதோட டிஸ்ட்ரிபியுஷன பத்தி பேசிட்டு இருந்தப்ப பாலாஜி சொன்னதுல சனத்துக்கு மனத்தாங்கல்....

இதப் பத்தி சுரேஷ் கிட்ட வந்து புகார் சொல்லி புலம்ப அப்ப பில்டரு உள்ள வந்தாப்ல....

சனம் : எங்கிட்ட ஏன் அப்டி பேசுறீங்க பில்டரு ?

பில்டர் : வயசுல என்ன விட நீ எல்டரு ஆனா நீ பேச ஆரம்பிச்சா நான் மர்டரு

சனம் : பில்டரு நீ எவ்வளவுதான் என்னய எடுத்தெறிஞ்சு பேசுனாலும் நீ என்னய திட்டும்போது உன்னோட நியாயம் பிடிச்சிருக்கு, நீ என்னய ஹெவியா கிண்டல் பண்றப்ப உன்னோட நகைச்சுவை உணர்வு பிடிச்சிருக்கு, கருணையே இல்லாம என்னய மக்கள்கிட்ட கம்ப்ளயிண்ட் பண்றப்போ உன் நேர்மை பிடிச்சிருக்கு,  நீ எக்சர்ஸைஸ் பண்றப்ப உன்னோட கையில்லாத கட் பணியன் பிடிச்சிருக்கு.....மொத்தத்துல உன்னய எனக்கு பிடிச்சிருக்கு....எஸ் லவ் திச் இடியட்...ஐ லவ் திச் லவ்வபிள் இடியட்....

பில்டர் :  நாமினேஷன் லிஸ்ட்டுல என் பேர சேக்க முடியுமான்னு முயற்சி பண்ணுங்க கேப்டன்.....//

அப்பறம் ஆளாளுக்கு ஒரு மிருகம் படம் போட்ட உண்டியல எடுத்துக்கனும்...அதுல யாரு அதிகமா இவனுங்க குடுக்குற காயின சேத்துவை க்கிறாங்களோ அவங்களுக்கு சர்ப்ரைஸ் இருக்காம்....ஆளுக்கொண்ணா எடுத்துக்கிட்டு அதுக்கான காரணத்த சொன்னானுங்க.

14வது நாள்....

அப்பறம் ஆண்டவர் போன வாரம் நடந்த சில நிகழ்வுகளப் பத்தி பேசிட்டு. கேபி, சனம் சேஃப்னு சொன்னதும்....அன்சேஃப் ஆனது நம்ம பில்டருதான். எதிர்பாத்தது போல ரேகா மேம் அவுட்டு......

செடிய ரியோவுக்கு குடுத்தாங்க. “உண்டியல உடச்சு காச யருக்காச்சும் குடுக்கலாம்”னு சொன்னதும் அந்த காயின ஷிவானிக்கு குடுத்தாங்க. அவங்க போனதும் சனம் அவங்க உடச்ச உண்டியல பொறுக்கி அத ஒரு கவருக்குள்ள போட்டு, அந்த கவர ஒரு ட்ராக்குள்ள போட்டு, அந்த ட்ராவ எடுத்து......இப்டியே எதோ பண்ணிட்டு இருந்தாங்க....

ரேகா மேமுக்காக ரொம்ப அழுதது என்னவோ நம்ம பில்டரும், ஷிவானியுந்தான்......! பில்டரெல்லாம் “சரக்கில்லாத சனமெல்லாம் உள்ள சைசா சுத்திட்டு இருக்கு ஆனா அழகு தெய்வத்த, அபிநய சரஸ்வதிய, அன்னபூரணிய இப்பிடி நாமினேட் பண்ணி வெளிய அனுப்பிட்டீங்களேடா”ன்னு அத மொத நாமினேட் பண்ண ஆரிகிட்டயே பொலம்பிட்டு இருந்தான்.

13 வது நாள்.....

“உள்ள எல்லாரும் தமிழ் பேசுறீங்க ஆனா நான் வெளிய தமிழ் பேசுனா தமிழர்களுக்கே புரிய மாட்டேங்குது”ன்னு சொல்லிட்டு. அர்ச்சனா ஆளாளுக்கு குடுத்த பட்டத்த பத்தி பேச ஆரம்பிச்சு “அவங்க குடுத்த போர்டுக்கு நான் அர்த்தம் சொல்றேன் ஏன்னா இன்னைக்கு எனக்கே அதான் கண்டெண்டு”ன்னு சொல்லி சொன்னதயே சுத்தி சுத்தி சொல்லிட்டு இருந்தாப்ல. ஒரு ஹைதர் கால பழைய விளையாட்டு விளையாண்டு ராம்யாவும், ஷிவானியும் சேவுன்னாரு. ஆஜீத்தும் சேவ்.

அப்றம் சனமும், அர்ச்சனாவும் அவங்களுக்குள்ள அவங்களப் பத்தி பேசிட்டு கட்டிப்பிடிச்சு முத்தம் குடுத்துக்கிட்டாங்க.

14 வது நாள்....

ரேகா மேம் வெளிய வந்து ஆண்டவர்கிட்ட பேசி முடிச்சு வீட்டுக்கு போயிட்டாங்க. ஆண்டவர் ஆசானோட வெண்முரச அறிமுகப்படுத்தி “ஆனாலும் பாத்துக்கோங்க பக்கம் 25 ஆயிரம்”னு பயமுறுத்திட்டு போனாரு.....


 

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)