பிக்பாஸ் – 4 : நாள் - 23 (27.10.20)
23வது நாள்
“ஆடத் தெரியாத
இந்த கோண புஸ்கானுங்களுக்கு எந்தப் பாட்டப் போட்டாத்தான் என்ன?”ன்ற கணக்குல வாசல்ல
நைட் ஷிஃப்ட் செக்யூரிட்டியோட செல்ல வாங்கி
அதுல இருந்து பொன்மகள் வந்தாள் பாட்டப் போட்டானுங்க. எதிர்பார்த்த மாதிரியே எவனும்
ஆடல. சிவாஜி பாட்டுக்கே இவனுங்களுக்கு ஆட வரல.....படு திராபையா திரியுறானுங்க.
“சமைக்குற டீம்ல
கொஞ்சம் குளறுபடியாகிப் போச்சு”ன்னு ஆரி ரியோகிட்ட சொல்ல, “ஏன் என்னாச்சு?”ன்னு கேட்ட
ரியோகிட்ட “அன்னப்போஸ்டு நைட்டு நடந்த அட்டிராசிட்டியால அப்பாத பிடிச்சு அசமந்தமா உக்காந்திருக்கு”னு
சொல்ல.....”கொஞ்சம் பொறு சரி பன்ணுவோம்”னு சொன்னாப்ல ரியோ.
இன்னைக்கு நடந்த
முத்தான 3 விஷயங்கள்
அன்னப்போஸ்டின்
அதிரடி அழுகை
சைனா செட்டு
சனத்தின் சந்திராஷ்டமம்
பாலாவின் லோலாய்த்தனம்
அன்னப்போஸ்டின்
அதிரடி அழுகை :
சுமங்கலி மேட்டர்ல
சுண்டெலி சிக்குன மாதிரி சிக்கிக்கிச்சு நம்ம அன்னப்போஸ்டு. இடுக்குல சிக்குன சுண்டெலி
பக்கத்துல அத அடிக்கப் போறவனையும் சரி, அத காப்பாத்தப் போறவனையும் சரி அது கடிக்கத்தான்
பாக்கும். அதே மாதிரி அன்னப்போஸ்டுக்கு ஆறுதல் சொல்லப் போனாலும் சரி.....ஆதரவு குடுக்கப்
போனாலும் சரி....அது அவனுங்களையே கூண்டுல ஏத்திடுது.
ஆரி : மனசுன்றது
ஆணுக்கும் இருக்கு பெண்ணுக்கும் இருக்கு.....கருத்துன்றது கங்காருக்குக் கூட இருக்கு....ஆனா
அந்தக் கருத்த யாரும் வருத்தப்படாத மாதிரி சொல்லனும்னு சொவ்யன்ஸ்கி சொன்னதா நம்ம நாவலடியார்
நாட்டு மாடுகளின் காட்டு வாழ்க்கைன்ற புக்குல.....
அன்னப்போஸ்டு
: நான் சொன்னது தப்புன்னு சொல்ல வறீங்களா ?
ஆரி : தப்புன்னு
நான் சொல்லல....ஆனா தப்புன்னு சகுனி தப்பா நெனச்சுக்கிட்டு தப்பு தப்பா எல்லார்கிட்டையும்.......
அன்னப்போஸ்டு
: அப்ப நான் சொன்னது தப்பில்ல ?
ஆரி : அத சொன்னா
தப்பாகிடும்......தப்பாகிடும்னு நான் சொல்றது தப்பாக் கூட போகலாம்
அன்னப்போஸ்டு
: இப்ப என்ன காலையில டிபன் செய்ய நான் வரணுமா ?
ஆரி : ஆமா அதேதான்......வரியா
? //
கக்கூஸ்ல இருந்து
ஒரு கேவலமான கேவல் சத்தம்.......வேற யாரு நம்ம அன்னப்போஸ்டுதான். பாவம் பொண்ணு யாருக்கும்
கேட்டுறக் கூடாதுன்னு சோகத்துல மைக்கக் கூட கழட்டாம ரொம்ப சத்தமா வேற அழுதுட்டு இருந்துச்சு.
வேல்ஸு, ஆரி, ரியோ, சோமு, நிஷா எல்லாரும் போயி கதவத் தட்ட.....நிஷாவ மட்டும் உள்ள இழுத்துக்கிச்சு
அன்னப்போஸ்டு. “ப ப ப ப”ன்னு என்னத்தையோ சொல்லி அழுதுட்டு இருந்துச்சு. வெளிய கதவுல
பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு சைனா செட்டு சனம் ஒட்டு கேட்டுட்டு இருந்துச்சு.
வெளிய வந்த
அன்னப்போஸ்ட ஆறுதல் படுத்துறேன்னு வந்த சனத்த “பக்கத்துலயெல்லாம் முகத்த கொண்டுவராத”ன்னு
போயிடுச்சு அன்னப்போஸ்டு.
சோமுகிட்ட “நான்
வந்திருக்கக்கூடாது. இப்ப என் புருஷன பத்திதான் கவலைப்படுறேன்”னு அது சொன்னதும் உலகத்துல
பிக்பாஸ் பாத்துட்டு இருந்த எல்லா பேரும் கோரஸா “நாங்களும் அவன நெனச்சுதான் கவலைப்படுறோம்”னு
சொன்னது செவ்வாய் கிரகத்துல எதிரொலிச்சதா நாசா தகவல் வெளிட்டிருக்கு.
சோமு, பில்டரு,
ரியோ, ஆரின்னு ஏறத்தாழ எல்லாரும் அங்க இருக்க, அன்னப்போஸ்டு இவனுங்க எத சொன்னாலும்
எதிர்த்து பேசிட்டு இருந்துச்சு.
பில்டரு வந்தான்
“இந்தா பேசுனது பேசிட்ட. தப்போ தகரமோ அதப் பத்தி கவலைப்படாம போயிட்டே இரு....! நீ பேசுனது
தப்பு கிடையாது, சகுனிய சொன்னது தப்பு கிடையாது, சுமங்கலியா இருக்குறது தப்பு கிடையாது,
சும்மா இருக்குறது தப்பு கிடையாது, சோமுவ சைக்கோ டார்ச்சர் பண்றது தப்பு கிடையாது,
நீ எது பண்ணாலும் தப்பு கிடையாது போதுமா? அத விட்டுட்டு ப்ளாஸ்டிக் கவர்ல மழை பேஞ்சாப்ல
கச கசன்னு சுத்தாத”ன்னு சொன்னான். வ.வா சங்க ஆட்கள் அன்னப்போஸ்ட சந்திச்சு தங்களோட
முழு ஆதரவ குடுத்தாங்க.
“பாருங்க பில்டரு
எனக்கு எப்பிடி பாஸிட்டிவிட்டிய ஏத்துறான்னு....நீங்களும்தான் இருக்கீங்களேடா லகுட
பாண்டிகளா”ன்னு போயிடுச்சு அன்னப்போஸ்டு.
ரியோ நிஷாவ
கூப்ட்டு “இனி அன்னப்போஸ்டுக்கும் நமக்கும் அன்னந்தன்னி புழக்கம் இல்ல....இதுக்கு மேல
இத தொங்கிட்டு இருக்க முடியாது”ன்னு போயிட்டான்.
நம்ம அன்னப்போஸ்டுக்கு
இப்ப தேவை என்னன்னா சிம்பிள்.... அத சுத்தி எல்லாரும் உக்காந்து ஒப்பாரி வைக்கனும்
அப்பறம் சகுனியக் கூப்ட்டு எல்லாரும் அசிங்க அசிங்கமா கேக்கனும். இது நடந்தா மேடம்
மறுபடியும் ஜெனிலியா மோடுக்கு வந்து சகுனிய ஒரு முட்டு முட்டிட்டு “இன்னொரு முட்டு
முட்டலேன்னா கொம்பு மொளச்சு ஒனிடா பூதம் மாதிரி ஆகிடுவே”ன்னு சொல்லிட்டு..............
சநி நிசச கம பதனின்னு பேக்ரவுண்ட் மீசிக்கோட ஓடிரும்.
ஆனா அன்னை அர்ச்சனா
கும்பல் ஆல்ரெடி லைட்ட சகுனி பக்கம் திருப்பிட்டானுங்க. “அன்னப்போஸ்ட நம்பி இனி ஆத்துல
இறங்க முடியாது. அது எல்லாரையும் சோமுவா மாறி அதுக்கு சாமரம் வீச சொல்லுது. அதனால தப்பு
பண்ணது அன்னப்போஸ்டுதான்”னு தீர்ப்பெழுதிட்டானுங்க.
அப்றம் பிக்பாஸ்
கன்ஃபெஷன் ரூமுக்குக் கூப்ட்டு “காலையில இருந்து நீ அழுத அழுகையில சத்தம் மட்டுந்தான்
வந்துச்சே தவிர கண்ணுல தண்ணி வரவே இல்ல....என்னதான் வேணும் உனக்கு?”ன்னு கேக்க மறுபடியும்
அதே ரெக்கார்டு....இதக்கேட்ட பிக்பாஸு டயர்டாகி “இங்க பாரு இந்த ஷோ இப்பிடித்தான் சோதிக்கும்....ஆனா
நீ எங்க எல்லாரையும் சோதிக்குற...நீ நீயா இருந்து பொழக்குற வழியப்பாரு.....உன் புருஷன்
கண்ணுக்குட்டிய கேட்டதா சொன்னான் குடுத்தேன்னா அவங்கிட்ட சேத்துரலாம் குடுக்குறியா?”ன்னு
கேட்டதும்.....அன்னப்போஸ்டு கன்ணம் செவந்து “அய்யோ நாந்தான் கன்ணுக்குட்டி”ன்னு சொல்லிட்டு
கண்ணப்பொத்தி அழுக ஆரம்பிச்சுடுச்சு. அப்பறம் க்ளைமாக்ஸ்ல செத்துபோகப் போற ஹீரோயின்
மாதிரி “என் புருஷன் கிட்ட இதயெல்லாம் சொல்லிடுங்க”ன்னு லிஸ்டு சொல்லிட்டு இருந்துச்சு.
“சரி வேணும்னா கொஞ்ச நேரம் உக்காந்துட்டு போ”ன்னு சொல்லிட்டு பிரஷர் மாத்திரை போடப்
போயிட்டார் பிக்பாஸ்.
ஆனா இது இன்னும்
முடியுமான்னா அது அன்னப்போஸ்டு கைலதான் இருக்கு.
சைனா செட்டு
சனத்தின் சந்திராஷ்டமம்
ஒரு மெல்லிய
கம்பி. கம்பிக்கு அந்தப் பக்கம் வெள்ளந்தி. கம்பிக்கு இந்தப் பக்கம் பயித்தியம். ஆனா
அந்த கம்பி மேலயே குட்டிக்கரணம் அடிக்குற கழைக்கூத்தாடிதான் நம்ம சைனா செட்டு சனம்.
சனத்துக்கு
பிரச்சனையே அது மூக்கு பெருசா இருக்குறதுதான். எதுலடா நுழைக்கலாம்னு சுத்திட்டு இருக்கு.
நுழைச்ச மறுநிமிஷம் மூக்குப் பொடிய போட்டு விட்டுடுறானுங்க.....தும்மிக்கிட்டே திரியுது.
இன்னைக்கும்
அப்பிடித்தான் அன்னப்போஸ்டுக்கு ஆறுதல் சொல்றேன்னு ஆரம்பிக்கும்போதே அது கண்டுக்காம
போயிடுச்சு அதுக்கப்பறம் சனம் சொன்னத அதுவேதான் கேட்டுக்கிச்சு.
சரி இங்க சிக்னல்
சரியில்லன்னு சகுனிகிட்டப் போயி “ஆனாலும் அனிதா பண்ணது தப்பு மாதிரிதான் தெரியுது.....என்னயவே
பல சமயம் எடுத்தெறிஞ்சு பேசிடுது...இருந்தாலும் நீங்களும் இப்பிடி பண்ண வேணாம்”னு கலந்து
பேசிட்டு வந்துச்சு.
அப்பறம் நடந்த
தங்கம் பொறுக்குற டாஸ்க்குல பில்டரு டீம் சாக்குப் பையோட உள்ள போகும்போது பில்டர “அதெல்லாம்
எடுத்துட்டுப் போகக் கூடாது”ன்னு நிறுத்துனப்பயே பில்டரு இது மூச்ச நிறுத்தியிருப்பான்...அவசரத்துல
விட்டுட்டான். முடிச்சிட்டு வெளிய வந்து பாத்தா அது ஜல்லிக் கூடையோட நின்னுட்டு இருந்துச்சு.....
பில்டரு : ஆமா
கையில என்ன ஜல்லி கூடைய வச்சிருக்க ? எங்கள மட்டும் சாக்க எடுக்கக் கூடாதுன்னு சொன்ன
?
சனம் : இது
சாக்கு இல்லையே ஜல்லிக் கூடை....
பில்டரு : மூக்கு
மேல போயி நாக்கு வெளிய தள்ளுனா உன் மூஞ்சி எப்பிடி இருக்கும்னு பாத்துருக்கியா ? காட்டவா
?
சனம் : இது
கேம் நான் என்ன வேணா சொல்லுவேன்...
சம்மு : தள்ளுவ.....ஆமா
நீ என்ன பிக்பாஸினியா....நீயே ஒரு கண்டெஸ்டண்டு நீ எதுக்கு எங்கள சொல்ற ? எப்பப் பாத்தாலும்
நொய்யி நொய்யின்னு.....உனக்குன்னா ரவா லட்டு எங்களுக்குன்னா குழாப் புட்டா ? ஓடிரு.....
சனம் : MV
: சர்தான்.....சம்முவையே சைரனடிக்க வச்சுட்டோம் ....நல்லாத்தான் போயிட்டிருக்கு.....ஆனா
உடம்புக்கு சேதாரம் இல்லாம பாத்துக்கனும்.....ரைட்டு//
சைனா செட்டு
சனந்தான் இந்த சீசனோட என்டெர்டெயின்மெண்டுன்னு என் எக்ஸ்ட்ரா அறிவு சொல்லுது.....பாப்போம்.
பாலாவின் லோலாய்த்தனம்
பில்டரு நல்லவந்தான்
ஆனா அவனுக்கு இந்த ரியோ கும்பல் ஏதோ சர்வதேச தீவிரவாதிகள் மாதிரியும், இவனுங்க ஏதோ
திட்டத்தோட இவன கவுக்க உள்ள வந்த மாதிரியும் நடந்துக்குறான்.
வீடு பெருக்காம
அசதில தூங்கிட்டான் போல...அர்ச்சனா “என்னவாம் பொளந்துக்கிட்டு தூங்குறான். வீட்ட பெருக்குறது
யாரு....நான் பெருக்கவா?”ன்னு வேல்ஸு கிட்ட கேக்க “இதுக்கு மேல நீ பெருக்க வேணாம் நானே
பண்றேன்”னு சொன்னவர, “யோவ் சொங்கி பில்டர எழுப்புயா”ன்னு சொல்ல, “உனக்கென்ன சொல்லிட்ட.
அவன் பக்கத்துல போனாலே பெட்டிய தூக்கி எக்சர்சைஸ் பண்றான்....உன் பேச்சக் கேட்டு அவன
உரண்டை இழுக்க அவன் என் செவுல திருப்பிட்டான்னா என்ன பண்றது?”ன்னு யோசனையிலயே போக அவன்
குறட்டை சத்தமே வேல்ஸுக்கு காட்டு மிருகத்த நியாபகப் படுத்த.....”ஆத்தீ எதுக்கு வம்பு”ன்னு
வெளிய போயி “நானே பண்ணிடுறேன்”னு சொல்லிட்டாப்ல.
அஜீத் எழுப்புனதுக்கு
“டயர்டா இருக்கேன் காலையில கூட்டுறேன்னு சொல்லு”ன்னு சொல்லிட்டான்....இதக் கேட்டுட்டு
அர்ச்சனா “ஷிவானிக்கு கைய மடக்கி தவளை குட்டியெல்லாம் காமிக்கத் தெரியுது....கூட்ட
சொன்னா மட்டும் குடையுதோ”ன்னு பேசுனத கேட்டுட்டு வெளிய வந்த பில்டரு.....”செத்த நேரம்
கட்டைய சாய்க்க விடுறீங்களாடா ? இப்ப நான் கூட்டலேன்னா கார்ப்பரேஷன் வந்து ஃபைனா போடப்
போகுது ?ன்னு கேட்டுட்டு “இருங்கடி அடுத்து கேப்ட்டனானதும் எல்லாரையும் அம்மி அரைக்க
விடுறேன்”னு சொல்லிட்டான்.
இதப் புடிச்சுக்கிட்டானுங்க
ரியோ குரூப். ரியோ வந்து எப்பவும் போல நெஞ்ச வெடச்சுக்கிட்டு வர.....”என்ன ரியோ பிரச்சனை
பண்ணனுமா?”ன்னு உடம்ப இறுக்கி கெட்டதுமே ரியோ “அய்யோ அப்பிடி இல்ல ப்ரோ”ன்னு கோழி குஞ்சாட்டம்
கழிஞ்சுட்டாப்ல..... கொஞ்சம் விட்டுருந்தா இன்னைக்கு ரியோக்கு ரப்புன்னு ஒன்ணு விழுந்திருக்கும்......தப்பிச்சுட்டான்.
கடைசில “நீ பண்ணது தப்பு”ன்னு ரியோ சொன்னதும் “சரி வச்சுக்கோ”ன்னு சொன்னதும் ரியோ ஏறக்குறைய
அழுதுட்டான்........இது நாளைக்கும் தொடரும்....!
ஆனாலும் அர்ச்சனா
அன்னை அர்ச்சனாவ நடந்துக்குறதில்ல. ரியோ குரூப்பு கொஞ்சம் நாட்டாமைத்தனம் பண்ற ஆளுகளாத்தான்
இருக்குறானுங்க. அர்ச்சனா வேல்ஸையெல்லாம் ஏத்தி விடுறது தெள்ளவாரித்தனம். இவனுங்களுக்குன்னு
ஒரு இமேஜ் இருக்குறதா காட்டிட்டே இருக்கானுங்க. பில்டரு அத உடைக்கப் பாக்குறான். அது
இவனுங்களுக்கு காண்டு. ஆனா பில்டரு இதப் பண்ணலேன்னா இவனுங்க இருக்குற ஆளுக தலையில ஈசியா
அரச்சிடுவானுங்க. சோ பில்டரு பண்றது சரிதான்.....!
ஆனா இந்த சீசன்
இப்பிடித்தான் போகும்னா......சொல்றதுக்கு ஒன்ணுமில்ல !
Comments
Post a Comment