பிக்பாஸ் – 4 : நாள் - 7 (11.10.20)

“முன்னல்லாம் வாரத்துல ஒரு நாள் நாயித்துக்கிழமை வரும்.....நல்லா இருக்கும் ! ஆனா இப்ப எல்லா நாளும் நாயித்துக்கிழமையாகி திங்கட்கிழமைக்கு திண்டாட வைக்குது. வீட்ல இருந்து வேலை பாக்குறதால ப்ரொடக்டிவிட்டி கூடி இருக்காம் (ஆமா ப்ரெக்னன்சி கேஸ் அதிகமாகி இருக்கு). ஆனாலும் வேலைப் பளு ஜாஸ்தியாதான் இருக்கு.....ஆனா ஆண்களுக்கு இல்ல பெண்களுக்கு...ஏன்னா இப்ப எல்லாரும் எல்லா நேரமும் வீட்ல இருக்குறதால சாப்பாட்டையும், ஸ்னாக்ஸையும் சகட்டு மேனிக்கு சரிச்சு தள்றானுங்க...அத செஞ்சு தர சொல்லி பெண்கள கொல்றானுங்க. அதானால GDP ல பாதி பெண்களுக்கு குடுக்கனும்”னு ஒரு குண்டப் போட்டார்.

அப்றம் உள்ள காமிச்சானுங்க......மறுபடியும் பில்டரும், சனமும் சந்துல முட்டிக்கிட்டாங்க.

5 நிமிஷத்துக்கு ஒருக்கா ரெண்டு பேருல ஒருத்தர் “ஆனாலும் நீ அப்பிடி சொல்லி இருக்கக்கூடாது”ன்னு அக்கப்போரு பண்ணிட்டு இருந்தானுங்க. ஆரியும் தொண்டைய செருமிகிட்டு அட்வைஸ் எபிசோட ஆரம்பிச்சாலும் பாலா படியவே இல்ல. இந்த சனமும் அவன விட மாட்டேங்குது. இதுல குறுக்க வந்த சம்முக்கு ஒரு பஞ்ச் போட்டு விட்டுச்சு. ஒரு கட்டத்துல வெளிய எந்திரிச்சு போயிட்டு உள்ள வரப்ப “எது ஏன் தகுதி யாரு வந்து சொல்லுவா?”ன்னு ராவா பில்டப்போட பில்டரு ரகிட்ட....ரகிட்ட பாடிக்கிட்டே வர “பில்டரு நம்மளத்தான் நைசா நகட்டுறான்”னு தெரிஞ்சுகிட்டு சனம் மனம் புண்பட்டுத்தான் போச்சு.

கேப்ப யூஸ் பண்ண நெனச்ச சுரேஷ் பில்டர தனியா கூப்ட்டு....

சுரேஷ் : பாலா, நீ இன்னைக்கு முட்டை கம்மியா சாப்ட்டியா ?

பாலா : இல்லையே ஏன் ?

சுரேஷ் : வழக்கமா இவ்வளவு பேச மாட்ட.....5 வார்த்தை யாரச்சும் அதிகமா பேசுனாலே ஆர்ம்ஸ மடக்குவ....இன்னைக்கு சும்மா கடக்குறியே அதனால கேட்டேன்...ஏன்னா நானெல்லாம் அனிதா கூட பிரச்சனையப்போ....

பாலா : சார், நான் கொஞ்சம் பொறுமையா இருக்கலாம்னு பாக்குறேன் அவ்வளவுதான்

சுரேஷ் : கரெக்ட் அப்டித்தான் இருக்கனும்...ஆனாலும் சில பேரு பாத்தேன்னா இப்ப அனிதாவ எடுத்துக்கோயேன்....

பாலா : கேரக்டர் அஸாசினேஷன் பண்ணக்கூடாது சார்....நான் தெரிஞ்சு சொல்லல...

சுரேஷ் : அதான் நானும் சொல்றேன்....இங்க யாரும் தெரிஞ்சு செய்யல...சொல்லப்போனா அனிதா கூட...

பாலா : ஆனாலும் சனம் தேவையில்லாம இப்டி பண்ணக்கூடாது....

சுரேஷ் : இதத்தான் நான் அனிதா பண்ணப்பயும் சொன்னேன்...அன்னைக்குக் கூட அனிதா எங்கிட்ட....

பாலா : இருங்க இத சனத்துட்டயே கேட்டுட்டு வரேன்....

சுரேஷ் : கடைசி வரைக்கும் இவன் அந்த அனிதா கேக்கவே இல்ல.....இவன் சரிபட்டு வர மாட்டான்...நாம ரேகாகிட்டயே ரயில் ஓட்டுவோம்....//

அகம் – அகம்

“ஃபூட்டேஜ் பாத்தேன், பாலாஜி நீ அப்பிடி பொத்தாம்பொதுவா பெனாத்தியிருக்கக் கூடாது. இனிமே பாத்துப் பேசு”ன்னு அவனுக்கு சில பல சித்தெறும்பு கடிகள குடுத்தாரு. “ஆனாலும் அந்த எழவெடுத்தவன் என்னய அவமானப்படுத்துனது சரியாகிடுமா?”ன்ற மாதிரியே சனம் மூஞ்சிய காட்டிட்டு உக்காந்திருந்தாங்க. “சரி வாங்க இதயத்த உடைச்சு விளையாடுவோம்”னு சொல்லிட்டு சனிக்கிழமை எபிசோட கண்டினியூ பண்ணார் ஆண்டவர்.

இந்த தடவை அதிக ஹார்ட் பிரேக் வாங்குனது நம்ம சகுனி சுரேஷ். மொத்தம் 7 ஹார்ட் பிரேக்.

“சரி தலைவி செயல்பாடுகளப் பத்தி புகார்கள் வந்திருக்கு fake id மாதிரி இல்லாம பேர் போட்டே எழுதி இருக்கானுங்க உள்ள அனுப்புறேன் படி”ன்னு சொல்லிட்டு “அதுக்கு முன்னாடி நீயே உன் கேப்டன்தனத்தப் பத்தி சொல்லு”ன்னு சொன்னதும் ரம்யா “ அதுக்கு நானே ரெடியா இல்ல. பந்து இல்லையே பந்து குடுத்து அனுப்புவான்னு பாத்தா பட்டுனு நீதான் தலைவினு சொல்லிட்டாப்ல பிக்பாஸு. நான் என்ன ஏதுன்னு தெரிஞ்சுக்குறதுக்குள்ள இந்த வாரமே முடிஞ்சுப் போச்சு”ன்னு அங்கலாய்ச்சாங்க ரம்யா. “பாத்தீங்களா தேர்தல் அருமை..... இப்பப் புரியுதா?” அப்டின்னு கேட்டுட்டு “இது டபுள் மீனிங்லாம் இல்ல சிங்கிள்தான்”னு சொல்லி கைதட்டல் வாங்குனார்.

அப்றம் “இந்த வார தலைவர் செலெக்ஷன் பிராசஸ நான் சொல்றேன்”னு சொல்லி “தகுதியானவங்கள உள்ள கூட்டிட்டு வந்துட்டு அதுல தகுதி இல்லன்னு 8 பேர செலக்ட் பண்ண சொன்ன பிக்பாஸோட பிக்காளித்தனத்த நான் எதிர்க்குறேன். அத்னால அதிக ஹார்ட் பிரேக் வாங்குன 3 பேர எலெக்ஷன்ல நிறுத்துறேன்”னு சொல்லி ரேகா, ஷிவானி & சகுனி சுரேஷ நிப்பாட்டுனார். ரேகா டெப்பாசிட் காலி, ஷிவானிக்கு டெப்பாசிட், சகுனி சுரேஷ் கேப்டன்.

உணவு வீணாக்காமை, தலைவர் பதவி என்பது அதிகாரமல்ல பொறுப்பு, நானெல்லாம் இப்ப பழைய சோறுதான் சாப்டுறேன்னு பாவம் கமல் சாரே கண்டென்ட் இல்லாம தினுறுனதப் பாக்க நமக்கே நமச்சலா இருக்கு. அப்பறம் “கொஞ்சம் லக்ஸுரிய விட்டுக்குடுத்தா அந்த இன்னொரு ரூம தொறந்துவிடுவாங்க”ன்னு சொல்லிட்டு போன வாரம் மாதிரி இந்த வாரமும் மண்டோ எழுதுன அவமானம்ன்ற புக்க அறிமுகப்படுத்திட்டு அக்ஷரா பிறந்தநாளுக்கு வாழ்த்துகள சொல்லிட்டு விடு விடுன்னு போயிட்டார்.

அவரு போனதும் சகுனி சுரேஷ் பொதுக்குழுவ கூட்டி டீம் பிரிச்சாப்ல. இதுல அவரு கேட்டத சரியா காதுல வாங்காம சனம் “எல்லார்கிட்டயும் கேட்டு சொல்லுங்க உங்க இஷ்டத்துக்கு செய்யாதீங்க”ன்னு சொன்னதுதான் தாமதம். எல்லாரும் ஒரு மாதிரி சனத்த பாக்கா “ஆகா நம்மதான் எங்கயோ பராக்கு பார்த்துட்டு இருந்துட்டோம் போல.....போச்சு பாலா வேற பாக்குறானே, நாளைக்கு எதயாச்சும் ஆரம்பிச்சு வைக்கப்போறான்”ற திகில் பார்வையோட முடிஞ்சது.......

பிக்பாஸுன்னு பேரு வச்சீங்க சரி....அதுல கண்டெண்டுன்ற சோறு வைக்கனும்னு தோணுச்சா ? என்னடா யாவரம் பண்றீங்க ? உடனத்த பாரதி கண்ணம்மாவ பாருங்க காணமப்போன கண்ணம்மாவ பெட்ரோல் பங்க்ல கண்டுபிடிக்கிறாங்க அவங்க மாமியா. வந்து நிக்குற காருக்கு பெட்ரோலா இல்ல டீசலான்னு கண்ணம்மா கேக்க கண்ணாடிய இறக்கிவிட்ட அவங்க மாமியா எனக்கு அன்பும் பாசமும்தான் வேணும்னு கேட்ட சீன் இருக்கே.......நைட்டு முழுக்க தூங்கல. நீங்க என்னடான்னா டுபாக்கூர்ன்ற ஒரு வார்த்தைய வச்சுக்கிட்டு 3 நாளா முக்கிட்டு இருக்கீங்க......முடியல !

டிஸ்கி : பிக்பாஸ் 4 பதிவுகள மொத்தமா படிக்க லிங்க் முதல் கமெண்டில்.

 

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)