பிக்பாஸ் – 4 : நாள் - 17 (21.10.20)

 

17வது நாள்

“ஓப்பன் த டாஸ்மாக்” பாட்டு. எல்லாரும் லான்ல வந்து நின்னுக்கிட்டு நின்ன இடத்துல சுத்திட்டு இருந்தானுங்க. சாத்தூர் ஷிவானி இன்னைக்கு ஷிம்லா ஷிவானியா ஜில்லுன்னு இருந்தாங்க. சனத்தோட தக் ஹாப் மிஸ்ஸிங். அனிதா கூட அரை மனசாதான் ஆடுன மாதிரி இருந்துச்சு.

மதியமா பிக்பாஸ் கூப்ட்டு “சாப்ட்டாச்சுன்னா “நாடா ? காடா ?” டாஸ்க்குல அப்பிடியே டீம் மாத்தி டீல் பண்ணுங்க”ன்னு சொல்லிட்டார். ரொம்ப புதுசுல்ல ? இதத்தானடா காலங்காலமா பண்றீங்க....

இன்னைக்கு அரக்கர் டீம் கொஞ்சம் அக்ரஸ்ஸிவா இருந்தானுங்க. “தொடத்தான கூடாது மண்ண வாரி தலையில போடுவோம், துப்பாக்கியால சுடுவோம், பாம் போடுவோம், தூரத்துல இருந்து கத்திய கொண்டி எறிவோம்”னல்லாம் பேசிட்டு இருந்தானுங்க. ரம்யா மட்டும் ரொம்ப சாஃப்ட்டா “ஐம்புலன்கள்ல தொடு புலன விட்டுட்டு மத்த நாலு புலன யூஸ் பண்ணா பலன் நமக்கு”ன்னு நாலடியார் பாட்டு கணக்கா ஒப்பிச்சிட்டு இருந்தாங்க.

மொத ஆளா அர்ச்சனா – ஜெயிப்பு

ஆனாலும் அப்பவே அர்ச்சனா “இவனுங்க செய்க சரியில்ல”ன்னு சொல்லிட்டு வந்தாங்க.

மறுபடியும் அரக்கர் டீம் ஆல் மெம்பர்ஸும் கூடி அடுத்த ப்ளானுக்கு ரெடி பண்ணானுங்க. “எமொஷனலா பேசுனா எத்த வருவானுங்க அப்ப அவுட்டுன்னு சொல்லிருவோம்”னு சனம் சொல்லிச்சு. உன் சத்துக்கு குடுக்குற ஐடியாவா இதெல்லாம் ? தொடாம டார்ச்சர் பண்றதுக்கு தேவையான ஆரஞ்சு பழத்தோலு, ஸ்ப்ரே, கண்டது, கடியதுன்னு எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கிட்டானுங்க. பில்டரு ரம்யாகிட்ட “பூராம் சேஃபா விளையாட பாக்குறானுங்க. இதக் கேட்டா நம்மளத் தாக்குறானுங்க”ன்னான். ரம்யாவுக்கு புரிஞ்ச மாதிரி மண்டைய மண்டைய ஆட்டுச்சு.

ஆக்ரோஷமா அன்னை அர்ச்சனாகிட்ட பேசிட்டு வெளிய வந்தாரு ஆரி ப்ரோ. 30வது செகண்ட்ல அள்ளையில இடிச்சு விட்டு....60வது செகண்ட்ல கண்ணுல ஆரஞ்சு ஆசிட்ட அடிச்சு விட்டானுங்க. கண்ணக் கசக்குன ஆரிய அவுட்டுன்னு கத்துனதும். ஆரி “டேய் எருமை மாதிரி எதுக்க வந்து மோதுனான் சரி...அதென்னடா ஆசிட்டல்லாம்  அடிக்கிறீங்க ? இந்த பொழப்புக்கு....பொம்மேரியன் நாய்க்கு பொண்ணு பாக்குற வேலை பாக்கலாம்”னு அசிங்கமா சொல்லிட்டு இருக்கும்போதே பிக்பாஸ் “தோத்தது ஆரிதான்”னு சொன்னது நமக்குமே அதிர்ச்சிதான்.

இந்த கலவரத்தப்பவே உள்ள பூர வந்த ஆளுகள சுரேஷ் அசிங்கமா எதோ சொல்லிட்டுதான் இருந்தாப்ல. அப்பவே சனத்துக்கு சைனப் போட்டுட்டுதான் இருந்தாரு. சனத்தப் பாத்து “சைத்தான் கி பச்சே”ன்னு சொல்ல..”மானங்கெட்ட மன்னாரு”ன்னு கவுன்டர் குடுத்துச்சு சனம். சொல்லிட்டு, “எங்க உள்ள ஓடிட்டனா ஓட்டுத்தலையன்?”னு கேட்டு இன்னைக்கு சனம் ஒரு சைனைடு சங்கர் மோடுலதான் இருந்துச்சு....அப்பப் புரியல....

மனசே இல்லாம ஆரி அவனுங்களோட போனாப்ல. அங்க இவனுங்க கேம் ப்ளான்ல ஆரிய கலந்துக்க சொல்ல, “வேணாம்பா......தொடதான கூடாது ? அப்ப பெரிய கல்லத் தூக்கி தலையில போடுவோம்னு சொல்லுவீங்க. நமக்கு இது சரியா வராது விட்டுடுங்க. நான் உங்க நேர்மையின்மைய மையமா வச்சு ஒரு 10 நாளைக்கு ஆஜீத்துக்கு அடிஷனல் கிளாஸுக்கு ரெடி பண்ணிட்டு இருக்கேன்”ன்னு சொல்லிட்டாப்ல.

 அடுத்து ஜித்து பாய்

எக்ஸ்பிரஷனே குடுக்காம அண்ணன் 2 மணி நேரம் ஒரு படம் பூராம் வருவாரு. இதெல்லாம் அவருக்கு மேட்டரா ? அசால்ட்டா ஜெயிச்சாப்ல.

இந்தக் கேப்புல பில்டரு அடுத்த ஆள டார்ச்சர் பண்ண கிச்சன் சாமான திருட உள்ள வர அத கேபியும், ஷிவானியும் தடுக்கன்னு ஜாலியா விளையாட உள்ள வந்த சனம் ஷிவானியப் பாத்து “பொருளே எடுக்கலாம்னு ரூல்ஸ் இல்லே..... பொருளே எடுக்கலாம்னு ரூல்ஸ் இல்லே”ன்னு ரூல்ஸயே கண்டுபிடிச்ச மாதிரி கத்த “அத எடுக்கக் கூடாதுன்னும் ரூல்ஸ் இல்ல”ன்னு குழி சொம்புல கல்ல தேச்ச மாதிரியான ஒரு குரல். யாருன்னு பாத்தா நம்ம சாத்தூர் ஷிவானி....பொண்ணு அதான் இவ்வளவு நாளா பேசாமயே இருந்திருக்கு. ஆனாலும் இன்னைக்கு கொஞ்சம் அதிகமா ஒரு 25 வார்த்தைகள் வரைக்கும் பேசுச்சு.

பின்ன விளையாட்டு வினையாகி பில்டரு மொளகாப்பொடி டப்பாவ தூக்கிப்போட்டு விளையாட...நடு ஹால்ல கொட்டிடுச்சு. பொறுப்பா அத கூட்டிப் பெருக்கிட்டு இருந்தான் சோமு

அன்னப்போஸ்டு : என்ன சோமு...விளையாட மொளகாப் பொடிதான் கிடச்சுதா ?

சோமு : நான் இல்ல பாலாதான்...

அன்னப்போஸ்டு : பாலா கொட்டுனாலும் மொளகாப் பொடி மொளகாப் பொடிதான ?

சோமு : ஆமா ஆமா

அன்னப்போஸ்டு : என்ன ஆமான்ற ?....ஆமான்னா ஆமாவா...அப்ப இல்லேன்னா இல்லையா ?

சோமு : இந்தா அரைப்படி....உனக்கு அவ்வளவுதான். நீ பேசுறத கேட்டுட்டே இருக்கனும்னு அவசியமில்ல புரியுதா ?

அன்னப்போஸ்டு : என்னடா சொன்ன ? அவசியமில்லையா ? என்னடா அவசியமில்ல ? எதுக்குடா அவசியமில்ல ? யாருக்குடா அவசியமில்ல? ஏண்டா அவசியமில்ல? எனக்குக் கூடத்தான் அவசியமில்ல ! என் புருஷனுக்குக் கூடத்தான் அவசியமில்ல....!@#$%^&*&^%$$#@!@$%^5^&&& ....!@#$%^&*&^%$$#@!@$%^5^&&&....!@#$%^&*&^%$$#@!@$%^5^&&&....!@#$%^&*&^%$$#@!@$%^5^&&&.....................................................

பிக்பாஸ் : அன்னப்போஸ்டு இதுவரை நீ 6452 அவசியமில்ல சொல்லியிருக்க......போதும். 7வது கேமரால உக்காந்திருந்த ஆளு கோமாவுக்கே போயிட்டான். தயவு செஞ்சு போயி விளையாட்ட விளையாடு

இப்ப ஆஜீத் வந்தாப்ல

உள்ள இருந்து பாக்குறானுங்களேன்னு துணியப் போட்டு மறச்சுட்டு நின்னுச்சு சனம். தெரிஞ்சோ தெரியாமலோ கைல வச்சிருந்த கட்டையக் கொண்டி சகுனி அடிக்க அது சனம் மண்டைல மடார்னு விழுந்திருச்சு போல....”போச்சுடா அடிச்சுட்டான்....அடிச்சு மண்டையப் பொளந்துட்டான்....அய்யய்யோ பொளந்துட்டாண்டா”ன்னு கத்த “யாருக்கு?”ன்னு ரொம்ப நேரமா எல்லாரும் சனத்தப் பாக்க. சனம் “அய்யய்யோ இவனுங்களுக்கு சரியா கன்வே ஆகலப் போல”ன்னு புரிஞ்சுக்கிட்டு “டேய் என்னயத்தாண்டா அவன் அடிச்சுட்டான்......அடிச்ச சவுண்டக் கேட்டு அடுத்த செட்டுக்காரனே எட்டிப் பாக்குறாண்டா....என் தலையெல்லாம் சுத்துது...காதுக்குள்ள குருவி கத்து”ன்னு கலவரத்த உண்டு பண்ணுச்சு.

“என்னங்க சனத்த சாத்திட்டீங்க போல?”ன்னு கேட்டதுக்கு சகுனி, “நீயே சொல்லு நின்னது சனம்னு தெரிஞ்சிருந்தா இதாலயா அடிச்சிருப்பேன் ? இன்னேரம் அது பேசிட்டு இருந்திருக்குமா ? தெரியாம அடிச்சதுதாம்மா”ன்னு சொல்ல, “ஆனாலும் அடிக்கக்கூடாதுல்ல?”ன்னு அர்ச்சனா மறுபடி கேக்க, “அட நான் அத மட்டுமா அடிச்சேன் நிஷா, ரம்யாவக் கூடத்தான் வெளக்கமத்த கொண்டி வெளுத்தேன்”னு சொன்னதுக்கு “எது வெளுத்தீங்களா? என்னங்க ரெண்டு பேருக்கு வெங்கலப் பதக்கம் குடுத்த மாதிரி கூலா சொல்றீங்க?”ன்னு கேட்டுட்டு இருக்கும்போதே

“வாடா டேய் வெளிய வாடா.....நீ வாடா....இப்ப நீ வெளிய வா....டா....! அடிச்சுட்டாண்டா அசந்த நேரத்துல அக்காவ அடிச்சுட்டாண்டா....வாடா டேய் இப்ப வந்து அடிடா டேய்....வாடா”ன்னு வடிவேலு மாதிரி சனம் சலம்பிக்கிட்டு இருந்ததப் பாத்த மத்தவனுங்க “ரைட்டு வாடா வாடான்னு கூப்ட்டு இதுவே வாண்டடா அடி வாங்கப்போகுது...ஒழுங்கா அத இழுத்துட்டு வந்து இறுக்கிக் கட்டி வைங்கடா”ன்னு சொல்லி கூட்டிட்டு வந்து உக்கார வச்சானுங்க.

அப்பறம் பில்டரு, ஆரி, அர்ச்சனான்னு எல்லாரும் வந்து திட்ட. சகுனி கேமராவப் பாத்து “யோவ் இத அடிச்சா நான் ரவுடியாகப் போறேன் ? தெரியாமப் பட்டிருக்கும்”னு சொல்லிட்டு வெளிய வந்தாப்ல.

அர்ச்சனா அவரக் கூட்டிட்டு வந்து “இவ கிட்ட சாரி கேளுங்க, இந்தோ ரம்யாகிட்ட சாரி கேளுங்க, ரியோ கிட்ட சாரி கேளுங்க, சனம் கிட்ட சாரி கேளுங்க, இங்க நின்னு சாரி கேளுங்க, அங்க நின்னு சாரி கேளுங்க, குனிஞ்சு சாரி கேளுங்க, நல்லா மனசுல இருந்து சாரி கேளுங்க, நாபிக் கமலத்துல இருந்து நறுக்குன்னு சாரி கேளுங்க.....சாரி கேட்டீங்களா ? நல்லா கேட்டிங்களா ? மனசார கேட்டீங்களா? யப்பா சாமி இன்னும் கிச்சன், கக்கூஸு, இண்டு, இடுக்கு, சந்து, பொந்துல யாரச்சும் இருந்தா சுரேஷுகிட்ட வந்து சாரி வாங்கிக்கோங்க. அப்பறம் எனக்கு விட்டுப் போச்சு, உனக்கு விட்டுப் போச்சுன்னு சொல்லக்கூடாது”ன்னு சம்பவத்த முடிச்சுட்டாங்க.

அடுத்து கேபி – ஜெயிப்பு

எல்லாம் முடிஞ்சு உள்ள போனதும் சுரேஷு பிக்பாஸ தன்னய கன்ஃபெஷன் ரூமுக்கு கூப்ட சொல்ல, பிக்பாஸும் கூப்ட்டாப்ல. உள்ள போன சுரேஷு “நான் வெளிய போறேன். தெரிஞ்சு செய்யல...ஆனாலும் செஞ்சிருக்கக் கூடாது. என்னய எல்லாரும் கார்னர் வேற பண்றானுங்க சோ வெளிய போறே”ன்னு சொல்லி “ஓ” ன்னு கதறி அழுக.... பிக்பாஸுக்கே பக்குன்னு ஆகிடுச்சு. “நீ போயிட்டேன்னா நானும் உங்கூட வர வேண்டியதுதான். நீ இல்லாம இவனுங்கள மட்டும் வச்சு வயலும் வாழ்வும் தான் நடத்தனும். அதான் மண்புழு கிட்டக் கூட மன்னிப்பு  கேட்டுட்டியே. நீ பாட்டுக்கு பொசுக்குன்னு வீட்டுக்கு போயிட்டா உங்க வீட்ல உன்ன என்ன நெனப்பாங்க ? அனுப்பி விட்டா என்னய என்ன நெனப்பானுங்க ? அதுமட்டுமில்லாம எனக்கும் வேற வழியில்ல....பேசாம அப்டியே இங்க தங்கிரு......சனத்தையெல்லாம் பில்டரு ஒரு நாள் ஷோல்டர எறக்கி விட்டுடுவான்...அன்னைக்கு சந்தோஷப் பட்டுக்கலாம்”னு காலுல விழாத குறையா கெஞ்சினாப்ல. “சரி இவ்வளவு சொல்ற இருந்து தொலைக்கிறேன்”னு சொல்லி கண்ணத் தொடச்சு சிரிச்சுக்கிட்டார்.

ஆனா சகுனி சரியான ஆளு....! ஒரு நெகட்டிவான மேட்டர் தனக்கு நடந்துச்சுன்னா, அத பாஸிட்டிவாக்க அடுத்து என்ன பண்ணனும்?னு ரொம்ப சரியா கணிச்சு வச்சு அதே மாதிரி பண்ணிட்டாப்ல. இதுல உண்மையிலயே அடி வாங்குன சனம்தான் இத மைலேஜா எடுத்திருந்திருக்கனும்.... அத ஒழுங்கா அதுக்கான பாயிண்டா மாத்திக்க தெரியாம மண்டைல தைலம் தேச்சிட்டிருக்கு சனம். நாளைக்கு அன்னப்போஸ்டு, சோமு பஞ்சாயத்த எதிர்பாக்கலாம்.


 

 

 

 

 

 

 

 

 

 

Comments

  1. Absolutely brilliant. That too penned in a short time,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)