பிக்பாஸ் – 4 : நாள் 9 (13.10.20)
9ம் நாள்
“ஜிகிடி கில்லாடி”
பாட்டு அலாரம். தேவாங்கர் சத்திரத்துல சமுக்காளத்த விரிச்சு ஆளுக்கொரு மூலையில முடக்கி
படுத்திருந்த மாதிரி 1 வாரமா ஹால்ல படுத்திருந்த பயலுகளுக்கு பெட்டு கிடச்ச சந்தோஷத்துல
பூராம் மூஞ்சி வீங்குற அளவுக்கு தூங்கி எந்திரிச்சு எந்திரன் சிட்டி மாதிரி வெளிய வந்தானுங்க.
ஒரு சுவாரஸ்யமும் இல்லாம கடனுக்கு கைய கால ஆட்டிட்டு இருந்தானுங்க. தனியா தகதிமிதா
போட்ட சாத்தூர் ஷிவானியக் கூப்ட்டு ஆம்பளைங்க வரிசைல நின்னு ஆடச் சொன்னானுங்க. மிங்கிள்
பண்றானுங்களாமாம்.
கிச்சன்ல ஷிவானியும்,
ரம்யாவும் வெண்டைக்காய்க்கு வலிக்காம வெட்டிட்டு இருக்க, சகுனி சுரேஷு ஆஜீத்த ஆர்டர்
போட்டு பேச, “யோவ் எப்பப்பாத்தாலும் எட்டாங்கிளாஸ் வாத்தி மாதிரி கய கயன்ற.....அதான்
வேலை பாக்குறேன்ல அப்பறம் என்ன உனக்கு ? இப்பிடி எல்லாரையும் மூட் அவுட் பண்றதலாலதான்
உனக்கு முடி மொளைக்க மாட்டேங்குது”ன்னு சொல்லிட்டு தரைய உதச்சுட்டு போயிட்டான்.
சுரேஷு லைட்டா
ஜெர்க் ஆனாப்ல. ரம்யாவும், “கிச்சன்ல “நெய் நெய்”னு சொல்லலாம் ஆனா பொழுதுக்கும் “நொய்
நொய்”னு இருந்தா என்ன பண்றது ? இந்த டீம்ல டீசண்டா எல்லா வேலையும் அவந்தான் பாக்குறான்
உனக்கு சின்னவங்க பெரியவங்க வித்யாசமே இல்லையா விஷ பாட்டிலே?”ன்னு கேக்க, “நீ எதுவும்
சொல்லாத......பாட்டு பாடுற பையந்தான....பச்சப்புள்ளையா இருப்பான்னு நெனச்சேன்...இவன்
என்னடான்னா பாக்ஸர் பாகவதரா இருப்பான் போல....அவன் தரையில உதச்சுட்டுப் போனத என் தலையில
உதச்சு இருந்தா இன்னேரத்துக்கு வீட்டு வாசல்ல என் தலை திருஷ்டிக்கு தொங்கி இருக்கும்.....மத்தியானமா
போயி மன்னிப்பு கேட்டுடுறேன்”னு மட்டையா மடங்குனார். ஆனா பையன் ரொம்ப நேரமா வோட்கா
குடிச்ச வாம்ப்பைர் மாதிரி வெறித்தனமா சுத்திட்டு இருந்தான்.
பிலட்ருதான்
கூப்ட்டு சாந்தி பண்ணாப்ல. “அவன் டோன் சரியில்லண்ணே”ன்னு ஆஜீத் சொல்ல “ஆமாண்டா அவன்
பாடுனா ஆந்தை கத்துன மாதிரிதான் இருக்கு”ன்னு பில்டர் சொல்ல, “இவன் ஒரு இம்சை”ன்னு
நெனச்சுக்கிட்டு அவனா உள்ள போயி “கோவமே வராத என்னையவே ஒரு கொலை கேசுல உள்ள தள்ளியிருப்பானுங்க
இன்னைக்கு......தப்பிச்சுட்டடி நீ” ன்னு சொன்னதும் சுரேஷ் “போதும் அதுக்கு மேல ஒண்ணும்
சொல்லிடாத”ன்னு சொல்லி சமாதான சாரி கேக்க, ஆஜீத்தும் சாரி கேக்க சுரேஷ் கட்டி தழுவிண்டார்.
இந்த சீன்ல ஆஜீத்த க்ளோசப்ல காட்டியிருந்தா அவன் மூக்குல ரத்தம் வரத காமிச்சு மன்மதன்
மீயூசிக் போட்டிருக்கலாம். ஏன்னா ஆஜீத் அடங்குன மாதிரி தெரியல.
பிக்பாஸ் வரலாற்றில்
முதல் முறையாக எவிக்ஷன் ஃப்ரீ பாஸ். அதாகப்பட்டது அந்த ஃப்ரீ பாஸ்....பிக்பாஸுல விளையாடத்
தகுதி இல்லேன்னு தேர்ந்தெடுக்கப்பட்ட 8 பேருல ஒருத்தருக்கு கிடைக்கனும். அதனால ஒரு
ரூம்ல அந்த 8 பேரும் உக்காந்துக்கிட்டு ஒவ்வொருத்தரையா எதுக்கு ஃப்ரீ பாஸுக்கு தகுதி
இல்லேன்னு விளக்கிச் சொல்லி வெளிய அனுப்பனும். கடைசியா எல்லாரையும் கன்வின்ஸ் பண்ண
ஒரு ஆளுக்கு அது கிடைக்கும்.
100 நாள் வேலை
திட்டம் மாதிரி உள்ள உல்லாசமா இருந்துட்டு வந்துடலாம்னு வந்த கூட்டந்தான் இது.....சுரேஷத்
தவிர. எனக்கென்னமோ அந்தாளு பிக்பாஸ் டீம்ல ஒரு ஆளு மாதிரி தெரியுது. பக்காவான ப்ளானிங்,
பக்காவான ஸ்டேர்டஜி....! கொஞ்சம் விட்டா பிக்பாஸையே வெளிய அனுப்பிருவாப்ல போல.
ரூமுக்குள்ள
எல்லாருக்கும் முன்ன சனத்த வெளிய அனுப்பனும்னு அட்டெண்டன்ஸப் போட்டாப்ல சுரேஷ்.
“நானே பாவம்.
22 படத்துல நடிச்சும் என் ஒரு படத்தக் கூட தியேட்டருலயோ, டீவியிலயோ நானே பாத்ததில்ல.
அப்றம் எப்பிடி மக்கள் பாத்திருப்பானுங்க ? இங்க வந்தா ஒரு நாலு பேருக்கு தெரியுமே....என்னயப்
பத்தி புரியுமேன்னு வந்தேன்.....வெளியதான் நறுக்குன்னு நாமினேட் பண்ணானுங்கன்னு பாத்தா
இங்கயும் மொத ஆளா என்னத்தான் முட்டித் தள்ளுறீங்க”ன்னு கதறியும் ஒருத்தனும் மசியல.
எல்லாரும் அத வெளிய அனுப்ப ஒத்துக்கிட்டானுங்க. “அவங்கள மக்கள் காப்பாத்திடுவாங்க அதனால
ஃப்ரீ பாஸ் இவங்களுக்குத் தேவைப்படாது”ன்னு சகுனி சுரேஷ் சொன்னதுந்தான் அந்தப் பொண்ணு
ரொம்பவே அழுதுச்சு. சகுனி இரக்கமில்லையா உனக்கு ?
வெளிய வந்து
தனியா அழுதுட்டு இருந்த சனத்த அனிதா சமாதானப்படுத்த, அந்தப்பக்கமா வந்த ஆரி “ஆகா இங்க
ஒன்ணு அழுதுட்டு இருக்கு....முக்கி முக்கி மோட்டிவேஷனல் ஸ்பீச் குடுத்து டைம்பாஸாகலாம்”னு
சொல்லிட்டு “வெளிய அனுப்பிட்டானுங்களா வெரி குட்....தோல்விய ஒதுக்காத, அது கிட்ட அன்பாப்
பேசு, அத உங்கூட சேத்துக்க, என்ன வந்தாலும் ஏத்துக்க”ன்னு எப்பவும் போல என்றும் அண்ணன்
சமுத்திரக்கனி வழியில்னு ஆரம்பிச்சாப்ல.....நல்ல வேளை அனிதா அணைச்சபடி சனத்த காப்பாத்தி
சைலண்ட்டா உள்ள கூட்டிட்டு போயிடுச்சு.
அடுத்து ஷிவானிய
எல்லாரும் “நீயெல்லாம் 99வது நாள் வரை உள்ள வலம் வரப்போற ஆளு. அதுக்கு ஆட்டமா தேரோட்டமான்னு
தினம் 5 தடவை நீ ஆடுனாலே போதுமானது. இது உனக்கு வேணுமான்னு யோசிச்சுப்பாரு கொஞ்சமாவது”ன்னு
கொஞ்சுனானுங்க. அந்த கான்ஃபிடன்ஸ் அந்தப் பொண்ணுக்கே இருந்துச்சு. “என் இன்ஸ்டா பாலோயர்ஸ்லாம்
எக்குத்தப்பா ஓட்டப் போட்டு என்னய MLA வாவே ஆக்குவானுங்க....ஜுஜுபி பிக்பாஸுல காப்பாத்த
மாட்டானுங்களா என்ன ? தொலைங்க தொல்லைகளா”ன்னு சொல்லிட்டு ஓடிடுச்சு.
அடுத்து சம்மு.......சுரேஷ்
அத வெளிய போகனும்னு சொல்லி ஆரம்பிக்க சம்முவும் அம்மா கதையெல்லாம் சொல்லி நிமிர்ந்து
பாத்தா “உன்னய போகச்சொல்லி அரை மணி நேரமாச்சு”ன்னு எல்லாரும் குனிஞ்சு பாத்தானுங்க....சோ
சம்முவும் அவுட்டு
இப்ப ரேகா மேம
சுரேஷ், கேபி, ஆஜீத் 3 பேரும் “அவங்க நெறைய பாத்துட்டாங்க சோ அவங்களுக்கு வெளிய போனாலும்
பரவாயில்ல”ன்னு சொல்ல.......இந்த நிமிஷத்துல தான் ரம்யா என்ட்ரி.....! “இந்தம்மா வந்த
நாளுல இருந்து வெளிய போறதப் பத்திதான் பேசுது...அதனால இத வெளியவே அனுப்பிடலாம்”னு கூரா
சொன்னாங்க. ரேகா அவுட்டு !
கேபிய பேச விடாம
சுரேஷ் மறிச்சுட்டே இருந்ததும் “யோவ் எனக்கும் சேத்து நீ பேசுவியா ? இரு”ன்னு சொல்லிட்டு,
“எனக்கு டைட்டிலு, டைட்டன் வாச்செல்லாம் முக்கியமில்ல...ஜெயிச்சா
கிடைக்கப்போற பணம் எனக்கு முக்கியம்”னு தெளிவா சொல்லுச்சு. ஆனாலும் வெளிய அனுப்பிட்டானுங்க.
வெளிய வந்த
கேபி.....என்னடா விளையாட்டு இது ? சின்னப் புள்ளத்தனமா?”ன்னு கேட்டுச்சு. ஒரு சின்னப்
புள்ளையே இத சின்னப் புள்ளத்தனமான விளையாட்டுன்னு சொன்னா அப்ப இது எவ்வளவு சின்னஞ்சிறுப்
புள்ளைத்தனமான விளையாட்டா இருக்கனும்?...யோசிய்யா யோவ் பிக்பாஸு.
உள்ள ஆஜீத்த
சுரேஷ் சொன்னதும்தான் ஆஜீத் சட்டுன்னு “ஆமா நீ ஏதும் ஸ்டார்டஜி பண்றியா?”ன்னு கேக்க
“அடப்பாவிகளா, இதையே இப்பத்தான் கண்டு பிடிக்கிறீங்களா?”ன்னு நெனச்சு வில்லத்தனமா வெறப்பா
சிரிச்சாப்ல சகுனி. ரம்யா கபால்னு பிடிச்சுச்சு “அதான லிஸ்டுல பேரே இல்லாத நீ எதுக்கு
இந்த ஃப்ரீ பாசுக்கு அலையுற ? யார கேட்டு ஆர்டர் படி ஆள அனுப்பனும்னு சொல்ற ? அதென்ன
நீ மட்டும் இங்க நாட்டாமைத்தனம் பண்ணிட்டு திரியுற ?”ன்னு 12ம் வகுப்பு தமிழ் -2 கொஸ்டீன் பேப்பர் மாதிரி கேள்விகள அடுக்க....சகுனிக்கு
சகட்டுமேனிக்கு வேர்த்துடுச்சு. “ரைட்டு... நீ ஆஜீத்த நாமினேட் பண்றியா ? நான் உன்னய
நாமினேட் பண்றேன். ஆஜீத்தும் உன்னய கைகாட்டிட்டான்னா உனக்கு டாட்டா காட்டிடலாம்”னு
சொல்லிட்டு “நீ இப்ப எங்கள கன்வின்ஸ் பண்ணு”ன்னு ரம்யா சொன்னதும். சுரேஷ் இங்க வாயத்தொறக்க....
வெளிய பிக்பாஸ்
டீவியத் தொறந்தாப்ல. உள்ள பேசுற எல்லாம் வெளிய லைவா ஓடுச்சு. அங்க சுரேஷ் “நான் பேசிக்கலி
பிசிக்கலி வீக்கு. அதுனால நான் டாஸ்க்குல தல்ளிடும் நாக்கு. நாமினேஷன் வந்தாலும் என்னய
வாண்டடா தூக்கிருவானுங்க. ஆல்ரெடி ரியோ நேத்து
முகமூடி விஷயத்துல என் முகத்துக்கு சேதாரம் உண்டு பன்ணியிருப்பான். அனிதாலாம் நடிக்குது,
நிஷா ஜோக்குங்குற பேருல கடிக்குது, வேல் முருகன் என் வேட்டிய பாத்துட்டு நின்னானேன்னு
அவனுக்கு வேட்டிய குடுத்தா நானா கேக்கல அவரா குடுத்தாருன்னு குட்டிக்கரணம் அடிக்கிறான்.
நார்த்துல நெப்போடிஸம் இருக்குற மாதிரி இங்க குரூப்பிஸம் இருக்கு”ன்னு கேசுவலா பேச
வெளிய எல்லாரும் கோவத்த கை நரம்பு வழியா கழுத்துக்கு ஏத்தி கண்ணுல கொண்டாந்து நிப்பாட்டிட்டு
இருந்தானுங்க.
அப்பவே ரியோ
எல்லாரையும் கூப்ட்டு “விளையாட்டத் தாண்டி பர்சனலா இங்க குரூப்பு இருக்கத்தான் செய்யும்
ஆனா அது விளையாட்ட பாதிக்கக் கூடாது”ன்னு விளக்கிட்டு....”வரட்டும் வெளிய வெளக்கு வப்போம்”னு
சொல்லிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தானுங்க.
உள்ள ரம்யா
“ஆனா டேய் டபரா நீ பெரிய ஆளுடி....கொஞ்சம் சுதாரிக்கலேன்னா நீ ஃப்ரீ பாஸ தூக்கிட்டு
ஓடியிருப்ப”ன்னு சொல்ல பிக்பாஸ் சுரேஷ அவுட்டுன்னார். அப்றந்தான் சுரேஷ் “சூப்பர் என்
ஸ்டார்டஜிய கண்டுபிடிச்சுட்டீங்க......செம்ம. நான் எப்பவும் மனிதன் பட க்ளைமாக்ஸ் ரஜினி
மாதிரி எம்மேல வீசுற குண்ட பிடிச்சு அவங்க மேலயே வீசுவேன்”னு சொல்ல, ”அதயேத்தான் நானும்
பண்ணேன்....உன் குண்ட உன் மேலயே கிடாசிட்டேன்....வெளிய போடா.....கர்மா இஸ் எ பூமராங்க்குடா
பாப்பாய் தலையா”ன்னு சொல்லிடுச்சு.
இத வெளிய இருந்து
பாத்த எல்லாரும் சாட்சாத் அந்த வைஜெயந்தி ஐ பி எஸ்ஸே மறுபடி அவதாரம் எடுத்து வந்தத
ஸ்க்ரீன்ல பாத்த மாதிரி கைதட்டி, விசிலடிச்சானுங்க. சகுனிய “வாடி பார்த்தசாரதி”ன்னு
கமான் கமான்னு சொல்லி ஆர்வமா எதிர்பாத்துட்டு இருந்தானுங்க மத்தவனுங்க. வெளிய வந்து
சுரேஷு கேமராகிட்ட “நான் விளையாண்டது ஒரு நேர்மையான தந்திர விளையாட்டு.....இட் வாஸ்
எ நைஸ் கேம்”னு முதல்வன் ரகுவரன் மாதிரி பல்லக்காட்டி சொல்லிட்டு உள்ள வந்தா எழவக்
கூட்ட ஆரம்பிச்சானுங்க. “டர்ட்டி கேம் விளையாண்டுட்டீங்க”ன்னு பில்டரு ஃபீல் பண்ணி
சொல்ல, ரியோ நல்லா கோர்வையா, பாயிண்ட் எடுத்து ஆரம்பிக்க பேலன்ஸ் பிசாசுங்க எல்லாம்
கத்தி, கூப்பாடு போட்டு கலைச்சு விட்டானுங்க. ரியோ “சொல்ல சொல்ல எவனும் காதுகுடுத்து
கேக்காம குறுக்க பூந்து பேசி இப்ப அவன் எஸ்கேப் ஆகிட்டான்”னு வருத்தப்பட.....
“எல்லாம் முடிஞ்சுபோச்சு
இனி எதும் பேசக்கூடாது”ன்னு சுரேஷ் சொல்ல.....உள்ள புகுந்த சனம் “இனிதான் ஆட்டம் ஆரம்பம்......
இனிதான் ஆட்டம் ஆரம்பம்”னு இன்ட்ரவெல் பிளாக் மாதிரி வீட்டுல உள்ள எல்லா மூலையிலையும்
நின்னு கத்திட்டு இருந்துச்சு. அனிதாவும் சேந்துகிட்டு “கமல் சார் பேசிமுடிச்சுட்டாரு
அதனால நான் டொக்காகி அடங்கிப்போயிட்டேன்னு நெனச்சியா? அனிதாடா....அன்னப்போஸ்டு அனிதா.....!
கேப் விடாம நியூஸ் வாசிக்கிறேன் கேக்குறியா.....கேக்குறியா?”ன்னு ஹாக்கி பேட் மீசையில்லாத
துரைசிங்கமா மாறி உறுமிகிட்டு இருந்துச்சு.
உள்ள ஆஜீத்தா
– ரம்யாவான்னு போட்டி போக, ஆஜீத்தப் பாத்து ரம்யா “நான் உனக்கு விட்டுக்குடுக்கல ஆனா
நான் கன்வீன்ஸ் ஆகுறேன். உனக்கு இது தேவைன்னு எனக்குப் புரியுது”ன்னு பாசிட்டிவ் பிலாசபி
பேசிட்டு அவனுக்கு ஓகேன்னு சொல்லுச்சு. பிக்பாஸனோ “யாருக்கு பாஸுன்னு அப்பறமா சொல்றேன்
ஆனா நடந்தத வெளிய சொல்லாத”ன்னு சொல்லி அனுப்பிட்டாப்ல.
வெளிய இப்ப
வேல்முருகன் வேட்டி விஷயத்த கைல எடுத்துக்கிட்டு “ஒரு வேட்டியக் குடுத்துட்டு இப்பிடி
சொல்லிக்காட்டி கட்டக் குடுத்த வேட்டிய கழட்டிவிட்டாப்ல அசிங்கப்படுத்துறியே?”ன்னு
ஹை பிட்ச்சுல கத்த....அத கேட்டுக்கிட்டே பருத்திவீரன் பிரியாமணி மாதிரி தட்டுல சோத்தப்
போட்டு பொளந்துட்டு இருந்தாப்ல சகுனி சுரேஷு. எல்லாரும் போனதும் கேமராவப்பாத்து “பத்த
வச்சுட்டியே பரட்ட...நன்றி”ன்னு சொன்னாப்ல. ஆரியும், சோமுவும் “சார் ஸ்டார்டஜில பிண்றீங்க....செம்மயா
பண்றீங்க”ன்னு பாராட்டிட்டு இருந்தானுங்க. செட்டு சேருவானுங்க போல...
அப்றம் எவிக்ஸன்
ஃப்ரீ பாஸோட அருமை பெருமைகள ரியோ சொன்னாப்ல. “ஆஜீத்துக்குதான் இது. இத ஒரு தடவைதான்
யூஸ் பண்ணனும், 10வது வாரம் வரைதான் செல்லும், அவனுக்காகவும், அவனுக்கு பிடிச்சவங்க,
பிடிக்காதவங்களுக்காகவும் யூஸ் பண்ணிக்கலாம், முக்கியமா இது யார் கைல இருக்கோ அவங்கதான்
யூஸ் பண்ண முடியும்....கை மாறுனா அவ்வளவுதான்”னு ரியோ வாசிச்சதும்....உடனே சனம் “இன்னேரம்
டபராத் தலையன் டகால்டி பிளான போட்டிருப்பானே?”னு பல பேருக்கும் முன்னால பஞ்ச் போட்டுச்சு.........நகத்தக்
கடிச்சுக்கிட்டே அன்னப்போஸ்டு “ஆமா கைமாத்துறதுன்னா திருடுறதா?”ன்னு ஏன் கேட்டுச்சுன்னு
அது திருட முயற்சிக்கிறப்பதான் நமக்குத் தெரியும். மத்தது நாளைக்குத் தெரியும்.
Comments
Post a Comment