பிக்பாஸ் – 4 : நாள் - 5 (09.10.20)


4ம் நாள் தொடர்ச்சி

பிசிபேலாபாத் பஞ்சாயத்து கன்டினியூ ஆச்சு. அதாவது எப்பவுமே ஒரு 2 பேரு வாக்குவாதமோ, சண்டையோ போட்டுக்கிட்டா அதுல அட்லீஸ்ட் ஒருத்தராவது கூறோட இருக்கனும். ரெண்டும் ஜோக்கரா இருந்தா என்ன பண்றது? காது கேக்காத ரெண்டு பேரு கம்பராமாயணத்த பத்தி பேசிக்கிற மாதிரி இருந்துச்சு.

சனம் : நாந்தான் பிசிபேலாபாத் செய்யுறேன்னு சொன்னேன்ல. அப்பறம் ஏன் நீங்க அரிசி எவ்வளவு போடனும்னு கேட்டீங்க ?

ரேகா மேம் : சுரேஷ்தான் கேக்க சொன்னாரு...

சனம் : சுரேஷ் கிட்ட நீங்க ஏன் நான் செய்யப் போறேன்னு சொல்லல ?

ரேகா மேம் : நீதானா செய்யுறேன்னு சொன்ன. அப்றம் எப்பிடி நான் செய்யப்போறேன்னு சொல்றது ?

சனம் : ஏங்க நான்னா நாந்தாங்க.....சனம்

ரேகா மேம் : ஹாய்....நான் ரேகா...சினிமா நடிகை...

சனம் : நாசமாப்போச்சு........//

ரேகா மேம் சட்டுன்னு “யம்மா உன் காலுல விழுந்து கேக்குறேன் சாரி....இனிமே இந்த வீட்ல பிசிபேலாபாத் மட்டுமில்ல அலகாபாத், அவுரங்காபாத், சன்பாத், மூன்பாத் கூட நீ மட்டுந்தான் பண்ணனும்னு பிக்பாஸ் கிட்ட எழுதி வாங்கிட்டு வந்துடுறேன்”னு சொல்லிட்டு ஓடிட்டாங்க. இதப்பத்தி அன்னப்போஸ்டு அனிதா சைடா வந்து சனம் கிட்ட பேச “அனிதா அன்வான்ட்டடா உள்ள வராதீங்க”ன்னு கண்டிஷனா சொல்லிட்டாங்க.

பஞ்சாயத்த கேப்டன் கிட்ட எடுத்துட்டு போனாங்க. சுரேஷ் கிட்ட என்ன நடந்துச்சுன்னு கேட்டுட்டு இருக்கும்போதுதான் ரம்யாக்கு திடீர்னு நியாபகம் வந்து “ஆமா நீதான கக்கூஸ் கழுவுறது லட்சியம்....கறை இல்லாம கழுவுறது நிச்சயம்னு சொல்லி வாலண்டரி ரிட்டையர்மென்ட் வாங்கிட்டு கக்கூஸ் கிளீனிங்க்கு போனது. உப்பு போட்டு சாப்டுறவன், உளுந்து போட்டு ஆட்டுறவன்னு பஞ்ச் எல்லாம் பேசிட்டு மறுபடியும் எதுக்கு இங்க வந்த?”ன்னு கேக்க, “நான் உப்பு போடலயே கத்திரிக்காய்தான் போட்டேன். அதுவும் ரேகா மேம் கூப்ட்டதாலதான்”னு பால மாத்தி போட, ரேகா மேமோ “கைவேலை எதுவுமில்லாம இருந்தாரு, அதான் கத்திரிக்காய வெட்ட சொன்னேன்”னு சொல்ல தற்காலிக தலைமை நீதிபதி மாதிரி பில்டர் பாலாஜி வாதங்களை கேட்டுட்டு இருந்தான். இந்த சனம் இருக்கே சனம் அதுவும் அது பிரச்சனைய கோர்வையா சொல்ல மாட்டேங்குது, அந்தம்மாவையும் பேச விடமாட்டேங்குது, தீர்ப்பு சொல்றவனுங்களையும் திருப்பி விட்டுடுது. “எனக்கு தலையே சுத்துது”ன்னு சொன்ன சனத்துகிட்ட “அப்ப லெமன் ஜூஸ் குடி”ன்னு கவுண்டர் அடிச்சதும், “இவன் நம்மள நக்கல் பண்றானா?”ன்னு அது நெனைக்குறதுக்குள்ள “இல்ல நான் சீரியஸா சொல்றேன்”னு சர்காசம் பண்ணத சமாளிச்சாப்ல. ஆனா இந்தாளு பிகேவியரெல்லாம் பிக்காளித்தனமாத்தான் இருக்கு. இதுல பிக்பாஸு டப்பாஸுன்னு கவிதை வேற....

சுரேஷ், கேப்டன் கிட்ட “நீ வேணும்னா பாரு பொறைக்கு அடிச்சுக்குற பொமேரியன்ஸ் மாதிரி இவனுங்களுக்குள்ள எப்பிடி சட்டையக் கிழிச்சுட்டு சுத்தப்போறானுங்கன்னு. அதுலயும் அங்க இருக்குற இன்னொரு இன்னோவா கார் இன்னும் செல்ப் எடுக்கல எடுத்தா அப்றம் இருக்குடி”ன்னு அன்னப்போஸ்ட் அனிதாவ இன் டைரக்டா இடிச்சுக்காட்டி சாபம் வுட்டார். “டேய்...சண்டை நடக்கும்னு சொல்றியா இல்ல நடக்கனும்னு ஆசப்படுறியா? இருக்கட்டும்.... ஆனா  பொம்பளப் புள்ளைங்க பொழங்குற இடத்துல நீ ஒழுக்கமா கால ஒடுக்கிப் படு”ன்ற மாதிரி ரம்யா பாத்துட்டு போயிருச்சு.

இந்த கலவரத்துல பாவம் ரியோ அவரு உள்ளாடைய தொவைக்க வெளிய எடுக்குறதுக்கு சிரமப்பட்டாப்ல. அந்த அளவு உள்ளாடையத்தான் ஷிவானியெல்லாம் வெளி ஆடையாவே போட்டுட்டு சுத்துது....ஒரு ஆணாகப்பட்டவனுக்குத்தான் எவ்வளவு கஷ்டங்கள்.....!

லைட் ஆஃப் பண்ண நேரத்துல ஷிவானி மட்டும் தனியா வெளிய வந்துச்சு....”சுருட்டை முடியோட ஒரு சிக்ஸ் பேக் பையன் ஒரு 2 நாளு ராப்பகலா வாக்கிங் வந்தான்....அது பொறுக்காம அவன கட்டிங், க்ளீனிங்னு பிசியாவே வச்சிருக்கானுங்க....பாவம் இப்ப அவன் என்ன பண்ணிட்டு இருக்கானோ”ன்னு திரும்பிப் பாத்தா காலண்டர்ல இருக்குற முருகர் போட்டோ மாதிரி இந்தப்பக்கம் கேபி, அந்தப்பக்கம் சனம் நடுவுல பில்டரு உக்காந்து காட்சியளிச்சுட்டு இருந்தான். பகல் பூராம் விட்டுட்டு ராத்திரியில ரயில் ஓட்டிட்டு இருக்கான் பில்டரு...அதுவும் லேடீஸ் கம்பார்ட்மென்ட்.

சோபால படுத்திருந்த சுரேஷுக்கு ஏதோ பிசியோதெரபி பிரச்சனை போல....ஜித்தன் காலமுக்கி விட்டுட்டு இருந்தாப்ல. பிக்பாஸ் ரியோவ கூப்ட்டு “சுரேஷுக்கு பிரச்சனை. டாக்டர் அட்வைஸ்படி அவன் பெட்டுலதான் தூங்கனும்....நீ என்ன பண்ற எதாச்சும் ஒரு பொம்பளப் பிள்ளைய வெளிய கிடாசிட்டு இவன பெட்ல போடு”ன்னு சொல்லி அனுப்ப. “இந்த நேரத்துல இதுங்ககிட்ட நான் போயி பேசுறது நடக்குற காரியமா?”ன்னு நெனச்ச ரியோ வெளிய வந்து சுரேஷ் கிட்ட “இந்தா உள்ள போயி யாரயாச்சும் எழுப்பி விட்டுட்டு அந்த பெட்டுல போயி படுத்துக்கோ”ன்னு மேட்டர மாத்திவிட்டு எஸ்கேப் ஆனான். சுரேஷ் முடியாதுன்னு மறுக்க நிஷா வந்து “வாங்க என் பெட்டுல படுங்க”ன்னு சொல்ல “நீ கால பப்பரப்பான்னு போட்டு தூங்குவ”ன்னு சுரேஷ் சொன்னதுதான் கொரொனா எஃபெக்ட். அப்றம் நிஷா பெட்ல ஷெட்டில் ஆனாப்ல சுரேஷ்.....

5ம் நாள்

சிறுக்கி சீனிக்கட்டி பாட்டு அலாரம்....5ம் நாளே இவனுங்க ஆடுறத கொறச்சுட்டானுங்க. இன்னைக்குதான் தெரிஞ்சது சனம் ஆடுறது டான்ஸ் இல்ல டான்ஸ் மாதிரின்னு........கவனிப்போம்.

சோமு வந்தாப்ல கதை சொல்ல....! திக்குவாய், தாழ்வு மனப்பாண்மை, கூச்சசுபாவம் அப்டின்னு ஆரம்பிச்சு “இன்னைக்கு நான் இந்த மேடையில நின்னு திக்காம பேசிட்டு இருக்கேன்னா அதுக்கு நீங்க எல்லாருந்தான் காரணம்”னு சூர்யவம்சம் சின்ராசு மாதிரி பேசிட்டு ஒரு ராப் அடிச்சுட்டு போனான். “ஏண்டா என்னய அனிதா வனிதான்னு சொல்லும்போது திக்கியிருக்கலாமேடா”ன்ற மாதிரி பாத்துச்சு அன்னப்போஸ்டு அனிதா.

அப்றம் என்னடி ராக்காம்மா பாட்ட வேல்முருகன் பாட, சோமு தாளம் போட பெண்கள் எல்லாம் ஆஜித்த வச்சுக்கிட்டு ஆடிகிட்டு இருந்தாங்க.....”அம்மூரு மீனாட்சி பாத்தாலும் அவ கண்ணுக்கு வருத்தமடி”ன்னு பாடும்போது ரேகா மேம் மூஞ்சிய காமிச்சது அக்மார்க் பிக்பாஸ்தனம்.

ரம்யா கதை ! பாம்பு கடி, பாபா மர்கயா, குடும்ப சூழல், பட வாய்ப்பு, போட்டோ ஷூட் மேஜிக், ஆபார்ச்சூனிட்டி அருமைன்னு அருமையா சொல்லிட்டு இறங்கிடுச்சு.

ஆரி எல்லாரையும் உக்கார வச்சு “உணவ வீணாக்குறத நிப்பாட்டுங்கடா வீணாப்போனவானுங்களா”ன்னு லெக்ச்சர் அடிச்சிட்டு இருந்தார். அன்றாடம் ஒரு மணி நேரமாவது சமூக அறிவியல் வகுப்பெடுக்கலேன்னா வயிற்றுப்போக்கு போயிடும் போல ஆரிக்கு.

ஆஜீத் கதை ! அவனே அம்புலிமாமா கதைகள் படிக்கிற வயசுலதான் இருக்கான். இவனுங்க அவன் கதைய கேக்குறானுங்க. ஆனா சென்னையில வந்து வீட்டுக்கு அலஞ்சேன்னு ஆஜித் சொன்னான்....அப்ப அவனுக்கு சூப்பர் சிங்கர்ல குடுத்த 60 லட்ச ரூபா வீடு என்னாச்சு ? சாவி மட்டுந்தான் குடுத்தானுங்களா ? வாட் இஸ் திச் டா விஜய் டீவி ?

பில்டரு கதை ! எதுக்கும் ஆகும்னு போட்டுட்டு வந்த அவனோட துப்பட்டாவுக்கு நல்ல யூஸ் இருந்தது......அவ்வளவு அழுகை ! அப்பா அம்மா பிரச்சனை கொண்ட முகேன் ராவோட அடுத்த வெர்ஷன்......வேண்டா வெறுப்புக்கு பிள்ளையப் பெத்து காண்டாமிருகம்னு பேரு வைக்குற பொறுப்பற்ற பெற்றோர்களை பாத்து அசிங்கமா கேட்டுட்டு கீழ இறங்கிட்டான்.....ஷிவானியத் தவிர எல்லாரும் வந்து கட்டிப்பிடிக்க.....யெஸ் ஷிவானி பார்வை வேற எதோ ப்ளான் சொல்லுது. ஷிவானி ஷோல்டருல வேற காயம் பட்டு இருக்கு போல ரவுண்டு பேன்ட் ஏய்ட் ஒட்டி இருக்கு.....பிள்ளைய பத்திரமா பாத்துக்கோங்கடா பக்கிகளா.

சரி....பாக்கி 4 பேர செலெக்ட் பண்ணுங்கன்னு சொன்னதும்.....கூடிப்பேசி ஷிவானி, சுரேஷ், ஆஜித், ரம்யான்னு முடிவு சொன்னானுங்க. சோ தேறாத இந்த 8ல இருந்து 2 பேர நாமினேட் பண்ணலாம்.

“நான் நாமினேஷன் வந்தது பிரச்சனையில்ல....ஆனா ஆஜீத்த செலெக்ட் பன்ணியிருக்கக்கூடாது” ன்னு சம்முகிட்ட சுரேஷ் சகுனித்தனம் பண்ணவும் சம்மு “அது உங்க முடிவு கிடையாது...எங்க முடிவு சோ வாய மூடி பேசவும்”னு சொல்லிடுச்சு.

“ஆஜீத்த அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்வதே சமுதாய மாற்றம் தரும் அதுனால அவன புஷ் பண்ற வேலைய பாக்கனும்”னு ஆரி சுரேஷ் கிட்ட சபதம் எடுத்துட்டு இருந்தாப்ல.

லான்ல வேல்முருகன் அம்மா பாட்டுப் பாடி அன்னப்போஸ்டு அனிதாவ அழுக வச்சுட்டாப்ல. ஏண்டா ராத்திரி பாடுற பாட்டாடா இது ? எப்டியோ நாள் முடிஞ்சது.....புரட்டாசி சனி இன்னைக்கு ராமானுஜ தாசன் ரங்கராஜன் நம்பி வந்து நமோ நாராயணாய சொல்லுவார்.


 

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)