பிக்பாஸ் – 4 : நாள் - 18 (22.10.20)
18 வது நாள்
“டண்டனக்கா”
பாட்டு அலாரம். காலையில பாட்டுக்கு கண்ணாடி போட்டு ஆடுற வியாதி இருக்கு போல ரம்யாக்கு.
வ.வா.ச (வருத்தப்படாத வாலிபிகள் சங்கம்) உறுப்பினர்கள் சம்மு, ரம்மு, ஷிவ்வு மூணும்
மூவ்மெண்டுகள ஒரே மாதிரி போட்டு அம்சமா ஆடுச்சுங்க. அன்னப்போஸ்டு அது பாட்டுக்கு ஆடிட்டு
இருந்துச்சு . மத்தபடி பாயிண்டுக்கு பங்கம் வரக்கூடாதுன்னு மத்த ஆளுங்க பைய பைய ஆடிட்டு
இருந்தானுங்க.
நம்ம ஆங்கர்
அர்ச்சனாக்குள்ள எப்பவுமே ஒரு ஆறாங்கிளாஸ் அஞ்சலி டீச்சர் அல்லாடிக்கிட்டே இருக்காங்க.
“ஆ ஊ”ன்னா அவங்க வெளிய வந்து வகுப்பெடுக்க ஆரம்பிச்சுடுறாங்க. கிச்சன்ல பாலா, அர்ச்சனா,
சகுனி 3 பேரும் இருந்தாங்க. அரச்சனா பாலாவையும், சகுனியையும் சேத்து வைக்குற முயற்சியில
இறங்க...சகுனிகிட்ட “என்ன இதெல்லாம் ? போங்க போயி பாலாவ கட்டிப்பிடிச்சு, கை குடுத்து
இனிமே க்ளாஸ்ல ரெண்டு பேரும் சண்டை போடமாட்டோம்னு சொல்லிட்டு போங்க”ன்னு சொல்ல அதுக்கு
சகுனி “டீச்சர்....கோவம் இருந்தாலோ, தப்பு பண்ணியிருந்தாலோ நானா தானா போயி மன்னிப்பு
கேப்பேன் ஆனா அன்பால வர கோவம் இது...சரியாக நாளாகும், நீங்க ஹோம் ஒர்க்க செக் பண்ணுங்க”ன்னு
போயிட்டாப்ல. பில்டரும் பிடிகுடுக்கல.
உள்ள சகுனி
சம்முகிட்ட
சகுனி : சம்மு,
நேத்து சனத்த ரெண்டு தட்டு தட்டுனதுக்கு தட்டு, முட்டு சாமான் வரைக்கும் சாரி கேட்டுட்டேன்
சரி....ஆனா சனம் என்னய வாடா, போடான்னு வகை தொகையில்லாமா வண்டை வண்டையா திட்டுச்சே யாராச்சும்
கேட்டீங்களா?
சம்மு : ஆங்....எல்லாருந்தான்
கேட்டோம். அதான் நல்லா சத்தமா கத்துச்சே
சகுனி : (MV
: இது ஒரு இம்சை.....!) சம்மு, என்னய அது அப்பிடி
பேசுனது சரியான்னு கேட்டேன்
சம்மு : சரியாத்தான்
இருந்துச்சு.....”எனக்கி மனசே இருக்கே”ன்னு சொன்னப்போ மட்டும் கொஞ்சம் உச்சரிப்பு உசிதமா
இல்ல மத்தபடி சரியாத்தான் இருந்துச்சு
சகுனி : (
MV : அடுத்த டாஸ்க்குல உன்னயத்தான் டார்கெட் பண்ணனும்.) உங்க சங்கத்து ஆளுங்க கூப்டுறாங்க
நீ போம்மா...//
பட்டிமன்றம்
டாஸ்க்காம்.
தலைப்பு : இந்த
பிக்பாஸ் குடும்பம் ஆனந்தக் குடும்பமா ? போட்டிக் களமா ?
அணி பிரிஞ்சு
பேசனுமாம். அர்ச்சனா நடுவராம்.
இதே மொள்ளமாரித்தனத்ததான்
போன சீசன்லயும் செஞ்சானுங்க. கஸ்தூரிய ஒரு கண்டெஸ்டன்ட் மாதிரி நடத்தாம கவுரவ தோற்றம்
மாதிரி எல்லாரையும் ஜட்ஜ் பண்றது, சோத்துல உப்பு இருக்கான்னு பாக்குறதுன்னு பண்ண சொல்லி
அவங்கள கேம் மோடுக்கே வர விடாம கெடுத்தானுங்க. கடைசில அவங்க பஞ்சர் ஆனது வேற விஷயம்,
இப்போ அர்ச்சனாவையும் அப்டித்தான் டீல் பண்றானுங்க. அவங்களும் ஆல்டைம் ஆறாங்கிளாஸ்
அஞ்சலி டீச்சர் மாதிரி பிகேவ் பன்ணிட்டு இருக்காங்க.
அன்பான குடும்பம்
– நிஷா, ஜித்து, ரியோ, சனம், வேல்ஸ், சோமு, ஷிவானி, சம்மு
போட்டிக் களம்
– பில்டரு, கேபி, சகுனி, அன்னப்போஸ்டு, ஆஜீத், ரம்யா,ஆரி
சோமு - “பாசங்கள் நேசங்கள் இல்லையெனில் இந்தப் பாரினை
அழித்திடுவோம்னு அன்றே ஆம்பள படத்தில் சொன்னார் இளைய பாரதி ஹிப் ஹாப் தமிழா”ன்னு அடிச்சு
விட்டுட்டு. “இது அன்பால் ஆன வீடு....அன்னப்போஸ்டு மட்டும் கேடு”ன்னு சொல்லிட்டு போயிட்டான்
பில்டரு – “அன்பும்
இல்ல அஞ்சு காசும் இல்ல பொய் சொல்றானுங்க எல்லாரும். அப்பிடி இருக்குறவனுங்க நாமினேஷன்ல
நான் போறேன்னு நிக்க வேண்டியதுதான, தாத்தா தாத்தான்னு சொல்லிட்டு சனம் வாடா போடான்னு
அவரு மானம் மரியாதைய வாங்குது. கேமரா இருக்குன்னு ஆஜீத் பாஸ விட்டு வச்சிருக்கீங்க
இல்லேன்னா இன்னேரம் அது இருவது பேர் கை மாரியிருக்கும். அதனால இது போட்டிக் களந்தாண்டா
புண்ணாக்குகளா”ன்னு போயிட்டான்
வேல்ஸு : தமிழ்
வணக்கம் சொல்லி பாட்டுப்பாடி முடிச்சதுமே கை தட்டி வேல்ஸ இறக்கி விட்டுட்டானுங்க.
சகுனி : என்னமோ
பேச வந்துட்டு....என்னென்னமோ பேசிட்டு....எதுக்கு இங்க வந்தோம்ன்ற மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு
முடிவுரை சொல்லிட்டு போயிட்டார்.
சம்மு : “தாத்தா
தூக்கிய பேத்தி சீன பாத்துமாடா இத போட்டின்னு சொல்றீங்க ? வெளிய பெய்யுறது மழை இல்லடா
அன்பு”ன்னு சொல்லிட்டு போனாங்க.
பிரேக்ல அன்னப்போஸ்டு
ரம்யாகிட்ட பாயின்ட் ரிகர்சால் பண்ண, ரம்யா “ ஆஜீத்துக்கு நான் விட்டுக் குடுத்தேன்னு
என்னயும் அவனையும் வீக் ஆக்கப் பாக்குறானுங்க. அதையும் உன் பேச்சுல சேத்துக்கிட்டு
கொஞ்சம் க்ளியர் பண்ணிவிடு”ன்னு சொல்ல...சரி சரின்னு மண்டையாட்டிட்டு போச்சு அன்னப்போஸ்டு.
அனிதா – “என்ன
வேல்ஸு அன்பு சொம்புன்ற, எல்லாரும் உன் பேர சொன்னா மட்டும் முன்னாடி வந்து அழுகுற என்னயா இது ?” அப்டின்னு ஆரம்பிச்சு
வழக்கம்போல வண்டிய ஓட்ட ஆரம்பிச்சுச்சு !@#$$%%^^&&**(())(*&&^%%$$#@!!@#$$%^&******.
இடையில இடையில அதோட டார்கெட்டான சகுனியையும் விட்டு வைக்கல. அப்பறம் ஒரு மனசா முடிவுக்கு
வந்து “அதனால்தான் சொல்கிறேன் இது போட்டி நிறைந்த
போர்க்களம்”னு முடிச்சுச்சு. என்னடா பேசிப் பேசியே பெருசாகிடுச்சோன்னு நெனைக்கும் போதுதான்
நிஷாகிட்ட ஹை ஹீல்ஸ ஓசி வாங்கிட்டு வந்து உயரமா நின்னது தெரிஞ்சுச்சு.
ஜித்து பாய்
: என்னமோ பேசுனாப்ல....ஆனா அது சரியா கன்வே ஆகல. பில்டர மட்டும் “பெரியவங்களுக்கு மரியாதை
இல்லேன்னு சொல்லி நீயே நேத்து பெருசப் பாத்து மூளையில்லையா உனக்குன்னு சொன்னது பாசத்துனால
இல்லையா?”ன்னு பளார்னு ஒரு கேள்வி கேட்டுட்டு இறங்குனாப்ல.
ரியோ – “எங்கடா
இல்ல அன்பு ? இத்தோ இருக்குடா அன்பு.....அத்தோ அங்க இருக்குடா அன்பு.....சுபரிபரிப......கண்ணை
மூடி காணுங்கள் அன்பை......கையை நீட்டிக் கேளுங்கள் அன்பை...... சுபரிபரிப......அபரிபரிப....”ந்னு
ஆல்வின் பாஸ்டர் மாதிரி சொல்லிட்டு “அம்மா, சக்கரை டப்பா, 2 ரூபா” கதைய சொல்லிட்டு
இறங்கிட்டாப்ல.
நிஷா – அவங்க
ஆல்ரெடி ஒரு பட்டிமன்ற பேச்சாளர்தான் சோ அவங்க கிரவுண்டு. அடிச்சதெல்லாம் சிக்ஸு.....எடுத்தது
செஞ்சுரி.
“தீர்ப்பு சொல்றேன்”னு
திமிரா பேச ஆரம்பிச்சு பில்டர வார ஆரம்பிச்ச அரச்சனாவ பில்டரு எச்சரிக்க....அத கண்டுக்காம,
“அன்பும், போட்டியும் நிறைந்ததுதான் இந்த வீடு”ன்னு அம்பைரிங் பண்ணி முடிச்சாங்க.
“இனிமே அட்லீஸ்ட்
ஒரு 10 நிமிஷமாவது டைனிங் டேபிள்ல எல்லாரும் ஒன்ணா உக்காருவோம்”னு ரியோ சொல்லியிருப்பான்
போல....ரம்யா, ஷிவானி, அஜீத் 3 பேரும் கிச்சன்ல நிக்க ரியோக்கு கோவம் வந்து கத்த, “டேய்
சாப்ட்டு தட்டக் கழுவ வேணாமா ? தட்டக் காய வைக்கக் கூடாதுன்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க...உங்க
அம்மா சொல்லி குடுக்கலையா?”ன்னு ரம்யா பதில் குடுக்க, ஷிவானியும் “யோவ், கேக்கனும்னா
எங்கிட்ட கேளு, சபையில சாடை காட்டி பேசாத”ன்னு சொன்னதும் ரியோக்கு ரிவிட் அடிச்ச மாதிரி
இருந்துச்சு. “குரூப்பிஸம் இருக்குன்னு சொல்றானுங்க அத உடைக்கப் பாக்குறேன்”னு சொன்னதும்
ரம்யா, “அது உன் மண்டைக்குள்ளதன் இருக்கு சோ உன் மண்டைய உடச்சுக்கோ”ன்னு சொல்லிடுச்சு.
அப்பறம் “லக்ஸுரி
பாயிண்ட்ல உங்க ஒழுங்கின்மைக்கான பாயிண்ட நீங்களே நேர்மையா குறைச்சு அதுக்கேத்த பொருட்கள
வாங்குங்க”ன்னு சொல்லிட்டாப்ல பிக்கி.
சோ இவனுங்களா
கணக்குப் போட்டு 70 பாயிண்ட கம்மி பண்ணிக்கிட்டு பொருட்கள வாங்குனானுங்க.
அடுத்த டாஸ்க்.
மாத்து கை மாத்து
ரவுண்டா சேரப்
போட்டு எல்லாரும் உக்காந்து வேல்ஸு பாடுற வரைக்கும் டப்பாவ கை மாத்திட்டே இருக்கனும்.
பாட்டு நின்னதும் யார கைல டப்பா இருக்கோ அவன் அவுட்டு. அப்பிடியே யாருக்காச்சும் ஒரு
ஃபன்னி டாஸ்க்க குடுக்கனும்.
ஏதோ பண்ணானுங்க.
இதுல ஆரி கை படமையே அவர அவுட்டுன்னு சொல்லிட்டனுங்க போல....அதே மாதிரி யாரோ பண்ணப்ப
அவர விட்டுட்டானுங்க...அதுல கோவப்பட்டு “அப்ப நான் மட்டுமா ? அப்ப நான் மட்டுமா ? அப்ப
நான் மட்டுமா?”ன்னு கேட்டுட்டே இருந்தாப்ல. கடைசியா சகுனி வின்னு. அவருக்கு ஃபன்னி
டாஸ்க்கா காஞ்சனா வேஷம் போட்டு விட்டாங்க.
சகுனிக்கு “டாஸ்க்கு
டான்”னு பட்டமே குடுக்கலாம். கலக்கிட்டாப்ல. கடைசில அன்னபோஸ்டு சகுனிய கட்டிப் பிடிச்சுக்கிட்டது
இன்னைக்கு நடந்த பட்டிமன்றத்தோட தீர்ப்பு இதான்னு
சொல்றாப்ல இருந்தது.
Comments
Post a Comment