பிக்பாஸ் – 4 : நாள் - 6 (10.10.20)
“உப்பு போட்டு
உப்புமா சாப்டுறவன் எவனும் உள்ள இருக்கமாட்டான்னு சொல்லிட்டு அங்கயே இருந்து பல்லு
குத்திட்டு இருக்கான் ஒருத்தன்......! நேரடியா தேர்ந்தெடுக்காம தேரடியில நின்ன ஆளுக்கு
யானை மாலை போட்டு தேர்ந்தெடுத்த ரேஞ்சுல ஒரு டம்மி டப்பாசு தலைவர். இவனுங்கள பாத்துக்கிட்டு
நாம சும்மா இருக்கலாமா ? அதுக்குதான் உங்களில் நான் உள்ள போறேன் நீங்களும் வாங்க”ன்னு
யாரென்று தெறிகிறதா பாட்டோட தெறி மாசா செட்டுக்குள்ள வந்தார் ஆண்டவர்.
“மொத வாரம்
எவிக்ஷன் இல்லேன்னு சங்கடப்பட்டதா தெரிஞ்சுது....ஆனா நீங்க அவங்களையும், அவங்க அவங்களுக்குள்ளையும்
ஒருத்தர் ஒருத்தர் புரிஞ்சுக்க ஒரு அவகாசம் குடுக்கலாம்னு நெனச்சோம்” அப்டின்னு காலையில
வர கல்யாண மாலை நிகழ்ச்சில சொல்றாப்ல சொல்லிட்டு இருந்தார். இவனுங்களப் புரிஞ்சு நமக்கு
இஞ்சிக்கு கூட ஆகாது....! சரி வெள்ளிக்கிழமை வெவகாரத்தப் பாப்போம்னு சொல்லி காமிச்சார்.
6ம் நாள்
சின்னக்கவுண்டர்
பட செந்தில் ஸ்டைல்ல கும்பலா குப்புற படுத்து கால ஆட்டிட்டு இருந்தானுங்க. சட்டுன்னு
வெறித்தனம் பாட்டு அலாரமா பாட அவசர அவசரமா எந்திருச்சு ஆட ஆரம்பிச்சானுங்க. அனிதாலாம்
அடுத்து வரப் போற லைனுக்கெல்லாம் முன்னாடியே ஸ்டெப்பப் போட்டு வெறித்தனம் பண்ணிட்டு
இருந்துச்சு. ரம்யா “சிவராத்திரி தூக்கம் ஏது” பாட்டோட ஸ்டெப்ப வெறித்தனத்துக்கு போட்டது
என்ன கன்றாவி காம்பினேஷனோ? தெருமுக்குல குழாய் கட்டி பாட்டுப் போட்டா நம்ம வீட்ல இருந்துக்கிட்டே
ஆடுவோம்ல அந்த மாதிரி இந்த குரூர கும்பலோட சேராம சிங்கிளா ஸ்டெப்பு போட்டுட்டு இருந்துச்சு
சாத்தூர் ஷிவானி.
ஆண் தடிமாடுகள்
அவ்வளவா ஆர்வம் காட்டல. சனத்தோட ஆடுறதுக்கு அதுக்கு யாரும் சரியா மாட்டல.
கக்கூஸ்ல சாத்தூர்
ஷிவானி சோப்புப் போட்டு கை கழுவிட்டு இருக்கும் போதே சுரேஷ் “ஆளாளுக்கு ஒரு சோப்ப அப்பப்ப
எடுத்துக்கிறானுங்க...வேஸ்டாப் போகுது”ன்னு புகார் சொல்ல ரியோவோ “சார், எதுக்கெடுத்தாலும்
எகத்தாளம் பேசுனா எடுத்தெறிஞ்சு பேசிடுவானுங்க, வாங்க பேசாம”ன்னு கூட்டிட்டுப் போயிட்டான்.
ஆனா சாத்தூர் ஷிவானியோ “பாவம் இவனுங்களுக்கு எதோ பிரச்சனை போல”ன்ற ரேஞ்சுலயே டீல் பன்ணிட்டு
இருந்துச்சு.
“கழுவாத கையில
சாத்துக்குடி பிழியாத”ன்னு சனம் பில்டர் பாலாவ சொரண்ட அவனோ “இந்தா அழுக்கு, இழுக்குன்னு
எங்கிட்ட வந்தேன்னா ஹல்க் ஆகிடுவேன்”ற மாதிரி பாத்துட்டு....”நான் அப்பிடித்தான் பண்ணுவேன்
வேணாம்னா யாரும் குடிக்காதீங்க”ன்னு சொல்லி வாய மூடுறதுக்குள்ள சம்மு “நான் குடிக்கிறேன்”னு
வாயத் தொறந்துடுச்சு....பாலா நக்கலா சிரிச்சுட்டே “சனம் உன் மிஷன்ல போதிய அளவு இல்ல
கனம்...சோ பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்”னு சொல்லிட்டு ஆர்ம்ஸ மடக்கி ஆரஞ்சு பிழிய ஆரம்பிச்சுட்டான்.
வெளிய நம்ம
சாத்தூரு ஷிவானி, சனம், பாலா, ரம்யா, ஆரி, ஆஜீத் உக்காந்திருந்தப்ப பில்டர் பாலா ஷிவானிகிட்ட
சீன் போட “”மிஸ் இந்தியா, மிஸ் பரங்கிமலையெல்லாம் நடத்தி இருக்கேன்னு சொல்ல...”அப்பிடியா?”ன்னு
ஷிவானி இம்ப்ரெஸ் ஆனதப் பாத்த பில்டரு ஆர்வத்துல “நான் பண்ண பேஜன்லாம் உலகத்தரம், மத்தவங்க
பண்றதல்லாம் மொள்ளமாறித்தனம்”னு சொல்ல....சனம் “ஹலோ நாங்க ஒண்ணும் டுபாக்கூர் டீம்
இல்ல”ன்னு இழுக்க....”ஓ நீயும் அந்த டீமா அப்ப கன்ஃபார்மா டுபாக்கூர்தான்”ற மாதிரி
எதோ சொல்லிவுட்டான். சனம் சினம் தாங்காம எந்திரிச்சுப் போயிடுச்சு.
உள்ள பில்டர்
பாலா சனத்த தனியா கூப்ட்டு “எனக்கு தெரிஞ்சத நான் சொன்னேன் அவ்வளவுதான்...அது என்னோட
ஒப்பீனியன்”னு சொல்ல, “நீ அதுல ஜெயிச்சு வந்த எல்லாரையும் அசிங்கப்படுத்துற, கலந்துகிட்டவங்கள
கலங்கப்படுத்துற”ன்னு கலவரத்த ஆரம்பிச்சுச்சு. “சரி நான் வெளிய வந்து ப்ரூஃப் பண்றேன்”னு
பில்டரு புருவத்தத் தூக்கவும்.....சனம் சைலண்டா ஓடிடுச்சு. பில்டர் பாலா பேசும்போது
மிஷ்கின் பட ஹீரோ மாதிரி கீழ பாத்தே பேசுறான்....மேனரிசம் போல ! ஆனா நமக்கு கண்ணு தெரியாதவன்
கிட்ட பேசுற மாதிரியே இருக்கு.
அப்பறம் புகார்
கடிதம் எழுதனும் கேப்டனோட செயல்பாடுகளப் பத்தி, அவங்க மேல இருக்குற புகார்களப் பத்தி
அதுக்கு ஸ்டார் ரேட்டிங் குடுக்கனுமாம். இத சொன்னப்பறந்தான் ரம்யாக்கு அது கேப்டன்னு
நியாபகமே வந்துச்சு “சரி நம்மளப் பத்திதான் எதோ பேசுறானுங்க”ன்னு புரிஞ்சுகிடுச்சு.
ஆர்வமா எல்லாரும் போயி பேப்பர்ல எழுதி பெட்டில போட்டானுங்க. சுரேஷ் “இதெல்லாம் கிறுக்குக்
கேப்டனு....அனிதாவ கேப்டனாக்குங்க நான் வச்சு செய்யுறேன்”னு வஞ்சகம் செஞ்சுட்டு இருந்தார்.
அப்பறம் லைட்டு ஆஃப். சுரேஷ் ரேகாவ சண்டை போட ஏத்தி விட்டுட்டு இருந்தார். ஒரு பெரிய
மனுஷன் செய்யுற வேலையா இது ? ஆனா நீ செய்யலாம்.....செய் !
நிஷாவுக்கு
கல்யாண நாளாம். கேமரா முன்னாடி வந்து ஆசைக் கணவருக்கு ஆப்பி ஆனிவர்சரி சொல்லிட்டு இருந்தாங்க.
வெளிய வந்ததும் உள்ள இருக்குறவனுங்களுக்கு கேக் வாங்கி தருவாங்களாம்...சந்தோசம் !
ஆண்டவர் கம்மிங்.....!
அகத்துக்குள்ள
போறதுக்குள்ள “அன்பின் பிக்பாஸ் இதுவரைக்கும் எங்கிட்ட பேசல சோ அவரு பேசுனாதான் நான்
உள்ள போவேன்”னு பிடிவாதம் பிடிக்க பிக்பாஸ் அவர்கிட்ட பேசி அன்பு காட்டுனார். கக்கூஸ
தொறந்து விட்டதுக்கு நன்றி சொன்னார் ஆண்டவர். சரி வேலையப் பாருங்கன்னு சொல்லிட்டு போயிட்டார்
பிக்பாஸ்.
அகம் – அகம்
“என்ன அவனுங்களுக்கு
காட்டுறதுக்கு முன்னாடி அவனுங்கள எனக்குக் காட்டுங்க என்ன பண்றானுங்கன்னு பாப்போம்”னு
சொன்னார். உள்ள ரேம்ப் வாக் போயிட்டு இருந்தானுங்க. சட்டுன்னு டீவில ஆண்டவர் வந்ததும்
அலார்ட்டா முன்ன வந்து உக்காந்தானுங்க. எல்லாரும் பூப்புனித நீராட்டு விழாவுக்கு வந்த
மாதிரி பட்டு வேட்டி, புடவை சகிதமா இருந்தானுங்க . குந்தியிருக்கும் குபேர பொம்மை போல
இருந்தாப்ல சுரேஷு.
அப்பறம் ஆண்டவர்
எல்லாரையும் நலம் விசாரிச்சு ரமேஷ் கட்டை விரல் காயம், ரேகாவோட பாக்கி பொருட்கள், கடலை
உருண்டை, நிஷாவுக்கு திருமண வாழ்த்துகள்னு வரிசையா சொல்ல எல்லாரும் என்னமோ தீர்க்க
தரிசனம் சொன்ன மாதிரி ஆச்சர்யப்பட்டானுங்க....! டேய் ஊரே உங்க அக்கப்போரத்தான பாத்துட்டு
இருக்கு...அவரு இந்த ஷோ ஹோஸ்ட்டு வேற அவருக்கு தெரியாதா என்ன...? ஃபன்னி கய்ஸ் !
முட்டை சண்டையப்
பத்தி கேட்டு ஒரு மொக்கை முட்டை ஜோக் வேற சொன்னார்....”கோழியே கேக்க முடியாதத தோழி
கேக்கலாமா?”ன்னு பஞ்ச் போட்டு...”.முட்டை சாப்டுங்க மனசும், மஸிலும் முக்கியம்”னு மார்கபந்து
மொதல் சந்து கவிதை சொன்னார்.
அப்பறம் சாத்தூர்
ஷிவானிய பாட்டுப்பாட சொல்லிக் கேட்டார். அதுவும் கண்ண மூடி கந்த ஷஷ்டி கவசம் பாடுற
மாதிரி பாடி முடிச்சுச்சு.
அப்பறம் கடந்து
வந்த பாதை கதைகளுக்கு விமர்சனம் சொன்னார் (ஆண்டவரே பிக்பாஸ் விமர்சனம் எழுதுங்க...நல்ல
ரீச் இருக்கு...நானே சாட்சி). “எல்லாமே மனதை உருக்கும் கண்ணீர் கதைகள்....சோ இத பேஸா
வச்சுக்கிட்டு வாழ்க்கையில நல்லா இருங்க”ன்னு சொன்னார். ஷோவுக்கு வந்துட்டு அரசியல்
பேசலேன்னா அப்றம் எனக்கென்ன மரியாதைன்ற மாதிரி வேல்முருகனோட சத்துணவு போர்ஷன்ல இருந்து
லீட் எடுத்து பாரதி சொன்ன ஜகத்தினை அழித்திடுவோம்.....அதனால நாங்க ஆட்சிக்கு வந்தா
வயிறார உணவு அளித்திடுவோம்னு வந்து முடிச்சார்.
மானாவாரியா
ஹார்ட் பிரேக் வாங்குன சாத்தூர் ஷிவானிகிட்ட “சிங்கிளா இருந்து இப்ப மிங்கிளாக ஆரம்பிச்சுட்டப்
போலயே?”ன்னு கேக்க “கொஞ்சம் டைம் எடுக்கும்”னு ஷிவானி சொன்னதுக்கு “எங்ககிட்ட 100 நாள்தான்
இருக்கு அதுக்குள்ள மிங்கிளாகிடு”ன்னு சொன்னார்.
சுரேஷ் – அனிதா
பஞ்சாயத்துக்கு வந்தார். ஆனா கடைசி வரைக்கும் ரெண்டும் ரெண்டு மொனையிலதான் நின்னுச்சுங்க.
சுரேஷ் கிட்ட “நீ பெரிய பெரிய பேச்செல்லாம் பேசுற அத கொறச்சுக்கோ”ன்னு சொன்னார். சுரேஷும்
“இல்ல இப்பல்லாம் எதும் பேசுறது இல்ல”ன்னு சொன்னதுக்கு அனிதா “என் வெர்ஷன கேளுங்க சுருக்கமா
முடிச்சுருவேன்”னு சொன்னதுக்கு “யாரு நீ ? சுருக்கமா ? எங்க சொல்லு பாப்போம்”னார்.....அன்னப்போஸ்டு
அனிதா அலாரத்தா ஆரம்பிச்சுச்சு....நான் ஸ்டாப்பா போயி உங்க முன்னாடியே கைகுடுத்துக்குறேன்னு
சொல்லி சுரேஷ் கிட்ட சமாதானக் கை குடுத்துச்சு.
இப்ப மறுபடியும்
ஹார்ட் பிரேக் டாஸ்க்.
சனம் வந்து
ரேகாவுக்கும், அன்னப்போஸ்டு அனிதாவுக்கும் ஹார்ட்டு குடுத்தாங்க. சம்முக்கும், பில்டர்
பாலாக்கும் ஹார்ட் பிரேக். இப்ப சனம் பில்டர் பஞ்சாயத்த ஆண்டவர்கிட்ட சொல்ல, அதுக்கு
பில்டர் பதில் சொல்ல “நீங்க சண்டை போட்டுக்குறதுல எங்களுக்கு ஒண்ணுமில்ல நாங்க ஜாலியா
உக்காந்து வேடிக்கைதான் பாக்கப் போறோம்”னு சொன்னதோட முடிஞ்சது....எனக்கு இப்பத்தான்
விடிஞ்சது அதான் தாமதமாகிடுச்சு. நன்றி...நமக்கம் !
Comments
Post a Comment