பிக்பாஸ் – 4 : நாள் - 27 (31.10.20)
வீடியோ ரூம்ல பாப்கார்னும் கையுமா உக்காந்திருந்தார் ஆண்டவர். “சினிமா பாக்காம போர் அடிக்குற ஆளுகளெல்லாம் இந்த ஷோவப் பாருங்க....காதல், பாசம், வீரம், மோட்டிவேஷன், தக் ஹாப் டான்ஸ், முழு நீள வசனங்கள், ஆடல், பாடல் எல்லாம் இருக்கு....! என்ன இவனுங்க இன்னும் கத்திக் குத்து, துப்பாக்கி சூடு, பாம் வெடித்தல், விஷம் வைத்தல் அளவுக்குப் போகல. ஆனாஅ போயிடுவானுங்க. ஆனாலும் அரசியல்னா என்னான்னே தெரியாம இந்த லூசுங்க அரசியலும் பண்றானுங்க. ஆனா அதப் பத்தி பேச மேடை வேணும்....வாங்க மேடையில போயி பேசுவோம்”னு போனார். ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா ! ஆண்டவரே...அனிதா சகவாசம் எதும் தொத்திக்கிச்சா ?
மேடைக்கு வந்தார்
ஆண்டவர். கல்யாண வீட்ல கன்னத்துல சந்தனத்தோட, கக்கத்துல இத்துனூண்டு ஜிப்பு பேக்க வச்சுக்க்குட்டு,
சஃபாரி போட்டு ஒரு மாமா சுத்திட்டு இருப்பார். அதே சேம் சஃபாரில ஆண்டவர்....ஆனா சஃபாரி
மேல எவ்ளோ பாக்கெட்டு.....! அப்பறம் எப்பவும் போல தெளிவா நமக்கு புரியவே கூடாதுன்ற
முடிவுல மறைமுகமா சில அரசியல் விஷயங்கள் பேசுனார். ஆண்டவரே நீங்க நேரடியாவே பேசலாம்....கண்டிப்பா
புரியாது.
ஆனா இன்னைக்கு
வரப்பவே ஆண்டவர் ஒரு முடிவோடதான் வந்திருந்தாரு. “இந்த வெறும்பயலுகள கொஞ்சம் வெரட்டுவோம்”ன்ற
முடிவுதான். “சரி வெள்ளிக்கிழமை என்ன விஷயம்?”னு பாத்துருவோம்னு காமிச்சார்.
26வது நாள்
நள்ளிரவு
பெட் ரூம்ல
ஒரே பெட்டுல அர்ச்சனா மடியில சோமு படுத்திருக்க, நிஷா ஜித்து கால பிடிச்சுவிடவும் இருந்தாங்க.
ரியோ கஞ்சா அடிச்சவன் மாதிரி ஏதோ பண்ணிட்டு
இருந்தாப்ல. சட்டுன்னு ஜித்து பாய் கோவமா எந்திரிச்சு போக “ஏய் என்னாச்சு அந்தாளுக்கு
? ஏன் கோவிச்சிட்டுப் போறான்?”னு ரியோ கேக்க, “சும்மா அடிச்சேன்”னு நிஷா சொல்லுச்சு.
“எது...சும்மா அடிச்சியா ? ஏன் சும்மா கடிச்சு வைக்க வேண்டியதுதான ? இல்ல தலவானிய வச்சு
மூஞ்சில அமுக்க வேண்டியதுதான ? அடிச்சேன்ற ? கருப்பு சனமா உருவாகிட்டு இருக்க......பேசாம
படு”ன்னு திட்டுனதும் அந்த நாள் முடிஞ்சது..........அப்பறம் விடிஞ்சது !
27வது நாள்
“வதன வதன வடிவேலனே”
பாட்டு அலாரம். என்ன மாதிரியான பாட்டு ! படுபாவிப் பயலுக பழையசோத்த தின்ன மாதிரி பராக்குதான்
பாக்குறானுங்களே ஒழிய ஆடுறானுனாங்களா ? பேருக்கு 4 பொம்பள புள்ளைங்க ஆடுறதால தப்பிக்கிறானுங்க.
இந்த சிவ கார்த்திகேயன் பாட்டுப் போட்டா ஷிவானி மட்டுமாச்சும் நல்லா நீட்டி, மடக்கி
ஆடும். ஐடியா இல்லாத பிக்பாஸு.
தூங்கிட்டு
இருந்த நிஷாவ எழுப்புன ரியோ....”அடிச்சது, கடிச்சது எல்லாம் நீ. ஆனா பண்றதெல்லாம் பண்ணிட்டு
போத்திகிட்டு தூங்குனா நல்லாவா இருக்கு? இங்க இருந்து லிவிங் ரூமப் பாரு. எல்லா மிருகங்களும்
இருக்கு. ஆனா உராங் உட்டான் நீ இல்லாம அது ஜூ மாதிரியே இல்ல. வா வந்து வாழைபழத்த தின்னு”ன்னு
ஆரி ப்ரோ மோடுல மோட்டிவேஷன் குடுத்தான் ரியோ.
அப்பறம் நிஷா
வந்து “என்னய அடிச்சிக்கோ.....என்னய அடிச்சிக்கோ”ன்னு பக்கத்துல போயி சொல்லி சொல்லியே
ஜித்துவ மன்னிக்க வச்சுருச்சு. “சட்டு புட்டுன்னு சாரிய கேட்டுட்டு போயி வேலை வெட்டிகளப்
பாரு”ன்னு போயிட்டாரு ஜித்து.
பெட் ரூமுல
, சோப்ளாங்கி சோமு பெட்டத் தூக்குனா அங்க ஒரு சாக்லேட்டு. இத ரியோ குரூப்பு பாத்துட்டானுங்க.
அர்ச்சனா, “யாருடா குடுத்தா?”ன்னு கேட்டா. முக்கி முனங்கி ரம்யானான். “அடப்பாவி இது
எப்படா?”ன்னு கேட்டதுக்கு. “எதோ ஒரு டாஸ்க்கப்ப குடுத்துச்சு. அத பத்திரமா வச்சிருக்கேன்”னு
வெக்கப்பட்டான். (யப்பா டேய்....இத கேக்க எங்களுக்குதாண்டா வெக்கமா இருக்கு).
இந்த சோப்ளாங்கி
சோமு ரம்யாக்கு பின்னாடி சோலோ வயலின் வாசிக்கிறான் போல. அதுசரி, பில்டரும், சாத்தூரும்
அவனுக்கு முன்னாடி கையப் பிடிச்சு அடுறதும், விரட்டி விரட்டி ஓடுறதும்னு இருந்தா இவனும்
என்னதான் பண்ணுவான். நாலஞ்சு நாளா அன்னப்போஸ்டு சகவாசம் இல்லாதப்பயே ஒரு டவுட்டு வந்துச்சு.
நேத்து கூட ரம்யாவ இம்ப்ரெஸ் பண்ணத்தான் அன்னப்போஸ்ட ஒர்ஸ்ட் லிஸ்டுல கொண்டுவந்தான்
போல. பாத்துடா ரம்யா நம்மள பாத்து நல்லா சிரிக்கிறான்னு நெனச்சு வீணாப் போகாத....அது
பாம் வைக்கிறவனப் பாத்தாக் கூட பல்லக் காட்டித்தான் சிரிக்கும்....! பாத்து பொழச்சுக்கோ...சோமா
!
அப்பறம் அந்த
சாக்லேட்ட வச்சு ரியோ அண்ட் கோ அவன ஓட்டிட்டு இருந்தானுங்க. “சும்மாதான் மத்தபடி ஃபீலிங்க்ஸ்லாம்
இல்ல”ன்னான். “ஃபீலிங்க்ஸ் இல்லாதவந்தான் பிரிக்காத சாக்லேட்ட பெட்டுக்கடில வச்சு மோந்து
பாத்துட்டிருப்பானா”ன்னு லந்தக் குடுத்துட்டு இருந்தானுங்க. ஆனா சோமனுக்கு இதுவே ஜாலியாதன்
இருந்துச்சு போல....”ஓட்டுறதா இருந்தாலும் ஒர்த்தா இருக்குடா”ன்ற மாதிரி....பல்லக்காட்டி,
தலைய ஆட்டிக்கிட்டு இருந்தான். ஆமா ! சோமு எப்போ இவனுங்க டீமுக்கு வந்தான் ? யாரும்
பாக்காத நேரத்துல பெட்ட மாத்திட்டான் போல. வேல்ஸ வேட்டி மாதிரி கழட்டி விட்டானுங்க.
அந்தாளு காத்துல அங்கிட்டும், இங்குட்டுமா பறந்துட்டு இருக்காப்ல.
ஆண்டவர் அகெயின்
! இந்த நிழ்ச்சி ஸ்க்ரிப்டட்னு சொல்றானுங்க. சொல்றவனுங்க சுயபுத்தி இல்லாதவனுங்க. சொல்லாதவனுங்க
புத்தியே இல்லாதவனுங்க. விமர்சனங்கள ஏத்துக்குவோம். வில்லங்கம் வந்தா பாத்துக்குவோம்.
காசு வாங்கிட்டு தப்பா எழுதுறவனுங்க பொழப்புல நாம மண்ணள்ளிப் போட வேணாம். எப்பிடியோ
நம்மளப் பத்தி பேசுனாலே நமக்கு நல்லதுதான்”னு சொல்லிட்டு உள்ள போனார்.
“யப்பா டேய்,
அக்யூஸ்டுகளா. போன வாரம் எல்லாரும் நல்லா பன்ணிங்கடா”ன்னு பாராட்டிட்டு. “மங்களகரமா
ஆரம்பிப்போம். சுமங்கலி மேட்டருக்கு வருவோம்”னு சொல்லிட்டு. “பெண்கள்ல யாருக்கு அன்னப்போஸ்டு
ஒளறுனது ஒவ்வாமையா இருந்துச்சு?”ன்னு கேக்க, அர்ச்சனா, நிஷாக்கு ஒவ்வாமைன்னும், கேபிக்கும்,
ரம்யாக்கும் கொஞ்சம் கஷ்டம்னும், மத்த ஆளுங்க அத முழுசாவே ஆதரிச்சாங்க. அனிதாவும் “நான்
பேசுனதும், பேசுன இடமும் சரிதான்”னு சொல்லுச்சு. அப்பறம் ஆண்டவரும் “உன் செயலுக்கு
ஒரு கை ஓசை அகாது”ன்னு சொல்லி கைதட்டி பாராட்டுனாரு. பெரியார் இருந்தா அவரும் பாரட்டியிருப்பாருன்னு
சொன்னாரு. (எது...பெரியார் பிக்பாஸ் பாப்பாராமா ?). இந்த விஷயத்த எங்க வேணும்னாலும்
பேசலாம்னு சொல்லி அன்னப்போஸ்ட பாராட்டி தள்ளிட்டாரு. அன்னப்போஸ்டு கொஞ்சம் கொஞ்சமா
வேதாளம் அஜீத் கணக்கா பழைய மோடுக்கு ட்ரான்ஸ்ஃபர்மேசன் ஆகிட்டு இருந்துச்சு. அன்னை
அர்ச்சனாவுக்கு விழுந்த முதல் அடி இது.
அப்பறம் சகுனிகிட்ட
வந்து “உன் பழைய பழக்கம் உன்னய சுமங்கலி, சுண்டெலின்னு பேச வச்சிருச்சோ? இல்ல உன் கேரக்டருக்கு அப்பிடியே மேட்ச் பண்ணிட்டியா?ன்னு
கேக்க...
உண்மைய ஒத்துக்க
வந்த சகுனிக்கு லீட் எடுத்து குடுத்து அந்தாளு “ஆமாம் நான் கேரக்டருக்குதான் அப்பிடி
பண்ணேன்”னு டைரக்டர் ரேஞ்சுக்கு புளுகுனான். அப்பறம் “எங்க அம்மாவும் பெரியாரிஸ்ட்
ஆனா பெரியம்மா சைக்கியாட்டிரிஸ்ட், சின்னம்மா டெரரிஸ்ட்”னு என்னென்னமோ உளறுனாப்ல.
ஆண்டவரோ “ஆனாலும்
அன்னப்போஸ்டு மன்னிப்பு கேக்க வந்தப்ப நீ ரொம்பத்தான் அலட்டிகிட்டியே”ன்னு கேக்க, “அது
என்னோட அனுபவங்க....சாரி கேட்டா அதுக்கடுத்து பெரிய சம்பவம் எதையாச்சும் பண்ணிடும்”னு
பட்டுன்னு அடிச்சாப்ல.
ஆண்டவர எவனோ
“நீங்க நாத்திகவாதி”ன்னோ என்னமோ சொல்லிட்டானுங்க போல.... இன்னைக்கு 2 வார்த்தைக்கு
ஒரு தடவ நான் நாத்திகவாதி இல்ல பகுத்தறிவுவாதின்னு சொல்லிட்டே இருந்தாப்ல. இத சொல்றதுக்கு
இன்னைக்கு வாகா சகுனி வேற சிக்கிட்டாப்ல. சிக்குன நேரமெல்லாம் அவரு சகுனிகிட்ட அத சொல்லிட்டே
இருக்க....விட்டா ஒரு கட்டத்துல சகுனியே அவரு சொல்றதுகு முன்னாடி “சார் நீங்க நாத்திகவாதி
இல்ல பகுத்தறிவுவாதி”ன்னு சொல்லியிருந்திருப்பாப்ல.
ஆண்டவர் உள்ள
போன கேப்புல சனம் வந்து அன்னப்போஸ்ட கட்டிப்பிடிச்சு “பாத்தியா ? ஆண்டவரையே அலற விட்டுட்டேன்.
நான் சப்போர்ட் பண்ண நேர்ந்தான் உனக்கு நல்ல நேரமாகிடுச்சு...என் கூட வந்துரு...கம்பி
மேல நடக்கலாம்”னு சொல்லிட்டு போயிடுச்சு. ஆனா அன்னப்போஸ்டு அள்ளி அணைச்சது பில்டரத்தான்.
“கடைசி வரை நின்னது நீதாண்டா”ன்னு கட்டிப்பிடிச்சு ஏதோ முனங்கிட்டே இருந்துச்சு....சோமன
திட்டியிருக்கும் போல......எப்பிடியோ கமல் சார் அன்னப்போஸ்டுக்கு கால் சலங்கைய கட்டி
விட்டுட்டாரு...இனி ஆன்னப்போஸ்டு ஆட்டாம் ஆரம்பம்னு நம்புவோம்.
திரும்ப வந்தவரு
“இது யாரு தச்ச சட்ட....கைத்தறி நூலுல தாத்தா தச்ச சட்ட...நீங்களும் இப்பிடி வாங்கி
உதவி பண்ணுங்க”ன்னு ப்ரமோட் பண்ணிட்டு உள்ள வந்தார்.
இப்ப பில்டரு
பஞ்சாயத்து. “ஏண்டா அடிச்சுக்க போற மூடுக்கு வந்துட்டு அன்பு, பண்புன்னு சீன முடிச்சிட்டீங்களேடா
? சண்டையக் கூட ஒழுங்கா போட மாட்டீங்களாடா?”ன்னு கேட்டுட்டு. “ரைட்டு எப்பிடியோ ஓன்னா
சேர்ந்து உருப்புடாம போங்க. ஆனா ரியோ ஒரு டீமா உன் நிலமை என்ன?”ன்னு குரூப்பிஸத்த குத்தி
காமிக்க. ரியோ “நான் நெஞ்சப் பிடிச்சுக்கிட்டது உண்மைதான். ஆனா என்ன பண்றது ? தொலைங்கடான்னு
விட்டுட்டேன்”னு சொன்னான். ஆண்டவர் பாலாகிட்ட “இந்தாடா ஸ்டிரெயிட் பார்வர்டுக்கும்,
அரகன்ஸுக்கும் மெல்லிய கோடுதான் வித்யாசம். ஆனா இதத் தெரிஞ்சு பண்றது உன் ஸ்டேர்டஜின்னா
விளையாடு. அன்பு ஒரு ஸ்டேர்டஜின்னா அத பை முழுக்க அள்ளிப்போடு”ன்னு வாழ்த்துனார்.
வேல்ஸுகிட்ட
வந்தாரு. “என்ன வேல்ஸு என்ன சமாச்சாரம்?”னு கேக்க. “ரெண்டு பக்கமும் அடி வாங்க வேண்டிய
சூழ்நிலை அன்னைக்கு....நம்ம பொழப்பு இப்பிடித்தாங்க போகுது”ன்னு புல்லரிச்சுக்கிட்டாப்ல.
“ரைட்டு எழுப்பி விட்டு உன் எலும்பு நொறுங்காம போனது போன ஜென்மத்துப் புண்ணியம். பொழச்சுப்
போ”ன்னு விட்டுட்டார்.
ஆரிக்கு வந்தார்.
“யப்பா உன் உண்மைக்கும், நேர்மைக்கும் இன்னைக்குதான் இட்லி கெடச்சிருக்கு”ன்னு வாழ்த்திட்டு.
“சொல்லு உன் பஞ்சாயத்த”ன்னு வந்தாரு. “இவனுங்க நம்பர் சொல்லி விளையாட நாந்தான் கெடச்சேன்னு
போட்டு குத்தோ குத்துன்னு குத்துறானுங்க. ஒரு ப்ராஸஸே இல்லாம கன்னிங்கா கேம் ஆடுறானுங்க”ன்னு
சொன்னதும். ஆண்டவரும் “ஏண்டா உண்மையாவே ஆரி மட்டுந்தான் சுவாரஸ்யமில்லாம டாஸ்க் செஞ்ச
ஆளா?”ன்னு கேக்க...பூராம் “ஆ”ன்னு வாயப் பொளந்தானுங்க.
“சரி பெஸ்ட்
பெர்ஃபார்மர் சோப்ளாங்கி சோமனுக்கு யாரு யாரு ஓட்டுப் போட்டது?”ன்னு கேக்க, ஆளாளுக்கு
“நான் ஒண்ணு, நீ ஒண்ணு”ன்னு கசகசன்னு கத்தி கடைசில பாத்தா சோமனுக்கு 2 பேரு மட்டுந்தான்
கைய தூக்குனானுங்க. “ஏண்டா உங்க ஓட்டு முறை இந்த லட்சனத்துலதான் இருக்கா ? என்ன கருமண்டா
இது?”ன்னு சொல்லிட்டு. “டேய் பிட்டு பிட்டா பாக்குற எனக்கே உள்ள பல பேரு படுத்தெந்திரிக்குற
வேலைய மட்டுந்தான் பாக்குறானுங்கன்னு தெளிவாத் தெரியுது. ஒழுங்கு மரியாதையா சரியா செலெக்ட்
பண்ணுங்க”ன்னு வார்னிங் குடுத்தார். அன்னை அர்ச்சனாவுக்கு விழுந்த ரெண்டாவது அடி.
சரக்குன்னு
சைனா செட்டு அலற
சனம் : சார்
இங்கே ஃபேவரிட்டிசம் இருக்கே.....குருப்பிஸம் இருக்கே....பால் இருக்கே.....பழம் இருக்கே....பில்டரு
இருக்கே....எனக்கு பித்தமும் இருக்கே...
ஆண்டவர் : (MV
: அமாவாசை போலருக்கு) என்ன சனம்...இருக்கே இருக்கேன்னா என்னா இருக்கே....? உனக்கும்
பில்டருக்கும் பஞ்சாயத்துதான் இருக்கே....அவன் கையால உனக்கு சத்தியமா சாத்து இருக்கே....
சனம் : சார்.....லெமன்
மேட்டர்லே என்னே மட்டப் பண்ணிட்டான் பில்டரு. என் வாயால என்னய முந்திரிக்கொட்டேன்னு
சொல்ல வச்சே....
ஆண்டவர் : சொல்லும்போது
தெரியலயா ? அன்னப்போஸ்டு பேசுறதையெல்லாம் மணிக்கணக்கா கேக்குற....ஆனா பில்டரு பேசுற
தமிழ் புரியலன்னு சொல்ற ? என்னதான் பிரச்சனை உனக்கு?
சனம் : சார்.....லைஃபுலே
நம்ம பட்ட கஷ்டம் பாத்தீங்கன்னா, ஜேக்கும், நானும் பரங்கிமலை மேலே கிணத்துல தண்ணி இரைக்க
போகையில. ஜேக்கு விழுந்து கைய உடச்சுக்க....பின்னாடியே உருண்டுவந்த எனக்கு வாழ்க்கையிலே....(
தலைய சொரிஞ்சபடியே MV : அய்யையோ இப்ப என்ன சொல்ல வந்தேன் ?)
ஆண்டவர் : (ரைட்டு
சொல்ல வந்தத மறந்துட்டா போல ) இந்தா சைனா....நீ சேவ்டு. உன்னையும் வெளிய தள்ளிட்டா
என்டெர்டெயின்மெண்டுக்கு எங்க போவானுங்க பாவம்....நீ உள்ளயே இரு//
“என்ன அர்ச்சனா
பில்டர உள்ள இருன்னு சொல்லிட்டு நீ வெளிய போகனும்னு ஆசப்படுறியே?”ன்னு கேக்க....”இவனுங்க
கூட இன்னும் தங்குனா என் ஃபோட்டோவும் F-1 ஸ்டேஷன்ல ஒட்டப்பட்டிரும் போல”ன்னு சொல்ல,
“அதெல்லாம் நம்ம முடிவு பண்ண முடியாது. ஓட்டுதான் உன்னய ஓட வைக்கும்”னு அறிவுறை சொன்னார்.
பின்ன சகுனிகிட்ட
“என்ன சகுனி சாரப் பாம்பாட்டாம் புத்துக்குள்ள பதுங்கிட்ட?”ன்னு கேட்டதுக்கு. “அதெல்லாம்
இல்ல நான் என் ஸ்டேட்டர்ஜிய மாத்திக்கிட்டேன்”னு கூலா சொன்னாப்ல.
“சரி இஎவிக்ஷன்ல
பேலன்ஸ் பத்து பேரும் 5 ஜோடியா நில்லுங்க”ன்னு சொல்லிட்டு ரியோ, ரம்யா, அன்னப்போஸ்டு,
பில்டரு, ஜித்து சேவ்டுன்னு சொல்லிட்டுப் போயிட்டார்.
அவரு போனதும்
சம்முகிட்ட பில்டரு “பாத்தியா ஆண்டவர, என்னய பாராட்டிட்டுப் போறாரு. இப்ப இவனுங்க மூஞ்சிய
முட்டிக்காலுலயா கொண்டி வச்சுக்குவானுங்க?”ன்னு பொலம்பிட்டு இருந்தான்.
இங்குட்டு ஆரி
ப்ரோ அன்னப்போஸ்டுகிட்ட “பாத்தியா அண்ணணோட கணிப்புகள ? எப்பிடி சரியா சொன்னேன் பாரு.
இவனுங்க அடுத்து சோமனா மட்டையக் கட்டி வெளிய அனுப்பிடுவானுங்க பாரு, இத அவனுக்கு சிக்னலா
கைய ஆட்டி சொன்னா “நான் சாப்ட்டேன் நீங்க சாப்டலயா?”ன்னு கேக்குறான் லூசு. சேராத இடம்
சேர்ந்து வஞ்சத்துல விழுகுறான்”னு வருத்தப்பட்டாப்ல........முடிஞ்சது !
Comments
Post a Comment