Posts

Showing posts from November, 2020

பிக்பாஸ் – 4 : நாள் - 57 (30.11.20)

  57வது நாள் “ஆரம்பம் புதுசு” பாட்டு அலாரம். உலகத்துல வேற பாட்டே இல்லேன்ற மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டு தேடிப்பிடிச்சு இந்தப் பாட்ட போட்டிருக்கானுங்க. நல்ல பாட்டுக்கே நாலு ஸ்டெப்பு போடுறதுக்கு இவனுங்களுக்கு கீழையும், மேலையும் வலிக்கும். இதுல இன்னைக்கு சுத்தம். சம்மு இல்லாததால வ.வா சங்கமும் பொலிவிழந்து போயிருச்சு. சோமுவும், ரியோவும் கேபி இங்க வந்தப்ப இருந்த மூக்கு சைஸுக்கும் இப்ப உள்ள சைஸுக்கும் வித்யாசம் கண்டுபிடிச்சு சொல்லிட்டிருந்தானுங்க. இது கண்டிப்பா இந்த வாரம் பிக்பாஸ் வீட்ல ஆட்டத்தையே மாத்தப் போற விஷயமா இருக்கலாம். தண்டம்டா டேய் ! அப்பறம் ஜித்து, கேபி சேந்து சோமன ரம்யாவ வச்சு ஓட்டிட்டு இருந்தானுங்க. சோமன் சொன்ன மாதிரி சாக்லேட்ட பாக்கெட்ட பிரேக் பண்ணி லவ் பிரேக் அப் பண்ணல போல.....அதான இந்த காஜி அதெல்லாம் செய்ய மாட்டானே. ரம்யான்னு நெனச்சு வெளிய இருந்த மொலுக்கட்டி பொம்மைக்கு தாவணியும், செருப்பும் மாட்டி விட்டிருக்குறதா கேபி துப்பறிஞ்சு சொல்லுச்சு. “தட்றோம் தூக்குறோம்” கேப்டன்ஸி டாஸ்க். 3 வித கலர்ல க்யூப்கள வலையில போட்டு மேல கட்டி வச்சிருப்பானுங்க. அதுல இவனுங்க கலர் க்யூப கரெக்டா

பிக்பாஸ் – 4 - நாள் - 56 (29.11.20)

  வெள்ள உடை வேந்தரா வந்தார் ஆண்டவர். “நல்லவரா ? கெட்டவரா?”ன்னு எவனக் கேட்டாலும் தெரியலுன்னுதான் சொல்லுவான். அதையே அடுத்தவன் நல்லவனா? கெட்டவனா?ன்னு கேட்டா நல்லவனுக்கு கெட்டவன் நல்லவன், கெட்டவனுக்கு நல்லவன் கெட்டவன்....என்ன புரியலையா ? நான் புரியுற மாதிரி சொன்னாலும் புரியலன்னுதான் சொல்லப் போறீங்க.....அதனால புரியாத மாதிரியே சொல்லிட்டேன்”னு சர்காஸம் பண்ணார். உள்ள வந்ததும் “ஒரு கேரக்டர நல்லா பண்ணா நம்மள அந்த கேரக்டர் பேர சொல்லிதான் கூப்டுவானுங்க. என்னடா நம்மதான நடிச்சோம் நம்ம பேரு வரலன்னு நெனைப்போம்....கொஞ்ச நாள் கழிச்சு அந்த கேரக்டராவே வாழ்ந்திருப்போம். ஆனா நம்ம பேர சொல்லி நல்லா பண்ணியிருக்கான்னு சொல்லுவானுங்க. இது அப்டித்தான் இருக்கும்....நாம நமக்கு என்ன இமேஜ் வரணும்னு , மாத்தனும்னு பாத்துக்கிட்டே இருந்தா பொழுது ஓடிப்போயிரும். அதனால உங்க உண்மையான கேரக்டர் எதுவோ அத வெளிய கொண்டுவந்தாலே போதும்”னு இன்னைக்கும் ரியோவுக்குதான் சொன்னார். பின்ன கலீஜ் மேட்டருக்கு வந்தார். “என்ன சனம் எப்பவும் போல நீதான் வாங்கிகட்டுன போல....என்ன சங்கதி?”ன்னு கேக்க....”ஃபோன் பண்ணி 2 கேள்விதாங்க கேட்டேன். கலீஜ் அது

பிக்பாஸ் – 4 : நாள் - 53 & 54 (27.11.20)

  53வது நாள் “டெலிஃபோன் அடிக்குது” பாட்டு அலாரம். கால்செண்டர் டாஸ்க் நடக்குறதாலையாம். பாட்டு போடுற ஆளு 90ஸ் கிட் போல....பாட்டு போட்ட வித்யாசாகருக்கே இந்தப் பாட்டு மறந்து போயிருக்கும். வீட்ல உள்ள ஆளுகளுக்கு இந்தப் பாட்டு தெரியல போல. ஆனா ஆரி ப்ரோ இதுக்கு வாயசைச்சு பாடிட்டே ஆடுனது, அவரு அர்ஜுன் ரசிகராவோ இல்ல ரஞ்சிதா நற்பணி இயக்கத்துலையோ இருந்திருக்க சாத்தியம் இருக்கு. கூடவே “பேலு பூரி கா ரஹா தா”ன்னு அர்ச்சனா குரூப்பு நடத்துன ஹிந்தி அந்தாக்ஷரில கூட “இந்தி தெரியாது போடா”ன்னு அவரு கலந்துக்காம விட்டத நாம கவனிக்கலாம். பட் இந்தப் பாட்டுக்கும் அவ்ளோ அழகா ஆடுனாங்க ஷிவானியும், சம்முவும். நிஷா டூ அன்னப்போஸ்டு அன்னப்போஸ்டு : வணக்கம் உங்களுக்கு என்ன வேணும் ? நிஷா : என் பேரு நிஷா.... அன்னப்போஸ்டு : என் பேரு அனிதா. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நான் ஒரு பொம்பள. எனக்கு அரசியல் தெரியும். நான் ஒரு ஜர்னலிஸ்ட். எங்க அம்மா கருப்பா இருப்பாங்க. என் கணவர் என்னய கன்னுக்குட்டின்னு கூப்டுவாரு. நிஷா : (MV : உன்னய கூப்ட்டேன் பாரு என்னய சொல்லனும்) ஆரம்ப காலத்துல எங்கிட்ட அன்பா இருந்தீங்க. அம்மா மாதிரின்னு...

பிக்பாஸ் – 4 : நாள் - 52 தொடர்ச்சி....(26.11.20)

  52வது நாள் தொடர்ச்சி... எடுத்ததும் ரியோ – ஆஜீத் “ஒரு பாட்டு பாடுடி செல்லக்குட்டி”ன்னு ஆரம்பிச்சு அந்த பாட்டின் வழியா அன்புன்னா என்னன்னு உணர்த்தி, பில்டருகிட்ட நேருக்கு நேரா கேட்டா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துரும்ன்றதால....ஆஜீத்த பில்டரா நெனச்சு கேள்விகள் கேட்டு....இந்த உலகத்துக்கு அன்பு தேவைன்றதையும், அந்த அன்ப வாங்க மொத்தமா அன்னை அர்ச்சனாகிட்ட வாங்கன்னு சொல்லி உரையாடல முடிச்சுக்கிட்டார் கரப்பான் பூச்சி ரியோ.....! இதுல உதாரணம் சொல்றேன்னு சொல்லி “எல்லாத்தையும் கேமு கேமுன்னு பாக்குற, வெளிய தப்பா தெரிஞ்சிருவோம்னு பயப்படுற அன்னப்போஸ்டு & சனம் கூட நட்பா இருக்க காரணம் அன்புதான”ன்னு ஒரு கண்டுபிடிப்ப பத்தி சொன்னது ஹைலைட்டு.....அப்பவே சைனா மண்டைல எறிஞ்சது ஒரு ரெட் லைட்டு...! அன்பின் மகத்துவத்த உள்ள ரியோ சொல்ல சொல்ல வெளிய இருந்து கேட்டு அதுக்கான எக்ஸ்பிரஷன குடுத்துட்டு இருந்த நிஷாவையும், அன்னை அர்ச்சனாவையும் காண குமரிமுத்து கண்கள் தான் வேணும். ஆனா ரம்யாவோ “இவன் கால மாத்திப் போட்டு பாலாவுக்கு பதிலா ஆஜீத்கிட்ட பேசிட்டு இருக்கான்.....ஆனா நீங்க அவன ஒரு பெரிய

பிக்பாஸ் – 4 : நாள் - 52 (25.11.20)

52வது நாள் “சொடக்கு மேல சொடக்கு போடுது” பாட்டு அலாரம். பில்டரு சொடக்கு போட்டு பேசுனதுக்காக இருக்கும் போல. வர வர வ.வா சங்க உறுப்பினர்கள் செம்ம ஆட்டம் போடுறாங்க. பாக்க ரொம்ப நல்லாயிருக்கு. இவனுங்க சண்டைய கொஞ்சம் கொறச்சு காட்டிட்டு....ஒரு முழு பாட்டுக்கும் இவங்கள ஆட விட்ட நல்லாயிருக்கும்.....பாக்குறதுக்கு பாத்து பண்ணுங்க பிக்கி ! மத்தவனுங்களப் பத்தி பேச என்னதான் இருக்கு? பில்டரு, ஷிவானி, சம்மு 3 பேரும் லிவிங் ரூமுல இருக்க, சம்மு “நைட்டு முழுக்க யோசிச்சேன்....வளர்ப்பு சரி இல்லேன்னு நான் அந்தாளு சொன்ன அர்த்தத்துல சொல்லல அப்பறம் ஏன் குதிக்கிறான் ? புரியல ! அடேய் பில்டரு விட்டுக்குடுத்த மேட்டர்ல நீ அந்தாள வீதில இழுத்துவிட்டதுலையும், வளர்ப்பு சரியில்ல மேட்டர்லையும் ரெண்டு பேரு மேலையும் செம்ம காண்டுல இருக்கான் பாத்துக்கோ”ன்னு சொல்ல, “நான் இடைல வந்து தடுத்துவிடுவேன்னு அவரு நெனைக்கல....அதுக்கு நாம என்ன பண்றது ? உள்ள பூந்து கிழிக்க அந்தாளு என்ன சூரியா ? ஆரிதான பாத்துக்கலாம்”னு சொல்லிட்டு இருக்கும்போதே, ரம்யா அங்கயிருந்து “என் கட்டை வேகுறதுக்குள்ள அவரு அமைதியா பேசி ஒரு தடவை பாத்துரனும். கோவப்பட

பிக்பாஸ் – 4 : நாள் - 51 (24.11.20)

  50வது நாள் தொடர்ச்சி.... அந்த டாப்பில் டாஸ்க் முடிஞ்சதும் எல்லாரும் கலைஞ்சு போக ரியோ அந்த ரூமுக்குள்ள வரவும் ரியோ, சோமு, நிஷா 3 பேரும் இருக்க...நிஷா ”நான் கொஞ்சம் பேசனும்”னு சொல்லிட்டு “ஏப்பா நான் செஞ்சது தப்பா ? அன்பா இருக்குறது தப்பா ? மக்கள் கிட்ட போறேன்னு சொன்னது தப்பா?”ன்னு வரிசையா கேட்டுட்டு இருக்கும்போது...அதுக்கு பதில் சொல்ல ரியோ தொண்டைய செருமிட்டு ஆரம்பிக்கப் போக.....அன்னை உள்ள வந்தாங்க. “என்னங்கடா அம்மா இல்லாம அன் அஃபீஷியல் கூட்டம் போடுறீங்க?”ன்னு கேக்க....”ஈ லோகத்தில் யாருக்கும் அன்பு இல்லா.....எல்லாரும் போலி....அன்பு காட்டுனா ஸ்டர்டஜின்னு சொல்றானுங்க....அன்பு காட்டுனா சேஃப் கேமுன்னு சொல்றானுங்க, அன்பு காட்டுனா அண்டர்டேக்கர் கனவுல வருவான்னு சொல்றானுங்க”ன்னு சொன்னதுதான் தாமசம்.....பால்ராஜ் பாஸ்டர் பரிசுத்த ஆவி உள்ள இறங்குனாப்ல..... அன்னை அர்ச்சனா :   பெலத்தினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நிஷா.... நிஷா : அல்லலூயா..... அன்னை அர்ச்சனா : உண்மையான....பரிசுத்தமான.....நியாயஞ்செய்த அன்ப நம்புறீங்களா..... நிஷா : அல்லலூயா.....நம்புறேன்.... அன்னை அர்ச்சனா :   கைய

பிக்பாஸ் – 4 : நாள் - 50 (23.11.20)

  49வது நாள் தொடர்ச்சி.... நைட்டு பாலா, ஆரி, சனம், அன்னப்போஸ்டு வெளிய உக்காந்திருக்க “விட்டா அன்னை அர்ச்சனா குரூப்பு ரியோவ இடுப்புல தூக்கி வச்சுகிட்டு ஓடிப்போயி கேப்டன் டாஸ்க்குல ஜெயிக்க வைப்பானுங்க போல”ன்னு சொன்னதும், ஏழரையில இருந்த சனி ஆரி வாயில வசமா வந்து உக்காந்துச்சு “உண்மைய சொல்லனும்னா அவன் ஜெயிச்சிட்டு போகட்டும்னு நாந்தான் விட்டுக்குடுத்தேன்....பையன் நல்லா வரட்டும்ன்ற எண்ணந்தான் வேற என்ன....நமக்கும் தினம் ஒரு நல்லது பண்ணலேன்னா படுத்ததும் தூக்கம் வரமாட்டேங்குது பாரு”ன்னு தற்புகழ்ச்சி தகர டப்பாவ அடிக்க....பில்டரு “ஆனாலும் இந்த குரூப்பு அரசியல விடமாட்டேன்”னு வெறப்பா உள்ள போயிட்டான். 50வது நாள் “என் பேரு மீனா குமாரி” பாட்டு அலாரம். வ.வா சங்க ஆளுக ஷிவானி, ரம்யா & சம்மு 3 பேரும் உருப்படியா பண்ற ஒரே காரியம் சிறப்பா ஆடுறதுதான். 50 நாள்ல இதத்தான் நான் கண்டுபுடிச்சேன். மத்தவனுங்களும் ஒரு மாதிரியா மேனேஜ் பண்ணானுங்க இன்னைக்கு. “சரி வாங்கடா கன்ஃபெஷன் ரூமுக்கு”ன்னு நாமினேஷனுக்கு கூப்ட்டாப்ல பிக்கி. எல்லாரும் வரிசையா போயி நாமிநேஷன் பண்ண, ஆரி ப்ரோ உள்ள போறப்ப ஜித்து பாய் “யோவ் உள்ள

பிக்பாஸ் – 4 : நாள் - 49 (22.11.20)

  50வது நாளாம். இதுல என்ன பெருமை ? இன்னைக்காவது எதாச்சும் கண்டென்ட் இருந்திருக்கலாம் ஆனா இல்லை. ஆண்டவரே கைவிட்டுட்டாரு போல. எவிக்ஷன் யாருன்னு வேற நமக்கு தெரியும்ன்றதால அந்த சுவாரஸ்யமும் இல்ல. இன்னைக்கு மட்டும் 1 பேஜ தாண்டி எழுதிட்டேன்னா நான் ஜெயிச்சிட்டேன்..... அன்னப்போஸ்டு, சுச்சி & பில்டரு 3 பேரும் உக்காந்து கத்தி, கிளவுஸ் குடுத்ததப் பத்தி பேசிட்டு இருந்தானுங்க. “அன்னை குரூப்பு அவங்கவங்களுக்குள்ள எல்லாத்தையும் குடுத்து வாங்கிக்கிட்டானுங்க. இவனுங்க அட்டிராசிட்டி தாங்கல”ன்னு பேசிட்டு இருந்தானுங்க. ஆண்டவர் வந்தார். பாக்க சீன சிப்பாய் ட்ரெஸ் மாதிரி இருந்தாலும் காக்கிக் கலர்ல இருந்திருந்தா கூர்க்கா மாதிரிதான் இருந்திருக்கும். இந்த சட்டைக்கு எதுக்கு இவ்வளவு பட்டன்னு வேற தெரியல. “இங்க நான் வந்தது தப்பான முடிவுன்னு இன்னும் சொல்லிட்டே இருக்கானுங்க. ஆனா இது நல்ல முடிவுன்னு எனக்குதான் தெரியும். கைதட்டுறதுக்கு ஆள் இருக்கும்னுதான் இதுக்கு விரும்பி வந்தேன் ஆனா கொள்ளையில போன கோவிட் அத கெடுத்துருச்சு. இருந்தாலும் டிஜிட்டல் வழியா சில பேர பாக்குறது சந்தோஷம்”னு சொல்லிட்டு “ஒரு ரெண்டு பேர்கிட்