பிக்பாஸ் – 4 : நாள் - 52 (25.11.20)
52வது நாள்
“சொடக்கு மேல
சொடக்கு போடுது” பாட்டு அலாரம். பில்டரு சொடக்கு போட்டு பேசுனதுக்காக இருக்கும் போல.
வர வர வ.வா சங்க உறுப்பினர்கள் செம்ம ஆட்டம் போடுறாங்க. பாக்க ரொம்ப நல்லாயிருக்கு.
இவனுங்க சண்டைய கொஞ்சம் கொறச்சு காட்டிட்டு....ஒரு முழு பாட்டுக்கும் இவங்கள ஆட விட்ட
நல்லாயிருக்கும்.....பாக்குறதுக்கு பாத்து பண்ணுங்க பிக்கி ! மத்தவனுங்களப் பத்தி பேச
என்னதான் இருக்கு?
பில்டரு, ஷிவானி,
சம்மு 3 பேரும் லிவிங் ரூமுல இருக்க, சம்மு “நைட்டு முழுக்க யோசிச்சேன்....வளர்ப்பு
சரி இல்லேன்னு நான் அந்தாளு சொன்ன அர்த்தத்துல சொல்லல அப்பறம் ஏன் குதிக்கிறான் ? புரியல
! அடேய் பில்டரு விட்டுக்குடுத்த மேட்டர்ல நீ அந்தாள வீதில இழுத்துவிட்டதுலையும், வளர்ப்பு
சரியில்ல மேட்டர்லையும் ரெண்டு பேரு மேலையும் செம்ம காண்டுல இருக்கான் பாத்துக்கோ”ன்னு
சொல்ல, “நான் இடைல வந்து தடுத்துவிடுவேன்னு அவரு நெனைக்கல....அதுக்கு நாம என்ன பண்றது
? உள்ள பூந்து கிழிக்க அந்தாளு என்ன சூரியா ? ஆரிதான பாத்துக்கலாம்”னு சொல்லிட்டு இருக்கும்போதே,
ரம்யா அங்கயிருந்து “என் கட்டை வேகுறதுக்குள்ள அவரு அமைதியா பேசி ஒரு தடவை பாத்துரனும்.
கோவப்பட்டா கொடூர குரங்க குஷ்மா மாதிரி ஆகிடுது மூஞ்சி”ன்னு கலாய்ச்சுது....சிரிப்புக்குள்
ஒரு சீரியல் கில்லர் !
“கஸ்டமர் கேர்
டாஸ்க்குல இனி யாரும் நீளமா பேசக்கூடாது (அனிதாவுக்கு எந்த நேரமும் கால் வரலாம்ன்ற
காரணமா இருக்கலாம்), ஒரு விஷயம் பேசும்போது சம்பந்தமில்லாம அடுத்த விஷயத்துக்கு போகக்
கூடாது, ரொம்ப நேரம் பதில் சொல்லாம அமைதியா இருக்கக் கூடாது. இதெல்லாம் இந்த டாஸ்க்க
சுவாரஸ்யமா பண்றதுக்கான ஐடியா....நானே கண்டுபிச்சேன்”னு எழுதி அனுப்பியிருந்தாரு பிக்பாஸ்.
ஒரு ஓரமா ஆரி
& ரியோ.....
ஆரி : கைய நீட்டி
பேசுனா....நான் வேற நீட்டுவேன்னு சொல்றான் அத யாரும் கேக்கல
ரியோ : ஆமா
கேக்கல
ஆரி : ஆனா இதப்
பாருங்க.....அவன் மவுத் லேங்குவேஜ் மட்டுமில்ல, பாடி லேங்குவேஜும் என்னய அசிங்க அசிங்கமா
திட்டுது.....அத யாரும் கேக்கல
ரியோ : ஆமா
கேக்கல
ஆரி : அப்பிடி
சொல்லாதீங்க ரியோ....! அவனப் பாத்தீங்கன்னா கேமரா முன்னாடி கால்ல விழுகுறான். ஆனா உம்மேல
வச்ச மரியாதைய நீ இழந்துட்ட இனி அத சம்பாதிக்க முடியாதுன்னு சொன்னா, என்னய சமாதானப்படுத்தாம
கட்டைய குடுக்குறான்
ரியோ : ஆமா
குடுக்குறான்
ஆரி : (MV
: யாருடா இவன் லூசு....நம்ம வேவ்லெங்த்துக்கு வரவே மாட்டேங்குறான் ) ரியோ....அவன் தப்பு
உங்களுக்கு தெரியலையா ? என் நேர்மை உங்களுக்கு புரியலையா ? இப்ப இன்னொன்னு சொல்றேன்
பாருங்க....! நேத்து சம்மு கூட நான் பேசிட்டு இருக்கேன்...இவன் உள்ள வந்து எதுக்கு
கத்தனும் ? சொல்லுங்க. இப்ப உங்களுக்கு எதாச்சும் அவன சொல்லத் தோணனுமே ?
ரியோ : ஆனா
அந்த சண்டைலதான் சம்முவும், நீங்களும் சாரி சொல்லிக்கிட்டீங்களே ! அப்ப அதப் பத்தி
எதுக்கு பேசனும் ?
ஆரி : (MV
: உங்கிட்ட எதிர்பார்த்து வந்தேன் பாரு....) சரிதான்.....தம்பி, அங்க அன்னை அர்ச்சனா
ரொம்ப நேரமா உங்களுக்கு அரைப்படி டம்ளர்ல அன்ப வச்சுக்கிட்டு காத்திருக்காங்க நீங்க
போங்க..... (MV : வேற யாரையாச்சும் பிடிச்சு பேசி நம்ம லைனுக்கு கொண்டு வருவோம்...)
//
ஆனா இதயெல்லாம்
கூட விட்டுரலாம் “நான் ஒரு கேள்வி கேக்குறேன் அதுக்கு சம்முவ பேச விட்டாதான சகோதரிக்கு
பேச வருமா ? அவங்களுக்கு பேசும் திறமை இருக்கான்னு தெரியும். அவங்க பேசுறதுக்கான வாய்ப்ப
ஏன் பில்டரு தடுக்கனும்?”னு கேட்டாப்ல பாருங்க......யப்ப யப்பா !
ரியோவும், நிஷாவும்
க்யூட்டா விளையாடுறேன்ற பேருல பயித்தியங்க மாதிரி ஏதோ பண்ண....பக்கத்துல மேக்கப் போட்டுட்டு
இருந்த ஷிவானி இவனுங்கள ஐ டெக்ஸ் மைடப்பா அளவுக்குக் கூட மதிக்கல....
இந்தப்பக்கம்
பில்டரு சைனாகிட்ட “என்ன சைனா ஏதோ ஒரு வாரம் நாமினேஷன்ல இல்லேன்னு சந்தோஷமா இருந்த...இப்ப
என்னடான்னா இன்னும் தொடர்ந்து 2 வாரத்துக்கு நாமினேஷன்ல வruவ போலயே?”ன்னு சொல்லி விளையாண்டுகிட்டு
இருந்தான்.
அடுத்து சோமு
டூ கேபி....
“நாய்க்குட்டிய
ஏன் வீட்டுல விட்டுட்டு வந்த ? அப்போ நாய்க்குட்டி முக்கியம் இல்லையா ? நாய்க்குட்டி
முக்கியம்னா கேம் முக்கியம் இல்லையா?”ன்னு மொக்கைய போட்டுட்டு இருந்தான். யப்பா டேய்
இவன மொதல வெளிய அனுப்புங்கடா....நிஷா கூட கேம விளையாண்டுரும் போல, இவன் அதுக்கு தயாராவே
இல்ல. சும்மா உள்ள தின்னு, தூங்கி, ஓடிப்பிடிச்சு விளையாண்டு, கடலைய போட்டுட்டு வெளிய
போயிரலாம்னு நெனச்சுட்டு இருக்கான். யோவ் பிக்கி உன்னய நல்லா ஏமாத்தி உள்ள வந்துட்டான்
பாத்துக்கோ. இதுல ஃபோன வச்சுருன்னு இவன் சொல்லுவானாமா....அவங்க சரி நீங்க ஜெயிச்சுக்கோங்கன்னு
வச்சுருவாங்களாம்.....என்ன கருமசண்டாளம் இது ?
இவனுங்க பேசுன
இந்த கருமத்த அன்னை அர்ச்சனா தன் குடும்பத்தோட உக்காந்து பாத்து “பாரேன் பெரியவன் அவன்
தங்கச்சி மேல எவ்வளவு பாசமா இருக்கான்னு....இப்பிடித்தான் சின்ன பிள்ளையில இருந்தே
தங்கச்சின்னா அவனுக்கு உயிரு......அவளப் பாரு அவங்க அண்ணன் ஜெயிக்கனுமாம்...அதனால அவன்
சொன்னதும் ஃபோன வச்சுடுவாளாம்....ஹா ஹா ஹா நல்ல பிள்ளைங்க ! வந்ததும் சுத்தி போடனும்”னு
சவுகார் ஜானகி ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணிட்டு இருக்க...ரியோவுக்கும், நிஷாவுக்கும் கண்ணுல
ஆனந்தத் தண்ணி.....! வாட்ட லவ்வபிள் ஃபேமிலி யு நோ.....!
வெளிய வந்த
கேபிகிட்ட “அய்யோ நீ தோத்துட்ட”ன்னு சொல்ல “ஆமா அப்பதான சோம் ஜெயிக்க முடியும்? நான்
தெரிஞ்சேதான் பண்ணேன்”னு சொல்லுச்சு.
இதப்பத்தி பாலா
, சைனா, அன்னப்போஸ்டு வெளிய பேச...
பில்டரு : நான்
நேத்து சொன்னப்ப குதிச்சானுங்களே...இப்பப் பாத்தீங்களா நான் சொன்னது கரெக்டா ?
சைனா : இப்ப
என்ன ப்ரூவ் ஆகுதுன்னா ஒரே ஒரு பாயிண்ட்தான்....நான் சொல்றது புரியுதா?
அன்னப்போஸ்டு
: அதெல்லாம் புரியுதுடா எனக்கு....நான் கல்யாணமான பொம்பள...
பில்டரு : நான்
சொன்னது கரெக்டா ?
சைனா : அப்ப
இவனுங்க கேம் இதுதான்....நான் சொல்றது புரியுதா?
அன்னப்போஸ்டு
: அதெல்லாம் புரியுதுடா எனக்கு....நான் கல்யாணமான பொம்பள...
சைனா : அப்ப
எதுதான் புரியல உனக்கு....எதக்கேட்டாலும் புரியுதுன்ற ? அப்ப டிங் டிங் நெய்டா....டிங்
டிங் நெய்டாவுக்கு அர்த்தம் புரியுமா உனக்கு ?
அன்னப்போஸ்டு
: எது...டிங் டிங்கா ? அடியே எனக்கு புரியுதுன்னா புரியுதுன்னுதான சொல்ல முடியும்
!
சைனா : நாந்தான்
புரியுற மாதிரியே சொல்லலயே...அப்பறம் எப்பிடி உனக்கு புரியும் ?
அன்னப்போஸ்டு
: அது எனக்கு புரியுது....
பில்டரு : இருங்கடி....நான்
சொன்னது கரெக்டா ?
சைனா : அதவிடு....இவளுக்கு
இப்ப என்ன புரிஞ்சுச்சுன்னு கேளு...
அன்னப்போஸ்டு
: ஆள விடும்மா....நான் போறேன்... நீ கூப்ட்டேன்னு வந்தேன் பாரு....வார்னிஷதான் குடிக்கனும்....(எந்திரிச்சு
போக....)
பில்டரு : இப்பவாச்சும்
சொல்லேன் நான் சொன்னது கரெக்டா ?
அன்னப்போஸ்டு
: (தனியா போயி உக்காந்துட்டு...... MV : ஆகா
இவனுங்களையும் விட்டா கக்கூஸ்ல போயி தனியாத்தான் பேசிக்கனும்....அட்ஜஸ்ட் பண்ணி சைனா
கூடயே இருப்போம்) சாரி சைனா....தள்ளி உக்காரு....
பில்டரு : இதுங்க
கூட பேசுனதுக்கு .....ஆரி கூடயே பேசிக்கலாம்....நல்லா ஏருல பூட்டுன எருமையாட்டம்....//
காலையில இருந்து
பில்டரும், ஷிவானியும் பேசிக்கலையாம்...இது என்னடா பிக்பாஸ் வீட்டுக்கு வந்த சோதனை
? பேசிப் பேசியே சாகுற வீட்ல பேசலேன்னு ஒரு பஞ்சாயத்தா ? “மார்னிங்ல இருந்து மாமா மத்த
விஷயத்துல பிஸியாகிட்டேன் அதான் பேச முடியல”ன்னு சொன்னதுக்கு....”நடிக்காதடா டேய்....சைனா
கூட சைடு கேப்புல சடுகுடு ஆடுற....ஆனா எங்கிட்ட் பேச நேரம் இல்ல உனக்கு...போ போ....எப்பிடியும்
2 நாள்ல உன்னய ஏதாச்சும் கேசுல பொளப்பானுங்க....அப்ப மண்டைய சொறிஞ்சு விட நாந்தாண்டி
வரனும்....அப்ப வச்சுக்கிறேன்னு சாத்தூர் பத்தி விட்டுருச்சு.
உள்ள அன்னை
அர்ச்சனாவும், நிஷாவும்
அன்னை : கணக்கு
பாத்து வச்சு வச்சு சரியா சாப்பிட முடியல....எல்லாம் இந்த அன்பால படுற பாடு
நிஷா : இனிமே
அப்டியெல்லாம் பாக்க கூடாது...எனக்கும் சோறே இறங்கல
அன்னை : அப்பிடி
பாக்காம இருக்குறது தப்பில்லையா ?
நிஷா : அன்ப
மதிக்காத வீட்ல நாம மட்டும் எதுக்கு மத்தவங்கள மதிக்கனும் ?
அன்னை : நீ
சொல்றதும் சரிதான்...
நிஷ : அது சரி.....அன்பு
சாப்ட்டாச்சா ? அன்புக்கு ஒண்ணும் குறையில்லையே....ஏன்னா அன்புதான் முக்கியம்....
அன்னை : ஆமா
ஆமா ! அன்பே அய்யனாரு //
இப்பிடியே ஆரம்பிச்சு
பில்டரப் பத்தி பொரணி பேசுனாங்க அன்னை. ஆனா இவங்கதான் “இனியும் அன்பு ஆயுதத்தால பில்டர
அடிப்பேன்”னு சொன்ன அன்னை.
அடுத்து ரம்யா
டூ ஜித்து பாய்.....
“உள்ள சொன்னத
வெளிய சொன்ன காரணங்கள்ல உனக்கு எது பொருந்தும் ? நிஷா, என்னய, ரியோவ எவிக்ட் பண்ண தலைக்கு
2 காரணம் சொல்லு”ன்னு சொல்ல, ஜித்து ஒரு மாதிரி மழுப்பி சமாளிச்சாப்ல....ஆனா ரம்யா
விடாம அத கேட்டுட்டே இருக்கவும் வெளிய வேல் குடும்பத்துக்கு பதட்டமாகிப்போயி “அண்ணே
அண்ணே சொதப்பிறாத”ன்னு அன்னை வாய் விட்டே சொல்ல.....கரப்பான் பூச்சி ரியோ “இது ட்ரிக்கர்”னு
சொல்லி எந்திருச்சு போகப் பாத்தான். கடைசியில ஜித்து எதையும் நேரடியா சொல்லாம போக....ரம்யா
கெஞ்சுனதால ஜித்து ஃபோன வச்சுட்டாப்ல. சரி ரம்யாதான் வின்னுன்னு பாத்தா, பிக்பாஸ் “இது
போங்கு அதனால எலிமினேஷன் போர்ட வாங்கு”ன்னு சொல்லிட்டார்.
வெளிய வேல்
குடும்பம் அலப்பறை தாங்கல. ஒண்ணுமே பண்ணாத ஜித்து பாய பாகுபலி ரேஞ்சுக்கு கட்டிப்பிடிச்சு
கொண்டாடுனான் ரியோ....டேய் அசிங்கமா பண்ணாதீங்கடா !
“சரி காலையில
கரப்பான் பூச்சி ரியோதான் கவுத்திட்டான். நாம நம்ம அவஞ்செர்ஸ் டீம கூட்டுவோம்”னு சொல்லி.....
ஆரி : சம்மு
கேப்டன்ஸில நேர்மையில்லாம ஜெயிச்சப்பயே இதுக்கு ஒரு முடிவு கட்டியிருக்கனும்
சனம் : யோவ்....அதுக்கப்பறம்
5 கேப்டன் மாறிட்டானுங்க.....! இன்னுமா நீ அத பேசிட்டு இருக்க ?
ஆரி : அப்போ
நேத்து வளார்ப்பு சரியில்லன்னு சொன்னது ?
சனம் : நீதான்
மதர்ஹூட்ட பத்தி தப்பா பேசிட்டு....அங்க வந்து ராபின்ஹூட் மாதிரி பர்பார்ம் பண்ணிட்டு
இருந்த
ஆரி : அப்ப
பில்டரு எங்கிட்ட ஒழுக்கமில்லாத பாடி லேங்குவேஜ்ல பேசுனது ?
சனம் : உனக்கு
அவன் தப்பு....அவனுக்கு நீ தப்பு....ஆக ரெண்டு பேரும் தப்பு
ஆரி : எதே...நான்
தப்பா ? அவன் சொடக்கு போட்டு ஹீரோவகனும்னா வாங்கன்னு கூப்ட்டது ?
சனம் : அது
தப்பு.....
அன்னப்போஸ்டு
: ஆமா தப்பு
பில்டரு : இவன்
ஒருத்தந்தான் நல்லவன்.....இருந்துட்டு போப்பா
ஆரி : இல்ல
நான் கெட்டவன், கேடு கெட்டவன், கொள்ளைக்கரன், கொலைகாரன், அன்னியன், இந்தியன், எந்திரன்
எல்லாமே நாந்தான் போதுமா ?
சனம் : அப்பிடி
இல்ல ப்ரோ....நீங்களும்....
ஆரி : சைனா....உன்னய
நம்பி அவெஞ்சர்ஸ் டீம கூட்டுனேன் பாரு.....அரளிவிதையாதான் தேடனும்.....நான் கெட்டவன்னே
வச்சுக்கோ
சனம் : தேவையில்லாம
என்னய பையாஸ்டு சொல்லிட்டு போற
ஆரி : அப்டியே
வச்சுக்கோ நீ பையாஸ்டுதான்....
சனம் : நான்
வச்சுக்க மாட்டேன்....குடுத்துருவேன்
ஆரி : (MV
:கருமம்.....கலையில இருந்து எவனாச்சும் ஒருத்தன் ஆமா ப்ரோ நீங்க சொல்றது சரி.....பில்டர
தூக்குல போட சொல்லுவோம்னு சொல்றானுங்களா....? புல்ஷிட்.....)//
ஒரு கட்டத்துல
சைனா, ஆரி கான்வர்ஷேஷன கேட்டு அங்க ஒரு கூட்டமே ஜாலியா வேடிக்கை பாத்து சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு.
.... ஆரி ப்ரோவும் மோருன்னு நெனச்சு பாயசத்த ஊத்துன கதையா, வகையா மாட்டிக்கிட்டாப்ல.....
“ஆனாலும் பாலா
நீ சொடக்கு போட்டது உண்மைதான?”ன்னு அன்னப்போஸ்டு சொல்ல....”ஒழுங்கா தெரிஞ்சா சொல்லு....வீணா
அடிபட்டு சாகாத”ன்னு பில்டரு எந்திரிக்கவும். அன்னப்போஸ்டு “என்னங்கடா நானும் போனா
போகுதுன்னு ஒரு வாரமா வாய் பாத்துட்டு இருக்கேன்.....ஒண்ணு ரெண்டு வார்த்தை பேசலாம்னா
அதுக்கும் அடிக்க வறீங்க ? இருங்கடா டேய்.....வச்சுக்குறேன்”னு பொலம்ப, பில்டரு “கொஞ்சம்
எமோஷனலாகிட்டேன் சாரி”ன்னு....சமாதானமாகிட்டான்.
எல்லாரும் உள்ள
போயிட்டாங்க. வானம் லேசான தூறல் போட லான் ஏரியால ஒரே ஒரு உருவம் மட்டும் அங்க சொருகி
வச்சிருந்த குடையப் பாத்து “ நேர்மையில்லாம கேப்டனான சம்முவ கேட்ட நான் நேர்மையில்லாதவனாம்.
கைய நீட்டுனா கண்டத நீட்டுவேன்னு சொல்றான் பில்டரு. இத விட அவனோட பாடிலங்குவேஜ் என்னய
ப்ரவோக் பண்ணுதுன்னு........... ஆரி ப்ரோ பேசிட்டு இருக்க......காத்துல குடை அவருக்கு
தலையாட்டிட்டு இருந்துச்சு.........
Comments
Post a Comment