பிக்பாஸ் – 4 : நாள் - 41 (14.11.20)
“இந்தா....நீ கொஞ்சம் நகரு”ன்னு பிக்பாஸன ஒதுக்கிவிட்டுட்டு மொத்தமா ஆட்டத்த கைல வச்சுக்கிட்ட ஆண்டவர் எபிசோட் இது.....! கண்டென்ட் கடுகளவுதான்...ஆனா என்னமோ இந்த எபிசோட்ல அவரு மட்டுமே பளீர்னு தெரிஞ்சார்.
அட்டகாசமான
கறுப்பு சட்டை, வெள்ளை வேஷ்டில சும்மா தெறியா வந்தாரு. வந்ததும் முந்தாநாள் போட்ட ட்வீட்ட
சொன்னார். 3 நாளைக்கு முன்ன கேட்டவனுங்களுக்கே அது இன்னும் புரியல.....! பிக்பாஸுக்கு
இது தல தீபாவளின்னு சொல்லிட்டு “வெள்ளிக்கிழமை விஷயத்த பாத்துட்டு வருவோம்”னு சொன்னார்.
41வது நாள்
“தீபாவளி தல
தீபாவளி” பாட்டு அலாரம். இனிமே காசு குடுத்தாத்தான் ஆடுவானுங்க போல. பேருக்கு கை கால
உதறிட்டு இருந்தானுங்க சில பேரு. ஆஜீத்கிட்ட சம்மு “டேய் எந்த பஞ்சாயாத்தா இருந்தாலும்
எல்லாரையும் கூப்ட்டு பொதுவுல சொல்லு. எந்திரிச்சு வர சொன்னா சோம்பேறி பயலுக சங்கடப்படத்தான்
செய்வானுங்க, ஆனா அதையெல்லாம் கண்டுக்காம சின்ன விஷயமா இருந்தாலும் எல்லாரையும் கூப்ட்டு
சொல்லு. ரொம்ப முக்கியமா நான், குறிப்பா பாலா, ஷிவானி கருத்துகள கேக்காத....அதக் கேட்டு
நாசமாப் போனவதான் நான்....இங்கிலீஸுல பிடிக்காத ஒரே வார்த்தை கேப்டன்னு ஆகிப்போச்சு
எனக்கு. இனி விஜயகாந்த்தக் கூட கேப்டன்னு சொல்ல மாட்டேன். நீயாச்சும் புத்தியா பொழச்சுக்கோ”ன்னு
அனுபவப் பாடம் எடுத்தாங்க. நைட்டுக்கு இதே மாதிரி ஆரி ப்ரோவும் பாடம் எடுக்க வரலாம்....ஆனா
அவரு முடிக்கிறதுக்குள்ள அவன் கேப்டன்ஸி முடிஞ்சிரும். ஒரு கொலையும் நடந்திரும்.
ஷிவானிகிட்ட
அர்ச்சனா “பாலாவ நான் ஏமாத்தல. அவனுக்குன்னு எப்பவுமே காக்கிலோ அன்ப கைலயேதான் வச்சிருக்கேன்.
அது ஸ்டார்டெஜி இல்ல. அவனும் இப்ப என் மேல இருந்த ஒரு ஒப்பீனியன மாத்திகிட்டான் அதுதான்
எனக்கு வேணும். மத்தபடி இது கேம பாதிக்காது. அன்பே அர்ச்சனா தான”ன்னு முடிச்சாங்க.
பின்ன பட்டாசு
வந்துச்சு. பூராம் காணாதத கண்டதா குத்திச்சானுங்க.
ஆரியும் சனமும்
கிச்சன்ல.
ஆரி : அது என்ன
மத்தவங்கள மட்டும் பேசும்போது இனிக்குது....தனக்குன்னு வந்தா வலிக்குது
சனம் : ஏங்க....இன்னுமுமா
சோத்த கொட்டுன கேஸ நியாபகம் வச்சிருக்கீங்க ?
ஆரி : அட உன்னய
சொல்லலம்மா.
சனம் : அப்ப
அர்ச்சனாவா....? சம்முவ சொல்றீங்களோ ? ஷிவானின்னு நெனைக்கிறேன்....நிஷாவா அப்டியெல்லாம்
பேசும் ? கேபிய சொல்லலையே நீங்க ? அப்ப கன்ஃபார்மா ரம்யா தான்.
ஆரி : முடிச்சிட்டியா
? இல்ல அனிதாவ பொண்ணுங்க லிஸ்டுலையே சேக்கலையா ?
சனம் : ஏங்க
அவ நம்ம செட்டு...
ஆரி : ஆங்....நம்ம
செட்டு........அவ ஒரு வால்யூம் குறையாத ஹெட்செட்டு....! வாழ்க்கையில 10 மார்க் கொஸ்டீனுக்கு
மட்டுந்தான் ஆன்சர் எழுதுவா போல...எவ்ளோ நேக்கா ஸ்பேஸ் இல்ல, யுனிவர்ஸ் இல்ல, ராக்கேட்
இல்லன்னு மத்தவங்க மேல கேஸ திருப்பி விடுறா பாரு....
சனம் : கோவமா
இருக்கீங்களா ? லெமன் ஜூஸ் போட்டுத்தரவா ?
ஆரி : ஏன் எல்லாரும்
அடுத்த லெமன் கேஸ் தரவா ? சும்மா இரு கொஞ்சநேரம்....நான் பாட்டுக்கு 5 நிமிஷம் பொலம்பிட்டு
போயிடுறேன்.
சனம் : சரி
பொலம்புங்க பிரதர்
ஆரி : (MV
: எல்லாம் என் நேரம்) இப்ப கூட பாரு இந்த பஞ்சாயத்த பத்தி பேச வரேன்னு சொன்னா...நானும்
காதுக்கு ட்ராப்ஸெல்லாம் போட்டு ரெடியா இருக்கேன். ஆனா வரமாட்டா ! ஏன்னா இப்பப் பேசி
எதும் பஞ்சாயத்தானா ஆண்டவருக்கு அது கண்டெண்டா போயிடும்னு சொல்லி, ஞாயித்துக்கிழமை
வரை வரமாட்டா...திங்கக்கிழமை காலையில தின்னு முடிச்சதும் பஞ்சாயத்த ஆரம்பிப்பா பாரு.....அன்னப்போஸ்டு
பெரிய கேடி
சனம் : சரி....லெமன்
ரசம் வைக்கலாமா ?
ஆரி : வேணாம்....லெமன்
வெஷம் வையி.....//
இங்குட்டு சம்முவும்
ஷிவானியும்
ஷிவானி : ஏன்
சம்மு, எந்தப் பொட்டலம் வந்தாலும் அர்ச்சனா குரூப்புதான் பிரிக்கிறானுங்க, டாஸ்க்கு
வந்தா அவனுங்கதான் படிக்குறானுங்க, வீட்ல எங்க பாத்தாலும் அவனுங்க பேச்சு சத்தந்தான்
கேக்குது...மொத்தமா ஷோவ டாமினண்ட் பன்றானுங்களே....?
சம்மு : இதெல்லாம்
எப்பவுமே நடந்துகிட்டுதான் இருக்கு....ஆனா நீ பொழுதுக்கும் பில்டர் கூட நடந்துட்டு
இருந்ததால உனக்கு இது நடக்குறது தெரியாம போயிருச்சு....இதோ 10 நிமிஷம் அவன் கூட இல்ல
அதனாலதான் இப்ப உனக்கு தெரியுது...
ஷிவானி : அதுக்காக
நம்ம இவனுங்க மாதிரி நடந்துகிட்டா...நீ நீயா இருன்னு பிக்பாஸன் சொன்னதுக்கு அர்த்தம்
இல்லாமப் போயிருமே ?
சம்மு : பேபி....இன்னைக்கு
என்ன சாப்பிட்ட ? இல்ல தலையில எதுவும் டப்பா கிப்பா விழுந்துடுச்சா ? இவ்ளோ அறிவா பேசுறியே
? அப்டியே கையோட கையா பில்டருகிட்ட இருந்து ரிலீசாகிடு...அவன் சுச்சிய கோர்த்துகிட்டு
நாசமாப் போகட்டும்....
ஷிவானி : அட....அவன்
கக்கூஸ் போயிட்டு வரவரைக்கும் உங்கிட்ட பேசலாம்னு பாத்தா நீ என்னய கழட்டிவிட சொல்ற
? இதோ அவன் வந்துட்டான். நான் போறேன்....நீ நான் சொன்னத மனசுல வச்சுக்கிட்டு ஒரு ஐடியா
குடு....//
அப்பறம் மூக்குத்தி
அம்மன் ப்ரொமோஷன். இவனுங்களுக்கு ட்ரெய்லர் போட்டு காமிச்சானுங்க.
அகம் – அகம்
ஆண்டவரப் பாத்ததும்
பூராம் காக்கா மாதிரி கா கான்னு கத்துன்னானுங்க. “பரவாயில்லடா இந்த வாரம் கொஞ்சம் மனுஷனுங்க
மாதிரி அன்பாவும், அமைதியாவும் இருந்தீங்க. பாக்கவே நல்லா இருந்துச்சு”ன்னார். “சரி
அந்த ஓரமா டம்மி பட்டாசுகள் இருக்கு. அதுல ஒவ்வொரு வெடிய எடுத்து எல்லாரும் டிஸ்கஸ்
பண்ணி அந்த வெடியோட கேரக்டருக்கு ஏத்தாப்ல ஒவ்வொருக்கா அத குடுங்க”ன்னார்.
ராக்கெட் பாலா
– ராக்கெட்டைப் போல் விசுக்கென்று கோவப்படுபவர்
சங்கு சக்கர
கேபி – துறு துறுவென்று சுற்றுபவர்
துப்பாக்கி
சனம் - குறிபார்த்து ஒருவரை ட்ரிக்கர் செய்து உரண்டையிழுப்பவர்
புஸ்வான சம்மு
– மகிழ்ச்சியை பரப்புபவர்
பாம்பு மாத்திரை
சுச்சி – விஷம் கக்குபவர்
சரவெடி அனிதா
– கேப் விடாமல் வெடிப்பவர்
கம்பி மத்தாப்பு
ரம்யா – மத்தாப்பாய் சிரித்து....முடித்ததும் தண்ணிக்குள் போட்ட கம்பி போல் சுருக்கென்று
குத்துபவர்
வான்வெடி அர்ச்சனா
– அன்பை அண்டமெல்லாம் பரப்புபவர்
ஊசிவெடி ஷிவானி
: முக்கியமானவர்
வெங்காய வெடி
ஆரி – வெங்காயமாகக் கூட இருக்கலாம்
பொட்டு வெடி
சோமு – யாரவது நொட்டு நொட்டென்று அடித்தால்தான் வெடிப்பவர் போல
லட்சுமி வெடி
நிஷா – எதற்கென்று மறந்துவிட்டது
அனுகுண்டு ரியோ
– வெடித்தால் சத்தமாக வெடிப்பவர்
ஊதுவத்தி ஆஜீத்
: மிகவும் தேவையானவர்
டபுள் ஷாட்
ஜித்து : எல்லா குரூப்பிலும் இருப்பவர்
இதுல சுச்சிய
தவிர எல்லாரும் அவனுங்களாவே முடிவெடுத்து வெடிய குடுத்தாங்க. சுச்சி மட்டுந்தான் அதிருப்திய
அப்பட்டமா காமிச்சு பாம்பு மாத்திரைய வாங்குனாங்க. அனில் பட்டாசு கடைக்கார ஆளு மாதிரி
என்ன என்ன பட்டாசு எப்டின்னு ஆண்டவர டெமோ பண்ண வச்சுட்டானுங்க.
அப்பறம் லெட்டர்
எழுதுனத டாஸ்க்கப் பத்தி பாராட்டிட்டு. ஒவ்வொருத்தரையா கேட்டாரு. குறிப்பா பல இடத்துல
“நான் கூட.....இப்பிடித்தான் எனக்கும்.....நானும்” அப்டின்னு அவரு அனுபவங்களையும் சொல்லத்
தவறல....ஆல்கஹால் லெட்டருக்கு மட்டும் சின்னதா டொக்கு வச்சாரு. பில்டரு அதிசயமா “இந்த
மாதிரி நல்ல நாளு பெரிய நாளுல அப்டியே சகஜமா பேசி சமாதனம் பண்ணி சரியாகிக்கலாம்னு பாக்குறேன்”னு
சொன்னான். முடியெல்லாம் வெட்டி, தாடிய ட்ரிம் பண்ணி நல்லாத்தான் இருந்தான்.....நாதஸ்
உண்மையாவே திருந்திட்டான் போல...பாக்கலாம்.
அப்பறம் மலைவாழ்
மக்களுக்கு சேவை செஞ்ச போஸ்ட்மேன் சிவன வீடியோ கால்ல எடுத்து பாராட்டுனாரு. அப்டியே
“ராணுவ வீரர்களுக்கும் லெட்டர் எழுதுங்க...இந்த நியூ இயர்க்கு நாமளும் எழுதலாம்”னார்.
அடுத்த டாஸ்க்கு ரெடி போல.
“பாட்டி சொல்லைத்
தட்டாதேவோட மகிழ்ச்சியான விஷயங்கள மட்டும் பேசுவோம்”னு சொல்லிட்டு. அர்ச்சனா, ரியோ,
நிஷாவ பாராட்டுனார். ஜித்து பாய ஸ்பெஷலா பாராட்டுனார்.
பாசிப்பருப்பு
மேட்டருக்கு வந்தார்....
சும்மா சொல்லக்கூடாது
அன்னப்போஸ்ட நல்லா வறுத்தாரு. ஆனா அங்கயும் அன்னப்போஸ்டு அட்டிராசிட்டிய விடல. “ஃபுல்
ஸ்டாப்பு, கமா, செமி கோலன் அப்டி இப்டின்னு நெறையா இருக்கு...அதெல்லாம் கேள்விப்பட்டிருக்கியா
? இப்பிடி பேசிட்டே போனா எப்பிடி ? எவன் என்ன நெனைப்பான்னு கவலைப்பட்டு கத்திட்டு இருந்தா
கண்டிப்பா வெளிய போயிருவ பாத்துக்கோ”ன்னுட்டு அர்ச்சனாகிட்ட வந்தாரு, “ஆமா சார், இவ
அக்கப்போரு தாங்கல....எது சொன்னாலும் குத்தம்னு சொல்றா ? எதுக்கெடுத்தாலும் சண்டைக்கு
வரா”ன்னு பேரன்ட்ஸ் டீச்சர் மீட்டிங்க்ல அப்பாகிட்ட டீச்சர் சொல்லிக்குடுக்குற மாதிரி
போட்டுக் குடுத்துட்டாங்க.
பிரேக்குக்கு
போயிட்டு வந்து அவனுங்களுக்கு தெரியாம உள்ள நடந்தத பாத்தார்.
ரியோ : நான்
அன்னைக்கே உங்கிட்ட விளக்கிட்டேன்...ஆனா நீ திரும்ப திரும்ப அதே மாதிரிதான் பேசுற
அன்னப்போஸ்டு
: நான் ஒன்னுசொல்லவா
ரியோ : நான்
உன் மேல எவ்ளோ அக்கறையா சொன்னேன்...
அன்னப்போஸ்டு
: நான் ஒன்னு சொல்லவா
ரியோ : முடிஞ்சத
மறுபடியும் பேசுற...
அன்னப்போஸ்டு
: நான் ஒன்னு சொல்லவா ?
ரியோ : இப்ப
இத முடிக்கலாமா இல்ல எப்பிடி ?
அன்னப்போஸ்டு
: நான் ஒன்னு சொல்லவா ?
ரியோ : ஆத்தா...நீ
ஆள விடு...நன்றி நமக்கம் //
சட்டுன்னு ஆண்டவர்
உள்ள வந்ததும் பதறிட்டானுங்க. “என்னங்கடா பஞ்சாயத்து?”ன்னு ஆண்டவர் கேக்க....”சார்
இவ மறுபடியும் சாம்பார்ல இருந்து ஆரம்பிக்கிறா சார்”னு சொல்ல....”பாரு உள்ள இருக்குற
ஆளுகளுக்கே போர் அடிக்குதுன்னா எங்க நிலமைய நெனச்சுப் பாரு....நல்லது செய்யும்போது
பாராட்ட ஏத்துக்குற மாதிரி....இதையும் ஏத்துக்கோ”ன்னார்...ஆனா அன்னப்போஸ்டுக்கு புரிஞ்ச
மாதிரி இல்ல.
அவ்ளோதான் கண்டெண்ட்.
இதுக்கப்பறம் முழுக்க முழுக்க பெர்பார்மன்ஸ் ஆஃப் ஹவுஸ்மேட்ஸ் அண்ட் ஆண்டவர்.
சுச்சி, ஆஜீத்
பாட்டு, நிஷா ஸ்டேண்ட் அப் காமெடி, கேபி மார்னிங் டான்ஸ் இமிட்டேஷன், ரியோ, அர்ச்சனா
கோர்ட் ரூம் ஸ்பூஃப்.....எல்லாமே நல்லா இருந்துச்சு. ஆண்டவரும் ரசிச்சு பாராட்டுனார்.
கேபிக்கு ஹெல்ப் பண்ணது ஜித்துவாம். ஜித்து பாய் சைலண்டா ஸ்கோர் பன்ணிட்டே வராப்ல.
ஒரு வாரம் கேப்டனா போட்டா லைனுக்கு வந்துருவாப்லன்னு நம்புவோம்.
ஆளாளுக்கு ஆண்டவரோட
புகழ் பெற்ற டயலாக்க அவர் வாயலயே கேக்க.....சும்மா ஒரு 10 நிமிஷம் ஆண்டவருக்கு ஆண்டவரே
பண்ண ஒரு மேஷ் அப் மாதிரி ரகளையா இருந்துச்சு. என்னா நடிகண்டா....ப்ப்பா ! நாளைக்கு
பப்போம்னுட்டு கிளம்பிட்டார். ரைட்டு நானும் ராக்கெட் வைக்க பாட்டில் வாங்க கிளம்புறேன்....
Comments
Post a Comment