பிக்பாஸ் – 4 : நாள் - 42 (15.11.20)

அம்சமான கோட் சூட்டுல ஆண்டவர் வந்தார். “பண்டிகைகளை கொண்டாட வேணாம்னு சொல்லல....கொஞ்சம் கருத்தா கொண்டாடுனா நல்லா இருக்கும்னுதான் சொல்றேன்...! மழை சீசனா இருக்கு...ஆனா நாம இயற்கைய குறை சொல்லிட்டு திரிஞ்சா....மழை நம்மள வெள்ளத்துல திரிய வச்சுரும்....நீர் நிலைகளை பாதுகாக்கலேன்னா மொகன்ஜதாரோ மாதிரி மண்ணு மூடிப் போயிரும் பாத்துக்கோங்க”ன்னு சொல்லிட்டு உள்ள போனார்.

“ஏண்டா வெறுங்கையோட போகக் கூடாதுன்னு ஆளுக்கொரு செடிய குடுத்தேனே....எப்பிடிடா இருக்கு அது?”ன்னு கேட்டார். பில்டரு  மொத ஆளா கையத் தூக்கி “அது செத்துப்போச்சு”ன்னு சொன்னான்....”கஞ்சா செடி வளக்குறவன் மாதிரி இருக்க...உங்கிட்ட பூ மொளைக்குற செடிய குடுத்தா செத்துதான் போகும்.... பீச்சுல போடுற பொம்மை ட்ரெஸ்ஸெல்லாம் போட்டா இப்டித்தான் இருக்கத் தோணும்”னு சொல்லிட்டு, “மத்தவனுங்க என்னடா பண்ணீங்க?”ன்னு கேக்க.....”அதெல்லாம் நல்லா இருக்கு....அதுல ரெண்டு மரமா வளர்ந்து அதுக்கடியிலதான் இப்பல்லாம் பஞ்சாயத்து நடத்துறோம்”னு அளந்து விட்டானுங்க.

சுச்சிய எழுப்பி “சாப்பாடு விஷயத்துல பாகுபாடு இருக்குன்னு அனத்திட்டு இருந்தியே என்ன விஷயம்?”னு கேக்க, “லெமன் விஷயத்துல கொஞ்சம் அவன் இவன்னு வித்யாசம் காமிச்சா மாதிரி இருந்துச்சு....அப்பறம் அத நானே டீல் பண்ணி முடிச்சுட்டேன்....ஃப்ரீயா விடுங்க”ன்னு உக்காந்துகிச்சு.

“சாப்பாடுன்னு சொன்னதுந்தான் நியாபகம் வருது....ஆமா சாப்பாட கொட்டுனது யாரு?”ன்னு ஆரம்பிச்சாரு ஆண்டவர். ஆரி உடனே “அரிசியாகப்பட்டது விதை நெல்லை வயலில் தூவி....தண்ணீர் பாய்ச்சி, நாத்து நட்டு, களை பறித்து, கொஞ்சி விளையாடும் எம் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்து பணி புரிந்து”ன்னு ஆரம்பிக்க, “யப்பா டேய்.....உங்க செட்டு என்னடா செக்குன்னாலும் சுத்துறீங்க....சிவலிங்கம்னாலும் சுத்துறீங்க....? ஷோவ முடிச்சிட்டு வீட்டுக்கு போறதா இல்லையா ? கொட்டுனது யாரு அவ்வளவுதான் என் கேள்வி?”ன்னு கதறுனாப்ல. சனம் எந்திரிச்சு “நாந்தாங்க அது.....ஏதோ மனவருத்தத்துல இருந்ததால சோறு இறங்கல....அதனால நானா இருக்கலாம்னு சொன்னேன். நீங்களே சொல்லுங்க பில்டர என் பையன்னு சொன்னா செரிக்குமா சோறு எனக்கு ? ஆரியா...அகலமா கால் வச்சு நடந்தா கூட தமிழ் தரைக்கு வலிக்கும், தாய் மண்ணுக்கு அரிக்கும்னு கடியப் போடுறான்”னு பொலம்புச்சு.

“சர்தான்... கேரக்டரா மாறிக்க வேண்டியதுதான.....அங்க பாரு அண்ணனும் தங்கச்சியுமா என்னா பெர்பார்மன்ஸ் குடுத்தானுங்க ரெண்டு பேரும்....ஆனா நீயும் ஒரு சாரி சொல்லிட்டு போற மேட்டருக்கு சங்கராபரணமே பாடியிருக்க வேணாம்”னு புத்திமதி சொன்னாப்ல.

“சரி, நல்லா பாத்துக்குறோம்னு சொன்ன செடிய எடுத்துட்டு வாங்க....அது எப்டி இருக்குன்னு நான் பாக்குறேன்”னு சொன்னாப்ல. எல்லாம் எடுத்துட்டு வந்தானுங்க....கடைசியில எவன் செடி எவனுதுன்னு கூட தெரியல, ரம்யாதான் செடிய பாத்துக்குதுன்னு சரண்டர் ஆணானுங்க. ஹமாம் சோப் ஆரி ப்ரோவும் “தன் செடி எதுன்னு தெரியல.....நான் வீட்டுல இந்த வேலைதான் பாக்குறதால....இங்க இவனுங்க எப்பிடி செடிய பாத்துக்குறானுங்கன்னு பாத்துட்டு இருக்கேன்”னு சொன்னதுக்கு ஜித்து பாய் “பேச்செல்லாம் பெருசா பேசுவான் இயற்கை, இடக்கை, இரும்புக்கைன்னுன்னு ஆனா செடிக்கு தண்ணி ஊத்த வலிக்கும் இவனுக்கு”ன்னு சொன்னதும், “ஆயிரக்கணக்கான நாட்டு விதைகளப் போட்டு செடிய வளத்து கின்னஸ் வாங்குன என்னய போயி இப்பிடி சொல்றானுங்க...இது தேசத்துக்கே கேடு”ன்னாப்ல ஆரி. “வெளியவும் சோறு தின்ன....அதனால இங்க மத்தவங்க எப்பிடி தின்றானுங்கன்னு பாத்துட்டு மட்டும் இருக்கலாம்ல...எதுக்கு சாப்புடுற? ஏண்டா செடிய வளத்து வைடான்னு சொன்னா மத்தவங்க எப்பிடி வளக்குறாங்கன்னு பாப்பாராம்....பெரிய பாட்டனி வாத்தியாரு....ஒழுங்கா வெள்ளன எந்திரிச்சு செடிக்கு உரம் போட்டு தண்ணி ஊத்து”ன்னாரு. ரம்யாவுக்கு நல்ல பாரட்டுகள சொல்லிட்டு...”உனக்கு ஆர்கானிக் விதை தர சொல்றேன்”னு சொன்னதுக்கு ரம்யாவுக்கு பல்லெல்லாம் வாய்.....!

“லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்கப் பத்தி பேசுவோமா?”ன்னு ஆரம்பிச்சதுமே...பில்டரு கையத்தூக்க....”இரு பதறாத...மொத பாதிக்கப்பட்டவங்க தரப்ப கேப்போம்”னு சொல்லிட்டு அர்ச்சனாகிட்ட கேக்க.....”எங்க சார் கேட்டானுங்க? ஒருத்தனும் புரிஞ்சுக்காம ஆளாளுக்கு விளையாடுறானுங்க. அதோ பில்டரு இருக்கானே புள்ளையா அவன்? 2 நாளா விளையாண்டு சேத்த பாயிண்டுல அவனா எதையோ நெனச்சு விளையாண்டு மொத்தமா மண்ணளிப் போட்டுட்டான்”னு பொலம்ப...”சார், விளையாட்ட சரியா புரிஞ்சுக்காம வில்லங்கத்துல மாட்டிக்கிட்டேன். ஆனாலும் தீபாவளி மளிகை சாமான் குடுத்து காப்பாத்தி வுட்டானுங்க”ன்னு மீசைய தடவுனான். “ஆமா பீச்சுல போடுற பொம்மை ட்ரெஸ்ஸெல்லாம் போட்டா இப்டித்தான் பேசத் தோணும். தீபாவளி மளிகை மட்டும் வரலேன்னு வச்சுக்கோ...சோத்துக்கு சிங்கிதாண்டி....இனியாச்சும் ஒழுங்கா புரிஞ்சு விளையாடு”ன்னு சொன்னாப்ல.

“சரி ஹாண்ஸ்ட்னா என்ன? ஹானஸ்டின்னா என்ன?”ன்னு அடுத்த பஞ்சாயத்துக்கு வரவும் பில்டருக்கு, சாத்தூருக்கும் வயிறு கலக்கி கக்கூஸுக்கு போற மாதிரி முகம் மாறுச்சு. கேபி “உள்ள பேசும்போது ஒழுங்கா பேசி முடிச்சிட்டுதான் போனான். வெளிய என்ன வெவகாரம் நடந்துச்சோ தெரியல...உள்ள வந்து உயிர வாங்கிட்டான்”னு சொன்னதுக்கு “வெளிய என்னடா நடந்துச்சு?”ன்னு ஆண்டவர் பில்டர்கிட்ட கேக்க...முடிஞ்சவரை மழுப்புனான். “டேய் என்ன நடந்துச்சுன்னு எனக்கே தெரியும்...பம்மாம உண்மைய சொல்லு”ன்னு சொன்னதும் சுச்சி எந்திரிச்சு, “நானும் அன்னைக்கு கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டேன்....கோவமா இருந்தான் பில்டரு...அவன ட்ரிக்கர் பண்ணது சாத்தூரு”ன்னு சொல்லிருச்சு. அப்ப பில்டர் சுச்சியப் பாத்த பார்வைய, சுச்சி பாத்திருந்தா பஞ்சராகி இருக்கும்....ஆனாலும் ரெண்டொரு நாளுல ஒரு பக்கமா சுச்சி வாய் வீங்கியிருக்குறத நாம பாக்குறா வாய்ப்பு கிடைக்கலாம்.

ஷிவானி கையத் தூக்கி “எங்க செட்டையே ஹான்ஸ்ட் இல்லாதவங்கன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு அதத்தான் அவங்கிட்ட சொன்னேன்”னு பளிச்சுன்னு சொன்னதும். ஆண்டவர் “ஆக மொத்தம் பில்டரு எதையுமே ஒழுங்கா புரிஞ்சுக்காத ஆளா இருக்கான்னு புரியுது...ஹான்ஸ்டா சொல்லுடான்னு சொன்னத ஹான்ஸ்ட் இல்லாதவன்னு சொன்னதா புரிஞ்சுக்கிட்டு ஒரு பஞ்சாயத்த இழுத்திருக்க..... பீச்சுல போடுற பொம்மை ட்ரெஸ்ஸெல்லாம் போட்டா இப்டித்தான் தப்பா எடுத்துக்க தோணும். காதல்ல இருக்குறது பிரச்சனையில்ல....காத தொறந்து வையி அது முக்கியம்”னு சொன்னாப்ல.

“ஆமா ஆறுபக்க வாக்குறுதிகள குடுத்து ஆரி கேப்டனா பதவியேத்தானே....சொன்னது எதும் நடந்துச்சா ? சொல்லுங்க எல்லாரும்”னு சொல்ல....பில்டரு எந்திரிச்சு “யாரு வம்புக்கும், தும்புக்கும் போகாம....கேஸ் எதுலயும் உள்ள வராம நல்ல கேப்டனா நடந்துக்கிட்டாரு”ன்னு வஞ்சப் புகழ்ச்சி பாடிட்டு உக்காந்துட்டான். அன்னப்போஸ்டு “காலையில எல்லாரும் தமிழ் தாய் வாழ்த்து பாடனும், தமிழ் தெரியாது போடான்னு சொல்றவங்கள தினம் ஒரு திருக்குறள் சொல்ல வைக்கனும். தமிழ் பூ 100 பெயர்கள பாக்காம எழுதுறவங்களுக்கு எள்ளு சட்னி பரிசா வைக்கப்படும், கக்கூஸ் மாப்புல சிலம்பம் சுத்தி வணக்கம் வைக்குறவங்களுக்கு வெண்டைக்காய் சூப்பு குடுக்கனும்னு பல திட்டங்கள வச்சிருந்தாரு...ஆனா இதயெல்லாம் பண்ணலாம்னு இவனுங்ககிட்ட சொன்னா இடியவே இடிக்கப் பாத்துறுவானுங்க...ஆல்ரெடி ஆர்ட்டான் கிரகத்துல இருந்து வந்தவன் மாதிரிதான் என்னய பாக்குறானுங்க....இதுல இதெல்லாம் பண்ண சொன்னா...பாலுல பால்டாயில கலந்துருவானுங்க....எதுக்கு வம்புன்னு மொன்னையா சுத்த ஆரம்பிச்சுட்டாரு”ன்னு ஃபினிஷ் பண்ணுச்சு.

சம்முவும்....”இந்த ட்ரியோ குரூப்பு அப்பிடியே கிச்சன் டீமா ஒதுங்கிட்டானுங்க. கேஸுன்னா ஒண்ணா நின்னவனுங்க....கேஸ் அடுப்பு பக்கத்துல அப்பிடி இல்ல...அவனுங்களுக்குள்ளவே ட்விஸ்ட் ஆகி சண்டை போட்டு எங்களுக்கு காபி, டீ கூட நேரத்துக்கு வரல”ன்னு சொன்னதும் சைனா பதறி “டாஸ்க்கு அதிகமா இருந்ததாலதான் டயத்துக்கு சோறு பொங்க முடியல...மத்தபடி பிரச்சனையில்ல. ஆரியப் பத்தி சொல்லனும்னா மத்தவங்க கேப்டனா இருந்தப்ப பொங்குன பாலா இருந்த மனுஷன்.... இவன் கேப்டனானதும் பால்கோவாவாதான் இருந்தான்”னு சொல்லுச்சு.

அன்னப்போஸ்டு உடனே “சம்முசும்மாசொல்லுதுமொதவிஷயம்நாங்க எங்களுக்குள்ளசண்டைபோட்டதுஉண்மைதான்ஆனாநாங்கஒரேமாதிரி யோசிக்குறோம்னுசொன்னதெல்லாம்தப்புசைனாவஒருடீம்லவச்சுக்கிட்டு ஒரேமாதிரியோசிக்கமுடியுமா?இல்லஎன்யோசனைக்கானஸ்பேஸதான் இவனுங்களாலஎனக்குகுடுத்துறமுடியுமா?ஆரிசொன்னதுக்கெல்லாம் தலையாட்டனும்னாபுல்லும்புண்ணான்ங்குந்தான்திங்கனும்ஒண்ணா உக்காந்துபேசிக்கிறதாலஒரேமாதிரிபேசிக்கனும்னுஅர்த்தம்இல்ல புரிஞ்சுக்கோங்க”ன்னு இந்த பாரால எப்பிடி ஸ்பேஸ் இல்லையோ அதே மாதிரி பேசி முடிச்சு....இல்ல இல்ல முடிக்கல....

“இப்பிடித்தான் கக்கூஸ் க்ளீனிங் டீம்ல கூட ஜித்துக்கும், சுளுக்கு மூஞ்சி சுச்சிக்கும் பஞ்சாயத்து. ஆனாலும் அத கண்டுக்கலையே எங்க கேப்டன்”னு சம்பந்தமில்லாம சொல்ல....”இப்ப இத வெளக்கு வைக்கலேன்னு யாரு அழுதா?”ன்னு ஜித்து சனத்த சைடா பாத்து கேக்க, சுச்சியும், ஜித்துவும் “அது ஒரு சின்ன பஞ்சாயத்து....கக்கூஸ் டீம்ல 4 வார சீனியரா இருக்குறதால நானே அத சரி பண்ணிட்டேன்”னு சொன்னாப்ல.

“ஆனாலும் சண்டைன்னா சந்து பொந்துக்குள்ள போயி ஒளிஞ்சுக்கிறியே ? ஆர்ம்ஸெல்லாம் ஆர்ம்ஸ்ட்ராங் மாதிரி இருக்கு...சுச்சிய எல்லாம் இன்னேரம் சுருட்டி ஊதியிருக்க வேணாமா?”ன்னு ஜித்து பாய ஏத்தி விட்டாரு ஆண்டவர்.

பின்ன ஆரி அனிதா & சனத்த பத்தி புகார் வாசிக்க ஆரம்பிச்சுட்டாப்ல. “இதுகள வச்சுக்கிட்டு இஞ்சி தட்டக் கூட முடியல....ஹச்சுன்னு தும்முன்னாக் கூட ஹர்ட் ஆகுதுன்னு சொல்லுது ஒன்னு....உன் பேரு என்ன?ன்னு கேட்டா சனமா கூட இருக்கலாம்னு சொல்லுது இன்னொன்னு....எங்க எப்ப பஞ்சாயத்து இழுத்துட்டு வரும்ன்னு பதட்டத்துலேயே இருந்தா.....ரெண்டும் ஆளு கிடைக்காம என் கழுத்த வந்து கடிக்குதுக”ன்னு கலங்குனாப்ல.

அன்னப்போஸ்டு மறுபடியும் “சம்முசும்மாசொல்லுதுமொதவிஷயம்நாங்க எங்களுக்குள்ளசண்டைபோட்டதுஉண்மைதான்ஆனாநாங்கஒரேமாதிரி யோசிக்குறோம்னுசொன்ன”ன்னு ஆரம்பிக்க ஆண்டவருக்கு அள்ளுவிட்டுருச்சு....”யம்மா தாயே நீ அப்பத சொன்னதத்தான் இப்பவும் சொல்ற...இப்ப சொல்றதத்தான் எப்பவும் சொல்லுவ....லேட்டா போனா வாட்ச்மேன் வீட்டுக் கதவ சாத்திருவாப்ல...நீ சொல்ல வேண்டியத தனியா கூட்டு போயி சொல்லிக்கோமா”ன்னு கேட்டப் போட்டாப்ல.

மறுபடியும் ஆரி பேச முற்பட.....”ஆமா உங்க 3 பேத்துல யாரு மொத பேச ஆரம்பிச்சு யாரு மொத முடிப்பா ? முடிப்பீங்களா மொதல்ல....மனோகரால்ல சிவாஜி கூட இப்பிடி நிப்பாட்டாம பேசுனதில்லடாப்பா....! இப்ப என்ன நீ நல்ல கேப்டன்னு சொல்லனும் அவ்வளவுதான ? சரி நீ நல்ல கேப்டன்....கேப்டனுக்கெல்லாம் கேப்டன்.....கேப்டனோ கேப்டன் போதுமா? உக்காரு”ன்னு சொல்லிட்டு ஆண்டவர் பிரேக்குக்கு ஓடிப்போன நேரத்துல

அன்னப்போஸ்டு : என்னடா.....என்னய பேச விடமாட்டேங்குறானுங்க ?

சனம் : ஏன்...பேசிட்டு தான இருக்க...?

அன்னப்போஸ்டு : நல்லா கவனிடா....என்னய பேச விடமாட்டேங்குறாங்க ?

சனம் : யாரும் அப்பிடி செஞ்ச மாதிரி தெரியலயே ?

அன்னப்போஸ்டு : சொல்றத நல்லா கேளுடா....என்னய ஒருத்தரு பேச விடமாட்டேங்குறாரு

சனம் : யார சொல்ற ?

அன்னப்போஸ்டு : கமல் சார் டா....என்னய பேச விடமாட்டேங்குறாரு....நிப்பாட்டுறாரு...! டோட்டலா அவர்கிட்ட இன்னைக்கு 1563728946532 லட்சம் வார்த்தைகள் தான் பேசுனேன்....அதுக்கு மேல என்னய பேச விடல

சனம் : (MV : பாதகத்தி.....ஆரி, அர்ச்சனாவ சொல்லுவான்னு பாத்தா ஆண்டவரையே அல்ளையில போட்டு மிதிக்கிறா ? ஆனாலும் கொஞ்சம் அலசி விடுவோம்) எனக்கென்னமோ அவருக்கு உன் மேல வருத்தம் போல....மக்களுக்கும் இருக்கலாம்

அன்னப்போஸ்டு : அய்யோ...அப்போ நான் இதப் பத்தி பேசுனாத்தான் மக்களுக்கும் அவருக்கும் புரியும்னு நெனைக்கிறேன்....அடுத்து என்ன டாஸ்க்கு வருதுன்னு பாத்து அந்த டாஸ்க்குல விடியுற வரை பேசி விட்டுற வேண்டியதுதான்...ஆனாலும் அவரு என்னய பேச விடாம நிப்பாட்டிட்டாப்ல...ஒன்சைடா வேற பேசுற மாதிரி இருக்கே....

சனம் :  (MV : ஆத்தீ....பேசவிடல பேசவிடலன்னு இவ பேசிப்பேசியே என்னய விட மாட்டேங்குறாளே....ஆண்டவரே அங்க இங்கன்னு சுத்தி உங்க மேல கேஸ் எழுதிட்டு இருக்கா இவ.....பிரேக்க முடிச்சுட்டு சீக்கிரம் வாங்க //

“பிக்பாஸன் விட்டாலும் நான் விட மாட்டேன். போன வாரத்துல யாரு போரிங் பெர்பார்மர்னு சொல்லுங்க?”ன்னு சொன்னதும் ஜித்து பாய் பில்டர சொன்னாப்ல, பில்டரோ “5 டாஸ்க்குல 4 டாஸ்க்கு வின் பண்ண என்னயப் போயி போரிங்னு சொல்றான் பொசக்கெட்டவன்”னு சொன்னதும், சனம் உட்பட பெரும்பாலும் எல்லாரும் சனம் பேர சொல்ல...அவங்கதான் போரிங் பெர்பார்மர்னு முடிவாச்சு. ஆனா இத பில்டரு எதிர்த்தான். அது சரி பீச்சுல போடுற பொம்மை ட்ரெஸ்ஸெல்லாம் போட்டா இப்டித்தான் செய்யத் தோணும்னு ஆண்டவர் நெனச்சுக்கிட்டாப்ல.

எழுத்தாளர் புவியரசு மொழிபெயர்த்த மிர்தாத்தின் புத்தகத்த அறிமுகம் செஞ்சாரு. சுச்சி குடுத்த சமையல் புக்கு நல்லாயிருக்குன்னு சொன்னாரு.

“சரி எவிக்ஷன் இல்ல..ஆனா உங்கள யாரு நாமினேஷன் செஞ்சிருப்பான்னு யூகமா சொல்லுங்க”ன்னு சொன்னார். சில பேரு கரெக்டாவே கணிச்சிருந்தாங்க. “ஆனா இந்த வாரம் கண்டிப்பா எவிக்ஷன் உண்டு”ன்னு சொன்னார். கடைசியா ஆரி 5ம் வருஷ கல்யாண நாளுக்கு வாழ்த்து கேட்டு வாங்குனார். ஆண்டவர் கிளம்பிட்டார்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)