பிக்பாஸ் – 4 : நாள் - 36 (09.11.20)
இவனுங்கள உள்ள இருக்குற ஹவுஸ்மேட்ஸுக்கு டாஸ்க் குடுக்க சொன்னா....பிக்பாஸ் எழுதுற ஆட்களுக்குதான் டாஸ்க் குடுக்குறானுங்க. ஒரு எபிசோட்ல ஒண்ணுமே இல்லாம என்னத்த எழுதுறது....? வாட் இஸ் திஸ் ரா....?
36வது நாள்
தீபாவளி வாரமாம்.
அதனால “தீபாவளி தீபாவளி” பாட்டு அலாரம். சாம்பல்ல பொரள்ற கழுதை மாதிரி கைய கால ஆட்டிட்டு
இருந்தானுங்க. ஷிவானி, ரம்யா, சம்மு இந்த 3 பேரத் தவிர வேற யாரு ஆடுறதையும் பாக்காம
இருக்குறது நம்ம பரம்பரைக்கே நல்லது.
கேப்டன் ஆரி
ப்ரோ எல்லாரையும் வட்டமா நிப்பாட்டி வச்சு “தமிழ்ல பேசனும்னு பிக்பாஸ் விருப்பபடுறதால,
இனிமே எல்லாரும் காலை வணக்கம், மாலை வணக்கம், இரவு வணக்கம், நல்லிரவு வணக்கம்னு சொல்லிப்
பழகுவோம்”னு சொன்னார். ஏன் அப்பிடி சொன்னாருன்னு நம்மளுக்கு மட்டுமில்ல...வீட்ல உள்ளவனுங்களுக்கும்
புரியல. ஏன்னு கேட்டா ஏலாதி, திரிகடுகம்னு கலந்துகட்டி பேசி சாவடிச்சுருவாப்ல. அந்த
பயத்துலயே எவனும் வாய தொறக்கல.
கிச்சன் டீம்ல
அன்னப்போஸ்டு, சனம், ஆரி, ரியோ தான் உறுப்பினர்கள். சகுனி போனதால அன்னப்போஸ்டு முகத்துல
ஒருவித தெளிச்சி. அன்னப்போஸ்டு தெளிவா இருந்தா சண்டா மந்திரம் வேலை செஞ்சுருமே....
ஆரியோட அறிவுறுத்தலின் படி பொங்கல் பண்ணலாம்னு சனம் முயற்சி செய்ய, அங்க வந்த அன்னப்போஸ்டு
அன்னப்போஸ்டு
: துவரம்பருப்ப எங்க ? சாம்பார் வைக்கனும்
சனம் : அதெல்லாம்
தீந்துபோச்சு...பாசிப்பருப்புதான் இருக்கு
அன்னப்போஸ்டு
: அது இருக்கட்டும்.....எனக்கு துவரம் பருப்பு வேணும்
சனம் : இதென்ன
அண்ணாச்சி கடையா ? நீ கேக்குறத எடுத்துக் குடுக்க ? இருக்குறது பாசிப்பருப்புதான் அத
வச்சு சாம்பார பண்ணு அதையே மதியானத்துக்கும் யூஸ் பண்ணிக்கலாம்....கேஸ் வேற இல்ல.
அன்னப்போஸ்டு
: எங்கிட்டயே கேப் விடாத பேச்சா ? என்ன 1 வாரம் சைலண்டா இருந்தா டொக்காகிட்டேன்னு நெனச்சியா
? நீ கெளம்பு நான் பிக்பாஸ்கிட்ட பேசிக்கிறேன்...
சனம் : அதான
நீ பேசாட்டிதான் அதிசயம்
அன்னப்போஸ்டு
: யோவ் ரியோ....எதாச்சும் ஒரு டிஷ் சொல்லு செய்யலாம்
ரியோ : எனக்கு
அதெல்லாம் தெரியாதே
அன்னபோஸ்டு
: சாப்பிட தெரியுமா ? பின்ன சொல்றதுக்கு என்ன கேடு
ரியோ : அன்னப்போஸ்டு
பாத்துப் பேசு...இது நல்லதுக்கு இல்ல....ட்ரெஸ்ஸு போடுறவனுக்கு பூராம் தைக்க தெரியனும்ன்ற
மாதிரி இருக்கு நீ சொல்றது....
அன்னப்போஸ்டு
: டேய்....புத்தியுள்ளவன் எவனாச்சும் பாசிப்பருப்பு சாம்பார சோத்துக்கு ஊத்துவானா
? என்னங்கடா இது...?
சனம் : யம்மா
இப்ப பொங்கல் பண்றோமா இல்லையா ?
அன்னப்போஸ்டு
: நீ ஆரி சொன்னா தீபாவளியே பண்ணுவ...அதுக்காக
எங்கிட்ட வந்து ஏறாதா சரியா ?
சனம் : இந்தா....ஆரிய
ஏன் இழுக்குற அவன் கூட எனக்கென்ன பிரச்சனை ?
அன்னபோஸ்டு
: நான் அப்பிடித்தான் சொல்லுவேன் அது என் இஷ்டம்....
இதுக்கு இடையில
சோமு அனிதாவ கலாச்சுட்டு இருக்க , இப்ப ரியோவும் கூட சேர்ந்து கட்டையக் குடுக்க.....அன்னப்போஸ்டு
ஆங்ரியா பெட் ரூம்ல போயி படுத்துருச்சு.
ரியோ ஆரிய கூப்ட்டு,
“அன்னப்போஸ்ட சொல்லி வைங்க....வார்த்தை தப்பா வருது...அப்பறம் பில்டரா நான் மாற வேண்டிய
வேலை வந்துரும்...இப்பிடி மூஞ்சிய தூக்கிட்டு சமைச்சா உடம்புல ஒட்டுமா?”ன்னு சொல்லிட்டு
போயிட்டான். பாவம் இவ்வளாவு நேரமாகியும் யாருக்கும் டீ வரல போல. நிஷா பொலம்பிட்டு இருந்தாங்க.
பின்ன அன்னப்போஸ்டா
எந்திரிச்சு வந்து கிச்சன்ல வேலை செய்ய, ரியோ “இந்தா கோவமா போனேல்ல.... அப்டியே போயிரு
நாங்க பாத்துக்குறோம்”னு சொன்னதும், “சண்டைய தடுத்து விடாம நீ என்னய ஓட்டிட்டு இருக்கல்ல...பாத்துக்குறேண்டா”ன்னு
சொல்ல, ரியோ “நீ நடிக்காத”ன்னுட்டான். பின்ன அதுவே இறங்கி வந்து சமாதன ஹக்கு பண்ணிக்கிச்சு
ரியோவோட.
ஆரியும் வந்த
உடனே சனத்துக்கிட்ட “பொங்கல் பண்ணலாம்னு சொன்னது நாந்தான்....ஆனா பருப்பில்லன்னு எங்கிட்ட
சொல்லியிருக்கலாம்ல?”ன்னு அன்னப்போஸ்டுக்கு பயந்து சனத்துக்கிட்ட சட்டம் பேசுனாப்ல.
ரைட்டு.....!
இந்த குக்கிங் டீம்தான் இந்த வாரம் இவனுங்களுக்கு 3 வேளையும் சமைச்சுத் தரனும். சிறப்பா
இருக்கும்னு எதிர்பாப்போம். பை த வே.....இன்னும் பொங்கல் ரெடியாகல.
மத்த ரெண்டு
குரூப்புக்கு எதிரா ஆரி ஃபார்ம் பண்ண குரூப் இது. குரூப்புகளுக்கு இடையில சண்டை வரும்
சரி.....ஆனா குரூப்புக்குள்ளையே சண்டை வந்துருச்சு.....! அன்னப்போஸ்டையும், சனத்தையும்
நம்பி எவனாச்சும் குரூப் ஆரம்பிப்பானா ? ஆரிக்கு இதுகள கவனிக்கவே நேரம் இருக்காது....பாவம்
கேப்டன் ஆரி.
வெளிய வந்து
சோமன், ரியோ, ஜித்து பாய் 3 பேரும் அன்னப்போஸ்ட பத்தி பேசிக்கிட்டானுங்க. “இத சமாளிக்குறது
வரும் நாட்கள்ல பெரிய டாஸ்க்கா இருக்கும்”னு சொல்லிக்கிட்டானுங்க.
மத்த ரெண்டு
டீமும், அதாவது அர்ச்சனா டீமும், சம்மு டீமும் இந்தக் கூத்தையெல்லாம் பாத்து ரசிச்சிட்டு
இருந்தானுங்க.
அடுத்து நாமினேஷன்னு
சொன்னதும். வெளிய ஹவுஸ் மேட்ஸ் போஸ்டர் ஒட்டுன மெகா சைஸ் வெடிகள் இருந்துச்சு. யார
நாமினேட் பண்றோமோ...அந்த வெடில இருந்து மருந்த எடுத்து நடுவுல இருக்குற சட்டில போடனும்.
இவனுங்க டைப்புல
உண்மையாவே வெடி இருந்தா எப்பிடி இருக்கும்
?
அர்ச்சனா வெடி
– இந்த வெடிய பத்த வச்சா சாம்பார், ரசம், சிக்கன் குழம்பு இப்பிடி சமையல் வாசனை வரும்.
ரொம்ப முக்கியமா இந்த ஒரு வெடிய பத்த வச்சா பின்னாடியே நிஷா வெடி, ரியோ வெடிகளும் சேர்ந்து
வெடிக்கும்....வெளிய இருக்கும் வேல்ஸ் வெடி கூட வெடிக்கும்னா பாத்துக்கோங்க.
பில்டர் வெடி
– இந்த வெடிகிட்ட பத்த வைக்கவா?ன்னு கேட்டா “வச்சுகோங்க”ன்னு சொல்லும்....பத்த வைக்க
மாட்டேன்னு சொன்னா “வைக்காதீங்க”ன்னு கவுண்டர் குடுக்கும்.
ஆஜீத் வெடி
– கடைசி வரை வெடிச்சுச்சா இல்லையான்னே தெரியாது
ஜித்து வெடி
– பத்த வச்சதும் சைடா சாஞ்சு விழுந்து வெடிக்கும்
சனம் வெடி –
பத்த வச்சுட்டு பாலான்னு சொன்னாதான் வெடிக்கும்
ஆரி வெடி –
அத நல்லா தொடச்சு, திரியா அளவா பிச்சு, வெடி ஹோல்டர்ல வச்சு, புது ஊதுவத்தியால பத்த
வைக்கனும்....முக்கியமா நீங்க உழைச்சு சம்பாரிச்சு நேர்மையா வாங்கி இருக்கனும்.....இல்லேன்னா
வெடிக்காது
ஷிவானி – எப்ப
பத்த வச்சாலும் சாயங்காலம் 4 மணிக்குதான் வெடிக்கும்
கேபி வெடி –
பத்த வச்சதும் ரெண்டு குதி குதிச்சுதான் வெடிக்கும்.
சம்மு – பத்த
வைக்கவே வேணாம். கேப்டன்னு சொன்னாலே போதும் வெடிச்சிரும்
சுச்சி வெடி
– பத்த வைங்க.....வெடிச்சா வெடிக்கும்
சோமு வெடி –
நாய்ஸ் ப்ரூஃப் வெடி....வெடிச்ச சத்தமே கேக்காது
ரம்யா வெடி
– மொட்டை மாடில வச்சாதான் வெடிக்கும்
அனிதா வெடி
– இங்கல்லாம் ஸ்பேஸ் பத்தாம...பத்த வச்சதும் ராக்கெட்டா மாறி ஸ்பேஸுக்கே போயி வெடிக்கும்.
எல்லாரும் வந்து
நாமினேஷன சொல்லி முடிக்க. தீபாவளினால இந்த வாரம் நோ நாமினேஷன்னு சொல்லிட்டாப்ல பிக்கி.
ஆனா அன்னப்போஸ்டு, சுச்சி, கேபி, சம்மு, பாலா இவங்கதான் நாமிநேஷன்ல இருந்தானுங்க.
இன்னைக்கு முழுக்க
பில்டர காமிக்கவே இல்ல....அப்பறம் பாத்தா சுச்சி கூட லான்ல லாந்திக்கிட்டு இருந்தான்.
சோமு வெடியப் பாத்து “இவன் நல்ல காம்ப்பட்டிட்டரா வருவான்னு பாத்தா பொழுதுக்கும் பொம்பள
புள்ளைங்கக் கூட உக்காந்து பொரணி பேசிட்டு இருக்கான்”னு வருத்தப்பட்டான் பில்டரு. சுச்சியோ
அன்னபோஸ்டு ஃபோட்டோவ பாத்துட்டு அழகு மூஞ்சின்னு சொல்லிட்டு இருந்துச்சு.
மிஸ் பண்ற ஆளுகளுக்கு
கடிதம் எழுங்கன்னு தூக்கிட்டு வந்தாப்ல பிக்கி. பூராம் வைரமுத்து மாதிரி பேடும், பேனாவுமா
போஸ் குடுத்துட்டு இருந்தானுங்க.
இப்பவே கண்ணக்
கட்டுதேன்னு ஒரு டாஸ்க். டேய்...இத நாங்க சொல்லனும்.
2 டீமா பிரிஞ்சு
ஒரு ஒரு ஆளா வந்து கம்புல தலை வச்சு சுத்திட்டு நேரா ஓடிப்போயி அந்த முனைய தொட்டுட்டு
வரனும். பூராம் சிடிய பாத்த சாத்தான் மாதிரி “பவர்”னு விழுந்துட்டு இருந்தானுங்க.
கிச்சன் டீம
தவிர்த்து மத்த எல்லாரும் ஜாலியா பெட் ரூமுல அரட்டை அடிச்சிட்டு இருந்தானுங்க.
“இப்ப எழுதுன
லெட்டெர முன்ன வந்து படிங்க”ன்னு சொன்னாப்ல. பில்டருக்கு யாரோ எழுதி குடுத்துட்டானுங்க
போல. ஆரி தான் ஈழத்து மாப்பிள்ளைன்னு சொன்னது தேவையில்லாத ஆணி. சோமன் தன் டாகிக்கு
லெட்டர் எழுதுனது நெகிழ்ச்சி. ரியோ பீருக்கு கடிதம் எழுதுனது மகிழ்ச்சி. மத்த எல்லாரும்
குடும்ப உறுப்பினர்களுக்கு கண்ணீர் மல்க எழுதுனானுங்க.
அன்னப்போஸ்டு வழக்கம்போல தன் காளை மாட்டுக்கு கடிதம்
எழுதி வாசிச்சாங்க. “கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து”ன்னு அவங்க பாடுனப்ப நல்ல
வேளை சகுனி இல்ல, இல்லேன்னா “என்னடா இது எப்பப் பாத்தாலும் நல்ல நாளும், பெரிய நாளுமா
விதவை, கல்லறைன்னு கதறுது”ன்னு கரைச்சல் பண்ணியிருப்பாப்ல.
முடிக்கும்போது
அன்னப்போஸ்டு “என் வாழ்க்கையில உன்ன பாக்கலேன்னா நான் என்னவாகியிருப்பேன் பாப்பு?”ன்னு
கேட்டதுக்கு......”அவரு நிம்மதியா இருந்திருப்பாரு”ன்னு நாம சொன்னது அன்னப்போஸ்டுக்கு
கேட்டிருக்காதுல்ல......? ப்ப்ச்ச்.....சோகங்கள்.
Comments
Post a Comment