பிக்பாஸ் – 4 : நாள் - 53 & 54 (27.11.20)

 53வது நாள்

“டெலிஃபோன் அடிக்குது” பாட்டு அலாரம். கால்செண்டர் டாஸ்க் நடக்குறதாலையாம். பாட்டு போடுற ஆளு 90ஸ் கிட் போல....பாட்டு போட்ட வித்யாசாகருக்கே இந்தப் பாட்டு மறந்து போயிருக்கும். வீட்ல உள்ள ஆளுகளுக்கு இந்தப் பாட்டு தெரியல போல. ஆனா ஆரி ப்ரோ இதுக்கு வாயசைச்சு பாடிட்டே ஆடுனது, அவரு அர்ஜுன் ரசிகராவோ இல்ல ரஞ்சிதா நற்பணி இயக்கத்துலையோ இருந்திருக்க சாத்தியம் இருக்கு. கூடவே “பேலு பூரி கா ரஹா தா”ன்னு அர்ச்சனா குரூப்பு நடத்துன ஹிந்தி அந்தாக்ஷரில கூட “இந்தி தெரியாது போடா”ன்னு அவரு கலந்துக்காம விட்டத நாம கவனிக்கலாம். பட் இந்தப் பாட்டுக்கும் அவ்ளோ அழகா ஆடுனாங்க ஷிவானியும், சம்முவும்.

நிஷா டூ அன்னப்போஸ்டு

அன்னப்போஸ்டு : வணக்கம் உங்களுக்கு என்ன வேணும் ?

நிஷா : என் பேரு நிஷா....

அன்னப்போஸ்டு : என் பேரு அனிதா. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சு. நான் ஒரு பொம்பள. எனக்கு அரசியல் தெரியும். நான் ஒரு ஜர்னலிஸ்ட். எங்க அம்மா கருப்பா இருப்பாங்க. என் கணவர் என்னய கன்னுக்குட்டின்னு கூப்டுவாரு.

நிஷா : (MV : உன்னய கூப்ட்டேன் பாரு என்னய சொல்லனும்) ஆரம்ப காலத்துல எங்கிட்ட அன்பா இருந்தீங்க. அம்மா மாதிரின்னு.....

அன்னப்போஸ்டு : அம்மா மாதிரி இல்ல.....உங்கள மாதிரி எங்க அம்மா கருப்பா இருப்பாங்கன்னு சொன்னேன்.....அது போக ஆரம்ப காலத்துல நான் என் வாழ்க்கையில பட்ட கஷ்டங்கள் உங்களுக்கு தெரியும்.....ஹால்ல இருந்து கிச்சனுக்கு நடந்தே போவேன்...காலெல்லாம் வலிக்கும் ஆனாலும் போவேன்.....

நிஷா : இல்ல நான் கேக்க வந்தது அது இல்ல என் கூட முன்ன மாதிரி இல்லையே அத கேக்க.....

அன்னப்போஸ்டு : உங்க கூட இருக்குறதுல எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல...ஆனா என்னோட முடிவுகள் சுயமா எடுக்க வேண்டிய அந்த தருணத்துல தவிர்க்க முடியாத தாத்பரியங்கள் கொண்ட கணிப்புகள இம்மியளவும் விதிமுறைகளுக்கு மாறா நிகழ்வுகள....

நிஷா : அதான் நான் சொல்லவந்தது....

அன்னப்போஸ்டு : நான் கேமரா என் பக்கம் திரும்பனும்னு தனியா போயி உக்காந்ததா எல்லாருக்கும் முன்னாடி நீங்க ஏன் சொன்னீங்க ?

நிஷா : அது வந்து நீ தனியா போயி.....

அன்னப்போஸ்டு : தனியா போயி உக்காந்ததால தனியாவே இருக்கேன்னு நீங்க நெனச்சதுதான் இங்க பெரிய கேள்வியா இருக்கும்போது தனியா இருக்க வேண்டிய அவசியத்த இந்த வீட்ல எனக்கு நீங்க குடுத்தத நெனச்சு வருத்தப்பட்டதாவோ துயரப்பட்டதாவோ துக்கப்பட்டதாவோ எனக்கு தெரிஞ்ச மாதிரி நீங்க தெரியாம இருக்குறத பாக்குறப்போ எனக்கு என்னன்னு சொல்ல தோணுறதையெல்லாம்.....

நிஷா : (MV : ஆத்தீ இவ ஸ்பேஸ் தேட ஆரம்பிச்சுட்டா....நாம அன்னை எழுதிக்குடுத்தத ஒப்பிச்சுட்டு போயிருவோம் ) அனிதா.....இந்த வீட்ல தந்தை, அண்ணன், தம்பி, ஒண்ணுவிட்ட தங்கச்சி நாத்தனார், பெரியம்மா மகளோட தாத்தாவோட தம்பி இப்பிடி எல்லா உறவுகளையும் நான் ஒருத்தன் கண்ணுல பாக்குறேன் அதான் ரியோ.....! ஆனா இப்ப எதுக்கு இத சொன்னேன்னு எனக்கு தெரியல....அன்னை எனக்கு குடுத்த இன்னைகான ப்ராஜக்ட் இதுதான்...சோ அவ்வளவுதான்....

பஸ்ஸரடிச்சிருச்சு. அர்ச்சனா குடும்பத்துல இருந்து யாரு மேடைக்கு வந்தாலும் ரியோவ ப்ரமோட் பண்றதையும், பாலாவ குற்றம் சொல்றதையும் முழுநேர வேலையாவே வச்சிருக்கானுங்க. அனிதா விஷயத்துல ரியோ பத்தி எதுக்கு பேசனும் ? கேட்டா நம்மள நாலு காலு மிருகம்ன்றுவானுங்க.

அப்பறம் “வந்த ரெண்டாவது நாள் ஜித்து பாய் என்னய பாத்து இன்னைக்கு அழகா இருக்கன்னு சொன்னாரே? அப்ப அதுக்கு முன்னாடி நான் அசிங்கம்னு சொல்ல வந்தாரா ? இல்ல இந்த வீட்டுக்கு வந்துதான் அழகானேன்னு சொன்னார ? இன்னைக்குன்னு அழுத்தி சொல்லும்போது அது நேத்தையவோ, அடுத்த நாளையவோ குறிக்காது. அப்போ கண்டிப்பா என்னய அசிங்கமா இருக்கேன்னு வெளிய ரெஜிஸ்டர் பண்ண பாத்திருக்காரு.....ரைட்டு இந்த டீயக் குடிச்சிட்டு உள்ள போயி ஆரம்பிச்சுடலாம்”னு கைல டீ கப்போட ரெடியாகிட்டு இருக்க, பிக்பாஸ் “லூசு....உன் போர்ட நிஷாவுக்கு மாட்டிவிடு”ன்னு சொல்ல, “இதோ உடனே போயி மாட்டிவிடுறேன்.....ஆனா என் போர்ட எனக்கு மொத யாரச்சும் மாட்டிவிடுங்க. எங்க வச்சேன்னு தெரியல”ன்னு பொலம்பிட்டே போச்சு....! தேடி கண்டுபிடிச்சு உள்ள போயி நிஷாவுக்கு மாட்டிவிட்டா, அது “தாலி, காலி, இங்க எல்லாரும் போலி”ன்னு சர்காஸம் பண்ணுச்ச்சு. இப்ப இந்த குடும்பம்  இவனுங்களத் தவிர எல்லாரையும் போலின்னு சொல்ல ஆரம்பிச்சுட்டானுங்க. கூடிய சீக்கிரம் தனி சமையல ஆரம்பிச்சுடுவானுங்கன்னு நெனைக்கிறேன். அன்பு அவியல், பாசப் பொரியல், கருணைக் குழம்பு இதெல்லாம் தான் அவனுங்க மெனுவா இருக்கும்.

இப்ப அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த ஆரி ப்ரோ டூ ஷிவானி

எடுத்ததும் “எனக்கு வேற வழியே இல்லாமதான் உங்கிட்ட பேசுறேன்”னு சொல்லிட்டு, “காதல் கண்ணை மறைக்குதுன்னு சொன்னது நாந்தான். உனக்கும் பாலாவுக்கும் உண்மையாவே என்ன ? காதலா? நட்பா?”ன்னு சாலமன் பாப்பையா தலைப்பு குடுத்தா மாதிரி குடுக்க, “அது ஒரு அன்பு கலந்த நட்பு”ன்னு சொல்லி முடிச்சிடுச்சு சாத்தூர். “ஃபைனலுக்கு யார் வருவா?”ன்னு கேட்டதுக்கு ஆரி ப்ரோ பேர மட்டும் அப்ரூட்டா கட் பண்ணிட்டு அது பேரு, சம்மு, ரம்யா, பில்டரு, ரியோ பேர சொல்லுச்சு. கால் ஆரம்பத்துல ஷிவானிய “இஞ்ஞாயி”ன்னு கத்த சொல்லி கேட்டு வாங்குனாப்ல ஆரி ப்ரோ. என்னா டேஸ்ட்டுயா உனக்கு !

வெளிய அந்த லான்ல லவுஞ்சுல....அன்னை மடியில தலைய வச்சுக்கிட்டு, அக்கா அவன் தலைய கோத அன்பு வெள்ளத்துல மிதந்துகிட்டு இருந்தான் ரியோ....கலமுக்கிவிட்டுட்டு இருந்த சோமு கக்கூஸ் போயிட்டான் போல....! சட்டுன்னு வந்த சனம் “நேத்து சம்பவத்துல இருந்து வீடே நெகட்டிவிட்டில நிரம்பி வழியுது. இப்போதைக்கு இந்த சண்டைய முடிச்சுக்குவோம். திங்கக்கிழமை இருந்து புதுசா ஆரம்பிப்போம்”னு சொன்னதுக்கு, அன்னை குடும்பம் “இல்ல பையன் ரொம்ப சோர்வா இருக்கான். இந்த வாரம் கேப்டன் வேறையா! பாவம் எவ்வளவுதான் வேலை பாப்பான். நாங்களே சூப்பும், சிக்கனுமா குடுத்து உடம்ப தேத்தனும்னு பாத்துட்டு இருக்கோம். இனிமே சரி பண்ற வேலையில இறங்குனா மறுபடியும் டயர்டாகிருவான் அதனால வேணாம்”னு சொல்லிட்டு தாலாட்டு பாட ஆரம்பிச்சுட்டானுங்க.

“வெள்ளம் வந்து தண்ணி புகுந்துருச்சு. அப்பிடியே உங்கள விட்டுட்டா தமிழ்நாட்டுக்கு நல்லதுன்ற எண்ணம் வந்தாலும், கொலை கேஸாகிரும்ன்ற காரணத்துனால இன்னைக்கு ஒரு நாள் ராத்திரி வேற இடத்துக்கு ஷிஃப்ட் பண்றோம் ஆனா அங்கையும் இதே ரூல்ஸ் தொடரும்”னு சொன்னாப்ல. பாவம் அன்னை குடும்பத்து ஆட்கள் எப்பிடி இந்த ராத்திரி பிரிவ தாங்குவானுங்கன்னு தெரியல....!

54வது நாள்

மறுபடியும் எல்லாரும் உள்ள வந்தானுங்க. வந்ததும் “ராயபுரம் பீட்டரு” ஆடுறதுக்கு போட்டானுங்க. சம்முவும், ஷிவானியும் மழையில கெட்ட ஆட்டம் போட.....அடடா மழைடா....அடை மழைடான்னு இருந்துச்சு. கொஞ்ச நேரம் அன்னப்போஸ்ட காமிக்காம இருந்ததால அத அப்டியே விட்டுட்டு வந்துட்டானுங்கன்னு பாத்தா, ஓரமா நின்னு ஆடிட்டு இருந்துச்சு. இந்த டான்ஸ் மேட்டர்ல ஒண்ணு சொல்லனும்....ஒரு ப்ரொஃபஷனல் டான்ஸரா மட்டுமில்லாம, ரசிக்கிற வகையில ஸ்டைலா ஆடக்கூடிய ஆள் இந்த வீட்ல கேபி. ஆனா என்ன காரணமோ தெரியல அந்த விஷயத்த அந்த பொண்ணு வெளிய சரியா காட்டவே இல்ல.....ஆனா வ.வா சங்க உறுப்பினர்கள் ரம்யா, ஷிவானி, சம்மு இந்த 3 பேரும் இத கைல... சாரி கால்ல எடுத்துக்கிட்டு கிட்டத்தட்ட கேபிக்கு டான்ஸ் ஆட வரும்ன்றதையே மறக்கடிச்சுட்டானுங்க. இதையெல்லாம் இந்த அன்னை குடும்பம் சொல்லிகுடுக்கலாம் ஆனா அவனுங்களுக்கு அன்புக்கு ஸ்பெல்லிங் சொல்லிக்குடுக்கவே நேரம் பத்த மாட்டேங்குது.

“ஏண்டா கேப்டன்னா ஒரு நிலையா இருக்குறதில்லையா ? யாரும் தூங்கக் கூடாதுன்னு சொல்லிட்டு சோமன் மட்டும் தூங்குறான் என்னங்கடா இது நியாயம்?”னு சனத்துக்கிட்ட பொலம்பிட்டு, கிச்சன்ல போயி வைஸ் கேப்டன் ஷிவானிகிட்ட “அந்த கரப்பான் பூச்சிய எல்லாம் என்னால கேப்டனா ஏத்துக்க முடியாது. தூங்குறதுக்கு பெர்மிஷன் கிடைக்குமான்னு கேட்டு சொல்லு”ன்னு கேக்க, “வேணாம்னு சொன்னா மட்டும் கேக்கவா போற?”ன்னு “தூங்கலாம்ப்பா”ன்னு சொல்லி ரியோ அனுப்பிவிட, உள்ள சனம் “நான் கேட்டப்ப மட்டும் செல்லய திருப்பிருவேன்னு சொன்னான்”னு சொல்லி ஷிவானிகிட்ட “கேட்டு சொல்லு”ன்னு சொன்னதுக்கு, ரியோ “அசிங்க அசிங்கமா கேப்பேன்னு சொல்லி எழுப்பிவிடு”ன்னுட்டான்.

இத அவனே வேற வந்து “நீயும், அன்னப்போஸ்டும் ஆரம்பிச்சது...இப்ப மொத்த வீடும் கேக்குறானுங்க ஒழுங்கா எந்திரிங்க”ன்னு சொன்னதும், “ரொம்ப பண்ணாதடா டேய்”னு ஆரம்பிச்சு சனம் ரயிலோட்ட ஆரம்பிக்க, ரியோ “அப்டியே பேசிட்டே இரு ஒரு டீ சாப்ட்டு வரேன்”னு சொல்லி கலாய்ச்சுட்டு போயிட்டான்.

“மத்தத அடுத்த வாரம் பாத்துக்கலாம். இந்த வாரம் பாயிண்ட்டுகள வாங்கிக்கோங்க”ன்னு அள்ளி குடுத்தாப்ல பிக்கி.

இப்ப பெஸ்ட் & ஒர்ஸ்ட் பர்ஃபார்மர் செலெக்ஷன். பில்டரு, ரம்யா, ஜித்து பாய் கேப்டன் கேண்டிடேட்ஸ். பில்டரு கண்டிப்பா ரம்யாவ கேப்டனாக்க பாடுபடுவான்.

அடுத்து ஒர்ஸ்ட் பெர்ஃபார்மர். ரியோ, நிஷா, ஆரி ப்ரோ 3 பேரும் ரேஸ்ல இருந்து ரியோ & ஆரி ப்ரோ ஓய்வறை. அன்னை கண்ணுல “இன்னும் இந்த வீடு இடிஞ்சு விழாம இருக்கே? அன்பின் ஆருயிர் மகன் ஓய்வறைக்கு செல்லுவதா ?” ன்னு கோவம் தெரிஞ்சது.

உள்ள ஆரியும், ரியோவும். வெறுஞ்சோறும், விஷமும் சேந்த காம்பினேஷன். “பில்டரு எப்பவுமே அவன் தப்ப மறைக்க மொத வேலையா 2 ஆள நாமினேட் பண்ணி மத்தவங்களா செட் பண்ணி விட்டுருவான்”னு சொல்ல, ரியோ “அவனையே ஏன் கட்டிட்டு அழுகுறீங்க? அவன விட்டுட்டா நெறைய அழகான விஷயம் இருக்கு இந்த வீட்ல....வேணும்னா எங்க அன்பு இயக்குத்துல சேரலாமே”ன்னு கார்டு குடுத்தான். ஆனா பில்டரு எத்தனை தடவ ஒர்ஸ்ட் பர்பார்மன்ஸ் சொல்றப்போ மொத ஆளா எந்திரிச்சு மைண்ட் செட் பண்ணான்னு தெரியல ? அடித்து விடுகிறாரா ரியோ ப்ரோ ? தொடர்ந்து பேசுவோம்.

அப்பறம் ஹமாம் சோப்பு இன்டெகரேஷன். ரெண்டு ரெண்டு பேரா ஜோடி சேர்ந்து சிலம்பு ஸ்டெப்பு போடனுமாம். சோம் & அர்ச்சனா ஜட்ஜு. சோமு கோச்.

சோமு : என்ன என்னய போயி கோச்சுன்றானுங்க ?

அன்னை : டேய் நீ மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆளுல்ல....இரு இரு உண்மையாவே நீ மிக்ஸ்டு மார்ஷியல் சாம்பியன் தானா ? எனக்கு சந்தேகமா இருக்கே ?

சோமு : (பதட்டமாகி )ஏய்....அதெல்லாம் நான் சாம்பியன் தான். சிலம்பு தான அதெல்லாம் சுத்திரலாம்....இதெல்லாம் ஒரு விஷயமா நீ போயி லான்ல நில்லு...நான் போயி கை கிளவுஸ் போட்டுட்டு வரேன்......! யாருகிட்ட.....

அன்னை : சிலம்புக்கு கிளவுஸா ? ரைட்டு //

சைடு கேட்டு வழியா போயி ஜெயில்ல இருந்த ஆரி ப்ரோகிட்ட சிலம்பம் ஸ்டெப்பு கத்துக்கிட்டு இருந்தான். “ஹாமாம், சிலம்பம் இது ரெண்டத்துக்கும் சம்பந்தமான ஆளு நாந்தான். என்னய விட்டுட்டு இந்த சொம்பு சோமன கத்துகுடுக்க சொல்றானுங்க”ன்னு மனக்கவலையோட சொல்லி குடுத்தாப்ல.

இதுல ரம்யா & அன்னப்போஸ்டு டீம் வின்னு. கூடை நிறை ஹாமாம் சோப்பு குடுத்தானுங்க. வரட்டும் ஆண்டவர்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)