பிக்பாஸ் – 4 : நாள் - 43 (16.11.20)

 42வது நாள் தொடர்ச்சி.....

அசிங்கப்பட்ட அன்னப்போஸ்டோட செனத்தவளை சிரிப்பு....அது பேச்ச விட கொடூரமா இருக்கும்.

கொத்தடிமைத்தனத்துல இருந்து மீட்பு குழு மீட்டதால சுதந்திரக் காத்த சுவாச்சிட்டு இருந்த சோப்ளாங்கி சோமன் பழைய அடிமை பாசத்துல அன்னப்போஸ்டுகிட்ட வந்து  “என்ன ஆண்டை சவுக்கியமா?”ன்னு ஆரம்பிக்க....”ஏண்டா சோமா, எதுக்க வரவே பயந்த ஒரு காலத்துல...ஆனா இப்ப என்னய எழுப்பிவிட்டு சவுக்கியமான்னு கேக்குற....? நேத்து என்னடான்னா நீ மாறிட்டன்னு சொல்லி, நான் உங்கிட்ட ஒரு வாரமா பேசலேன்னு அந்த ஒன்சைடு ஒலக நாயகன் கிட்ட என்னயவே கம்ப்ளெயிண்ட் பண்ற. வந்த 2வது வாரம் அந்த சோஃபாவ சுத்தி சுத்தி வந்து எங்கிட்ட மன்னிப்பு கேட்டியே நியாபகம் இருக்கா ? 10 மணிக்கு நான் எந்திரிக்கிற வரை காத்திருந்து...பல்லு வெளக்கவா?ன்னு கேட்டுட்டு போவியே மறந்துட்டல்ல....? இப்ப என்னடான்னா என் முன்னாடியே....ரம்யா கூட டான்ஸுகள் என்ன ? அன்னை அர்ச்சனா கிட்ட மசாஜ்கள் என்ன ? நிஷா கூட லூட்டிகள் என்ன ? இப்பிடி என்ன என்னன்னு அவ்வையார் பாட்டி மாதிரி பொலம்ப விட்டுட்டியேடா”ன்னு அன்னப்போஸ்டு அனத்த, சோமன் “ஆனா நீதான பேசல ? அதத்தான சொன்னேன்”ன்னு சொல்ல, “நான் உங்கிட்ட சொல்லுவேண்டா...ஆனா அத நீயேண்டா அந்த ஆளுக்கு முன்னாடி சொன்ன ? என்னங்கடா ஸ்கெட்ச்சா....? போடா போ....நல்லாயிரு”ன்னு அனுப்பிடுச்சு.

இதுல ஜித்து வேற ரியோ கிட்ட “அது ஏண்டா தப்பே பண்ணாம அதுகிட்ட சாரி, பிளவுஸ்னு கேட்டுட்டு இருக்கீங்க ? ஒரு நேரத்துல கரண்டு கம்பிய மிதிச்ச கழுதை மாதிரி சிரிக்குது....மறு செகண்டே ரெட் சிப்பு மாத்துன சிட்டி ரோபட்டு மாதிரி ரத்தம் கக்க வைக்குது....கருமம் எப்ப எந்த கேரக்டர்ல இருக்கான்னே தெரியல....கொஞ்ச நாளைக்கு கண்டுக்காமத்தான் இருங்களேண்டா இம்சைகளா”ன்னு போதிச்சாப்ல.

வெளிய அன்னை, ரியோ, நிஷா, கேபி, ஜித்துவோட சோமன் இருக்க “டேய்...நீயெல்லாம் அவ கிட்ட இருந்த இருப்புக்கு...கஷ்டப்பட்டு உன் அடிமைச்சங்கிலிய அன்னை அர்ச்சனா தலைமைல அறுத்தெறிஞ்சு, உன்னய அலேக்கா தூக்கிட்டு வந்து இப்ப உன்னய நாங்க எப்பிடி வச்சிருக்கோம் பாத்தேல்ல? நன்றிய மறக்காம அன்னை காலுல அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவ விழுந்து கும்புடு”ன்னு நிஷா ஆரம்பிக்க “எதே நான் அடிமையா இருந்தேனா?னு சோமன் கேக்க....”ஆமாண்டா நீ அடிமையாத்தான் இருந்த....என்னடா பேசவைக்குறியா?”ன்னு அன்னை அஞ்சு பாயிண்டு வச்ச அடுப்பா  கொதிக்க, சோமன் கோவிச்சுக்கிட்டு எந்திரிச்சு போயிட்டான்.

இதப்பத்தி அர்ச்சனாகிட்ட ரியோ “அன்னையே, சோமன் செய்த பிழை என்ன...?”ன்னு பவ்யமா கேக்க, “அவகிட்ட அவன நல்லவன்னு காமிச்சுக்க தெரிஞ்ச சோமனுக்கு...உன்னயப் பத்தி சொல்லனும்னு தோணாலையேடா....இதுக்குதான் அவன் கேஸுக்கு நம்ம வாதாடுனோமா ? ஆசைப்பட்டான்னு ஆறு ஸ்டெப்புகள கத்துக்குடுத்து ரம்யா கூட ஆட விட்டோமே எதுக்கு? கால்ல விழுந்து வாழ்ந்துட்டு இருந்தவன இன்னைக்கு கட்டில்ல உக்கார வச்சு நமக்கு காலமுக்க சொல்லி அழகு பாக்குறோமே எதுக்கு ? அந்த நன்றி உள்ளவன் அன்னப்போஸ்டுகிட்ட எடுத்து சொல்லி உன் காலுல விழ வச்சிருக்க வேணாமா ? இதுல நீ வேற எங்கிட்ட கேள்வி கேக்குற?னு அன்னை ஆவேசப்பட ”மன்னிப்பு....மன்னிப்பு......மன்னிப்பு....தப்பு பண்ணிட்டேன்...அன்னையோட ஆக்ரோஷத்துக்கு அர்த்தம் புரியாம தப்பு பண்ணிட்டேன்னு படுத்தே விட்டான் ரியோ...!

நள்ளிரவுல சோமன் போர்வைய விலக்கிப் பாத்த சிரிச்ச அன்னைய “ஏன் மெண்டல் மாதிரி சிரிக்கிற?”ன்னு சோமன் கேக்க, “எது...மெண்டலா ? அய்யோ ரியோ வேற பக்கத்துல இல்லையேன்னு மனசுல நெனச்சுக்கிட்டு, “ஆமாண்டா சோமா நான் மெண்டலுதான்...இன்னையோட நமக்குள்ள எல்லாம் முடிஞ்சு போச்சு”ன்னு துன்னூறப் போட்டுட்டு போயிட்டாங்க அன்னை.

43வது நாள்

“ஹார்ட்டுக்குள்ள பச்ச குத்தியே” பாட்டு அலாரம். சுச்சி ஆடுறத மட்டும் தனியா கட் பண்ணி காமிச்சா... ஏர்வாடில இருந்து ஒரு டாக்டர் குழு “குடுங்கடா எங்க பேஷண்ட”ன்னு பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்துரும். இப்பிடி இவனுங்களுக்கு பாட்டு போடலேன்னாதான் என்ன கேடுன்றேன். ஆளாளுக்கு அவசரத்துல ஆடிட்டு இருந்தானுங்க.

பெட்டுல போதிதர்மர் மாதிரி முக்காடப் போட்டுட்டு அன்னப்போஸ்டு உக்காந்திருக்க சைனாவும், சுச்சியும் “என்ன அன்னப்போஸ்டு...ஆடக்கூட வரல?”ன்னு கேக்க, அசிங்கப்பட்டதுக்கு அப்பறம் ஆடி என்ன பயன்? அவ்வளவுதான் எல்லாம் முடிஞ்சு போச்சு”ன்னு சீன் போட....”அப்டியெல்லாம் அசிங்கத்துக்கு பயந்தா உள்ள வந்த அஞ்சாவது நிமிஷம் வெளிய போயிருப்பேன்....தட்டி விட்டு வேலைய பாப்பியா அத விட்டுட்டு”ன்னு சனம் அது மனம் மாத்த ட்ரை பண்ணுச்சு. ஆனாலும் இன்னும் ரியோ எங்கிட்ட வந்து பேசாம, சாரி கேக்காம அவமானப்படுத்துனதுக்கு நீ வேணும்னா வெஷம் குடிக்கிறியா?”ன்னு சனத்த கேட்டுட்டு இருந்துச்சு அன்னப்போஸ்டு.

கக்கூஸுக்கு வெளிய நின்னுட்டு இருந்த ரியோகிட்ட வந்த அன்னப்போஸ்டு

அன்னப்போஸ்டு : ரியோ, தனியா ஒரு 5 நிமிஷம் பேசனும்

ரியோ : அங்க கேட்டுகிட்ட யாருமே இல்ல...அங்க போயி பேசு

அன்னப்போஸ்டு : ஹலோ...உங்ககிட்ட 5 நிமிஷம் பேசனும்

ரியோ : நீ ? 5 நிமிஷத்துல எங்கிட்ட பேசிருவ ? இத நான் நம்பனும் ?

அன்னப்போஸ்டு : சோமன் மேல சத்தியமா

ரியோ : சரி பிரேக்ஃபாஸ்ட் செய்யனும்....இப்ப நீ பேச ஆரம்பிச்சா டின்னர்தான் எல்லாரும் சாப்பிட முடியும்....சோ காலை உணவ செஞ்சு குடுத்துட்டு....கட்டுச்சோறு கட்டிட்டு வந்துடுறேன்....அப்ப ஆரம்பிச்சுக்கோ //

உள்ள கிச்சன்ல ஆஜீத், சுச்சி, ரியோ, பில்டரு தோசை சாப்ட்டுட்டு இருக்க, பில்டருக்கு வைக்கப் போன 17வது தோசைய சுச்சி “எனக்கு வேணும்”னு கேக்க, கோவத்துல பில்டரு தட்டத் தூக்கிட்டுப் போயிட்டான். பின்னாடியே சுச்சியும் பேட்டரி போட்ட பொம்மையாட்டம் தட்டத்தூக்கிட்டு போயி “சரி சரி நீயே சாப்புடு”ன்னு சொல்ல, “எல்லாரும் சாப்ட்டு முடிச்சதும் நான் தனியா சாப்ட்டுக்கிறேன்”னு சமாதானப் படுத்துனான். ஆனாலும் இந்த சுச்சி பாவந்தான்....மந்திரிச்சு விட்ட மரக்கட்டை பொம்மை மாதிரியே திரியுறாங்க. அவன் அவன் இங்க பெரிய பெரிய பஞ்சாயத்தெல்லாம் டீல் பண்ணிட்டு இருக்க...இடைல இது வேற அப்பப்ப வந்து “வத்திகுச்சி இருக்கா?”னு கேட்டு வயலன்ஸுல மாட்டிக்குது.

மறுபடியும் அன்னை அர்ச்சனா டீமு வெற்றிகரமா கிச்சன கைப்பத்திட்டானுங்க....இன்னும் இந்த வாரம் பூராம் “நாங்கதான் வடிச்சு கொட்டுனோம், ஊட்டி விட்டோம், ஏத்தி விட்டோம்”னு சொல்லி காட்டிக்கிட்டே திரிவானுங்க. கொத்தமல்லி ஆஞ்சுகிட்டே அன்னை அர்ச்சனா டீம் உக்காந்திருக்க, சோமுகிட்ட ரியோ “யப்பா உன் பிரண்டு கூப்ட்டுச்சுப்பா”ன்னு சொல்ல...”டேய் வெளிய தெருவுல அவ என் பிரண்டுன்னு சொல்லிறாதீங்கடா...அப்பறம் தூசியிலதான் தூக்கு மாட்டிக்கனும்”னு பதறுனான். “அதுகிட்ட பேச தயாரா இல்லன்றததான் நான் வேற மாதிரி சொன்னேன்”ன்னு இப்பிடி பேசிட்டு இருக்கும்போதே அன்னப்போஸ்டு அந்தப்பக்கமா உலாவ...லாவகமா பேச்ச மாத்தி தப்பிச்சுட்டானுங்க.

“நாமினேஷனுக்கு வாங்கடா”ன்னு உள்ள கூப்ட, வரிசையா போனானுங்க. இதுல ஆரி ப்ரோ பில்டருக்கு “பியார், பிரேமா, காதல் கண்ண மறைக்குது”ன்னு சொல்லி நாமினேஷன் பண்ணாப்ல. சம்மு அன்னப்போஸ்ட சிடுமூஞ்சி மேக்ஸ்னு சொல்லி பண்ணாங்க. இப்பிடி ஆளாளுக்கு ஒரு காரணம் சொன்னானுங்க.

ஆக.... குறைந்த டூ அதிக எண்ணிக்கை வரிசைல ரியோ, சம்மு, பில்டரு, சோமு, ஆரி, அனிதா, சுச்சி.

உள்ள எல்லாரும் சொன்ன காரணத்த பிக்பாஸன் பேர சொல்லாம வெளிய போட்டு விட்டுட்டாப்ல. இதுல “காதல் கண்ணை மறைக்குது”ன்னு சொன்னதுமே அது நம்மளத்தான்னு பில்டரு கொதிச்சு ஷிவானி பக்கம் திரும்புனா அது கன்னம் ரெண்டு ரோஸ் கலர்ல மின்னுச்சு...”ஆனா டேய் அல்பத்தனமா காதல், கல்யாணம்னு சொல்லி நாமிநேஷன் பண்ற அளவுக்காடா இருக்கீங்க...இங்க காதல்லாம் யாரும் பண்ணல...அப்பிடி பண்ணாலும் அத நாந்தான் சொல்லுவேன்...மீறி யாரும் மறுபடியும் அப்பிடி பேசுனா அசிங்க அசிங்கமா கேப்பேன். என்ன ஆரி ப்ரோ சரிதான?”ன்னு பாக்க, “ஆமாமா அப்டித்தான் கேக்கனும்”னு அம்மன் TRY கம்பிய நட்டமா முழுங்குனாப்ல உக்காந்திருந்தாப்ல ஹமாம் ஆரி ப்ரோ. இதுக்கப்பறம் பில்டரு யாரு கூட பேசிட்டு இருந்தாலும் ஆரி ப்ரோ ப்ரெக்னென்ட் ஆன  புஸ்ஸி கேட் மாதிரி அவன் கால சுத்திட்டே இருந்தாப்ல.

ஷிவானி கூட எதார்த்தமா இதப் பத்தி பில்டரு சவுண்டா பேசிட்டு வர சம்பந்தமில்லாம ரியோ கக்கூஸுக்கு போற கதவ எட்டி ஒதச்சுட்டு போனான். சரி அடக்க முடியாம அவசரமா போறான் போலன்னு நெனச்சா கோவமா இருக்கானாம். அதாவது பில்டரு சொல்லும்போது இனி யாரும் பேசுனா காதக் கிழிச்சுருவேன்னு சொன்னானாம் அது இவனுக்கு கோவத்த உண்டு பண்ணிடுச்சாம். வெளிய இவன் மானம் மரியாதை போயிருமாம். ஏண்டா கடுதாசி எழுத சொன்னதுக்கு குவாட்டருக்கு எழுதுன பயதான நீ ? அப்ப உன் மானமும், மாங்காயும் எங்க போச்சு...?இல்ல இதக் கேட்டு உங்க குடும்பம் மெச்சிக்குமா ? என்னைக்கு பில்டரு இவன பிதுக்கப் போறான்னு தெரியல. கதவ உதச்சுட்டு போன சத்தம் கேட்டதும் அன்னப்போஸ்டு ஆகா ரியோவ கொன்னுட்டானுங்க போலன்னு அதப் பாக்க சந்தோஷமா ஓடி வந்தத எத்தனை பேரு கவனிச்சீங்க ? ஆனா அதுக்கு ஏமாத்தம்.....

ரியோ கோவமா இருக்கான்னு பில்டர்கிட்ட சொன்னதும் ஏன் எங்கள பத்தி வெளிய தப்பா நெனச்சா பரவாயில்லையா ? என்னங்கடா அவனுங்களுக்கு ஒரு நியாயம் ? எனக்கு ஒரு நியாயமா? என்ன ஆரி ப்ரோ கரெக்ட்தான ?ந்னு கேக்க.... “ஆமாமா ரொம்ப கரெக்ட்டு”னு இப்ப ராணா டார் கம்பிய நட்டமா முழுங்குனாப்ல உக்காந்திருந்தாப்ல ஹமாம் ஆரி ப்ரோ.

சனம் வந்து ரெண்டு பக்கமும் பேசி சமாதானப் படுத்த முயல “உன்னயதான் சொன்னானுங்கன்னு ஏன் எடுத்துக்குற வேற யாரையும் சொல்லி இருக்கலாம்ல?”ன்னு கேட்டுட்டு “ஏன் நாங்கள்லாம் லவ் பண்ண மாட்டோமா?”ன்னு காமெடியா உண்மைய சொல்லுச்சு சைனா. பாவம் சனம் அதுவும் பில்டருக்கு முன்னடி எட்டெல்லாம் போட்டு காமிக்குது....அவன் சாத்தூர் சேவுதான் வேணும்ன்றான்.

பின்ன எங்க கொலை பன்ணிடுவோமோன்ற பயத்துல பாசிய உருட்டிட்டு இருந்தான் பில்டரு. பின்ன ஷிவானி கிட்ட “சாத்தூரு....உம்மேல இஷ்க்கு வந்தா இஷ்டமா நானே வந்து சொல்றேன்....ஓகேயா?”ன்னு கேக்க, “என்ன இவன் 10 மணி பஸ்ஸு வந்தா சொல்றேன்ற மாதிரி சொல்றான்”னு நெனச்சுக்கிட்டு “சரி சரி வந்ததும் சொல்லு”ன்னுடுச்சு.

பின்ன வெளிய வந்து இதையே சம்மு, சுச்சி, சாத்தூருகிட்டயும் சொன்னான். “இதுல ஷிவானியும் சம்பந்தப்பட்டு இருக்குறதால அப்பிடி சொல்றது தப்பு. இத நான் ஏற்கனவே அர்ச்சனாகிட்டையும் சொல்லியிருக்கேன்.....இது ரொம்ப தப்பு. தப்புதான ப்ரோ?”ன்னு அங்க உக்காந்திருந்த ஆரி ப்ரோகிட்ட கேக்க, “ஆமாமா ரொம்ப தப்பு”னு இப்ப கிஸ்கால் TMT கம்பிய நட்டமா முழுங்குனாப்ல உக்காந்திருந்தாப்ல ஹமாம் ஆரி ப்ரோ.

“என்னது அவன் காதக் கிழிச்சுருவேன்னு சொன்னது யாருக்குமே கேக்கலையா ? நான் வேற கதவ கிதவையெல்லாம் உதச்சு சீன் பண்ணிட்டேன்.....ஆகா, கேஸ கமல் வரைக்கும் இழுத்துட்டுப் போனா குறும்படம் காமிச்சு குறுக்குல மிதிப்பானுங்களே....ஏன் கேபி உனக்காச்சும் கேட்டுச்சா?”ன்னு ரியோ கேக்க....”காதக் கிழிச்சுருவேன்”னு சொன்னானான்னு தெரியல...ஆனா ஏதோ ஒண்ணு சொன்னான்”ன்னு கேபியும் சைடு வாங்க, “ரைட்டு”ன்னு வெளிய வந்து பில்டருகிட்டையே இத க்ளியர் பண்ண, அவன் “அதெல்லாம் அப்பிடி சொல்லிட்டு இருக்க மாட்டேன்....செஞ்சுருவேன்”னு சொல்ல. “அப்ப அண்ணன மன்னிச்சிரு”ன்னு தப்பிச்சுட்டான் ரியோ. உள்ள அர்ச்சனாகிட்ட “சாரி கேட்டுட்டு சிறு கீறல் கூட இல்லாம உங்ககிட்ட வந்துட்டேன்”னு சொன்னதும்...ரொம்பப் பெருமையா ரியோவ கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க அன்னை.

உள்ள பெட் ரூமுல ஷிவானியும், பில்டரும் விளையாடிட்டு இருக்கும்போது ஆரி ப்ரோ அப்டியே பக்கத்துல வந்து உக்கார....சுச்சியும் வந்துச்சு....சிடுமூஞ்சி மேக்ஸ்னு தன்னத்தான் சொன்னாங்கன்னு நெனச்சுக்கிச்சு....ஆனா இது சுளுக்கு மூஞ்சி சுச்சின்னு நமக்குதான தெரியும். சோ “அந்த வார்த்தைய வச்சு ராப் எழுதி பாடப்போறேன்”னு சொல்ல, பில்டரு “நானும் எழுதுறேன்”னு குஷியாகி ஷிவானிய நட்டாத்துல விட்டுட்டான். அது வெளிய போயி வெங்காயம் நறுக்க ஆரம்பிச்சுடுச்சு. இவனுங்க எழுதி முடிச்சதும் சைனா உள்ள வந்து... பில்டரு பாட....சைனா ஆட....அப்பிடியே “டமுக்கு ட்பா டிய்யாலோ” ஜோடியாட்டம் ஜில்லுன்னு இருந்துச்சு.....”ஆனாலும் காதல், கீதல்னு காரணம் சொல்லி சில்றத்தனம் பண்ணக்கூடாதுல்ல ப்ரோ?”ன்னு பில்டரு ஆரியப் பாக்க.... “ஆமாமா சில்றத்தனந்தான்”னு இப்ப மயில் பிராண்ட் TMT கம்பிய நட்டமா முழுங்குனாப்ல உக்காந்திருந்தாப்ல ஹமாம் ஆரி ப்ரோ.

நட்டாத்துல விட்டதால கோவத்துல இருந்த ஷிவானிய சமாதானப்படுத்த வந்த இடத்துல சனத்துக்கிட்ட பேசுறாப்ல பேசிட்டான் பில்டரு. ஏண்டா, அதுவரைக்கும் கையப் பிடிச்சுக்கிட்டு இருந்தவன். அந்த அரை லூசு வந்ததும் பாட்டு எழுதப் போறேன்னு என்னய விட்டுட்ட ? “ன்னு மூஞ்சிய காமிக்க, பிள்ளைக்கு காய் கட் பண்ணும்போது ரத்தம் வந்தத கூட கண்டுக்காம இருந்திருக்கான் கல்நெஞ்சக்காரன். அப்பறம் அவனும் கோவப்பட்டு போயிட்டான். இதுவும் போயிடுச்சு. இந்த கருமக் காதலுக்கு ஊடல் ஒண்ணுதான் குறை. தன்னாலதான் இது நடந்துச்சுன்னு பெஸ்ட் பெர்பார்மருக்கு ஆரி ப்ரோ எந்திரிச்சு நட்டமா நிப்பாருன்னு நம்பலாம்.

“அன்னப்போஸ்டு கன்ஃபெஷன் ரூமுக்கு வா”ன்னு பிக்கி சொன்னதும் 120 ஜெனிலியா, 68 “தொடரி” கீர்த்தி சுரேஷ், 34 சுச்சிகள் அன்னப்போஸ்டுக்குள்ள இருந்து வெளிய வந்துச்சுக......உண்மையாவே இந்தப் பொண்ணு அப்பிடி ஆகிடுச்சு போல...அடேய் காளை மாடு....கன்ணுகுட்டிய பத்திட்டு போயிரு...மக்களுக்கு நல்லது. கவுதாரி கழுத்துல கால வச்சு மிதிச்சா அது கத்துற மாதிரி சிரிச்சுக்கிட்டே.....சுத்தி சுத்தி நடந்து போனா என்னன்னு நெனைக்கிறது? மொத்த வீடும் பக்கத்துல எதும் போலாமா ? வேணாமன்னு குழப்பமா பாக்க ஆரம்பிச்சுட்டானுங்க. இது கேட்டு அவரு கூப்ப்டாருன்னு நெனச்சு அங்க ஒரு அரைமெண்டல் பெர்பார்மென்ஸ போட....அந்தாளு டாஸ்க்கு பேப்பர படிக்க சொல்லி குடுத்து விட்டாப்ல.

காலையில பில்டரு பொங்குனதப் பாத்துட்டு ஆகா இது நல்லா இருக்கே ? இந்த மாதிரி அவனுங்க சொன்னத வெளிய சொன்னா சண்டை வருதா ? அப்ப சரி அடுத்த டாஸ்க்கு இதான்னு , பஞ்ச் தந்திரம் விளையாட்ட உருவாக்குனாப்ல பிக்கி. பவுல்ல இருக்குற சீட்டுல பஞ்ச் வசனங்கள் இருக்கும். அத யாருக்கு பொருத்தமா இருக்குமோ அவங்களுக்கு குடுக்கனும். எடுத்தவனுங்களுக்கே பொருத்தமாத்தான் நெறைய சீட்டு இருந்துச்சு. ஆனாலும் சனத்துக்கு பெரும்பாலும் குடுத்து சண்டை நடக்காம பாத்துக்கிட்டானுங்க. ஆனா சைனாவுக்கு 2 நாள் கழிச்சு இவனுங்க யூஸ் பண்ணது புரிஞ்சு பஞ்சாயத்தக் கூட்டும்....ஆனா விதை ? பிக்பாஸ் போட்டது. இந்த டாஸ்க்கப்பையும் அன்னப்போஸ்டு சிரிச்சது பீர் பாட்டிலால அடிவாங்குன பொம்மரேனியன் சத்தம் போல் இருந்தது என்றால் அது மிகையாகாது.

வெளிய யோகா பண்ணிட்டு இருந்த ஆரிய , சோமு & குரூப்பு “பாருங்கடா அவன ! காலத்தூக்கி கைல வச்சு தாலாட்டு பாடிட்டு இருக்கானு” கிண்டல் பண்ணிட்டு இருந்தானுங்க....அந்தாளே பில்டருக்கு பயந்து கால நடுக்கம் வெளிய தெரியாம இருக்க என்னமோ பண்ணிட்டு இருக்காப்ல...அதுபோக முழுங்குன கம்பியெல்லாம் செரிக்க வேணாமா ? ....இவனுங்க வேற...!

காதலனால் கைவிடப்பட்ட காரிகை ஷிவானி, ரம்யா & சம்மு கூட ஜோடி சேர்ந்து சூப் சாங் பாட ஆர்ம்பிச்சுடுச்சு. உள்ள சுச்சி & சனம் கூட பில்டரு விளையாண்டுட்டு இருக்க....பக்கத்துலையே இப்ப அக்னி ஸ்டீல் முறுக்கு கம்பிய நட்டமா முழுங்குனாப்ல உக்காந்திருந்தாப்ல ஹமாம் ஆரி ப்ரோ.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)