பிக்பாஸ் – 4 : நாள் - 49 (22.11.20)
50வது நாளாம். இதுல என்ன பெருமை ? இன்னைக்காவது எதாச்சும் கண்டென்ட் இருந்திருக்கலாம் ஆனா இல்லை. ஆண்டவரே கைவிட்டுட்டாரு போல. எவிக்ஷன் யாருன்னு வேற நமக்கு தெரியும்ன்றதால அந்த சுவாரஸ்யமும் இல்ல. இன்னைக்கு மட்டும் 1 பேஜ தாண்டி எழுதிட்டேன்னா நான் ஜெயிச்சிட்டேன்.....
அன்னப்போஸ்டு,
சுச்சி & பில்டரு 3 பேரும் உக்காந்து கத்தி, கிளவுஸ் குடுத்ததப் பத்தி பேசிட்டு
இருந்தானுங்க. “அன்னை குரூப்பு அவங்கவங்களுக்குள்ள எல்லாத்தையும் குடுத்து வாங்கிக்கிட்டானுங்க.
இவனுங்க அட்டிராசிட்டி தாங்கல”ன்னு பேசிட்டு இருந்தானுங்க.
ஆண்டவர் வந்தார்.
பாக்க சீன சிப்பாய் ட்ரெஸ் மாதிரி இருந்தாலும் காக்கிக் கலர்ல இருந்திருந்தா கூர்க்கா
மாதிரிதான் இருந்திருக்கும். இந்த சட்டைக்கு எதுக்கு இவ்வளவு பட்டன்னு வேற தெரியல.
“இங்க நான்
வந்தது தப்பான முடிவுன்னு இன்னும் சொல்லிட்டே இருக்கானுங்க. ஆனா இது நல்ல முடிவுன்னு
எனக்குதான் தெரியும். கைதட்டுறதுக்கு ஆள் இருக்கும்னுதான் இதுக்கு விரும்பி வந்தேன்
ஆனா கொள்ளையில போன கோவிட் அத கெடுத்துருச்சு. இருந்தாலும் டிஜிட்டல் வழியா சில பேர
பாக்குறது சந்தோஷம்”னு சொல்லிட்டு “ஒரு ரெண்டு பேர்கிட்ட பேசுவோம்”னு சொன்னார். மொத
வீடியோல வந்த பொண்ணு அவங்க அப்பா ஆண்டவரோட பக்தராம். இந்த ஷோவையே டிவில ஒருதரம், ஹாட்
ஸ்டார்ல ஒரு தரம் பாப்பாராம் (டாக்டர்கிட்ட செக் பண்ணுங்கடா...), ஆண்டவர் என்ன ஸ்டைல்ல
இருக்காரோ அந்த ஸ்டைல்ல இருப்பாராம். (16 வயதினிலே கோவண சீனப் பாத்துட்டு என்ன அட்டிராசிட்டி
பண்ணாப்லயோ தெரியல). பின்ன ஒரு இயற்கை ஆர்வலர் வந்தாங்க. அனேகமா மய்யத்து வேட்பாளரா
அறிவிக்கப்படலாம்.
அகம் – அகம்
“50 நாளா உள்ள
அலைஞ்சிட்டு இருக்கீங்க. இதுவரைக்கும் உங்க நிலை என்னன்னு சொல்லுங்க. ஆளுக்கு 1 நிமிஷம்
டைம். அத பில்டரு கணக்குப் பண்ணனும்”னு சொன்னாரு. சைலண்டா நடந்த ஒரு உலக அதிசயம் என்னன்னா.....அன்னப்போஸ்டு
குடுத்த 1 நிமிஷத்துல வெறும் 35 செகன்ட்ஸ்ல பேசி முடிச்சிருச்சு.....! எல்லாரும் “நான்
நானா இருக்க வந்தேன்....இப்ப வரைக்கும் நான் நானாதான் இருக்கேன்.....இனிமேலும் நான்
நானாத்தான் இருப்பேன்.....வெளிய போனதும் மறுபடியும் நான் வேற ஆள் மாதிரி இருப்பேன்”னு
உளறிட்டு இருந்தானுங்க. ஷிவானி “நான் இங்க நல்லா என்டெர்டெயின்மென்ட் பண்றேன்”னு சொல்லுச்சு....ஆனா
யாருக்குன்னு சொல்லல. பில்டரு மட்டும் “தப்போ, ரைட்டோ நான் இதே மாதிரிதான் ரப்ச்சர்
பண்ணிட்டு இருப்பேன்”னு சொல்லிட்டு காதல் கண்ண மறைக்குற மேட்டர சொல்லி இன் டைரக்டா
ஆரிக்கு அலார்ட் குடுத்தான். அதுக்கப்பறம் வந்த ஆரி பில்டருக்கு பல்பு குடுக்குறேன்ற
பேருல சம்பந்தமில்லாம “மைக்கயெல்லாம் ஒழுங்கா மாட்டிட்டு விளையாடுறேன்”னு சொல்லி...பில்டர
ரிவெஞ்ச் பார்வை பாத்தார். அவரும் 28 செகண்ட்ஸ்ல முடிச்சார். ஆண்டவருக்கே ஆச்சர்யம்
இது. ஆனா பிரேக்ல ஆரியும், அன்னப்போஸ்டும் கக்கூஸுக்குள்ள போயி தனித்தனியா ஒரு 10 நிமிஷம்
பேசிட்டு வந்திருப்பாங்க.
பாலா சேவ்டுன்னு
சொன்னார். அவனும் கொரங்கு மாதிரி தாவி குதிச்சிட்டு இருந்தான்.
சோமு சொல்லும்போது
எமொஷனலாகி நிக்க...ரைட்டர் கலைமணி கதைய சொல்லி அவன உற்சாகப்படுத்துனார் ஆண்டவர். பிரேக்குல
சோமுகிட்ட “எங்கிட்ட சொல்லாம எதுக்கு அழுத ? அப்டியா உன்னய அழுகுற மாதிரி எங்க குரூப்புல
வச்சுருக்கோம்? நான் எதாச்சும் சென்டிமென்டா சொன்னாதான நீ அழனும். அதான நம்ம குரூப்பு
ஸ்கிரிப்ட்டு. ரியோ இங்க வாடா இவன ஒரு நாலு நாளைக்கு பேசாம காயப்போடுவோம்டா”ன்னு காமெடியா
சொல்ற மாதிரி சீரியஸாவே சொன்னாங்க.
ரியோ கேப்ட்டனானதுக்கு
வாழ்த்து சொன்னார். பழைய கேப்டன் அஜீத் கேப்டன்சியப் பத்தி கேக்க, “அவன் வயசுக்கு அவன்
நல்லாத்தான் பண்ணான்”னு எல்லாருமே சொன்னாங்க. இதுல ஜித்து பாய்க்கும், பில்டருக்கும்
சின்னதா ஒரு உரசல் வந்துச்சு. “ஜெயிலுக்கு போக அவனுங்களுக்குள்ளையே பேசி முடிச்சிருக்கனும்”னு
ஜித்து பாய் சொல்ல, “யோவ் பிக்பாஸ்தான்யா உங்கள முடிவு பண்ண சொன்னாரு”ன்னு பில்டரு
ரிப்ளை குடுத்தான். பின்ன ஆஜீத்துக்கு அட்வைஸ் குடுத்தார் ஆண்டவர்.
“ஜெயில்ல என்ன
பஞ்சாயத்து?”ன்னு சுச்சிட்டையும் பில்டர்கிட்டையும் கேக்க, “அவன் குடும்பத்த நான் கேவலமா
திட்டுவேன்.....என் குடும்பத்தை அவன் ரொம்பக் கேவலமா திட்டுவான்...இது எங்களுக்குள்ள
ஒரு விளையாட்டு”ன்னு முடிச்சிக்கிட்டானுங்க.
அப்பறம் கி.ராஜநாரயணன்
எழுதுன கோபல்லபுரத்து மக்கள் புத்தகத்த ரெகமன்ட் பண்ணார்.
“சரி....அன்னப்போஸ்டு,
சுச்சி, சம்முல யாரு இருக்கனும்னு விரும்புறீங்க?”ன்னு கேட்டதுக்கு சனத்தத் தவிர எல்லாருமே
சம்மு பேரதான் சொன்னானுங்க. ஆரி ப்ரோ வித்யாசமா செய்யுறவரு ஆச்சே.....சுச்சி இருக்கனும்னு
சொன்னாரு. சுச்சி அவுட்டு. நல்ல வாயி ஆரிக்கு !
ரொம்ப கோவமோ
இல்ல ஏமாற்றமோ....உண்டியல படார்னு போற போக்குல போட்டு உடைச்சிட்டு திறக்காத கதவ டம்மு
டும்முன்னு தட்டிட்டு இருந்தாங்க சுச்சி. பில்டரு, சனம், அன்னப்போஸ்ட தவிர யாரும் பக்கத்துல
வரல...பூராம் சம்முவ கட்டிபிடிக்கிறதுல மும்முரமா இருந்தானுங்க.
வெளிய வந்த
சுச்சிக்கிட்ட “என்னம்மா இறங்குன பஸ்ஸுலயே ஏத்தி விட்டானுங்க?” கேட்டதுக்கு “முந்தாநேத்து
கனவுல அப்பா வந்து வெளிய வந்துருன்னு சொன்ன மாதிரி இருந்துச்சு”ன்னு சொல்ல....அது அவங்க
அப்பா இல்ல பிக்பாஸுன்னு அவங்க கிட்ட யாரு சொல்றது ? “என்னாச்சுன்னு தெரியல...மக்கள்
அவசரப்பட்டுட்டானுங்க. இல்லேன்னா நல்லா விளையாண்டிருப்பேன்”னு சொன்னாங்க. “சரி, உள்ள
இருக்குறவனுங்களப் பத்தி சொல்லு”ன்னு சொன்னதுக்கு. “அன்னை அர்ச்சனா, ரியோ, நிஷா, கேபி,
சோம் இவனுங்க எல்லாம் வேல் பிரதர்ஸ் குரூப் மெம்பர்களாம். தலைவி அன்னை, தளபதி ரியோ,
அடிமைகள் நிஷா & சோமு, நாட்டியத்துறை கேபி. வெளிய போன வேல்முருகன் இன்னும் அவங்க
கூடதான் இருக்காருன்றத காமிக்க குரூப் பேரு வேல் பிரதர்ஸ் போல....பாத்து சாப்பட்டப்ப
ஒரு தட்டுல எக்ஸ்ட்ரா போட்டு காக்காய்க்கு வைக்குறாப்ல வேல்ஸுக்கு சுவத்துத் திண்டுல
வைக்கப்போறானுங்க”ன்னு சொல்லிட்டு, “இந்தப்பக்கம் போஷ் குரூப் இருக்கு. அதுல நான்,
சம்மு, பில்டரு, ஷிவானி, ஆஜீத், அப்பறம் கவுரவத் தோற்றமா ரம்யா....! அன்னப்போஸ்டு,
சனம், ஆரியெல்லாம் தனிப்படைகள்”னு சொன்னாங்க. அப்பறம் எல்லாரப் பத்தியும் நமக்கு ஏற்கனவே
தெரிஞ்சததான் சொன்னாங்க. அப்பறம் உள்ள எல்லாருக்கும் டிவி வழியா டாட்டா சொன்னாங்க.
அப்பறம் குறும்படம்
காமிச்சாங்க. அதப் பாத்துட்டு நா’னே என்னய பாக்கமுடியல அவ்வளவு கன்றாவியா இருக்கேன்...அதுக்குத்தான்
என்னய வெளிய அனுப்பிட்டானுங்க போல”ன்னு சொன்னதுக்கு ஆண்டவர் மறுத்தார். பின்ன “நல்லபடியா
இரு”ன்னு வாழ்த்தி அனுப்புனார். “50 நாள் முடிஞ்சும் இன்னும் 15 பேரு உள்ள திரியுறானுங்க.
என்ன கணக்குன்னே தெரியல”ன்னாரு ஆண்டவர். அவ்வளவுதான்.
Comments
Post a Comment