பிக்பாஸ் – 4 : நாள் - 57 (30.11.20)

 57வது நாள்

“ஆரம்பம் புதுசு” பாட்டு அலாரம். உலகத்துல வேற பாட்டே இல்லேன்ற மாதிரி ரொம்ப கஷ்டப்பட்டு தேடிப்பிடிச்சு இந்தப் பாட்ட போட்டிருக்கானுங்க. நல்ல பாட்டுக்கே நாலு ஸ்டெப்பு போடுறதுக்கு இவனுங்களுக்கு கீழையும், மேலையும் வலிக்கும். இதுல இன்னைக்கு சுத்தம். சம்மு இல்லாததால வ.வா சங்கமும் பொலிவிழந்து போயிருச்சு.

சோமுவும், ரியோவும் கேபி இங்க வந்தப்ப இருந்த மூக்கு சைஸுக்கும் இப்ப உள்ள சைஸுக்கும் வித்யாசம் கண்டுபிடிச்சு சொல்லிட்டிருந்தானுங்க. இது கண்டிப்பா இந்த வாரம் பிக்பாஸ் வீட்ல ஆட்டத்தையே மாத்தப் போற விஷயமா இருக்கலாம். தண்டம்டா டேய் !

அப்பறம் ஜித்து, கேபி சேந்து சோமன ரம்யாவ வச்சு ஓட்டிட்டு இருந்தானுங்க. சோமன் சொன்ன மாதிரி சாக்லேட்ட பாக்கெட்ட பிரேக் பண்ணி லவ் பிரேக் அப் பண்ணல போல.....அதான இந்த காஜி அதெல்லாம் செய்ய மாட்டானே. ரம்யான்னு நெனச்சு வெளிய இருந்த மொலுக்கட்டி பொம்மைக்கு தாவணியும், செருப்பும் மாட்டி விட்டிருக்குறதா கேபி துப்பறிஞ்சு சொல்லுச்சு.

“தட்றோம் தூக்குறோம்” கேப்டன்ஸி டாஸ்க். 3 வித கலர்ல க்யூப்கள வலையில போட்டு மேல கட்டி வச்சிருப்பானுங்க. அதுல இவனுங்க கலர் க்யூப கரெக்டா குச்சிய வச்சு தட்டி வெளிய தள்ளி எடுக்கனும். தப்பா அடிக்குற கலருக்கு நெகடிவ் பாயிண்ட்ஸ் உண்டு.

எல்லாம் முடிஞ்சதும். பில்டரு வெளிய தள்ளுன க்யூபுல சிக்கல் வந்துச்சு. “நான் வேற எந்த கலர் க்யூபையும் அடிக்கல.....ஆரி மாத்தி மாத்தி பேசுறாரு”ன்னு இவன் பேசுனமானியமா இருந்தான். “டீ சாப்டுறியா”ன்னு கேட்டாக் கூட “ஆரி மாத்தி மாத்தி பேசுறாரு”ன்னு சொல்லிட்டு இருந்தான். ரியோவும் எவ்வளவோ சொல்ல கேக்கவே மாட்டேன்னுட்டான். இதுல சைனா வேற இடையில வந்து “ஆமா ஆரி மாத்தி மாத்தி தான் பேசுறாரு”ன்னு சொன்னதும், ஆரி ப்ரோ டென்ஷனாகி “ஆமாண்டா நான் மாத்தி மாத்திதான் பேசுறேன். என் பேச்ச யாரும் எடுத்துக்காதீங்க”ன்னு நிதானமா சொன்னாப்ல. அப்பறம் பில்டரு சொன்ன கணக்குலையே போட்டாலும் ஜித்து பாய்தான் வின்னு. கேப்டன் ஜித்து பாய்.

கிச்சன்ல சைனா மறுபடியும் “ஆரி ப்ரோ மாத்திப் பேசுனத நான் கவனிச்சேன்....ஆனா அத எடுத்து சொன்ன என்னயத்தான் எவனும் கவனிக்கல”ன்னு பில்டர வேற ஏத்தி விட்டுட்டு இருந்துச்சு.

டீம் பிரிக்கிறப்ப “கக்கூஸ் கழுவுனதே இல்ல அதனால இந்த தடவ நாந்தான் கழுவுவேன்”னு வாண்டடா கையத்தூக்குன அன்னப்போஸ்டு, “ஆனா அந்த டீம்ல ஒரு ஆளுதான்”னு சொன்னதும் “அய்யோ கக்கூஸ் கழுவுறது எப்பிடின்னு எனக்கு தெரியாதுன்றதே இப்பதான் நியாபகம் வருது.....! அட கக்கூஸ்னா என்னன்னே தெரியாதுன்னா பாருங்களேன்”னு சொல்லி எஸ்கேப்பாகிடுச்சு.

சரி கேப்டன்ஸிக்குதான் சண்டை போட்டானே வைஸ் கேப்டனாக்கி அழகு பாப்போம்னு பாத்தா “இருந்தா கேப்டந்தான்....இந்த வைஸெல்லாம் ஆகாது”ன்னுட்டான். கடைசியா நிஷாவ வைஸ் கேப்டனாக்குனானுங்க.

இப்ப ரியோ மறுபடியும் பில்டர்கிட்ட வந்து கவுண்டிங்க் பத்தி தன்னிலை விளக்கம் குடுத்துட்டு இருந்தான். ஆரியும் உள்ள புகுந்து மறுபடியும் அவரு பேச்ச எடுத்துக்க வேணாம்னு சொன்னதும் அப்போதைக்கு சமாதானமானதா சொல்லிக்கிட்டான். ஆனா பெட்டுல ஷிவானி கூட பேசும்போது “இன்னைக்கும் எனக்கு அநீதி நடந்துருச்சு. நேர்மையா பொய் சொல்ற ஆரிய எனக்கு எதுக்கு கவுண்டிங்க் பண்ண போட்டானுங்க?”ன்னு ஒப்பாரி வைக்க...ஷிவானியோ “எனக்கு என்னமோ அவன் சொன்னது கரெக்டாதான் தோணுது...சைனாவ நம்பி வீணாப் போகத”ன்னு சொல்லிருச்சு.

நாமிநேஷன். பில்டரோட ஷேடோ, பழைய குப்பைய இன்னும் சுமக்குறாரு, சிரிச்சே சாவடிக்குது, சம்பந்தமில்லாம உள்ள வருது. இதயெல்லாம் சொல்லி நாமினேஷனுக்கு வந்த ஆட்கள் ஷிவானி, ஆஜீத், ரம்யா, ஆரி, சனம், அன்னப்போஸ்டு, நிஷா !

தன்ன என்ன சொல்லி நாமினேட் பண்ணானுங்களோ அதே ரெண்டு பேரான ரம்யா & ஆஜீத் கிட்ட “என்னய நாமினேட் பண்ண வேற காரணமே இல்லையா?”ன்னு பொலம்பிட்டு இருந்துச்சு ஷிவானி.....! இத அதுவே அதுகிட்ட கேட்டிருந்துக்கலாம்.

இப்ப மறுபடியும் ரியோ வந்து “நாங்க எல்லாம் சேர்ந்து எங்க குரூப் ஆளுகள் நாமினேட் பண்றதில்லன்னு நீயா சொன்னியா இல்ல வேற யாரச்சும் அப்பிடி பேசி அதுல இருந்து உனக்கு ஐடியா வந்துச்சா?”ன்னு கேட்டதுக்கு.....”அது ஆரி & அனிதா கூட பேசிட்டு இருக்கும்போது டிஸ்கஷன்ல வந்துச்சு. ஆனா அது எனக்கும் சரின்னு தோணுனதாலதான் நானும் சொன்னேன். இப்ப அதையெல்லாம் நான் மறந்துட்டேன்”னு சொன்னான். நம்ம பில்டரா இது ?

ரியோ, சோமு, ஜித்து & ரியோ வெளிய உக்காந்து ஜாலியா மாத்தி மாத்தி கலாச்சுட்டு இருந்தானுங்க. அப்பறம் டாபர் பேஸ்ட் டாஸ்க். 2 டீமா பிரிஞ்சு மேல எரியுற பந்த தடுக்கனும். இதுல பில்டர் டீம் வின்னு.

கக்கூஸ்ல ரியோ ஓளிஞ்சிருந்து சோமனுக்கு முன்னாலயே ரம்யாவ பயமுறுத்த அது “ஒர்ஸ்ட்டு”ன்னு போச்சு. பாப்போம் இத வச்சு சோமன் எதும் ரியோகிட்ட பஞ்சாயத்து இழுக்குறானான்னு?

பின்ன அன்னை தன் கையால கார்த்திகை விளக்குகள ஏத்த.....யாரும் கேக்க தயாரா இல்லேன்னாலும் தனக்கான ஸ்பேஸ தானே எடுத்துக்கிட்டு “தீபங்கள் பேசும் திருகார்த்திகை மாசம்”னு அன்னப்போஸ்டு பாடுச்சு.....இதோட முடிஞ்சிச்சு. இதயெல்லாம் அட்மினே எழுதியிருக்கலாம்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)