பிக்பாஸ் – 4 : நாள் - 44 (17.11.20)
44வது நாள்
“புழுதி பறக்கும்
பாரு” பாட்டு அலாரமா ஒலிக்க....பரபரப்பான இந்த பாட்டுக்கு “அட இருப்பா”ன்ற ரேஞ்சுக்கு
அறைக்குள்ள இருந்தபடியே சாம் ஆண்டர்சன் ஸ்டெப்ஸுகள போட்டுட்டு இருந்தானுங்க.
வெளிய வந்து
பாத்தா சில பல செட் ப்ராப்பர்டிகள் இருந்துச்சு. சரி ஏதோ பெரிய டாஸ்க்குன்னு தெரிய
வந்துச்சு. அர்ச்சனா டாஸ்க் பேப்பர படிக்கவுந்தான் தெரிஞ்சிச்சு இது லக்ஸுரி பட்ஜெட்
டாஸ்க், அதுவும் தொடர் டாஸ்க். கிராமத்துல தொடர்ந்து 4 நாளைக்கு சைக்கிள் ஓட்டிட்டே
திரிவானுங்கள்ல ? அந்த மாதிரி....!
மணிக்கூண்டு
டாஸ்க்.
இனி எல்லாமே
கூறிப்பிட்ட நேரத்துக்குள்ள செய்யனும் கூடவே அதுல குடுக்கப்படுற டாஸ்க்கையும் செய்யனும்.
மூனு மூனு பேரா 5 டீம பிரிஞ்சு ஒவ்வொரு டீமும் நேரத்த மேனுவலா கணக்குப் பண்ணனும்.
1.
சனம்,
அனிதா, நிஷா
2.
பாலா,
சுச்சி, ரம்யா
3.
ரியோ,
கேபி, ஆரி
4.
சம்மு,
அர்ச்சனா, சோமு
5.
ஆஜீத்,
ஜித்து, ஷிவானி
இதான் டீம்.
சமையல் செய்ய, கக்கூஸ் வேலைகள், வீடு கூட்டுறது, தண்ணி பிடிக்கிறது இதுக்கு எல்லாத்துக்குமே
குறிப்பிட்ட டைம் இருக்கும். அத சொல்ல, டைம் சொல்ற டீம்ல இருந்து குக்கூ குருவி வரும்.....
வீட்ல.....
மீ : யம்மா....சீக்கிரம்
வா...இன்னைக்கு செம்மயா இருக்கப் போகுது
மனைவி : எது....பிக்பாஸா
? அட போப்பா...நான் குக் வித் கோமாளிக்கு மாறிட்டேன்
மீ : கோமாளி
கடனாளின்னு....! இன்னைக்கு பாரு தொடர் டாஸ்க்கெல்லாம் இருக்கு....சைலண்ட் டாஸ்க்குன்னாலே
சண்டை கட்டுவானுங்க....இதுல தொடர் டாஸ்க்கு
வேற...களைகட்டும் பாரு.
மனைவி : மழை
பெய்யுது...கரண்ட் கட்டாகுறதுக்குள்ள சட்னி அரைக்கனும் நா வரல...
மீ : நீ வா
வந்து உக்காரு...//
டீவில.....
முதல் டீம்
டைம் கணிக்க போயிட்டானுங்க. உள்ள ஆஜீத், சம்மு, கேபி உக்காந்திருக்க
சம்மு : ஏண்டா
இந்த பொண்ணு ரொம்ப பேசுதே தவிர...டாஸ்க்குல மாஸ் காட்டுறது இல்லையே
கேபி : ஆமா
ஆமா....அதுவும் அது ஆட்டிட்யூடும்....
ஆஜீத் : நல்லா
பண்ற மாதிரியும் இருக்கு....நல்லா பண்ணாத மாதிரியும் இருக்கு...
சம்மு : கொஞ்சம்
லூசு மாதிரி வேற ஆகிடுச்சு...
கேபி : ஆமா
ஆமா....அதுவும் அது ஆட்டிட்யூடும்....
சம்மு : அது
சிரிப்பு வேற யம்மா.....முடியல
ஆஜீத் : சிரிப்பு
மாதிரியும் இல்ல....சிரிக்காத மாதிரியும் இல்ல....
கேபி : ஆமா
ஆமா....அதுவும் அது ஆட்டிட்யூடும்....
சம்மு : ஆயுத
பூஜை டாஸ்க்குல கூட ஆங்கரிங் ஒழுங்கா பண்ணலேன்னு சொல்லிட்டு இருந்துச்சு...
கேபி : அது
அன்னப்போஸ்ட்டுல்ல ?
சம்மு : நான்
அன்னப்போஸ்ட்டப் பத்திதான் சொன்னேன்
கேபி : நான்
சுச்சின்னுல நெனச்சேன்
ஆஜீத் : சுச்சின்னும்
சொல்லலாம்.....அன்னப்போஸ்டுன்னும் சொல்லலாம் ரெண்டும் இப்ப ஓன்னாதான் இருக்கு //
வீட்ல......
மீ : பாத்தியா
பஞ்சாயத்த இழுக்குறானுங்க....இதுக்கப்பறம் நல்லா இருக்கும்
மனைவி : (சைடு
பார்வை பாத்துட்டு) என்ன விடுறியா நான் போயி சட்னி அரைக்கிறேன்...
மீ : அட உக்காரும்மா
//
டீவில......
அப்பறம் ரயில்
தள்ளுற டாஸ்க். கும்பலா தள்ளுனானுங்க.
முதல் டீம்
முடிச்சுட்டானுங்க. இதுக்கு இடைல “கொஞ்ச டைம்ல ரொம்ப சமைக்க முடியாது...அதனால சாலட்
செஞ்சு குடுத்துரலாம்”னு அர்ச்சனா முடிவெடுத்துட்டாங்க.....
முதல் டீம்
3 மணி நேரத்த 18 நிமிஷம் எக்ஸ்ட்ராவா முடிச்சாங்க
அடுத்து பாலா
டீம் முறை.....! மத்த ஹவுஸ்மேட்ஸ் ஜிப்ரீஸ்ல பேசிக்கனும்னு டாஸ்க். பூராம் குய்யோ முய்யோன்னு கத்திட்டு இருந்தானுங்க....
வீட்ல......
மனைவி : என்ன
கருமண்டா இது ? பைத்தியகார ஆஸ்பத்திரிக்குள்ள நுழைஞ்ச மாதிரி ?
மீ : அது....அது
வந்து இந்த டாஸ்க்குதான் இன்னைக்கு பெரிய டர்னிங்க் பாயிண்டே....இதுக்கப்பறம் சூப்பரா
இருக்கும்....( MV : அய்யோ இப்ப நான் என்ன பண்ணுவேன் ?) //
டீவில....
பாலா டீம்
3 மணி நேரத்த 1 மணி நேரம் 12 நிமிஷம் எக்ஸ்ட்ராவா முடிச்சானுங்க.
பின்ன 3வது
டீம். இப்ப ஸ்னாக்ஸ் டைம் வந்துச்சு. 30 செகண்ட் ஸ்டோர் ரூம் திறக்கும். யாராச்சும்
ஒருத்தர் உள்ள போயி அந்த ஸ்னாக்ஸ எடுத்துட்டு வந்து அது என்ன ஸ்னாக்ஸோ அதுக்கேத்த மாதிரி
விக்கனும்.
பில்டரு உள்ள
போனான். டீ, காபி, சுண்டல் வந்துச்சு. அவனும், சோமனும் பீச்சுல விக்கிற மாதிரி வித்தானுங்க....
வீட்ல....
மனைவி : டேய்.....
மீ : இரும்மா....இப்பதான
பில்டர் ஆரம்பிக்கிறான். கண்டிப்பா எதாச்சும் தெள்ளவாறித்தனம் பண்ணுவான்...கொஞ்சம்
வெயிட் பண்ணு...(MV : நாசமாபோன பில்டரே....அந்த டீய அன்னப்போஸ்டு தலையில ஊத்தி ஏதாச்சும்
பஞ்சாயத்து பண்ணுடா.....இல்லேன்னா சொரணை உள்ளவன் சுண்டல் தின்னமாட்டான்னு ஆரிகிட்ட
சொல்லி ஒரன்டையிழுடா டேய்.....) //
டீவில....
பின்ன தண்ணி
லாரில தண்ணி பிடிக்கனும். இத சாக்கா வச்சுக்கிட்டு அர்ச்சனா, நிஷா, அன்னப்போஸ்டு, ஷிவானி
எல்லாம் சேந்து குழாயடி சண்டை போட்டுச்சுக.....உண்மையான சண்டை தோத்துரும் போங்க....
கறுப்பு வெள்ளை
சீன்கள நடிச்சு காட்டனும். அன்னபோஸ்டு நல்லா பண்ணதுதான் இது வரைக்குமான ஆறுதல்.
பாலாவும், ஷிவானியும்
கக்கூஸ்ல.....
வீட்ல....
மீ : (கூடைய
எத்திக்கிடே....) பாருடி...பாருடி என் தலைவன் ஆரம்பிச்சுட்டாண்டி.....வாங்கிக்கோடி
! இப்ப என்ன நடக்குதுன்னு மட்டும் பாருடி....
மனைவி : நான்
பாத்துட்டுதாண்டி இருக்கேன்......நீ அடங்கு //
டீவில.....
ஷிவானி : கக்கூஸ
கழுவாம என்ன பண்ணிட்டு இருக்க ?
பில்டரு : மொதல்ல
ஊற வைக்கனும்....அப்பறமாத்தான் கழுவனும் புரியுதா ?//
மீ : MV : டேய்....பாவி
! அவ என்ன கக்கூஸ் கழுவுறத கத்துக்க கிளாஸுக்கா வந்துருக்கா ? ஏண்டா இப்பிடி பண்ணிட்டு
இருக்க....அய்யோ இவ வேற டீவியப் பாத்துட்டு அப்பிடியே என்னய பாக்குறாளே...... //
டீவில....
“சும்மா எதுனாச்சும்
சொல்லாத”ன்னு பில்டரு சாத்தூரு வாய அடக்க, அது மூஞ்சி மூஞ்செலி மாதிரி மாறுனதப் பாத்துட்டு...”சரி
வா”ன்னு எழுப்பி பாலே டான்ஸ் ஆடி சமாதானப்படுத்துனான்......”இன்னும் இந்த கிறுக்கன்
கூட சேர்ந்து என்ன பாடுபடப் போறேனோ?”ன்ற மாதிரியே ஷிவானி ரியாக்ஸன் குடுத்துச்சு......
ரியோ டீம்
3 மணி நேரத்த வெறும் 1 நிமிஷம் எக்ஸ்ட்ராவா முடிச்சானுங்க.
சமையக்கட்டுல
சப்பாத்தி மாவி பெசையறப்போ, ஆஜீத் கிட்ட இருந்த மாவ படக்குன்னு பிடிங்கிருச்சு போல
சுச்சி....இத அங்கயே சுச்சிக்கிட்ட கேபி எடுத்து சொல்லிடுச்சு. அப்பறமா இந்த விஷயத்த
மத்தவங்ககிட்ட சொல்லுச்சு.
சம்மு டீம்
3 மணி நேரத்த 8 நிமிஷம் எக்ஸ்ட்ராவா முடிச்சாங்க.
இதோட முடிஞ்சது.....
வீட்ல.....
மீ : அய்யோ
முடிஞ்சிடுச்சு......
மனைவி : நாந்தான்
அப்போவே சொன்னேனே....இவனுங்கள நம்பாதான்னு....நீ சீரழிஞ்சதும் இல்லாம என்னய வேற சட்னி
அரைக்க விடாமா பண்ணிட்டு......இருடி சட்னி அரைச்சுட்டு வந்து உன்னயே வச்சுக்குறேன்....
கரண்ட் கட்......
மனைவி : போச்சு.....கரண்டு
போச்சு.....இப்ப எப்பிடி சட்னி அரைக்குறது ? எப்பிடி சாப்புடுறது....எங்க அத....
மீ : ஏய்....ஏய்.....அது
கம்பு இல்ல உலக்கைடி......அடி பலமா விழுது....
மனைவி : இன்னைக்குதான்
உலக்கை கைக்கு கரெக்டா வந்து சிக்கியிருக்கு......வாங்கு நல்லா வாங்கு.......//
Comments
Post a Comment