பிக்பாஸ் – 4 : நாள் 29 (02.11.20)
28வது நாள்
தொடர்ச்சி...
மாசம் ஒரு நாள்
மதுரை விஜயம்னு லாட்ஜுல ரூமப் போட்டு உக்காந்திருக்குற சிட்டுக்குருவி லேகிய சித்த
வைத்தியர் மாதிரி சுச்சி வெளிய உக்காந்திருக்க....ஒவ்வொருத்தனா தலையில துண்டப் போட்டுக்கிட்டு
லைன்ல வந்து பாத்தானுங்க....
ரியோ வந்து
“அக்கா உள்ள என்னமோ இங்கிலிபீஸ்ல திட்டுனீங்க. தம்பி என்ன தப்பு பண்ணேன்னு தமிழ்ல சொன்னீங்கன்னா,
திருத்திக்கிறேன்”னு வந்து கேக்க, “நீயும் விளையாட மாட்டேங்குற, உங்கூட இருக்குறவனுங்களையும்
விளையாட விட மாட்டேங்குற...நீ கையத் தூக்குனா கூட ஒரு காரணம் இருக்குன்னு லுச்சாத்தனமா
நம்புறானுங்க. ஆனா நீ கக்கத்துல சொறியத்தான் கையத் தூக்குனேன்னு இவனுங்களுக்கு தெரியல...!
அதே மாதிரி உங்க குரூப்பு மட்டுமில்லாம யாருக்கு பிரச்சனைன்னாலும் போயி கேட்டாத்தான
உன்னையும் ஒரு மாஸ் ஹீரோன்னு நெனப்பானுங்க. இப்பிடியே இருந்தா தமாஸ் தான் நீ”ன்னு சுச்சி
ரியோவ கொஞ்சம் முறுக்கி விட்டுச்சு.
அப்பறம் சகுனி
வந்தாப்ல, “என்ன பெருசு, விளையாட்ட நிப்பாட்டுன மாதிரி இருக்கு. பழையபடி 10 நிமிஷத்துக்கு
ஒரு பஞ்சாயத்தக் கூட்டுனாத்தான குஷியா இருக்கும்....அத விட்டுட்டு மல்லாக்கப் போட்ட
ஆமை மாதிரி பெட்டுலயே கிடந்தா ஆகுமா?”னு போட்டு விட்டுச்சு.
டைனிங் ஹால்ல
எல்லாரும் உக்காந்திருக்க புது கேப்டன் சம்மு “இந்த வீட்ல குரூப்பிஸம் இல்லேன்னு நிரூபிக்கனும்னா
ரியோ பல்லு வெளக்குனதும் எல்லாருக்கும் கையக் குடுத்து கட்டிப்பிடிக்கனும். அப்பறம்
பகல்ல ஒரே நேரத்துல சாப்புடுற பழக்கத்துக்கு வாங்கடா. ஒவ்வொருத்தனா வர வரைக்கும் காத்திட்டிருக்க
நாங்க என்ன வெயிட்டரா இல்ல இதான் வசந்த பவனா ? யோவ் ஆரி ப்ரோ....ஒர்க் அவுட்லாம் பண்ணிட்டு 9 மணிக்கு
மேல வர ஒரே ஆளு நீதான். 24 மணி நேரத்துல 17 மணி நேரம் அங்கதான் இருக்க. உள்ள வர கொஞ்ச
நேரமும் உம்முன்னு உக்காந்து வேடிக்கை பாத்துட்டு இருக்க. ஒழுங்க வெள்ளன வந்து வேலைய
முடிச்சா என்ன கேடு?”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே “எனக்கு அர்ச்சனா கேப்டன்ஸில பிரச்சனை
இருக்கு”ன்னு ஆரம்பிச்ச ஆரிய பூரா பேரும் வித்யாசமா பாத்து “எது போன வார கேப்டன்ஸி
உனக்கு பிடிக்கல. அத நீ இப்ப வந்து சொல்லப்போறியா ? சைனா செட்டு வியாதி உனக்கு வந்துருச்சா
? அதெல்லாம் தனியா போயி பேசிக்கோ”ன்னு அவமானப் படுத்திட்டானுங்க.
பெட் ரூமுல
இருந்த சம்முகிட்ட வந்த ஆரி “யாரு யாரு லேட்டா வராங்கன்னு சொல்லவா ? யாரு யாரு தூங்குறாங்க
சொல்லவா? யாரு யாரு வேலை பாக்கலன்னு சொல்லவா ? நாட்டு மாடுல எத்தனை வகை சொல்லவா?” ந்னு
வரிசையா கேக்க “ நான் ஒன்னு சொல்லவா ? சீக்கிரம் வந்து சாப்ட்டா சாப்டு இல்லேன்னா சாவு”ன்னு
சம்மு சொல்ல, “ஆங்.....அப்பிடி மரியாதையா பேசிப் பழகுங்க”ன்னு போயிட்டாப்ல ஆரி ப்ரோ.
இப்ப சுச்சிகிட்ட
அன்னப்போஸ்டு “ஏங்க நம்மள பத்தி ஏதும் ?நு பவ்யமா குறி கேக்குறாப்ல கேக்க, “அன்னப்போஸ்டு,
இந்த வீட்லயே ஜெயிக்கப் பிறந்தது நீதான். இவனுங்க மூஞ்சிய தூக்குறானுங்கன்னு ஃபீலாகாத.
வெளிய உனக்கு கோயில் கட்ட கரசேவகர்கள் ரெடியாகிட்டானுங்க. அருள் தரும் அன்னப்போஸ்டம்மன்னு
தேனாண்டாள் பில்ம்ஸ் ஒரு படமே எடுக்க ப்ளான் பண்ணிட்டு இருக்காங்க. நீ இங்க அழுதா அங்க
அங்கப்பிரதட்சனம் பண்றானுங்க. சோ நீ எதுக்கும் கலங்காத. உன் வழக்கமான வேலைய கன்டினியூ
பண்ணு....குறிப்பா அந்த கேப் விடாம பேசுற பழக்கத்த தூக்கத்துல கூட கண்டினியூ பண்ணு”ன்னு
இஷ்டத்துக்கு அடிச்சு விட்டுச்சு சுச்சி....!
இந்தப்பக்கம்
பில்டரும் – சனமும்
சனம் : இப்ப
உங்கிட்ட நான் என்ன பேச வந்தேன் தெரியுமா ? தெரிஞ்சா ஆச்சர்யப்படுவ
பில்டரு : எனக்கு
உன் கிட்ட நெறையா ஆச்சர்யம் இருக்கு....இன்னும் நீ இந்த வீட்ல உயிரோட இருக்குறதே ஆச்சர்யந்தான்....
சனம் : இனி
நான் உன் கூட பேசமாட்டேன்றத பத்திதான் பேச வந்தேன்
பில்டரு : அதுக்கு
நீ பேசாம இருந்தாலே எனக்கு தெரிஞ்சிருக்குமே ?
சனம் : அட....ஆமால்ல
? ஆனா எனக்கு உன்னய பிடிக்கல அதனாலதான் பேச மாட்டேன்னு உங்கிட்ட சொல்லனும்ல
பில்டரு : பிடிக்கலன்னாதான
பேசாம இருப்பாங்க ! சோ நீ பேசலன்னாலே என்னய பிடிக்கலன்னு தான அர்த்தம்
சனம் : அட ஆமால்ல.....?
சரி அப்ப நான் உங்கிட்ட என்னதான் பேசுறது ?
பில்டரு : சைனா....நீ
எங்கிட்ட பேசமாட்டேன்னு முடிவு எடுத்திருக்க. அப்பறம் எங்கிட்ட என்ன பேசுறதுன்னு கேக்குற
?
சனம் : அட ஆமால்ல.....
அப்ப நான் பேசாம போகவா ?
பில்டரு : (கோவத்தோட)
ஒழுங்கு மரியாதையா பேசாம போயிரு..... //
இப்பிடி சொல்லிட்டு
உள்ள போகும்போது சம்பந்தமே இல்லாம அவன பின்னாடி எத்திட்டு பயித்தியம் மாதிரி சிரிக்க,
பில்டரும் “சரி லூசுதான”ன்னு பெருசா எடுத்துக்காம போயிட்டான்.
அடுத்த கன்சல்ட்டேஷன்
அர்ச்சனா, பாலா, நிஷா, சம்மு, ஆரி & சுச்சி. “அர்ச்சனா, நீ ரொம்ப தெளிவா பாலாகிட்ட
அம்மா ஆட்டுக்குட்டின்னு பீலா விட்டு அவன் உங்கிட்ட இருந்து கண்டென்ட் எடுக்க விடாம
தடுத்துட்ட”ன்னு சொல்ல, “எது நான் அவன அன்பு, பாசம்னு தடுத்துட்டேனா ? யப்பா டேய் பாலா
நீ இனிமே என்னய அம்மான்னு பாக்காத...சைனாவ கிட்ட சலம்புற மாதிரி சலும்பு....! இனி நான்
உன் எதிரி”ன்னு சொன்னதும், சுச்சி “ரைட்டு இங்க வேலை முடிஞ்சிருச்சு”ன்னு சொல்லி உள்ள
போக, அர்ச்சனா “இந்தம்மா என்னத்தையோ உளறுது....ஆனா நான் அன்ப அள்ளி அள்ளி குடுப்பேன்....வெளிய
போனா போயிட்டுப் போறேன்”னு சொன்னாங்க.
அப்பறம் சிட்டுக்குருவி
வைத்தியர்கிட்ட வந்த காஜி பையன் மாதிரி மூஞ்சிய வச்சுக்கிட்டு பில்டரு “எனக்கு எதுவும்”னு
கேக்க, தம்பி வெளிய உன்னய சனம் & ஷிவானி கூட சேத்து பேசுறானுங்க”ன்னு சொன்னதும்
பில்டரு பதறி “சைனா கூடவா என்னய சேர்த்து பேசுறானுங்க ? அடக் கருமாந்திரமே ! ஏங்க,
இந்த சொவத்துல இருந்து தரைக்கு எவ்வளவு உயரம் இருக்கும் ? நான் ஏறி குதிக்கிறேன்....என்
ஷாட்சையும், பனியனையும் தூக்கிப் போடுறீங்களா?”ன்னு பொலம்ப, “ஆனா ஷிவானி கூட நீ சேர்ந்து
இருக்குறது எல்லாருக்கும் பிடிக்குதுப்பா”ன்னு சுச்சி சொல்ல, பக்கத்துல சகுனி இருந்தாப்ல.
இவனுங்க பேசிட்டு இருக்கும்போது மணி அதிகாலை 5.
“சகுனிக்கு
நல்ல பேருதான் அதுவும் அந்த டாஸ்க்குல”ன்னு சொல்லும்போது அதுல ஜெயிக்க வச்சு கேப்டனாக்குனது
நாந்தான்”னு பில்டரு சொன்னான். சகுனி அப்ப பிடிச்சதுதான் இந்த விஷயத்த. “புது ஆள் முன்னாடி
என்னய அசிங்கப்படுத்திட்டான்”னு ஆரம்பிச்சு நாள் முழுக்க பெனாத்திட்டு இருந்தாப்ல.
29வது நாள்
என் உச்சி மண்டைல
சுர்ருங்குது...டர்ருங்குது.....டர்ர்ர்ர்ர்” பாட்டு அலாரம். சுச்சி ரிவர்ஸ் கியர்
போட்டு ஓடி, அனிதா கூட அபஸ்வரமா ஆடி, கேமராவ தேடிப் பாடி யப்ப யப்பா.....! சைனா செட்டு
இன்னைக்கு தாறுமாறா தக் ஹாப்ல இருந்துச்சு. வ.வா சங்கம் எப்பவும் போல கும்த்தா பண்ண,
ஒரு ஓரமாப் பாத்தா நம்ம சோப்ளாங்கி சோமன் ரம்யாகிட்ட “இந்த டர்ர்ர்ர்ர்ர்ர்......சுர்ர்ர்ர்ர்ர்ர்
வரிகளுக்கு திரிப்பதாக முத்திரை வைக்கனுமா ? இல்ல அர்த்தப்பதாக முத்திரை வைக்கனுமா?”ன்னு
ஆட்டக்காரன் மாதிரி கேட்டு ரம்யாவ ரேங்கிட்டு இருந்தான். ஒரே மஜாதான். பில்டரு இன்னைக்கு
எந்திரிக்கவே இல்ல.
பின்ன ஷிவானி
வந்து “அத்தான் எந்திரிக்கிறீங்களா, கருப்பட்டி போட்டு காப்பி கொண்டுட்டு வரவா?”ன்னு
கேட்டு எழுப்ப....”இனிமே நீயே வந்து எழுப்பிரு”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே சம்மு
“இனிமே இந்த எருமைய எழுப்புறது, புண்ணாக்கு வைக்குறது, குளிப்பாட்டுறது எல்லாமே நீதான்”னு
சொல்ல ஷிவானிக்கு ஒரே வெக்க வெக்கமா வந்து.....அவ ஃபேஸு அடடடடடா....! அப்பறம் சம்மு
“டேய் பில்டரு....சுச்சி சொல்றத கடுகளவு எடுத்துக்க...இல்லேன்னா டேஞ்சராகிடும்”னு சொல்ல.....”எனக்கு
எந்த டேஞ்சரும் இல்ல....ஏன்னா நாந்தான் டேஞ்சரு”ன்னு போயிட்டான். “என் ஆளப் பாத்தீங்களா?....என்னா
பஞ்ச் போடுறான் பாருங்க”ன்ற மாதிரி ஷிவானி சம்முவப் பெருமையாப் பாத்துச்சு.
காலையில டாஸ்க்குல
ஆஜீத் ஓபெரா பாட சொல்லிக்குடுத்து கண்ணாடிய உடைக்க வக்கனும்னு சொன்னானுங்க. அவன் கத்துக்குடுக்குறேன்னு
ஆரம்பிச்சப்ப பில்டரு சும்மா இல்லாம சைனா கிட்ட “தருதலைன்னா என்னானு தெரியுமா?”ன்னு
கேக்க, சைனா “எனக்கு தெரியாது அதனால நீதான் தருதலை”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே,
நம்ம அம்மாஞ்சி ஆஜீத் என்னைக்குமில்லாத திருநாளா “இந்தா சைனா செட்டு.....செத்த நேரம்
சும்மா இருக்க முடியுதா உன்னால ? நொய்யி நொய்யின்னு போட்டு படுத்துற”ன்னு கத்த “ ஆகா
கைல வேற கண்ணாடி டம்ளர் வச்சிருக்கான். அப்பிடியே ஒதுங்கிருவோம்”னு எந்திரிச்சு ஓடிடுச்சு.
பின்ன பில்டரு
கிச்சன்ல தோசை சுட்டுட்டு இருந்தான். பிரேக் பிடிக்காத ஃபியட் கார் மாதிரி உள்ள வந்த
சைனா செட்டு “தருதலைன்னா இன்னா?”ன்னு கேக்க எல்லாரும் அசிங்க அசிங்கமா விளக்கம் குடுக்க,
“இந்த பில்டரு என்னய அப்பிடி சொல்லிட்டான்”னு முறையிட, “அட சும்மாதாங்க சொன்னேன்”னு பில்டரு கண்டுக்காம
சொல்ல, சைனா செட்டு 14 பாயிண்டு சவுண்டுக்கு போயிடுச்சு “ தள தளன்னு இருக்குற என்னயப்பாத்து
தருதலைன்னு சொல்லிட்டாண்டா......போச்சுடா என் மரியாதையே போச்சுடா, நான் அவங்கிட்ட பேசமாட்டேன்னு
சொல்லியும் என்னய இப்பிடி சொல்லிட்டாண்டா”ன்னு கத்த, பில்டரு பக்கத்துல வந்து “அடிங்க
தக்காளி, பேசமாட்டேன் பேசமாட்டேனு எங்கூட எட்டு மணிநேரம் பேசிட்டு, பின்னாடி வேற எத்திட்டு
போன நீ....இப்ப வந்து என்னய ஏறுரியா”ன்னு பதிலுக்குக் கத்த.....ஒரு கால் மணிநேரத்துக்கு
கய கயன்னு ஃபிஷ் மார்கெட் மாதிரி ஆச்சு.
இன்னும் கோவப்பட்ட
பில்டரு உள்ள போயி வீம்புக்குன்னே “சைனாவ ஏ தருதல...இங்க பாரு தருதல....அங்க போ தருதல”ன்னு
சொல்லி கடுப்பேத்த இடையில வந்த ஆரிக்குதான் சேதாரம். பில்டரு கையெடுத்து கும்பிட்டு
“யப்பா டேய் இவன யாரச்சும் கூட்டிட்டுப் போங்கடா.....பேசிப் பேசியே சாவடிக்குறான்.
ஏம்ப்பா தேவையில்லாம உள்ள வந்து ஏன் என் உசுர வாங்குற? போப்பா பேசாம் வாய் வலிக்கப்
போகுதுன்னு சொல்லி அனுப்பிட்டான். சைனாவோ அங்குட்டு இருந்து இடுப்பக் காமிச்சு வா வந்து
உதை....வா வந்து உதைன்னு மொத்தம் 12 தரம் சொல்லுச்சு. அவன் ஒரு தரம் உதச்சிருந்தாலே
செட்டுக்கு வெளிய வந்து விழுந்திருக்கும். ஆனா உதச்சா அவன உதச்சு வெளிய தள்ளிருனுவானுங்கன்னு
தெரியும் சோ....வாய் வார்த்தையாவே விட்டுட்டு இருந்தான். அப்பறம் சம்மு வந்து சண்டைய
விலக்கி விட்டாங்க.
இவ்வளவு பரபரப்புலையும்
சகுனி கேபிகிட்ட “பாலா அவந்தான் என்னய கேப்டனாக்குனேன்னு சுச்சி முன்னடி சொல்லி அசிங்கப்படுத்துறான்”னு
சொல்லிட்டு இருந்தாப்ல.
அப்பறம் ரம்யா
சகுனிகிட்ட “தக்காளி கொழ கொழன்னு இருக்கு. அதுல எதும் பண்ண முடியுமா?”ன்னு கேக்க, “தொக்கு
பண்ணலாம்”னு சகுனி ஐடியா தர, உடனே சுச்சி “அது அழுகிப்போனதுடா அப்ரசண்டிகளா”ன்னு சொன்னதும்
சகுனிக்கு ஏறிக்கிச்சு. “எங்கிட்ட வாலாட்டுனா வண்டை வண்டையா கேப்பேன்”னு சுச்சியத்
தவிர எல்லார்கிட்டையும் சொல்லி சுத்திட்டு இருந்தாப்ல. சனம் பக்கத்துல வந்து “ஆமாமா
ரொம்ப தப்பு....ஆமா என்னாச்சு”ன்னு பாவமா கேட்டுச்சு.
உள்ள பொத்தாம்
பொதுவா சம்மு கிட்டையும், ஷிவானி கிட்டையும் பொலம்பிட்டு போனாப்ல சகுனி. சம்முவோ எல்லாத்தையும்
கேட்டுட்டு “இவன் என்ன சொல்றான் ? யார சொல்றான்?னு புரியவே இல்லே”ன்னு சொன்னதுதான்
டாப் க்ளாஸ் காமெடி. திடீர்னு உள்ள வந்த சகுனி, ஷிவானியப் பாத்து “இது என்ன ஜடமா ?
த்தூ”ன்னு துப்பிட்டுப் போக, “ஆமா...இப்ப இந்த மோரான் ஏன் என்னய இப்பிடி துப்பிட்டு
போறான்?”னு ஷிவானி முழிச்சுச்சு.
பின்ன பில்டரு
வந்து ஷிவானிக்கிட்ட “இல்ல உனக்கும் எனக்குந்தான் பொருத்தம்னு வெளிய பேசிக்கிறதா சுச்சி
சகுனிகிட்ட சொல்லுச்சு. அத அந்த ஆளு தப்பா எடுத்துக்கிட்டான் போல”ன்னு சொல்லி, சுச்சியக்
கூப்ட்டு இந்த விஷயத்த சொன்னானுங்க. சுச்சியோ “ஆத்தீ நான் அப்பிடி சொல்ல வரல....சகுனி
திரிச்சுட்டான்”னு சொன்னாங்க.
நாமிநேஷன்
: ஆரி, அன்னப்போஸ்டு, பில்டரு, சைனா செட்டு சனம், அன்னை அர்ச்சனா, சோமு, சகுனி.
அடுத்தப் பஞ்சாயத்துக்கு
ஆரி ப்ரோ தயாரானார். வீடு கூட்டல வந்து கூட்டுடான்னு சொன்னதுக்கு “பழைய டீம ப்ராப்பரா
வந்து ஹேண்ட் ஓவர் பண்ண சொல்லுங்கன்னாப்ல ஆரி. எது வெளக்கமாத்த எடுத்து உன் கையில குடுத்து,
கையப்பிடிச்சு கூட்ட வைக்கனுமா ? என்னடா இது”ன்னு சம்மு கேக்க, “யாரு யாரு வேலை பாக்கலன்னு
நான் சொல்லவா ? யாரு யாரு ஆடலன்னு நான் சொல்லவா ? யாரு யாரு எப்பிடின்னு நான் சொல்லவா
? 18ம் வாய்ப்பாட மனப்பாடமா நான் சொல்லவா ? இந்த வீட்ல எத்தனை கேமரான்னு நான் சொல்லவா?”ன்னு
ஆரம்பிக்க, “சம்மு மறுபடியும் நான் ஒண்ணு சொல்லவா ? நீ கமல்க் கிட்ட உன்னயப் போட்டுக்
குடுத்ததுக்கு. என் மேல நீ காண்டுல இருக்க அது மட்டும் தெரியுது. கூட்டலேன்னா எக்கேடோ
கெட்டுப்போ”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே ரியோ “நான் வேணும்னா கூட்டவா?”ன்னு கேக்க
, “வா எல்லருமே சேர்ந்து போயி சுத்தம் என்பது நமக்கு பாட்டுப்பாடிட்டே கூட்டுவோம்”னு
எல்லாரையும் கூட்டிட்டுப் போக....ஆரி ப்ரோ தனது ப்ளான் ப்ளாஸ்டாகி அனாதையாக்கப்பட்டார்.
இதோட முடிஞ்சிருக்கு.
Comments
Post a Comment