பிக்பாஸ் – 4 : நாள் - 28 (01.11.20)
28வது நாள்
சட்டை மேல எவ்ளோ
பட்டன் கோட்டோட வந்தார் ஆண்டவர். கை கஃப்புல மக்கள் நீதி மய்யம் லோகோ. என்ன ஆண்டவரே
இதெல்லாம் ? வந்த கையோட “அக்டோபர் போனா நவம்பர் வரும்....நவம்பர் வந்தா மழை வரும்.....மழை
வந்தா ரோடு முழுக்க தண்ணி வரும்....அப்பறம் காப்பாத்த போட்டு வரும்......ஏரில வீடு
கட்டுனா இந்த மாதிரிதான் இம்சை வரும்”னு ஒரு செய்திய சொல்லிட்டு “வாங்க.... உள்ளார
இவனுங்க என்ன உல்லாலா பாடுறானுங்கன்னு கேப்போம்”னு போனார்.
அகம் – அகம்
காஸ்ட்யூம்கள
பாத்துட்டு “அட பரவாயில்லையே ! மனுஷனுங்க மாதிரியே இருக்கீங்கடா”ன்னு பாராட்டிட்டு.
“கேப்டன்ஸி டாஸ்க்கு மேட்டருக்கு போவோமா?”ன்னு கேட்டுட்டு. “எடுத்ததும் எதுக்கு அபசகுனமா......
அத அடுத்து பாப்போம்”ன்னு சொல்லிட்டு “குக்கிங் டீமுக்கு பாராட்டு”ன்னு சொன்னாரு. இப்ப
மறுபடி கேப்டன்ஸி டாஸ்க்க பத்தி கேக்கும்போது பாலா சிரிக்க “அது ஏன்டா எப்பப் பாத்தாலும்
பால் பாக்கெட் விளாம்பரத்துல வர மாடு மாதிரி “பே”ன்னு சிரிச்சிட்டே இருக்க ? சரி பந்துகள
சம்மு கூடையில போட்டு ஏன் போங்காட்டம் ஆடுன ?”ன்னு கேக்க, “எனக்குதான் அந்த பக்குவம்
வரலயே”ன்னு சொன்னதும், “அப்ப சோமனுக்கு தந்திருக்க வேண்டியதுதான?”ன்னு மடக்க, “ஓப்பனா
பேசவா?”ன்னு பில்டரு கேக்க...”அது நீ எப்பவும் சட்டை கூட போடாம ரொம்ப ஓப்பனாத்தான பேசுவ....பேசு”ன்னு
ஆண்டவர் சொன்னதும்.
“நான் வேணும்னுதான்
சம்முவ கேப்டனாக்குனேன். அவ தெளிவுக்கும், பொறுமைக்கும் அவ ராணுவ கேப்டனாவே ஆகியிருக்க
வேண்டியவ, ஆனா இங்க வந்து இந்த இத்துப் போனவனுங்களுக்கு கேப்டனாகி காலந்தள்ளுறா. சோமு
பய சோப்ளாங்கியா இருந்தா பரவாயில்ல....சில பேரு கூட சேர்ந்து சொப்பு பொம்மையாகிட்டான்.
அவனா எதும் பண்ணுவான்னு எனக்கு நம்பிக்கையில்ல. தவிர அவன இன்ஃப்ளுயன்ஸ் பண்றானுங்க”ன்னு
சொன்னதும் ஆண்டவர், “யாருடா அது ? எங்க பேர சொல்லு”ன்னதும், பில்டரு கொஞ்சம் கூட யோசிக்கலையே
“நிஷா, வேல்ஸ், முக்கிய குற்றவாளி ரியோ, சந்தேகத்தின் அடிப்படையில அன்னை அர்ச்சனா”ன்னு
கைகாட்டிட்டான்.
“என்னடா இவன்
இப்பிடி சொல்றான்? நீங்க என்னடா சொல்றீங்க?”ன்னு கேட்டதும் “சோமு அப்டில்லாம் இல்ல
சார். அவனுங்க கூட இருந்தா வேலை கம்மியா இருக்கு. மத்தபடி ஒன்ணும் இல்ல”ன்னு மழுப்ப,
ரியோ “அப்டில்லாம் நாங்க ஒண்ணும் இன்ஃப்ளுயன்ஸ் பண்ணல”ன்னு சொன்னான். (MV : ஏண்டா நாங்க
பண்ணலன்னு சொல்லி, நீங்க ஒரு டீமாதான் இருக்கீங்கன்னு உங்கள நீயே காட்டிக் குடுத்துட்டியேடா
கரப்பான் பூச்சி). அர்ச்சனாவும் “அப்டில்லாம் பண்றதில்லங்க. சோமன் கக்கூஸுக்கு போனா
போயிட்டு அப்டியே கழுவி விட்டுட்டு வாடான்னு சொல்லுவேன், நாமினேஷன் அப்போ நமக்கு வேண்டாத
ஆள நாமினேட் பண்ண சொல்லுவேன், பஞ்சாயத்து ஏதும்னா அவன கைபாமா யூஸ் பண்ணிக்குவேன் மத்தபடி
அவன சுதந்திரமாத்தான் இருக்க விட்டிருக்கேன்”னு சொன்னாங்க.
சட்டுன்னு சைனா
செட்டுல இருந்து சத்தம். சனம் எந்திரிச்சு “இங்க ஒன்னு இல்ல ரெண்டு குரூப்பு இருக்கு.
ரியோ ஒரு குரூப்புன்னா, பில்டரும் ஒரு குரூப்புதான் அவனும் இன்ஃப்ளுயன்ஸ் பண்றான்”னு
வாழ்க்கையிலேயே உருப்படியா ஒரு விஷயத்த கவனிச்சு சொல்லுச்சு. இத சொன்னதும் ரியோ மட்டும்
வறட்டி தட்டுறா மாதிரி கையத்தட்டுனான். (பில்டர வெறுப்பேத்துறானாமாம்). “ஆனா ரெண்டு
குரூப்புலையும் தப்பிருக்கு. அத விட முக்கியம் நான் எந்த குரூப்புலையும் இல்ல”ன்னு
சொன்னதும் ஆண்டவர் “உன்னய எவனாச்சும் எந்த குரூப்புலையாச்சும் வச்சிருப்பானா ?”னு விட்டுட்டார்.
பின்னாடியே ஆரி ப்ரோவும் “ஆண்டவரே அதெல்லாம் கண்கூடா தெரியலையா ? அர்ச்சனா ரியோ ரெண்டு
பேரும் பக்காவா குரூப்பிஸம் பண்றானுங்க”ன்னு பத்த வச்சாப்ல. “சப்பாத்தி மேட்டர்ல இன்னும்
சமாதானம் சொல்ல வரல ரியோ”ன்னு போட்டுக்குடுத்தாப்ல.
“நான் அப்பிடியெல்லாம்
இதப் பண்ணு, அதப் பண்ணுன்னு யாரையும் சொல்றதில்ல”ன்னு சொன்னதும், பிலடரு எந்திரிச்சு
“இப்பப் பாத்தீங்கன்னா மக்களே.....இன்ஃப்ளூயன்ஸ்ல ரெண்டு வகை உண்டுங்க. டைரக்ட் அண்ட்
இண்டைரக்ட்னு ரெண்டு வகைங்க. அதுல பாத்தீங்கன்னா இவனுங்க பண்றது இண்டைரக்ட் இன்ஃப்ளுயன்ஸ்ங்க.
இவனுங்க கருத்த மத்தவனுங்களுக்குள்ள புகுத்தி அவனுங்களையும் இவனுங்க மாதிரி மாத்துறானுங்கங்க”ன்னு
லேகியம் விக்கிறவன் மாதிரி சொல்ல, ரியோ மூஞ்சி ரிமோட் பொம்மை மாதிரி போச்சு.
“ஏண்டா உள்ள
போயி தனித்தனியா அவனவன் விளையாட்ட விளையாடுங்கன்னு அனுப்பி விட்டா கூட்டு சேர்ந்து
கும்மியடிச்சுகிட்டு இருக்கீங்க ? ஒழுங்கு மரியாதையா ஒழுங்கா விளையாடுங்க”ன்னு சொல்லிட்டு.
சம்முகிட்ட வந்து “ஆனாலும் நீ அன்னப்போஸ்டு பேசும்போது நிப்பாட்டி இருக்கக் கூடாது”ன்னு
சொன்னார். (இவரு எதுவும் அனிதா ஆர்மில இருக்காரா ? ரெண்டு நாளா அத எதிர்த்த எல்லா பேரு
மேலையும் கேஸ் எழுதுறாரு ?). “ஏங்க வீட்ல வயசான ஆள வச்சிக்கிட்டு இவ விடிய விடிய பேசுவா
அதக் கேட்டுகிட்டு உக்காந்திருந்தா சகுனிக்கு இன்னைக்கு 5ம் நாள் காரியம் நடந்திருக்கும்”னு
சம்மு சொல்ல, “ஆங்....அப்ப அடுத்து வந்த ஆளுக பேசுனப்ப ஒன்னுமே சொல்லலயே?”ன்னு கேட்டாரு,
உடனே அன்னப்போஸ்டு வந்து “ஆமா ஆண்டவரே, அப்பத்தான் என் வீட்டுக்காரன் வீட்ல இருந்து
என்னய கூப்டுறதுக்கு குட்டி யானையில வந்த கதைய சொல்லிட்டு இருந்தேன்....அத சொல்லவா
விட்டானுங்க ? ரியோலாம் அவ்வளவு பேசுறான்....ஒன்னுமே சொல்லல”ன்னு கேப்ல KTM பைக்க ஓட்டுச்சு.
ஆண்டவரும் “நீயும் கொஞ்சம் லெங்க்த்த கொற.....தலைப்பு செய்தின்னு சொல்லிட்டு தலை முதல்
கால் வரையா சொல்லுவ ?”னு சும்மா பேருக்கு சொல்லிட்டு, “இதுல பின் பெஞ்சு ஸ்டுடண்டு
ரம்யாலாம் லந்தக் குடுத்து சிரிச்சிட்டு இருக்கு, என்ன ஷிவானி நீயுந்தான?”ன்னு கேக்க,
“ஆமா, இவ குடுத்த தலைப்ப விட்டுட்டு புருஷன் பூரி சுட்ட கதை, புளியோதரை கிண்டுன கதைன்னு
கண்ட கருமாந்திரத்த பேசிட்டு இருக்கா அதான் சிரிச்சேன்”னு சொல்லுச்சு. அதுக்கும் அன்னப்போஸ்டு
“ரியோ கூடத்தான் அன்னைக்கு வேற ஒரு டாஸ்க்குல அப்பிடி பேசுனான். அதெல்லாம் கொஞ்சம்
அப்டி இப்டிதான் இருக்கும் அட்ஜஸ்ட் பண்ணித்தான் கேக்கனும். நான் இவனுங்களுக்கா பேசுனேன்.....வெளிய
என் பேச்சக் கேக்க ஆவலா இருக்குற மக்களுக்காக பேசுனேன்.....ஆனாலும் இவனுங்க எனக்கு
ஸ்பேஸே குடுக்க மாட்டேன்றானுங்க”ன்னு சொல்ல (எதே......?), “ஆமாமா”ன்னாரு ஆண்டவரு. பாவம் ரம்யா வேற சிரிச்சதுக்கு
சாரில்லாம் கேட்டுச்சு.
இப்ப ஒரு விளையாட்டுன்னு
வந்தாரு. சீசனுக்கு சீசன் நடக்குற அதே செத்துப்போன டாஸ்க்கு. கார்டுல இருக்குற போட்டோல
இருக்க ஆளு மாதிரி கார்டு எடுத்தவன் பேசிக் காட்டனும்.
பாலா – ஆரிய
இமிட்டேட் பண்ணான். அவர நெறைய பேசுறவர்னு கலாய்ச்சுட்டு போயிட்டான்
சம்மு – சனம்
மாதிரி செம்மயா பண்ணுச்சு. சைனா செட்டுக்கு வழக்கம் போல இது இப்ப உரைக்காது.....நைட்டு
நிலா உச்சிக்கு போனதும் இதுக்கு மண்டைல நண்டு பிராண்ட ஆரம்பிச்சு அடடா நம்மள அசிங்கப்படுத்தி
இருக்கானுங்க. நாமளும் அதுக்கு பெக்கே பெக்கேன்னு சிரிச்சு வச்சிருக்கோம்னு புரிஞ்சு
பஞ்சாயத்த ஆரம்பிக்கும்
வேல்ஸ் – அஜீத்
போட்டோவ எடுத்து. அவன் மாதிரி பாடி காட்டிட்டு. இன்னும் நல்லா வெளையாடனும்னு சொன்னாப்ல.
சோமு – லெக்பீஸப்
பாத்த லேபர்டார் டாகி மாதிரி ரம்யா போட்டோவ எடுத்து வச்சிக்கிட்டு எனக்கு இப்ப இவதான்
கூட்டு....சிரிப்புல செதைக்குறா போட்டுன்னு சொல்லிட்டு சைனக் காமிச்சிட்டுப் போயிட்டான்.
நிஷா – வேல்ஸ்
மாதிரி பண்ணுச்சு. ஜெயிக்குற டீம் பக்கம் இருக்கனும்னு நெனைக்கிறானே தவிர...விளையாட
மாட்டேங்குறான்னு சொல்லுச்சு.
ஜித்து – அன்னப்போஸ்டு
போட்டோவ எடுத்து அவ சிரிப்பையும், சோகத்தையும் செஞ்சு காட்டுனாப்ல. ஜித்து செய்ய செய்ய
அன்னப்போஸ்டு “க க”ன்னு கன்றாவியா அகவிக்கிட்டு இருந்துச்சு.
அர்ச்சனா –
சகுனி மாதிரி பப்பரப்பான்னு படுத்து காமிச்சு காமெடி பன்ணி காமிச்சாங்க. மறுபடியும்
விளையாட ஆரம்பின்னாங்க.
ரியோ – பில்டரு
மாதிரி பண்றேன்னு சொல்லி, இதுக்கு முன்ன பில்டரு பேசுனத அவனும் பேசுனான். (பழி வாங்கிட்டாராமாம்)
மத்தவனுங்க
வரலயா ? இல்ல காமிக்கலையான்னு தெரியல. ஷிவானியையாச்சும் காமிச்சிருக்கலாம்.
“சரி, இப்பிடியே
தெள்ளவாரித்தனம் பண்ணிட்டு திரிவீங்களா? இல்ல திருந்தி ஒழுங்கா விளையாடுவீங்களா ? மக்கள்
பாத்துட்டு இருக்காங்க...பாத்துக்கோங்க”ன்னு சொல்லிட்டு. நிஷா, சகுனி, சோமு சேவ்னு
சொன்னார்.
இப்ப ஆஜீத்தும்
வேல்ஸும் மட்டும். “என்ன ஆஜீத் உன் ஆறாம் அறிவு என்ன சொல்லுது?”ன்னு கேக்க “போனாலும்
சரிதான். ஆனா இருந்தா இனிமே ஒழுங்கா விளையாடனும். 2 நாளைக்கு முன்னதான் எனக்கு இது
தோணுச்சு”ன்னு சொன்னான் (ஏம்பா....அதுக்குள்ள யோசிச்சுட்ட ? இன்னும் ஒரு 4 வாரம் டைம்
எடுத்திருக்கலாமே ?). அப்பறம் வேல்ஸ் கிட்ட கேட்டதுக்கு “கார்டுல என் பேருதான் இருக்கு.
சீக்கிரம் கூப்டுங்க”ன்னு சொன்னதும். “சரி வா”ன்னு சொல்லிட்டார். சொன்னதும் பில்டரு
ஓடிப்போயி ஆஜீத்த கட்டிப்பிடிச்சு தூக்கி சந்தோஷப்பட்டான். அன்னை அர்ச்சனா அப்ப ஆரம்பிச்ச
அழுகைய கடைசி வரைக்கும் மெயிண்டெயின் பண்ணாங்க. கரப்பான் பூச்சி ரியோ “யோவ் அழுகாம
ஜாலியா கெத்தா போயா”ன்னான். எதுக்கு அப்பிடி சொன்னான்னு தெரியல. ஆனா வேல்ஸ் அழுகவே
இல்ல. இதுதான் இன்ஃப்ளுயன்ஸ் போல.
அப்பறம் வெளிய
வந்து பாட்டு பாடிட்டு. உண்டியல உடச்சு காயின அர்ச்சனாகிட்ட குடுக்க, அவங்க அத “சம்முகிட்ட
குடு”ன்னு சொல்லிட்டாங்க. சைனா செட்டு வழக்கம்போல உடஞ்ச சட்டிய பொறுக்கி எடுத்துக்கிச்சு.
ஜித்துகிட்ட “ரேகா மேம் சட்டியும் எங்கிட்டதான் இருக்கு”ன்னு சொல்லுச்சு. இப்டியே சேத்து
வச்சு மொத்தமா பிக்பாஸ்கிட்ட எடைக்குப் போட்டு பேரீச்சம்பழம் வாங்கித் தின்னும் போல.
வேல்ஸ் வரதுக்குள்ள
இந்த வார புத்தக அறிமுகம்னு சொல்லி தொ.ப எழுதுன அழகர் கோயில் புத்தகத்த பரிந்துரைச்சார்.
அப்பறம் தொ.பவ வீடியோல எடுத்து பேசுனார்.
வேல்ஸ் வந்ததும்
“என்ன வேல்ஸ் நீயெல்லாம் சாதனையாளர். சாதாரண வேல்ஸ் இல்ல....டாக்டர் வேல்ஸ். உங்கிட்ட
இருக்குற தாழ்வு மனப்பான்மைய ஒழி”ன்னு புத்திமதி சொல்லி அனுப்பி வச்சார்.
2 வாரமா எதிர்பாத்துட்டு
இருந்த ஆள் வந்தாச்சு. சுச்சி கமிங். “மொத சீசன்ல இருந்தே கூப்ட்டானுங்க. ஆனா இந்த
சீசன்லதான் போட்டி கொஞ்சம் நல்லா இருக்குற மாதிரி இருக்கு....அதான் நான் வந்தேன்”னு
சொல்லிட்டு, “உள்ள போயி ஒரு ஆட்டு ஆட்டலாம்னு இருக்கேன்”னு ஆண்டவருக்கு ஒரு புத்தகத்த
பரிசா குடுத்துட்டு உள்ள கோயிங்.
அப்பத்தான்
கதவோரமா உக்காந்து ஷிவானி கூட கப்பல் ஓட்ட ஆரம்பிச்சிருந்தான் பில்டரு....அது பொறுக்காம
பாட்டு சத்தம் கேட்டுச்சு....அய்யோ அம்மான்னு பூரா பேரும் வெளிய வந்து பாத்தா கதவு
தொறந்துச்சு. சுச்சி என்ட்ரி. பெரும்பாலானவங்க முகத்துல அருள் இல்ல. நிஷாவுக்கு சுச்சி
யாருன்னே தெரியல. சீக்கிரம் தெரிஞ்சுரும்.
சில பல கட்டிப்பிடிகளுக்கு
அப்பறம் புதுசா வந்த ஆளுக பண்ற சடங்கு சம்பிரதாயமான எமோஜி குடுக்குற டாஸ்க். ஒவ்வொருத்தருக்கும்
ஒவ்வொரு எமோஜி குடுத்து, கீழ்வரும் காரணங்கள் சொல்லப்பட்டுச்சு.
ஜித்து – இன்னும்
குறும்பு பண்ணலாம்
கேபி – ஹக்குன்னாலே
அது கேபிதான். நல்ல பாசிட்டிவ் வைப்.
அனிதா – கொண்ட
கொள்கையில மாறாம இருப்பவர் (ஆமாமா....)
சனம் – பில்டரு
மேல ஒரு கண்ணு. என்னதான் சண்டை போட்டாலும் முடிவுல ஒரு வெக்கம் (இதுல பில்டருக்கு உன்னய
பிடிக்கும் ஆனா சொல்ல மாட்டேங்குறான்னு சொன்னதும் சைனா செட்டு முகம் போன போக்கு இருக்கே....நவசாம்பாரும்
மின்னுச்சு)
பில்டரு : ரொம்ப
பிடிச்ச கேரக்டர். செயல்ல தெரியுறது அரக்கத்தனம் இல்ல கான்ஃபிடன்ஸ்தான்
சகுனி : காயம்பட்ட
சிங்கம். சீக்கிரம் பழைய பாஃர்முக்கு வரனும்
ரியோ : எதையோ
இன்னும் தேடிட்டே இருக்கான் (வேற என்ன....அவனத்தான் தேடிட்டு இருக்கான். வீட்டு வார்டன்
மாதிரியே திரிஞ்சா அப்டித்தான்)
நிஷா – காமெடி
மன்னி.
ரம்யா - சைலன்ட்
கில்லர். (சோமன் “ஆமா ஆமா என்னய கொன்னுட்டா”ன்னு மனசுல கூச்சல் போட்டுட்டு இருந்தான்)
ஷிவானி – எல்லாத்தையும்
மேல உள்ளவன் பாத்துக்குவான்னு இருக்கு.
ஆஜீத் – குழப்பத்துலயே
வாழ்றவன்
சோமு – வாய
தொறடா டேய்
அர்ச்சனா –
எல்லாரோட ஸ்க்ரிப்ட்டையும் தானே பேசுறது
ஆரி – அநியாயம்
நடந்தா அடுத்த தெரு பக்கமா போகாம...தட்டிக் கேளு.
இதோட முடிஞ்சிருக்கு.
ஆனா இவனுங்க
வாரத்துல ஒரு நாள் ஏதாவது கண்டென்ட் குடுத்துட்டு, மீதி நாளு முழுக்க அந்த ஒரே கண்டென்ட்டயே
மாத்தி மாத்தி பேசி சாவடிக்குறானுங்க. ஆண்ட்வரே நேரடியா வந்து கொளுத்திப் போட்டாலும்
இவனுங்ககிட்ட இருந்து புகை கூட வரமாட்டேங்குது. இப்பிடி இருந்தா என்ன பண்றது ? இருந்தாலும்
கடைசி நம்பிக்கையா சுச்சிய நம்புவோம்.
Comments
Post a Comment