பிக்பாஸ் – 4 : நாள் - 40 (13.11.20)

 எச்சரிக்கை : அட்மின் பதிவு

ஆனாலும் பில்டரு இல்லேன்னா இவனுங்க என்ன பண்ணுவானுங்கன்னு தெரியல...மொத 2 வாரத்த தவிர்த்து இந்த ஷோ முழுக்க முழுக்க பில்டர சுத்திதான் இருக்கு. இல்ல மொத்த கேமராவும் அவன மட்டுந்தான் ஃபோகஸ் பண்ணுதா ? அவன முன்னாடி நிப்பாட்டிட்டு பூரா பயலுகளும் ரொம்ப சேஃபா இருக்கானுங்கன்னு தோணுது.....!

39வது நாள் தொடர்ச்சி...

நைட்டு நம்ம செமி சுச்சி அன்னப்போஸ்ட கூப்ட்டு “பில்டரு என்னய ஏத்துக்க மாட்டேங்குறான்.....அவன் கூட சேத்துக்க மாட்டேங்குறான்”னு மசக்களி பாடுச்சு. “ஷிவானிக்கும் அவனுக்கும் குறுக்க வந்த கும்முடிப்பூண்டி ட்ரெயினா நெனைக்கிறான் என்னய....! நானே பாவம்”னு பொலம்ப....அன்னப்போஸ்டு அன்னப்பறவையா மாறி பில்டரு கிட்ட தூது போச்சு, அவனோ “அது என்னத்தையோ சொல்லிச்சுன்னு எங்கிட்ட வந்து கேக்குற....அது அரைபோதையில அனத்திட்டு இருக்கு...காலையில பாரு உங்கிட்டயே வந்து. நைட்டு உனக்கு ஏதோ பிரச்சனைன்னு சொன்னியே என்ன அது?ன்னு கேக்கும். அதயெல்லாம் பெருசா எடுத்துக்காம நீ போயி தூங்கு”ன்னுட்டான்.

40வது நாள்

“பேட்ட பராக்” பாட்டு அலாரம். உங்கூட பேசவே பயமாயிருக்குன்னு சுச்சி சொன்னதும், “அத அப்பிடியே மெயிண்டெய்ன் பண்ணிக்கோ”ன்னு போயிட்டான்.

பின்ன சுச்சி ஷிவானிய கூப்ட்டு பில்டரு நல்லவன்....”அவன ஏமாத்தப் பாக்குறானுங்க. இத நான் சொன்ன வாய உடைக்க வரான்...நீயாச்சும் அவங்கிட்ட சொல்லு”ன்னு சொல்லுச்சு சுச்சி. “ஷிவானி கிட்ட என்ன சொன்ன?”ன்னு பில்டரு கேட்டதுக்கு “அத அவகிட்டயே கேளு”ன்னு சுச்சி சொன்னதும் பில்டரு ஷிவானிய கூப்ட்டு “என்ன?”ன்னு கேக்க....”அட உன்ன ஏமாத்தப் பாக்குறானுங்களாம்டா அத உங்கிட்ட சொல்ல வந்தா உதைக்கிறியாம்”னு  ஷிவானி அதே விஷயத்த சொல்ல....யப்பா முடியல....!

பின்ன கேப்டன் கேண்டிடேட்ஸ செலெக்ட் பண்ண சொல்ல, கேபி, ஆஜீத், நிஷா 3 பேரும் கேப்டன் கேண்டிடேட்ஸ்.

முள்ளு தொப்பிய மாட்டிக்கிட்டு மேல கட்டியிருக்குற பலூன குதிச்சு குதிச்சு ஒடைக்கனும்...கீழ விழுகுற காயின சேக்கனும். யாருகிட்ட அதிக காயினோ அவங்க கேப்டன்.

ஆஜீத் தான் அடுத்த வார கேப்டன்.

சனத்துக்கு பிறந்த நாள் கேக்கு வந்துச்சு...எல்லாரும் அங்க இருந்தாங்க ஆனா பாலா இல்ல...”சரி கேக்க வெட்டு”ன்னு சொன்னதுக்கு “பாலா வரட்டும்”னு சொல்லிருச்சு சனம். பின்ன பாலா வந்ததும் கேக்க வெட்டுச்சு.

கேப்டன் கேண்டிடேட் நாமிநேஷன்ல சைனா பேர பாலா சொல்லிட்டான் போல....”நீ என் பேர சொல்லி அடுத்த நாளே என்னய எக்குத்தப்பா வச்சு செஞ்சுருவ...பாப்போம் இந்த வாரம் என்ன?”ன்னு சொல்லிட்டு போச்சு. அப்பறம் சுச்சியும் சமாதானமாகி பில்டருக்கு முத்தம் குடுத்துச்சு....பில்டரு வகையா சிக்குறான்னு தோணுது.

சம்மு லெமன் கேட்டதுக்கு இல்லேன்னு சொல்லிட்டு ரமேஷுக்கு நிஷா குடுத்திருக்கு போல...இதே போல சனமும் ஒரு பஞ்சாயத்த கொண்டு வந்தது நெனைவிருக்கலாம். வேற ஏதோ ஒரு பிரச்சனையும் இருக்கு போல அத ஆரி கேக்கலன்னு அன்னப்போஸ்டு “நீ கேப்டனா இருந்து என்னத்த சாதிச்ச?”ன்ற மாதிரி கேட்டுருச்சு....”அத ஏன் அப்பிடி கேக்குற?”ன்னு ஆரி கேட்டதுக்கு “இந்த வீட்ல எவன் கூடையும் பேச பயமாயிருக்கு”ன்னு சொல்லுச்சு அன்னப்போஸ்டு...”அது கண்ணாடிங்க”ன்னு யாராச்சும் சொல்லி இருக்கலாம்.

பின்ன ரியோ வந்து “சரக்கு வரும்போதே 4 லெமென் எடுத்து வச்சிருது நிஷா அந்த லெமந்தான் ரமேஷுக்கு குடுத்தது”ன்னு சொன்னான். ஏன்டா இதே மாதிரி எல்லாரும் தனக்குன்னு எடுத்து வச்சுக்கிட்டா எத வச்சுடா சமைப்பீங்க ? இது நியாயமான்னு ஆண்டவர் தான் கேக்கனும்.

அப்பறமா அனிதாவோட டெடி பியர வச்சுக்கிட்டு அர்ச்சனா, ரம்யா, சோமு விளையாண்டாங்க.....

வசந்த் & கோ டாஸ்க். பாதி பேரு விக்க...பாதி பேரு வாங்கனும். சம்மு டீமு வின்னு.

அப்பறம் சக்கரம் சுத்தி விளையாண்டு எந்த நம்பர் வருதோ அந்த நம்பர்ல இருக்குற பரிசு கிடைக்கும்.

ஆளாளுக்கு ஒண்ணு கிடைச்சுச்சு. கடைசியா பாட்டு போ........இந்தா வந்துட்டேம்மா ! பிக்பாஸாவது ஹை கோர்ட்டாவது.....! மாவ எங்க ? உரல எடுத்து வை....முறுக்கு சுத்த ஆரம்பிக்கிறேன்........! நீ எண்ணையில போட்டு எடு....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)