பிக்பாஸ் – 4 : நாள் - 33 (06.11.20)
இவனுங்களுக்கு 3 வது ப்ரொமோ கட் பண்றதுக்குக் கூட வழியில்லாத வறட்சியான வயக்காடாகிடுச்சு இந்த எபிசோடு...... மேயுற மாட்ட நக்குற மாடு கெடுத்தது கணக்கா “உள்ள போயி இவனுங்கள கெளப்பி விட்டு கலவரம் பண்றேன்”னு மைக்ல அடிச்சு சத்தியம் பன்ணிட்டு போன சுச்சியையும் சும்மா உக்கார வச்சுட்டானுங்க இவனுங்க....!
33வது நாள்
சைனா செட்டு
சனத்தோட ஃபோட்டோவுல இருந்து கேமரா ஜூம் ஆகிட்டிருக்கும் போதே “ஓ ஓ சனம்” பாட்டு அலாரமா
அடிச்சது. எப்பவும் எல்லாபக்கமும் இருந்து சைனாவ அடிப்பானுங்க. இன்னைக்கு அலாரமும்
அடிக்குது அவ்வளவுதான். என்னமோ இந்தப் பாட்டையே இவனுங்கதான் கண்டுபுடிச்சவனுங்க மாதிரி
பாங்ரா டான்ஸ படுத்தி எடுத்துட்டு இருந்தானுங்க. சனத்தோட “தக் ஹாப்”பப் பத்தி முதல்
முதலா கவனிச்சு சொன்னது நாமதான். பிக்கியும் இத கவனிச்சதால அத ஒரு டாஸ்க்காவும் மாத்துனாப்ல.
கேமராக்கிட்டப் போயி தன்னைப் பத்தின பாட்டு போட்டதுக்கு நன்றின்னு சொல்லி முகத்த முலாம்பழம்
மாதிரி வச்சுக்கிட்டாங்க சைனா செட்டு சனம்.
பின்ன உள்ள
காமிச்சா
ரியோ : பெருசு பப்பாளி சாப்பிடுங்க
சகுனி : இல்லப்பா
வேணாம்....கண்டவங்க சமைச்சதெல்லாம் சாப்பிட முடியாது
ரியோ : யோவ்,
இது பப்பாளிப் பழம்.... யாரும் செய்ய முடியாது. இது மரத்துல விளைஞ்சு அப்பிடியே சமைக்காம
சாப்பிடுறது.
சகுனி : பப்பாளி
ரசமா இருந்தா என்னப்பா ? நமக்கு பிடிக்காத ஆளுங்க செஞ்சா அத சாப்பிட நான் என்ன மானங்கெட்டவனா
?
ரியோ : MV
: ஆகா....இந்தாளு 3 நாளா சாப்பிடாம தர்ணா பண்றதால காது அடைச்சுக்கிச்சு....இப்பிடியே
விட்டா மூக்குல பஞ்சடைக்க வேண்டியதுதான்....!
நிஷாவும் அப்ப
கைல பப்பாளியோட உள்ள வந்து....
நிஷா : மாமனாரே...பப்பாளி
சாப்பிடுங்க...
சகுனி : இப்பதான்
ரியோகிட்ட பப்பாளி ரசம் வேணாம்னு சொன்னேன்...அடுத்து நீ தக்காளித் தொக்குன்னு வர...அதெல்லாம்
தொட மாட்டேன் //
நிஷா “பே”ன்னு
ரியோவப் பாக்க....ரியோ “இங்குட்டு வந்துரு”ன்னு கூட்டிட்டுப் போயிட்டான்.
அடுத்து காலை
டாஸ்க். சைனா செட்டு சனம் தன் தக் ஹாப்ப எல்லாருக்கும் சொல்லிக் குடுக்கனும். “ஜஸ்ட்
4 ஸ்டெப்பு அவ்வளவுதான் தக் ஹாப்பு. எல்லாரும் கைய நல்லா வார்ம் அப் பன்ணிக்கோங்க.
ரெண்டு பாட்டில் தக்காளி சாஸ எடுத்துட்டு வாங்க. நிலா அது வானத்து மேலே பாட்டுப் பாடுங்க”ன்னு
வரிசையா இன்ஸ்ட்ரக்ஷன் குடுத்துட்டு ஆரம்பிக்க.
மொதல வந்தது நம்ம ஜித்து பாய். டேய்....அந்த பிக்பாஸ் கப்புல ஜித்து பாய் பேர எழுதி
வைங்கடா.....!
அடுத்த கொடுமையா
“இந்தப் பாடலை பாடிக்கொண்டிருப்பவர் உங்கள் சைனா”ன்ற மாதிரி “நிலா அது வானத்து மேலே”
பாட்ட தன் கந்தர்வக் குரலால் சனம் பாட ஆரம்பிக்க....இளையாராஜா ஏன் அவரு பாட்டுக்கு
காப்பிரைட்ஸ் பிரச்சனை பண்றாருன்னு நமக்கு நல்லாவே புரிஞ்சுது.
அப்பறம் சைனா
பாட, பில்டரு குரூப்பு ஆடன்னு அடடடடா....! பாக்கவே பரவசமா இருந்துச்சு. திடீர்னு “வாழ்க்கைய
தேடி நானும் போறேன்”னு கோரசா எல்லாரும் பாட ஆரம்பிக்க ....சைனா டான்சுன்ற பேருல அங்குட்டும்
இங்குட்டுமா உலாத்திட்டு இருந்துச்சு.
(நேர்மைன்னா ஹமாம்) சோ ஹமாம் சோப்பு ஆரி ப்ரோ கேமராகிட்ட
வந்து “ ஆக்சுவலா பாலா நல்லவந்தான்.....ஆனா தகுதியில்லாத கேப்டன் சம்மு கூட சேர்ந்து
கெட்டுப் போறான். அவன் வாய் லேங்குவேஜும், பாடி லேங்குவேஜும் மாறிப் போச்சு. அதனால
ஆப்பரேஷன் பாலான்னு ஒன்ணு ஸ்டார்ட் பண்ணியிருக்கேன். கெட்டவனா இருக்குற அவன நல்லவனா
மாத்திக்காட்டப் போறேன். அதுமட்டுமா? இன்னொரு ஆப்பரேஷனும் இருக்கு அதாவது சம்முவ நான்
தறுதலைன்னு சொன்னது தப்புன்னு ஆண்டவர் சொன்னா, அவங்க காலுல மட்டுமில்லாம தீபாவளி ஆஃபரா
மக்கள் காலுலையும் விழுந்து மன்னிப்பு கேக்கலாம்னு இருக்கேன். எப்பிடி சூப்பர்ல ? ஆனா
இதெல்லாம் நான் இங்க இருந்தாதான் பண்ண முடியும். தியாகத்துனால மெழுகா கரையுறேண்டா....!
சோ எல்லாரும் எனக்கே ஓட்டுப் போடுங்க....உள்ள
இருக்க வைங்க....நான் குளிச்சிட்டு வரேன்”னு போயிட்டாப்ல. இப்பப் போட்ருக்கனும் “தகிடுதத்தோம்”
பாட்ட....
இந்த வீட்ல
3456வது தடவையா பில்டரு மைக்க மாட்டல. இத எவனும் சொல்லியும் காட்டல. சோ பிக்கியே இன்னைக்கு
“டேய் மைக்க மாட்டுடா மாடே”ன்னு சொல்லவும்....சம்மு பெட் ரூமுல இருந்து “எல்லாம் நான்
கேப்ட்டனான கெரகம்”னு எக்ஸ்பிரஸன் குடுத்துட்டு, வெளிய வந்து பில்டர்கிட்ட “அடேய் சும்மாவே
உன்ன கணக்குல சேர்க்க மாட்டானுங்க, இதுல நீ மைக்க மாட்டலேன்னு, டான்ஸாட வரலேன்னு ஆயிரத்தெட்டு
கம்ப்ளேயிண்ட் வேற , கண்டிப்பா உன்னய ஒர்ஸ்ட் பெர்ஃபார்மென்ஸ்ல கொண்டு வந்துருவானுங்க...ரெடியா
இருந்துக்கோ”ன்னு எச்சரிச்சாங்க.
சொன்ன மாதிரியே
பில்டரு மைக்க மாட்டாதது, சம்முவுக்கு சப்டைட்டில் போட்ட செலவுன்னு 1000 பாயிண்ட கழிச்சு
2200 பாயிண்ட குடுத்தானுங்க. டாஸ்க் நல்லா பண்ண காரணத்துனால ஒய்வறைக்கு ஓய்வாம். அதனால
பெஸ்ட் பர்ஃபார்மர் மட்டும் செலெக்ட் பண்ணா போதும்னு சொன்னதும் ஆரி, சோமு, நிஷா செலெக்ட்
ஆனாங்க. இவனுங்கதான் கேப்டன் கேண்டிடேட்ஸ். இதுல கோர்ட்டு வசனம் சூப்பர்ன்றதால ஆரிய
நெறைய பேரு செலெக்ட் பன்ணி இருந்தானுங்க.
வெளிய வந்த
சம்முவுக்கு “ஏண்டா அவன் என்னய திட்டுனதுக்கு ஒருத்தனும் கேக்கலேன்னாலும் பரவாயில்ல.
ஆனா அது நல்ல சீனுன்னு சொல்லி கையத்தூக்குறீங்க என்னங்கடா இது பித்தலாட்டம்?”னு பொலம்ப....பில்டரு
சம்பந்தமில்லாம வந்து “இப்பவாச்சும் புரிஞ்சுச்சா என்னயதான் இந்த வீட்ல கார்னர் பண்றானுங்க”ன்னு
கேக்க ஷிவானி...”ச்ச....எங்காளுக்கு எவ்வளவு அறிவு”ன்னு பூரிச்சு போயிடுச்சு.
பின்ன சம்மு
இத ஆஜீத்கிட்ட கேட்டுட்டு இருக்கும்போதே அழுதுடுச்சு. சட்டுன்னு எல்லாரும் வெளிய வர....யாரும்
பாத்துர கூடாதுன்னு வேகமா கண்ணத் தொடச்சுக்கிட்டு போயி சோஃபால உக்காந்தாங்க....சும்மா
அங்க நின்னுருந்தா கூட யாருக்கும் தெரிஞ்சிருக்காது. இப்ப எல்லாரும் பாத்துட்டானுங்க.
ரியோகிட்ட சம்மு மறுபடியும் இதையே கேக்க...”எல்லாரும்னு சொல்லாத. நானெல்லாம் அப்பிடி
சொல்லல”ன்னு சொல்லிட்டு இருக்கும் போதே ஆரி கக்கூஸ்ல இருந்து வெளிய வர “என்னவாம் ?
என்ன அழுகை ? கேப்டன் அழுகலாமா ? இதுதான் கேப்டனுக்கான தகுதியா? “ந்னு ஆரம்பிக்க ரியோ
“யோவ்....இன்னும் அந்தம்மா ஏப்பம் விட்டதுக்கு மட்டுந்தான் நீ ஒண்ணும் சொல்லல...வா
இங்குட்டு”ன்னு இழுத்துட்டுப் போனாப்ல.
அப்பறம் கண்டென்ட்
இல்லேன்னா இருக்கவே இருக்கு க்ளையண்ட் இன்டெகரேஷன். ப்ரீத்தி மிக்ஸி டாஸ்க். 3 டீமா
பிரிஞ்சு 3 நான் குக்கிங் டிஷ் பண்ணனும். இதுல அர்ச்சனா டீம் வின்னு. இது போக எல்லா
டீமும் கேமராவ இம்ப்ரெஸ் பண்றேன்னு வித விதமா டார்ச்சர் பண்ணிட்டு இருந்தானுங்க. மாவு
பிசையுற டாஸ்க்குல சனம் “மஸ்குலர் பாலாவ மாவு பிசைய வர சொல்லு”னு சொன்னத பில்டரு பெருசா
எடுத்துக்கிட்டு சண்டைக்கு வரல...”அவன் பெருசா எடுத்துக்கலேன்ன என்ன....? நாம எடுப்போம்”னு
இதே பஞ்சாயத்த பில்டரு மேல பிராதா எடுத்துட்டு வரும் சைனா....மார்க் மை வேர்ட்ஸ் !
இப்ப கேப்டன்
டாஸ்க். இவனுங்க உடம்புல கயிற சுத்தி ஒரு முனைய தூண்ல மாட்டிக்கனும்....ரைட்னு சொன்னதும்
இவனுங்க தூண்ல கயிற சுத்தனும். ரொம்ப சுத்துறீங்கடா டேய். “இதுல கயிறு சுத்த பாலா வேணும்”னு
ஆரி கேட்டதுக்கு பில்டரு, “எனக்கு தெரியாது”ன்னு மறுக்க...”தம்பி.....தம்பி ! என்னய
நல்லவனா காட்டுறதுக்கு நான் இப்பிடித்தான் பண்ணனும்....அதுக்கு நீயும் ஒத்துழைக்கனும்
புரியுதா”ன்ற மாதிரி கோவமா இன்டைரக்டா சொல்ல. அரை மனசா பில்டரு வந்து “இருடா சுத்தித்
தொலையுறேன்”னு சொல்லி சுத்தி வுட்டான். அனைவரும் எதிர்பார்த்த மாதிரி அடுத்தவார கேப்டன்
ஹமாம் சோப் ஆரி.
உடனே மூடர்
கூட உறுப்பினர்கள் ஆரி, அன்னப்போஸ்டு, சனம் 3 பேரும் ரகசிய மீட்டிங் போட்டு “நீங்க
தலைவரானது பல பேருக்கு பால்டாயில் குடிச்ச மாதிரி இருக்குறதப் பாக்கும்போது, நீங்க
சரியான பாதையிலதான் போயிட்டிருக்கீங்கன்னு தோணுது ஓவர் ஓவர்”னு அன்னப்போஸ்டு சொன்னதும்
கூடத்த கலைச்சுட்டானுங்க.
டீம் பிரிக்க
வந்தாப்ல ஆரி. இதுல “கிச்சன் டீம்ல அர்ச்சனா இருக்கட்டும்”னு சொன்ன சகுனிகிட்ட “நல்ல
வேளை நியாபகப்படுத்துன....கிச்சன் டீம்ல அர்ச்சனா வேணாம்”னு சொல்லிட்டாப்ல.
பில்டரு குரூப்பு
அப்பிடியே வெஸெல் வாஷிங் அதாவது – சம்மு, பில்டரு, ஆஜீத், ஷிவானி – ஷிவானி கேப்டன்,
ஆஜீத் வைஸ் கேப்டன்
குக்கிங் –
ரியோ, ஜித்து, அனிதா, ஆரி – ஜித்து கேப்டன், அனிதா வைஸ் கேப்டன்
கக்கூஸ் கிளீனிங்
– சுச்சி, சகுனி (பெஸ்ட் காம்பினேஷன்) – சுச்சி கேப்டன்
ஹவுஸ் கீப்பிங்
: கேபி, அர்ச்சனா, சோமு, நிஷா, ரம்யா – கேபி கேப்டன், சோமு வைஸ் கேப்டன்
வேற ஒண்ணுமில்ல
இளைஞர்களுக்கு வழி விடுறாராமாம். “வைஸ் கேப்டன்கள் அன்னன்னைக்கான புகார்கள அன்னைக்கு
நைட்டே கேப்டனோட விவாதிக்கனும். எல்லாரும் ஒழுங்கா டேக்ஸ் கட்டனும், அரசு அலுவலகங்கள்
இனி ஒழுங்கா செயல்படனும், லஞ்ச ஊழல் முழுவதுமாக ஒழியனும், பழைய கேப்டன் சம்மு... பழைய
டீம்ல இருந்து ப்ராப்பரா ஹேண்ட் ஓவர் பண்ணனும். முன்னாள் கேப்டன் சம்மு மேல விசாரணை
கமிஷன் போடப்படும்”னு, ஆரி அர்ஜுன்...முதல்வன் அர்ஜுனா மாறி நின்னாப்ல. செத்தீங்கடா
டேய். ஜித்து பாய்க்கு வேற வேர்த்தா ஆகாது.....அவரப் போயி கிச்சன்ல விட்டிருக்கானுங்க.
அப்பறம் மிக்ஸி
டாஸ்க்குல ஜெயிச்சதுக்கு வெளிய இருந்து பீட்ஸா, பர்கர்னு வந்துச்சு. பால்பாக்கெட் வாங்கிட்டு
போறவன் மேல பாயுற பல்க் டாகி மாதிரி எல்லாரும் பாஞ்சானுங்க. அதுலையும் ஷிவானி பர்கர
கடிச்சுட்டு குடுத்துச்சு பாருங்க ஒரு எக்ஸ்பிரஷன்....வெஜ் பிரியாணில பீஸ் கிடைச்ச
மாதிரி அப்பிடி ஒரு ஃபீல் பொண்ணுக்கு.
வெளிய சம்முகிட்ட
சகுனி சலம்பிட்டு இருந்தாப்ல. ரெண்டு பேரும் ஒரு 19834567389192 தடவ மாத்தி மாத்தி
“ஹர்ட் ஹர்ட் ஹர்ட்”னு சொல்லிட்டே இருந்தானுங்க....முடிவுல சம்முவ அழுக வச்சுட்டாப்ல.
அந்தப்பக்கமா வாக்கிங்ல இருந்த பில்டரும், ஷிவானியும் வந்து சம்முவுக்கு ஆறுதல் சொல்லிட்டு
இருந்தாங்க. கக்கூஸ்ல இருந்து வெளிய வந்த சனத்துக்கு “ஆகா நல்ல சீன் ஒன்ணு சிக்கியிருக்கு...வாகா
பாலா வேற இருக்கான் என்னத்தையாச்சும் ஆரம்பிக்கலாமா?”ன்னு கை அரிக்க....”ஆனா தடுத்து
விட மத்தவனுங்க இல்லையே”ன்ற ஒரே காரணத்துனால சைலண்டா ஒதுங்கிடுச்சு..
சகுனி சம்மு
அழுகுறதப் பாத்துட்டு பதட்டமாகிட்டாப்ல. உள்ள போயி இத அர்ச்சனா குருப்புகிட்ட ரெஜிஸ்டர்
பண்ணிட்டு. ஒரு தம்மப் போட்டு வரும்போது பில்டரு, ஷிவானி, சம்மு 3 பேரும் வேற எதுக்கோ
சிரிக்க, திரும்பவும் பதட்டமாகிட்டாப்ல. மறுபடியும் அர்ச்சனா குரூப்புகிட்ட இதப் பத்தி
சொல்லப்போக....அர்ச்சனா “யோவ் சும்மா எல்லா கேசையும் மத்தவனுங்க மேல எழுதாத...நீ இப்பவும்
கேடிதா”னு சொன்னதும் மறுபடியும் பதட்டமாகி....வெளிய போயிட்டாப்ல. பாவம் அந்தப் பதட்டம்
இந்தாளுகிட்ட படாதபாடு படுது. “வெளிய போனா போறான் விடு....இவனுக்கு இதே வேலை”ன்னு சகஜமா
சோமு தலையில பேன் பாக்க ஆரம்பிச்சுட்டாங்க அர்ச்சனா......! ஒரு வழியா பதட்டமா முடிஞ்சிருச்சு
இந்த நாள்.
Comments
Post a Comment