பிக்பாஸ் – 4 : நாள் - 52 தொடர்ச்சி....(26.11.20)

 52வது நாள் தொடர்ச்சி...

எடுத்ததும் ரியோ – ஆஜீத்

“ஒரு பாட்டு பாடுடி செல்லக்குட்டி”ன்னு ஆரம்பிச்சு அந்த பாட்டின் வழியா அன்புன்னா என்னன்னு உணர்த்தி, பில்டருகிட்ட நேருக்கு நேரா கேட்டா மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் வந்துரும்ன்றதால....ஆஜீத்த பில்டரா நெனச்சு கேள்விகள் கேட்டு....இந்த உலகத்துக்கு அன்பு தேவைன்றதையும், அந்த அன்ப வாங்க மொத்தமா அன்னை அர்ச்சனாகிட்ட வாங்கன்னு சொல்லி உரையாடல முடிச்சுக்கிட்டார் கரப்பான் பூச்சி ரியோ.....! இதுல உதாரணம் சொல்றேன்னு சொல்லி “எல்லாத்தையும் கேமு கேமுன்னு பாக்குற, வெளிய தப்பா தெரிஞ்சிருவோம்னு பயப்படுற அன்னப்போஸ்டு & சனம் கூட நட்பா இருக்க காரணம் அன்புதான”ன்னு ஒரு கண்டுபிடிப்ப பத்தி சொன்னது ஹைலைட்டு.....அப்பவே சைனா மண்டைல எறிஞ்சது ஒரு ரெட் லைட்டு...!

அன்பின் மகத்துவத்த உள்ள ரியோ சொல்ல சொல்ல வெளிய இருந்து கேட்டு அதுக்கான எக்ஸ்பிரஷன குடுத்துட்டு இருந்த நிஷாவையும், அன்னை அர்ச்சனாவையும் காண குமரிமுத்து கண்கள் தான் வேணும். ஆனா ரம்யாவோ “இவன் கால மாத்திப் போட்டு பாலாவுக்கு பதிலா ஆஜீத்கிட்ட பேசிட்டு இருக்கான்.....ஆனா நீங்க அவன ஒரு பெரிய தத்துவ அறிஞர் மாதிரி பாக்குறீங்க அப்பிடித்தான ? சிறப்பா இருக்கு”ன்னு துப்பிருச்சு....!

பேசிட்டு வெளிய வந்ததும் ஆரத்தி மட்டுந்தான் எடுக்கல....! “ஆகா...ஓகோ என்ன ஒரு ஐடியா ! அதுவும் அந்த பாட்டுப்பாட சொல்லி அதுல இருந்து அன்புக்கு லீட் எடுத்தப் பாரு....அந்த கட்டத்துக்குதான் காசு”ன்னு சோமு புல்லரிச்சுட்டான்.

“டேய்....இந்த ரம்யா கேக்குது, நீ பாலாகிட்ட கேக்க வேண்டியத எல்லாம் ஆஜீத்கிட்ட கேக்குறியாம்.....ஹா ஹா ஹா இவங்க மட்டும் ஜித்து கிட்ட எதுக்கு நிஷாவப் பத்தி கேட்டாங்களாம்...நல்ல கதையா இருக்கே”ன்னு சொல்ல, ரியோவுக்கு “போச்சுடா கண்டுபிடிச்சுட்டானுங்க போல”ன்னு மூஞ்சி போக, ஆஜீத் வெளிய வந்ததும் மொத ஆளா “யப்பா நான் பில்டரப் பத்தி 2 கேள்விதான் கேட்டேன். மத்ததெல்லாம் பொதுவானதுதான். அப்பிடி எவனும் கேட்டு உன்னய வம்பிழுத்தா சொல்லு, தக்காளி அண்ணன் வந்து கால்ல விழுந்து புரிய வைக்குறேன்....நீ பயப்படாத”ன்னு வாக்குமூலம் குடுத்தான். ரம்யாவோ எல்லாருக்கும் முன்னாடியே “ஆஜீத் உன் பதில்கள் எல்லாம் சூப்பர். ஆனா எனக்கு கேள்விகள் எதுவுமே பிடிக்கல”ன்னு பட்டுன்னு சொல்லுச்சு.

இப்ப அன்னை, சோமு, நிஷா 3 பேரும் “நம்ம ஒண்ணா இருக்கோம், ஒண்ணா ப்ளான் பண்றோம் சரி...ஆனா அதுனால இவனுங்களுக்கு என்ன பிரச்சனை? நாம அப்பிடி என்ன பிரச்சனை பண்ணோம்”னு கேட்டாங்க. இப்பதான் இவனுங்க குரூப்பா இருக்குறதையே ஒத்துக்க ஆரம்பிச்சு...அதனால என்ன உங்களுக்கு பிரச்சனைன்னு வந்து நிக்குறானுங்க.

தலையில எறிஞ்ச லைட்டோட சைனா வெளிய “இந்த ரியோ ஏன் அப்பிடி சொன்னான்? அதுவும் குறிப்பா என்னையும், அன்னப்போஸ்டையும்...இதப் போயி கேட்டாதான் பொழுது நல்ல படியா முடியும்....இந்தா போறேன் லவ் பெட்டுக்குக்கு”னு உள்ள போச்சு. கூடவே அனிதாவும்.....

சைனா : ஆமா ரியோ அது என்ன நாங்க ரெண்டு பேரும் மட்டும் கேமரா கான்சியஸ்லையும், கேமு கேமுன்னுட்டும் திரியிறோம், நீங்க எதுக்கு இங்க சட்டி பானை செய்ய வந்தீங்களா இல்ல அன்னையும், அன்பும், பின்னே அடிமைகளும்னு புக்கு எழுத வந்தீங்களா ?

ரியோ : நான் உங்கள பாராட்டிதான சொன்னேன்...

சைனா : என்ன பாராட்டுன ? அசிங்க அசிங்கமா சொல்லிட்டு கடைசியா நன்றி வணக்கம் சொல்ற மாதிரியா ?

ரியோ : உங்களுக்குள்ள ஒரு அழகான நட்பு இருக்குன்னுதான சொன்னேன் ?

சைனா : அத அப்பிடியே சொல்ல வேண்டியதுதான ? அது என்ன எல்லாத்தையும் கேமுன்னு நெனைக்குற நானும் அவளும் நட்பா இருக்கோம்னு சொல்றது ?

ரியோ : அத சொன்னது தப்பா ?

சைனா : நட்பு அழாயிருக்குன்னா ? அப்ப நாங்க ரெண்டு பேரும் அசிங்கமா இருக்கோமா ?

ரியோ : சரி கேமராகிட்ட சொல்லிடுறேன்...யப்பா கேமரா அவங்க நட்பு அழகா....

அன்னப்போஸ்டு : ஹலோ.....நீயுந்தான் கேமரா கான்ஸியஸா இருக்க....அதனால உன் பேரையும் சேத்துக்கோ...

ரியோ : என்னைய மாதிரி அன்னபோஸ்டும், என்னய மாதிரி சைனாவும், என்னைய மாதிரி என்னையவும்.......

சைனா ; ஏண்டா...நாங்க ரெண்டு பேருமேன்னா நாங்க என்ன ஒனிடா பூதமா ? //

கரப்பான் பூச்சிக்கு இன்னைக்குதான் பூரா பேரும் சேந்து ஹிட் அடிச்சானுங்க. அடுத்த பஞ்சாயத்தா “சமைக்கத் தெரியாத கேபிய கிச்சனுக்கு வைஸ் கேப்டனா போடுறானுங்க. கேட்டா சமைக்கத் தெரியாத ஆளிருந்தா ஆன் டைமுக்கு சாப்பாடு வரும்ன்றானுங்க”ன்னு சைனா ஆரம்பிச்சு விடவும்.....ரம்யா பிடிச்சுகிச்சு “ஆமா அது என்ன சமைக்கத் தெரியாத ஆளிருந்தா ஆன் டைம் சாப்பாடு வரும்னு கணக்கு ? அதுக்கு சமைக்கத் தெரிஞ்ச ஆள போட்டாலே போதுமே ? ஆனா மட சாம்பிராணி உன்னையத்தான் உங்க அன்னை தாமஸ் ஆல்வா எடிசன்னு சொல்லிட்டு திரியுது”ன்னு மறுபடியும் தூஞ்சில முப்பிருச்சு.

“நான் கேட்டுதான போட்டேன்”னு ரியோ சொல்ல. “நீ கேக்கல தம்பி...முடிவு பண்ணிட்டு சொன்ன. அங்கயே நான் கையத்தூக்குனதுக்கு நீ என்னய கண்டுக்கவே இல்ல”ன்னு ரம்யா சொல்ல, “சமைக்கத் தெரியாதவங்களும் சமைக்க கத்துக்கலாம்னு ஒரு எண்ணம்தான்”னு கரப்பான்பூச்சி சமாளிக்கப் பாக்க, “இது குக் வித் கோமாளி இல்லடா பிக்பாஸுடா என் சிப்சு”ன்னு பதிலுக்கு பதில் அடிக்க, உள்ள வந்த அன்னைய லெஃப்ட்டுல டீல் பண்ணுச்சு ரம்யா.

இவனுங்க ஃபோன் டாஸ்க்குல யாரு யாரு கூட பேசனும்னு முடிவு பண்ணி இருக்கானுங்க போல. “இத சம்பந்தபட்டவங்ககிட்ட சொல்லாத”ன்னு கரப்பான் பூச்சிதான் ரூல் போட்டிருக்கான்....அடுத்த நிமிஷமே இவன் ஆஜீத்கிட்ட “நான் உங்கிட்டதான் பேசப்போறேன்”னு சொல்லிட்டான் போல. சைனா அதப் பிடிச்சுகிட்டு “எங்கள சொல்லாதன்னு சொல்லிட்டு நீ எதுக்கு ஆஜீத் கிட்ட சொன்ன?”னு ஆரம்பிக்க.....ரியோவுக்கு வயித்த கலக்க ஆரம்பிச்சு அதுக்கப்பறம் முழுக்க கோவமா சர்காஸமா பதில் சொல்ல ஆரம்பிச்சுட்டான். அப்பறம் ஆரிகிட்ட வந்து நிக்க ஆரி ப்ரோ “எங்கிட்டையும் நீ அப்பிடிதான் சொன்ன...ஆனா நீ ஆஜீத்கிட்ட போயி சொல்லியிருக்க. இதுக்கு ஏன் உள்ள போயி ஃபோன்ல பேசனும்? நேர்லயே பேசலாமே? இதக் கேட்டா வெடைக்கிற, கத்துற, சர்காஸம் பண்ற ? பாத்துக்கோ லைட்ட உன்பக்கம் திருப்பிருவேன்”னு சொல்ல, “சரிங்க இனிமே பாத்துக்குறேன்”னு சொன்னான் ரியோ.

இதுக்கிடையில அன்னை இவன காப்பாத்த வந்துச்சோ என்னமோ “நான் கூட பாலாகிட்டதான் பேசப் போறேன்னு ஷிவானி கிட்ட சொன்னேன். ஆனா ஷிவானி பாலாகிட்ட சொல்லியிருந்தா நான் பொறுப்பில்ல”ன்னு சொன்னதுக்கு அதெல்லாம் “அவ ஒண்ணும் சொல்லல”ன்னு பில்டரு குரல் குடுத்தான். “இதுக்கு எதுக்குடா ரூல் போட்டீங்க ? அதான் குடும்பமே ரூல ஒடச்சுட்டீங்களே.....கேட்டுக்கோங்கப்பா, ஆரி ஷிவானிக்குதான் கால் பண்ணப் போறாரு”ன்னு ஆரி ப்ரோ ப்ளான ஆம்லேட் போட்டுருச்சு.

சம்மு ரியோவ கூப்ட்டு “ஆமா அன்னைக்கு நிஷாகிட்ட வெஸெல் வாஷிங் டீம் சாதரணமில்ல, அங்க அன்னப்போஸ்டு இருக்கு தெரியும்லன்னு சொல்லிட்டு அடுத்த நாளே அன்னப்போஸ்ட டீம் மாத்துனதுக்கு என்ன காரணம்?”னு கேக்க, உண்மையாவே ரியோ சுத்திட்டான்.....”அய்யோ அப்பிடி நான் நெனச்சு எதையும் சொல்லல”ன்னு உள்ள போயிட்டான். உள்ள போனதும் அவன அன்னையும், நிஷாவும் வரவற்று “அங்க பாரு 3 ஆரி”ன்னு வெளிய அன்னப்போஸ்டு, சைனா, ஆரிய கை காமிச்சது நல்ல டைமிங்.

என்னைக்குமில்லாத திருநாளா ஷிவானி ரியோகிட்ட வந்து “ரெண்டு விஷயம் கேக்கனும். ஒண்ணு அஜீத்துகிட்ட சொல்லி அவனுக்காக கால் பண்ணா அது ஃபேவரிஸம் தான?”ன்னு கேக்க “இல்ல அவன் சோகமா இருந்ததால பண்ணேன். இது ஃபேவரிஸம் இல்லே”ன்னு சொன்னான். “அடுத்து வீடான வீட்ல எப்பப் பாத்தாலும் ஒருத்தன் தூங்கிட்டே இருக்கான்....அவந்தான் நம்ம ஜித்து...அவன் ஏன் ஒண்ணுமே சொல்றதில்ல ?”னு கேக்க, “எல்லாரும் அமைதியா இருந்தா தூங்குவானுங்க....ஆனா சண்டை நடக்குற நேரத்துல நம்மள எவனும் கண்டுக்க மாட்டான்னு அத அட்வாண்டேஜா எடுத்துக்கிட்டு தூங்குற ஜித்துவ யாருதான் கேக்குறது? சரி நானே கேக்குறேன்”னு உள்ள போயி எழுப்பி விட்டான்.

ஆனா சைனாவும், அனிதாவும் இத விடுறதாவே இல்ல.....ரியோ காலுலயே விழுந்தாலும் விடமாட்டானுங்க போல...அவன் அம்மா சத்தியமெல்லாம் பண்ணியும் வேலைக்காகல.

அப்பறம் அன்னையும், நிஷாவும் “சனத்த கூப்ட்டு ஒரு சக்கரை பொங்கல போடனும். நான் என்னமோ எனக்கு டைட்டில் வேணாம்னு சொன்னதா சொல்லிட்டு இருக்கா ? மூடிட்டு இருன்னு சொல்லனும்”னு அன்னை அன்பொழுக சொன்னாங்க.....!

ஆப்பறம் திரும்ப ஆஜீத் ரியோகிட்ட “ஆமா பாலாகிட்ட கேக்க வேண்டியத ஏன் நீ எங்கிட்ட கேட்ட?”ன்னு மறுபடியும் ஆரம்பிக்க....”யப்பா நான் அவனப் பத்தி 2 கேள்விதான் கேட்டேன்....அதுலையும் உன் ஒப்பீனியனதான் கேட்டேன்”னு சொன்னத ஆஜீத் பில்டர்கிட்ட வந்து சொன்னான். “அந்த பயம் இருக்கட்டும்னு சொல்லு”ன்னு பில்டரும் பீத்திக்கிட்டான்.

இதுல அன்னப்போஸ்டு இவங்க குடும்பத்த எதிர்த்து பேசிட்டதால சோமன் ரோஷப்பட்டு குடும்பத்துக்காகாத ரம்யாவோட காதல முறிச்சு....இதுவரை காதல் சின்னமா வச்சிருந்த ரம்யா குடுத்த சாக்லேட்ட பிரிச்சு எல்லாருக்கும் குடுக்கப்போறானாம். இத அன்னை பெருமையா சொன்னாங்க. டேய் அவன் பண்ணதே ஒன் சைட் லவ்வு....இதுல என்னடா பிரேக்கப்பு....? ரம்யாவுக்கு தெரிஞ்சா உங்களப் பாத்து வாய்ல மட்டுமில்லாம கண்ணு, காது, மூக்குலையெல்லாம் சிரிக்கும்.

காலளவு தண்ணி உள்ள வந்த காரணத்தால டாஸ்க் தற்காலிகமா ஒத்தி வைப்பு.

வெளிய பில்டரும், சைனாவும் ! “நீ லூசுதான் ஆனா இன்னைக்கு பேசுன விஷயம் எல்லாம் சரி....இவனுங்களா இப்பிடியே விடக்கூடாதுன்னு பில்டர் பாராட்டுனதோட முடிஞ்சிருச்சு.....


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)