பிக்பாஸ் – 4 : நாள் 37 (10.11.20)

இந்தா.....ஆரம்பிச்சுட்டானுங்கள்ல ! இன்னும் 3 நாளைக்கு இப்பிடியே ஒண்ணத்துக்குமாகாத ஒன்றையனா டாஸ்க்கா குடுத்து, அது போதாதுன்னு தீபாவளி அன்னைக்கு வேற 4 மணி நேரம் இழுத்து விட்டுருவானுங்க.

37வது நாள்

கேட்டாக் குடுக்குற பூமியிது பாட்டு அலாரம். கேப்டன் ஆரி தனியா கேமரா முன்னாடி ஆட..இந்தப் பக்கம் சைனா செட்டு செல்ஃப் எடுக்காத லாரியாட்டம் உதறிட்டு இருந்துச்சு.

லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க். ரஜினி முருகன் படத்த கேவலமா காப்பியடிச்சு ஒரு ஸ்கிரிப்ட். பாட்டிக்கு தன் பிள்ளைக, பேரன் பேத்திய பாக்க ஆசையாம்...அதனால அவங்கள வர வச்சு...பாட்டிய நல்லா பாத்துக்குறவங்களுக்கு சொத்தப் பிரிச்சு தருவாங்களாம்.

மூத்த மகன் – ஆரி, மனைவி – சுச்சி, பையன் – ஆஜீத்

இளைய மகன் – ஜித்து பாய் (பொண்டாட்டி தாசன்),  மனைவி – சனம், மகன் – பில்டரு, மகள் – ஷிவானி

இன்னொரு மகன் – சோமு (திருடன்), வாடகை மனைவி – ரம்யா, வாடகை பொண்ணு – கேபி

மகள் – நிஷா, மருமகன் – ரியோ

பாட்டி கேர் டேக்கர் – சம்மு, சம்மு மகள் – அனிதா (பாட்டியின் நம்பிக்கைக்கு உரியவர்)

ஆஜீத்துக்கு ஷிவானி மேல ஒரு கண்ணு, ஆனா பில்டரப் பாத்தா பயம்.

இதுல சோமு குடும்பத்துக்கு ரகசிய டாஸ்க். பாட்டி சொத்துப் பத்திரத்தை திருடனும்.

இந்தக் கதாசிரியரையும், காஸ்டிங் டைரக்டரையும் குவெண்டின் டொராண்டினோவுக்கு அறிமுகம் செஞ்சு வச்சா....அவரு படத்துல வர மாதிரி ரத்தம் தெறிக்க லைவ்ல கொன்னுடுவாப்ல.

டாஸ்க் ஆரம்பிச்சதுமே சைனா செட்டு நம்ம ஜித்து கிட்ட “5 வயசு குழந்தைக்கு அம்மான்னா பரவாயில்ல...அங்க பாரு அவன 5 ½ அடிக்கு தாடியும், மீசையுமா ! அவன் நெஞ்சுல இருக்குற முடி ரேஞ்சுக்கு நாந்தான் அவன் மடில உக்காந்து சோறு சாப்டனும். இதுல ஷிவானி வேற....! நான் இன்னும் சினிமால மக கேரக்டர் கூட பண்ணதில்ல, என்னயப் போயி இந்த ரெண்டு கெடா மாடுகளுக்கு அம்மான்னு சொல்றீங்களே நியாயமாடா?”ன்னு கேட்டா, ‘ஆரி அதெல்லாம் டாஸ்க்குதான் சும்மா நடின்னுட்டு போறான்’னு பொலம்பிட்டு இருந்துச்சு. ஜித்து பாயும் “சும்மா டாஸ்க்குன்னு நெனச்சுக்கோ”ன்னு அதையேதான் சொன்னாப்ல.

ஷிவானிய தங்கச்சியாப் போட்டது பில்டருக்கு முன்னெப்பொழுதும் இல்லாத வசதி. ஒரு நிமிஷம் கூட தனியா விடலையே...

கும்பலா உக்காந்து பேசிட்டு இருக்கும்போது அன்னப்போஸ்டு தன் கேரக்டர் இம்பார்டன்ஸப் பத்தி கவலைப்பட, அத நல்ல கேரக்டர்தான்னு சொல்ல வந்த ரியோ கிட்ட ,ஏதோ சொல்ல வாயெடுக்க. ரியோ அத கேக்க விரும்பாத மாதிரி “நான் செத்துட்டேன்னு ஆக்ஷன் காட்ட”....அன்னப்போஸ்டுக்கு ஆவி புகுந்துருச்சு.

“என்ன நான் பேசுனா சாவடிக்குற மாதிரி இருக்கா?”ன்னு கேட்டு பஞ்சாயத்த ஆரம்பிக்க, ரியோ பதிலுக்கு “விளையாட்ட எப்பவுமே நீ வினையாத்தான் பாக்குற...எகடாசியாப் பேசி பஞ்சாயத்த கூட்டுறதே உனக்கு பொழப்பா இருக்கு. நான் செஞ்சது தப்புன்னு யாராச்சும் சொன்னா உன் காலுல விழுகுறேன்”னு சொன்னான். “நீங்க பண்ணது அப்பிடித்தான் இருக்கு....முறுக்கு”ன்னு எப்பவும் போல அன்னப்போஸ்டு தான் செஞ்சது சரின்ற மாதிரி பேச ஆரம்பிச்சுடுச்சு.

“தல மறுபடியும் உங்க குரூப்பு ஆளு அடுத்த குரூப்பு ஆளுகிட்ட பஞ்சாயத்த இழுத்துருச்சு”ன்னு வழியில யாரோ சொன்ன மாதிரி பதறி பெட் ரூமுக்கு வந்தாப்ல ஆரி...அங்க ரியோவும், நிஷாவும் உக்காந்திருக்க, ரியோ பஞ்சாயத்த எடுத்து சொல்லி “இது சரி வராதுங்க”ன்னுட்டு இருந்தான்...நிஷாவோ “நீ போயி எதுக்கு காலுல விழுகுறேன்னு சொல்ற, நல்ல குடும்பத்துல பொறந்த எவனும் காலுல விழுகுறேன்னு சொல்லுவானா?, அது ஒரு மானமுள்ளவன் செய்யுற செயலா? காழுல விழுகுறேன்னு சொல்றவன எல்லாம் கயித்துல கட்டி இறுக்கனும்”னு கேப் விடாம திட்ட....பக்கத்துல நின்ன ஆரி ப்ரோவோ “ஆகா 2 நாளைக்கு முன்னதான் சம்மு காலுல விழுகுறேன்னு சொன்னோம். அத மனசுல வச்சுகிட்டு நம்மளதான் இவ வையிறாளோ?”ன்னு தன் அக்மார்க் முழிய முழிச்சிட்டு இருந்தாப்ல.

பில்டரும், ஷிவானியும் பிரதரு, சிஸ்டருன்னு பாட்டுப்பாடி விளையாடிட்டு இருந்தாங்க. ஆனாலும் ஷிவானி குரல்...ய்ப்பப்பா....காது ங்கொய்யின்னு ஆகுது. இத பக்கத்துல உக்காந்து எப்பிடி கேக்குறானோ பில்டரு. வவ்வால் சத்தத்த டீகோட் பண்ணா இப்டித்தான் இருக்கும்போல....!

பத்திரம் வந்துச்சு. அத குறிப்பிட்ட நேரத்துக்குள்ள திருடிட்டா அது அவங்களுக்கு சொந்தம், இல்லேன்னா பாட்டியே சொத்த பிரிச்சு குடுக்கும்.

இத எப்பிடி திருடுறதுன்னு பில்டரு, ஷிவானி & கேபிகிட்ட ஒரு திருட்டு பிளான சொல்ல, அத அப்பிடியே ரம்யாகிட்ட ஒப்பிச்சிடுச்சு கேபி.

சனம் அப்பதான் கன்ஃபெஷன் ரூமுக்கு போயி

சனம் : பிக்பாஸ்....

பிக்பாஸ் : சொல்லுங்க சனம்

சனம் : எனக்கு மகன் வேண்டாம்....

பிக்பாஸ் : மகனோ மகளோ எது கிடைச்சாலும் சந்தோஷமா ஏத்துக்கோங்க....பை த வே உங்களுக்குதான் இன்னும் கல்யாணமே ஆகலையே ?

சனம் : பிக்கி....நான் சொன்னது இந்த டாஸ்க்குல பில்டரு என் மகனா வேணாம்

பிக்பாஸ் : (MV : நீ இந்த ஷோவுக்கே வேணாம்னுதான் நான் நெனைக்கிறேன்....எங்க முடியுது ?) சரி டாஸ்க்குன்னு நெனச்சு விளையாடு....

சனம் : யோவ் அவனா குடிச்சிட்டு அம்மாவ அடிக்குற சீன்னு ஒண்ணு உருவாக்கி என் செல்லய பேத்துட்டான்னா என்ன செய்யுறது ?

பிக்பாஸ் : (MV : அப்பிடி எதுவும் செய்வான்னு பாத்தா அவன் ஷிவானிய மோந்துட்டு அலையுறான்) அதெல்லாம் அவன் உன் பக்கம் வர மாட்டான் நீன்னா அவனுக்கு பயம்,...அதனால அத அப்பிடியே மெயிண்டெயின் பண்ணி விளையாடு போ...//

ஆல்ரெடி இந்தக் கடுப்புல இருந்த சனம் “இப்ப மட்டும் பாலா வந்து எங்கிட்ட பேச்சு குடுத்தான்னா எப்பிடி அவன திட்டுறது?”ன்னு பிராக்டிஸ் எடுத்துட்டு இருந்தப்போ....”என்ன சனம்?’னு வந்தாப்ல ஆரி

ஆரி : என்ன சனம் குப்பைல சாப்பாடு கொட்டியிருக்கு ?

சனம் : (MV : அய்யய்யோ பாத்துட்டு கரெக்டா கேக்குறான்....) அட ஆமா

ஆரி : யாரு கொட்டுனது ?

சனம் : எனக்கு தெரியல.....ஒரு வேளை நானா கூட இருக்கலாம்

ஆரி : நீயா கூட இருக்கலாமா ? நீ கொட்டுனது உனக்கு தெரியாதா ?

சனம் : அப்ப நான் தெரிஞ்சு கொட்டுனேன்னு சொல்றீங்களா ?

ஆரி : அப்ப தெரியாம கொட்டுனியா ?

சனம் : யாருக்கும் தெரியாமதான் கொட்டுனேன்...

ஆரி : அதான் இப்ப தெரிஞ்சிருச்சே...

சனம் : நான் கொட்டும்போது யாருக்கும் தெரியாதே ?

ஆரி : இப்ப எனக்கு தெரியுமே....

சனம் : ஆமா...உங்களுக்கு மட்டுந்தான் இந்த வீட்ல எல்லாமே தெரியும்....எங்களுக்கெல்லாம் ஒண்ணுந்தெரியாது அப்பிடித்தான ?

ஆரி : ஏன் உனக்குந்தான் தெரியும்

சனம் : ஏங்க நாந்தான் தெரியாம கொட்டுனேன்னு சொல்றேன்ல அப்பறம் எப்பிடி எனக்கு தெரியும் ?

சனம் : அதான் இப்ப தெரிஞ்சிருச்சே.....//

இப்பிடித்தான் ஆரியும், சனமும் மாத்தி மாத்தி முக்கா மணிநேரம் பேசுனதையே பேசிட்டு இருந்தாங்க. பக்கத்துல சனம் புருஷனா நின்னுட்டு இருந்த ஜித்து பாய்....எப்பவும் போல என்ன பண்றதுன்னு தெரியாம முழிச்சாப்ல.

வெளிய வந்த ஜித்து உள்ள பஞ்சாயத்து ஒடுதுன்னு சொல்ல, எல்லாரும் உள்ள போனா சனம் ஆரிய கழுவி கழுவி ஊத்திட்டு இருக்கு. “ரொம்பத்தான் நோண்டுறாப்ல. 100 கடுகு போடனும்னா 100 கடுக எண்ணி எடுத்துக்கன்றாப்ல. பொங்கல்ல மிளகு போட்டா, போட்ட மிளகெல்லாம் கரெக்டா இருக்கான்னு கைய விட்டு என்ணுறாப்ல. நேத்து சாம்பார்ல போட எக்ஸ்ட்ரா ரெண்டு வெங்காயம் வேணும்னு கேட்டதுக்கு பேப்பர்ல 2 வெங்காயம்னு எழுதி சட்டிக்குள்ள போடுறாப்ல. இந்தாளு மட்டுந்தான் ஒழுங்குன்னு காமிக்க, மத்தவங்களா குத்தம் சொல்றான்”னு பொங்கிருச்சு.

இந்தப்பக்கம் சோமு பத்திரத்த நகட்டிட்டான். ஆனா அவனுக்காக ரம்யாவ கோர்த்து விட்டா....ரம்யாவ இம்ப்ரெஸ் பண்றத விட்டுட்டு பத்திரத்த திருடி கேமராவ பாத்து கண்ணடிச்சுக்கிட்டு இருக்கான்....பக்கி.

“இப்ப யாரு பத்திரத்த எடுத்தா?”ன்னு எல்லாரும் தேடிட்டு இருக்குறதோட முடிஞ்சிருக்கு.

ஆனா ஆரி ப்ரோ மட்டும் பெட் ரூமுக்குள்ள போயி பில்டரு, சம்மு, சகுனி பெட்டுகளுக்கு முன்னாடி சாஷ்டாங்கமா விழுந்திருப்பாப்ல......! நமக்கும் ஒரு குரூப்பு இருந்தா நல்லா இருக்குமேன்னு தானா வந்த சேர்ந்த 2 பேரு கூட குரூப்பு ஆரம்பிச்சேனே....எனக்கு நல்லா வேணும். இந்த ரெண்டும் எப்ப எவங்கிட்ட ஒரண்டையிழுத்துட்டு வரும்னு தெரியல....அதவிட இது ரெண்டும் எப்ப என் மேல பாயும்னும் தெரியல. விடிஞ்சா, கொண்டா இதுக பின்னாடி அலையுறதே பெரும்பாடா இருக்குன்னு அழுதிருப்பாப்ல....! அனேகமா இன்னும் ஒரு நாள்ல ஆரி ப்ரோ கக்கூஸ்ல இருந்து கதறி அழுகுற சத்தம் அரும்பாக்கம் வரை கேக்கலாம்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)