பிக்பாஸ் – 4 : நாள் - 30 (03.11.20)
நான் அன்னைக்கே சொல்லல....இவனுங்க ஒரே ஒரு நாள் சமைச்சுட்டு...அதையே 10 நாளைக்கு பழைய சோறா சாப்புடுறவனுங்கன்னு...! வாரத்துக்கு ஒரு நாள் கண்டென்ட்...அப்பறம் அதையே மாத்தி மாத்தி சனிக்கிழமை வரைக்கும் இழுத்துட்டு....ஆண்டவர் கைல குடுத்துட்டு....கமுக்கமா உக்காந்துக்குறானுங்க.....இன்னைக்கும் அப்பிடி ஒரு நாள்தான்.......!
29வது நாள்
தொடர்ச்சி....
அன்னை அர்ச்சனாவுக்கு
சுச்சி குடுத்த “உஷ்” எமோஜிக்கு வேலை பொழப்பில்லாம உக்காந்து, அது கண்ணுக்கு கலர் அடிச்சு
கொண்டுவந்த ரியோ; அத அர்ச்சனாகிட்ட குடுத்து “நீ உஷ்னு சொல்ற பொம்மைதான்....ஆனா அத
அழகா சொல்ற கிஸ் பொம்ம”ன்னு சொல்லி கைல குடுக்க...அசந்து போன அன்னை அர்ச்சனா அப்போதைக்கு
அவங்கக் கிட்ட இருந்த அரைக்கிலோ அன்ப கைல எடுத்து குடுத்துட்டு....”யாரு நெயில் பாலீஷத்
தூக்குனீங்கடா?”ன்னு கேக்க....”எல்லாம் நம்ம சைனா செட்டோடதுதான்”னு ரொம்பப் பெருமையா
சொன்னாப்ல ரியோ....! ஆனா இருக்குற நல்ல சீனையெல்லாம் அன்சீன்ல போட்டுட்டு இந்த ஒன்னத்துக்குமாகாத
சீன ஏன் இங்க போட்டானுங்கன்னு விஜய் டீவியானுக்குதான் வெளிச்சம்.
30வது நாள்
“ஏ வெற்றிவேலா”
பாட்டு அலாரம். வ.வா சங்க உறுப்பினர்கள் ஜங்கு புங்குன்னு குதிக்க, ரொம்ப நாளைக்கப்பறம்
அன்னப்போஸ்டு திங்கு திங்குன்னு மிதிச்சு தரையப் பேத்துட்டு இருந்துச்சு. சுச்சி தனியா
ஆடுறது அவங்களுக்கு நல்லதுன்னு நெனைக்குறாங்க போல.....ஆக்ச்சுவலா அது மத்தவங்களுக்குதான்
நல்லது.
காலைல டாஸ்க்கு.
சாத்தூர் ஷிவானி நவரசம் சொல்லிக்குடுக்கனுமாம். “என்னய நவரசம் சொல்லிக் குடுக்க சொல்லியிருக்காங்க.
சோ மொதல்ல புளியக் கரைங்க”ன்ற மாதிரி ஆரம்பிச்சு.....”எங்க, வரிசையா வந்து பண்ணுங்க”ன்னு
சொல்ல ஆரி ப்ரோ வந்து அழுகை எக்ஸ்பிரெஷன் குடுக்க உண்மையாவே கண்ல இருந்து தண்ணியெல்லாம்
வந்துச்சு....ஆனா வரப்போற நாட்கள்ல இந்த வானரக்கூட்டத்த சமாளிச்சு எப்பிடி இருக்கப்
போறோமோன்ற பயம் கலந்த கவலைதான் அந்தக் கன்ணீருன்னு அவருக்கு மட்டுந்தான் தெரியும். அப்பறம் சகுனி வந்து
நவரசம் பண்ணாப்ல....நல்லாதான் பண்ணாப்ல. ஜித்துபாய்க்குன்னே அளவெடுத்து தச்ச டாஸ்க்கு
இது....அவர கூப்ட்டு பண்ண சொல்லியிருந்திருக்கலாம். என்ன ஒண்ணு.....ரசம் கெட்டுபோயிருக்கும்.
நமக்கும் என்டெர்டயின்மென்ட்டா இருந்திருக்கும்.
சம்மு பில்டர்கிட்ட
“என்னடா சொல்றாரு தாத்தா?”ன்னு கேக்க....”அதக் கேட்டாலும் சொல்ல மாட்டேங்குறாப்ல....கேக்கலேன்னாலும்
மூஞ்சியத் தூக்குறாப்ல...பெரிய ரப்சரா இருக்கு அந்தாளோட”ன்னு சலிச்சிக்க, “நீ சுச்சிக்கு
முன்னாடி அவர ஜெயிக்க வச்சது நீதான்னு சொல்லிட்டியாம். அதுல கவுரவம் போச்சாம்”னு சம்மு
சொன்னதுக்கு....”அன்னைக்கு சைனா செட்டு வாடா போடான்னு பொதுவுல திட்டும்போது போகாத கவுரவம்
நான் சொன்னதுல போயிருச்சாமா ? போயிட்டு போது”ன்னு பில்டர்சொல்ல, “சரி எதுக்கும் உக்காந்து
பேசு அந்தாளோட”ன்னு சொன்னாங்க.
ஆனா இதப்போயி
கேட்டா அவரு ஸ்டேர்டஜின்னு சமாளிப்பாப்ல. அத ஒரு ட்ரெண்டாவே வச்சிருக்காப்ல. இப்பிடியே
சொல்லிட்டு இருந்தா.....இப்பிடித்தான் ஆகும்.....
சுச்சி : என்ன
சகுனி சட்டுன்னு சைலண்ட் ஆன மாதிரி இருக்கு...முன்ன இருந்த ஃபயர் இல்லையே ?
சகுனி : அதுதான்
என்னோட புது ஸ்டேர்டஜி...
ரம்யா : சபைல
பேசாம உக்காந்திருக்கீங்க ?
சகுனி : அதுதான்
தாம்மா என்னோட புது ஸ்டேர்டஜி...
சம்மு : பில்டரு
கூட ஏன் சண்டை ?
சகுனி : அதுதாம்மா
என்னோட புது ஸ்டேர்டஜி.....
ஷிவானி : ஏன்
தாத்தா செவத்தோரமா சாஞ்சு இருக்கீங்க ? புது ஸ்டேர்டஜிதான ?
ரியோ : என்ன
பெருசு டைனிங்க் டேபிள்ல உக்காந்து தாளம் போட்டுட்டு இருக்கீங்க ? புது ஸ்டேர்டஜியா
?
ஜித்து : என்ன
சார்....காலையில கக்கூஸ் போனீங்க போல..... புது ஸ்டேர்டஜிதான ?
நிஷா : என்ன
சுரேஷு மாமா கொட்டாவி விடுறீங்க....இது என்ன புது ஸ்டேடர்ஜியா
ஆரி : என்ன
சார்....கால் தடுக்கி குப்புற விழுந்துட்டீங்க ? புது ஸ்டேடர்ஜியா ?
சகுனி : ஞே.....//
விடிஞ்சு இவ்வளவு
நேரமாச்சு, வில்லங்கத்த கூட்டுவோம்னு நெனச்ச பிக்பாஸ், ஒரு புது டாஸ்க்கோட வந்தாப்ல....அதாவது
இந்த வீட்ல யாரு யாருக்கு யார் யார் கிட்ட கருத்து வேறுபாடு இருக்கோ அவங்க அத பிராதா
குடுத்து பஞ்சாயத்துல பேசி முடிச்சிக்கலாம். இதுக்கு ஜட்ஜு சுச்சி. வாதி, பிரதிவாதிகளுக்கு
ஆதரவா கலந்துக்குறவங்க கலந்து வாதாடலாம். ஜெயிக்குற ஆளோட ஆதரவாளர்களுக்கும் லக்ஸுரி
பட்ஜெட் பாயிண்ட்டு தலா 200 கிடைக்கும்.
மொத உள்ள போனது
பில்டரு....! பில்டருக்கு தமிழ்ல எழுதத் தெரிஞ்ச ஒரே வார்த்தை சனம். இப்பவும் அது மேலதான்
கேஸு.
வெளிய இந்தப்
பக்கம் சோமன அர்ச்சனா “டேய் பாலா மேல பிராது குடு. அவன் உன்ன நான் ஆட்டி வைக்குற பப்பட்
பொம்மைன்னு சொல்றான் அது தப்புன்னு சொல்லனும்...சரியா ? சட்டைய மடிச்சுவிடு.... தலைய
ஒதுக்கி விடு”ன்னு சொல்ல....பூம் பூம் மாடு மாதிரி தலையாட்டிட்டு இருந்தான் சோமு. (டேய்
சோமா, இதுதாண்டா பப்பட் பொம்ம வேலை.... இதத்தான் பில்டரும் சொன்னான்).
சம்மு உள்ள
போயி ஆரி மேல கேஸ் குடுத்துட்டு வந்தாங்க.
அடுத்து நம்ம
சைனா....பாலா பத்தி எழுதப் போறேன்றதயே ஒரு பாட்டாப் பாடிட்டு....தமிழ் – 2 பரீட்சை
எழுற மாதிரி எக்ஸ்ட்ரா எக்ஸ்ட்ரா பேப்பர்லாம் வாங்க...”போச்சு இங்கயே தங்கிருச்சுன்னா
நமக்கு தவிச்சுப் போயிரும்”னு பயந்த பிக்பாஸ் “சைனா....இதோட இன்னைக்கு பிராது குடுக்குறது
முடிஞ்சிருச்சுன்னு வெளிய போயி சொல்லிடுறியா”ன்னு சொல்லி அத வெளிய அனுப்பி இவரு தப்பிச்சுக்கிட்டாப்ல.
வெளிய வந்து
சனம் இத சொன்னதும். மத்தவனுங்களும் இதத்தான் சொல்லி சிரிச்சானுங்க. எப்பவும் போல சைனாக்கு
இது நாளைக் கழிச்சு புரிஞ்சு மொத்தப் பேரையும் பொரட்டிரும் அது நிச்சயம்.
உள்ள வந்த நீதிபதி
சுச்சி வந்து “பிக்பாஸ் வீடு ஒரு இருட்டறை ; சுச்சியின் வருகையே அதில் தீக்குச்சி.....அக்யூஸ்டுகள்
நிறைஞ்ச இந்த கோர்ட்டுல...அவன் அவன் தூக்குக்கு போறதும்....கேஸ முடிச்சுட்டு ஜாலியா
பார்க்குக்கு போறதும் அவனவன் கையில”ன்னு முன்னுரை குடுத்து சுத்தியலால மூணு தரம் தட்டி
தூசி பறக்க வேலைய ஆரம்பிச்சாங்க.
முதல் கேஸ்
பாலா சனம் மேல
போட்ட கேஸ் ஹியரிங்க்கு வந்துச்சு.
பாலா – வந்த
நாள் முதல் இந்த நாள் வரை சைனா தொல்லை தாங்கவில்லை. 3 அடி ரேடார்ல நான் வர்றதப் பாத்துட்டாப்
போதும்...அதுக்கு கடவாயில ரெண்டு ட்ராகுலா பல்லு மொளச்சு, எப்படா என் கழுத்த உறிஞ்சலாம்னு
காத்திருக்கு.
அன்னைக்கு வெளிய
அர்ச்சனா என்ன கேட்டாகும் குடுப்பாங்கன்னு சொல்லுச்சு. ஆனா அதுக்கு 2 நாளைக்கு முன்னதான்
எங்கிட்ட சிவாஜி வில்லன் சுமன்....எனக்கு அர்ச்சனா தரல லெமன்னு பொலம்புச்சு. அத பொதுவெளில
சொன்னதுக்கு...அப்பவே மறுத்திருந்தா பரவாயில்ல...5 மணி நேரம் கழிச்சு சண்டைக்கு வருது...
இதே மாதிரிதான்
முந்திரிக் கொட்டை கேஸும்....மதியம் 1 மணிக்கு சொன்னத நைட்டு ஒரு மணிக்கு கேட்டு அட்ராசிட்டி
பன்ணுச்சு. நேத்து தருதலை மேட்டர்ல தாறுமாறா என்னயப் பேசி....பெரிய மன உளைச்சலுக்கு
ஆளாக்கி.....கொலை செய்யவும் தூண்டியிருக்குன்னு பிராத முடிச்சான் பில்டரு.
சனம் உன் தரப்ப
சொல்லுன்னு சொன்னதுக்கு
சனம் – எங்க
மறுபடியும் அவன ஒண்ணு ஒண்ணா சொல்ல சொல்லுங்கன்னு சொன்னதும் பிக்பாஸ் வீடே ஆடிப்போச்சு....
“இப்ப தானாம்மா
இன்னா நாற்பது மாதிரி ஒப்பிச்சு முடிச்சான் ? மறுபடியும் ஏன் தனித் தனியா சொல்லனும்?”நு
கேட்டதுக்கு, “எனக்குதான் மறந்து போச்சே....! நான் வேற இவனுங்க அப்பத என்னய வெளிய கூட்டமா
என்னய ஓட்டுனதுல ஏதோ தப்பு இருக்கோன்னு யோசிச்சுட்டு இருக்கேன் அதனால கவனிக்கல...சோ
அவன சொல்ல சொல்லுங்க”ன்னு சொன்னதும், சுச்சி “அதெல்லாம் முடியாது...எப்பிடி இன்னைக்கு
முழுக்க இந்த ஒரு கேஸேயே பாத்துட்டு இருந்தா போதுமா ? பதில சொல்லு ஒழுங்கா”ன்னு சொன்னதும்....”கனம்
கோர்ட்டார் அவர்களே”ன்னு ஒரு குரல் வர....அது ஆரி ப்ரோ !
“என்னப்பா?”ன்னு
கேட்ட ஜட்ஜுகிட்ட “ அவளுக்கு புரியலன்னு சொன்னா புரியுற மாதிரி சொல்றதுதான நியாயம்...அத
விட்டுட்டு புரியாதா ஆளுகிட்ட புரிஞ்சமாதிரி என்னத்த கேட்டு என்ன புரியப்போகுது”ன்னு
விசு மாதிரி விசும்ப, “இங்க நாந்தான் “நீதிபதி”....”சட்டம் என் கையில்”....”சத்தம்
போடாதே”....கண்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்டுல “கைதி”யாகிடுவ”ன்னு (ஆகா எத்தனை படம் பேரு....)
எச்சரிச்சாங்க.
அப்பறம் சைனா
எப்பவும் போல அதுக்கு எதிரா அதுவே சிறப்பா வாதாடுச்சு. ஆதரவாளர்கள் வரலாம்னு சொன்னதும்
பில்டருக்கு
ஷிவானி, கேபி, அர்ச்சனா, ஆஜீத், சம்மு, ஜித்து. சைனாக்கு ரம்யா, ஆரி, அனிதா.
சம்மு வாதத்த
ஆரம்பிக்க. ஆஃபாயில் ஆரி ப்ரோ “சம்மு உன்னய கேப்டனாக்குனதுக்காக அவனுக்கு சப்போர்ட்
பன்ணாத”ன்னு சம்பந்தம் இல்லாம சொல்லி.....சம்மு ஆஃபாயில் ஆரி ப்ரோவ ச்சும்மா கிழி.
ஆனாலும் சம்மு கிழிச்ச கிழில சனமே கூட சைனைடு சாப்பிட்டிருக்கும். ஆரி இப்பிடி சொன்னதும்
ரம்யா எக்ஸ்பிரெஷன் தான் அல்டிமேட் “அய்யய்ய இந்தாளு ஸ்கூல் பையன் போலயேன்ற மாதிரி”.
ஆரி ப்ரோ சட்டுன்னு சடன் பிரேக்கப் போட்டு சலசலன்னு எதுவோ பேச. பில்டரு பக்கம் பொண்ணுங்க
அடிச்சு ஆட.....சாவகாசமா ஒரு உருவம் கால நீட்டி, தலைக்கு ஸ்டாண்டு வச்சு ஸ்ரீ ரங்கநாதர்
மாதிரி படுத்துக்கிட்டு “செஞ்சு வச்ச ஆலு கோபி ஆறிப்போயிட்டு இருக்கு....இங்க இந்த
ஆரி சூடா கத்திட்டு இருக்கான். சீக்கிரம் வந்தா சாப்ட்டு தூங்கலாம்”ன்ற மூடுல இருந்துச்சு....வேற
யாருமில்ல ....அது நம்ம ஜித்து பாய்தான்.
“பில்டரின்
வாழ்வுதனை சனம் கவ்வும்....முடிவில் சனம் மண்ணைக் கவ்வும் “ பில்டரு நிரபராதின்னு தீர்ப்ப்பாச்சு.
ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்ந்தனர்.
முடிஞ்சதும்
வெளிய வந்து பில்டரும் சம்முவும் ஆரியப் பத்தி பேசிட்டு இருந்தாங்க. “இந்தாளு வர வர
பெரிய மனுஷன் மாதிரியே நடந்துக்க மாட்டேங்குறான். நீ சத்தமா தும்முனாக் கூட பாத்தியா
எல்லாம் கேப்டனான திமிருன்னு சொல்றான்”னு சொல்ல, “அட நீ வேற நேத்து க்ரே கலர் டாப்ஸு
போட்டுட்டு இருந்ததுக்கே கேடு கெட்ட கேப்டன்னு சாடையா திட்டிட்டு போறான்”னு பொலம்பிட்டு
இருந்தாங்க.
உள்ள அனிதாவும்,
ஆரியும்.
அன்னப்போஸ்டு
: என்ன ஆரி ஏசி கொஞ்சம் அதிகமா இருக்குல்ல ?
ஆரி : அதுக்கு
காரணம் பாலா சப்போர்ட்ல கேப்டனான சம்முதான்
அன்னப்போஸ்டு
: சம்மு கொஞ்சம் மாறிடுச்சோ ?
ஆரி : எல்லாம்
கேப்டனான திமிரு...
அன்னப்போஸ்டு
: ஏங்க....முன்னைக்கு இப்ப அழகா இருக்குன்னு சொன்னேங்க...
ஆரி : கேப்டானான
பூரிப்பு....
அன்னப்போஸ்டு
: ரொம்ப பாலா பக்கம் சாயுது போல....இல்லையா ?
ஆரி : ஒரு நாள்
இந்த நிலம் என் கைல சிக்கும் அன்னைக்கு செத்தானுங்க....
அன்னப்போஸ்டு
: (MV : ஆத்தீ....இவரு தம்பிக குரூப்புப் போல...) சரி இருங்க அந்தப்பக்கம் ஒரு பெருச்சாளி
ஓடுது...அதுக்கும் சம்மு கேப்டன்ஸிக்கும் சம்பந்தம் இருக்கான்னு பாத்துட்டு வந்து சொல்றேன்.....(MV
: ஓடிரு அன்னப்போஸ்டு....) //
அடுத்த கேஸ்
ஹியரிங்க் சகுனி – சனம் மேல போட்ட கேஸ்.
தேவை இல்லாம
மூக்கை நுழைப்பவர் – பிராது.
சனத்துக்கு
ஆதரவா பாலா எந்திரிச்சு வந்தது சனத்துக்கே அதிர்ச்சி. ரம்யாவும் வந்தாங்க. அப்பறம்
ஓடுற பஸ்ஸுல ஏற வந்த ஸ்பீடுல அன்னப்போஸ்டும் வந்து ஜாயினிக்கிச்சு, பின்னாடியே ஆரி
ப்ரோ.
சகுனிக்கு அர்ச்சனா,
ரியோ, ஷிவானி (அவசரத்துல பச்சைக் கலர் மேல் டாப்ஸ மட்டும் போட்டுட்டு வந்துருச்சு பொண்ணு),
சம்மு.
இந்த வாதத்துல
அர்ச்சனா “அன்னைக்குக் கூட கிச்சன் டீம்ல ஒரு பிரச்சனை அதுல சம்பந்தமே இல்லமா டீம்லயே
இல்லாத சனம் உள்ள நுழைய வந்தாங்க. நான் மறுத்து வெளிய அனுப்புனேன்”னு ஒரு பாயிண்ட்ட
சொன்னாங்க.
பிரேக்ல சும்மா
இல்லாம சனம் “அர்ச்சனா ரெண்டு பொய் சொல்லிட்டாங்க”ன்னு சொன்னத, “வெளிய வந்து பேசிக்கலாம்”னு
அப்போதைக்கு முடிச்சாங்க அர்ச்சனா.
ஜட்ஜு சட்டப்
புத்தகத்தின் சட்டைய எல்லாம் கழட்டி....தீவிரமா ஆராய்ஞ்சி. சைனா செட்டு சனம் குற்றமற்றவர்னு
அறிவிச்சாங்க.
வெளிய வந்த
ஆரி அனிதாகிட்ட “ ஆனாலும் பில்டருக்கு இருக்குற டாஸ்க்கு அறிவு இங்க எவனுக்கும் இல்ல....நம்மளுக்கெல்லாம்
அறிவே இல்ல. செம்மயா கேம் ஆடுறான்”னு சிலாகிக்க, அன்னப்போஸ்டோ மைண்ட்ல இன்னும் ரெண்டு
நாள்ல இவன கழட்டி விட்டுட்டு பில்டரு கூட ஒதுங்குனா ஒன்பதாம் இடத்துல குரு பாத்துரும்னு
நெனச்சுக்கிச்சு.
அர்ச்சனாவும்,
சம்முவும் வந்து பில்டர்கிட்ட “என்னடா தம்பி தெரிஞ்சுதான் பண்ணியா?” னு கேக்க, “அப்சலூட்லி....கேம்னா
விளையாடனும்”ன்னு பட்டினத்தார் மாதிரி சொல்லிட்டு பக்குவமா போயிட்டான். சுச்சியும்
அர்ச்சனாகிட்ட “பில்டரு பண்ணதுல எந்தத் தப்பும் இல்ல....அவன் கேம கேமா விளையாண்டுட்டான்
அவ்வளவுதான்”னு விளக்குனாங்க. அர்ச்சனா இந்த விஷயத்த எல்லார்கிட்டையும் சரியா சரியான்னு
கேக்கக் காரணம், அவங்க சோமு, பாலா மேல குடுக்கப்போற கேசுக்கு, சோமு சார்பா அவங்க போயி
நிக்கப் போறதுக்குதான். அப்ப யாரும் தப்புன்னு நாக்கு மேல பாக்குப் போட்டு பேசக்கூடாதுல்ல.
ராஜமாதா தந்திரம்.
இப்ப டைனிங்க்
டேபிள்ல சனம் – அர்ச்சனா பஞ்சாயத்து
அர்ச்சனா
: நான் பொய் சொன்னேன்னு சொன்னியே என்ன பொய்
?
சனம் : அன்னைக்கு
நான் கிச்சன் டீமுக்கு மூக்க நுழைக்க வந்தேன்னு சொன்னது பொய்
அர்ச்சனா :
பின்ன நீ மாவரைக்கவா வந்த ? அதுமில்லாம நீ கிச்சன் டீமே இல்லையே
சனம் : அப்ப
பில்டரு மட்டும் அங்க இருந்தான் ? அவன் கிச்சன் டீமா ?
அர்ச்சனா :
அவன் விஷயத்த பேசும்போது அவன் அங்கதான இருப்பான்?
சனம் : ஆனா
அவன் கிச்சன் டீம்ல இல்லயே
அர்ச்சனா :
யம்மா அவன் கிச்சன் டீம் இல்ல...ஆனா அவன் சொன்ன விஷயத்த அங்க பேசும்போது அவன் கிச்சன்லதான
இருக்கனும்
சனம் : அப்ப
நான் வந்ததுக்கு ஏன் விரட்டுன ?
அர்ச்சனா :
நீதான் கிச்சன் டீம் இல்லையே ?
சனம் : அப்ப
பில்டரு மட்டும் அங்க இருந்தான் ? அவன் கிச்சன் டீமா ?
அர்ச்சனா :
யம்மா அவன் கிச்சன் டீம் இல்ல...ஆனா அவன் சொன்ன விஷயத்த அங்க பேசும்போது அவன் கிச்சன்லதான
இருக்கனும்
சனம் : அப்ப
நான் வந்ததுக்கு ஏன் விரட்டுன ?
அர்ச்சனா :
நீதான் கிச்சன் டீம் இல்லையே ?
(இப்பிடியே
இதே கான்வோவ இன்னும் ரெண்டு சேத்துக்கோங்க....)
பில்டரு : உள்ள
வேற என்னமோ பேசுன சனம் இங்க வந்து மாத்தி பொய் சொல்லுது
சம்மு : சனம்....தெளிவா
கேட்டு தெளிவா பதில் சொல்லு.....அர்ச்சனா சொன்ன பொய் என்ன ?
சனம் : அது
பொய் சொன்னா என்ன உண்மை சொன்னா என்ன ? நான் பொய் சொல்லல
ஆரி : சரி பேசிட்டே
எங்க போற ?
சனம் : நான்
பொய் சொல்லல
ஆரி : சரி நீ
உண்மையத்தான் சொல்ற
சனம் : யோவ்....
நான் பொய் சொல்லல
அன்னப்போஸ்டு
: சரி நீ பொய் சொல்லல
சனம் : ஏய்...அத
நாந்தான் சொல்லனும்..... நான் பொய் சொல்லல
ஒரு கட்டத்துல
சனம் சந்திரமுகியா மாறி இந்த டயலாக்க சொல்லிக்கிட்டே லான் பூராம் அளந்துச்சு. நல்ல
வேளை நீச்சல் குளம் வலை போட்டு மூடியிருக்கு....இல்லேன்னா அதுல குதிச்சிருக்கும் சனம்.
அனிதாவும்,
ஆரியும் சமாதானப்படுத்த கூடவே ஓடிவந்த சகுனிய அன்னப்போஸ்டு சம்பந்தமில்லாம கத்த....அந்தாளு
திரும்பவும் கத்தி விட்டாப்ல. இதுல ரம்யாக்கு ரெண்டு ஏறு வேற.
அப்பறம் ஆரி,
ரம்யா, அன்னப்போஸ்டு 3 பேரும் சைனாக்கு ஆதரவா உக்காந்திருக்க....அர்ச்சனா நிலை விளக்கம்
குடுக்க வந்த ரியோவ “ஆரி ப்ரோ....ஜெராக்ஸ் காப்பியெல்லாம் வேணாம். நீ ஒபோயி ரிஜினல்
காப்பிய கொண்டு வா”ன்னு திருப்பி அனுப்பிவிட்டாப்ல. இதான் சாக்குன்னு அன்னப்போஸ்டு
ஆரிகிட்ட ரியோவ வாங்கு வாங்குன்னு வாரிட்டு இருந்துச்சு.
பின்ன சம்மு
சமாதானப் புறாவா வந்து “அர்ச்சனாகிட்ட தனியா பேசுறியா?”ன்னு கேக்க....”ஆண்டவர்கிட்ட
முறையிடலாம்னு இருக்கேன். அப்பறம் பாத்துக்கலாம்”னு சாமுராய்ப் புறாவா சனம் மறுத்துடுச்சு.
இன்னைக்கு நாள்
முடிவுல உருவான ஒரு புதுக் கூட்டனி “ஆஃபாயில் ஆரி, அன்னப்போஸ்டு, சைனாசெட்டு சனம்”
வாவ்.....ஹவ் நைஸ்ல ! முடிஞ்சது.
Comments
Post a Comment