பிக்பாஸ் – 4 : நாள் - 47 (20.11.20)
47வது நாள்
“கருத்தவன்லாம்
கலீஜாம்” பாட்டு அலாரம். பத்தாம் வகுப்பு பசங்க பிடி பீரியடுக்கு வந்த மாதிரி லான்ல
நின்னு வார்ம் அப் பண்ணிட்டு இருந்தானுங்க. அதுக்கு பேரு டாண்ஸுன்னு யார நம்ப வைக்க
பாடுபடுறானுங்கன்னு தெரியல...
காலை டாஸ்க்.
சுச்சி ரம்யாவப் பத்தி ஒரு கானா பாடுச்சு. அப்பறம் அன்னப்போஸ்ட ஏத்தி விடுற மாதிரி
ஒரு பாட்டு. முடிச்சிட்டு உள்ள போனானுங்க.
மணிக்கூண்டு
டாஸ்க்குல கடைசியா வந்த டீம்ல உள்ள சுச்சி, பாலா & ரம்யா இதுல 2 பேத்த மத்த டீம்
ஆளுங்க ஓய்வறைக்கு அனுப்ப செலெக்ட் பண்ணனும்னு சொன்னாப்ல பிக்கி...! உடனே பூராம் உலகப்போர
தடுக்க உச்சி மாநாடு கூட்டுன மாதிரி கூடி உக்காந்து பேசுனானுங்க....! தெளிவா தெரியும்
இவனுங்க யார சொல்லுவானுங்கன்னு. ஆஜீத் கிட்ட “நல்ல சான்ஸ் கிடைச்சிருக்கு...ஒரு நாலஞ்சு
மணிநேரமாவது இந்த 2 பேரு தொல்ல இல்லாம இருக்கலாம்டா....போயி சொல்லுடா”ன்னு சொல்லி விட்டானுங்க.....!
“சொன்னதும் கேட்டுட்டு உள்ள போயிட்டா அப்பறம் எனக்கென்ன மரியாதை....?எதன் அடிப்படையில
என்னய உள்ள அனுப்புறீங்க?”ன்னு கேக்க.....இடையில குறுக்கிட்ட சுச்சிய அவன் கத்துன கத்துக்கு
பூராம் மெரண்டு போயி, மறுபடியும் கூட்டு சேந்து பேச ஆரம்பிச்சுட்டானுங்க. அப்பறமா ஆஜீத்
வந்து “ஏங்க முன்ன சொன்ன அதே காரணந்தாங்க...தயவு செஞ்சு போயிருங்க”ன்னு காலுல விழாத
குறையா சொன்னதும். எந்திரிச்சு போயிட்டான்.
ஆனாலும் சனம்
கொசு மாதிரி பாலாவுக்கு தொல்லை குடுக்குறது கொஞ்சம் அதிங்கந்தான். அவன சந்தோஷப்படுத்துற
மாதிரி வேணும்னே அவன் எரிச்சல் படுத்தி பாக்குறதுல தான் அதுக்கு ஆர்வம் போல. சில சமயம்
அது தெரிஞ்சே செய்யுறது மாதிரி இருக்கு. அவனுக்கு முன்னாடி ஜெயிலுக்குள்ள போயி அவனுக்கு
பெட் சரி பண்றேன், போர்வைய மடிக்கிறேன்னு கச கசன்னு பண்ண “தயவு செஞ்சு வெளிய போ”ன்னுட்டான்
பில்டரு.
பில்டரு போனதும்
“யப்பா இன்னைக்காச்சும் நீ தனியா இருப்ப. எங்க கூடையெல்லாம் பேசுவேல்ல”ன்னு சம்முவும்,
ரம்யாவும் ஷிவானிய கலாய்க்க....அது ஞேன்னு ஓலமிட்டுச்சு.....! இன்னிக்குதான் அது கூட
இருக்குற கண்டெஸ்டென்ட்ஸ் யாருன்னு முழுசா பாத்துச்சு.
வெளிய இருந்துகிட்டு
சனம் அவங்கிட்ட பேச முயற்சிக்க ஷிவானி “கருத்து சொல்றேன்னு நெனைக்காத....கன்ஃபார்மா
கொலை பண்ணுவான்”னு சொல்லி வலுக்கட்டாயமா தூக்கிட்டு போயிருச்சு. “இப்ப நா போறேன்....ஆனா
யூ வில் மிஸ் மீ பாலாஆஆஆ....”ன்னு கத்திக்கிட்டே போச்சு.
உள்ள ரியோ வரதுக்காக
சாப்பிடாம உக்காந்திருந்துச்சாம் நிஷா அதுக்கு ரியோ “ஏன் இப்டில்லாம் பண்ற?”ன்னு கோவப்பட்டு,
அதுக்கு நிஷா அழுது....அர்ச்சனா வந்து சமாதானப்படுத்தி.....யப்பா டேய்....பில்டரு,
ஷிவானி டாவ அன்னேச்சுரல்னு சொல்றவனுங்க...கொஞ்சம் இந்தப்பக்கமும் பாருங்கடா...! ரெண்டு
நாளைக்கு ஒருதரம் இவனுங்க சீரியல் ஓட்டலேன்னா தூக்கம் வராது போல.
உள்ள சுச்சியும்
பில்டரும்....
பில்டரு : போட்டுட்டாங்க
ஜெயிலு.....10 மணி ரயிலு...
சுச்சி : ஆஜீத்
உன் குரூப்பா இருந்துக்கிட்டு உன்னயே ஜெயில்ல போட்டான்னு கவலைப்படாத
பில்டரு : அவன்
என் குரூப்பா ? கொல்லப் போறேன் உன்னைய
சுச்சி : சரி.....பாடலாம்
! கூவுறது குயிலு.....சுள்ளுன்னுது வெயிலு...
பில்டரு : போடுறாங்க
பாமு....அழகயிருக்கு சாமு....
சுச்சி : ஆனாலும்
ஆஜீத்த குழப்பிட்டானுங்க.....
பில்டரு : நனே
ஜெயில்ல இருக்கேன்னு கொல வெறில இருக்கேன்....சாவாத
சுச்சி : சரி.....பாடலாம்
! சிக்ஸருன்னா தோணி....மாடு போடும் சாணி....
பில்டரு : ராஜாவுக்கு
ராணி.....அழுக்கா இருக்கு கோணி...
சுச்சி : ஷிவானிய
இந்தப்பக்கம் வர வேணாம்னு சொல்லு....எனக்கு பிடிக்கல...இனி அவளுக்கு பாவம் பாக்க மட்டேன்
பில்டரு : தக்காளி....அதுக்கு
நீ இருந்தாதான...நான் கேமரா இருக்குன்னு கூட பாக்கமாட்டேன்...
சுச்சி : சரி
பாடலாம் ! சாப்பாட்டுக்கு முட்டை.....போட்டுக்கோடா சட்டை...
பில்டரு : அடிக்கப்போறேன்
மொட்டை....பழத்துல இருக்கு கொட்டை....
சுச்சி : நான்
சீக்கிரம் வெளிய போனா எனக்கும் நல்லது...உனக்கும் நல்லது
பில்டரு : யோவ்...பிக்கி
! இப்பதான் புரியுது, எனக்கு பனிஷ்மென்ட் ஜெயில் கேஸு இல்ல....இந்த அரை லூசு..! நான்
கக்கூஸுக்குள்லையே போறேன்....(கக்கூஸுக்குள்ள ஆய்...ஊய்னு சவுண்டு)
சுச்சி கதவை தட்ட.....
பில்டரு : கக்கூஸுல
கூட நிம்மதியா இருக்க விட மாட்டேங்குற....செத்த சும்மாதான் இரேண்டி.....
சுச்சி : சரி
பாடலாம்......என்ன தூங்கிட்டான்.....சரி நானே பாடிக்கிறேன் ! (விடிறி விட்டபடி) உன்னை
நானறிவேன்....என்னை அன்றி யாரறிவார்.....(முடிவுல அழுகாச்சி) //
இங்க நெறைய
பேரு சுச்சி பில்டரு மேல அன்ப காட்டுறதாகவும் அத அவன் மதிக்காம சுச்சிய அவமானப்படுத்துறதாவும்
சொல்றாங்க. சிம்பிள் லாஜிக்....அன்பு காட்டுறதுன்னா என்ன ? இந்த ஷோல வந்து அன்பு காட்ட வேண்டிய அவசியம் என்ன
? நட்பு பாராட்டுறது வேற...அன்புன்றது வேற ! இந்த வீட்டுக்குள்ள நட்பா இருக்கலாமே தவிர
அன்பு காட்டுறதுக்கும், குடுக்குறதுக்கும் இது என்ன புனித பீட்டர் சர்ச்சா ? தவிர விளையாட
வந்த இடத்துல கேம் ஸ்பிரிட் இல்லாம அன்பு காட்டிக்கிட்டே திரிஞ்சா வெளங்குமா ? வேற
யார் மேலயும் இந்த குற்றச்சாட்டு வர மாட்டேங்குதே ஏன் ? பிடிக்கல, அவன் சரியில்ல, கொலைகாரன்னு
என்ன சொன்னாலும் உள்ள இருக்குற எல்லா பொண்ணுங்களுக்கும் பாலா மேல ஒரு ஈர்ப்பு இருக்கு.
அதுக்காக அவங்க எண்ணத்துக்கு ஏத்த மாதிரி இவன் நடந்துக்க வேண்டிய அவசியம் என்ன இருக்கு
?
வெளிய இருந்து
பாக்கும்போதே பிடிச்சு போன ஒருத்தனோட உள்ள போயி நட்பா இருக்க ஆசைப்பட்டதுதான் சுச்சியோட
செயல். அவங்க நட்புன்றத தாண்டி இன்னொரு படிகட்டுல ஏறும்போதுதான் பிரச்சனையாகுது. சுச்சி
அன்ப குடுக்க வந்த ஆளு கிடையாது. அவங்க இருக்குற மனநிலைக்கு அன்பு தேவைப்படுற ஆளு.
அது என்னன்னே தெரியாத பில்டர்கிட்ட அத எதிர்பாக்குறது யார் தப்பு ? மைக்கேல் ஜாக்ஸன்
கிட்ட போயி மானச சஞ்சரரே பாட்டு பாடுங்கன்னு கேக்குற கணக்கு இது. இவ்வளவுக்கும் கேம்லையும், அவங்க ஒப்பீனியன் சொல்றப்பையும் பிரச்சனை
வந்தப்ப கூட நின்னது பில்டர். அது இந்த கேமுக்காக பண்ணது. இதே காரணத்துக்காக சைனாவுக்குக்
கூட அவன் ஆதரவா வாதாடுனது நமக்கு தெரியும். இவ்வளவு நாளாகியும் பில்டர பத்தி தெரியாம
அவன ப்ரவோக் பண்ற மாதிரி பேசுற சுச்சி மேல யாரும் தப்பு சொல்லக் காணோம். கேட்டா அது
பேஷண்டுன்றானுங்க.....! பேஷண்டுன்னா ஆஸ்பத்திரி கூட்டிட்டு போங்கடா அவன் என்ன பிராய்டு
சிஷ்யன் பில்டர் சைக்கியாட்டிரிஸ்ட்னு போர்டா மாட்டி வச்சுருக்கான்.
அன்புன்னா என்னன்னு
தெரியாது...உண்மையான அன்பா இல்லையான்னு தன்னால கண்டுபிடிக்க முடியாது. அதுமட்டுமில்லாம
அன்பு காட்டி தன்ன யாரும் பலவீனப் படுத்திறக்கூடாதுன்றதுல பாலா ஆரம்பத்துல இருந்து
தெளிவாவா இருக்கான்....அத பல தடவை எல்லார்கிட்டையும் சொல்லவும் செஞ்சுட்டான். “நீ என்
புள்ளைடா....நீ வேணுண்டா”ன்னு கதறுன அர்ச்சனா அடுத்த 3 வது நாள்ள இருந்து எங்க போனாங்க
? அவன் பக்கத்துல கூட நிக்குறது இல்லையே. தவிர அவன் எந்த குரூப்புக்குள்ளையும் இல்ல....இருக்கவும்
முடியாது. அவன் தனியா தான் உள்ள இருக்கான். அந்த அந்த நேரத்துக்கு சில பேர் கூட பேசிக்கிறான்.
ஷிவானி மேல ஒரு ஈர்ப்பு இருக்கு அதையும் பகிரங்கமா சொன்னா பலவீனமாகிடும்ன்ற கரணத்துனாலதான்
ஒத்துக்க மாட்டேங்குறான். சுச்சி சிச்சுவேஷனுக்கு பாடுன பாட்ட வச்சுக்கிட்டு இவனுங்க
பில்டர என்னமோ கிங்காங் குரங்கு மாதிரி சித்தரிச்சுட்டு இருக்கானுங்க. என்னமோ போங்கடா
!
சுச்சி என்னயப்பத்தி
என்னமோ சொன்னதுக்கு பில்டரு அது பிடறிய பிடிச்சுட்டான்....அதுவரைக்கும் சந்தோஷம்னு
சம்முகிட்ட சொல்லிட்டு இருந்துச்சு ஷிவானி.
வீட்டுக்குள்ள
இருந்தவனுங்களுக்கு ஓய்வறையில இருந்து வந்த சவுண்டே பெரிய டெரரா இருந்துச்சு. “அந்தப்பக்கம்
போகாத அது சந்திரமுகி பங்களா”ன்னு சொல்லிட்டு வெளி வழியா போகாம குறுக்குக் கதவு வழியா
கக்கூஸுக்கு போயிட்டு வந்துட்டு இருந்தானுங்க எல்லாம்.
அப்பறமா சுச்சி
சும்மா இல்லாம அன்னப்போஸ்ட கூப்ட்டு “உனக்கு குடுத்த பேண்ட நீ கட்டலேன்னா குடு....சனத்துக்கு
குடுக்கனும்”னு சம்பந்தமில்லாம சொல்ல....அன்னப்போஸ்டு அத கொண்டு வந்து மூஞ்சில எறிஞ்சுட்டு
புயல் வேகத்துல கக்கூஸுக்குள்ள போயிடுச்சு. இந்த சம்பவத்தப்ப சைனா சுச்சிட்ட பேசிட்டு
இருந்தது சந்தேகத்துக்கிடமா இருக்கு. சைனா எதோ குழப்பி விட்டுருச்சு போல. கடைசியா அந்த
பேண்ட கேமராவுக்கு மாட்டி விட்டாங்க சுச்சி. இதுக்கு கேமரா அவங்க பக்கமா திரும்பாம
அன்ப மறுத்து ரூடா நடந்துக்கிட்டதா ஒரு நாலஞ்சு போஸ்ட நாளைக்கு பாக்கலாம்.
பின்ன கேப்டன்
டாஸ்க். சோமு, அர்ச்சனா, ரியோ, ஆரி, கேபி, சம்மு. டப்பாவ ஸ்கேலுல வச்சு கீழ விழுகாம
பேலன்ஸ் பண்ணனும். அர்ச்சனாவும், சம்முவும் ஆரம்பிச்சதுமே அவுட். தான் குச்சிய பாத்து
விளையாடுன்னு சொன்னா கேபி குச்சிய பாத்து “அமாவாசை குச்சி உடம்புல படுது”ன்னு ஆரி சொல்ல....”அதெல்லாம்
படல.....அது குவியமில்லா காட்சிப்பிழை”ன்னு சொல்லி ஆரிய ஷட் அப் பண்ணிடுச்சு கேபி.
ரொம்ப நேரத்துக்கு
அப்பறம் ரியோ ஜெயிச்சு கேப்டனானாப்ல. அப்பறம் ஓய்வறை வாசல்ல உக்காந்து டீம் பிரிச்சானுங்க.
அப்பறம் ஹூண்டாய்
கார் இன்டெகரேஷன். ரெண்டு ரெண்டு பேரா டீமா பிரிஞ்சு இரு ஆளு மாடலா நிக்க, இன்னொரு
ஆளு போட்டோ எடுக்கனும். சம்மு-ஆரி வின்னு. இவனுங்க சாப்ட்டு முடிச்சாச்சுன்னு தெரிஞ்சதும்
சாப்பாடு வந்துச்சு.
பின்ன பில்டரையும்,
சுச்சியையும் ரிலீஸ் பண்ணானுங்க. சனமும், சுச்சியும் பொணத்துக்கு முன்னாடி ஆடுற ஆட்டத்த
தப்பு தப்பா ஆடிட்டு வந்துச்சுங்க. அப்பறம் ஆரிக்கும், சம்முவுக்கும் பிரைஸ் வந்துச்சு.
பாக்கலாம் ஆண்டவர் இன்னைக்கு என்ன கண்டெண்ட் வச்சுருக்காருன்னு.
Comments
Post a Comment