பிக்பாஸ் – 4 : நாள் - 35 (08.11.20)

 34வது நாள் தொடர்ச்சி.....

ஆண்டவர் போனதும் ஆரியும் – பில்டரும் ஆரம்பிச்சுட்டானுங்க. அதே விஷயம், அதே மாடுலேஷன், அதே பாடி லேங்குவேஜ்.....! கரமுர கரமுரன்னு கத்திட்டே இருந்தானுங்க. “நான் என்ன பொய் சொன்னேன்னு சொல்லு”ன்னு பில்டரு ஆரிகிட்ட ஆக்ரோஷமா கேக்க, “இதுக்கு நான் பதில் சொல்றேன்”னு சனம் வந்ததும் பில்டரு, “அடப்போங்கடா”ன்னு டென்ஷன்ல பக்கத்துல இருந்த சேர தள்ளிவிட்டுட்டுப் போயிட்டான். சைனாவுக்கு “அப்பாடி இன்னைக்கு ஒரு கேஸ் குடுத்துரலாம்”னு குதூகலமாகிடுச்சு. “உன் ஆளப் பாத்தா மத்தவங்க பயப்படுவாங்க....ஆனா என் ஆளப் பாத்தா நானே பயப்படுவேன்”ற கதையா, பில்டரத் தாக்க சனத்த அடியாளா யூஸ் பண்றாப்ல ஆரி.

மறுபடியும் விடாம சட்டை மாத்த உள்ள போன பில்டர வெரட்டிக்கிட்டே பெட் ரூம்ல நுழைஞ்ச ஆரிய பில்டரு “போயா அழுகுனி....நீ அழுது அழுதுதான் கேப்டனான”ன்னு சொல்லிட்டான். அவ்வளவுதான் ஆரி ப்ரோ இவ்வளவு நாளா பேசிட்டிருந்த எல்லாத்தையும் மொத்தமா சேத்து பேச ஆரம்பிச்சுட்டாப்ல....! அப்பறம் சம்மு வந்து “டேய் வாடா டைம் வேஸ்ட் பண்ணாத”ன்னு கூட்டுட்டுப் போயிட்டாங்க. “எது எங்கூட பேசுறது டைம் வேஸ்டா ? எங்க அந்த சனத்த?”ன்னு பில்டரத் தாக்க தேட ஆரம்பிச்சாப்ல....இந்தக் கலவரத்தையும் சைடா சரிஞ்சு படுத்து சைலண்டா நோட் பன்ணிட்டு இருந்தாப்ல ஜித்து பாய்....!

35வது நாள்

ஆண்டவர் வந்தார். 5ம் வகுப்புப் பையன் மாதிரி அரை டை கட்டிட்டு வந்தாரு. வந்ததும் அகம் – அகம்.

“சார் பாக்க வக்கீல் மாதிரி இருக்கீங்க”ன்னு சொன்னதும் “வக்கீல் பையன்”னு டைமிங் அடிச்சார். “வைல்டு கார்ட்டுல சிங்கிளா உள்ள வந்தாலும் நல்லா மிங்கிள் ஆகிட்டீங்க பரவயில்ல”ன்னு பாராட்டிட்டு. “தீபாவளிக்கு மாசில்லா பட்டாசு வெடிங்க”ன்னு சம்பந்தமில்லாம, அதுவும் உள்ள இருந்தவனுங்களுக்கு எதுக்கு சொன்னாருன்னு தெரியல....இவனுங்களும் என்னமோ வியாழக்கிழமை சாயங்காலம் வீட்டுக்குக் கிளம்பிப் போயி தீபாவளி கொண்டாடப் போறவனுங்க மாதிரி மண்டைய மண்டைய ஆட்டி கேட்டுட்டு இருந்தானுங்க.

“சரி கோர்ட்டு கேஸுக்கு வருவோம்”னு சொன்னதும் ஆரி, மொத ஆளா “பில்டரு எல்லா பக்கமும் கம்பு சுத்துனான்....கேஸ் குடுக்குறது, அவன் கேஸப் பாக்குறது, சனத்துக்கு சப்போர்ட் பண்றதுன்னு ஒரு மாதிரி குழப்பி விட்டுட்டான்.....ஆனா இதெல்லாம் நேர்மைல வருமான்னு தெரியல”ன்னாப்ல. சைனாவும் “இவன் எனக்கெல்லாம் சப்போர்ட்டுக்கு வரல....அப்பிடி வர ஆளு இன்னைக்கு சேர கொண்டி தாக்க வருவானா சொல்லுங்க ? அதெல்லாம் சும்மாங்க”ன்னு இழுத்துச்சு.

“ஏண்டா இவனுங்க 4 பேரு தவிர வேற ஒருத்தனுக்கும் பிரச்சனையே இல்லையாடா இந்த வீட்ல ? பாத்தாலே பாஞ்சு திங்கிற அளவுக்கு மூஞ்சிய தூக்கிட்டு திரியிறீங்க. ஆனா அதக் கேஸா குடுத்துப் பேசுங்கடான்னா மூட் அவுட் ஆகுறீங்க...ஒர்ஸ்ட்டு டா டேய்”னு சொன்னாப்ல ஆண்டவர்.

“ஏம்மா ஜடஜ்மெண்ட் குடுக்க சொன்னா பாயிண்ட கேட்டு சொல்லுவியா. அத விட்டுட்டு இவனுங்கள கையத் தூக்க சொல்லியாம்மா தீர்ப்பு சொல்லுவ ? அதுக்கு எதுக்கு உனக்கு கருப்பு கோட்டெல்லாம் குடுத்து, கைல சுத்தியலும் குடுத்து மேல ஏறி உக்கார வைக்கனும் ?”னு கேக்க, “ஏங்க வந்து 2 வது நாள் என்னய ஜட்ஜ் ஆக்குனா என்ன பண்றது ? இவனுங்க எந்த நேரத்துல எப்பிடி இருப்பானுங்கன்னு எனக்கென்ன தெரியும்? அதான் நல்லா தெரிஞ்ச இவனுங்ககிட்டையும் கருத்து கேட்டேன்”னு சமாளிச்சாங்க சுச்சி.

“ஆனா பில்டருக்கு ஃபேவர் பண்ணது பச்சையா தெரிஞ்சதே ?”னு சொல்ல. “ஏங்க நாந்தான் சொன்னேனே இங்க எனக்கு பிடிச்ச சில பேர் இருக்காங்கன்னு. அதுல பாலாவும் ஒருத்தன். ஆனா நான் அத கோர்ட் ரூம்ல கொண்டு வரலன்னுதான் நெனைக்கிறேன்”னு சொன்னதும்.....”என்னத்த நனைச்சியோ”ன்னு சலிச்சுக்கிட்டாப்ல.

ஆரி உடனே “ சபைல சத்தமா பேசிறவன் பேச்சு ஒத்துப்போகுது, அதுல நியாமும்...நீதியும் செத்துப்போகுது. பில்டரு என்ன சொன்னாலும் ஒத்துக்குற இந்த ஜட்ஜுதான் நான் என்ன சொன்னாலும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க.....அன்னைக்கு நான் பேசுன பேச்சுக்கு உண்மையான ஜட்ஜா இருந்தா பில்டருக்கு தூக்கு கிடைச்சிருக்கும்”னு சொல்ல....”ம்ம்க்கும் கேஸு குடுத்தது சம்மு...ஆனா நீ பில்டருக்கு தூக்கு வாங்கியிருப்பேன்...தேக்ஸா வாங்கியிருப்பேன்ற....! சம்மு மேல பஞ்சாயத்துனாலும் நீ பில்டரத்தான் இழுக்குற, சனம் கூட பஞ்சாயத்துன்னாலும் நீ அவனத்தான் இழுக்குற, உண்மைய சொல்லு அன்னைக்கு பர்கரத் தின்னுட்டு வயிறு கலக்குனப்பவும் அவந்தான் காரணம்னு நீ நெனச்சேல்ல?”ன்ற மாதிரி பாத்துட்டு....”என்ன நிஷா நீ சொல்லு”னு சொன்னதும், “சார், சனத்த தேவையில்லாம பேசுறன்னு சொல்லிட்டு ஆரிக்கு மட்டும் சான்ஸ் குடுக்குது ஜட்ஜு. அதான் எனக்கு புரியல்ல”ன்னதும், “ஆரியெல்லாம் அழகா எங்கிட்ட கேட்டுட்டுத்தான் பேசுனான்....இது கண்டநேரத்துல கண்டதப் பேசுனதாலதான் கண்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்டு குடுத்தேன்”னு சுச்சி சொன்னாங்க.

“என்னதான் நையப் புடை....நாயர் கடைன்னு கத்தி கத்தி வசனம் பேசுனாலும், ஆரி, சம்முவ சொன்னது தப்போ தப்புதான்”னு சொன்னாரு.

இதுல இடையில வந்து பில்டரு பேச “டேய் ஜட்ஜ கேள்வி கேட்டா அக்யூஸ்டு நீ ஏண்டா பதில் சொல்ற?...சும்மா இருடா டேய்”ன்னாரு. சுச்சியும் “ஏங்க நான் என்ன சுப்ரீம் கோர்ட்டு 8வது பெஞ்சு ஜட்ஜா ? வாழ்க்கையில ஒரு தடவதாங்க கோர்ட்டுக்கே போயிருக்கேன்....என்னதான் இருந்தாலும் கேப்டன்ற மரியாதைக்கு சம்முவ பேச விட்டேன் அவ்வளவுதான்”னு சொன்னாங்க சுச்சி.

“அப்பறம் என்ன அதான் அவங்களே ஒத்துக்கிட்டாங்களேப்பா. உங்க கூடையெல்லாம் நல்லா ஒன்னு மண்ணாப் பழகிப் புழங்கலாம்னுதான் நெனைக்கிறாங்கலாம். என்ன சுச்சி அப்பிடித்தான ?”ந்னு கேக்க, “அப்பிடியெல்லாம் இல்லையே...இருந்தாலும் இப்போதைக்கு இத வச்சு ஒப்பேத்திருவோம்”னு “ஆமாங்கையா”ன்னு ஒத்துக்கிட்டாங்க.

அப்பறம் ரியோ & ரம்யா வக்கீல்தனத்தப் பாராட்டுனாரு. ரம்யா “சார் உங்க கேஸ் எதுனா இருந்தா குடுங்க வாதாடுறேன்”னு சொன்னதும்.....”ஓ...இந்த 10 காசு பெறாத கேஸ வாதாடி ஜெயிச்சதால....நீ என் கேஸ நீ வாதாடிருவ அப்பிடித்தான ? இருக்கட்டும்...எங்க வீட்லயே அதுக்கு ஆள் இருக்கானுங்க. நீ உள்ளையே ஆரிய கோவப்படுத்தி அடுத்த கேஸப் பாத்துக்கோ”ன்னுட்டார்.

“என்னையா ஜித்து சோமன் மேல கேஸெல்லாம் குடுத்த போல?”ன்னு கேக்க “ஆமாங்க எல்லார்கிட்டையும் போயி சாரி கேட்டுட்டே இருக்கான்”னு சொல்ல, “உங்கிட்ட போயி கேஸ் என்னன்னு கேட்டேன் பாரு என்னய சொல்லனும்”னு சொல்லிட்டு....”சரி எங்கயாச்சும் எதையாச்சும் பேசுனாத்தான நீ உள்ள இருக்கியா இல்ல எகிறி குதிச்சு வீட்டுக்குப் போயிட்டியான்னு தெரியும். அப்பப்ப அங்ககங்க சரிஞ்சு படுத்துருக்குறதப்போ உன்னய பாக்குறதோட சரி....மத்தபடி ஆளே தெரியமாட்டேங்குற”ன்னு சொன்னதும், “எங்கங்க பேச விடுறானுங்க ? இவனுங்க பேசுறதுக்கே நாள் பத்த மாட்டேங்குது. நம்ம பேசப்போனா பிடிச்சு கடைசில தள்ளி விட்டுடுடுறானுங்க”ன்னு வருத்தப்பட்டாப்ல.

ரியோவ கூப்ட்டு “பரவாயில்லையே நிஷா கேஸுல கொஞ்சம் ராஜதந்திரத்தோட விளையாண்ட போலையே?”ன்னு கேக்க...”ஆமாங்க சுச்சி உள்ள வந்ததும் என்னய சுத்தல்ல விட்டுச்சு. அதான் நிஷாவ நான் ஒண்ணும் கன்டிரோல் பண்ணலன்னு காமிக்கிறதுக்காக அப்டி பண்ணேன்”னு சொன்னதும் சுச்சி இத குற்றச்சாட்டா எடுத்துக்கிட்டு “ஏங்க நீங்கதான சொன்னீங்க சில விஷயங்கள ஆட்டி விடுன்னு (Shake the things little bit up ) அதான் செஞ்சேன்”னு சொல்ல, “இந்தா பாத்தியா ! அடுத்து உன்மேலதான் கேஸ் குடுக்கனும்....ஆட்டி விடப் போறேன்னு சொல்லிட்டுப் போனது நீ அதுக்கு மக்களே சாட்சி”ன்னாப்ல.

அப்பறம் அர்ச்சனா சேவ்னு சொன்னாப்ல. அர்ச்சனாவோ “வாரத்துல 5 நாள் என்னதான் அடிச்சிக்கிட்டாலும், கடிச்சிக்கிட்டாலும் விடிஞ்சா விக்ரமன் சார் படம் மாதிரி ஆகிடுது இந்த வீடு....ஆனா நீங்க வர 2 நாளுதான் நிம்மதி போயி நிஷாகந்தி பேய் நாடகம் மாதிரி மாறிடுது. வெளிய எப்பிடி சண்டைய மட்டும் காமிக்கிறானுங்களா ? இல்ல நாங்க சந்தோஷமா இருக்குறதையும் காட்டுறானுங்களா?”ன்னு கேக்க....”அதெல்லாம் தெரியல”ன்னுட்டாப்ல.

புத்தக அறிமுகம் : ரா.கி. ரங்கராஜனோட அடிமையின் காதல். அப்பறம் ரா.கியப்பத்தி கொஞ்சம் பேசிட்டு. திரும்ப உள்ள வந்தாப்ல.

பில்டரு எந்திரிச்சு “சார் இந்த சைனா செட்டு தொல்ல தாங்க முடியல. பிடிக்கல, பேசாதன்னு பல தடவ நானும் சொல்றேன், அதுவும் சொல்லுது. ஆனா அடுத்த 10வது நிமிஷம் அத மறந்துட்டு என்னயத் தேடி வந்து சண்டை போடுது....இப்பக் கூட ஆரி கூட போராடிட்டு இருக்கும்போது பட்டுன்னு உள்ள வந்து பட்டரையப் போடுது....இம்சை தாங்க முடியல. இதுல ஆரி வேற என்னய பொய் சொல்றேன்...நேர்மை இல்லாதவன்னு திட்டுறான்”னு சொன்னதும்...சனம் “ஏங்க அவன் உடச்சது சேர இல்ல...என்னய ! கொஞ்சம் விட்டிருந்தா அந்த சேரக் கொண்டி அடிச்சுக் கொன்னு அந்த சேர்லய உக்கார வச்சு மூக்குல பஞ்ச விட்டுருப்பான். பாத்து நடந்துக்க சொல்லுங்க. நானும் இல்லேன்னா பின்ன யாரு இருக்கா அவனுக்கு திட்டவும், அடிக்கவும்”னு ஆத்துனாங்க.

“மைக்க கழட்டி எறியுறது, சேரத் தூக்கி அடிக்கிறதெல்லாம் என்ன பழக்கண்டா ? வீணா ஒரு அப்புராணிய அடிச்சு ஆயுள் கைதியாகிடாத....மத்தவன் பேசுறதையும் நிதானமா கேளு”ன்னு டிப் குடுத்தார் ஆண்டவர்.

அப்பறம் கேபி “கேஸ் குடுக்க ஆளே இல்ல. அதான் சும்மா இருந்த சகுனி மேல குடுத்தேன். அதயே அவன் ஒரு கேஸாக்குனது வரலாறு”ன்னு சொல்லுச்சு.

ஆரி சேவ்னு சொன்னதும் “எனக்கு இதுல சந்தோஷமில்ல”ன்னு ஆரம்பிச்சாப்ல. மத்தவனுங்களும் அதான் நெனச்சிருப்பானுங்க. சரி வீட்டு நியாபகம் வந்திருச்சு போலன்னு பாத்தா சம்பந்தமில்லாம “எனக்கு பாலாவ பிடிக்கும். அவனுக்கு ஒன்னுன்னா எனக்கு துடிக்கும். ஆனா அவன் என்னய புரிஞ்சுக்க மாட்டேங்குறான். அவன் நல்லத வெளிய கொண்டு வரவரைக்கும் நான் அவன நோன்டிட்டுதான் இருப்பேன்”னு சொல்லி கண்ணீர் கசிந்துருகினார். நல்ல வேளை “ஐ லவ் திஸ் இடியட்....இலவ் திஸ் லவ்வபிள் இடியட்டு”ன்னு பாட்டெல்லாம் பாடிருவாப்லயோன்னு  பதட்டமா போயிருச்சு.

பில்டரும் எந்திருச்சு. “எனக்கும் அந்தாள பிடிக்குங்க. எங்களுக்குள்ள அக்ரிமெண்ட் கூட இருக்கு. ஆனா அதுக்காக இந்த மாதிரி தெள்ளவாறித்தனம் பண்றதெல்லாம் ஆகாது”ன்னு சொன்னதும்....”சரி அப்ப ரெண்டு பேரும் இருந்து விளையாடுங்க...பில்டரு சேவ்”னு சொன்னார்.

ஆரியும் “சம்முவ நான் திட்டுனது தப்புன்னு சொல்லிட்டீங்க....நான் கால்ல விழுகுறேன்னு சொல்லியிருந்தேன்....ஆனா சுடிதாரப் போட்டுட்டு வந்துட்டேன்...கால் தடுக்கும்”னு தலைய சொறிய....”சரி சரி...கையக் குடுத்து கட்டிப்பிடி”ன்னு சொன்னதும் ஆரி தாவிப்போயி சம்முவ கட்டிப் பிடிச்சுக்கிட்டாப்ல.

“சரி இப்ப யாரு எவிக்டட்னு பாப்போம்”னு பாத்தா சகுனி அவுட்டு. சோமனுக்கு விரிச்ச வலை....ஆனா சிக்குனது மொட்டைத் தலை....! சோமன் ஒன்சைடு லவ்வ வச்சு ஒப்பேத்திட்டான்.

யாரும் பெருசா வருத்தப்படல. செதறு தேங்கா பொறுக்குற மாதிரி எப்பவும் செதறு உண்டியல் பொறுக்க சனம் காத்திருக்க, சகுனி தெளிவா அத ரியோகிட்ட குடுத்துட்டாப்ல. அப்பறம் உண்டியல் காச தூக்கிப் போட்டுட்டு கிளம்பிட்டாப்ல. அர்ச்சனாவுக்கு கடைசி 1 வாரமா தான் சமைச்சத சாப்பிடாம போறாறேன்ற வருத்தம். இந்த கேப்புல ஆரியும், பில்டரும் கட்டிப்பிடிச்சுக்கிட்டானுங்க. இத சைடு கண்ணுல பாத்த சைனாவுக்கு “ஆகா ஒண்னு சேர்ந்துட்டானுங்க. இனி சப்போர்ட்டுக்கு எவங்கிட்ட போறது?”ன்னு ஒரு கலக்கம்.

வெளிய ஆண்டவர்கிட்ட வந்த சகுனி. “நல்லாதான் விளையாண்டேன் ஆனா கடைசியில விளையாட்ட வேடிக்கை பாக்க ஆரம்பிச்சுட்டேன். மிருகம் மேல பூச்சி மாதிரி ஏறி உக்காந்துகிட்டேன்”னு லூசு மாதிரி உளரிட்டு, “உள்ள 3 குரூப்பு இருக்கு”ன்னாப்ல. “அத அங்க சொல்லாம இங்க வந்து சொல்றியே?”ன்னு சொல்லிட்டு “இரு இத அவனுங்கக்கிட்டையே சொல்லு”ன்னு சொல்லி உள்ள காமிச்சாரு.

ஆளாளாலுக்கு ஒரு விஷயத்த சொன்னாப்ல. எப்பவும் சொல்றதுதான்.

பில்டரு – எடுப்பார் கைப்பிள்ளை

சம்மு – கைப்பிள்ளையாக்குபவர்

ஷிவானி – இருவருக்கும் எடுப்பாக இருப்பவர்

அர்ச்சனா  - அதிகாரம் செலுத்துபவர்

சனம் – பாதி அனிதா

அனிதா – பேரைச் சொன்னாலே ஆயுதம் தூக்குபவர்

நிஷா – தன் அடையாளத்தை இழந்தவர்

கேபி – நல்ல பெண்ணாக இருப்பவர்

ஆஜீத் – நல்ல திறமையாளர்

ஜித்து  - நல்ல கவனிப்பாளர்

சோமு – சாக்லேட் பதுக்குபவர்

ரம்யா – டேஞ்சர் பெண்ணாக இருப்பவர்

சுச்சி – சுத்தி விடுபவர்

ரியோ – குரூப்பிஸம் இல்லையென்று குரூப்புக்குள் இருந்துகொண்டே சொல்லி, இன்னும் 2 குரூப்பை உருவாக்கியவர்

இப்பிடி சொல்லிட்டு...குறும்படம் பாத்துட்டுப் போயிட்டார். இந்த வாரம் ஹமாம் சோப் ஆரி ப்ரோ கேப்டன்ஸி வாரம்.....அனல் பறக்கும்னு எதிர்பார்ப்போம்.


 

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)