பிக்பாஸ் – 4 : நாள் - 50 (23.11.20)
49வது நாள் தொடர்ச்சி....
நைட்டு பாலா,
ஆரி, சனம், அன்னப்போஸ்டு வெளிய உக்காந்திருக்க “விட்டா அன்னை அர்ச்சனா குரூப்பு ரியோவ
இடுப்புல தூக்கி வச்சுகிட்டு ஓடிப்போயி கேப்டன் டாஸ்க்குல ஜெயிக்க வைப்பானுங்க போல”ன்னு
சொன்னதும், ஏழரையில இருந்த சனி ஆரி வாயில வசமா வந்து உக்காந்துச்சு “உண்மைய சொல்லனும்னா
அவன் ஜெயிச்சிட்டு போகட்டும்னு நாந்தான் விட்டுக்குடுத்தேன்....பையன் நல்லா வரட்டும்ன்ற
எண்ணந்தான் வேற என்ன....நமக்கும் தினம் ஒரு நல்லது பண்ணலேன்னா படுத்ததும் தூக்கம் வரமாட்டேங்குது
பாரு”ன்னு தற்புகழ்ச்சி தகர டப்பாவ அடிக்க....பில்டரு “ஆனாலும் இந்த குரூப்பு அரசியல
விடமாட்டேன்”னு வெறப்பா உள்ள போயிட்டான்.
50வது நாள்
“என் பேரு மீனா
குமாரி” பாட்டு அலாரம். வ.வா சங்க ஆளுக ஷிவானி, ரம்யா & சம்மு 3 பேரும் உருப்படியா
பண்ற ஒரே காரியம் சிறப்பா ஆடுறதுதான். 50 நாள்ல இதத்தான் நான் கண்டுபுடிச்சேன். மத்தவனுங்களும்
ஒரு மாதிரியா மேனேஜ் பண்ணானுங்க இன்னைக்கு.
“சரி வாங்கடா
கன்ஃபெஷன் ரூமுக்கு”ன்னு நாமினேஷனுக்கு கூப்ட்டாப்ல பிக்கி. எல்லாரும் வரிசையா போயி
நாமிநேஷன் பண்ண, ஆரி ப்ரோ உள்ள போறப்ப ஜித்து பாய் “யோவ் உள்ள போயி புறநானூறு பாடிட்டு
இருக்காம போனோமா வந்தோமான்னு இரு.... இல்ல கவுண்டவுன போட்டுருவேன்”னு சொல்ல, ஆரி ப்ரோவுக்கு
ஆங்கிரி தலைக்கேறி “ஏண்டா எனக்கும் அவருக்கும் ஆயிரம் இருக்கும்...உங்களுக்கென்னடா
வந்துச்சு ? என்னய மட்டும் சொல்றீங்க, கார்னர் பண்றீங்க, கட்லட் பண்றீங்க”ன்னு ஆரம்பிச்சாரு.
ஜித்து பாய்....”யப்பா டேய் தெரியாம சொல்லிட்டேன். நீ இங்க ஆத்துறத நிப்பாட்டு...உள்ள
போயிட்டு நீ வராமயே இருந்தாலும் சரிதான்”னு சொல்ல, கோவமா உள்ள போனாரு ஆரி ப்ரோ.
உள்ள போயி கோவத்துல
யார நாமினேட் பண்றதுன்றத கூட மறந்துட்டாப்லன்னா பாத்துக்கோங்க. “யோவ் லேட்டாச்சு எந்திரிச்சு
போ”ன்னு பிக்கிக்கும் சொல்றதுக்கும் பயம்....அப்பறம் இதுக்கு வெளக்கம் சொல்றேன்னு
1 மணி நேரம் எடுத்துகிட்டா என்ன பண்றது ? ஒரு வழியா நாமிநேஷன சொல்லிட்டு வெளிய வந்தாப்ல.
வெளிய வந்ததும்
இந்த தடவையும் பிக்கி உள்ள சொன்ன காரணங்கள வெளிய வத்தி வச்சாப்ல, “ராஜா வீட்டு கண்ணுக்குட்டி,
பிரேக் த ரூல்ஸ், ஒருத்தருக்காக நாலஞ்சு பேரு விளையாடுறாங்க, பர்சனல் விஷயத்த டாஸ்க்குல
காமிக்கிறாரு”...இப்பிடி வரிசையா வாய்ப்பாடு மாதிரி ஒப்பிச்சு விட்டாப்ல.
சோமு, பில்டரு,
ஆரி ப்ரோ, ஜித்து பாய், அன்னப்போஸ்டு, சைனா, நிஷா இவங்கதான் நாமினேஷன் லிஸ்டு.
பின்ன ஆரி ப்ரோ
எந்திரிச்சு “ஆங்கிரியாகிட்டேன் ஆரி.... அதுக்காக ஜித்து பாய் ஐ ஆம் வெரி சாரி”ன்னு
சொல்லி, “ஆனா யாரையும் அப்பிடி இடைல புகுந்து கலாய்க்காதீங்க”ன்னு சொல்லி வாய மூடல....
பில்டரு : யோவ்..அத
மொதல நீ பண்ணுயா ? எவன் வீட்ல சண்டைனாலும் சொம்பத் தூக்கிட்டு போற...போன இடத்துல திட்டு
வாங்கிட்டு நேர்மைக்கும் ,நீதிக்கும் மரியாதை இல்லேன்னு கேமராகிட்ட பொலம்புற....
ஆரி : அண்ணன
பாத்தாடா அப்பிடி சொல்லிட்ட ? அண்ணன் அப்பிடி பண்ணுவேனா டா ?
பில்டரு : ஆமா
பண்ணுவ, நேத்து நைட்டு கூட ரியோவுக்கு நீதான் விட்டுகுடுத்தேன்னு பெருமை பீத்துனியே...ஏன்
விட்டுகுடுக்கனும் அப்பறம் அத ஏன் சொல்லிகாட்டனும் ? சும்மா போயா...
ரம்யா உள்ள
வந்து...
ரம்யா : எது
விட்டுக்குடுத்தியா ? ஏண்டா பில்டரு விட்டுகுடுத்து சம்மு ஜெயிச்சதுக்கும், நான் ஆஜித்துக்கு
பாஸ் குடுத்தப்பையும் நேர்மைன்னா ஹமாம், ஹமாம்னா ஆரின்னு பாடம் எடுத்த பயதான நீ ? இன்னைக்கு
என்னடா சந்தூர் சோப்புக்கு மாறிட்டியா ? இந்தா சம்மு என்னன்னு கேளு...
இந்த கலவரத்துல....
அன்னை : என்னடா
ரியோ அவன் என்னமோ உனக்கு விட்டுகுடுத்தேன்றான் ?
ரியோ : முடிஞ்சதும்
அவரு என்னய கட்டிப்பிடிச்சு கள்ளத்தனமா சிரிச்சாரு...என்னங்க விட்டுக்குடுதீங்களான்னு
கேட்டேன்....இன்னும் நல்லா சிரிச்சாரு...அப்பப் புரியல...இப்பப் புரியுது....
அன்னை : என்னடா
புரியுது எரியுதுன்னு....இப்ப எல்லாரும் உன்னய போலி கேப்டன்னு சொல்லிடுவானுங்களே ?
ம்ம்ம்ம்ம்.....சரி இன்னைக்கு பொங்கல்ல முந்திரி பருப்ப அதிகமா போட்டு இவனுங்கள வழிக்கு
கொண்டு வந்துடுறேன்....
மறுபடியும்......
ஆரி : ஆங்....அப்போ
டாஸ்க்குல எல்லார் உடம்புலையும் ஸ்கேல் பட்டுச்சு...அத யாரு சொன்னா ?
பில்டரு : நான்
சொன்னேன்....
சைனா : நான்
சொன்னேன்....
அர்ச்சனா :
நான் சொன்னேன்....
நிஷா : நான்
சொன்னேன்....
பிக்பாஸ் :
நான் சொன்னேன்....
சுச்சி (வீய்லயிருந்து)
: நானும் சொன்னேன்....
ஆரி : (MV
: என்ன எல்லாரும் சொன்னேன்னு சொல்றானுங்க? எனக்கு கேக்கவே இல்லையேடா...) சரி போங்க
நான் விட்டு குடுக்கலைன்னு வச்சுக்கோங்க...
பில்டரு : யோவ்
அது என் டயலாக்கு....நீ ஏன் விட்டுகுடுத்த அத சொல்லு....
ஆரி : விட்டுகுடுத்தது
தப்பில்ல....அத நல்லவன்னு நம்பி உங்கிட்ட சொன்னேன் பாரு....என்னய சொல்லனும்
ரம்யா : யோவ்
நீ எதுக்கும் நேர்மைக்கு ஸ்பெல்லிங் எழுதி காட்டு....எனக்கு உன் மேல நம்பிக்கை இல்ல....
ஆரி : (கண்ணுக்குத்
தெரியாத ஒரு கை அவர் கண்ணத்துல........) பளார்.....பளார்......பளார் !
எல்லாரும் என்ன
மூட்ல இருந்தானுங்களோ தெரியல....நைட் ஷோ சினிமா பாத்துட்டு வரவன ஏரியா டாகீஸ் வட்டமா
சுத்துன மாதிரி வளைச்சுக்கிட்டானுங்க.....ஆனாலும் அசரலையே....! இதுவரை வைஜெயந்தி மாலா
மாதிரி சிரிச்சிட்டே சுத்திட்டு இருந்த ரம்யா இன்னைக்கு வைஜெயந்தி ஐ.பி.எஸ் அவதாரமா
மாறுனது...செம்ம அதிரடியா இருந்துச்சு....! பாயிண்ட் எதுவும் கிடைக்காம அவர் கைய தட்டி
விட்டதுக்கு ரம்யாவ “இப்ப எதுக்கு என் கையத் தட்டி விட்டீங்க..... ?எதுக்கு என் கையத்
தட்டி விட்டீங்க?”ன்னு கேட்டுக்கிட்டே இருந்தார் பாவம். ரம்யாவோ “அதுக்கு ஒரு சாரிய
வச்சுக்கோ”ன்னு லெஃப்ட்ல டீல் பண்ணுச்சு.
இத ஆரம்பிச்சு
விட்ட பில்டர் சைலெண்ட் ஆகிட்டாலும் மத்த எல்லாரும் வயலண்ட் ஆகிட்டானுங்க. பின்ன அன்னை
அர்ச்சனா முன்னாடி வந்து....”10 வருட இடைவிடாத பயிற்சியின் காரணமாக, தனது கூரிய புத்தி....அர்ச்சனா
சித்தியின் பக்கபலத்துடன்....ரியோ தனது திறமையால் வென்ற டாஸ்க் இது. விட்டுக்குடுத்தால்
கட்டுப்படாத ரியோவை யாரும் அண்டர் எஸ்டிமேட் செய்யக்கூடாது. ஆரி விட்டுத்தான் குடுத்தார்....நாங்கள்
ரியோவிற்கு உற்சாகத்தை விடாமல் கொடுத்தோம். சோ ஜெயிப்பு நியாயமானதே”ன்னு அன்னை அர்ச்சனா
தீர்மானம் போட்டாங்க.
வெளிய வந்த
பில்டரு அங்க உக்காந்திருந்த சைனா, அன்னப்போஸ்டு, ஜித்து பாய், ரம்யாகிட்ட “இவ்வளவு
நாள் மாட்டல இன்னைக்கு மாட்டிக்கிட்டாரு பாவம்”னு சொன்னத அங்க இருந்து கேட்ட ஆரி ப்ரோ....”டேய்
இன்னும் என்னதாண்டா உனக்கு பிரச்சனை?”ன்னு கேக்க....”ஏங்க நான் இங்க பேசிட்டு இருக்கேங்க”ன்னு
சொன்னன் பில்டரு. பின்ன ஜித்து பாய், “யோவ் நீ எப்ப எந்த மூட்ல இருக்கேன்னு எழுதிபோடுய்யா...இதே
கமெடிய நேத்து சொன்னேன் சிரிச்ச...இன்னைக்கு சொன்னா பொறுப்பா பேசுங்கன்னு கோவப்படுற...என்னய்யா
உன்னோட பெரிய ரோதனை”ன்னு சொல்ல, பில்டரு “கேட்டா கேரட்டு ஆரஞ்சு கலர்ல இருக்குறதுக்கு
அதோட நேர்மைதான் காரணம் என்னய மாதிரின்னு எகடாசியா பேசுவான்”னு சொன்னதும் டென்ஷனான
ஆரி ப்ரோ கைய நீட்டி “ரொம்ப பேசாத”ன்னு சொல்ல, “கைய நீட்டாத அப்பறம் நான் வேற நீட்டுவேன்”னு
சொல்லிட்டான் பில்டரு. ஆரி ப்ரோ இன்னும் டென்ஷனாகி
“ஆம்பளையா இருந்தா நீட்டுடா”ன்னு வார்த்தைய விட....ரைட்டு இந்த பூமி ரத்தம் பாக்கப்
போகுதுன்னு நெனச்சப்ப சம்மு வந்து தடுத்து விட்டாங்க. ஆனா பில்டர ஒரு ரெண்டு நாள் சும்மா
இருக்க வைக்குறது பெரிய பாடாதான் இருக்கு. அதையே ஒரு டாஸ்க்கா குடுக்கலாம்.
அன்னப்போஸ்டு
சைனாகிட்ட...”அவரு நம்மகிட்ட நம்பி சொன்னத வெளிய சொன்னதுல ஒண்ணும் தப்பில்லையே?”ன்னு
கேக்க, “மொத்தம் 10 கேமரா இருக்கு....அத வச்சுகிட்டு எத நம்பி யாரு எத சொல்றது ? அதெல்லாம்
இங்க செல்லாது”ன்னு சேக்கிழார் செய்யுள் மாதிரி செவ்வனே சொல்லுச்சு சைனா....
பின்ன பில்டரு
இத அன்னைகிட்ட பெட் ரூமுல சொல்லிட்டு இருந்தப்ப மறுபடியும் ஆரி ப்ரோ வந்து “நீ சொன்னதுக்குதான்
நானும் சொன்னேன்.....மறுபடியும் சொல்றேன் ஆம்பளையா இருந்தா காட்டு”ன்னு சொன்னதுக்கு
பில்டரு தரையில உக்காந்து காலத்தூக்கி காட்டி “இப்ப என்ன பண்ணுவ?”ன்னுட்டான். அப்பறம்
ரியோ எங்க இருந்தோ வந்து “வீ அர் இன் டிஸ்கவரி சேனல் சாரி நேஷனல் சேனல்...அதனால டீசன்ஸி
மெயிண்டெயின் பண்ணுங்க”ன்னு கத்திட்டு போனான்.
அப்பறம் பில்டருக்குள்ள
இருந்த அந்த பாலகன் பாலா முழிச்சுகிட்டான். ஆரிகிட்ட போயி “நான் சொன்னதெல்லாம் உண்மை
அதுக்கெல்லாம் இல்ல ஆனா காலத்தூக்கி காட்டுனதுக்கு சாரி....வேணும்னா காலுல விழுகுறேன்”னு
சொல்லி கால்ல விழுந்துட்டு போயிட்டான்....”அய்யய்யோ கால்ல விழுந்தட்டான்”னு பதட்டப்பட்டு
“அப்ப நானும் சாரி”ன்னார் ஆரி.
திரும்ப கக்கூஸுக்குள்ள
இருந்த பில்டர்கிட்ட “உன் மேல இருந்த மரியாதைய கெடுத்துக்கிட்ட இனிமே அத நீ சம்பாதிக்க
முடியாது”ன்னு சொன்னதும்.....”அத சம்பாரிச்சு இந்த பிக்பாஸ் வீட்டையா வாங்க முடியும்...போயா”ன்னு
சொல்லிட்டான். “நீ பண்ண ட்ராமாவ யாரும் நம்ப மாட்டாங்க”ன்னு ஆரி சொல்ல.....”எப்பிடி
நீ பண்ண ட்ராமாவ நாங்க நம்பாத மாதிரியா?”ன்னு கேட்டுட்டு போயிட்டான்.
அடுத்து எவிக்ஸன்
டாப்பில் பாஸ். நாமிநேஷன் ஆனவங்கள்ல ஒருத்தருக்கு அது கிடைக்கும். அது கிடைச்சவங்க
அவங்களுக்கு பதிலா இன்னொரு நாமினேட் ஆகாம எஸ்கேப் ஆன ஆள நாமினேட் பண்ணலாம். பில்டர்
ஆரம்பத்துலேயே இது எனக்கு வேணாம்னுட்டான். “என்னடா இன்னைக்கு இவன் அடிக்கிறது பூராம்
பவுண்டிரியா இருக்கே?”ன்னு நெனச்சு ஆரி ப்ரோவும் “இது எனக்கும் வேணாம்”னு ஒரு டபுள்
தட்டுனார். ஒவ்வொருத்தரா வேணாம்னு சொல்ல நிஷா, அன்னப்போஸ்டு, சனம் வந்து நின்னாங்க.
நிஷா “எனக்கு மக்கள் ஆதரவு இருக்கு ஆனாலும் இது எனக்கு வேணும்”னு கேக்க, நேரம் இழுத்துட்டே
போனதால பிக்கி கூப்ட்டு “மெஜாரிட்டி பாத்து குடுங்க”ன்னு சொல்ல, பில்டரு அவன் ஓட்டு
யாருக்கும் இல்லேன்னுட்டான். ஆளுக்கு 1 ஓட்டுல இருந்தப்ப அனிதா “நேரம் இழுக்குது அதுனால
நிஷாக்கு தரேன்”னு சொல்ல, “என்ன எனக்கு பிச்சை போடுறியா?”ன்னு நிஷா பொங்க...”போங்கடி
போந்தா கோழிகளா”ன்னு டென்ஷனாகிட்டாப்ல ஜித்து பாய். “இத மொதயே சொல்லியிருந்தா இன்னேரம்
முடிஞ்சிருக்கும்ல”ன்னு ஜித்து பாய் கோவப்பட, கடைசியா அன்னப்போஸ்டு வாங்கிருச்சு. இடையில
“இத நான் எடுத்துக்குறேன்....எனக்கு குடுங்கடா”ன்னு சொன்ன சைனாவுக்கு கிடைச்சிருக்கலாம்
இது.
அப்பறம் அன்னபோஸ்டு
அனைவரும் எதிர்பாத்தது போல அதுக்கு பதிலா சம்முவ நாமினேட் பண்ணுச்சு. அவ்வளவுதான்.
நிவர் புயல் தொடங்கிடுச்சு....வீட்டுக்குள்ளையும்....!
Comments
Post a Comment