பிக்பாஸ் – 4 - நாள் - 56 (29.11.20)

 வெள்ள உடை வேந்தரா வந்தார் ஆண்டவர். “நல்லவரா ? கெட்டவரா?”ன்னு எவனக் கேட்டாலும் தெரியலுன்னுதான் சொல்லுவான். அதையே அடுத்தவன் நல்லவனா? கெட்டவனா?ன்னு கேட்டா நல்லவனுக்கு கெட்டவன் நல்லவன், கெட்டவனுக்கு நல்லவன் கெட்டவன்....என்ன புரியலையா ? நான் புரியுற மாதிரி சொன்னாலும் புரியலன்னுதான் சொல்லப் போறீங்க.....அதனால புரியாத மாதிரியே சொல்லிட்டேன்”னு சர்காஸம் பண்ணார்.

உள்ள வந்ததும் “ஒரு கேரக்டர நல்லா பண்ணா நம்மள அந்த கேரக்டர் பேர சொல்லிதான் கூப்டுவானுங்க. என்னடா நம்மதான நடிச்சோம் நம்ம பேரு வரலன்னு நெனைப்போம்....கொஞ்ச நாள் கழிச்சு அந்த கேரக்டராவே வாழ்ந்திருப்போம். ஆனா நம்ம பேர சொல்லி நல்லா பண்ணியிருக்கான்னு சொல்லுவானுங்க. இது அப்டித்தான் இருக்கும்....நாம நமக்கு என்ன இமேஜ் வரணும்னு , மாத்தனும்னு பாத்துக்கிட்டே இருந்தா பொழுது ஓடிப்போயிரும். அதனால உங்க உண்மையான கேரக்டர் எதுவோ அத வெளிய கொண்டுவந்தாலே போதும்”னு இன்னைக்கும் ரியோவுக்குதான் சொன்னார்.

பின்ன கலீஜ் மேட்டருக்கு வந்தார். “என்ன சனம் எப்பவும் போல நீதான் வாங்கிகட்டுன போல....என்ன சங்கதி?”ன்னு கேக்க....”ஃபோன் பண்ணி 2 கேள்விதாங்க கேட்டேன். கலீஜ் அது இதுன்னு அசிங்க அசிங்கமா கேக்குறானுங்க. நான் வாயத்தொறந்தாலே வரிசையா கெட்டவார்த்தையிலயே திட்ட ரெடியா இருக்கானுங்க. அது எனக்கு புரிஞ்சாலும் பரவாயில்ல.....மொத வாரம் சுரேஷ் திட்டுனதுக்கே இன்னைக்கு காலையில தான் அர்த்தம் புரிஞ்சுது. ஃபோன் டாஸ்க்குல கடைசி வரைக்கும் பதில் மட்டும் வரல”ன்னு வில்லுப்பாட்டு பாட....

ஆண்டவர் “கலீஜ்னா மனித ஐட்டம்”னு விளக்கி. “என்ன சம்மு இதெல்லாம் தெரிஞ்சுதான் செய்யுறியா?”ன்னு கேட்டதுக்கு “அய்ய நான் அவ நச நசன்னும், நொய்யி நொய்யின்னும் பேசுற அழகத்தான் அப்பிடி சொன்னேன்”னு சமாளிக்க......”அப்பிடி சொல்லியிருந்தா பரவாயில்ல. நான் சாரி கேட்டுக்கிறேன்”னு சைனா சொல்ல, அத ஏத்துக்கிட்டாங்க சம்மு.

“என் முன்னாடி மட்டும் பொசுக் பொசுக்குன்னு சாரி கேக்குறீங்க. அதுவும் நான் சொல்றதுக்கு முன்னாடியே.....ஆனா உண்மையா எவனும் அப்பிடி சொல்லிக்கிற  மாதிரி தெரியல.....! பில்டரு கூட கால்ல விழுந்தான் அதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு ? என்ன ஆரி ப்ரோ?”ன்னு கேக்க....அவரு வழக்கம் போல “சம்மு கேப்டனானதுல பில்டரோட பங்கு”ன்னு ஆரம்பிக்க.....”ரைட்டு”ன்னு சொல்லிக்கிட்டாரு ஆண்டவர்.

“சரி வளர்ப்பு மேட்டருக்கு வருவோம். என்ன சம்மு?”ன்னு கேக்க....சம்முவோ “ஆமா தெரிஞ்சுதான் சொன்னேன். அவன் என்னோட தாய்மையப் பத்தி தப்பா பேசுனான். நானும் அவன் வளார்ப்பப் பத்தி பேசுனேன்”னு சொல்ல “சரி படம் பாப்போம்”னு இந்த சீசனோட முதல் குறும்படம் காட்டுனார்.

ஆரி ஒரு கம்பாரிஷனுக்காக சொன்னத சம்மு கொஞ்சம் பர்சனலா எடுத்துக்கிட்டாங்க போல....! இதுல ஊடால மாட்டுனது அன்னைதான். ஆரி ப்ரோவுக்கு மெண்டல் பிளாக்கேஜ் இருக்குன்னு சொன்னத எல்லாரும் கேட்டுக்கிட்டானுங்க. உடனே ஜெர்க்காகி வாண்டடா உள்ள வந்து “சார்....பாத்தீங்களா நானும் கூட சொல்லியிருக்கேன். ஆரி சொன்னதுல ஒரு பிளாக்கேஜ் இருக்கு. சோ அது அப்பிடி கூட இல்லாம இருக்கலாம்னு நான் சொல்ல வந்தத கவனிச்சீங்களா?”ன்னு ஒப்பேத்துனாங்க. “சரி நீ ஆரி அப்பிடி சொல்ல வரலன்னு சொன்னியா?”ன்னு கேட்டதுக்கு “அததான் நான் ஒரு மாதிரி.....ரெண்டு மாதிரி.....அப்பக் கூட”ன்னு டைப்படிக்க, ஆண்டவரே “ சரி விடு, சம்மு... ஆரி தாய்மைய பத்தி எதுவும் தப்பா சொல்லல”ன்னு சொல்ல, சம்மு அத பெருசா ஏத்துக்கல. அப்பறம் ஆண்ட்வர் திரும்பவும் “இல்ல உண்மையாவே அப்பிடி சொல்லியிருந்தா இன்னைக்கு ஒரு விஸ்வரூபம் ஃபைட் சீன் ஒண்ணு பாத்துருப்பீங்க. ஆனா அவன் சொல்லல அதனால தப்பிச்சுட்டான்”னு சொன்னாரு.

பின்ன மறுபடியும் வளர்ப்பு பத்தி ஆரம்பிச்சு....”உங்க மொள்ளமாரித்தனத்துக்கு வீட்ல உள்ள ஆளுகள இழுக்காதீங்கடா....! உங்களுக்குள்ள கேவலமா திட்டிக்கோங்க. வளர்ப்பையெல்லாம் இழுக்காதீங்க”ன்னு சம்முவுக்கும் அட்வைஸ் பண்ணார்.

பிரேக்குல ஆரி ப்ரோவும், சம்முவும் கட்டிப்பிடிச்சு சமாதானமானாங்க. அன்னை “ஆரி ப்ரோ ! எப்பிடியும் சம்மு இன்னைக்கு காலியாகிடும். இடம் ஒண்ணு காலியா இருக்கு. ஓகேன்னா நைட்டுக்கா லவ் பெட்டு பக்கம் வாங்க அட்மிஷன போட்டு அன்பு டானிக் தரேன். கைல வேல் பிரதர்ஸ்னு கம்பேனி லோகோவ பச்ச குத்திக்கோங்க. அப்பறம் எந்தப் பிரச்சனைன்னாலும் குரூப்பு வந்து நிக்கும்”னு உறுப்பினர் சேர்க்கைக்கு முயற்சி பண்ணிட்டு இருந்தாங்க.

“கேபி – சோமு கால் & ரம்யா – ஜித்து பாய் கால் ரெண்டும் நல்லா இருந்துச்சு. ஆனா ரம்யா விடாம கிண்டுனது இன்னும் நல்லா இருந்துச்சு. எங்க ரம்யா நீ எல்லாருக்கும் ஒரு எவிக்ஷன் காரணம் சொல்லு?”ன்னு சொன்னதுக்கு 2 பேருக்கு சொல்லிட்டு கேபிக்கு சொல்ல யோசிக்க, “பாத்தியா இப்ப கேள்வி கேக்குறது ஈசி ஆனா பதில் சொல்றது எவ்வளவு கஷ்டம்”னு சொல்லி கலவரப்படுத்துனார். சோமு சேவ்ட்.

“சரி இப்ப ரியோ கேப்டன்சிக்கு எல்லாரும் ஸ்டார் ரேட்டிங் குடுங்க”ன்னு சொன்னதும் பெரும்பாலும் எல்லாரும் 3 குடுத்தானுங்க. ரம்யா “ ஒர்ஸ்ட் பர்பார்மென்ஸ் வாங்குனவனுக்கு முட்டை குடுக்குறதுதான் லாஜிக் சோ அவனுக்கு ஒண்ணுமில்ல”ன்னாங்க. சைனா மட்டும் “இவன் என்னய அசிங்க அசிங்கமா திட்டுவேன்னுல்லாம் சொன்னான். என்னய தூங்க விடல, ரூல ஃபாலோ பண்ணல, சட்டைக்கு பட்டன் தைக்கல அப்பிடி இப்பிடின்னு சொல்லி, பில்டர வேற என்னமோ சொல்லிட்டான் காலையில”ன்னு கோர்த்து விட....

ரியோவுக்கு 5 ஸ்டார் குடுத்து ஆச்சர்யப்படுத்துன பில்டர், “நாங்க பேசி சமாதானமாகிட்டோம். அதுக்கான அடையாளந்தான் இது. அப்பறம் சைனா சொன்ன மாதிரி எனக்கும், ரியோவுக்கும் காலையில ஒண்ணும் பிரச்சனையில்ல”ன்னு சொல்லி எல்லாருக்கும் முன்னாடி ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சுக்கிட்டானுங்க......இதப் பாத்ததும் சைனா “அடப் பாவி பில்டரு பொதுவுல போட்டு கவுத்திட்டியே....இரு நாளைக்கு உங்கிட்ட ஒரு பஞ்சாயத்த கூட்டிருவோம்”னு ப்ளான் பண்ண ஆரம்பிச்சுடுச்சு.

இதுல அந்த வீடு கூட்டுற மேட்டர்ல அன்னப்போஸ்டு வேற பிராது வைக்க. ஒரே அக்கப்போரு. பின்ன ரியோ “சார் நான் கொஞ்சம் நக்கலா பேசுற ஆளுதான். ஆனா நான் கேக்குற சாரியெல்லாம் உண்மையானதுதான்”னு விளக்குனான்.

சைனாவ “கிளாஸுக்கு நடுவுல ஒன் பாத்ரூம் போற மாதிரி பொழுதுக்கும் கையத் தூக்குவ இப்ப என்ன சைலண்டா இருக்க?”ன்னு கேட்டுட்டு “நீயும் தப்பிச்சுட்ட”ன்னார்.

அப்பறம் வண்ணநிலவன் எழுதுன எஸ்தர் சிறுகதித் தொகுப்ப பரிந்துரை செஞ்சார்.

இப்ப எவிக்ஷன். நிஷா சேவ்டுன்னு சொன்னதும் அன்னையும், நிஷாவும் கட்டிப்பிடிச்சு குலுங்கி “அன்பு ஜெயிச்சிருச்சு.....நாளைக்கு அன்புக்கு பொங்கல் வச்சு....ரியோவுக்கு மொட்டை போட்டுருவோம்”னு பேசிக்கிட்டாங்க.

சம்மு அவுட். பல பேரால ஏத்துக்க முடியாத முடிவு. ஆரியோட அவெஞ்சர்ஸ் டீமத் தவிர மத்த எல்லாருமே உண்மையாவே வருத்தப்பட்டாங்க. சம்மு வெளிய போற வரைக்கும் ஆரி ப்ரோ கொஞ்சம் மிகையாவே திரிஞ்சாப்ல. பில்டரு அழுகை எனும் அருவியில் குளிக்க ஆரம்பிச்சுட்டான். ஷிவானி மூக்கு ரொம்ப நாளாய்க்கப்பறம் வெடச்சுச்சு. எல்லாருக்குமே உண்மையான வருத்தம் இருந்தது. சம்மு உண்டியல் காச ஆஜீத்துக்கு குடுத்துட்டு போனாங்க. சைனா உடஞ்ச உண்டியல் சில்லுக்கு அடிச்சிக்காதது ஆச்சர்யம்.

அன்னப்போஸ்டு ஆரி கிட்ட “இதுல எனக்கு எதும் டேமஜ் இல்லையே?”ன்னு கேக்க ஆரி ப்ரோ “நீ பண்ண காரியத்துக்கு வெளிய உனக்கு நான் சிலையே வப்பேன். கேமுல இதெல்லாம் சகஜமப்பா”ன்னு சந்தோஷத்துல இருந்தாப்ல. கூடவே “என்னைக்கு அந்த கேப்டன்சி டாஸ்க்குல குறுக்கு வழியில ஜெயிச்சிச்சோ அப்பவே எனக்கு தெரியும் அது வெளிய போயிரும்”னு வெள்ளியங்கிரி சித்தர் மாதிரி சொல்லிட்டு இருந்தார்.

வெளிய ஆண்டவர் கிட்ட வந்ததும் எல்லாரையும் பத்தி நல்லவிதமா சொல்லிட்டு. “விளையாண்டு வெளிய போகாம....டாப்பில் கார்டுல வெளிய போறது உண்மையாவே வருத்தம்”னு சொன்னாங்க. அப்பறம் ஆண்டவர் மறுபடியும் அவங்க தாய்மைக்கு ஒரு பங்கமும் வரலன்னு சொல்லி வாழ்த்தி அனுப்புனார்.

சம்மு போனதும் அன்னை, நிஷா, ஆரி ப்ரோ 3 பேரும் வாக்கிங்ல இருக்க “சம்மு அழுதது எனக்கு தெரியாது...நீ சொல்லியிருந்தா நான் அப்பவே அவங்ககிட்ட பேசியிருப்பேன்”னு சொல்லிட்டு, “உள்ள எல்லாருந்தான் இருந்தோம். ஆம்பளைகள விடு....சனம் கரெக்டா கேட்டுட்டு சொல்லியிருக்கலாம். அது ரெண்டு பேரு மேலையும் தப்புன்னு சொன்னதாலதான் நான் மன்னிப்பு கேட்டேன். ரம்யாவும் ஏத்தி விட்டிருச்சு. அது விஷமா இருக்கு”ன்னு ஆரி அவர் அடுத்த டார்கெட்ட வெளிய டிக்லேர் பண்ணார்.

சைனா & அன்னப்போஸ்டு வெளிய உக்காந்து, “இந்த வாரம் கமல் சார் நல்லா பண்ணாரு. எனக்கு சந்தோஷம்ப்பா”ன்னு பேசிகிட்டு இருந்துச்சுங்க. அப்பறம் பாலா வந்ததும் “சம்மு போனதுக்கு நாந்தான் காரணம். ஆனா நான் பண்ணது சரி....மக்களோட எண்ணமும், உள்ள இருக்குறவங்களோட எண்ணமும் ஒண்ணா இருக்கான்னு ஆராய்ச்சி பண்ணேன்....ஆராய்ச்சி சக்சஸ் ஆனா சம்மு ஃபெயிலியர்”னு விஞ்ஞானி விஜயசாந்தி மாதிரி பேச....பில்டர் ரொம்ப சாதாரணாமா “கேமுன்னா அப்பிடிதான்”னு சொல்ல.....”ஆமா ஆமா கேமுன்னா அப்பிடித்தான்”ன்னு அத பிடிச்சுகிச்சு அன்னப்போஸ்டு.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)