பிக்பாஸ் – 4 : நாள் - 31 (04.11.20)
31வது நாள்
“தகிடுதத்தோம்”
பாட்டு அலாரம். சகுனி சுரேஷ் தான் இன்னைக்கு ஆட்டங்காட்டிட்டு இருந்தாப்ல. பில்டர எழுப்பப்
போன சம்முவ “அவுங்க தூங்கும் போது எழுப்புனா அவுகளுக்குப் பிடிக்காது”ன்னு சொல்லி இழுத்துட்டுப்
போனாங்க ஷிவானி. அடுத்த கட்டுல பாத்தா பில்டரு இதுக கூட ஆடிட்டு இருந்தான்.
கண்டென்ட் இல்லாத
காரணத்துனால காலை நேர டாஸ்க்கயெல்லாம் காமிக்க ஆரம்பிச்சுட்டானுங்க. சுரேஷு எல்லாருக்கும்
கை ஜோசியம் பாக்கனுமாம். “எனக்கு இதுல நம்பிக்கை இல்லை...இது பகுத்தறிவு இல்ல...இருந்தாலும்
டாஸ்க்குக்காக பண்றேன்”னு சொன்னது, ஆண்டவர் கிட்ட அவரும் ஒரு பெரியார் விருது வாங்கிடலாம்ன்ற
காரணம் போல.
“எப்பிடியும்
இந்த வாரம் வெளிய போயிடுவ”ன்னு சோமனுக்கு ரொம்ப சரியா ஜோசியம் சொன்னாரு.
நிஷாவுக்கு
“உன் குரூப்பாலதான் உனக்கு குஷ்டம்....ச்சீ கஷ்டம். அவவனுங்களுக்கு அடிமையா இருக்காம
அப்ப அப்ப வெளையாடப் பாரு”ன்னு சொன்னாப்ல
அன்னப்போஸ்ட
கொஞ்சம் ஐஸ் வச்சுதான் பேசுனாப்ல. “கலையம்சம் கொண்ட கை....காலையில காபி போடுற கை....நாட்டைக்காக்கும்
கை, வீட்டைக்காக்கும் கை....இந்தக் கை நாட்டின் நம்பிக்கை”ன்னு எம்ஜியார் மாதிரி கையத்
தூக்கி பாட்டு மட்டுந்தான் பாடல. மத்தபடி நல்லா பாராட்டி அனுப்புனாரு.
ரம்யா ஒரு டேஞ்சர்
டயபாலிக்னு சொல்லிட்டு...நல்ல டேஞ்சர்னாப்ல. டேஞ்சர்ல என்னடா நல்லது கெட்டது ? என்னமோ
சொல்லனுமேன்னு சொல்லி அதையும் அனுப்பி விட்டாப்ல.
ஆனா ஜித்து
பாய் சும்மா உக்காந்து கையக் காட்டுற இந்த டாஸ்க்குக்கு கூட வரல. எனக்கென்ன தோணுதுன்னா
பிக்பாஸ எப்பிடி நாம வெளிய இருந்து பாக்குறோமோ....அதே மாதிரி உள்ள போயி லைவா பாக்கனும்னு
நெனச்ச ஒரு பிக்பாஸ் பரம விசிறிதான் நம்ம ஜித்து பாய். உள்ள போகும்போதே......அங்க வேடிக்கை
பாக்குறதத் தவிர எதுலையும் கலந்துக்கக் கூடாதுன்னு
எழுதி வாங்கி இருப்பானுங்க போல. எப்பப் பாத்தாலும் பேன்னு சிரிச்சிக்கிட்டு ஒரே இடத்துல
விதவிதமான போஸ்கள்ல காட்சியளிக்குறாப்லயே தவிர வேற எதுவுமில்ல.
சோமு – பில்டர்
கேஸ்
பிராது - என்னை
பப்பட் பொம்மை என்றும்....இன்ஃப்ளூயன்ஸ் செய்யப்பட்ட மனிதன் என்றும் தவறாக குற்றம்
சாட்டுதல்
சோமுக்கு ஏறக்குறைய
10 பேருக்கும் மேல சப்போர்ட்டுக்கு வந்தானுங்க. பில்டருக்கு ஒருத்தருமே இல்ல. சம்மு,
ஷிவானி மட்டும் வெளிய இருந்து ஆதரவு குடுத்தாங்க.
ஒரே விஷயம்,
ஒரே மாதிரியான வாதம், ஒரே மாதியான காரணங்கள்.....ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா....! ரொம்ப சலிக்க
வைக்குறானுங்க. இதுல சனம் மட்டும் கண்டெம்ப்ட் ஆஃப் கோர்ட்டுல மாட்டுச்சு. அத கோர்ட்ட
விட்டு வெளியவே அனுப்பிட்டானுங்க. கும்பலா சேர்ந்து கத்தி பாலாவ கதற விட்டானுங்க. இப்பவும்
சோமன ஆட்டிவைக்குற ஆளுக வந்து பேசிதான் அவன கப்பாத்துனானுங்க.
சோமு வழக்கை
வென்றார்.
அன்னப்போஸ்டு
வந்து பில்டர் கிட்ட....”நான் சப்போர்ட்டுக்கு வரலைன்னு ஃபீல் பண்ணியா?”ன்னு கேட்டப்போ
“அதெல்லாம் ஒரு சுக்குமில்ல....சிங்கம் சிங்கிளாத்தான் இருக்கும்”னு போயிட்டான்.
அப்பறம் அன்னை
அர்ச்சனா சைனாகிட்ட “ வீணா வாயக்குடுத்து வாங்கிக்கட்டிக்காத....இன்னும் இந்த வீட்ல
நீ திட்டு வாங்காதது அந்த சொவத்துல மாட்டி வச்சிருக்குற மாட்டு பொம்மைக்கிட்ட மட்டுந்தான்.
சோ உன் வாய்க்கு வாஸ்து சரி இல்லாததால வாயை மூடிப் பேசவும்”னு அட்வைஸ் குடுத்தாங்க.
அடுத்து சம்மு
– ஆரி கேஸ்
பிராது - ஆரி
தான் கார்னர் செய்யப்படுவதாக மனப்பிராந்தி கொண்டு திரிகிறார்.
கோர்ட்டு, ஜட்ஜு,
கூண்டு இதெல்லாம் பாத்ததும் ஆரி ப்ரோவுக்கு பராசக்தி ஃபீல் வந்துருச்சு போல.
ஆரி - இந்த
நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்தித்துள்ளது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டுள்ள
நானும் விசித்திரமானவன் அல்ல. என் மீது போடப்பட்டுள்ள வழக்கும் விசித்திரமானதல்ல.....!
கார்னார் செய்யப்படுவதாக
உணர்கிறேன், பர்சனலாக தாக்குகிறேன். 10 மணிக்கு மேல் சாப்பிட வருகிறேன், காண்போரிடமெல்லாம்
கான்வர்ஷேசன் வளார்த்து போர் அடிக்கிறேன், வீடு கூட்ட வீம்பு செய்கிறேன்.... குற்றம்
சாட்டப்பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்.
ஆம் ! கார்னார்
செய்யப்படுவதாக உணர்கிறேன். பெட் ரூமிலே கார்னர் பெட்டு, டைனிங் டேபிளில் கடைசித் தட்டு,
டாஸ்க்கிலே எப்போழுதும் தோற்கும் செட்டு....என்ன செய்வேன் நான்? அதனால்தான் சொன்னேன்
கார்னர் செய்யப்படுவதாக.
10 மணிக்கு
மேல் சாப்பிட வருகிறேன். எதனால் ? யோசித்தீர்களா ? ஒர்க் அவுட் செய்ய வரும் அனைவருக்கும்
ஒவ்வொன்றாக சொல்லிக்குடுத்து அவர்களுக்கு பயிற்சியை முடித்து வர நேரமாகும் என்று யாருக்கும்
தோன்றவில்லை. ஒர்க் அவுட் முடித்து விட்டு கழிவறைக்கு சென்றால்...யாராவது உள்ளே உக்காந்து
அழுகிறார்கள்...கழிவறைக்குப் போக முடியவில்லை என்னால்........அய்யகோ !
காண்போரிடமெல்லாம்
கான்வர்ஷேசன் வளார்த்து போர் அடிக்கிறேன். சாதாரணமாக பேசினாலே சாம்பாரை முகத்தில் ஊத்தும்
வஞ்சக எண்ணம் கொண்ட மனிதர்கள் அலையும் இந்த வீட்டில். அன்பாக இருங்கள் என்பதைக் கூட
அட்வைஸாகத்தான் சொல்ல முடிகிறது. தவிரவும் எனக்கு தெரிந்த ஒரே விஷயமும் அதுதானே கனம்
நீதிபதி அவர்களே.....இது தவறா ?
வீடு கூட்ட
வீம்பு செய்கிறேன். JEE, NEET, , PET, JET, BAS (Bigboss Administrative service) போன்ற
பரீட்சைகளில் பாஸ் செய்து இந்த வீட்டின் நிரந்தர கேப்டனாக இருக்க வேண்டிய தகுதிகளோடு
நான் இங்கு இருக்க...பில்டர் உதவியால் கேப்டனான சம்முவை என் மனம் ஏற்குமா ? அசிடிட்டி
எனும் வயிற்றெரிச்சலால் உழன்றேனே...இது யாருக்கு தெரியும்....?
என்னை கேப்டனாக்கி
என் வாட்டத்தைப் போக்கியிருக்க வேண்டும், நடு பெட்டு குடுத்து என் ஏக்கத்தை நீக்கி
இருக்க வேண்டும் இந்த கும்பல். செய்ததா ?
பில்டர் – ஆமா
இவரு செய்யுறது மட்டும் சரி....
ஆரி – உனக்கேன்
போரு...ஜட்ஜுக்கே அடிக்காத போரு....! //
இப்பிடி நா
வரழ....கழுத்து நரம்பு புடைக்க பேசினது மட்டுமில்லாம. பாலாவ இமிட்டேட் பண்றேன்ற பேருல
சம்முவ ஒரு நாலு வாட்டி தருதலைன்னு சொல்லிக்காட்டுனாப்ல.
ஆரிக்கு ஆதரவா
சனம், அன்னப்போஸ்டு , சோம், நிஷா. சம்முக்கு அவங்க செட்டு மற்றும் அர்ச்சனாவும்.
ஆடிஷனுக்கு
கடைசியா வந்து பெர்ஃபார்ம் பண்ற மாதிரி அன்னப்போஸ்டு அவதி அவதியா நாலு பாயிண்ட பேசுறேன்னு
அதுவும் ஆரி ப்ரோவ லெங்க்தி அண்ட் போரிங் பர்சன்னு சொல்லிட்டுப்போச்சு.
சம்மு பக்கம்
தீர்ப்பு. ஆரிக்கு பல்பு.
வெளிய வந்த
சம்மு “பொண்ணுகிட்ட மரியாதையா பேசத் தெரியாத இவந்தான எதிக்ஸ கண்டுபிடிச்ச மாதிரி எப்பப்
பாத்தாலும் எந்திரிச்சு நின்னு பேசுறான்”னு நல்லா சத்தமாவே சொல்லிட்டுப் போனாங்க. பல
தாய்க்குலங்களுக்கு ஆரி மேல காண்டுதான் இந்த பேச்சால.
வெளிய எல்லாரையும்
உக்கார வச்சு சம்மு “அந்தாளுக்கு என்னதான் பிரச்சனைன்னு கேப்போம். அவன் சொல்ற மாதிரி
நான் ஐ ஏ எஸ் லாம் படிச்சிட்டு வர முடியாது”ன்னு சொன்னதும் ஒரு 5, 6 பேர் கைதட்ட....ஆரி
டென்ஷனாகி பாலாவ பத்தி பேச ஆரம்பிக்க....பில்டரு நல்லாவே திருப்பி குடுத்தான். கோவத்துல
நெஞ்ச நிமித்தி பக்கத்துல போன ஆரி, பில்டரு எந்திரிச்சு நின்னதும் ஸ்டாப்பாகிட்டப்ல.
“நீ பண்ண எல்லாத்துக்கும் எவிடென்ஸ் இருக்கு”ன்னு சொன்னாப்ல. (அத வச்சு பி 1 ஸ்டேஷன்ல
கம்ப்ளயிண்டா குடுக்க முடியும் ?) “எங்கிட்ட வச்சுக்கிட்டா கிழிச்சிடுவேன்”னு சொன்னார்
ஆரி. விட்டா பில்டரு அங்கயே ஆரிய நால மடிச்சு வாயில போட்டுருவான் போல...ஆனா கன்ட்ரோல்டா
உள்ள போயிட்டான்.
இதுல “ஏண்டா
அந்த பொம்பள ஐ ஏ எஸ் படிச்சிட்டா வர முடியும்?னு சொன்னதுக்கு கை தட்டி என்னய கலாய்க்குறீங்களே....அந்தம்மா
என்னயப் பத்தி என்னடா நெனைக்கும்?”னு ரம்யாகிட்ட எகிற...”யோவ் விட்டா நாளையில இருந்து
கக்கூஸுக்கு போகனும்னா கூட உங்கிட்டதான் கேட்டுட்டு போகனும்னு சொல்லுவ போல ? நீ இங்க
வார்டன் வேலைக்கு வரல...உன் எதிக்க்ஸு, பிசிக்ஸெல்லாம் வேற யார்கிட்டயாச்சும் வச்சுக்கோ
இல்ல பிச்சுக்கும்”னு ரம்யா போட்டு வங்கி குத்திட்டுப் போச்சு.
அடுத்து கேபி
– சகுனி கேஸ்.
பிராது - ஓவர்
ரியாக்ட் செய்பவர்
இத ஆரம்பத்துல
காமெடியாத்தான் கொண்டு போனானுங்க. சகுனியும் அப்பிடித்தான் இருந்தாப்ல. இதுல அந்த சம்பவத்தப்
பத்தி சொல்றதுக்கு சுமங்கலி மேட்டர்னு வாயத்தொறத்ததும், நம்ம அன்னப்போஸ்டுக்கு வயித்துல
புளையக் கரைச்சுருச்சு....”இந்தாங்க இப்ப எதுக்கு இந்தப் பேச்சு...என்னய உள்ள இழுக்காதீங்க”ன்னு
ஆரம்பிக்க, அதுல இருந்து சகுனி பதட்டமாகிட்டாப்ல. போற போக்க பாத்தா இனி தமிழ்நாட்டுல
யாருக்கும் அனிதான்னு பேரு வைக்க விடாது போல அன்னப்போஸ்டு.
இதுல கடைசில
விவாதம் முடிஞ்சப்பறம் காமெடிக்கு சம்மு “சகுனி குசும்பனா இல்லையா?ன்னு ஓட்டெடுப்போம்”னு
சொல்ல...கொஞ்சம் அமளி துமளியாகி கேஸ்ல கேபி வின்னு.
சகுனிக்கு அன்னப்போஸ்டு
மேல இருந்த கோவம்...சம்மு மேல ட்ரான்ஸ்ஃபர் ஆகி....கடைசியா கேபி மேல வந்து விழுந்துச்சு.
இதுல சமாதானப்படுத்தப் போன எல்லாரையும் “செத்த தனியாத்தான் விடுங்களேன் வானரங்களே”ன்னு
கெடாசிட்டுப் போனாப்ல.
அப்பறம் கேபியும்
தனியா அவர்கிட்ட பேச ட்ரை பண்ணுச்சு, குடுத்த கேஸ் மாதிரியே இப்பவும் ஓவர் ரியாக்ட்
பண்ணிட்டு சுத்திட்டு இருக்காப்ல.
இங்குட்டு “அடி
ரொம்ப பலமோ....? உமி போட்டு ஒத்தடம் குடுக்கவா ? இல்ல கேசரி ரெண்டு வாய் சாப்பிடுறியா?”ன்னு
பில்டர் கூட பெட்டுல ரொமான்ஸுல இருந்தாங்க சாத்தூர் ஷிவானி. பக்கத்து பெட்டுல ஆரி ப்ரோ
அகஸ்தியர் மாதிரி தியானம் வேற....கண்டிப்பா ஓட்டு கேட்டுட்டு இருந்திருப்பாப்ல....இத
தெரிஞ்ச பில்டரும் அசிங்க அசிங்கமா பேசியிருப்பான்.
ஆனா அந்தப்பக்கம்
கேபி ஆஜித்த கூட வச்சுக்கிட்டு பில்டரு கவனத்த தன் மேல திருப்ப ட்ராமா பண்ணிட்டு இருந்துச்சு.
பில்டருக்கு அவனுக்கு சப்போர்ட்டா கேபி வந்து நிக்கலன்னு கோவம். ஷிவானி “நானுந்தான்
நிக்கல என்னயும் சொல்றியா?”ன்னு கேட்டதுக்கு “நின்னாதான் உனக்கு கால் வலிக்குமே...அதனால
நீ நிக்கலேன்னு எனக்கு கோவம் இல்லே”ன்னு சொல்லிட்டான்.
இதுல திரும்ப
இடைல சகுனி கிட்டப் போயி ஒரு செட்டு அசிங்கப்பட்டு வந்துச்சு கேபி ....வந்துட்டு உள்ள
பாத்தா இன்னும் பில்டரும், ஷிவானியும் மாத்தி மாத்தி ஊட்டி விட்டுட்டு இருந்தானுங்க.
“உலகத்துல இவனுங்களுக்கு எதப்பத்தியாச்சும் கவலை இருக்கா?”ன்னு பொலம்பிட்டு இருந்துச்சு
கேபி.....
கட்டக்கடைசியா
சம்மு பையனோட வீடியோவப் போட்டு சம்முவ கதற விட்டானுங்க.....! ஆரி ப்ரோ அனாதையா லான்ல
உக்காந்திருந்ததோட முடிஞ்சது நாள்.
ம்ம்ஹூம்.....இவனுங்ககிட்ட
சுத்தமா கண்டென்ட் இல்ல....! இன்னைக்குப் ப்ரொமோவ பாக்கும்போது இது இன்னும் நல்லா தெரியுது.
Comments
Post a Comment