பிக்பாஸ் – 4 : நாள் - 46 (19.11.20)

 ஆனாலும் டேய்.....ரொம்ப மோசமாத்தாண்டா போறீங்க ! இட்லியே பரவாயில்லன்னு உப்புமாவ திங்கும் போது சொல்ற மாதிரி...இதுவரைக்கும் கேவலமான சீசன்னா அது 2வது சீசன் தான். ஆனா அதையும் பீட் பண்ண முடியும்னு காமிக்கிறீங்களேடா....! எனக்கென்னமோ இவனுங்களுக்கு 3 நாளைக்கு ஒரே டாஸ்க்க குடுத்துட்டு....மொத்த டீமும் தீபாவாளி லீவுக்கு போயிட்டானுங்கன்னு தோணுது...! உங்க தீபாவளிக்கு எங்க பின்னாடிதான் வெடி வைப்பீங்களாடா ?

45வது நாள் தொடர்ச்சி....

அதே மணிக்கூண்டு டாஸ்க்....டாஸ்க்குக்குள்ள ஒரு டாஸ்க்கா எல்லாரும் ஸ்லோ மோஷன் டான்ஸ் ஆடனுமாம். “கண்ணுக்குள் நூறு நிலவா” பாட்டு....பூராம் பேட்டரி வீக்கான பார்பி பொம்மை மாதிரி ஆடிட்டு இருந்தானுங்க. அன்னப்போஸ்டுக்கு பேச்சுல மட்டுமில்ல ஆடுறதுல கூட ஸ்லோ மோஷன் தெரியாது போல...! அது மட்டும் மணிக்கு 111 கி.மீ வேகத்துல ஆடிட்டு இருந்துச்சு. சோமன் அர்ச்சனாகூட ஸ்லோ மோஷன்ல இருந்தான். நீயெல்லாம் கடைசி வரைக்கும் நாய்க்கு உன்னி எடுத்துட்டுதான் இருப்ப போல. உடனத்த பில்டரு காட்டான் மாதிரி இருந்தாலும் கரெக்ட் பண்றதுல கன் மாதிரி இருக்கான்.....இவன் என்னடான்ன....! ஜித்து பாய் நார்மலாவே ஸ்லோ மோஷன்லதான் இருப்பாப்ல ஆனா என்னமோ இன்னைக்கு லூஸ் மோஷன் வந்தா மாதிரி மூஞ்சிய வச்சுட்டு இருந்தாப்ல. ஆரி கண்ணுக்கு புலப்படல....கடவுள் கைவிடல.

சுச்சிம்மா கேமராகிட்ட வந்து.....

சுச்சி : ஏம்பா என்ன கருமம் இது ? என்ன இப்பிடி ஆடிட்டு இருக்கானுங்க ? தண்ணி கிண்ணி போட்டானுங்களா ? இங்க இருக்குறதுக்கு வெளியவே போயிரலாம்.

பி.பா : சுச்சி....நேத்து நீங்கதான இங்க நல்லா என்டெர்டெயினிங்கா இருக்கு. வெளிய போக விருப்பமில்லன்னு சொன்னீங்க ?

சுச்சி : ப்ச் ப்ச் ப்ச்....அப்பிடியா சொன்னேன் ? பாவம் சுச்சிக்கென்ன மனக்கஷ்டமோ ?

பி.பா : நீங்கதான சுச்சி ?

சுச்சி : இல்ல நிஷாதான் சுச்சி....நான் ஆஜித் ......ஹாவ்...ஹாவ்....ஹாவ்

பி.பா : ஸ்ஸ்ஸப்பா.....! நீங்க என்ன சொல்லனுமோ சொல்லிட்டு கிளம்புங்க...

சுச்சி : பில்டரு கிட்ட என்னய திட்டுறானுங்க போயி என்னன்னு கேளுடான்னு சொன்னா......அவனுங்க சொன்னதக் கேட்டுட்டு வந்து என்னய திட்டுறான்....பாவம் பைத்தியமாகிட்டான் போல....அவன பாத்தா பாவமா இருக்கு.....

பி.பா : பாலான்னா...... பாலாவதான சொல்றீங்க ?

சுச்சி : ஆமா பாலாவா இருக்குற ஆரிய சொல்றேன்......அர்ச்சனாவா இருக்குற ரியோவ இல்ல...........ஹாவ்...ஹாவ்....ஹாவ்

பி.பா : சுச்சி....ஸ்டோர் ரூம் வாங்க. நைசா 30 செகண்ட் கதவத் தொறக்குறேன்....வெளிய போயிடுறீங்களா ? யாரும் கேட்டா காக்கா தூக்கிட்டு போயிடுச்சுன்னு சொல்லிக்கலாம்..... ஹாவ்...ஹாவ்....ஹாவ் (MV : அய்யோ 5 நிமிஷம் இவ கூட பேசுனதுக்கு என்னயும் லூசாக்கிடுச்சு) //

46வது நாள் காலை....

வெற்றிகரமா இந்த மணிக்கூண்டு டாஸ்க்க முடிச்சுட்டானுங்க. “குச்சி ஒரு குல்ஃபி” பாட்டு அலாரம். ரொம்ப நாள் கழிச்சு பெட்ரோமாக்ஸ் லைட் வாடகைக்கு போன மாதிரி....பூராம் தங்கு தங்குன்னு குதிச்சிட்டு இருந்தானுங்க. அன்னப்போஸ்டெல்லாம் இன்னும் அஞ்சு நிமிஷத்துல உலகம் அழிஞ்சிரும்ன்ற ரேஞ்சுல ஃபாஸ்ட் பார்வர்ட்ல ஆடிட்டு இருந்துச்சு.

பின்ன அர்ச்சனா குரூப்பு கிச்சன்லயும், பில்டரு குரூப்பு டைனிங் ஹால்லயும் ஊர்ப் பொரணி பேசிட்டு இருந்தானுங்க. அன்சீன்ல பாக்கும்போது சைனா, பில்டரு, ஷிவானி பேசிட்டு இருந்தானுங்க. சைனாவோ “ஷக்கலக்க பேபி ஷக்கலக்க பேபி லவ்வு பண்ண தோணலையா?”ன்னு  பில்டர பாத்து பாட்டு மட்டுந்தான் பாடல....மத்தபடி சிக்னலெல்லாம் அப்டித்தான் இருக்கு....! ஆனா இதெல்லாம் நடந்துருமோன்னு பயமாயிருக்குன்ற மாதிரியே சாத்தூர ஷீல்டா வச்சுட்டு இருக்கான் போல பில்டரு....!

பைக் ப்ரொமோஷன். ஜோடியா டீம் பிரிஞ்சு...அதுல உள்ள பொம்பளப் புள்ளைய ஆம்பளப் பையன் இம்ப்ரெஸ் பண்ணி வண்டில ஏத்தனுமாம். ஆஜீத்தும், கேபியும் வின்னு.

மணிக்கூண்டு டாஸ்க் ரிசல்ட்டு. “எப்பிடியும் பில்டரு பண்ண பிக்காலித்தனத்துக்கு பாயிண்ட்ஸ் ஊ...ஊதான். இத சாக்கா வச்சு அவன வெளிய அனுப்பிரலாம்”னு நெனச்சுட்டு உக்காந்திருந்தானுங்க. அர்ச்சனா டீம் வின்னு. பில்டரு டீம் கடைசி.

விஜய் அவார்ட்ஸ் வாங்குனப்ப விக்ரம் கூட இவ்வளவு அலப்பறை பண்ணல. இந்த மணிக்கூண்டு டாஸ்க் வின் பண்ணதுக்கு அர்ச்சனா குடுத்த பர்பாமென்ஸ் இருக்கே.....யப்ப யப்பா....ஆயிரம் பாயிண்டுக்கு இப்பிடி ஆஸ்கார் ரேஞ்சுக்கு பண்றதெல்லாம் நியாயமா ? பாவம் சுச்சிம்மாவே பயந்துருச்சு.

பின்ன பில்டரு வந்து ராமானுஜத்துக்கும், சர்.சி.வி ராமனுக்கும் கூட விளங்காத அளவுக்கு மேத்தமேட்டிக்கல் லாஜிக் சொல்லிட்டு இருந்தான் விளாங்காதவன்.

ஆரியோ....”கரண்டி கிண்டுற மோடுல கைய வச்சுக்கிட்டு எண்ணுணதாலதான் இந்த வெற்றி”ன்னு போஸ்ட் அனலைசிஸ் பண்ணிட்டு இருந்தாப்ல. பெஸ்ட் பெர்பார்மர் எதிர்பாக்குறாரு போல....!

ரம்யாவும், சம்முவும் கேட்டுகிட்ட உக்காந்து எதையோ பொரணி பேசிட்டு இருக்க....அங்க வந்த சுச்சிம்மா உங்கிட்ட பேசனும்னு ரம்யாகிட்ட சொன்னாங்க.....சுச்சி ஆரம்பிச்சதும் சம்மு எந்திரிச்சு போயிருச்சு....அதுகென்ன மனக்கஷ்டமோ......ஹாவ்.....ஹாவ்.....ஹாவ்

சுச்சி : முதல் ரவுண்டுல சோடா.....ச்சை....முத ரவுண்டுல எப்பிடி செகன்ட்ஸ் கால்குலேட் பண்ணனும்னு சொன்னது நான்....கரெக்டா ?

ரம்யா : ஆமா

சுச்சி : ரெண்டாவது ரவுண்டுலயும் எப்பிடி செகன்ட்ஸ் கால்குலேட் பண்ணனும்னு சொன்னது நான்....கரெக்டா ?

ரம்யா : மேல சொல்லு.....

சுச்சி : ஆனா தப்பு நடந்திருக்கு....! நாம லாஸ்ட் வந்திருக்கோம்னா யாரு காரணம்?

ரம்யா : நீ பாலாவ ச்சொல்றியா? அவங்கிட்ட இத சொல்லவா ? உன்னய கொன்னுட்டு உண்மையாவே ஜெயிலுக்கு போயிருவான்....

சுச்சி : இல்ல...இல்ல ! ஐடியா நாந்தான குடுத்தேன் அதுனால நாந்தான் ஜெயிலுக்கு போவேன்....

ரம்யா : நாங்களும் தப்பு பண்ணியிருக்கோம்...பாத்துக்கலாம். ஆனா சுச்சி ஜெயிலுக்கு போகனும்னு இருந்தா யாரால மாத்த முடியும் ?

சுச்சி : ஆமா ஆமா....”யாரு” ஜெயிலுக்கு போகனும்னு இருந்தா சுச்சியால மாத்த முடியும்.....?  ஹாவ்.....ஹாவ்.....ஹாவ் //

ஒவ்வொரு டீமுக்கும் கிடைச்ச பாயிண்ட்டுக்கு ஏத்த மாதிரி ஷாப்பிங் பண்ணனும். இதுல ஜித்து பாய் டீம் கணக்கு பண்ண தெரியாம 25 பாயிண்டுக்கு எக்ஸ்ட்ரா எடுத்ததால.....அந்த 800 பாயிண்டும் நக்கிட்டு போயிருச்சு.

உள்ளா ரம்யா, ஆஜீத், சம்மு 3 பேரும் உக்காந்திருக்க. “இந்த வாரம் யாருடா வெளிய போவா?ன்னு ஆஜித்கிட்ட ஜோசியம் கேக்க அவன் “சுச்சி இல்லேன்னா ஷிவானி”ன்னு சொன்னான். தக்காளி நீயே அந்த லிஸ்டு ஆளுதான்....நீயெல்லாம் யாரு போவான்னு ஜோசியம் சொல்லிட்டு இருக்க நேரம்டா...! “ஏன் ஷிவானி என்ன பண்ணா?”ன்னு சம்மு கேக்க, “ஒண்ணும் பண்ணலன்றதுதான் காரணம். பின்ன என்ன !”ன்னு ரம்யாகிட்ட இருந்து ஒரு சத்தம். “பொழுதுக்கும் பில்டர மகிழ்ச்சிப்படுத்துதல மட்டும் பண்ணிட்டு இருந்தா பாயிண்ட்ஸா கெடைக்கும். சும்மா இதெல்லாம் வீம்புக்கு பண்றா மாதிரி இருக்கு. உண்மையா தோணல”ன்னு சொன்னாங்க ரம்யா. ஷிவானி மாதிரி பாடி லேங்குவேஜ் கொண்டு வந்தது செம்ம. ஆனா இந்தக் காரணத்துக்காகவெல்லம் ஷிவானி வெளிய போகாதுன்னு ரம்யாவுக்கு நல்லாவே தெரியும். இருந்தாலும் ரொம்ப நாளா சொல்ல நெனச்சு விஷயமா இருக்கும்போல அத கேப்புல கொட்டிடுச்சு. ஆனா இது பொறாமையா இருக்கக் கூடாது. ரம்யால்லாம் பில்டருகிட்ட மாட்டுனா கோவாலுகிட்ட மாட்டுன ஃபர்னிச்சர் கதைதான்.

பின்ன “செஞ்சு முடி....ஒரு புடி புடி”ன்னு டாஸ்க்கு. ஒவ்வொரு உணவுக்கும் ஒரு டாஸ்க்கு அத ஒரு ஆளு செஞ்சு ஜெயிச்சா வீட்ல உள்ள எல்லாருக்கும் அந்த உணவு கிடைக்கும். பில்டரும், அன்னப்போஸ்டும் ஜெயிச்சாங்க.

பின்ன ரம்யா தனக்கு சாக்லேட் தரலன்னு சோமு ஒரு ரொமான்ஸ் பண்ண முயற்சிக்க, அர்ச்சனா உள்ள புகுந்து அவன் ப்ளான சல்லி சல்லியா நொறுக்கிட்டு ரியோ பெட்டுல போயி நிம்மதியா படுத்துட்டாங்க. இவ்வளவுதான்.


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)