பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)
கணக்கு விட்டுப்போயிறக் கூடாதுன்னுதான் இன்னைக்கு எழுத வேண்டியதாப் போச்சு.....மத்தபடி ஐ ஹேட் திஸ் எபிசோடுங்க.....!
39வது நாள்
“டசக்கு டும்
டும்” பாட்டு அலாரம். அந்தந்த செட்டு அப்பிடி அப்பிடியே சேர்ந்து ஆடிக்கிட்டானுங்க.
சனம் மட்டும் “மானச சஞ்சரரே” பாட்டுக்கு தலையாட்டி தாளம் போடுற மாதிரி ஏதோ பண்ணிட்டு
இருந்துச்சு.
சனமும், சுச்சியும்
உக்காந்து சாப்ப்டுட்டு இருக்கும்போது பில்டர, பத்தியும் ஷிவானிய பத்தியும் பேச்சு
வந்து “ரெண்டும் லவ்வாங்கியில இருக்கு ஆனா பில்டரு ஒத்துக்க மாட்டேங்குறான். அவனுங்கள
விடு சோமனுக்கு சம்மு மேல ஒரு கண்ணு”ன்னு கண்டபடி ஒளறுச்சு சுச்சி. இத நம்பி சைனா சோமன்
கிட்ட ரம்யா இருக்கும் போது கேட்டு அவனுக்குள்ள 39 நாளா தூங்கிட்டு இருந்த மிக்ஸ்டு
மார்ஷியல் ஆர்ட்ட வெளிய கொண்டு வந்து வானுலகம் போயிடும்னு எதிர்பார்க்கலாம்.
எல்லாரையும்
உக்கார வச்சு பிக்பாஸ் “அடேய்....ஒரு டாஸ்க்குன்னு ஒண்ணு குடுத்தா அத என்ன ஏதுன்னு
தெரிஞ்சுக்காம மங்கி கைல குடுத்த மாலை மாதிரி இப்பிடி கந்தரகோலம் பண்ணி வச்சுடுறீங்க....!
இந்த டாஸ்க்கையும் அப்பிடி சல்லி சல்லியா நொறுக்குனதால லக்ஸுரி பட்ஜெட் பாயிண்ட் கிடையாது
உங்களுக்கு...பூராம் பழைய சோத்த தின்னுங்க”ன்னுட்டார். பில்டரு “நான் பெட்டில இருந்து
எடுக்கலங்க”ன்னு சொன்னதுக்கு “இந்த டாஸ்க்கு கெட்டு நாசமாப் போனதுக்கு முக்கிய காரணம்
நீ.... நீ முக்குனதுக்கு காரணம் சைக்கோவும், சாத்தூரும்....! இனிமேலாச்சும் என்ன ஏதுன்னு
தெரிஞ்சு விளையாடு”ன்னு சொல்லிட்டாப்ல.
பின்ன திருட்டு
குடும்பம் முன்னாடி வந்து ஒத்துக்கோங்கன்னு சொன்னதும் ரம்யா, சோம், கேபி வந்து உண்மைய
ஒத்துக்கிட்டதும். படம் போட்டுக்காட்டி உறுதிபடுத்துனாப்ல பிக்கி.
அப்பறம் அர்ச்சனா
பிக்பாஸ்கிட்ட “விளையாண்ட முறை தப்புன்னாலும்....விளையாடுனது உண்மை. அதுக்காகவாச்சும்
பாதி பாயிண்ட குடுத்து புண்ணியம் தேடிக்கோங்க”ன்னு கெஞ்ச, கூடவே ஆரியும் “ஒரு குடும்பத்தலைவியா
பொம்மிஸ் நைட்டி....சாரி சாரி...இந்த குடும்பத்தலைவனா எனக்கும் பொறுப்பு இருக்கு....சாம்பாருக்கு
பாசி பருப்பு இருக்கு. ஆனா தொட்டுக்க வேணும்னா கூட லக்ஸுரி பாயிண்ட் இருந்தாதான் முடியும்...பாத்து
கருணை காட்டுங்க”ன்னாப்ல. பில்டரும் எந்திரிச்சு நின்னு “தப்பா புரிஞ்சுக்கிட்டது என்
தப்புதான். அதனால கொஞ்சம் செதறியாச்சும் விடுங்க”ன்னான். இந்த வாரம் இவனுங்களுக்கு
முறுக்கும், ரவா லட்டுந்தான் போல....
அப்றம் ரம்யா
பில்டருக்கு சரியா டாஸ்க்க விளக்க...”பாரு எப்பிடி அழகா எக்ஸ்ப்ளெயின் பண்ற...எங்கூடயுந்தான்
ரெண்டு இருக்கே....வெள்ளரிக்காய பாத்து புடலங்காய் இவ்ளோ சிறுசா இருக்குன்னு சீரியஸா
பேசிட்டு இருக்குதுங்க”ன்னு வருத்தப்பட்டான்.
“பாயிண்டு போயிருச்சேன்னு
கொஞ்சமாச்சும் கலங்குறானுங்களான்னு பாரு....பூராம் குற்றால சீசனுக்கு வந்த மாதிரி குதூகலமா
இருக்கானுங்க”ன்னு அர்ச்சனாவும், நிஷாவும் ஆத்திரத்துல இருந்தாங்க.
சைக்கோ சுச்சி
கேமராகிட்ட வந்து நின்னு “ஏங்க சும்மாவே இங்க சில பேருக்கு மட்டுந்தான் சைட் டிஷ்ஷோட
சாப்பாடு கிடைக்குது....மத்த படி பல பேருக்கு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் சோறே போடுறானுங்க....ஆப்பிள்
வேணும்னு கேட்டா பேப்பர்ல எழுதி குடுக்குறானுங்க....ரியோ கேங்குக்கும், ஜித்து பாய்க்கும்
பிளாக்குல வித்துடுறானுங்க....இதுல லக்ஸுரி பாயிண்டும் இல்லேன்னா....பிக்பாஸ் வீட்டுல
பட்டினிச்சாவ பாத்துருவீங்க”ன்னு ஒரு சூர கம்ப்ளெயிண்ட குடுத்துச்சு....கண்டிப்பா இது
ஆண்டவர்கிட்ட மாட்டும்.
பின்ன சுச்சி,
ஷிவானி, பாலாவும் பெட் ரூமுல இருக்கும்போது....”டேய் ஆனாலும் நீ கொஞ்சம் ஓவராத்தான்
பண்ணிட்ட”ன்னு சொல்லும்போது...”ஆமாமா அது எனக்கே தெரிஞ்சுது...ஆனாலும் என்னய இம்சை
பண்ற இவனுங்களுக்கு இது தேவைதான்....கெடக்கட்டும்”னு துன்பத்திலும் இன்பத்த அனுபவிச்சுட்டு
இருந்தான்.
அப்றம் மறுபடியும்
பில்டரு கேமராகிட்ட வந்து பிக்பாஸ்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டு இருந்தான். இதுக்கு மேல
பிக்பாஸே இவன் கிட்ட மன்னிப்பு கேட்டுருவாப்ல போல.....அது வரை விடமாட்டான்.
வெளிய இந்த
3 பேரத் தவிர மத்த எல்லாரும் பேசிட்டு இருக்கும்போது பில்டரோட விளையாட்டு முறைய விளக்கிட்டு
இருந்த அன்னப்போஸ்டுகிட்ட ரியோவும், சோமனும் வழக்கம்போல சாதரணமா பதில் சொல்ல ஆரம்பிக்க,
அது எப்பவும் போல....”நான் ஒண்ணும் கேள்வி கேக்கல....பதிலும் சொல்லல....பதிலுக்கான
கேள்வியும், கேள்விக்கான பதிலும்”னு ஆரம்பிச்ச உடனயே ரியோ “தேங்க்ஸ் அனிதா”ன்னு சொல்லி
வாயடைச்சுட்டான்.
இதுக்கப்பறம்
டாஸ்க் எழுதி குடுக்குறவரு தலை தீபாவளிக்கு ஊருக்கு போயிட்டதால...என்ன பண்றதுன்னு தெரியாம
மஹத், ஷெரின், சாண்டி, வனிதா, ஐஸ்வர்யான்னு பழைய ஆளுகள கூட்டிட்டு வந்து இவனுங்களுக்கு
டாஸ்க்க குடுத்து படுத்துனானுங்க. சைனாவுக்கு ஷெரினப் பாக்கும்போதே பத்தி எரிய ஆரம்பிச்சுது.....இதுல
தர்ஷன் வந்துருவானோன்னு பயம் வேற....நல்லவேளை அவன் வரல.
கடைசியா நல்லா
திம்முன்னு, உப்பலா யாரு ஃபுல்கா சுடுறாங்கன்னு டாஸ்க்கு. ஷிவானி ஜெயிச்ச மொத டாஸ்க்கு
இந்த வீட்ல.....”வாத்யாரே ஃபர்ஸ்டு மர்டர்”ன்ற மாதிரி பில்டரு உற்சாகப்படுத்துனான்.
இவனுங்க வர
வர உடலுக்கும் மனதுக்கு கேடா இருக்கானுங்க. பரவாயில்ல பாத்துக்கலாம். அனைவருக்கும்
மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்....ஜாலியா கொண்டாடுங்க. நன்றி நமக்கம் !
Comments
Post a Comment