பிக்பாஸ் – 4 : நாள் - 51 (24.11.20)

 50வது நாள் தொடர்ச்சி....

அந்த டாப்பில் டாஸ்க் முடிஞ்சதும் எல்லாரும் கலைஞ்சு போக ரியோ அந்த ரூமுக்குள்ள வரவும் ரியோ, சோமு, நிஷா 3 பேரும் இருக்க...நிஷா ”நான் கொஞ்சம் பேசனும்”னு சொல்லிட்டு “ஏப்பா நான் செஞ்சது தப்பா ? அன்பா இருக்குறது தப்பா ? மக்கள் கிட்ட போறேன்னு சொன்னது தப்பா?”ன்னு வரிசையா கேட்டுட்டு இருக்கும்போது...அதுக்கு பதில் சொல்ல ரியோ தொண்டைய செருமிட்டு ஆரம்பிக்கப் போக.....அன்னை உள்ள வந்தாங்க. “என்னங்கடா அம்மா இல்லாம அன் அஃபீஷியல் கூட்டம் போடுறீங்க?”ன்னு கேக்க....”ஈ லோகத்தில் யாருக்கும் அன்பு இல்லா.....எல்லாரும் போலி....அன்பு காட்டுனா ஸ்டர்டஜின்னு சொல்றானுங்க....அன்பு காட்டுனா சேஃப் கேமுன்னு சொல்றானுங்க, அன்பு காட்டுனா அண்டர்டேக்கர் கனவுல வருவான்னு சொல்றானுங்க”ன்னு சொன்னதுதான் தாமசம்.....பால்ராஜ் பாஸ்டர் பரிசுத்த ஆவி உள்ள இறங்குனாப்ல.....

அன்னை அர்ச்சனா :  பெலத்தினாலும் கிருபையினாலும் ஆசீர்வதிக்கப்பட்ட நிஷா....

நிஷா : அல்லலூயா.....

அன்னை அர்ச்சனா : உண்மையான....பரிசுத்தமான.....நியாயஞ்செய்த அன்ப நம்புறீங்களா.....

நிஷா : அல்லலூயா.....நம்புறேன்....

அன்னை அர்ச்சனா :  கைய உயர்த்தி சொல்லுங்க...... அன்பு ஜெயிக்கும்........

நிஷா : அல்லலூயா..... அன்பு ஜெயிக்கும்....

அன்னை அர்ச்சனா : நல்லா விசுவாசத்துடன் சொல்லுங்க.......அன்பு ஜெயிக்கும்.....

நிஷா : அன்பு ஜெயிக்கும்.....அல்லலூயா.....

அன்னை அர்ச்சனா : விசுவாசத்துடன் அன்ப ஜெயிக்க வைப்போமா ?

நிஷா : அல்லலூயா....ஜெயிக்க வைப்போம்

அன்னை அர்ச்சனா : நல்லா கைய உயர்த்தி சொல்லுங்க......சுபரிபரிபா....

நிஷா : அல்லலூயா அன்பு ஜெயிக்கும்....

அன்னை அர்ச்சனா : அல்லலூயா.....

கோரஸா : அல்லலூயா.....//

போன சீசன்ல அனாதையா இருந்த அன்பு இந்த சீசன்ல அன்னை அர்ச்சனாகிட்ட சிக்கி சீப்படுது. ரூவாய்க்கு ரெண்டு கூருன்னு கூடிய சீக்கிரம் அன்னை அன்ப வித்துரும் போல. மத்தபடி இந்த வீட்ல 17வது கண்டெஸ்டன்டா அன்ப பெட்டு போட்டு படுக்கவச்சு அத ஜெயிக்க வைக்கவும் போராடுறாங்க அன்னை. இது பிக்பாஸ் வீடா இல்ல பாகப்பிரிவினை படமான்னு தெரியல....! இத எவனாச்சும் எடுத்து சொன்னா அவனுக்குள்ள சாத்தான் இருக்குன்னு சிலுவைய காட்டுறானுங்க. சரிடா அந்த அன்ப எல்லாருக்கும் காட்டுங்கடான்னா அதையும் இந்த குரூப்பு செய்ய மாட்டேங்குறானுங்க. குரூப்புக்கு பேரெல்லாம் வச்சிருக்குறதா சுச்சி சொல்லுச்சு, ஆனா இவனுங்க குரூப்பே இல்லேன்னு பொய் சொல்றானுங்க.....! இதுல ரொம்ப கிரிமினலா அன்னை அர்ச்சனா நிஷாகிட்ட “இருக்குற தோசைய எல்லாம் குடுத்துட்டு பல நாள் பட்டினியா கிடந்தியேடி....அந்த அன்பு தோத்துருமா?”ன்னு கேக்குறாங்க. இதெல்லம் பெரும் சில்லறைத்தனம்.....! யாரு அந்தம்மாவ இப்பிடியெல்லாம் பண்ண சொன்னா ? இல்லேன்னா இல்லேன்னு சொல்லிட்டு போறத விட்டுட்டு “தண்ணி குடுச்சிட்டு படுத்தேன்”னு சொல்றது என்ன வகையான நியாயம். “நீ சாப்டலேன்னாலும் பரவாயில்ல எனக்கு குடு”ன்னு இங்க எவனும் சொன்னானா என்ன ? இது எப்பிடி அன்புல சேரும்....ஆப்பாயில்தனத்துலதான் சேரும்.....!

பின்ன அன்னப்போஸ்டு நிஷாகிட்ட வந்து “ஏங்க நீங்க குடுத்ததாலதான வாங்குனேன்....என்னமோ உங்கள ஏமாத்தி வாங்குனதா எல்லாரும் எங்கிட்ட மூஞ்சிய தூக்குறானுங்க ? வேணும்னா பிக்பாஸ்கிட்ட சொல்லி உங்ககிட்டையே குடுத்துடுறேங்க”ன்னு சொல்ல, “இல்ல இல்ல நீ சொன்னவிதம் சரியா இல்ல அதனாலதான் நான் உனக்கு குடுத்தேன்”னு சொன்னதும்....அன்னப்போஸ்டு கேமராகிட்ட போயி “யோவ்...இவனுங்களே குடுத்துட்டு இவனுங்களே அத வச்சு பாலிடிக்ஸ் பண்றானுங்க....பேச தெரியாம இல்ல....ஒரு ரெண்டு நாள் ரெஸ்ட்ல இருக்கேன் அதான் பாக்குறேன். வழியிருந்தா அந்தம்மாவுக்கே குடுத்துருப்பா.....நான் வேற இடத்துல ஆரி இல்லேன்னா சனத்த வச்சு ஸ்கோர் பண்ணிக்கிறேன்”னு சொல்லுச்சு.

அப்பறம் நிஷா ஜித்து பாய்கிட்ட தன்னிலை விளக்கம் குடுக்க....”என்னய ஏத்தி விட்டானுங்க”ன்னு நிஷா சொன்னதுக்கு....”வேணும்னா நீ போனதும் தட்டுல வச்சு குடுக்க சொல்லுவோமா ? அது என்ன உங்க அன்னை அர்ச்சனா சுட்ட தோசையா...நீ போனதும் 2 சட்னி வச்சு கட்டி குடுக்க ? கேம் விளையாடத் தெரியலேன்னா பரவாயில்ல....உனக்கு அது கேமுன்னே தெரியாம வச்சுருக்கானுங்க பாரு....அதான் பிரச்சனை”ன்னு பொங்கிட்டாப்ல.

அன்னப்போஸ்டுகிட்ட பில்டரு “நிஷாவுக்கு விட்டு குடுத்திருந்தா கேம் மாறியிருக்கும்....உனக்கும் மைலேஜ் இருந்திருக்கும்”னு சொல்ல....”மைலேஜ் இருக்கும் ஆனா நான் இருந்திருக்க மாட்டேன்....பூரா பயலுகளும் கமான் கமான்னு கைய நீட்டி வெளிய கூப்ட்டுட்டு இருக்கானுங்க.....சிக்குனா சைடு கேப்புல வெளிய போயிருவேன். சம்முல்லாம் வெளிய போற ஆளு இல்ல. தவிர நானும் எப்பிடி விளையாடனும்னு யோசிச்சு வச்சிருக்கேன்....அதுல நானே மண்ணள்ளி போட்டுக்குவேன்....நீங்க ஏதும் பண்ணிடாதீங்கடா”னு சொல்லுச்சு.

51வது நாள்

சென்னை சிட்டி கேங்க்ஸ்டா அலாரம் ! கேங்க்ஸ்டான்னு வார்த்தை வந்ததுக்கு ரியோ தலைய தூக்கிப் பாத்தது எதேச்சையானதுன்னு நம்புவோம். கடனுக்கு ஆடுனானுங்க.

Why blood ? same blood ! அடுத்த டாஸ்க். பாதி பேர் கால் செண்டர் எக்சிக்யூட்டிவ், மீதி பேர் கஸ்டமர்கள். கஸ்டமர்கள் வகை தொகையில்லாம என்ன வேணும்னாலும் கேட்டு, எக்ஸிக்யூட்டிவ எரிச்சலடைய செஞ்சு ஃபோன கட் பண்ண வைக்கனும். அப்பிடி தவறுனா கஸ்டமர் அடுத்த வார எவிக்ஷனுக்கு செலெக்ட் ஆவார். கூடவே நான் எவிக்ட் செய்யப்பட்டேன்னு ஒரு போர்ட மாட்டிக்கிட்டு சுத்தனும். கூடவே மறுபடியும் எக்ஸிக்யூட்டிவ் கஸ்டமருக்கு ஃபோன் பண்ணி தன் சர்வீஸுக்கான ஸ்டார் ரேட்டிங்க வாங்கனும்.

எக்ஸிக்யூட்டிவ் டீம் : பில்டர், சம்மு, ஆஜீத், கேபி, ஜித்து, ஷிவானி, அன்னப்போஸ்டு

கஸ்டமர் டீம் : ஆன்னை, ரியோ, நிஷா, சோமு, ரம்யா, சனம், ஆரி ப்ரோ

முதல் கால் அன்னை டூ பில்டரு

வழக்கம்போல அதே பாட்டு. யாருக்காக விளையாடுறேன்னு சொல்லு ? ஏன் அப்பிடி சொல்றேன்னு சொல்லு ? அன்பு காட்டுனத ஃபேக்னு ஏன் சொன்னன்னு சொல்லு ? கைல யாரு பேர எழுதியிருக்க சொல்லு? இப்பிடி கேட்டதும் எல்லா கேள்விக்கும் எப்பயும் போலவே எல்லாருக்கும் தெரிஞ்சத சொன்னவன். கைல எழுதியிருக்குற பேர மட்டும் காட்ட முடியாதுன்னு சொல்லிட்டான். அவன ஃபோன கட் பண்ண வைக்க முடியல....! ஆனா பில்டரு தெளிவா அர்ச்சனா வாயில இருந்தே அன்பு ஸ்டார்டஜிதான்னு சொல்ல வச்சான். அன்னையும் “நான் உன்மேல அன்பு ஆயுதத்த வீசிட்டே இருப்பேன்”னு சூளுரைச்சுட்டு போயிட்டாங்க.

அவன் கைல எழுதி இருக்குற பேரப் பத்தி கேபிக்கு தெரியும் போல....அத அர்ச்சனாகிட்ட சொன்னதாலயோ என்னமோ கேபிகிட்ட “நல்லா செய்யுறீங்கப்பா உங்க டீம்”னு சொன்னான். உடனே கேபி ஸ்டார்ட் பண்ண ஆரம்பிச்சுச்சு “அதெப்பிடி நீ எனக்காக அர்ச்சனா விளையாடுறாங்கன்னு சொல்லப் போச்சு ? ஆஜீத் கேப்டன்ஸி சரியில்லன்னு அவங்கிட்ட சொல்லிட்டு கமல் சார் கிட்ட ஏன் மாத்தி சொன்ன?”ன்னு கேட்டதுக்கு, அது என்ன மேட்டர்னு கேக்கப்போன ஆஜீத்கிட்ட அவன பேச விடாம பண்ணுச்சு கேபி, ஷிவானிய கூப்ட்டு என்னன்னு கேக்கப் போனா அதையும் பேசவிடாம “என்னயப் பாத்து பேசு”ன்னு ஒரே ரப்சர். இதுல சோமு வந்து “நான் ட்ராமா பண்றேன்னு ஏன் சொல்ற?”ன்னு கேட்டு குடைச்சல்......இதுல அன்னை அர்ச்சனா தன்னை அக்கான்னு கூப்டக்கூடாதுன்னு அலட்டல். “ஏண்டா கேங்கா வந்து அடிக்கிறீங்க?”ன்னு கேட்டதுக்கு கேங்குன்னு வார்த்தைய கேட்டதும் தூங்குனவன எழுப்புன மாதிரி ரியோ வந்து கத்த........யப்ப யப்பா.....! ஆனா இவ்வளவு நேரமும் பில்டரு பொறுமையா இருந்தது ஆச்சர்யந்தான்......எப்பிடியும் ரெட் கார்ட் வாங்கியிருக்க வேண்டிய சம்பவம்.

“சரிடா..... எங்கிட்ட சண்டை போட்டு ஹீரோ ஆகணும்னு முடிவு பண்ணீட்டீங்க வாங்கடா”ன்னு சொன்னதும்தான் விட்டானுங்க எல்லாரும். இன்னைக்கு எந்த இடத்துலையும் அவன மீறி எதுவும் செய்யல.....முடிஞ்சவரை அவன் கட்டுப்பாடாத்தான் இருந்தான். ஆனா இது வெள்ளிகிழமை வரை நீடிக்குமான்னு தெரியல.....

அடுத்து சனம் டூ சம்மு....

கேப்டன்சி ஜெயிச்சத பத்தி கேட்டதும்....அதுக்கு ஏற்கனவெ சொன்ன பதில சம்மு சொன்னதும்......”உன் கேப்டன்ஸிய எதுக்கு விமரிசிச்சாங்க?”ன்னு கேட்டதுக்கு “அவங்க வளர்ப்பு அப்பிடி”ன்னு சொன்னதுக்கு....”அப்பிடி சொல்லாதீங்க அது தப்பு”ன்னு அங்கயே சனம் சொல்லுச்சு. சைனாவாலையும் சம்முவ ஃபோன கட் பண்ண வைக்க முடியல. சோ சனமும் அடுத்த வார எவிக்ஷன்ல இருக்கு.

வெளிய வந்த சம்முகிட்ட ஆரி ப்ரோ “எங்க அம்மா, அப்பாவ எதுக்கு இழுக்குற?”ன்னு ஆரம்பிச்சதும் “நீயுந்தான் என் தாய்மைய பத்தி தப்பா சொல்றே”ன்னு சொல்லி ரெண்டும் கத்திக்க ஆரம்பிக்க....குறுக்க வந்த பாலா சனத்துக்கிட்ட சம்முவுக்கு ஆதரவா எக்ஸ்ப்ளயின் பண்ண மறுபடியும் ஆரிக்கும், பில்டருக்கும் பஞ்சாயத்து.....சட்டுன்னு பில்டரு “சார் ஹீ இஸ் ஸ்பரெயிங் சார்”னு சீன காமெடியா மாத்திட்டுப் போயிட்டான். பில்டரோட கவுண்டருக்கு ரம்யா செம்ம ஃபேன் போல.....ரகசியமா சிரிக்குது. அதுவும் ஆரிய சொன்னா பொண்ணுக்கு பொழுதே சந்தோஷமா மாறிக்குது. “நீ ஹூரோன்னா நாங்க எல்லாம் இங்க வில்லண்டா”ன்னு அவரா பேசிட்டு இருந்தாப்ல ஆரி ப்ரோ. சம்மு “சரி தப்புன்னா சாரி”ன்னு சொன்னதுக்கு, அதவரைக்கும் “தாய்மையப் பத்தி தப்பா பேசல”ன்னு சொன்ன ஆரி ப்ரோ “அப்ப தாய்மைய பத்தி நான் சொன்னதுக்கும் சாரி”ன்னு எதுக்கு சொன்னாப்லன்னு தெரியல.

இவனுங்க இன்னும் 2 நாளைக்கு இதே டாஸ்க்க வச்சு சண்டையிழுத்து விளையாடுவானுங்க போல....டீவியப் போட்டா தன்ணியப்போட்டுட்டு சலம்புற காதுகுத்து பந்தி மாதிரி கசகசன்றானுங்க......புதுசா எதாச்சும் சண்டை போடுவானுங்கன்னு பாத்தா....3வது வாரம் சொன்ன விஷயத்துக்குதான் இன்னும் சன்டை போட்டுட்டு இருக்கானுங்க. அடேய் பிக்பாஸ் க்ரியேட்டிவ் டீம்.....திஸ் டைம் நீங்க வெரி வெரி ஒர்ஸ்ட்டுடா.....!


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)