பிக்பாஸ் – 4 : நாள் - 32 (05.11.20)


சரியா நாம எதிர்பார்த்த மாதிரி ஒண்ணுமே இல்லாத எபிஸோட் இது. ஸ்டாம்புக்கு பின்னாடி எழுதுனா கூட அரை பக்கம் மிஞ்சும்.

32வது நாள்

“ஆத்தங்கரை ஓரத்தில்” அலாரப் பாட்டு. ரம்யாவும், அன்னப்போஸ்டும் ஒரே பெட்டுலதான் தூங்குதுக....எந்திரிக்கையில பாத்தா அன்னப்போஸ்டு கழுத்த கிட்டத்தட்ட நெறிச்சிட்டு இருக்கு ரம்யா.....தூங்கும்போது பேச ஆரம்பிச்சிருக்கும் போல அன்னப்போஸ்டு.

அவன் அவன் டான்ஸ் பார்ட்னர்கள் கூட சேர்ந்து சலங்கை ஒலி கமல் ரேஞ்சுக்கு ஃபீல் பண்ணி ஆடிட்டு இருந்தானுங்க. அதுவும் சோமன், ரம்யா கூட சேர்ந்து “டப்பு டுப்பு டும்....டப்பு டப்பு டும்மு டும்” நு அட்ட டைம்ல ரெண்டு காலையும் தூக்கி ஆடிட்டு இருந்தான்.

காலை டாஸ்க். எல்லாரும் சுண்டல் விக்கனுமாம். பேசாம இவனுங்கள எல்லாத்தையும் மொத்தமா 5 பேரிச்சம்பழத்துக்கு வித்துரலாம். அர்ச்சனா சுண்டல கிண்டலோட விக்க ஆரம்பிக்க...ரியோ – சம்முவ வம்பிழுத்திட்டு, பில்டர அவங்க அஸிஸ்டென்ட்டா சேத்துக்கிட்டு ஷிவானிகிட்ட போயி “கடலை வேணுமா?”ன்னு கேட்டதுக்கு “ஒரு சுருட்டை குடுங்க”ன்னு கேட்டுச்சு. பொட்டலத்ததான் சுருட்டைன்னு சொல்லியிருக்கு மேடம். சாத்தூர்ல அப்டித்தான் சொல்லுவானுங்க போல.

யப்பா இன்னைக்கு பெய்யுற மழை எல்லாம் ஜித்து பாய்க்குதான். முதல் முறையா இந்த வீட்ல ஒரு டாஸ்க்குல கலந்துக்கிட்டாப்ல. இதுக்கே அவர டைட்டில் வின்னர்னு சொல்லிடலாம். நேரா கொண்டுபோயி நிஷாகிட்ட மட்டும் வித்துட்டு வந்து உக்காந்துட்டாப்ல. ஹவ் க்யூட் யு நோ....!

சோமு கொண்டுபோயி ரம்யாகிட்ட விக்க...அது “வேணாம் தம்பி”ன்னு சொன்னதும் சோமு சுருங்கிட்டான் இந்த வார்த்தைய கேட்டு. அடுத்து ஆரி ப்ரோ...சுண்டல் விக்கிற மாடுலேஷனும், பாடி லேங்குவேஜும் கூட மார்ச் பாஸ்ட் பண்ற மாதிரிதான் இருந்தது. ரொம்ப சீரியசா காமெடி பண்ணிட்டு இருந்தாப்ல. விட்டா “அது எப்பிடிடா நான் உயிரக் குடுத்து கமெடி பண்ணிட்டு இருக்குறப்போ சிரிப்ப”ன்னு கமெடிக்கு சிரிச்சவன அடிப்பாப்ல போல....ஒர்ஸ்டு டா டேய்.

அந்தாளு வித்துட்டு இருந்தப்போ சம்மு “ஐஸ் க்ரீம்தான் வேணும்”னு காமெடியா கேக்க, “ஹலோ இப்ப நான் விக்கனுமா ? வேணாமா?ந்னு கேட்டு கோவப்பட்டப்ல. யாரும் தடுக்கலேன்னா  “சுண்டல் விக்கிறவன்னு தெரிஞ்சும் நீங்க எங்கிட்ட ஐஸ் க்ரீம் கேக்கும்போதே தெரியுது நீங்க என்னய கார்னர் பண்றீங்கன்னு. எத விக்கிறவங்கிட்ட எதக் கேக்கனும்னு கூட தெரியாத தகுதி இல்லாத நீங்கதான். இந்த வீட்டுக் கேப்டன்...அவமானம். இதுக்கே என்னால ஏய் தறுதலன்னு 3 தடவ சொல்ல முடியும். ஆனா பில்டரு மாதிரி இல்ல நான். குழந்தைங்க பாக்குற இந்த நிகழ்ச்சியில நான் அப்பிடி தறுதல, தறுதலன்னு 3 தடவ சொல்லிக்காட்ட மாட்டேன்”னு சம்மு கிட்ட சாமுராய் சண்டைக்கு தயாராகியிருப்பார்.. யப்பா டேய் நீ சுண்டல் கேன கீழ வச்சுட்டுப் போடாப்பான்னு அர்ச்சனா சொல்ல. வெறப்பா கிளம்பிட்டாப்ல.

அப்பறம் பாவம் சம்மு பில்டர் கிட்டையும் சுச்சி கிட்டையும் “அவன யாரச்சும் கேட்டிருக்கலாம்...இப்பிடி அசிங்கமா கத்துறான்”னு வருத்தப்பட்டதும், சுச்சி “அப்பிடி கரடி மாதிரி கத்தும்போது பக்கத்துல போனா கைய முறுக்கி அடிச்சுருவான்னு எல்லாருக்கும் ஒரு பதட்டம் இருக்குமா இல்லையா ?”ந்னு பாவமா கேக்க, பில்டரு “ஏற்கனவே வாய்க்காத் தகராறு. இதுல வாண்டடா வாய உடைச்ச கேஸ் வாங்கனுமான்னு பாக்குறேன் வேற ஒன்ணுமில்ல”ன்னு சொன்னான்.

பாவம் சகுனி வாழ்ந்து கெட்ட ஜமீன் ஆகிட்டாப்ல. வந்த 1 வாரத்துக்கு எங்க பாத்தாலும் ட்ரெண்டிங்க்ல இருந்த ஆளு....இன்னைக்கு எங்க இருக்காப்லனு சர்ச்சிங்க் பண்ண வேண்டியதா இருக்கு. நிஷாவ தவிர எவன் சமச்சாலும் சாப்பிட மாட்டேன்னு அலும்பிட்டு இருந்தாப்ல. பாவம் அவர கண்டுக்கதான் ஆளில்ல....சனம்லாம் புத்தி சொல்ற அளவுக்கு வந்துட்டாப்ல. இப்பிடியே இருந்தா எப்பிடியும் ரெண்டு நாளுல வீட்ல இருந்து ஒரு பாடி வெளிய வந்துரும்.

அடுத்து கேஸ் ரியோ – நிஷா

பிராது - என்நேரமும் அன்பை எதிர்பார்த்தல். சரியானவற்றைக் கூட தானாக செய்யாதிருத்தல்.

காமெடியா ஆரம்பிச்சு காமெடியாவே முடியுற நேரத்துல ஆரி ப்ரோ ரம்யாகிட்ட கொஞ்சம் சலசலப்பு ஏற்படுத்துனார். நிஷா ஜெயிப்பு.

“சுச்சி உள்ள வரும்போது உன் மேல சொன்ன குறைகளத்தான் நான் பிராதா குடுத்தேன். அதுக்கு நீயும் நல்லா நறுக்குன்னு பதில் குடுத்த....வா இப்ப நாம ரென்டு பேரும் ஹக் குடுத்துக்குவோம்”னு கட்டிப்பிடிச்சுக்கிட்டாங்க.

ஆரி ப்ரோ அவரு கேஸ்க்கு கை தூக்கலன்றதுக்காக நிஷாவ அன் ஃபிட்னு சொல்லிட்டாராம். ரைட்டு இன்னும் பிக்பாஸ் மட்டும் பாக்கின்னு நெனைக்கிறேன். வெளிய வந்தா பாரத் ரத்னால்லாம் கேப்பாரு போலடோய்....

இதோட இந்த கருமாந்திரம் பிடிச்ச டாஸ்க் முடிஞ்சிருச்சாம். என்ன போங்குடா இது ? சனம் பில்டரு மேல குடுத்த கேஸ் என்னடா ஆச்சு ? எதோ உள்குத்து இருக்கு போல.

வெளிய வந்த ஆரி ரம்யாகிட்ட அவங்க வாதத்திறமைல பாதாம், பிஸ்தாலாம் கலந்து அருமையா இருந்துச்சுன்னு இளிச்சிட்டு இருந்தாப்ல. ஆனா ரம்யா “ஆடு நனையுதுன்னு ஆரி ஏன் அழுகுறான்?”ற மோடுல....”நீ சொன்னா சரியாதான் இருக்கும்”னு எஸ்கேப்பாகிடுச்சு.

கும்பலா பொண்ணுங்க எல்லாம் பெட்ல படுத்துக்கிட்டு அந்தாக்ஷரில மன்மத ராசா பாட்டப் பாட....அதுக்கேத்தாப்ல அந்த மூலையில பில்டரும், சாத்தூரும் ரொமன்ஸ் மூடுல இருந்தானுங்க. இவனுங்க எப்ப ரொமான்ஸ் பண்ணாலும் பச்ச கலர் ஃபிளவர் வாஸ் மாதிரி பக்கத்து பெட்ல இருக்காப்ல ஆரி ப்ரோ....என்னைக்கு கண்ணு முழிச்சு இவனுங்களுக்கு சாபம் குடுத்து அருகம்புல்லா மாத்தப் போறாப்லன்னு தெரியல. என்னதான் கூச்சல் போட்டு இவனுங்கள கிளப்பப் பாத்தாலும்...ரெண்டும் “எவனோ விசிலடிக்கிறான்”ற மாதிரி இருந்துச்சுங்க.

மறுபடியும் சகுனி அவரு ட்ராமாவ ஆரம்பிச்சாப்ல. வெறும் சோத்த தண்ணி ஊத்தி சாப்பிட, ரியோ மட்டும் மரியாதைக்கு என்னன்னு கேட்டதுக்கு “எனக்கு இதான் பிடிச்சிருக்கு”ன்னு சொன்னதும்....”அதான் அவனே சொல்லிட்டானே”ன்ற மாதிரி எல்லாரும் வேலைய பாக்க போயிட்டானுங்க. டேய்....தலை தொங்குற மாதிரி இருக்கு....எவனாச்சும் என்னான்னு கேட்டு ஜூஸக் குடுத்து பஞ்சாயத்த முடிங்க...இல்லேன்னா முதியோர் வன்கொடுமை சட்டத்துல உள்ள போயிறப் போறீங்க....!

சமையல் டாஸ்க்கு ஓன்ணு.

டீம்  - 1 அர்ச்சனா, நிஷா, பில்டர், சம்மு, சுச்சி, ஆஜீத், கேபி.

டீம் – 2 அனிதா, சனம், சுரேஸு, ஷிவானி, ஆரி, ரம்யா, ரியோ, ஜித்து

இருக்குற பொருள்கள வச்சு குடுத்த டிஷ்ஷ பண்ணனும். டீம் 1 – வெண்பொங்கல், டீம் 2 – கேசரி.

வெண்பொங்கல் டீம் வின்னு.

பிக்பாஸ் சம்முவ கன்ஃபெஷன் ரூமுக்குள்ள கூப்ட்டு. “சப்டைட்டில் போடுற அளவுக்கா இங்கிலீஸுல பேசுவீங்க இம்சைகளா ? நானே ரெண்டொருதடவ ஹிந்தி பிக்பாஸுக்குள்ள வந்துட்டோம்னு பதறிட்டேன். எல்லாத்தையும் தமிழ்ல பேசச் சொல்லு”ன்னு சொல்லி அனுப்புனாப்ல.

இத வச்சு சம்மு அது குரூப்போட உக்காந்து சுத்தத் தமிழ்ல பேசி காமெடி பண்ணிட்டு இருந்துச்சு.

அடுத்து ஃபன் டாஸ்க்காம். FM ஸ்டேஷனாம். சுச்சியும், அர்ச்சனாவும் ஆர்ஜே வாம். இவனுங்கள வச்சு ஃபன் பண்ணனுமாம். சரி அதுக்கு நாங்க என்ன பாவம் பண்ணோம் ?

ஆனா அர்ச்சனா இந்த டாஸ்க்குல அமுக்கு டுமுக்கு அமால் டுமால் தான். என்ன ஃப்ளோ, என்ன டோன், என்ன ஸ்பண்டேனியஸ் யப்பா.....உண்மையாவே வேற லெவெல்ல இருந்துச்சு. அப்பறம் இவனுங்கள வச்சு பாட்டுப் பாட சொல்லி என்னமோ பண்ணி முடிச்சானுங்க. ஆனா பாவம் இதுல சுச்சிக்கு பெருசா வாய்ப்பில்லாம போயிடுச்சு. இந்த வருத்தத்த கடைசில பில்டர்கிட்ட சொல்லிட்டு இருந்தாங்க சுச்சி.

இதுல காலையில மாதிரியே அர்ச்சனா பில்டரையும், ஷிவானியையும் சேர்த்து வச்சுப் பேச, பில்டரு “இனிமே அப்பிடி சொல்ல வேணாம்”னு தன்மையா கேட்டுக்கிட்டான். நம்ம பில்டரா இது ? அப்பறம் அர்ச்சனா அவன உள்ள கூப்ட்டு வே”ற யாரும் இப்பிடி சொல்லிரக் கூடாதுன்னுதான் நான் இத வெளிய சொன்னேன்”னு ஒரு எம்.ஏ பிலாசபி விளக்கம் குடுத்தாங்க.

பின்ன இத ஷிவானிகிட்ட பில்டரு சொல்லிட்டு இருந்தான்...”இனிமே அம்மா சென்டிமென்டும் வேணாம்”னு சொல்லப்போறேன்”னு சொன்னான். அதுக்கப்பறம் அவன் பேசுனத டாவின்சி கோட் மாதிரி டான் பிரவுன் தான் டீகோட்தான் பண்ணனும். பாவம் ஷிவானிதான் இவன் என்ன பேசுறான்னு தெரியாமையே மண்டைய மண்டைய ஆட்டிட்டு இருந்துச்சு....நல்ல வேளை அவன் “இதுல இருந்து என்ன தெரியுது?”ன்னு கேட்டிருந்தா “பேசிகிட்டே பாதி சட்டி சோற காலி பண்ணிட்டன்னு தெரியுது”ன்னு சொல்லியிருக்கும். ப்ப்பா....முடிஞ்சது..


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)