பிக்பாஸ் – 4 : நாள் - 34 (07.11.20)
“நல்ல நாளுலையே தில்ல நாயகமா” இருக்கும் நம்ம பிக்பாஸ்....இன்னைக்கு ஆண்டவர் பிறந்தநாள் வேற...கேக்கனுமா ?. ஆமா ஆண்டவரோட பிறந்தநாள் கொண்டாட்டம் போக சொச்ச மிச்சமா பிக்பாஸ் கண்டென்ட் இருந்துச்சு.
உலகநாயகன் கலைஞானி
கமல்ஹாசன் பிறந்தநாள். அவர கொண்டாட ஒரு தனி ஷோ பண்ணி அதுல இந்த வீட்டானுங்கள கொண்டாந்திருக்கனும்.
அதவிட்டுட்டு சில்றத்தனம் பண்ணிட்டானுங்க. ஆண்டவர் அப்டியே அச்சுல வார்த்தா மாதிரி
பிளாக் கலர் ட்ரெஸ்ஸுல சும்ம அள்ளுனாப்ல.
உள்ள வந்து
வணக்கம் சொன்னதும் பிக்பாஸ் ரொம்ப பாசமா “பிறந்தநாள் வாழ்த்துகள் கமல் சார்”னு சொல்ல,
“ரொம்ப நன்றி”ன்னு சொன்னதும் “ட்ரீட் என்ன கமல் சார்?”னு ஆஃபீஸ் கொலீக் மாதிரி அல்பையா
கேக்க, “I Treat all eaqally “னு ஆரம்பிச்சு முடிக்க, “ம்ம்ஹும்....உலகம் தோன்றுன காலத்துல
இருந்து ட்ரீட்னு கேட்டா..... தர முடியும், முடியாதுன்னோ, இல்ல 1 ரூபாய் முட்டாய் குடுக்குறதோதான்
பழக்கம்....அட உனக்கெல்லாம் குடுக்க முடியாதுடான்னு மூஞ்சில அடிச்ச மாதிரி கூட சொல்லியிருக்கானுங்க.
ஆனா இப்பிடி ஒரு பதில ஒரு பயலும் குடுத்ததில்ல. கேட்டது குத்தமா....ரொம்ப சந்தோஷம்...வீட்டாளுக
பண்ண கேக்க உங்களுக்கு சர்ப்ரைஸா குடுக்குறோம்”னு சொல்லிட்டு ஓடிட்டாப்ல பிக்பாஸ்.
ஸ்க்ரீன்ல நம்ம
ஹவுஸ்மேட்ஸ் தெரிய குதூகலமா வாழ்த்துகள் சொன்னானுங்க. “இன்னைக்கு எனக்கு பிறந்தநாள்
மட்டுமில்ல, எங்க அப்போவோட இறந்த நாளுந்தான்”...அப்பிடி இப்பிடின்னு கடைசியா கட்சி
பேர்ல கொண்டாந்து நிப்பாட்டுனார். “சரி கேக்கு நல்லா இருக்கு. இத கிராக்குகள் உங்களுக்கே
என் அன்ப ஐசிங் ஆன் த கேக்கா போட்டு திருப்பி அனுப்புறேன் தின்னுங்க”ன்னு சொன்னார்.
பின்ன இன்னொரு
சர்ப்ரைஸா ஹவுஸ்மேட்ஸ் எல்லாரும் சேர்ந்து கமல் சார் மெட்லி ஒண்ணு பண்ணானுங்க........வாழ்க்கையிலயே
இந்த செட்டு ஹவுஸ்மேட்ஸ் செஞ்ச ஒரே உருப்படியான விஷயம் இதுதான்.....தரமா பண்ணானுங்க.
ஜித்து பாயும் கூட சேர்ந்து சொடக்கெல்லாம் போட்டாருன்னா பாருங்களேன்.....வேல்ஸ் இல்லாமப்
போயிட்டாப்ல.....ப்ச்ச் வருத்தங்கள்.
இதக் கேட்டுட்டு
“எனக்கு இளையராஜா & எஸ்.பி.பி நியாபகம் வருது. போன பிறந்தநாளுக்கு வர முடியலேன்னு
எனக்காக ஒரு வாய்ஸ் நோட் அனுப்புனாப்ல எஸ்.பி.பி. அதுதான் இனிமே எனக்கு வாழ்க்கை முழுக்க
வரப் போற என் பிறந்தநாளுக்கு வாழ்த்து”ன்னு சொல்லி கசிஞ்சாப்ல. அந்த வாய்ஸ் நோட்ட போட்டும்
காட்டுனாப்ல. “சரி வெள்ளிக்கிழமை விஷயத்த பாத்துட்டு வாங்க”ன்னு சொல்லிட்டு போயிட்டார்.
34வது நாள்
“கன்னித்தீவு
பொண்ணா” பாட்டு அலாரம். செட்டு செட்டா சேர்ந்து ஆடுனானுங்க.....அப்பறம் கமல் சாருக்கு
கேக் பண்ணானுங்க....!
நைட்டு 1 மணிக்கு
“என்னடா கேப்டனா பதவியேற்க இன்னும் 2 நாள் இருக்கு. அதுவரைக்கும் என்ன பண்றது ? ஆங்....ஹவுஸ்
கீப்பிங் கேப்டன் நாமதான...! இதுவரைக்கும் யாருக்கு கிளாஸ் எடுக்கல?”ன்னு பாத்துட்டு
ஷிவானி & கேபிகிட்ட வந்தாப்ல.....
ஆரி : கேபி...உள்ள
கூட்டலேன்னா சொல்ல மாட்டியா ?
கேபி : நான்
ஏன் சொல்லனும் ? அது நீ கூட்ட வேண்டிய எடம்
ஆரி : என் இடம்ன்னாலும்
எங்கிட்ட வந்து சொல்லனும்ல...ஏன் ஷிவானி நீ சொல்ல மாட்டியா ?
ஷிவானி : இந்தா....என்ன
சொல்லனும் ? எங்களுக்குன்னு சொன்ன இடத்த நாங்க கூட்டுறோம் இதுக்கு மேல வேற என்ன பண்றது
? உனக்கு ஒட்டடை அடிக்கவா ?
ஆரி : கிச்சன
நான் கூட்டுனேன் அது என் இடமா ?
கேபி : ஹலோ
என்ன படமா ?....கிச்சன நான் கூட்டுனேன்....
ஆரி : அது சரி
ஒரு டிசிப்ளின் வேணாமா ?
கேபி : மொத
சத்தத்த குறை....நாங்க ஒழுங்காதான் வேலை செய்யுறோம்
ஆரி : இந்த
வாரம் நான் உட்பட யாரும் ஒழுங்கா வேலை செய்யல....இத நானே சொல்றேன்
ஷிவானி : யப்பா
கேட்டுக்கோங்க....இந்த வார ஒர்ஸ்ட் பெர்பார்மர் இவந்தான்னு இவனே சொல்லிட்டான்....இப்பவே
அந்த ரூமத் தொறந்து இவன உள்ள போடுங்கய்யா...நிம்மதியாவாச்சும் தூங்கலாம். சாவடிக்குறான்
//
பாவம் ஆரி.
ஆஜீத் மாதிரிதான் இருக்கும் இந்தப் பொண்ணுங்கன்னு நெனச்சுட்டாப்ல போல.....ரெண்டும்
“கிளம்பு காத்துவரட்டும்”னு லெஃப்ட்டுல டீல் பண்ணிட்டு போயிடுச்சுங்க. ஆரி ஆறிப்போன
பூரியாய் மாறிய தருணமிது.
அப்பறம் லோகேஷும்,
அனியும் வந்து விக்ரம் பத்தி பேசிட்டு.....40 வருஷம் செட்டுல இருந்த நடிகன்....4ம்
தலைமுறை டெக்னீஷியன்ஸோட வேலை பாக்குற நடிகன்னு ஒரு சூப்பர் டேட்டா சொன்னாங்க. பிறகு
விக்ரம் டீசர வீட்ல உள்ளவனுங்களுக்கு காமிச்சாங்க. ரம்யா ஒரு அருமையான விசில் போட்டாங்க.
பட்டுன்னு நாகார்ஜூன்
ஸ்க்ரீன்ல தோன்றுனார். பிறந்தநாள் வாழ்த்துகள சொல்லிட்டு....’தெலுங்கு பிக்பாஸ்ல நல்ல
நாள் அதுவுமா ஒரு ஆள சேவ் பண்ணுங்க”ன்னு ஒரு ஆள் பேர காமிச்சு சொல்ல சொன்னாங்க. இவரும்
சொன்னார்.
இப்ப கமல் சார்
குடும்பம் ஜூம்ல....சுகாசினி சாருஹாசன கமலுக்கு இதுதான் உங்க அண்ணன்னு அறிமுகப் படுத்திவச்சது
இந்த கதையிலேயே பெரிய ட்விஸ்டு. அப்பறம் “வாங்குற காசுக்கு கொஞ்சம் வேலை பாத்துக்குறேன்”னு
சொன்னார். ( ஏங்க 1 மணி நேரத்துக்கு அப்பறமாவா இத சொல்லுவாய்ங்க ?)
பார்சி மொழிக்காரன்
கிட்ட போயி பட்டினத்தார் பாட்டு சொன்ன கதையா......இவரு சனத்துக்கிட்ட ஏதோ சுத்தி சுத்தி
சொன்னதும் “அய்யோ அவரு வீட்ல இல்லைங்க”ன்ற மாதிரி பதறி “நீங்க எதப் பத்தி பேசுறீங்க?”ன்னு
கேக்க....தருதலை மேட்டருக்கு வந்தார். பில்டரு “சார் இது நான் சின்ன வயசுல இருந்து
அர்த்தம் சரியா தெரிஞ்சுக்காமயே புழங்குன ஒரு வார்த்தை....அதனாலதான் சகஜமா சொன்னேன்”னு,
சனமும் இவனும் மறுபடி அதே ரெக்கார்ட தேய்க்க.... “ஆனா ரெண்டு பேரும் மாத்தி மாத்தி
தூண்டி விட்டுக்குற ஆளாத்தான் இருக்கீங்க....உங்கள திருத்த முடியாது”ன்னு சொல்லி....”அந்த
வார்த்தைய இனிமே சொல்லாதீங்கன்”னு சொல்லி வாய மூடுறதுக்குள்ள சனம் அத மறுபடியும் சொல்ல....”அவன்
ஒரு தடவ சொன்னத ஆரி 3 தடவையும், நீ 9 தடவையும் சொல்லி நாறடிச்சுட்டீங்க....வேணும்னா
1...2...3 சொல்றேன் கோரசா தருதலைன்னு எல்லாரும் பாடுறீங்களா?”ன்னு சர்காசம் பண்ணார்.
இதுல காலையில
கக்கூஸ்ல வேற சனத்தப் பாத்து தருதலைன்னு ஏதோ பாடியிருக்கான் போல...”ஆனா அத நான் இதப்
பாத்து பாடல....வேணும்னா ஜித்துவ கேளுங்க”ன்னு பில்டரு சொன்னதும், ஜித்து பாய் “என்னங்கடா
3 நாளா ரொம்ப வேலை வாங்குறீங்க?”ன்ற பார்வையில “ஆமா சார் அவன் சும்மாதான் பாடுனான்....இது
அவன் வாயத் தொறந்தாலே அததான் திட்டுறான்னு சொல்லுது”ன்னு சாட்சி சொன்னாப்ல.
சட்டை பேண்டெல்லாம்
நல்லாத்தான் போடுற. அதே மாதிரி நல்லா நடந்துக்கோன்னு சொல்லி முடிச்சிட்டாப்ல. ஆண்டவரே...இதானா
நம்ம டக்கு ?
ஸ்ருதியும்,
அக்ஷராவும் வீடியோ கால். சந்தோஷம். குடும்பமே வேலை செய்யுதுன்னு பூரிச்சுக்கிட்டார்.
“சரி கேப்டன்சி
பஞ்சாயத்துக்கு வருவோம்”னு ஆரம்பிச்சாரு “ஏண்டா இந்த பதவிக்கு வந்தோம்னு பரிதவிக்க
விட்டுட்டானுங்க இவனுங்க....குறிப்பா ஆரி அவன் இன்ன்னும் என் தலைய Guillotine ல என்
தலைய மட்டுந்தான் எடுக்கல....! கிட்டத்தட்ட எல்லாருமே என்னய சாவடிச்சுட்டானுங்க”ன்னு
பொலம்ப.... ஆண்டவரோ “நீ பில்டருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணிட்டியோ? பாக்குறதுக்கு அவன்
ஆட்டி வச்ச மாதிரி இருக்கு”ன்னு சொன்னதும், பெருசா யாரு இத ஒத்துக்கல....
பின்ன ஆரிக்கு
வந்தாரு....ஆரி வழக்கம்போல வழ வழன்னு ஆரம்பிக்க.....”டேய் நீ பர்சனலா பண்ணேன்னு பாகிஸ்தான்
ஆளுகளுக்கு கூட தெரிஞ்சிருக்கு. சும்மா நடிக்காத”ன்னு ஹவுஸ்கீப்பிங் பஞ்சாயத்துக்கு
வர அர்ச்சனா “இவன் என்னமோ 5 ஃப்ளோர் ஆஸ்பத்திரியில வேலை பாக்குற மாதிரி சீன் போடுறான்.
மொத்தமே 3000 சதுர அடி வீடு....ரெண்டு பேரு சேர்ந்து நடந்தா 3 வது ஆளு தடுக்கி விழுந்துருவான்.
இங்க போயி டேக் ஓவர், ஹேண்ட் ஓவர்னு ஓவரா பண்றான்”னு சொன்னதும், “பாத்தியா இதான் உன்
பஞ்சாயத்து....! சரி, கேப்டன் தகுதி தகுதின்னு தங்கு புங்குன்னு தவ்வுறேல்ல...இந்த
வாரம் அந்த மாதிரி நீ இருந்து காட்டு....மறுபடியும் சொல்றேன் பர்சனாலா அட்டாக் பண்ணாத”ன்னு
சொன்னார்.
2 கேஸையுமே
ஆண்டவர் ஒழுங்கா டீல் பண்ணலேன்னு நெனைக்கிறேன். ஆண்டவரே....இன்னைக்காச்சும் இத சரியா
டீல் பண்ணி முடிச்சு விடுங்க. இல்லேன்னா இதயே இன்னும் 2 வாரத்துக்கு பேசிட்டு சுத்துவானுங்க.
ப்ளீஸ்.
இன்னைக்கு எவிக்ஷன்
இல்ல....இல்ல இல்ல... இன்னைக்கு சேவ் இல்ல....இல்ல இல்ல... இன்னைக்கு ஷோ இல்ல.....இல்ல
இல்ல இன்னைக்கு லீவ் இல்ல”....அப்டின்னு ஒளறி....கடைசியா “எல்லாமே நாளைக்கு மொத்தமா
சொல்றேன்”னு சொல்லிட்டு முடிச்சுட்டார்.
சரி முடிஞ்சு
போச்சுன்னு பாத்தா மோகன்லால் வீடியோ. யப்பா டேய் போதுண்டா....! மனசே இல்லம முடிச்சுட்டானுங்க.
Comments
Post a Comment