பிக்பாஸ் – 4 : நாள் - 38 (11.11.20)

 டாஸ்க்குகள் உருவாக்குறதே அடிச்சிக்கனுன்ற நோக்கத்துலதான் ஆனா இந்த செட்டுக்கு அது தேவையே இல்லையே....ஆரி தலைமைல சனத்தையும், அனிதாவையும் சமைக்க சொல்லி, ஆரிய அங்கயே இருந்து பாத்துக்க சொன்னாலே இன்னுமொரு இலங்கைப் போர பாக்கலாம், “நேர்மைக்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது போலருக்கே?”ன்னு பாஸிங்ல பில்டர்கிட்ட சொல்லிட்டு போனா போதும் உலகப்பெரும்போரே பாக்கலாம்....இத விட்டுட்டு எதுக்கு இந்த இத்துப்போன டாஸ்க்குகள்னு தெரியல....

37வது நாள் தொடர்ச்சி....

எல்லாரையும் லிவிங் ரூமுல உக்கார வச்சு பாட்டி அர்ச்சனா “எவண்டா அத எடுத்தது?”ன்னு கேக்க, ஒருத்தனும் வாயத் தொறக்கல. ஆனா “சந்தேகம் யாரு மேல?”ன்னு கேட்டதுக்கு பெரும்பாலும் சோமன சொன்னானுங்க. பில்டரு “பேசாம எல்லாரும் எல்லாரோட பெட்டு, பெட்டி, துணிமணிகள செக் பண்ணுவோம்”னு சொன்னதும் கேபி “அத ஒத்துக்கமாட்டேன்”னு சொல்லும்போதே பில்டருக்கு அவனுங்க செட்டுதான் பத்திரத்த அடிச்சிருக்குன்னு கன்ஃபார்ம் ஆச்சு.

மொத்த வீடுமே கோழி கெளறுர மாதிரி எல்லாரோட இடத்தையும் ஒண்ணுவிடாம மாங்கு மாங்குன்னு செக் பண்ண.....”தேடுற வேலையெல்லாம் செஞ்சா தேக விரயம் ஏற்படும்”னு நெனச்ச நம்ம ஜித்து பாய்...பப்பரப்பான்னு குப்புற படுத்து தூங்குனாப்ல...! ஹவ் க்ளவர் யூ நோ....!

ரம்யா கேமராகிட்ட போயி நின்னு “அடேய் சீக்கிரம் பஸ்ஸர அமுக்கி டாஸ்க்க முடிச்சு விடுங்கடா! இந்த சோமன் தொல்லை தாங்கல....டாஸ்க்கே நடிக்கிறதுதான், அந்த டாஸ்க்குலையும் அவனுக்கு பொண்டாட்டியா நடிக்கத்தான் சொன்னீங்க. ஆனா இவன் அப்பிடி நெனைக்கிற மாதிரி தெரியல...இவ்வளவு நாளா சோம்பேறியா இருந்த சோமு இப்ப எங்கிட்ட வந்து ‘சேலையில வீடு கட்டவா?’ன்னு பாடி கண்ணடிக்கிறான்....இன்னும் ஒரு நாள் இந்த டாஸ்க்கு நீடிச்சா ‘சிவராத்திரி தூக்கம் ஏது?’ன்னு பாடுவான் போல....பொண்ணா நடிக்க வந்த கேபிகிட்ட ‘உனக்கு தம்பிப் பாப்பா வேணுமா? இல்ல தங்கச்சி பாப்பா வேணுமா?ன்னு கேக்குறான்.....ஏதாச்சும் ஒண்ணு ஆகுறதுக்குள்ள டக்கன்னு டாஸ்க்க முடிச்சு....பட்டுன்னு என்னய சேதாரமில்லாம காப்பாத்துங்கடா”ன்னு கதறுச்சு.

தற்காலிகமா இந்த டாஸ்க்கு முடிஞ்சதுன்னு அறிவிச்சானுங்க. இந்த கேப்புல பில்டரு சோமன் பெட்டுக்கடியில இருந்த பத்திரத்த அடிச்சிட்டான். சத்தமில்லாம அத கக்கூஸுக்கு கொண்டு போயி பதுக்கிட்டு, அந்த கவர திரும்ப சோமன் பெட்டுக்கடியில வைக்கும்போது மாட்டிக்கிட்டான்.

அப்பறம் அவன ரம்யா செட்டு “நீதான் எடுத்த, நீதான் எடுத்த”ன்னு சீண்டிக்கிட்டே இருக்க...பில்டரும் அத்திப்பூத்தா மாதிரி சிரிச்சுக்கிட்டே “நான் எடுக்கல, நான் எடுக்கல”ன்னு பதில் சொல்லிட்டு இருந்தான்....கேபி அவன “ஹானஸ்டா பதில் சொல்லு”ன்னு சொல்லும்போது கூட....”அப்போ பெட்டில இருந்து எடுத்தது யாரு?ன்னு சொல்லு...நானும் சொல்றேன்”னு சொல்லிட்டு ஒரு பக்கம் சுச்சி, ஒரு பக்கம் ஷிவானின்னு காந்தி தாத்தா மாதிரி வெளிய போயிட்டான்....! அவன அந்த லெக்கிங்க்ஸ மாத்த சொல்லுங்கையா !

சுச்சி ஷிவானிகிட்ட “உன் ஆள டிஸ்ஹான்ஸ்டின்னு சொல்லிட்டானுங்கடி”ன்னு சொல்லியிருக்கும் போல....”ஏங்க உங்கள டிஸ்ஹானஸ்டன்னு சொல்லுது கேபி....கேட்டியளா?”ன்னு கேக்க....”எது என்னய அப்பிடி சொன்னானுங்களா?”ன்னு ஷிவானி கிட்ட கன்ஃபார்ம் பண்ண....ஷிவானி சுச்சிகிட்ட கன்ஃபார்ம் பண்ண “டெபனட்லி டெபனட்லி......அத விட இன்னும் கேவலமா ஒண்ணு சொன்னானுங்க....அதயெல்லாம் சொன்னா நீ சனத்த கொன்னுடுவ”ன்னு ஏத்தி விட்டுருச்சு.

உள்ள போன பில்டரு வழக்கம்போல கயகயன்னு கத்த ஆரம்பிச்சுட்டான். சடார்னு குதிச்சு உள்ள வந்து....

ஷிவானி : அவர ஏன் நேர்மையில்லாதவன்னு சொன்ன ?

கேபி : நான் அவங்கிட்டதான் பேசுறேன்...இப்ப நீ எதுக்கு வர ?

ஷிவானி : அவன சொன்னா என்ன என்னய சொன்னா என்ன...சொல்லு எதுக்கு அப்பிடி சொன்ன ?

கேபி : பாருடா....அப்பிடியெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது...

ஷிவானி : குரல உசத்தாத அப்பறம் பில்டரு கைய உசத்திருவான்

கேபி : நான் அப்பிடித்தான் வாய்ஸ் ரைஸ் பண்ணுவேன்...என்னா பண்ணுவ ?

ஷிவானி : நீ என்னா பண்ணுவேன்னா.....நானும் என்னா பன்ணுவ பண்ணுவேன்...

கேபி : ஞே....//

ஒழுங்கா பில்டரு பிரிச்சு விட்டான். அப்பன்னு பாத்து கூட்டத்துல இருந்து எவனோ “அப்ப திருடுனது டிஸ்ஹானஸ்ட்தான?”ன்னு சொன்னதுதான் தாமசம்......பில்டரு வால்யூம் பட்டன திருகிட்டான்....”என்னங்கடா இது ? பெட்டில இருந்து எடுத்தவன் எடை குறைப்பாளனாம்...ஆனா அவங்கிட்ட எடுத்த நான் திருட்டுப்பயலாம்.....ஆமாண்டா எங்கிட்டதாண்டா பத்திரம் பத்திரமா இருக்கு...பெட்டில இருந்து தூக்குனவன் யாருன்னு சொல்லிட்டு பத்திரத்த வாங்கிக்கோங்கடா”ன்னு சொல்லிட்டு வெளிய போயிட்டான். “ஆகா பில்டரு பஞ்சாயத்துல நாம இல்லாமையா?”ன்னு பரவசமான சனம் உள்ள பூந்து...”அதான சாப்பாட கொட்டுனது பாலாவா கூட இருக்கலாம்”னு சைடு பிட்ட போட, கேபி “ஒழுங்கா ஓடிடு....தெஃப்டு கேஸ கொலை கேஸா மாத்திடாத”ன்னு சொல்லி விரட்டி விட்டுடுச்சு.

மொத மொறையா ரியோ “பாலா கோவப்பட்டா அப்பப்ப கோவப்பட்டு அங்கனயே கொலை பண்ணுவான்....இது யாரோ அவன ஏத்திவிட்டு அனுப்பியிருக்காங்க”ன்னு சப்போர்ட் பண்ணான்.

கேட்டு வாசல்ல பில்டரு, ஷிவானி, சுச்சி உக்காந்திருக்க.....சரம் முழுக்க வெடிச்சு முடிச்சதும் உதிரியாப்ப் போன ஒண்ணே ஒன்னு திடீர்னு பட்டுன்னு வெடிக்கும்ல அப்பிடிதான் இருந்துச்சு சுச்சி இன்னைக்கு....

சுச்சி : நீ செஞ்சா அது நேர்மையில்லையாம்....எனக்கு கோவமா வருது....புல்ஷிட்...டென்ஷன்

பில்டரு : இன்னைக்கு நேத்தா பண்றானுங்க விடு....

சுச்சி : நீ செஞ்சா அது நேர்மையில்லையாம்....எனக்கு கோவமா வருது....புல்ஷிட்...டென்ஷன்....டென்ஷன்

பில்டரு : இது ஒரு கேம்...இப்பிடித்தான் இருக்கும்....விடு

சுச்சி : நீ செஞ்சா அது நேர்மையில்லையாம்....எனக்கு கோவமா வருது....புல்ஷிட்...டென்ஷன்....டென்ஷன்

அனிதா : ஆமாண்டா எல்லாரும் உன்னயதான் வம்பிழுக்குறானுங்க....

சுச்சி : நீ செஞ்சா அது நேர்மையில்லையாம்....எனக்கு கோவமா வருது....புல்ஷிட்...டென்ஷன்....டென்ஷன்

பில்டரு : (கக்கத்துல வச்சு அமிக்கிட்டு) இந்தா ....கேட்டு இடுக்குல வச்சு நசுக்கிருவேன்....! அரபோதைல எந்திரிச்ச மாதிரி சொன்னதயே சொல்லிகிட்டு..பேசாம இரு //

அப்பறம் சம்மு வந்து “டேய்....சைக்கோ சுச்சி சொல்லுதுன்னு சண்டைக்குப் போகாதீங்கடா...சகதில பொரண்டு அசிங்கப்பட்டுருவீங்க”ன்னு சொல்ல, “இவ்வளவு வருஷமா எனக்கு உதவியா இருக்குற என் கை, காலையே நான் நம்புறதில்ல....இதுல சுச்சிய நம்புவேனா....யாரையும் நம்ப மாட்டேன்”னு பில்டரு சொன்னதும்...சாத்தூரு “ஹலோ நானும் உனக்காக சண்டைக்கு வரல புரியுதா”ன்னு பொறி பரக்க சொல்ல....”நான் உன்னய அப்பிடி சொல்லல”ன்னு ரெண்டத்துக்கும் ஒரு ஊடல் லைன் ஓடுச்சு.

38வது நாள்

“அடிடா நையாண்டிய” அட்டகாசமான பாட்டு அலாரம். அங்கன அங்கன எல்லாரும் வந்து லான்ல நின்னாலும், ஆடுறத்துக்குதான் ஆளில்ல...! சுச்சியும், அன்னப்போஸ்டும் ஒரு காம்பிநேஷன்ல ஆடுச்சுங்க....ஆத்தீ !

அடுத்ததா ஷிவானி பில்டர்கிட்ட “சைனாவுக்கு நீ மகனா இருக்குறது அதுக்கு டாஸ்க்குல தடையா இருக்காம்”னு சொல்ல....”தடையா இருந்தா தாண்டிப் போக சொல்லு...இதெல்லாம் நான் சொல்ல வேண்டியது ஆனா அது சொல்லிகிட்டு அலையுது...ஃப்ரீயா விடு”ன்னுட்டான்.

அப்பறம் பில்டரு ஒளிச்சு வச்சத தேட முயற்சி பண்ணானுங்க. மார்னிங் டாஸ்க்குல வெத்தலை போட்டபடி பேசனுமாம்....பூராம் வாந்தி எடுத்துட்டு இருந்தானுங்க. சோமனோ “மயில கட்டி வை, மயில கட்டி வை”ன்னு ரம்யாவ கைகாட்டி கதறிட்டே இருந்தான்....இவன மொதல சங்கிகியில கட்டி வைங்கடா...பயங்கர காஜியா இருக்கான். ஆரி வெத்தலை போட்டு பேசுறேன்னு வில்லன் அஜீத் மாதிரி பேசி எல்லார்கிட்டையும் மொக்க வாங்கிட்டு இருந்தாப்ல.

மறுபடியும் டாஸ்க் ஆரம்பிக்குதுன்னு சொன்னாங்க. பின்ன எல்லாரும் சனம் உட்பட பில்டர கன்வின்ஸ் பண்ற வேலையில இருந்தாங்க. அவனோ “பெட்டில இருந்து எவன் எடுத்தான்னு சொல்ல சொல்லு...நான் குடுக்குறேன்”னு சொன்னதுக்கு சோமன் & கோ வாயத் தொறக்கல. தனிதனியா பேசிப்பாத்தும் பில்டரு வீம்ப விடல. ஒரு கட்டத்துல அர்ச்சனா பசங்கள கூப்ட்டு “அவன அடிச்சுப் போட்டு பத்திரத்த எடுங்கடா”ன்னு சொன்னதும் பூராம் ஜெர்க் அடிச்சானுங்க....! “வேல்ஸுக்கு போட்ட ஸ்கெட்ச்ச இப்ப நமக்கு போட்டு அவங்கிட்ட அடிவாங்கிக் குடுக்கப் பாக்குது”ன்னு புரிஞ்சுகிட்டு “இந்த ஐடியா நல்லாயில்ல”ன்னு சொல்லிட்டானுங்க.

பின்ன டாஸ்க்கு முடிஞ்சதா அறிவிச்சானுங்க. தீபாவளி கொண்டாட பூராம் முறுக்கு சுட்டு....ரவா லட்டு பிடிச்சிட்டு இருந்தானுங்க. ஆரியோட அவெஞ்சர்ஸ் டீம் கேமரா முன்னாடி வந்து “தெறிக்கவிடலாமா?”ன்னு சொல்லிட்டு போனது இந்த 3 பேத்துக்குள்ளதான் போலருக்கு.

போற போக்க பாத்தா தூங்கும்போது பால்ல தூக்க மாத்திரைய கலந்துவிட்டு பில்டர மூட்டைல கட்டி வெளிய தூக்கி போட்டுருவானுங்கன்னு நெனைக்கிறேன்.....ஆனா சனம் கண்டிப்பா மூட்டையில ஆள மாத்திரும்....பின்ன பில்டரும் இல்லேன்னா சைனாவுக்கு அங்க என்ன வேலை ?


Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)