பிக்பாஸ் – 4 : நாள் 48 (21.11.20)
அட்டகாசமான காஸ்ட்யூம்ல வந்தார் ஆண்டவர். “காலம் யாருக்காகவும் நிக்காது. மனிதன் நிக்கலாம் ஆனா மணி நிக்காது. தவிர இந்தியர்கள் கடிகாரமே இல்லாம உடம்பு ரிதத்த வச்சே மணிய கணிக்குற தில்லாலங்கடிங்க....இவனுங்களுக்கு அது வருதான்னு பாக்கத்தான் இந்த டாஸ்க்கு அப்டின்னு டீவி காரனுங்க சொல்ல சொன்னானுங்க”ன்னு சொல்லிட்டு, “வெள்ளிகிழமை விஷயங்கள பாப்போம்”னு சொன்னார்.
48வது நாள்
“டங்கா மாரி
ஊதாரி” பாட்டு அலாரம். கடைசில ஆரிக்கு வாச்சது சுச்சிதான். சூதானமா அது கூட சேந்து
சுத்தி சுத்தி ஆடிட்டிருந்தாரு. வ.வா சங்கத்து ஆட்கள் ஷிவானி, சம்மு, ரம்யா சேர்ந்து
ஆடுனத பாத்து பித்தம், கபம், சுரம் நீங்குனது
உண்மை....சத்தியம்.
டைனிங் ஹால்ல
சோமு, சம்மு, ஆஜீத் உக்காந்து மொத நாள் நைட்டு வந்த அல்வாவ சுட வச்சு சாப்ட்டுட்டு
இருக்க, “எது....நான் ஃப்ரிட்ஜுல வச்சு சாப்டலாம்னு சொன்னா உடலுக்கு கேடுன்னானுங்க...இப்ப
அஞ்சு நாள் அல்வாவையெல்லாம் அசால்ட்டா சுட வச்சு சாப்டுறானுங்க?”ன்னு சம்மு பொலம்புச்சு.
கிச்சன்ல இருந்த அர்ச்சனா “ஏண்டா தின்னி சோமா நீ தின்றது என் அல்வாவா இல்ல உன் அல்வாவா?...என்னோடதுதான்னா
பரவாயில்ல”ன்னு சொன்னதுக்கு, சோமன் சம்மு கூட இருக்குற தவ்லத்துல “என்ன சொல்லிக்காட்டுறியா?”ன்னு
கேக்க...சாதா அர்ச்சனா அன்னை அர்ச்சனாவா அவதாரம் எடுக்க ஆரம்பிச்சு “சாப்பாடு விஷயத்துல
நான் சொல்லிக்காட்டுறேன்னு நீ சொன்னது குற்றம்”னு சொன்னதும், சோமன் “ஆகா....சத்தமா
சொல்லிட்டோமே சோத்துல விஷம் வச்ச்சுருவானுங்க இல்ல செட்டுல இருந்து தொரத்தி மறுபடி
அன்னப்போஸ்டுகிட்டயே அனுப்பிருவானுங்க”ன்னு பயந்து வோடோஃபோன் நாயி மாதிரி அர்ச்சனா
பின்னாடியே போயி மன்னிப்பு கேட்டுட்டு இருந்தான். உண்மையிலயே இவன் ஃபைட்டரான்னு பாருங்கடா.....கலர்
கலரா க்ளவுஸ மாட்டி ஃபோட்டோ மட்டும் எடுத்து வச்சி ஏமாத்துறான்னு நெனைக்கிறேன். அர்ச்சனா
குரூப்புக்கு இவ்வளவு பம்முறதுக்கு இவன் கேரளாவுக்கு அடிமாடாவே போகலாம்.
அப்பறம் சம்முவும்,
பில்டரும் அவங்கவங்க வீட்ல உள்ளவங்களுக்கு வரப் போற விஷேஷங்களுக்கு வாழ்த்துகள் சொன்னாங்க.
நைட்டுக்கா
லான்ல அன்னபோஸ்டும் ஆரியும்.....
அன்னப்போஸ்டு
: வாங்க உக்காருங்க ஆரி.....பேசலாம்
ஆரி : உனக்கு
பேசனும்னா....ஓகே நாம பேசலாம்
அன்னப்போஸ்டு
: அன்னைக்கு கிச்சன் விஷயத்த பத்தி பேசிரலாம்
ஆரி : கிச்சன்
விஷயத்த பத்தி பேசும்போது அப்பிடியே அந்த சுச்சி கக்கூஸ் மேட்டரையும் பேசிரலாம்
அன்னப்போஸ்டு
: கக்கூஸ் மேட்டர பத்தி எங்கிட்ட பேசவேணாம்.....கிச்சன் விஷயத்த பேசுவோம்
ஆரி : கக்கூஸ்
விஷயத்த பத்தி பேச வேணாம்னு நீதான் மறுபடியும் பேசுற...
அன்னப்போஸ்டு
: எங்கிட்ட பேசுற விஷயத்த மட்டும் எங்கிட்ட பேசுங்க...மத்தத பேசாதீங்க
ஆரி : மத்ததையும்
உங்கிட்ட பேசுறதுக்கு நான் ஏன் பேசனும்....
அன்னப்போஸ்டு
: அப்ப நாம பேசவே வேணாம்.....நடந்ததுக்கு சாரி....!//
இப்பிடியே இவங்க
ரெண்டு பேரும் பேசனும்னு வந்து உக்காந்துட்டு “பேசனும்”ன்ற அந்த வார்த்தைய மட்டும்
சுமார் 1098765432561783665427725 தடவை பேசிட்டு எந்திரிச்சு நிம்மதியா போயிட்டானுங்க.
அந்தப்பக்கமா ஏதாச்சும் பேய் க்ராஸ் ஆகியிருந்தா அதுவே இதுக ரெண்டுகிட்டையும் “தயவு
செஞ்சு பேசாதீங்கடா”ன்னு கால்ல விழுந்திருக்கும். அன்னப்போஸ்டெல்லாம் இந்த ஜென்மத்துக்கான
பேச்செல்லாம் பேசி முடிச்சிட்டு அடுத்த ஜென்மத்துல அதுக்கு ஒரு பொறப்பு இருக்கும்ல,
அது பேச வேண்டியததான் இப்ப பேசிட்டு இருக்கு.....சோ அடுத்த ஜென்மத்துல அது ஊமையாதான்
பொறக்கும். பேசாம அன்னப்போஸ்டையும், ஆரியையும் பேசவிட்டு வார்த்தைகள கணிக்குற டாஸ்க்கு
குடுத்திருக்கனும்.....மிஸ் பண்ணிட்டானுங்க.
அகம் – அகம்
இந்த காட்டுவாசி
கும்பல பாத்துட்டு “ஒழுங்கா குளிக்கிறீங்களோ இல்லையோ ஆனா நல்லா துணி மணி போட்டு ஷோக்கா
இருக்கீங்கடா”ன்னு பாராட்டுனாரு. குழாயடி சண்டை நல்லா இருந்ததா பாராட்டிட்டு....”இன்னும்
கொஞ்ச வருஷத்துல குழாயடில எல்லா நாட்டு பிரதமர்களும் இதே மாதிரி குடத்த வச்சு சண்டை
போடப் போறானுங்க”ன்னு வருத்தப்பட்டார்.
“பிளாக் அண்ட்
வொயிட் செக்மென்ட் நல்லா பண்ணீங்க”ன்னு ரியோவ வாழ்த்திட்டு எம்.ஜி.ஆர், அம்.ஆர்.ராதா
கூட தன் அனுபவம், விஸ்வரூபம் பட சீன் விளக்கம்னு அருமையான விஷயங்கள சொன்னார். ஆண்டவர்
எப்ப அவர் அனுபவங்கள சொல்ல ஆரம்பிச்சாலும் காலம் தெரியாம கேட்டுட்டே இருக்கலாம்....பேசாம
வாரம் ரெண்டு நாளும் அவர அது மட்டும் சொல்ல சொல்லலாம்.....ஆனா கழுதைக்கு வாக்கப்பட்டா
காகிதம் தின்னுதான ஆகனும்ன்ற மாதிரி....இந்த கிராதகனுங்கள வச்சு ஷோ பண்ணியே ஆக வேண்டிய
கட்டாயம் அவருக்கு.....என்னத்த சொல்றது....!
அப்பறம் கரெக்டா
நேரத்த கணிச்ச 2 டீமையும் பாராட்டுனார். “ஏண்டா நான் சொல்றதெல்லாம் கேக்குற ஆனா பிக்பாஸ்
சொல்ற ரூல்ஸ ஃபாலோ பண்ண மாட்டேங்குறியே ? ரொம்ப சங்கடப்படுறாண்டா பிக்பாஸு....அவன்
சொல்றதையும் கொஞ்சம் கேளு”ன்னு சொன்னார். “இல்ல சார் நான் கடிகார டாஸ்க்குல”ன்னு எதையோ
சமாளிக்குறதுக்கு சொல்ல ஆரம்பிக்க, ரம்யா உள்ள புகுந்து “கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா
என்னய அக்யூஸ்டா மாத்தியிருப்பான்.....நல்ல வேளை சுதாரிச்சுட்டேன்”னு சொல்லுச்சு.
சுச்சிய கூப்ட்டு
“என்ன சுச்சி?”ன்னு கடிகார டாஸ்க்கப் பத்தி கேட்டா அது ஜெயில்ல மயிரிழையில உயிர் தப்புன
கதைய சொல்ல....”அந்த கருமத்தையெல்லாம் நீ கைபேக்குலயே வச்சுக்கோ”ன்னுட்டார். “சரி பில்டருக்கு
அட்வைஸ் சொன்னா என்னடா சொல்லுவீங்க?”ன்னு கேட்டதுக்கு ஆஜீத் “நல்லா விளையாடனும்னு ரொம்ப
ஓவரா சிந்திச்சு கிரிக்கெட் விளையாட்டுல பந்த எத்தி விட்டு ஃபுட் பாலா மாத்திடுறான்.
அந்த ஆர்வத்த குறைக்க சொல்லுங்க”ன்னு சொன்னான். ரம்யாவும், ஜித்து பாயும் ஏறக்குறைய
இதையேத்தான் சொன்னாங்க. ரம்யா “இது அட்வைஸ் இல்ல...டிப்பு”ன்னு டப்புன்னு ஆண்டவருக்கு
உடைசலை குடுத்துருச்சு. “இத நான் கேட்டுக்குறேங்கய்யா”ன்னு பவ்யமா மூஞ்சிய வச்சுக்கிட்டான்.
“அது என்னடா
காதல் கண்ண மறைக்குதுன்னு ஒரு பிராது?”ன்னு கேட்டதும் சாத்தூருக்கும் பில்டருக்கும்
மூஞ்சில சவக்களை தெரிய, ஆரி ப்ரோவோ அவசர அவசரமா அம்மன் TRY கம்பிய தேடி எடுத்து முழுங்கிட்டு
நட்டமா உக்காந்தார்.
“காதல் கண்ண
மறைச்சது சரி...ஆனா கோவம் காதை மறைச்சுடுச்சே ரியோ?ன்னு ஆரம்பிச்சு ரியோவ நல்லாவே வச்சு
செஞ்சார். “கடைசில பில்டரு இதையே நான் செஞ்சா நல்லா இருக்காதுன்னு சொன்னதால தப்பிச்ச...இல்லேன்னா
பிஞ்சது கதவா இருந்திருக்காது....உன் காதா இருந்திருக்கும்”னாரு. இத சொன்னதும் ரியோ
மூஞ்சி முக்குற மூஞ்சுறு மாதிரி ஆகிப்போச்சு. இனி இவன் சோகத்தப் போக்க நிஷா பண்ணப்போற
வேலைகள்லாம் படுபயங்கரமா இருக்குமே.....!
“சரி இப்ப ஒவ்வொருத்தரா
வந்து முன்னாடி இருக்குற சீட்டு ஒண்ண எடுங்க. அதுல இருக்குற ஆளப் பத்தி ஒரு ரகசியத்த
சொல்லுங்க”ன்னு சொன்னதுக்கு.....ஆளாளுக்கு தெரிஞ்ச விஷயத்தப் பத்தி மட்டுமே சொல்லி
ஜகா வாங்க, நிஷா மட்டும் “தன் கூட யாரும் பேச மாட்டேங்குறாங்கன்னு வேணும்ன்னே நெனச்சுக்கிட்டு
தனியா போயி உக்காந்து தானா பேசி கேமராவ தன் பக்கம் திருபிக்கிற கேடி தான் நம்ம அன்னபோஸ்டு...இது
யாருக்கும் தெரியாதுன்னு நெனைக்குது லூசு....ஆனா எனக்குத் தெரியும்”னு சொன்னதுக்கு
அன்னப்போஸ்டு குடுத்த ரியாக்ஸன் இருக்கே....அது நிஷா இன்னும் 4 நாளைக்கு ராத்தூக்கம்
தொலைக்கப்போறதுக்கான அறிகுறி. அன்னப்போஸ்டு இப்பருந்தே வார்த்தைகள லோட் பண்ண ஆரம்பிச்சுடும்.
“ஏண்டா இதெல்லாம்
ரகசியம்னு சொன்னா ரகசியத்த என்னடா சொல்லுவீங்க ? காலையில எந்திருச்சு கக்கூஸ் போவான்,
கருக்கல்ல எந்திருச்சு சுச்சு போவன்னு இதெல்லாம் ரகசியமாடா ? சரி இப்ப பாரு... யாருடா
அது காதல் கண்ண மறைக்குதுன்னு சொன்னவன்?”னு சொல்லி வாய மூடுறதுக்குள்ள ஆரி ப்ரோ கையத்
தூக்கி சரண்டர் ஆக....”அட யாரா இருந்தா என்னன்னுதான் சொல்ல வந்தேன். ஆனா அவசர்ப்பட்டு
கையத் தூக்கிட்டியே?”ன்னு ஆண்டவர் சொல்ல....”கம்பியெல்லாம் தீந்து போச்சு ஆண்டவரே”ன்ற
ரேஞ்சுக்கு மூஞ்சிய வச்சிக்கிட்டாப்ல ஆரி ப்ரோ.
பிரேக்குல ஆஜீத்த
கூப்ட்டு பில்டரு “ஏண்டா கேப்டனா இருக்கும்போது அதிகாரத்தக் கைல வச்சுக்கிட்டு அமைதியா
இருந்திட்டியே...ஒரு காட்டு காட்டியிருக்கலாம்”னு சொல்லிட்டு இருந்தான். இத கக்கூஸ்ல
கேபிகிட்ட சொல்லும்போது “இத எதுக்கு அவன் சொல்றான் ? அவன் இத சொல்றான் எதுக்கு? சொல்றான்
எதுக்கு இத அவன்”னு மாத்தி மாத்தி கேட்டுட்டு இருந்துச்சு கேபி. அனேகமா ஆஜீத்துக்கு
வாய்ச்ச “அன்னை அர்ச்சனா” கேபிதான் போல !
பின்ன பில்டரு
அன்னப்போஸ்டுகிட்ட “நேர்மை , கீர்மைன்னு பேசுனத கேட்டு பெரியமனுஷன்னு நெனச்சா, இந்த
மனுஷன் பாஞ்சில்லறையா இருக்கான். லவ் மேரேஜ் பண்ணதா பகுமானமா சொல்லிட்டு திரியுறானே....நான்
பண்றது லவ்வான்னு தெரிஞ்சுக்க வேணாமா?ன்னு பொலம்பிட்டு இருந்தான்.
“ஆனாலும் ரகசிய
டாஸ்க்குல டக் அடிச்சுட்டீங்க சோ அடுத்த டாஸ்க்கு....! பலத்த போட்டியாளர்னு நெனைக்குறவனுக்கு
பாக்ஸிங் கிளாவுஸ குடுங்க, வெட்டி முண்டம் வீணா போன தண்டம்னா அட்டைக்கத்திய குடுங்க”ன்னார்.
கிளவுஸுல பில்டரு
– 6ம், ஆரி – 3ம், ரியோ – 3ம் வாங்க, சம்மு, நிஷா, ரம்யா 3 பேரும் தலா 1 வாங்குனாங்க.
அட்டை கத்தில
நிஷா -5ம், பில்டரு – 4ம், ஜித்து பாய் – 3ம், சுச்சி – 2ம், அனிதா 1ம் வாங்குனாங்க
எதுக்கு இருக்கானுங்கன்னே
தெரியலன்ற சொல்லப்படாத கேட்டகிரில சோமு, கேபி, சைனா, ஷிவானி, அர்ச்சனா, ஆஜீத் இருந்தானுங்க.
அப்பறம் ஓட்டு
லிஸ்ட சரி பாருங்கன்னார். பாத்திருங்க.
பின்ன ஆரி
& ரியோவ சேவ்னு சொன்னார்.
Comments
Post a Comment