Posts

Showing posts from August, 2019

பிக்பாஸ் 3 : நாள் 69 (31.08.19)

பிக்பாஸ் 3 நாள் 69 (31.08.19) நாட்டுப்புற கலைஞர்கள் பில்ட் அப் சாங் பாட, ஆண்டவர் எண்ட்ரி. “கண்டதையும் பாத்து அழியுறோம் ஆனா இங்க அருமையான கலைகள் நாம பாக்காததால அழிஞ்சிட்டு இருக்கு”ன்னு கூத்து, வில்லுப்பாட்டு, பொம்மலாட்டத்தப் பத்தி சொன்னார். “நானும் என் படத்துல கிடைக்குற கேப்லயெல்லாம் இதப் பத்தி பேசிட்டுதான் இருக்கேன். நம்ம கலாச்சாரமே கலையால வளர்ந்தது”ன்னு விரிவா பேசுனார். “சரி...வெள்ளிக்கிழமை பொழுது எப்பிடி போச்சுன்னு பாப்போம்”னு சொல்லிட்டு உள்ள காமிச்சார். 69ம் நாள் “சரோஜா சாமான் நிக்காலோ”ன்னு அலற ஆளாளுக்கு ஆசுவாசமா எந்திரிச்சானுங்க. அதிசயமா வனிதாவ இழுத்துட்டு வந்து ஆடுனானுங்க. அதுவும் முன்ன பின்ன உருண்டு ரோடு போட்டுட்டு இருந்துச்சு. “அண்ணாத்த ஆடுறார் ஒத்திக்கோ” வரிக்கு அண்ணன் சேரன் அனாயாசக் குத்து போட்டார். முடிஞ்சதும் ஷெரின் கக்கூஸ்ல சாண்டி கூட “லெட்ஸ் டான்ஸு புள்ள”ன்னு தங்கு புங்குன்னு குதிச்சிட்டு இருந்துச்சு. வெளிய ஷெரின், கவின், தர்ஷன், சாண்டி உக்காந்து பேசிட்டு இருந்தாங்க. கவின் “நான் வெளிய போயிடுவேன் ஷெரின். நீ இங்க உள்ளவங்கள ஒரு உயர்ந்த நிலைக்கு உயர்த்தி உன் கடமைய

பிக்பாஸ் 3 : நாள் 68 (30.08.19)

பிக்பாஸ் 3 நாள் 68 (30.08.19) “லாலா கடை சாந்தி” பாட்டோட அன்னைக்கு நாள ஆரம்பிச்சானுங்க. வனிதா எல்லாருக்கும் ஜும்பா சொல்லிக்குடுக்கனுமாம். “அப்டியெல்லாம் அந்தாளு சொன்னத செஞ்சுட்டா நமக்கு என்ன மரியாதை?”ன்னு சொல்லிட்டு வனி “ஜும்பாலாம் முட்டி செத்தவன் ஆடுறது....முட்டிய பேக்குறவன் ஆடுற ஆட்டம் சொல்லித்தரேன் அது பேரு வம்பா” அப்டின்னு ஒரு அரிய வகை ஆட்டத்த அறிமுகப்படுத்துனாங்க. அத முகின வச்சு டெமோ காமிச்சு ஆடி முடிச்சானுங்க. கட் பண்ணா கவின் & லாஸ். கவினுக்கு இப்ப ரெண்டு பிரச்சனை. ஒண்ணு இந்த வாரம் தான் வெளிய போயிருவோம்னு தீவிரமா நம்புறான். ரெண்டு போறதுக்குள்ள இந்த புள்ளைய “ஐ லவ் யூ” சொல்ல வச்சிரனும். இல்லேன்னா உள்ள இருக்கும்போதே உள்ளடி வேலை பாத்து காதல் ஜோதிய அணைக்கப் பாப்பானுங்க. இதுல அந்தப் புள்ளைய தனியா இங்க விட்டுட்டு போனா எல்லாரும் வியாக்யானமா பேசி அது வெளிய வந்ததும் “யாரு நீ”ன்னு கேக்க வச்சுருவானுங்க. அப்பறம் கக்கூஸ்ல நின்ன காட்சிகள நடிச்சுக்காட்டி நியாபகப் படுத்த வேண்டியதாப் போயிரும். (கருமம் இவனுக்காக மூன்றாம் பிறை ரெஃபரன்ஸெல்லாம் எடுக்க வேண்டியதா இருக்கு) சோ அந்தப் பத்தட்டத்

பிக்பாஸ் 3 : நாள் 67 (29.08.19)

Image

பிக்பாஸ் 3: நாள் 66 (28.08.19)

பிக்பாஸ் 3 நாள் 66 (28.08.19) “கட்டிக்கிற முன்ன நாம ஒத்திகைய பாக்கனுண்டி”ன்னு பாட்டப் போட்டுட்டு கவினயும், லாஸையும் தனித்தனி ஷாட்டா காமிச்சது தெள்ளவாரித்தனம். கிராமத்து டாஸ்க்கு தொடர்ந்துச்சு..... கவின் & லாஸ் லாஸ் : கவிராஜன்.....கவிராஜன் ! உன் பேரு கவிராஜனாமே ? இனிமே நான் உன்ன அப்பிடித்தான்   கூப்புடுவேன் கவின் : எப்பிடியோ கூப்டு.... லாஸ் : உன் மூஞ்சியும், மொகறையும் பாத்தா ஏதோ பெரிய பிட்டு வச்சுருக்க போல.....போட்டு விடு கவின் : உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது? லாஸ் : சரி சொல்லு கவின் : அத எப்பிடி என் வாயால சொல்லுவேன்? லாஸ் : சரி சொல்லாத.... கவின் : உங்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட சொல்றது? லாஸ் : அப்ப சொல்லித் தொலையேண்டா என் சப்பாத்தி.... கவின் : அத எப்பிடி என் வாயால சொல்லுவேன்? லாஸ் : திரிகோணமலை கெட்ட வார்த்தை எல்லாம் தெரியுமா? தெரிஞ்சுக்கனுமா? கவின் : அதாவது நான் 3 வருஷமா ஒரு காம்ப்ளிக்கேட்டட் ரிலேஷன்ஷிப்ல இருந்தேன்... லாஸ் : நீ அப்பிடி இல்லாம இருந்தாதான் உலகம் அழிஞ்சிருக்கும்.....இதெல்லாம் உன் வாழ்கையில பிரதமர் ஃபாரின் போறாப்ல ஒரு அங்கம

பிக்பாஸ் 3 : நாள் 64 தொடர்ச்சி & 65 (27.08.19)

பிக்பாஸ் 3 நாள் 64 தொடர்ச்சி & 65 (27.08.19) நேத்து நடந்த “நான் ஏன் தகுதியான ஆள்?” டாஸ்க் தொடர்ந்தது. லாஸ் லாஸ் : இதுவரைக்கும் இந்த வீட்ல நான் எடுத்த எல்லா முடிவும் என் சுயநினைவோட நானே எடுத்தது. வனிதா பேச்சக் கேட்டு வம்புக்கு போறது, கஸ்தூரி பேச்சக் கேட்டு கட்டைய எடுத்து சாத்துறது, மது பேச்சக் கேட்டு முக்கி முக்கி அழுகுறதுன்னு நான் யாரு பேச்சையும் கேக்குறதுல்ல. இவ்வளவு ஏன்? “மகளே மகளே”ன்னு சுத்தி வர எங்கப்பன் சேரனையே என் கூட சேத்துக்க மாட்டேன். தவிர ரெண்டு தடவ நாமினேட் ஆகியும் வெளிய போகல. அதனால நான் தகுதியான ஆள்தான். தர்ஷ் : சேரன நாமினேட் பண்ணிட்டு வந்து நாள் பூராம் ஒப்பாரி வச்சியே, அதே மாதிரி எல்லா முடிவையும் எடுத்த பின்னாடி தப்பு பண்ணிட்டேன்னு தரையில விழுந்து அழுதேன்னா அது எப்பிடி வின்னருக்கு அழகு? லாஸ் : நான் எந்தச் சூழ்நிலையிலும் நைனாவ நாமினேட் பண்ணக்கூடாதுன்னுதான் நெனச்சேன் ஆனா அந்தாளு அப்பிடி நடந்துக்கலையே? மது விஷயத்துல வெவரமா பேசாம வெண்டைக்காயதான நறுக்கிட்டு இருந்தாப்ல! அதான் நாமினேட் பண்ணேன். இன்னேலருந்து அந்த எமொஷனல் விளையாட்டுக்கு எண்ட் கார்டு போட்டேன். இனி

பிக்பாஸ் 3 : நாள் 64 (26.08.19)

பிக்பாஸ் 3 நாள் 64 (26.08.19) “ஜிகுரு ஜிகுரு ஜிகுரு” பாட்டு அலாரம். ரொம்ப நாளைக்கப்பறம் லாஸ்கிட்ட நெளிவு, சுளிவு தெரிஞ்சது இது கவின் “ஆ”ன்னு வாயப் பொளந்து பாத்ததுல இருந்து உறுதியாச்சு. ஷெரினும் முயற்சி பண்ணாங்க. நேத்து கமல்னு ஒருத்தர் வந்ததாகவோ, இவனுங்கள தனியா கூப்புட்டு கழுவி ஊத்துனதாவோ எந்த ஒரு அடையாளமும் இல்லாம முன்ன என்ன பண்ணிட்டு இருந்தானுங்களோ அத விட்ட இடத்துல இருந்து கண்டினியூ பண்ணானுங்க. ஷெரின் & தர்ஷ் ஷெரின் : என்னடா தர்ஷா....? 2 நாளா நம்ம பக்கம் ஆளேயே காணோம்...? ரேமண்ட் மாடலாட்டம் அங்குட்டும் இங்குட்டும் ரோந்து போயி உலாத்துவ.....ஈழத்தமிழ்ல கவிதை சொல்லி பெனாத்துவ....என்னாச்சு? நான் எதும் தப்பு பண்ணிட்டேனா? சாரிடா சர்தார் சிலையே ! தர்ஷ் : அதெல்லாம் ஒண்ணுமில்ல.....நான் உன் பக்கத்துல வந்தாலே வனிதாவுக்கு வயித்துக்கடுப்பாகுது...அதுக்கு பெரிய வயிறு வேற...! ஷெரின் : வயிறு மட்டுமா ? வாயுந்தான். தர்ஷ் : எனக்கு கூரு பத்தாதாம்...உன்னய கரெக்ட் பண்ணி பைனலுக்கு செலெக்ட் ஆகலாம்னு ஸ்கெட்ச் போடுறேனாம். எனக்கு மக்கள் சப்போர்ட் இல்லையாம் வனி : இத மூணாவது வாரமே வெளிய போன

பிக்பாஸ் 3 : நாள் 63 (25.08.19)

பிக்பாஸ் 3 நாள் 63 (25.08.19) ரகுபதி ராகவ் ராஜா ராம்..... ராம் ராம்.....ஹே ஹே ராம்...... அப்பதான் வாட்ஸாப் ஃபார்வர்ட் வீடியோ எதுவும் பாத்துட்டு வந்தாரான்னு தெரியல. வந்ததும் “இந்த பிக்பாஸ் மேல இருக்குற ஆர்வம் சமுதாய நிகழ்வுகள்லயும் இருக்கனும். வனிதா வத்தி வச்சா கோவப்படுறீங்க. சேரன் அழுதா சோகப்படுறீங்க. கஸ்தூரியப் பாத்தா மூட் அவுட் ஆகுறீங்க. லாஸப் பாத்தா குதூகலமாகுறீங்க. ஆனா அங்க அமேசான் காடு பத்தி எரியுது, நீங்க என்னடான்னா ‘அந்த அரிய வகை மூலிகையும் சேர்ந்து எரிஞ்சிருக்குமா?’ன்னு லந்து பண்ணிட்டு இருக்கீங்க. அப்டியெல்லாம் இருக்கக்கூடாது. இனிமே யாராச்சும் மரத்த வெட்டுனா ஏன்னு கேளுங்க.....அவிங்க பதில் சொல்லமாட்டாய்ங்க ஆனாலும் கேளுங்க”ன்னார். சரி கேட்டுரலாம்! “ஒழுங்கா இன்னிங்க்ஸ் விளையாடுங்கடான்னு உள்ள அனுப்புனா இன்பச் சுற்றுலாவுக்கு வந்த மாதிரி இம்சை பண்ணிட்டு இருக்கானுங்க. விட்டா இந்த வீட்ட விட்டு வெளிய வரமாட்டானுங்க போல. அதுனால அவனுங்கள கொஞ்சம் எழுப்பி விடுவோம். வாங்க உள்ள போவோம்”னார். ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் பாதம் வந்தனம் செய்யடி..... ஸ்ரீ தேவி ரங்கநாயகி நாமம் சந்ததம் சொல

பிக்பாஸ் 3 : நாள் 62 (24.08.19)

பிக்பாஸ் 3 நாள் 62 (24.08.19) ·           முன்குறிப்பு – வேலைப் பளு காரணமா இது இன்னுமொரு அட்மின் பதிவு.....! காலையில விடியக்கால வேலைக்குப் போகனும். எடிட் ரூம்ல இருந்து ஆண்டவர். “இங்கதான் உள்ள இருக்குற திருவாத்தானுங்க பண்ற எல்லா மொள்ளமாரித்தனத்தையும் ஒழுங்கா எடிட் பண்ணி ஒரு மணி நேரத்துக்கு தராங்க. இங்க நான் இருந்தா இவனுங்க பண்ற பஞ்சாயத்துக்கு பாய பிராண்ட ஆரம்பிச்சுடுவேன்”னு சொன்னாரு. அப்பறம் “இந்த டீம்ல சைக்காலஜிஸ்ட், வக்கீல், போலீஸ், எஞ்சினியர், மெக்கானிக், வெல்டர், ப்ளம்பர் எல்லாரும் இருக்காங்க. அதுனாலதான் நானும் வந்தேன். மத்த மொழியில இருக்குற பல விஷயம் இங்க இல்ல..... தவிர்த்துட்டோம் தெரியுமா? இல்லேன்னா இவனுங்க ஆளுக்கு ஒரு குழந்தையோட வெளிய வந்திருப்பானுங்க. அப்பறம் மைய்யம் சார்பா நான் விக்ரம், நாயகன், சலங்கை ஒலின்னு குழந்தைக்கு பேரு வச்சிருக்கனும்.   இருக்குற பஞ்சாயத்துல இது வேறயா? அதான் தவிர்த்துட்டோம்”னு சொன்னார். யாரோ என்னமோ திட்டிட்டானுங்க போல....”விமர்சனங்கள ஏத்துக்குறோம் ஆனா உங்க இஷ்டக் கூந்தலுக்கு ஷோ நடத்த முடியாது”ன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டார். “நீங்க நெனைக்கிற மாத

பிக்பாஸ் 3 : நாள் 61 (23.08.19)

பிக்பாஸ் 3 நாள் 61 (23.08.19) புதுப்பேட்டை “வரியா” தீம் சாங். பசங்க சும்மா பட்டய கெளப்புனானுங்க. லாஸும் சேந்து அவனுங்களோட ஆடுனது சும்மா அம்சமா இருந்துச்சு. இன்னைக்கு மொத்த எபிசோடுலயும் உருப்படின்னா அது இது மட்டுமே. இந்த கஸ்தூரி நேத்து லக்ஸுரி பட்ஜெட்ல “கெலாக்ஸு....கெலாக்ஸு”ன்னு கதறும்போதே டவுட் இருந்துச்சு. காலையில டிபனுக்கு கெலாக்ஸ பாலுல போட்டு பகிர்ந்து குடுத்துச்சு போல. பசங்க வெளிய எடுத்துட்டு வந்து உக்காந்து கொமட்டிட்டு இருந்தானுங்க. உள்ள சேரனும், லாஸும் கூட “இதெல்லாம் சாப்புடுற பொருள்தானா? இல்ல பர்கோலக்ஸ் மாதிரி எதும் பேதிப் பொருளா? பாக்கும்போதே இவ்வளவு கன்றாவியா இருக்கே?”ன்னு பொலம்பல். பிக் பாஸ் ஊழியர் : பிக் பாஸ்.....பிக் பாஸ் பிக் பாஸ் : என்ன? ஏன் இவ்வளவு பதட்டமா ஓடி வறீங்க? பி.பா.ஊ : கக்கூஸ் கேமரா மேன் கோமாவுக்கு போயிட்டாப்ல பி.பா : ஷோ நடந்துட்டு இருக்கும் போது வேற எங்கயும் போகக் கூடாதுன்னு தெரியும்ல ? அப்பறம் ஏன் போனாரு? பி.பா.ஊ : யோவ் லூசு...! அவன் கோமா ஸ்டேஜ்க்கு போயிட்டான்யா பி.பா : அய்யோ என்னாச்சு? பி.பா.ஊ : என்ன ஆச்சா ? ஒரு நாள்......ஒரே நாள் அந்தம