பிக்பாஸ் 3 : நாள் 41 (03.08.19)

பிக்பாஸ் 3
நாள் 41 (03.08.19)

மீசையில்லாத மன்மதன் அம்பா வந்தார் ஆண்டவர். “இனிமே உள்ள காதல் கன்றாவியெல்லாம் இருக்காது. கவின் திருந்திட்டான். சல்பேட்டா ஆட்டு உரலு டான்ஸ் ஆடாதுன்னல்லாம் பெட் கட்டி தோத்து மீசைய எடுக்கல. 2 படம் ஷூட்டிங் இருக்கு அதான் அப்டி”ன்னு மீசை மழிப்புக்கான விளக்கம் குடுத்தார்.
“மீசை இல்லாம முகம் மொட்டையா இருக்கு”ன்னு ஒருத்தரு ஃபீல் பண்ணாராம். “மொட்டை முகத்துக்குக் கிடையாது தலைக்கும், கடுதாசிக்குந்தான் உண்டு”னு இவரு சொன்னாராம். இதக் கேட்டவன் “அப்டியா சூப்பர் புரிஞ்சிருச்சு”ன்னு போயிட்டானாம். (இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு?)
“கொஞ்சம் தெளிவா இருந்த குட்டைய குழப்பி இன்னும் குழப்பமாக்கிட்டானுங்க கிரகம் பிடிச்சவனுங்க. ஒரு மொட்டக் கடுதாசி டாஸ்க்கால கட்டை எடுத்து சாத்திக்கிற லெவெலுக்கு போயிட்டானுங்க. முக்கோணக் காதல் கதை மூவேறு காதல் கதையா போயிடுச்சு. சோ உள்ள என்னன்னு கேப்போம் எதயச்சும் லூசுத்தனமா சொல்லுவானுங்க அதக் கலாய்ச்சு நாம எண்டர்டெயின் ஆவோம்”னு சொல்லிட்டு “ அதுவரைக்கும் வெள்ளிக்கிழமை விவகாரத்தப் பாப்போம்”னு நிகழ்வுகளுக்கு போனார்.
இன்னைக்கு மொத்த எபிஸோடும் “கமல்” அப்பிடின்னு ஒரு வார்த்தைல எழுதுற அளவுக்குதான் இருக்கு.
41ம் நாள்
“வச்சுக்கவா உன்ன மட்டும் நெஞ்சுக்குள்ள” பாட்டுக்கு கேப்டன் முகினும் கேப்டனம்மா அபியும் சோடி போட்டு ஆடுனாங்க. சல்பேட்டா ஜெயில் வாசல்ல நின்னு ஷெரின் கிட்ட நண்டுக் கால் ஸ்டெப்ப போட்டுச்சு. “கவின விட்ட கெரகம் நம்மள எப்ப விடப்போகுதுன்னு தெரியலயே?”ன்னு மைண்ட்ல இருக்கும் ஷெரினுக்கு.
ஜெயில் கைதிகளுக்கு மாவாட்டுற வேலை குடுத்தார் பிக்பாஸ். ஜெயில் வாசல்லயே உக்காந்து டீம் பிரிச்சானுங்க.அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சு ஷெரினும், லாஸும் ரிலீஸானாங்க.
உள்ள வந்த ஷெரின் டைனிங் டேபிள்ள உக்காந்து “இப்பெல்லாம் உண்மையான ஜெயில்ல கூட நல்ல சாப்பாடு போடுறானுங்க ஆனா டம்மி ஜெயில வச்சுக்கிட்டு நீ என்னய கதற விட்டுட்ட. இருடி உனக்கு ஒரு நாள் இருக்கு”ன்னு சொன்னாங்க.
சனிக்கிழமைக்குன்னே ஒரு சப்ப டாஸ்க் வச்சுருப்பானுங்க அது வந்துச்சு.
ஆண்கள் பெண்கள் இரு அணியா பிரிஞ்சு ஆண்கள் முட்டாய வாயில போட்டுக்கிட்டு பெண்கள் கிட்ட அன்ப சொல்லனுமாம். (இத கவின் பண்ணதுக்குதான் 2 வாரமா கழுவி ஊத்துறோம்). கவின், சேரன், மது, சித்தப்பூ நடுவர்கள்.
சாண்டி ரேஷ்மாகிட்ட கலாயா அன்ப சொன்னார்.
அடுத்து முகின், அவன் யாருகிட்ட அன்ப சொல்லுவான்றது அர்த்தசாஸ்திரத்துலயே இருக்கு. அபிய கூப்ட்டு முட்டி போட்டு பூவ குடுத்தான். “ராமராஜன் நடிச்ச படம் வில்லுப் பாட்டுக்காரன்; பூவ குடுத்து புல்லரிக்க வச்சான் என் வீட்டுக்கரன்”னு சந்தோஷத்துல அவன கட்டிப்பிடிச்சுக்கிச்சு அபி.
சட்டுன்னு ரெண்டு பேரும் கட்டிப்பிடிச்சு பால் டான்ஸ் ஆட அதப் பாத்துட்டு இருந்த சல்பேட்டா “இதே டாஸ்க்குல கவின கட்டிப்பிடிச்சு சல்சா ஆட வேண்டியவடா இந்த சல்பேட்டா ஆனா இன்னைக்கு தனியா நிக்குறேன் ரோஸ்வுட்டா”ன்னு சோக மூஞ்சியாகிடுச்சு.
அப்பறம் தர்ஷன், ஷெரின் தான்! வேற யாரு? அவனும் மண்டி போட்டு மலர்கள குடுத்தான். அவந்தான் மிஸ்டர் கான்பிடெண்ட் அவார்டும் வாங்குனான்.
அகம் – அகம்
ஆண்டவர் சேரன் கிட்ட “என்ன சேரரே ஓப்பன் நாமினேஷன்ல கூட உங்கள யாரு நாமினேட் பண்ணான்னு கண்டுபிடிக்க முடியலயா?”ன்னு கேட்டார். (அதான் என்னய நாமினேட் பண்ணவே இல்லையே அப்பறம் எப்பிடி கண்டுபிடிக்கிறது? இதுக்கு சிரிக்கலனா வேற ஆண்டவர் கோவிச்சுக்குவார்)னு நெனச்சு “ஆமா சார்....கண்டுபிடிக்கவே முடியல”ன்னு சிரிச்சுக்கிட்டே சொன்னார்.
“பெர்பர்மன்ஸ் ரவுண்டுல எல்லாருமே நல்லாதான் பண்ணீங்க. நல்லா பண்ணலேன்னாலும் தப்பில்ல. ஆனா பெஸ்ட், ஒர்ஸ்ட் தேர்வுலதான் தேர இழுத்து தெருவில விட்டுடுறீங்க. யாரு ஒழுங்கா பண்ணலேன்னாலும் பழிய தான் ஏத்துக்கிட்டு சிறைக்கு செல்லும் சீவலப்பேரி பாண்டியா லாஸ் இருக்கு. லாஸ் இனிமேயாச்சும் ஒழுங்கா விளையாடு”ன்னு புத்திமதி சொன்னார்.
ஆண்டவர் இன்னைக்கு முக்கியமான 2 கேச டீல் பண்ணார்.
முதல் கேஸ் : கவின் – சாக்ஷி – லாஸ்
“என்னப்பா கவினு நீயா சொல்றியா இல்ல நான் சொல்லவா?”ன்னு ஆரம்பிக்க, கவின் “அப்பிடி ஒண்ணும் மறைக்குற அளவு தப்பு பண்ணலயே மறைக்குற அளவு அறிவிருந்தா இப்பிடி ஏன் வந்து மாட்டுறேன்?”ற மாதிரி முழிச்சுக்கிட்டே “எனக்கு தெளிவா எவனாச்சும் பேசுனாலே புரியாது இதுல நீங்க இப்பிடி பேசுனா சுத்தமா புரியல”ன்னு ஆண்டவரையே தைரியமா கலாய்ச்சுட்டான் கவின், “என்ன மறுபடியும் மதகஜராஜா வேலைய ஆரம்பிச்சு மாட்டிக்கிட்ட போல?”ன்னு ஆண்டவர் புரியுற மாதிரி கேட்டார். “நானா சார் ஆரம்பிச்சேன் ? விஷயம் என்னன்னா....”ன்னு ஆரம்பிக்க “யப்பா டேய், நீ தண்ணில விஷம் கலந்து கூட குடு ஆனா தன்னிலை விளக்கம் மட்டும் குடுத்துராத. இதுக்கு மேல எங்களால முடியாது”ன்னு கவின் கிட்ட கருணை மனு போட்டார்.
“சல்பேட்டா எதுவும் இருக்கா டேட்டா?”ன்னு கேக்க “என்னத்த சொல்றது? என்னென்னமோ நெனச்சேன் ஆனா அவன் என்னயத்தவிர எல்லாரையும் நெனச்சுட்டான். நானும் கொஞ்சம் சிறுபிள்ளத்தனமா நடந்துக்கிட்டேன். இந்த வாரம் வெளிய போகலேன்னா கொஞ்சம் வெவரமா இருந்து பொழச்சுக்கலாம்னு பாக்குறேன்”னு சொன்னாங்க.
“சரி ஹீலிங் டைம் வேணும்னு கேட்டியே தோராயமா எவ்வளவு நாள் வேணும் உனக்கு?”ன்னு கேக்க, அதுக்கு சல்பேட்டா “நாளா? அது ஆகுங்க அஞ்சாறு வருஷம்”னு சொல்ல, அப்ப “அவன் வெளிய போயும் நிம்மதியா யாரு கையையும் பிடிச்சுக்கிட்டு சுத்தக் கூடாது அப்பிடி சுத்துனா நீ ஷெரின் வீட்டத் தேடிப்போயி அவள இம்சை பண்ணுவ அப்டித்தான? ஒழுங்கா ரேஷ்மாவ பாத்துக் கத்துக்கோ”ன்னு சொல்லி முடிச்சார்.
“லாஸ்லியா இந்த கேஸ்ல நீங்களும் இருக்கீங்க. மார்க்ல வந்து நில்லுங்க”ன்னு சொன்னார். “சொல்றதுக்கு ஒன்ணுமில்ல எல்லாம் சல்பேட்டா பண்ண வேலை”ன்னு சிம்பிளா முடிச்சுட்டாங்க.
“சரி தீர்ப்புக்கு வருவோம், உங்களோட இந்தக் கன்றாவிக் காதல் மத்தவங்களுக்கு பெரிய அக்கப்போறா இருக்கு. அவனுங்கள பர்பார்மென்ஸ் பண்ண விடாமா உங்க பஞ்சாயத்து லெங்க்த்தா போயிட்டு இருக்கு. அதனால போதும் முடிச்சுக்கோங்க. ஷெரின் லாம் பாவம் சல்பேட்டாவுக்கு ஆறுதல் சொல்லி சொல்லியே இப்ப அது சோகத்துல இருக்கு”ன்னு சொல்லிட்டு “என்ன ஷெரின் சரிதான?”ன்னு கேக்க. “ஆண்டவரே எப்டி சொல்றதுன்னு தெரியாம இருந்தேன். ஒரு நாள் ஒரு பொழுது என்னய நிம்மதியா இருக்க விட மாட்டேங்குறா. இவ ரோதனை பெரும் ரோதனையா இருக்கு. என்னய காப்பாத்துங்க”ன்னு கதறுனாங்க. “சரி இனி உங்க பஞ்சாயத்தே இருக்கக் கூடாது”ன்னு சொல்லி முடிச்சுட்டார்.
இரண்டாவது கேஸ் : சேரன் – சரவணன்
“சரவணன் என்ன முன் விரோதம் உங்களுக்கு சேரன் மேல?”ன்னு பேச்சுக் குடுத்தார். “ஒன்னுமில்ல சார் அவரு டைரக்டர் நான் நடிகர் அவ்ளோதான்” அப்பிடின்னு சித்தப்பூ மழுப்ப. மரியாதைனா என்ன? அது வாங்குறதா இல்ல குடுக்குறதா? அப்பிடின்னு அனுபவ உதாரணங்களோட பாடம் எடுத்தார் ஆண்டவர். அதக்கேட்டு உடனே திருந்தினார் சரவணன். “உங்க ரெண்டு பேரு சண்டைய பாத்து உள்ள வெளியன்னு எல்லாருக்குமே பயம் பதட்டம் வந்துருச்சு பசங்க எல்லாரும் பயந்துட்டானுங்க அதனால இனிமே அப்பிடி பண்ணாதீங்க”ன்னு அறிவுரை சொன்னார்.
அப்பறம் உள்ள காட்டுனப்ப சரவணன் உண்மையாவே சேரன் கிட்ட மன்னிப்பு கேட்டார். சேரனும் “விடுங்க நான் எப்பவும் உங்க அஸிஸ்டெண்ட் டைரக்டர்தான்”னு அன்பா சொன்னார் (“அப்ப என் முன்னாடி நின்னு பேசாதடா”ன்னு சொல்லிரலாமான்னு கூட சித்தப்பூ மனசுல நெனச்சிருப்பார் ஃபன்னி கய்)
அப்பறம் எவிக்ஷன் கொஞ்சம் அப்பிடி இப்பிடின்னு கார்டு விளையாட்டெல்லாம் விளையாண்டு “மது காப்பாற்றப் பட்டார்”னு முடிச்சார். நாமளும் காப்பாற்றப்பட்டோம்....!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)