பிக்பாஸ் 3 : நாள் 56 தொடர்ச்சி & 57 (19.08.19)


பிக்பாஸ் 3நாள் 56 தொடர்ச்சி & 57 (19.08.19)


நைட்டு பாத்திரம் கழுவுற எடத்துல....
லாஸ் : ஏன் நீ மூஞ்சிய தூக்கிட்டு இருக்க?
கவின் : கைய, கால தூக்குனா யாரு மேலயாச்சும் இடிச்சிரும்ல அதான் மூஞ்சிய தூக்கிட்டு இருக்கேன்...
லாஸ் : யோசிக்காம மக் எடுத்து மண்டையில போட்டுருவேன்....ஒழுங்கா சொல்லு என்ன பஞ்சாயத்து?
கவின் : எல்லாம் உங்க நைனா உங்கிட்ட பேசுனதுக்குதான்
லாஸ் : அதுக்கு அந்தாளுகிட்ட மூஞ்சிய காமி ! எங்கிட்ட எதுக்கு காமிக்கிற கிறுக்குப்பயலே ?
கவின் : அவரு யாருகிட்ட வந்து பேசுனாரு?
லாஸ் : எங்கிட்ட
கவின் : அதான் உங்கிட்ட காமிக்கிறேன்....எப்பிடி என் ராஜதந்திரம் ?
லாஸ் : எனக்கென்னமோ நீ கக்கூஸ்ல இருந்தாதான் தெளிவா இருக்குற மாதிரி இருக்கு....! நான் போயி தூங்குறேன் போ...//
57ம் நாள்
டேக் இட் ஈஸி ஊர்வசி பாட்டு. பசங்க எல்லாரும் 20லயும்.....கஸ்தூரி 60லயும் ஆடுனாங்க....! ஷெரின் அலுங்கி குலுங்கி ஆடுனது பாக்குறதுக்கு ஆனந்தமா இருந்துச்சு.
உள்ள சூப்பர் சேரன் சார் தட்டுல சாப்பாட்டோட உக்காந்து இருந்தாப்ல. இதப் பாத்த வனி “என்ன சேரன் சார் சாப்பிடலையா?”ன்னு கேக்க, “என் பொண்ணு வந்துட்டா பூஜைய போட்டுருவேன். ஆளக் காணோம் அதான் வெயிட்டிங்”னு வெள்ளந்தியா இங்குட்டு சொல்லிட்டு இருந்த நேரத்துல வெளிய லாஸ் கவின் & சாண்டி கிட்ட உக்காந்து “ என்ன கவின் காரம் ஜாஸ்தியா? கருவேப்பிலையெல்லாம் கரெக்டா இருக்கா?”ன்னு கேட்டுட்டு இருந்தாங்க. கவின் “இந்தா உங்க நைனா இஸ் வெயிட்டிங்க் ஃபார் ஈட்டிங் உள்ள போ”ன்னு சொன்னான். ஆனா லாஸ் “பசிச்சா சாப்ட்டு தொலைங்கடா...பாசப் பாலிடிக்ஸ் பண்ணி சாவடிக்காதீங்கடா டேய்”ன்னு பொலம்பிட்டே உள்ள போச்சு.
உள்ள வனி சேரன் கிட்ட “எவ்வளவு வேணும்னா இருக்கலாம் பாசம்...ஆனா ஆறிருச்சுன்னா சாப்பாடு நாசம் அதுனால சாப்டுங்க”ன்னு சொல்லிட்டு இருக்கும்போதே லாஸ் உள்ள வர, எல்லாரும் லாஸ குற்றவாளி மாதிரி பாக்க லாஸோ “டேய் ஓவரா பண்றீங்க அடங்குங்க”ன்னு சொல்லிட்டு சூப்பர் சேரன் சார் பக்கத்துல உக்காந்தாங்க. “ம்ம்ம்ம் சாப்பிடலாமா?”ன்னு சேரன் சாப்புட ஆரம்பிக்க “யோவ் கமல் சார்கிட்ட நான் உன்னய போட்டுக் குடுத்தேன்றதுக்காக நேத்துல இருந்து நீ என்னய நிம்மதியா கக்கூஸுக்கு கூட போக விட மாட்டேங்குற.....! உன் பெருமை போஸ்டர ஒட்ட என் மேல பாச பெவிகால ஊத்தப்பாக்குறேல்ல....ரைட்டு செய் ! இன்னைக்கு என் செய்கைய பாரு”ன்னு சொல்லிட்டு சைலன்டா சாப்பிட ஆரம்பிச்சது.
நாமினேஷன்....! ஷெரின் கேப்டன் அதனால பண்ண முடியாது. வனி வைல்ட் அனிமலாம் சாரி வைல்ட் கார்டுல வந்தவங்களாம் சோ இந்த வாரம் நாமினேஷன் பண்ண முடியாதாம். (இதென்னடா பித்தலாட்டமா இருக்கு?) அப்பவே சூப்பர் சேரன் சாருக்கு அல்லைய கவ்வுச்சு. வனி சாண்டியையும், தர்ஷனையும் நாமினேட் பண்ணது எதிர்பார்த்ததுதான். பாய்ஸ் குரூப் மொத்தமும் சேரன் & கஸ்தூரிக்கு கணக்கா குத்துனானுங்க.
வெளிய சூப்பர் சேரன் சார் கஸ்தூரிகிட்ட “லாலா கடை சேட்டு....என் லாஸ் எனக்கு குத்த மாட்டா ஓட்டு”ன்னு பெருமை பீத்திட்டு இருந்த அதே நேரம் உள்ள லாஸ் மொதப் பேரா சூப்பர் சேரன் சார நாமினேட் பண்ணுச்சு....! “படுத்தா பாசம், நின்னா பாசம், இருந்தா பாசம், கிடந்தா பாசம்னு படுத்துறாப்ல எங்கப்பாரு. தின்னுட்டு கைகழுவ போனா கூட பக்கத்துல வந்து நின்னு வாஷ் பேஷன் உள்ள விழுந்துட்டா காப்பாத்த நானிருக்கேன்னு நைசா அழுகுறாப்ல. கண்ணுல தூசி விழுந்து தண்ணி வந்தா கவின அடிக்க கட்டைய தூக்கிட்டு ஓடுறாப்ல. குட்நைட் சொல்லலன்னு சொன்ன ஒரு காரணத்துக்காக 2 நாளுல இதுவரை 240 குட் நைட் சொல்லியிருக்காப்ல. பதிலுக்கு நான் சொல்லலேன்னா மூட் அவுட் ஆகுறாப்ல. அதுனால நாமினேட் பண்றேன்”னு சொல்லிட்டு. கூடவே கவனமா கஸ்தூரியையும் பண்ணிட்டு போனாங்க.
இந்த வார நாமினேஷன் : சேரன், கஸ்தூரி, சாண்டி, தர்ஷன்.
பெட்ரூம்ல கவின், சாண்டி, தர்ஷன்....
லாஸ் : டேய் சேரப்பாவ நாமினேட் பண்ணிட்டேன்
கவின் : ஓ...! (அதிர்ச்சியாகி) என்னது சேரப்பாவ நாமினேட் பண்ணிட்டியா? வெளிய எங்கிட்ட அவர பண்ண மாட்டேன்னு சொன்ன?
லாஸ் : அவரு மட்டும் நியாயமா நடந்துக்குறேன்னு என்னய ஜெயிலுக்கு அனுப்பலாம். நான் நியாயமா நடந்து அவர நாமினேட் பண்ணக்கூடாதா?
கவின் : தாராளமா பண்ணலாமே!
லாஸ் : என்னது பண்ணலாமா? டேய் அவரு எங்க அப்பாடா....அவரப் போயி நான் நாமினேட் பண்ணது எப்பிடிடா சரியாகும்? நான் பண்ணது தப்பு
தர்ஷன் : அப்பிடிப் பாத்தா தப்புதான்
லாஸ் : அப்ப நான் ஜெயிலுக்கு போறது மட்டும் சரியா? நானும் நேர்மையா யோசிச்சதாலதான் அவர நாமினேட் பண்ணேன்
கவின் : அதான் நானும் சொல்றேன் நீ பண்ணது தப்பில்ல
லாஸ் : ஆனாலும் அப்பா, பாசம், அன்பு இதெல்லாம் நான் பாக்கனும்ல ?தவறு பண்ணிட்டேன்
தர்ஷன் : ஆமா கொஞ்சம் அப்பாவப் பத்தி யோசிச்சிருக்கலாம்...
லாஸ் : டேய் ஜிராஃபி...! அவரு நெனச்சாராடா என்னய பொண்ணுன்னு ? என்ன ஜெயிலுக்கு அனுப்ப நெனச்ச கல்நெஞ்சு படச்சவருதானடா எங்க அப்பா! நான் செஞ்சது சரிதான்
சாண்டி : (மனசுக்குள்ள) என்ன கருமண்டா இது? இது இன்னைக்குள்ள ஒரு முடிவுக்கு வராது போலயே....
கஸ்தூரி அந்தப் பக்கமா கைய வீசிட்டு வர...
கஸ்தூரி : டேய் ஏண்டா லாஸ் அழுகுது ? என்னங்கடா பண்ணீங்க அந்தப்புள்ளைய? இருங்கடி சேரன் கிட்ட சொல்லித்தரேன்
சாண்டி : இந்த வீட்ல ஆயிரெத்தெட்டு வேலை இருக்கு. அதுல ஒரு வேலைய கூட நீ பண்ண மாதிரி தெரியல. ஆனா சும்மா இருக்குற ஸ்விம்மிங்க் பூல்ல ஸ்கூபா டைவிங்க் அடிச்சு கால உடச்சுக்குற. வாண்டடா வசனம் பேசி வாங்கிக் கட்டிக்குற. இப்ப இங்க வந்து எட்டிப்பாத்து எதாச்சும் பஞ்சாயத்து சிக்குமான்னு பாக்குற. லாஸ் கண்ணுல தூசி விழுந்துருச்சு வேற ஒண்ணுமில்ல நீ ஓடு....
இப்ப பிக்பாஸ் ஒவ்வொருத்தனா உள்ள வாங்கடான்னு கூப்ட்டார். அங்க டேபில்ள டிஷ்யூ பேப்பர் பாக்ஸ் இருந்துச்சு. பிக்பாஸ் உள்ள வந்த ஆளுங்ககிட்ட அழுதுட்டு பேசுறீங்களா? இல்ல பேசிட்டு அழுகுறீங்களா?”ன்னு கேக்க, “எதுக்கு ரெண்டு வேலை...நாங்க அழுதுகிட்டே பேசுறோம்”னு சொல்லிட்டு தங்கள் சோகத்த சோசியலா சொல்லி அழுதானுங்க. வனிதா மட்டும் இந்த வீட்டுக்கும் எனக்கும் பூர்வ ஜென்ம பந்தம் இருக்குன்னு பிட்ட போட்டாங்க. பிக்பாஸ் செட்ட பிரிச்சப்பறம் அந்த வெத்து இடத்துல ஒரு கூரை செட்ட போட்டு வனிதாவ வசிக்கச் சொல்லிட்டா அது கட்டை வேகும்...ஆவன செய்யவும்.
வெளிய மறுபடியும் பாத்திரம் கழுவுற இடத்துல கவின் & லாஸ்
லாஸ் : உனக்கு என்னதாண்டா சனியனே பிரச்சனை? அந்தப் பக்கம் எங்க நைனா நமச்சல குடுக்குறாப்ல நீ என்னடான்னா கரச்சல குடுக்குற ! சொல்லித் தொலடா டேய்
கவின் : நைட்டுல இருந்து இப்டியே இருந்து எதுக்கு இப்பிடி இருக்கேன்னு எனக்கே மறந்து போச்சு...நீ வேணும்னா உங்க நைனா மேல உள்ள காண்டுலதான் இப்பிடி இருக்கேன்னு நெனச்சுக்கோ தப்பில்ல
வெளிய சாண்டி & தர்ஷ் கிட்ட லாஸ்
லாஸ் : இந்த கவின் பயலுக்கு என்னதான் ஆச்சு....! தனியா தட்டு கழுவுறானேன்னு கூடப் போயி நின்னா....தவிட்ட தின்ன மாதிரி முழுங்கி முழுங்கி பேசுறான்
சாண்டி : போ நீ போ....தனியாக கழுவுறான் கூட போய் கழுவு போ....
சேரன், வனி & கஸ்தூரி
வனி : என்ன சேரன் சார் வெல்கம் பேக் டூ நாமினேஷன்
சேரன் : (மனசுக்குள்ள) உனக்கெல்லாம் இரக்கம்ன்ற வார்த்தைக்கு ஸ்பெல்லிங்கே தெரியாது போல...) ஆமா ஆமா நன்றி!
வனி : பசங்க மொத்தமா செஞ்சுட்டானுங்க போல...அவனுங்க முதுகெலும்ப உடச்சுட்டா சரியாகிடும்
சேரன் : என்னது முதுகெலும்ப உடப்பியா? (ஆத்தீ கொலை கேசுல இழுத்துவிட்டுரும் போலயே?)
வனி : அட அந்த டீமோட முதுகெலும்ப சொன்னேங்க...எதுக்கெடுத்தாலும் பயந்துக்கிட்டு
கஸ்தூரி : லூசு மாதிரி யாராச்சும் முதுகெலும்ப உடைப்பாங்களா? அது ஹார்டா இருக்கும்....வீக்கான லிங்க்கதான் உடைக்கனும்...அதான் ஈசி
வனி : இன்னைக்கு என்ன சாப்ட்டியோ அதையே டெய்லி சாப்புடு....! கொஞ்சம் உருப்படியா பேசுறாப்ல இருக்கு...
கவி & லாஸ்
கவின் : உங்க நைனாகிட்ட பேசுறது ஓகே...! அவரு பண்ண தப்புக்கு கமல் சார்கிட்டயெல்லாம் சாரி கேக்குறாரு ஆனா சம்பந்தப்பட்ட ஆளுகிட்ட கேக்குறது இல்ல...உங்கிட்டயாவது எதாச்சும் சொன்னாரா?
லாஸ் : எங்கிட்ட குட் நைட்தான் சொன்னாரு...
வெளிய லாஸ், கவின் & சாண்டி
கவின் : அண்ணே இங்க வந்து எங்க பக்கத்துல உக்காரு
சாண்டி : ஏன் நான் நல்லா இருக்குறது உனக்கு பிடிக்கலையா? லாஸு...உள்ள போயி தூங்கு ! அவன மறுபடியும் கேசுல இழுத்து விடாத ஓடு...! அடெய் கவினு இப்பதான் கேசயெல்லாம் முடிச்சுட்டு நிம்மதியா அடுத்த பஞ்சாயத்த பாத்துட்டு இருக்க....! ஆனா நீ திருந்தவும் மாட்டேங்குற....வருந்தவும் மாட்டேங்குற ! கம்பத்த பாத்த நாய் மாதிரி மறுபடியும் பொம்பள கேசுல போயிதான் சிக்குற ! போங்கடா போங்க உள்ள போயி தனித்தனியா தலவாணிய கட்டிப்பிடிச்சு தூங்குங்க....!
ஸ்ஸப்பா.....முடியல....!

Comments

Popular posts from this blog

பிக்பாஸ் – 4 : நாள் - 39 (12.11.20)

பிக்பாஸ் 3 : நாள் 50 (12.08.19)

பிக்பாஸ் 3 : நாள் 100 (01.10.19)