பிக்பாஸ் 3 : நாள் 54 (16.08.19)
பிக்பாஸ் 3நாள் 54 (16.08.19)
·
மது
நாட்டுக்கு, வீட்டுக்கு, பிக்பாஸுக்கு கேடு !
“ஊ....லலல்லா”
பாட்டுக்கு ஆடுறேன்னு சொல்லி ஆளாளுக்கு அவனுங்க பாட்டுக்கு அங்கங்க ஆடிட்டு இருந்தானுங்க.
கக்கூஸ்ல சேரன்
காமா திரிய...மூஞ்சி கழுவிட்டு இருந்த லாஸ் சேரன் கிட்ட “என்ன நைனா ? கண்ணு முழிக்கும்
போது முன்னால வந்து நிப்ப! தட்ட எடுத்தா தோசைய கொண்டாந்து வப்ப! டயர்டா இருந்தா நீட்டுவ
காபி கப்ப! ஆனா என்னய கண்டுக்குறதே இல்லயே இப்ப? அவ்ளோதானா உன் பாசம்...நீ ரொம்ப மோசம்”னு
சொல்ல, சேரனோ “இந்த அடை காத்த சேவல அனாதையாக்குனது நீதான் லாஸு....அவசரமா வருது இப்ப....
அப்பறமா வந்து பேசு”ன்னு போயிட்டார்.
இத வெளிய வந்து
லாஸ் பசங்ககிட்ட சொல்ல. பசங்க அத காதுலையே வாங்காம “ஆணென்னங்க பெண்னென்னங்க” பாட்ட
பிராக்டீஸ் பண்ண ஆரம்பிச்சுட்டானுங்க.
அபி உள்ள வர....
வனி : என்ன
அபி வெளிய நின்னு முகின சைட் அடிச்சிட்டு இருந்தா மாதிரி இருந்துச்சு? என்ன மறுபடியும்
கபி கபியா?
அபி : அட இல்லங்க
! அவனுங்க நம்மள தாக்கி பாட்டு பாடிட்டு இருந்தானுங்க அதான் உங்ககிட்ட வந்து சொல்றதுக்கு
லிரிக்ஸ மனப்பாடம் பண்ணிட்டு இருந்தேன்
ஷெரின் : இன்னா
பாட்டு?
அபி : என்னமோ
அசிங்க அசிங்கமா பாடுறானுங்க கடைசியில எங்க கூட நிக்கிறது ஒரு பொண்ணுதானங்கன்னு பாடிட்டு
இருக்கானுங்க....நான் வேணும்னா இன்னொரு தடவ அத சரியா கேட்டுட்டு வரவா?
வனி : ஒன்ணும்
வெளக்கு வைக்க வேணாம் ! நீ எதுக்கு அங்க போறேன்னு தெரியும்! வேணும்னா நாமளும் பாடலாம்!
கஸ்தூரி இங்க யாரு நல்லா பாட்டு பாடுவான்னு சொல்லுங்க?
கஸ் : சொல்லுங்க
வனி நான் என்ன பண்ணனும்?
வனி : அதான்
கேட்டேனே இங்க யாரு நல்லா பாட்டு பாடுவான்னு
கஸ் : அதான்
சொல்லுங்க வனி நான் என்ன பண்ணனும்?
வனி : (வனிக்கு
புரிஞ்சுசுடுச்சு) சக்கரைப் பொங்கல் பண்ணனும் பண்றியா?
கஸ் : டோர்
லாக்டு //
வெளிய சேரன்
– தர்ஷன்- மது......
சேரன் : என்ன
தர்ஷன் அண்ணங்கிட்ட பேசுறதே இல்ல?
தர்ஷன் : எனக்கு
அண்ணனே இல்லையே!
சேரன் : அண்ணன்
அண்ணனத்தான் அண்ணன்ன்னு சொன்னேன்
தர்ஷ் : ஓ உங்களையா?
நீங்கதான் எங்கூட பேசுறது இல்ல
சேரன் : அப்ப
அண்ணன் வந்து ஏன் பேசலன்னு கேக்கனும்ல?
தர்ஷன் :
(Mind Voice : கேட்டாதான் மறுபடி வந்து பேசுவியே) இதெல்லாமா வந்து கேப்பாங்ய
சேரன் : சொல்லுடா
அண்ணங்கிட்ட பிரச்சனைய சொல்லு....அண்ணங்கிட்ட சொல்லுடா
தர்ஷ் : அட
இருடா....! அய்யோ சாரிண்ணே ஃப்ளோவுல வந்திருச்சு ! அண்ணே எல்லாம் இந்த மது பிரச்சனைதான்.
அதுதான் ஆண்கள் எல்லாம் யூஸ் பண்றானுங்கன்னு சொல்லுதுன்னா நீங்களும் அது பக்கத்துல
உக்காந்து ஆண்களுக்கு ஸ்பெல்லிங் சொல்லிக்குடுத்துட்டு இருக்கீங்க?
சேரன் : அடடே
மதுவே வந்திருச்சே...! வா மது தர்ஷன் உங்கிட்ட பேசனுமாம்
மது ஊமை பாஷையில
சைகையில கழுத்துகிட்ட கையக்காட்ட......
தர்ஷ் : உங்க
கழுத்தறுத்து காக்காய்க்கு போட்டுருமாம்...
சேரன் : (பதறிப்போயி)
என்னம்மா சொல்ற? ஓ மௌனவிரதமா! அத கலைச்சு விடு....உண்மைய உடச்சுவிடு
மது : பெண்ணென்பவள்
பெண்தான் அது ஆணாக இருந்தாலும்....
அவ்ளோதான்.....!
தர்ஷன் பேச்ச ஆரம்பிக்க, கூடவே லாஸ் வர, கையப்பிடிச்சுக்கிட்டே கவின் வர, சைலண்டா சாண்டி
வர.......குண்டு ஒடச்ச சோடாவாட்டம் மது நுரை பொங்க குதிக்க.....
டாப்ர்மேன்,
பொம்மரேனியன், பக்கத்து தெரு கருப்பு நாயி, ஜெர்மன் ஷெப்பர்ட், கண்ணி, கோம்பை, வோடஃபோன்
நாயி, டால்மேஷன், பாட்ஷா நாயி, கடைசியா காலா நாயி, வனி இதெல்லாம் ஒரே நேரத்துல கம்பத்துக்கு
கீழ நின்னு குரைச்சா எப்பிடி இருக்குமோ அப்பிடி பேசிக்கிட்டானுங்க.....! அவனுங்க பேசுனது
பின்வருமாறு....
!@#$%^&*()_++_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_)(*&^%$#!@#$%^&*()_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@!@#$%^&*()_+_)(*&^%$#@#$%^&*()_+)(*&^%$#@!%^&*()_++
சேரன் : லாஸ்
அப்பாகிட்ட பேசனும்னு சொன்னியே இப்ப பேசலாமா?
லாஸ் : அசிங்க
அசிங்கமா பேசுவேன் பரவாயில்லயா? நானே இப்பதான் ஒரு ஆக்ஷன் ப்ளாக் பர்ஃபார்ம் பண்ணிட்டு
இருக்கேன்....அது பொறுக்கலையா?
வனிதா “என்ன
இங்க சண்டை? என்ன இங்க சண்டை?”ன்னு வெளிய வந்து....
வனி : என்ன
மது “பெண்ணானவளா”? அதான் முடிஞ்சு போச்சே இன்னும் அதயே ஏன் பிடிச்சு தொங்குற?
ஷெரின் : ஆமா அதான் நானும் சொல்றேன். இன்னும் 4 பொண்ணு ஒரு
கவின்னு அதே காஞ்சுபோன கதையவே பேசுனா என்ன அர்த்தம் ?
மது : (Mind
Voice : என்ன அர்த்தம் ? எனக்கு வேற தெரியலன்னு அர்த்தம்)
கஸ்தூரி : இங்க
என்ன நடக்குது? ஏன் இந்தக் கூச்சல்? பறவைகள் ஏன் படபடக்குது...இதயம் ஏன் துடிதுடிக்குது?
பசங்க : யப்பா
டேய் வாங்கடா எல்லாரும் உள்ள போயிருவோம்...//
உள்ள பசங்க
மது மறுபடியும் மறுபடியும் கவின் மேட்டர இழுக்குறதப் பத்தி பொருமிட்டு இருந்தானுங்க.
சேரனோ சண்டையப்ப “லாஸ் என் பக்கமா பாத்து வாயில கைய வச்சு மூடுன்னு சொல்லுச்சு அது
என்னயவா? இல்ல எனக்கு பின்னாடி இருந்த ஃப்ரிட்ஜயான்னு தெரியலயே?”ன்னு குழப்பத்துல இருந்தார்.
கஸ்தூரி உள்ள
போனாங்க....
கஸ் : பாய்ஸ்.....என்ன
பிரச்சனை?
கவின் : எதுவுமே
தெரியாம உள்ள வந்து எல்லாப் பிரச்சனையிலயும் தலைய நீட்டுற பாரு, நீதான் பிரச்சனை! ஒழுங்கா
ஓடிடு
கவின் டென்ஷனாகி
சாண்டிய கூப்ட்டுட்டு பசங்களோட பெட்ரூம் போக...
கஸ் : எங்கடா
போறீங்க...எங்கிட்ட பேசுங்கடா! சாண்டி கம் ஹியர்! நான் என்னமாச்சும் பேசிட்டு வருவேன்னு
வெளிய வெயிட் பண்றானுங்கடா டேய்...மானத்த வாங்காதீங்கடா....
கவி : நீங்க
சாண்டிய கேஸ்ல இழுத்து விட்ருவீங்க ! உங்க கூட பேச விருப்பமில்ல வெளிய போங்க
கஸ் : அப்ப
நீ மட்டும் 4 பொண்ணுங்க கூட பேசுன (சொல்லிட்டு குடுகுடுன்னு வெளிய ஓட)
கவின் : ஏய்
மறுபடி மறுபடி அதயே இழுக்குற....ஏய் நில்லு நீ.....
கஸ் : (ஓடியபடி)
இப்ப உங்கிட்ட பேச எனக்கு விருப்பமில்ல
வெளிய வந்ததும்.....
வனி : என்ன
ஓடியார? பசங்க என்ன சொல்றானுங்க?
கஸ் : அவனுங்க
எங்கூட பேச விருப்பமில்லன்னு சொன்னானுங்க. அத அப்பிடியே திருப்பி அவனுங்க கூட பேச எனக்கு
விருப்பமில்லன்னு சொல்லிட்டு வந்துட்டேன்....எப்பிடி என் ராஜதந்திரம்...! மது பெண்கள்
தான் ஜெயிச்சோம்!
பெண்கள் :
(தலையில அடிச்சபடி) இன்னும் எத்தனை நாளைக்கு இதக் கட்டிக்கிட்டு அழுகனுமோ தெரியல....//
சேரனும் கஸ்தூரியும்
மதுவ கூப்ட்டு “இங்க பாரு, நீ யாருக்கு சப்போர்ட் பண்றியோ அவங்களே உங்கூட நிக்குறதில்ல.
சோ இப்பிடி குலுக்கிவிட்ட பீரா பொங்காம....குளிர்ச்சி தரும் மோரா தங்கு”ன்னு சொன்னாங்க.
உள்ள கவின்
அபிகிட்ட “நானாச்சும் கெட்டவன்னு கையத் தூக்கிடுறேன். ஆனா நல்லவளுகன்னு காட்டுறதுக்கு
நீங்க போடுற ஆக்டிங் இருக்கே....யப்பா யாஷ் சோப்ரா பட ஹீரோயினி தோத்துரும் போ”ன்னு
சொல்லிட்டு இருந்தான்.
மது, சேரன்
தவிர எல்லாரும் பெட்ரூமுக்குள்ள இருக்க, பசங்க லாஸோட சேர்ந்து அவனுங்க பாட்ட பாட ஆரம்பிச்சானுங்க.
வனி உட்பட எல்லாரும் எஞ்சாய் பண்ணி கேட்டுட்டு இருந்தாங்க. இத வெளிய இருந்து கேட்டுட்டு
இருந்த சேரனும், மதுவும் வரிகள கேட்டு அதுல எதுவும் வழக்கு போட முடியுமான்னு யோசிச்சுட்டு
இருந்தாங்க.
சேரன் மதுகிட்ட
“பாத்தியா சேரன் தான் உங்கூட ஸ்டேண்டிங்ல இருக்கேன். நீ கவின் கெடுத்ததா சொன்ன எல்லாரும்
அவன் மேலயே கையப்போட்டு கடைசி லைன் நல்லா இருக்கேன்னு கலகலப்பா இருக்காங்க.....! இதுல
இருந்து என்ன தெரியுது? உன்னய யாருமே கஸ்தூரி அளவுக்குக் கூட மதிக்கலன்னு தெரியுது.
நீ வெளிய போறதுக்கு வழி இப்பவே தெரியுது எனக்கு”ன்னு குண்டப் போட்டு, அநியாயத்த கண்டா
பொங்குன்னு ஒரு காலர் கேட்டது சரிதான் ஆனா அதுக்காக அநியாயத்துக்கு இப்பிடி பொங்குறது
வெரி பேட்”னு புரிய வச்சார். மது நேரா கக்கூஸுக்கு வந்து அங்க இருந்த கேமராவப் பாத்து
சேரன் குடுக்குற சைனெல்லாம் ஒரு மாதிரி கெதக்குன்னு இருக்கு. மக்களே எப்டியாச்சும்
காப்பாத்துங்க”ன்னு கதறிட்டு இருந்துச்சு.
சமையக்கட்டு.....
கஸ்தூரி : ஷெரின்
உங்கிட்ட 1 சொல்லவா?
ஷெரின் : சொல்லு
கஸ் : அப்போ
வனிதாகிட்ட 1 சொல்லனுமே?
வனி : பரவாயில்ல
சொல்லு
கஸ் : அப்ப
ரெண்டும் சேர்த்து 11 சொல்லவா?
ஷெரின் : (வனி
காதுல வந்து) சுடு தன்ணிய மூஞ்சில ஊத்தி விடவா?
வனி : இரு இரு.....!
கஸ்தூரி நீ மேல சொல்லுமா
கஸ் : பசங்க
கூட சேர்ந்து என்ன பாட்டு கூத்து....? கூத்து பாட்டு? பாட்டு கூத்து....
வனி : நீதான்
சொன்ன அவங்களுக்கு எதிர்பாட்டு பாடலாம்னு
ஷெரின் : (வனி
காதுல வந்து) இப்ப சொல்லு சுடு தன்ணிய மூஞ்சில ஊத்தி விடவா?
கஸ் : ஆமா!
எஸ்! அவுனு! ஹாங்! ஓம்........! பாட்டு பாடலாம்னு
சொன்னேன் ஆனா பாடனும்னா சொன்னேன்?
கஸ் : ஷெரின்
உனக்கு பாடத் தெரியாதா இல்ல பாடப் பிடிக்காதா?
ஷெரின் : எனக்கு
பாடத் தெரியாது...
கஸ் : அப்போ
உன்னய நான் பாடையில பாக்கனும்...
ஷெரின் : வனி
இங்க பாரு, அவ என்னய பாடையில பாக்கனும்ன்றா
எவ்வளவு கொழுப்பு? இப்பயாச்சும் சொல்லு சுடு தன்ணிய மூஞ்சில ஊத்தி விடவா?
வனி : நீ பாடும்போது
பாக்கனும்ன்றதத்தான் அந்த மூதேவி அப்டி சொல்லுது...
கஸ் : பாடல்
பாடி...கூடல் கூடி...தேடல் தேடி...
வனி : இந்தா
நீ கூடதான் சாசனம் ஆசனம்னு ஏதோ கருமத்த பாடுன?
கஸ் : நான்
எங்க பாடுனேன்?
வனி : வந்த
அன்னைக்கு வில்லுப்பாட்டு பாடுறேன்னு என்னய ராஜமாதா, ஹிட்லர், இவனுங்கள அடிமையா வச்சிருக்கேன்
அப்பிடி இப்பிடின்னு அளந்து விட்டியே....! உன்னய உள்ள பஞ்சாயத்து பண்ண சொல்லி அனுப்புனா
இவனுங்க கிட்ட என்னய பத்தி பாட்டா பாட சொன்னய்ங்க....
கஸ் : அப்டியா
பண்ணேன்? பண்ணது.....என்னது...சொன்னது....நல்லது!
வனி : நான்
இவனுங்கள அடிப்பேன் யாரும் கேக்கக்கூடாது ஆனா இவனுங்கள யாராச்சும் அடிச்சா நான் கேப்பேண்டி.....!
சாக்கப்பொத்தி அடிச்சாலும் நான் இவனுங்களுக்கு சகோதரி மாதிரி....! கண்ணத்தக் கிள்ளியும்
வப்பேன் அதே சமயம் அன்னத்த அள்ளியும் வப்பேன்.//
இந்த உரையாடல
உள்ள இருந்து பசங்க பாத்துட்டு இருந்தானுங்க. கஸ்தூரிய வனிதா வறுத்தெடுக்கும்போதெல்லாம்
கையத்தட்டி ரசிச்சானுங்க. வனிதாவையும் “வத்தி வைக்குறியே”ன்னு வாருனானுங்க.
வெளிய சேரன்
ஷெரின் கிட்ட “அந்த கரட்டாண்டி கவின நாமினேட் பண்ணதுல இருந்து என் மக லாஸ் இந்த டாடி
கிட்ட டாக் பண்றதே இல்ல”ன்னு பொலம்பிட்டு இருந்தாரு.
சாக்லேட் பொட்டிய
நிரப்புனானுங்க. அத எல்லாரும் எடுத்துட்டு ஒடி விளையாண்டானுங்க.
வெளிய கஸ்
& மது....
மது : மக்கள்
நான் சாமி கும்புடுறத விரும்பலன்னு சொன்னாங்க நிப்பாட்டுனேன்...
கஸ் : (சாக்லேட்
சாப்ட்டுகிட்டே) ஏன் நிப்பாட்டுன? உன் சாக்லேட்ட சாப்புடு...
மது : அழுகுறது
பிடிக்கலேன்னு சொன்னாங்க...நிப்பாட்டுனேன்
கஸ் : (சாக்லேட்
சாப்ட்டுகிட்டே) ஏன் நிப்பாட்டுன? உன் சாக்லேட்ட சாப்புடு...
மது : இப்பிடி
பாத்து பாத்து பண்றேன்....ஆனா
கஸ் : அதயெல்லாம்
ஏன் நிப்பாட்டுன? அது ஒர்க் அவுட் ஆகும் ! நீயெல்லாம் நல்லா வரனும் மது....நீயெல்லாம்
ஜெயிக்கனும்னு எனக்கெல்லாம் ஆசை...! உன் சாக்லேட்ட சாப்புடு...
மது : ஏ லூசே!
மக்களுக்கு பிடிக்கலேன்னு நிப்பாடுனேன்னு சொல்றேன். நிப்பாட்டாத ஒருக் அவுட் ஆகும்ன்ற?
இப்ப என்ன உனக்கு என் சாக்லேட் வேணும் அதான....? இந்தா எடுத்க்துகிட்டு ஓடிரு....
கஸ் : இத மொதலயே
குடுத்துருந்தா நான் ஏன் இவ்ளோ நேரம் இங்க குத்த வைக்கிறேன்? ஆங் அடுத்து அங்க சேரன்
சார் சாக்லேட்ட சாப்புடாம வச்சுருக்காரு....அங்க போயி அகநானூறு சொல்லி ஆட்டையப்போடலாம்//
கேப்டன்சி டாஸ்க்.....
3 பேரும் CAPTAIN
எழுத்த எடுத்து அதோட அச்சுல வைக்கனும்.....மது
வின்னர்! இந்த வார தலைவர் மது....! நயந்தாராவ பாத்த அத்திவரதர் மாதிரி சேரனுக்கு அவ்வளவு
சந்தோஷம். தானே ஜெயிச்சாப்ல சேரன் ஃபீல் பண்ணாரு. சாப்புடும்போது மது கிட்ட இதயேதான்
சொன்னாரு. டீம் பிரிச்சானுங்க. சாவிக்கொத்த சாண்டி மதுகிட்ட சரண்டர் பண்ணாரு. மது நிரந்தரத்
தலைவராகிட்டோம்ன்ற தோரணையில சாவிக்கொத்த கொத்தா பிடிச்சு வாங்குனாங்க.
அப்பறம் இந்த
ஹலோ ஆப் அவனுங்க விளபரத்துக்கு எல்லாரையும் முன்ன வந்து எதயாச்சு உளருங்கன்னு சொன்னாப்ல.
வரிசையா வந்து சினிமா பஞ்ச் டயாலாக்க சொன்னானுங்க.
“சும்மா இருந்த
என்னய சொறிஞ்சு வுட்டானுங்கடா”ன்னு சாண்டி, “ஒருத்தர் மேல உள்ள விசுவாசத்துக்காக அடுத்தவங்கள
ஏன் அசிங்கப்படுத்துறீங்க”ன்னு கவின், “உம்முன்னும், கம்முன்னும், இருந்தா ஜம்முன்னு
இருக்கலாம் ஆனா இந்த வீட்ல அப்பிடி இருக்க விட மாட்டானுங்க”ன்னு லாஸும் நேரடியாவே மதுவ
டார்கெட் பண்ணி பஞ்ச் பேசுனானுங்க. கஸ்தூரி வந்து கேமராவ கோவப்படுத்துனாங்க.
அழுமூஞ்சி அபி
மட்டும் தமிழ் ராப் பாடுச்சு....! “கிரியேட்டிவிட்டி அருமையா இருக்கு அதுனால அபிதான்
வின்னரு”ன்னு சொல்லி சேரர் நீதிய நிலை நாட்டுனாரு.
ஆண்டவர் வருவார்....!
அதுவரை வெயிட்டிங் !
Comments
Post a Comment